05:55:01 on 16 Dec 2019,Mon
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. காதல் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிராந்தி மாதவ் இயக்குகிறார். இதில் ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
05:55:01 on 16 Dec
09:57:01 on 15 Dec 2019,Sun
நடிகை மாளவிகா, தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அதாவது பார்ட்டியில் பங்கேற்றுள்ள மாளவிகா கையில் சரக்குடன், தனது தோழியுடன் நெருக்கமாக உள்ளார்.
09:57:01 on 15 Dec
06:55:02 on 15 Dec 2019,Sun
கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் அருவி. இந்தப் படத்தின் மூலம் அருண் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழ். அருவி படத்தைப் போலவே வாழ் படத்தின் டீசரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
06:55:02 on 15 Dec
04:57:01 on 15 Dec 2019,Sun
விஷ்ணு வர்தன், “பில்லா வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நேற்று ரிலீசானது போல உணர்கிறேன். அஜித்துடன் இணைந்து எடுக்கப்பட்ட முதல் படம். ஆதரவளித்த அஜித் சார், படக்குழு மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிகள். விரைவில் சந்திப்போம்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
04:57:01 on 15 Dec
03:57:01 on 15 Dec 2019,Sun
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.105 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது, தற்போது இந்த வசூலை கார்த்தியின் கைதி முறியடித்துள்ளது. ஆம், கைதி உலகம் முழுவதும் ரூ.105 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
03:57:01 on 15 Dec
10:57:01 on 14 Dec 2019,Sat
அசுரன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதில் இடம்பெற்ற ‘வா அசுரா’ பாடல் பலரின் ரிங்டோனாக மாறியது, பலரும் அதை புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் இதில் இடம்பெற்ற இந்த பாடல், ஒரு ஆங்கில வெப் சீரிஸிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
10:57:01 on 14 Dec
09:55:02 on 14 Dec 2019,Sat
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பலமுறை தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
09:55:02 on 14 Dec
08:57:01 on 14 Dec 2019,Sat
ரன்வீர் சிங் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஷாலினி பாண்டே, ஹிந்தியில் யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ஜயேஷ்பாய் ஜோர்தார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
08:57:01 on 14 Dec
01:27:01 on 14 Dec 2019,Sat
தான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறிய பிக் பாஸ் மீரா மிதுன் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது FIR உள்ள நிலையில், police clearance certificate அளிக்காத காரணத்தினால் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
01:27:01 on 14 Dec
10:57:01 on 13 Dec 2019,Fri
மூடர்கூடம், அக்னி சிறகுகள் படத்தின் இயக்குனர் நவீன், ‘ரஜினி ஒரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை என் போன்ற ஒரு தீவிர கமல் ரசிகன் சொல்லும்போதுதான் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க முடியும். இந்த இரண்டு பாத்திரங்களையும் கமல் நெருங்கவே முடியாது. திரையில் அவருக்கான இடம் அவருக்கானது மட்டுமே’ என்று கூறியிருந்தார்.
10:57:01 on 13 Dec
06:55:02 on 13 Dec 2019,Fri
’காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நல்லாண்டி என்பவர் விவசாயி கதாபாத்திரத்திலும், யோகி பாபு யானை பாகனாகவும் நடித்துள்ளார்.இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
06:55:02 on 13 Dec
06:25:01 on 13 Dec 2019,Fri
சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ஹீரோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. சிறு வயதிலிருந்தே சக்திமான் நாடகத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படும் சக்தி என்னும் கதாபாத்திரமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
06:25:01 on 13 Dec
03:27:01 on 13 Dec 2019,Fri
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படம் குறித்த முக்கிய தகவலை தயாரிப்பாளர் போனி கபூர், வெளியிட்டுள்ளார். அதாவது இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது எனக் கூறியுள்ளார். அதேபோன்று தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படமும் ரிலீஸாக உள்ளது.
03:27:01 on 13 Dec
01:57:01 on 13 Dec 2019,Fri
”சமீபமா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரா நடந்துகிட்டு வர்ற பாலியல் வன்முறைகள் அதிகமாகிக்கிட்டே வருது. சமீபத்துல நடந்த என்கவுன்டரைக்கூட எடுத்துக்கங்க; இதே தவற்றை, அரசியல்வாதிகளின் பசங்க பண்ணியிருந்தா இந்த என்கவுன்டர் நடந்திருக்குமா!" என நடிகை அதுல்யா ரவி கூறியுள்ளார்.
01:57:01 on 13 Dec
11:57:01 on 13 Dec 2019,Fri
பிக் பாஸ் லாஸ்லியாவிற்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று, மிகவும் பிரபலமான நபர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இந்த விருதிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி.” என தெரிவித்துள்ளார்.
11:57:01 on 13 Dec
09:57:01 on 12 Dec 2019,Thu
மணிரத்னம் இயக்கத்தில் ரூ.800 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்பட உள்ளன.
09:57:01 on 12 Dec
05:27:01 on 12 Dec 2019,Thu
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடராக இணையத்தில் வெளியிடப்படும் 'குயின்', மற்றும் 'தலைவி ' படத்துக்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 'குயின்' இணையதளத் தொடரும், 'தலைவி' படமும் சிக்கலின்றி வெளியாக உள்ளன.
05:27:01 on 12 Dec
12:57:01 on 12 Dec 2019,Thu
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி டிவிட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. ரஜினி பிறந்த நாளுக்காக அதற்காக உருவாக்கப்பட்ட #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
12:57:01 on 12 Dec
11:27:01 on 12 Dec 2019,Thu
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று 70வது பிறந்தநாள். 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரையுலகப் பயணம் இன்று வரை வெற்றிக்கொடி கட்டிப் பறக்கிறது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 167 படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
11:27:01 on 12 Dec
06:25:02 on 11 Dec 2019,Wed
தமிழ்ப்படம் 2 படத்துக்கு அடுத்ததாக சுமோ என்கிற படத்தில் நடித்துள்ளார் சிவா. சிவா கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ளார். ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோவும் பங்குபெற்றுள்ளார்.
06:25:02 on 11 Dec
03:27:01 on 11 Dec 2019,Wed
நெல்லையை சேர்ந்த ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான திருமாறன் என்பவர், ரஜினி கன்னடர் இல்லை, தமிழர் தான் என்று அடித்து கூறுகிறார். மேலும் இதை நிரூபிக்கும் ஆதாரங்களை திரட்டும் பணியில் இறங்கியுள்ளார். மேலும் அவர் 3 நாள் பயணமாக ரஜினியின் உறவுகளையும் சந்தித்துள்ளாராம்.
03:27:01 on 11 Dec
12:57:01 on 11 Dec 2019,Wed
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் முருகனைத் தரிசித்தார். அப்போது, நயன்தாராவை எதேச்சையாகச் சந்தித்த முன்னாள் எம்.பி-யும் பி.ஜே.பி தலைவர்களுள் ஒருவருமான நரசிம்மன், பி.ஜே.பி-யில் இணைய நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல் பரவியுள்ளது.
12:57:01 on 11 Dec
06:55:02 on 11 Dec 2019,Wed
2019ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட திரைத்துறையைச் சேர்ந்த பெண் ஆளுமைகள் பட்டியலை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இதில் சோனாக்சி சின்கா முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனுஷ்கா சர்மா பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை பாடகி லதா மங்கேஷ்கர் பிடித்துள்ளார்.
06:55:02 on 11 Dec
09:57:01 on 10 Dec 2019,Tue
நடிகை நித்யாமேனன், ”சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன். என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும்.” என கூரியுள்ளார்.
09:57:01 on 10 Dec
08:55:01 on 10 Dec 2019,Tue
துருவங்கள் பதினாறு திரைப்படத்தியடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் மாஃபியா : சாப்டர்-1. இப்படத்தில் முன்னணி கதாப்பத்திரங்களில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
08:55:01 on 10 Dec
08:25:01 on 10 Dec 2019,Tue
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, "சபாக்" என்ற பெயரில், ஹிந்தியில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
08:25:01 on 10 Dec
03:57:02 on 10 Dec 2019,Tue
ஈஸ்வர் கைது செய்யப்படுவதற்கு சில தினங்கள் முன்பு, குடும்ப நண்பரும் காவல்துறையின் உயரதிகாரியுமான ஐ.ஜி சேஷசாயியைச் சந்தித்துப் பேசியுள்ளார், ஜெயஶ்ரீ. இதை வைத்தே `அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியே என் மீதான கைது நடவடிக்கை' என்றார் ஈஸ்வர்.
03:57:02 on 10 Dec
02:57:02 on 10 Dec 2019,Tue
இயக்குநர் ஷங்கரிடம் மீண்டும் விஜய்யுடன் பணியாற்றுவது எப்போது என எழுப்பப்பட்ட கேள்விக்கு “நானும் ரெடி; அவரும் ரெடி. எப்போது வேண்டுமானாலும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. அதற்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.
02:57:02 on 10 Dec
04:27:01 on 09 Dec 2019,Mon
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தொடர்ந்து கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து வருவதுடன் அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால், சற்று வழக்கத்திற்கு மாறாக புடவை அணிந்து ஓவர் கவர்ச்சியில் ஒய்யாரமாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
04:27:01 on 09 Dec
03:57:01 on 09 Dec 2019,Mon
தயாரிப்பாளர் போனி கபூர், ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் என்றும், 2020ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வலிமை படம் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து #ValimaiStartsOnDec13 #ValimaiDiwali2020 என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
03:57:01 on 09 Dec
01:57:01 on 09 Dec 2019,Mon
செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் நடிகராக களமிறங்கியுள்ளார் ரங்கராஜ் பாண்டே. அவர் முதன்முதலாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இந்நிலையில், திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் இயக்கவுள்ளார் இயக்குனர் சுசி கணேசன். இதில் தமிழில் சுசி கணேசன் நடித்த வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறாராம்.
01:57:01 on 09 Dec
07:55:02 on 09 Dec 2019,Mon
'கனா' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' மூலம் டோலிவுட்டில் கால்பதித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது நானி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'நின்னுகோரி' படத்தை இயக்கிய சிவா நிர்வானா இயக்கும் இந்த படத்தில் ரித்துவர்மாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
07:55:02 on 09 Dec
06:55:01 on 08 Dec 2019,Sun
நடிகை திரிஷா தற்போது ராங்கி படத்தில் ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ராங்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.
06:55:01 on 08 Dec
05:27:01 on 08 Dec 2019,Sun
அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை வெள்ளைத்தாளில் எழுதி ட்விட்டரில் பதிவிட்டு வந்த இயக்குநர் சுசீந்திரன் தற்போது சமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் திரைப்படம் டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
05:27:01 on 08 Dec
02:27:01 on 08 Dec 2019,Sun
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ”உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
02:27:01 on 08 Dec
11:27:01 on 08 Dec 2019,Sun
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினி பற்றி யார் தவறாக பேசினாலும் நான் பதிலடி கொடுப்பேன் என கோபமாக கூறியுள்ளார். சின்ன வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் எனவும் கூறி தான் எவ்வளவு வெறித்தனமான ரஜினி ரசிகர் என குறிப்பிட்டுள்ளார் லாரன்ஸ்.
11:27:01 on 08 Dec
10:57:01 on 08 Dec 2019,Sun
தர்பார் விழாவில் பேசிய ரஜினிகாந்த், “எனக்கு 69 வயது முடிந்து 70 வயது தொடங்குகிறது. என் வாழ்வில் நடந்த, யாருக்கும் தெரியாத இரண்டு சம்பவங்களை இங்கு நான் பகிர்ந்துகொள்கிறேன்” என்று கூறி பேச்சை மீண்டும் தொடங்கினார் ரஜினி. இதில் அவர் சென்னைக்கு தான் வந்தது எப்படி என்று தனது அனுபவங்களை பகிந்து கொண்டார்.
10:57:01 on 08 Dec
09:10:11 on 08 Dec 2019,Sun
‘தர்பார்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ”நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், சஸ்பெண்ஸ், திரில்லர், ஆக்ஷன் படமாக தர்பார் படம் வந்துள்ளது. ரஜினியை வைத்து படம் தயாரித்தால் நஷ்டம் ஏற்படாது என்று நம்பினார்கள். எனவே, நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது” என்றார்.
09:10:11 on 08 Dec
08:25:01 on 07 Dec 2019,Sat
ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா, ”தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
08:25:01 on 07 Dec
02:57:01 on 07 Dec 2019,Sat
நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா நடிப்பில் கடைசியாக 100 படம் வெளியானது. இதில் அதிரடி போலீஸாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அதர்வா அடுத்து நடிக்கவுள்ள படத்தில் மீண்டும் போலீஸாக நடிக்கவுள்ளார். ஆனால் இந்த முறை சாதராண கான்ஸ்டபிளாக நடிக்கிறாராம். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார்.
02:57:01 on 07 Dec
10:57:01 on 06 Dec 2019,Fri
சிம்புவின் மாநாடு படம் ட்ராப் ஆனதாக கூட கூறப்பட்டது, அதை வெங்கட் பிரபு லாரன்ஸுடன் படம் செய்ய போகிறார் என்ற செய்தியும் உறுதியாக்கியது. ஆனால், மாநாடு கண்டிப்பாக ஜனவரி மாதம் தொடங்கும் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார், இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
10:57:01 on 06 Dec
09:57:01 on 06 Dec 2019,Fri
விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
09:57:01 on 06 Dec
05:58:51 on 06 Dec 2019,Fri
படத்தில் முதல் பாதியில் தேவையில்லாத இடங்களில் ரொமான்ஸ் காட்சிகள் வந்து செல்லும், அட இப்ப எதற்குடா இது என்றாலும், அதை வைத்து காட்சிகளை நகர்த்தியது அந்த ரொமான்ஸ் காட்சிகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். அதிலும் கிளைமேக்ஸ் அப்படியே கான்ஜுரிங் இரண்டாம் பாகத்தை பார்த்தது போல் உள்ளது.
05:58:51 on 06 Dec
12:27:01 on 06 Dec 2019,Fri
அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.' 1995ஆம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள்.
12:27:01 on 06 Dec
10:57:02 on 05 Dec 2019,Thu
சமீபத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். அப்போதே ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த படத்தை அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10:57:02 on 05 Dec
08:27:02 on 05 Dec 2019,Thu
சாருகேஷ் சேகர் என்ற இயக்குநரின் திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்கும் அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாணி போஜன், சுவாரசியமான தகவல் என்னவென்றால், வாணி போஜன் குறிப்பிட்டிருக்கும் சாருகேஷ் சேகர், கார்த்திக் சுப்பராஜின் பெஞ்ச் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட குறும்படங்களில் ‘புழு’ என்ற குறும்படத்தை இயக்கியவர்.
08:27:02 on 05 Dec
07:55:01 on 05 Dec 2019,Thu
சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. இப்படத்தினை வி.இசட் துரை இயக்கி உள்ளார். சாக்ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு, சாய் தன்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
07:55:01 on 05 Dec
04:57:01 on 05 Dec 2019,Thu
இரும்பு கடையில் லாரி ட்ரைவராக வேலைப்பார்க்கும் தினேஷ், டீச்சராக இருக்கு ஆனந்தியை காதலிக்கின்றார். ஆனால், ஆனந்தி வீட்டில் சாதி ரீதியாக பிரச்சனை இருக்க எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய பிரச்சனை அந்த இரும்பு கடைக்கு இரண்டாம் உலகப்போரில் இருந்து மிஞ்சிய குண்டுகளில் ஒன்று கரை ஒதுங்கி இவர்கள் கடைக்கு வருகிறது.
04:57:01 on 05 Dec
02:03:02 on 05 Dec 2019,Thu
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவரது கணவர் ஈஸ்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வர், ”ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய். பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் என் மீது வீண்பழி சுமத்துகிறார்.” என குற்றம் சாட்டினார்.
02:03:02 on 05 Dec
02:00:01 on 05 Dec 2019,Thu
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவரது கணவர் ஈஸ்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வர், ”ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய். பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் என் மீது வீண்பழி சுமத்துகிறார்.” என குற்றம் சாட்டினார்.
02:00:01 on 05 Dec
08:55:01 on 05 Dec 2019,Thu
”நடிகை ரம்யா பாண்டியனின் பெயரில் சமூகவலைதளங்களில் கணக்குகள் தொடங்கி அதில் நான் தான் ரம்யா பாண்டியன் என்று கூறுவது தவறானது. அவ்வாறு அவரது பெயரில் தவறான பதிவுகளை பதிவிட்டால் சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ரம்யா பாண்டியன் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
08:55:01 on 05 Dec
05:57:02 on 04 Dec 2019,Wed
சீரியல் நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்வருடன் தொடர்பிலிருந்த நடிகை மஹாலக்ஷ்மி பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான மஹாலக்ஷ்மி கணவரை பிரிந்து, புதுமுக நடிகருடன் நெருக்கத்துடன் இருந்துள்ளார்.
05:57:02 on 04 Dec
03:27:01 on 04 Dec 2019,Wed
நடிகை யாஷிகா ஆனந்த், கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.
03:27:01 on 04 Dec
04:57:02 on 03 Dec 2019,Tue
இயக்குனர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் தோற்றத்தில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
04:57:02 on 03 Dec
03:57:01 on 03 Dec 2019,Tue
மம்முட்டி, இனியா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாமாங்கம். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மம்முட்டி, ‘தமிழ்நாட்டில் மேடையில் பேசுவதற்கே பயமாக உள்ளது. படங்களில் டப்பிங் பேசுவது எளிதாக இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா, தமிழ்நாடு என்று எந்த பிரிவும் கிடையாது.” என்றார்.
03:57:01 on 03 Dec
12:57:01 on 03 Dec 2019,Tue
2019 முடியவுள்ள இந்த நிலையில் தற்போது யாஹூ இந்தியா நிறுவனம் Decade in Review என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டில் கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என அமீர் கானின் ’டங்கல்’ படத்தை குறிப்பிட்டுள்ளனர்.
12:57:01 on 03 Dec
08:55:01 on 02 Dec 2019,Mon
சங்கரின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த், இயக்குநராக அறிமுகமாகும் டகால்டி படத்தில் சந்தானம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் நேற்று ( டிசம்பர் 1) மாலை 4:30 மணிக்கு வெளியிடப்பட்ட நிலையில் 1.6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, ஒரு லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
08:55:01 on 02 Dec
08:27:01 on 02 Dec 2019,Mon
பிரம்மன் படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி நீண்ட இடை வெளிக்கு பிறகு மாயவன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் வரும் வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார். ஆனால் அவரது படங்கள் எதுவும் பெரிய வெற்றி அடையவில்லை. தேடி வந்த படத்தை ஏற்க மறுத்த நிலையில் அப்படம் வேறு ஒரு நடிகையின் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டாகி விடுகிறதாம்.
08:27:01 on 02 Dec
07:55:01 on 02 Dec 2019,Mon
நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாள் இன்று. தமிழ் சினிமா உலகை தனி பெண்ணாக கட்டி ஆண்டு கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவின் உண்மையான பெயர் விஜலக்ஷ்மி. பல ஏரியாக்கள் கொண்ட சினிமா உலகில் பி அண்ட் சி ரசிகர்கள் மத்தியில் ஸ்மிதாவுக்கு என்று தனி இடம் இருந்தது.
07:55:01 on 02 Dec
12:57:01 on 02 Dec 2019,Mon
நீண்ட நாள் ரிலீஸ் பிரச்சனையில் இருந்த தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பல பிரச்சனைகளுக்கு பிறகு படம் எந்த ஒரு புரொமோஷனும் இல்லாமல் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீஸ் ஆகி 3 நாள் முடிவில் இப்படம் சென்னையில் ரூ. 2.02 கோடி வசூலித்துள்ளது.
12:57:01 on 02 Dec
09:57:01 on 01 Dec 2019,Sun
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அவர் இப்போது ஹீரோவாகிவிட்டார். இப்படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குகின்றனர், படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், வட இந்திய மாடல் ஒருவர் ஹீரோயினாக நடிக்கின்றார்.
09:57:01 on 01 Dec
05:57:01 on 01 Dec 2019,Sun
இளையராஜாவிற்கு இடம் மறுக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பவர், புகழ்பெற்ற எல்.வி.பிரசாத்தின் பேரனான சாய் பிரசாத் தான் என்கின்றனர் தற்போதைய நிர்வாகிகள். இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்தை வேறு ஒருவருக்கு ஒப்பந்தத்திற்கு விட்டு விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
05:57:01 on 01 Dec
04:27:01 on 01 Dec 2019,Sun
”16 வயதினிலே படத்திற்காக முதலில் 5 ஆயிரம் சம்பளம் கேட்டார் ரஜினி. இது சின்ன பட்ஜெட் படம் தான், அவ்வளவு தொகை சாத்தியமில்லை என்றேன். இதையடுத்து படிப்படியாக குறைத்து 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அந்த சம்பளத்தில், இன்னும் அவருக்கு 500 ரூபாய் பாக்கி வைத்துள்ளேன்.” என்றார் பாரதிராஜா.
04:27:01 on 01 Dec
02:57:01 on 01 Dec 2019,Sun
வெப் சீரிஸில் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை தமன்னா, “டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் நடிப்பது ஒரே சமயத்தில் ஐந்து படங்களில் நடிப்பதற்குச் சமம். ஏற்கனவே நடிகையாக அறியப்படும் என்னைப் போன்ற கலைஞர்களுக்கும் இது சவாலானது தான்.” எனக் கூறினார்.
02:57:01 on 01 Dec
12:57:01 on 01 Dec 2019,Sun
‘ஜெயலலிதா ஆசிர்வாதத்துடன் பா.ஜ.கவில் இணைந்து உள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெண்கள் நலனுக்காகவும் குழந்தைகள் கல்வி உள்பட பல திட்டங்களை செய்து வருகிறார். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று நடிகை நமீதா தெரிவித்தார்.
12:57:01 on 01 Dec
10:57:01 on 30 Nov 2019,Sat
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப் இணையதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்த் திரையுலகில் 24 மணிநேரத்தில் அதிகம் பேர் பார்வையிட்ட பாடலின் லிரிக்கல் வீடியோ என்று சாதனையை அப்பாடல் பெற்றுள்ளது.
10:57:01 on 30 Nov
08:27:01 on 30 Nov 2019,Sat
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்.டி.வி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதனை சன்.டி.வி. நிறுவனத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
08:27:01 on 30 Nov
01:25:01 on 30 Nov 2019,Sat
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கானிடம், மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க அவரை அணுகியுள்ளார். அப்போது நடிகையின் இடுப்பின் மீது அந்த நபர் கை வைத்துள்ளார். அதனால் கோபமான நடிகை சாரா அதை வெளிக்காட்டாமல் விலகி சென்றுள்ளார். இந்த வீடியோ வெளியாகி மிக பரபரப்பாக இணையத்தில் பரவி வருகிறது.
01:25:01 on 30 Nov