07:57:01 on 16 Dec 2019,Mon
துளசி நீர், சுத்த்மான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல் சுருக்கம் நீங்கி நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.
07:57:01 on 16 Dec
07:55:01 on 15 Dec 2019,Sun
ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும்.
07:55:01 on 15 Dec
08:55:01 on 12 Dec 2019,Thu
கிரீன் டீயினால் கிடைக்கும் பிரபலமான நன்மைகளுள் ஒன்றுதான் எடை குறைய உதவும் என்பது. இதில் உள்ள பாலீபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட கிரின் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன. உடல் எடையைகுறைக்க முயல்பவர்களுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.
08:55:01 on 12 Dec
08:55:02 on 10 Dec 2019,Tue
சிறுநீரை அதிக நேரம் வெளியேற்றாமல் இருப்பதால் முதலில் உடலில் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது. சிறுநீரகப்பை அதிக நேரம் நிறுத்துவது சிறுநீரக பையில் அழுத்தத்தை அதிகரித்து கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து சிறுநீரகத்தை வெளியேற்றாமல் இருப்பதால் சிறுநீரகப்பை விரிவடைவது மட்டுமன்றி, அதன் சதையும் விரிவடைகிறது.
08:55:02 on 10 Dec
06:55:01 on 09 Dec 2019,Mon
நீங்கள் போதுமான உடற்பயிற்சி செய்யாவிட்டால், உங்கள் தசைகள் பாதிக்கப்படலாம். உங்கள் தசைகள் போதுமான அளவு நகராததால் அவை வலிமையை இழக்கக்கூடும். உடற்பயிற்சி உங்கள் தசைகளுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் தசைகளை உருவாக்க உதவுகிறது.
06:55:01 on 09 Dec
05:55:02 on 09 Dec 2019,Mon
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
05:55:02 on 09 Dec
09:55:02 on 08 Dec 2019,Sun
சூழ்நிலையும் எடை கூடுதலுக்கு காரணமாக அமைகின்றது. நமது உணவு, நீர், காற்று, கட்டிடப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பலவற்றில் ரசாயன கலவைகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இவை அனைத்தும் மனித உடலின் செயல்திறனை மாற்றி நாளமில்லா சுரப்பிகளை தாக்குவதன் மூலம் உடல் எடை கூடுதல் ஏற்படுகின்றது.
09:55:02 on 08 Dec
05:55:01 on 08 Dec 2019,Sun
முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது. முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு இதனுடன் சீரகம் பொடித்துப்போட்டு தினமும் மதிய உணவு வேலையிலே சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட பலவிதமான நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது.
05:55:01 on 08 Dec
10:55:01 on 07 Dec 2019,Sat
ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
10:55:01 on 07 Dec
08:55:01 on 07 Dec 2019,Sat
குடும்பம், பார்க்கும் வேலை இவை இரண்டுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது கடினமானதுதான் என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களிடம் சேர்ந்து இருந்து பொழுதை போக்குவதற்கு குடும்பத்தினர் எதிர்பார்க்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அது குடும்பத்தினர் உங்களுடன் நெருங்கி பழகுவதற்கு வழிவகை செய்யும்.
08:55:01 on 07 Dec
05:55:01 on 07 Dec 2019,Sat
அரைக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும். அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும். பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றை இக்கீரை குணப்படுத்தும். இக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.
05:55:01 on 07 Dec
05:55:01 on 05 Dec 2019,Thu
தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர். கருவேப்பிலை கண் பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. நீரிழிவு நோய்க்குத் தீர்வும் கிடைக்கிறது.
05:55:01 on 05 Dec
01:27:01 on 04 Dec 2019,Wed
கோவைக்காயின் உவர்ப்பான சுவை வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிலருக்குச் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் இருக்கும். சில நேரங்களில் வாயுத்தொல்லை உடலுக்குள் உருண்டோடும். கோவைக்காய் சாப்பிடுவதன் மூலமாக இவற்றை உடனடியாக சரிசெய்யலாம்.
01:27:01 on 04 Dec
05:55:02 on 04 Dec 2019,Wed
வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் தீங்கான நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது. புரோட்டின் நிறைந்த இந்த எண்ணெய்யை நமது சருமத்திற்கு பயன்படுத்தினால் அற்புத பலன்களை பெறமுடியும்.
05:55:02 on 04 Dec
07:55:02 on 03 Dec 2019,Tue
பாம்பு கடித்தால் கூட அந்த விஷத்தை முறிப்பதற்கு முதலுதவி சிகிச்சையாக, எருக்கன் இலையை அரைத்து கோலி குண்டு அளவு விழுங்கினால் விஷம் இறங்கும். தேள் கடித்தால் இதேபோன்று சுண்டைக்காய் அளவு கொடுக்க வேண்டும். கடித்த இடத்தில் எருக்கன் இலையை வைத்து கட்டினால் விஷம் இறங்கும். இதன் பிறகு மருத்துவரிடம் செல்லலாம்.
07:55:02 on 03 Dec
10:57:01 on 02 Dec 2019,Mon
ஆணுறையை பயன்படுத்த எடுக்கும்போது நெகிழும் தன்மை குறைவாக இருப்பதாக அல்லது வறண்டு இருப்பதாக அல்லது கையில் ஒட்டிக் கொள்வதுபோல் உணர்ந்தால் பயன்படுத்த வேண்டாம். புதிய ஒன்றை வாங்குவது நன்று. நிறம் வெளிறி அல்லது பூஞ்சை பிடித்தது போன்ற மணம் இருந்தாலும் அந்த ஆணுறையை தவிர்க்கவும்.
10:57:01 on 02 Dec
08:55:01 on 02 Dec 2019,Mon
சர்க்கரை நோயை சமாளிப்பதும் சாத்தியமே! விரைவில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களைப்போல சாதாரண வாழ்வுக்கு மாறும் காலம் வந்து விட்டது. அன்று ரத்தத்தில் சர்க்கரை அளவு 140 மி.கி. அளவுக்கு மேல் இருந்தால் நீரிழிவு நோய் என்று சொன்னார்கள். இன்று 140 மி.கி. அளவை தாண்டினாலே உங்களுக்கு பாதிப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
08:55:01 on 02 Dec
08:27:01 on 01 Dec 2019,Sun
ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக ஆண்கள், ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
08:27:01 on 01 Dec
06:55:01 on 01 Dec 2019,Sun
திருடன் வருகிறான் என்று நாய் குரைத்தால் நாயை அடக்குவீர்களா? அல்லது திருடனை பிடிக்க முயற்சிப்பீர்களா. இதில் நாய் என்பது ரத்த அழுத்தம், திருடன் என்பது காரணிகள். உயர் ரத்த அழுத்தம் பி.பி. என்பது பல்வேறு காரணங்களால் உருவாகும். ஆனால் இது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கியமின்மையின் வெளிப்பாடுதான்.
06:55:01 on 01 Dec
06:57:01 on 30 Nov 2019,Sat
உடலில் சோர்வு அதிகம் இருந்தால், அதற்கு முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடு ஆகும். இதன் குறைபாட்டினால், ஆக்சிஜன் உடலில் குறைந்து ஆற்றல் குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் சிறு வேலை செய்தால் கூட மிகுந்த சோர்வு ஏற்படும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், நுரையீரல் பிரச்சனையாக அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.
06:57:01 on 30 Nov