View in the JustOut app
X

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.72ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

08:26:10 on 30 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஃபாசில் சோலார் வாட்ச் 36 மிமீ மற்றும் 42 மிமீ டயல்-ஆப்ஷன்களில் கிடைக்க உள்ளது, இவை இரண்டின் விலையும் ரூ.9,995 ஆகும். இந்த இரண்டு வகை வாட்ச்கைளையும் உலகளவில் வாங்குவதற்கு 1,754 வாட்சுகள் மட்டுமே உள்ளன என்று ஃபாசில் கூறியுள்ளது.

06:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

யூனிலீவர், கோகோ கோலா, ஹோண்டா, லீவைஸ் ஜீன்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுப்பதை நிறுத்தியுள்ளன. இதனால் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கிட்டதட்ட 54,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

02:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஹெச்-1பி விசா மற்றும் இந்த விசாதாரர்களின் மனைவிக்கு வழங்கப்படும் ஹெச்-4 விசா ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். இதன் மூலம், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதனால் இந்திய ஐடி இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

12:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4645 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.37160க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 பைசா உயர்ந்து 53.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

11:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

08:45:44 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இஞ்சி காட்டமான அல்லது காரத்தன்மை உணர்வை நமக்கு கொடுத்தாலும் அது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்படியே வைத்திருந்தால் அடியில் வண்டல் படியும். அதை அப்படியே விட்டு விட்டு மேலே தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும்.

05:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.83.59ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.77.61 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

08:32:27 on 28 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இதுவரையில்லாத அளவுக்கு அதிவேகமாக சார்ஜ் செய்யும் வகையில் ஹூவே நிறுவனம் நோவா 7ஐ என்ற ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த போன் 40 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

06:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஒப்போ நிறுவனத்தின் அறிவிப்பின் படி ஒப்போ எஃப்15 மற்றும் ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 3,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளதால், ஒப்போ எஃப்15 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை தற்சமயம் ரூ.18990 முதல் துவங்குகிறது. முன்னதாக இதன் விலை ரூ.21,990 ஆக இருந்தது.

05:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.59ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.61 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

08:20:30 on 27 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரெட்மி 9-ன் அடுத்த பதிப்பு மற்றும் ரெட்மி 8A-வின் அடுத்த மாடலான ரெட்மி 9A, வரும் மாதத்தில் அறிமுகமாக உள்ளது. சியோமி இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வழங்கவில்லை என்றாலும், பிலிப்பைன்ஸ் சந்தையில் சியோமியின் பட்டியலில் இந்த போன் வெளியாக உள்ளது தெரியவந்துள்ளது.

06:57:02 on 27 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' திட்டம் உள்ளிட்ட சிறப்பு விமான சேவை தொடரும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

06:20:23 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான குவாண்டஸ் (Qantas) 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 15,000 ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை கட்டாய விடுப்பு அளிக்க உள்ளதாகவும் அதன் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆலன் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார்.

03:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க Behind Woods News

முக அழகுக்கு தற்போது எத்தனை ஸ்கின் கிரீம்கள் இருந்தாலும் இதற்கெல்லாம் முன்னோடியாக இருப்பது ஃபேர் அண்ட் லவ்லி தான். மிகவும் புகழ்பெற்ற இந்த ஸ்கின் கிரீமின் பெயரை மாற்ற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி Fair என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளனர்.

11:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.37ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.44 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது.

08:21:53 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமேஸான் இந்தியா டாட்காம் ஆன்லைனில் சீனாவின் கைப்பேசிகள் ஜூன் 15 மற்றும் 18 ஆம் தேதிகளின் சிறப்பு ஆன்லன் விற்பனை அறிவித்திருந்தது. இதில், சுமார் ஐம்பதாயிரம் விலையுள்ள ஒன்ப்ளஸ் 8 மற்றும் ஒன்ப்ளஸ் 8 புரோ வகை கைப்பேசிகள் சுமார் 10 லட்சம் எண்ணிக்கைகளில் ஓரிரு நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.

11:27:01 on 25 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அரசு வங்கிகள், 1,482 கூட்டுறவு வங்கிகள், 58 மாநிலக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவை இனி நேரடியாக ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள 4.64 லட்சம் கோடி ரூபாய் இனி பத்திரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

08:42:14 on 25 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.18ஆகவும், டீசல் விலையும் 52 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.29ஆகவும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

08:25:29 on 25 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஃப்ளிப்கார்ட் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் செயலியில் இந்தி மொழிக்கான வசதி ஒன்பது மாதங்களுக்கு முன் சேர்க்கப்பட்டது. புதிய மொழிகளை சேர்த்திருப்பதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

05:57:02 on 25 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ11 கே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒஎஸ் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் ரூ.8990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

02:57:02 on 24 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இந்தியாவில் தான் உலக அளவில், அதிகமாக பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் மீதான உற்பத்தி வரி, 9 ரூபாய் 48 காசுகளாக இருந்தது, ஆனால் தற்போது 32 ரூபாய் 98 காசுகளாக அதிகரித்துள்ளது. இது சுமார் 248 சதவித உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

01:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கரோனா தொற்று பரவலால் கோழிப்பண்ணை தொழில் மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது. பொது முடக்கம், பள்ளிகள் திறக்காதது, ஏற்றுமதி பாதிப்பு உள்ளிட்டவற்றால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

01:27:02 on 24 Jun

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,635-க்கும் சவரன் ரூ.37,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:23:39 on 24 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பதஞ்சலி நிறுவனம் இரு மருந்துகளை வெளியிட்டு, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது. இந்நிலையில், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

09:57:02 on 24 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.83.04ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் மாற்றமில்லாமல் லிட்டருக்கு ரூ.76.77 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

08:26:56 on 24 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.83.04ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.76.77ஆகவும் விற்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 17வது நாளாக பெட்ரோல், டீசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

08:37:07 on 23 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலகின் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 6,450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுவரை ஆசிய பிராந்தியத்தில் பெரும் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்று வந்த முகேஷ், தற்போதுஉலகின் 10 பெரும் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

01:57:01 on 22 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்து மூன்று ரூபாய் 70 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, சில்லறை விற்பனை சென்னையில் ஒரு முட்டையின் விலை நான்கு ரூபாயாக உள்ளது.

08:47:38 on 22 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் உயர்ந்து, இன்று லிட்டருக்கு ரூ.82.87ஆகவும், டீசல் விலை 50 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.30 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது. 16 நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.33 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 8.08 ரூபாயும் உயர்ந்துள்ளது.

08:26:48 on 22 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்தாண்டு நிலவரப்படி உலகில் அதிகம் விற்பனையான ஐந்து ஸ்மார்ட்போன்களில் இரு மாடல்கள் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இதுதவிர 2019 ஆண்டு விற்பனையான ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் ஆகும். கேலக்ஸி ஏ10 கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும்.

06:57:01 on 22 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

தொடர்ந்து 15வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.82.58-க்கும், டீசல் 51 காசுகள் உயர்ந்து ரூ.75.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த விலை உயர்வால் வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

09:01:11 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபோன்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் 20 சதவீத வரி செலவை குறைக்கும் நோக்கில் புதிய முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

06:57:01 on 21 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.27 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.29ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:36:03 on 20 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், தங்களின் பிரபல இரு சக்கர வாகனமான பல்சரின் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது. 125 சிசி கொண்ட இந்த வேரியன்டில் ஸ்பிலிட் சீட் வசதி உள்ளது. சுமார் 79,091 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

07:57:02 on 19 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 50 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.81.82ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 54 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.77 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. 13வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

08:18:52 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க