View in the JustOut app
X

சீனாவுக்காக தணிக்கைத் தேடு பொறியை கொண்டு செல்லும் முயற்சிகளில் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் கூகுளின் சந்தையைப் பரவலாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், ஆசிய சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை கூறினார்.

05:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க தி இந்து

நாமக்கல் மாவட்டத்தில் உர விற்பனையாளர்கள் உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

04:56:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பின்தங்கிய வடகிழக்கு மாநிலங்களில் உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் அதிகமாகக் கிடைக்கப் பெற்று வருகிறது. இப்பகுதிகளில் உள்ள குடும்பங்களில் இந்த நிதியாண்டின் முடிவுக்குள் 80 சதவிகித அளவு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

04:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில், 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துக் கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. லாகூர் கோட் லோக்பாத் சிறைசாலையில் இந்த தண்டனை நிறைவேற்றபட்டது.

04:26:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஹூவாய் நிறுவனம் மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. இரண்டு மாடல்களிலும் OLED DCI-P3 HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹூவாய் மேட் 20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ ஸ்கிரீன், மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் QHD+ ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

04:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'சர்கார்' படத்தில் ‘தளபதி’ விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இந்தி டப்பிங் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ.24 கோடிக்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

03:56:02 on 18 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

மில்க் மேன் என்ற நாவலில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை பற்றி விரிவாக எழுதியுள்ளார் அன்னா பர்னஸ். இவரது இந்த புத்தகம் உலக அளவில் பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதையும் இந்த நாவல் பெற்றுள்ளது.

03:40:02 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னை தி.நகரில் உள்ள பெங்கால் சங்கம் ஒன்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளது. நவராத்திரி கொண்டாட்டத்தின்போது பிளாஸ்டிக் தட்டுகளை அறவே தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக பனை ஓலை இலைகள், கரும்பு நாரால் ஆன தட்டுகள் ஆகியவற்றைத்தான் பயன்படுத்தியுள்ளனர்.

03:25:02 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஹூவாய் மேட் 20 X ஸ்மார்ட்போனில் 7.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, கிரின் 980 பிராசஸர், உலகில் முதல் முறையாக லிக்விட் மல்டி-டைமென்ஷனல் கூலிங் சிஸ்டம் வேப்பர் சேம்பர் மற்றும் கிராஃபீன் ஃபிலிம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக தரமுள்ள கேம் விளையாடும் போதும் சாதனத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

03:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியா-சீனா இடையே உள்நாட்டு பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் வரும் 22ஆம் தேதி கையெழுத்தாக உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே இதுபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தாவது இதுவே முதன்முறையாகும்.

02:56:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பூமணி எழுதிய வெக்கை என்னும் நாவலை தழுவி தனது அடுத்த படத்தை எடுக்க இருக்கிறார் வெற்றிமாறன். நாவல் பிரியர்களிடையே, மிகவும் பிரலமான நாவல் இது. இந்த படத்திற்கான படப்பிடிப்புகளை, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.

02:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

’குழந்தை பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய வயது எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்,’ என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி கூறியுள்ளார்.

02:25:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டூடியோ 3 வயர்லெஸ் ஹெட்போனினை பல்வேறு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. புகிய ஸ்கைலைன் கலெக்ஷன் கிரிஸ்டல் புளு, டிசர்ட் சேன்ட், மிட்நைட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்களுடன் ஹெட்போனில் தங்க நிற அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

02:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டி வங்கி ஊழியரிடம் வழிப்பறி நடைபெற்றுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் 11 சவரன் தங்கச்சங்கிலி பறித்தவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

01:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

குற்றம் இழைப்பது பிரபலமாக இருந்தாலும், நீதி ஒருபோதும் தோற்றுவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தனர் மலையாள நடிகைகள். ஆனால் தமிழ் திரையுலகில் நடப்பது என்ன? சினிமா துறையில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது கேள்விக்குறியாக்கவே உள்ளது.

01:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க ie தமிழ்

பெருநகரங்களில் கூட 40 ஆண்டுகள் முன்பு திண்ணை வைத்த வீடுகள் இருந்தன. இப்போது நகரத்தில் இருக்கும் வீடுகளையும், மறந்துப்போன திண்ணை வீடுகளையும் நினைவுப்படுத்துகிறது ஜெயபுதீன் என்பவர் ஃபேஸ்புக்கில் இட்டுள்ள பதிவு.

01:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற சத்யமேவ ஜெயதே திரைப்படத்தின் இயக்குனர் மிலாப் சாவேரி தனது அடுத்த படைப்புக்கு தயாராகி இருக்கிறார். இப்படத்தில் இயக்குனர் மிலப் சாவேரி இயக்கத்தில் பாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்திஷ் தேஷ்முக் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

01:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க தி இந்து

மிடில்செக்ஸ் பல்கலைகழகம் சார்பில் பெப்பர் என்ற ரோபோ தயாரிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு குறித்த அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றி அசத்தியது. இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய முதல் ரோபோ என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

12:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 80 லட்சத்தை நெருங்கிவிட்டதாக வேலை வாய்ப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பிரசவத்திற்குக் கிளம்பும்போது, பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை முதலில் ஒரு பையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம்.

12:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் இரண்டாவது காலாண்டில் ரூ.4,110 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.3,726 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 10.3 சதவீத வளர்ச்சியாகும்.

12:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினமணி

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் குறித்து, ஐநாவின் பேரிடர் தடுப்பு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

11:56:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

’எனது நண்பர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் வட சென்னை படக் குழுவிற்கு எனது குடும்பம் மற்றும் ரசிகர்களின் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். எங்கள் போட்டி திரையில் மட்டுமே, சமூக ஊடகங்களில் இல்லை’ என்று வட சென்னை படம் குறித்து நடிகர் சிம்பு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

11:40:01 on 17 Oct

மேலும் வாசிக்க EENADU

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் கண்டோன்மெண்ட் பகுதியில் உளவு பார்த்ததாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். உளவு பார்த்ததாக ராணுவத்தின் சிக்னல் பிரிவில் பணியாற்றும் வீரரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:26:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

திருப்பூர் என்றாலே, நினைவுக்கு வருவது பின்னலாடைத் நிறுவனங்கள்தான். திருப்பூரில் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என பின்னலாடைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு வழங்கிய போனஸைத்தான் வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

11:10:02 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்கியுள்ளது கனடா. கஞ்சா பயன்பாடு சட்டபூர்வமாக்கியது தொடர்பாக, கஞ்சா பயன்பாட்டளர்கள் மற்றும் அந்த தொழிலில் முதலீடு செய்பவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

10:56:01 on 17 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அதிரடி சலுகைகளுடன் அமேசான் விற்பனை என்றவுடன் வாங்கும் முன் சற்று சிந்தியுங்கள். நீங்கள் வாங்கும் பொருட்களால் பயன் அடைவோர் ஏ.சி இருக்கையில் ஓசி காற்று வாங்கும் ஒரு சிலரே. இன்றில் இருந்தாவது அங்காடித் தெருக்களில் அலைந்து, திரிந்து, கூவி விற்பனை செய்யும் சாமானியனிடம் பொருட்களை பேரம் பேசாமல் வாங்க கற்றுக் கொள்ளுங்கள்.

10:41:01 on 17 Oct

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க தக்காளி சாறு, தேன், முல்தானி மட்டி போன்றவைகளை சேர்த்து கிரீம் போல் அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் இதன் மூலம் பொலிவு பெறும். பாலாடை, ஆப்பிள் சேர்த்து சருமத்தில் பூசுவதும் வறண்ட சருமத்துக்குப் பொலிவை ஏற்படுத்தும்.

10:26:02 on 17 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் கூறிய நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமாவை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்ட நிலையில், தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இவர் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

10:18:15 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தை வாபஸ் செய்துள்ளனர். அமைச்சர் வேலுமணியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்துப் போராட்டத்தை வாபஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

10:12:39 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

சன் பிக்சர்கஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்தப் படத்தை அமெரிக்காவில் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட உள்ளதாகப் படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் நடித்த படத்திலேயே, இதுவரை இல்லாத அளவிற்கு சர்கார் தான் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

10:10:01 on 17 Oct

மேலும் வாசிக்க EENADU

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பது சமீப காலமாக மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் ஒரு விவாதப் பொருளாகும். அனால், பொறியியல் படிப்புப் படித்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

09:56:01 on 17 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வட மாநிலத்தவர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, தமிழர்களை அகதிகளாக மாற்ற முயல்வதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’ஒரு நாள் வட இந்தியர்களால் நாம் விரட்டி அடிக்கப்படுவோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

09:41:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பிப்ரவரி மாதம் ஸ்காட்லாந்தின் குளிர் எப்படி இருக்கும்? அதீத குளிரில் ஏற்படும் பனிக்கட்டி என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்? பனியும், குளிரும் எப்போதும் அழகுதானே? அத்தகைய அழகுடன் இருக்கும் பனி சில்லு ஒன்றின் புகைப்படத்திற்கு இந்த ஆண்டின் சிறந்த லேண்ட்ஸ்கேப் புகைப்படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.

09:26:01 on 17 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நடிகையும், இயக்குநருமான நந்திதா தாஸின் தந்தை ஜதின் தாஸ்-க்கு எதிராக #MeToo குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஜதின் தாஸ் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இந்த விஷயத்தால் நந்திதா தாஸ் #MeToo குறித்து கருத்து கூறமாட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து #MeToo-வுக்கு ஆதரவளிப்பேன் என்றுள்ளார்.

09:10:03 on 17 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழக வனத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணிதம் அல்லது அறிவியல் பிரிவில், ப்ளஸ் 2 படித்திருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

08:56:03 on 17 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக 47ஆம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியபோது, 'நெடுஞ்சாலைதுறை டெண்டர் முறைகேடு வழக்கில் என்னை குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்லவில்லை,' என்று கூறினார்.

08:43:09 on 17 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னை விமான நிலையத்தில் 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து வந்த ஒரு பயணியையும், கோலாலம்பூரில் இருந்து வந்த மேலும் 3 பயணிகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்ததில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

08:41:01 on 17 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை படுகொலை செய்ய இந்தியாவின் சர்வதேச உளவு அமைப்பான 'ரா' (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு) திட்டமிட்டுள்ளதாக அதிபர் குறிப்பிட்டதாக வெளியான ஊடக தகவல்களை இலங்கை அரசு மறுத்து, 'இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கவில்லை' என விளக்கமளித்துள்ளது.

08:36:05 on 17 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

08:27:50 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’இயக்குநர் கே.வி.ஆனந்த் படத்தின் (சூர்யா 37) ஷெடியூலை முடித்து விட்டு சூர்யா அண்ணா வந்த பிறகு, NGK படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. அதன் பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்’ என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.

08:26:01 on 17 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நியாய விலைக் கடை ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 'கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், நாளை முதல் பணிக்கு திரும்புவோம்,' என்று நியாய விலை கடை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

08:22:53 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

எத்தியோப்பிய பிரதமர் அபீ அகமது தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளார். அதற்கான காரணமாக, ’ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவுவார்கள்’ என்றும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

08:10:02 on 17 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டில்லியில் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசின் தலையீடு கிடையாது. சர்வதேச விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றி அமைக்கின்றன’ என்று கூறியுள்ளார்.

07:56:02 on 17 Oct

மேலும் வாசிக்க தின மலர்

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் உள்ள சேர்மன் அரசுப் பள்ளி அரசு மாணவ, மாணவியர்கள் விவசாயம் கற்பதற்காக சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரிக்குச் சென்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

07:41:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகிய XL சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக இருக்கும் தனது MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே அதை இந்தியாவில் இசுஸூ வெளியிட்டிருக்கிறது.

07:41:01 on 17 Oct

மேலும் வாசிக்க விகடன்

96 படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷா அதில் அணிந்திருக்கும் மஞ்சள் நிறச் சுடிதாரும் தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. கடைக்காரர்கள் அந்த ஆடைகளைத் தற்போது தீபாவளி ஸ்பெஷல் ஆடைகளாக விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர். இம்முறை த்ரிஷாவின் இந்த சுடிதார்தான் யூத்துகளின் மத்தியில் ட்ரெண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

07:26:01 on 17 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அடைக்கப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இதனால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

07:10:01 on 17 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் ஒரு சேர வந்தால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை நடத்தினோம் என ஸ்டாலின் கூறினார். அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்திட்ட கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

06:56:01 on 17 Oct

மேலும் வாசிக்க ie தமிழ்

மீ டூ விவகாரத்தில், மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார். இதுகுறித்து, அவர் பேசுகையில், ‘என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை; நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபிப்பேன்,’ என்றார். இந்நிலையில், எம்.ஜே.அக்பரின் ராஜினாமாவை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

06:53:43 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

06:45:32 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டின்போது அறிமுக வீரராக இடம் பிடித்திருந்த ஷர்துல் தாகூர், வலது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் வெளியேறினார். இந்த நிலையில் ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட்டை கைப்பற்றி வியக்க வைத்த உமேஷ் யாதவ் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

06:41:02 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

பணியிடத்தில் பெண்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட விஷாகா வழிகாட்டுதல்களுக்கு இணங்க உள் அமைப்புப் புகார் குழு ஒன்றை அமைப்பதற்கு, மலையாள திரைப்பட கலைஞர்களின் சங்கத்தை (அம்மா) தூண்டுவதற்காக நீதிமன்றத்தை வலியுறுத்தி, கேட்டு கொண்டுள்ளது.

06:25:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

’சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,’ என கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ’பெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றும் கூறியுள்ளது.

06:12:00 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாக்கடை தூர்வாரும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தி வருவது தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் மற்றும் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.

06:10:02 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகனும், பார்மர் தொகுதி எம்எல்ஏவுமான மன்வேந்திரா சிங் காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். வரும் டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.

05:56:02 on 17 Oct

மேலும் வாசிக்க தி இந்து

சபரிமலை சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், இளவங்கல், பம்பை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவு நாளை காலை முதல் அக்.22ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இது ஐயப்ப பக்தர்களுக்கு பொருந்தாது என்றும் பத்தனம்திட்டா ஆட்சியர் அறிவித்துள்ளார்.

05:55:13 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. சில மாதங்களுக்கு முன் ரெட்மீ 6 ப்ரோ போனை அறிமுகப்படுத்தியது. ரெட்மீ 6 ப்ரோ என்பது ரெட்மீ எஸ்2 (இந்தியாவில் ரெட்மீ Y2) ஸ்மார்ட்போனின் அப்கிரேட்டட் மாடல் ஆகும்.

05:40:03 on 17 Oct

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், பதற்றமான சூழல் நிலவி வருவதால், அம்மாவட்ட ஆட்சியர், சபரிமலை சன்னிதானம் சுற்றுவட்டாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

05:34:27 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், ‘பருவமழையால் தமிழகத்தில் 155 இடங்கள் அதிகம் பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.’ என கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

05:26:02 on 17 Oct

மேலும் வாசிக்க தினமணி

"விஷால் நடித்த சண்டகோழி-2 படத்தை தமிழகத்தில் உள்ள 300 திரையரங்குகளிலும் வெளியிட மாட்டோம்" என, திருச்சி தஞ்சை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

05:10:02 on 17 Oct

மேலும் வாசிக்க EENADU

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, சபரிமலைக்கு வந்த பெண்களை எதிர்ப்பாளர்களும் போராட்டக்காரர்களும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இந்த பரபரப்பான சூழலில், சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ளது. இது அக்.22ஆம் தேதி வரை திறந்து வைக்கப்படும்.

05:03:29 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சபரிமலைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

04:56:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் கூறிய நிலையில் முன்னாள் பத்திரிக்கையாளராக இருந்த மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:50:20 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலை நிலக்கல் பகுதியில் மேலும் ஒரு பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா டுடே செய்தியாளர் மெளசாமி சிங் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே 2 பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு பெண் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

04:41:50 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் சிலர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர்,’ என கேரள அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார். மேலும், ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை,’ என்றும் தெரிவித்துள்ளார்.

04:40:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக கூடுதலாக 770 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

04:26:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழா தஞ்சை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

04:10:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வடசென்னை படம் துவங்கும்போது முக்கிய பாத்திரங்களாகத் தென்படும் பலர், படம் நகர நகர மங்கிப்போக, ஆண்ட்ரியாவும் தனுஷும் மேலெழுவது ரசிக்கும்படி இருக்கிறது. அடுத்த பாகமான "வட சென்னை 2 - அன்புவின் எழுச்சி" குறித்து ஒரு எதிர்பார்ப்பையும் எற்படுத்துகிறது.

03:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் நிலக்கலில் போராட்டம் நடத்திவரும் ஐயப்பப் பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், தடியடி நடத்திய போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

03:45:36 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலையில் ஏற கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், ஆந்திராவைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் வந்துள்ளனர். அவர்களை கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று கோரி போராட்டம் நடத்தியவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

03:41:02 on 17 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

நாட்டில் அக்.20ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

03:25:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'சபரிமலை விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது,' என கேரள அமைச்சர் சுனில் கூறியுள்ளார். மேலும், ‘சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க கோரி பாஜக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது என்றும் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி பிரச்னை செய்ய முயற்சிக்கிறது பாஜக,’ என்றும் கூறியுள்ளார்.

03:10:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாநில சமாதானத்தை போக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக போராட்டம் நடத்துகிறது. சபரிமலை விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் குற்றம் கூறியுள்ளார். மேலும், பக்தர்கள் விசுவாசம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பை அரசு கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று கூறினார்.

02:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் காலை 10 மணிக்கெல்லாம் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில் 12 மணியளவில் நன்றாக மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

02:41:02 on 17 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் அக்.24இல் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி விசாரனை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

02:25:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

"வறுமையே உனக்கு ஒரு வறுமை வராதா?" என்று எண்ணி, தனது சிறுவயதில் இருந்தே வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனப் போராடிய ஜோசப் ரெசின்கி என்பவரால், 1987ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று முதன்முதலாக உலக வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

02:08:37 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

01:57:26 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்ட திருவாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01:53:57 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக மாலை 4 மணிக்குப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’பேச்சுவார்த்தையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.

01:50:38 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடத் தயாரா? என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக சிதறிவிடும் என நினைத்தவர்களின் கனவில் மண்ணை போடும் வகையில், கட்சியின் 47வது ஆண்டு துவக்க விழா உற்சாகமாகக் கொண்டாடப்படுவதாகத் தெரிவித்தார்.

01:40:03 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

’ரா என்ற இந்திய உளவு அமைப்பைச் சேர்ந்தவர் தன்னை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக அதிபர் கூறவில்லை’ என இலங்கை அரசு கூறியுள்ளது. மேலும், ’ரா உளவாளி கைது எனக்கூறி இருநாடுகள் இடையே பிரச்சனை ஏற்படுத்த முயற்சி என தெரிவித்தார்’ என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

01:25:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ’புதுக்கோட்டை மாவட்டம் ஆவூடையார் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் அ.தி.மு.க. ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்’ என்று பதிவிட்டுள்ளார்.

01:10:01 on 17 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நிலக்கல்லில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு பெண் செய்தியாளர்கள் மீது நிலக்கல்லில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஒளிபரப்பு உபகரணங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன.

01:08:23 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தண்ணீர் லாரிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்ககள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

01:01:16 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அதிமுக தொடங்கி இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. 1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அமோக வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது.

12:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7

’காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்’ என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர், ’சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது’ என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

12:40:02 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

12:26:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான இரண்டு புதிய ஆவணங்களை பிரான்ஸைச் சேர்ந்த வலைப்பக்கம் ஒன்று வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போர்ட்டல் ஏவியேஷன் என்ற வலைப்பக்கம், டசால்ட் நிறுவனத்தின் இரண்டு பிரெஞ்ச் தொழிற்சங்கங்களின் சந்திப்பில் நடைபெற்றது தொடர்பான ஆவணங்களைக் கடந்த 14ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

12:11:01 on 17 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை வளசரவாக்கத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக 12ஆம் வகுப்பு மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். முகவரி கேட்பதுபோல் நடித்து ஜெயபாண்டியன் என்பவரிடம் இருந்து செல்போனைப் பறித்ததாகக் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

தலைநகர் டெல்லியில் குடியிருப்புப் பகுதியில் பலவற்றின் அருகே ஸ்டீல் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளால் சுற்றுச் சூழல் பாதிப்படைந்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்குக் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

11:40:02 on 17 Oct

மேலும் வாசிக்க விகடன்

திருவாரூரில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 300 பேர், 2ஆம் ஆண்டு மாணவர் மாரிமுத்து நீக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட 300 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

11:25:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற லிபி என்ற பெண், பத்தனம்திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில் அந்தப் பெண், பாதுகாப்புக்காக பத்தனம்திட்டா காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.

11:22:36 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வேலைநிறுத்தம் அறிவித்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 23ஆம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தொழிலாளர் நலத்துறை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1ஆம் தேதி முதல் கால வரம்பற்ற வேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது.

11:10:02 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அதிமுக கட்சியின் 47ஆவது ஆண்டு விழாவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், அதிமுக 47ஆவது ஆண்டு விழாவையொட்டி “ரத்தத்தின் ரத்தமே” என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

11:01:23 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக், கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே வணிக வளாகம் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பராமரிப்புப் பணிக்காக இன்று மூடப்படுவதாக ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவித்துள்ளது.

10:58:38 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களின்படி, டல்ஹவுசி பிரபுவுக்கும், லாகூர் மகாராஜா துலீப் சிங்குக்கும் இடையே 1849ஆம் ஆண்டு லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இங்கிலாந்து ராணியிடம் மகாராஜா கோஹினூர் வைரத்தை ஒப்படைத்தாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

10:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் கட்சியின் 47ஆவது ஆண்டு விழா நடைபெறுகிறது. இதனை முன்னட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

10:42:17 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள படே கதல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இன்று அதிகாலை பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

10:40:02 on 17 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் க.அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

10:36:33 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க