View in the JustOut app
X

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி இன்று (மே 28) காங்கிரஸ், ‘ஸ்பீக் அப் இந்தியா’ என்ற பிரச்சாரத்தை சமூக தளங்களில் முன்னெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று ட்விட்டரில், #speakupinida என்ற ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகியுள்ளது.

09:57:01 on 28 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் 20 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டித் தர முன்வர வேண்டும் என்றும், பொது மக்கள் மற்றும் தனியார் பங்களிப்பாக 10 லட்சம் கோடி ரூபாய் திரட்டி மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

05:27:01 on 28 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களே மாவட்டச் செயலாளர்களாக, முக்கிய நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி. அதற்காக ஓ.பன்னீருடன் பேசியிருக்கிறார். ஓ.பன்னீர் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தனது பிடியையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

10:27:01 on 28 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அனுஷ்கா ஷர்மா தயாரித்துள்ள ”பாட்டலஸ் லோக்” வெப் சீரிஸில், உ.பி. மாநிலத்தில் இருக்கும் பாஜக தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவை உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார் கூறியுள்ளார்.

07:57:01 on 27 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜூன் மாதம் வழங்கப்படும் இலவவச பொருட்களுக்கான டோக்கன் வரும் 29ஆம் தேதி தொடங்கி 31ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டோக்கன் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

09:56:16 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கரூர் ஆட்சியரை மிரட்டியதாக செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டதே உடனடியாக இந்த வழக்கில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அவர் கைது செய்யப்பட்டவில்லை. இந்நிலையில்தான் சிபிசிஐடி தலைவர் பதவியிலிருந்து ஜாபர் சேட் மாற்றப்பட்டார்.

08:57:01 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

“60 நாட்களாக ஊரடங்கில் இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக உயரும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். ஆனால், மத்திய அரசு படிப்படியாக ஊரடங்கை ரத்து செய்து வருகிறது. ஊரடங்கு என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அது தோல்வியடைந்துவிட்டது.” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

06:28:57 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”நாடெங்கும் தலைவிரித்தாடும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சட்டம் வேண்டும் என்பதில் பா.ஜ.கவின் நிலைப்பாடு என்ன? மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது அப்படி சட்டம் இயற்ற தயங்குவது ஏன்? அச்சட்டத்தை இயற்றும்படி தமிழக அரசையும் பாஜக வற்புறுத்துமா?” என விசிகவின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

03:57:01 on 26 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைத் துவக்கத்தில் கடுமையாக விமர்சித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், தற்போது மத்திய அரசு அத்திட்டத்தையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

02:57:02 on 26 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 31ஆம் தேதியுடன் நான்காவது ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

08:38:44 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஹரியானா மாநில பாஜக செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக உள்ளவர் சந்தர் பிரகாஷ் காதுரியா. இவர் கடந்த 21-ம் தேதி சண்டிகரில் உள்ள தனது பெண் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டாவது மாடியில் இருந்த வீட்டின் பால்கனியில் இருந்து திடீரென துணிகளைக் கட்டி சந்தர் பிரகாஷ் கீழே இறங்கியுள்ளார்.

08:57:01 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சிக்கிம் தனி நாடு என்று குறிப்பிட்டிருந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் அளித்துள்ளார்.

02:57:01 on 24 May

மேலும் வாசிக்க தினமணி

ஆர்.எஸ். பாரதி கைதை கண்டித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அரசியல் விளையாட்டுக்கு தலித் மக்களைப் பகடைக் காயாக்குவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி அவர்கள் தமது அரசியல் விளையாட்டுகளை நேரடியாக நடத்துவதே முறையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

10:57:01 on 23 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ”திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. அடுத்து காத்திருப்பு பட்டியலில் தயாநிதிமாறன்? என்று தெரிவித்துள்ளார்.

01:57:01 on 23 May

மேலும் வாசிக்க தினமணி

நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை நன்றாக கவனித்து கொள்வது மாநிலங்களின் பொறுப்பு என தெரிவித்துள்ளார். மேலும் அவர், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை பெரிய சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

12:57:01 on 23 May

மேலும் வாசிக்க தினமலர்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப் பிரிவு போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது பேச்சு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம், ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

10:55:53 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப் பிரிவு போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், அதிமுக அரசின் நிர்வாக தோல்விகளை திசை திருப்பவே அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

10:39:42 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஏழெட்டு தாழ்த்தப்பட்டவர்கள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார். தான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார்.

10:23:31 on 23 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

விபி துரைசாமியின் விலகலையடுத்து அவர் கொங்கு மண்டலம் முழுதும் திமுக தன்னை அருந்ததியர் என்பதால் எப்படியெல்லாம் நடத்தியது என்று தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் திமுகவின் அருந்தியர் வாக்கு வங்கியில் விபி துரைசாமி ஒரு கீறலை ஏற்படுத்த முடியும்.

09:57:01 on 22 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பழியை எத்தனை ஆண்டுகளானாலும் பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

05:27:01 on 22 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கரூர் மாவட்ட எஸ்.பி ரா.பாண்டியராஜனிடம் அம்மாவட்ட பாஜக தலைவர் கே.சிவசாமி அளித்துள்ள புகாரில், எம்.பி ஜோதிமணி, பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததுடன், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அதனால் அவரை அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

11:27:01 on 22 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான, வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

09:27:02 on 22 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

கொரோனா கோர ஆட்டத்தால் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நிலையில், நிலுவைத் தொகையும் இழுத்தடிப்புச் செய்யப்படுவதால் கூடுதல் சுமையைச் சந்திக்கும் நிலைக்கு மாநில அரசுகள் ஆளாக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிதி இழப்பை சமாளிக்க தமிழக அரசு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

08:26:35 on 21 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

07:45:02 on 21 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”பிரதமர் மோடியை மக்கள் கல்லால் அடிக்கும் நிலை உருவாகியிருக்கும் என்று ஜோதிமணி கூறியதை தமிழகத்தில் பாஜகவினர் மட்டுமே கண்டித்தோம். நம்மோடு கூட்டணியில் இருக்கிற அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட யாருமே கண்டிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி இருக்கிறதா இல்லையா?” என்கின்றனர் பாஜகவினர்.

06:27:01 on 21 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், “கொரோனா ஊரடங்கின் போது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான வளர்ச்சிதிட்டத்தை சாதனையாக்க திட்டமிட வேண்டும்.” என கூறி உள்ளார்.

10:57:01 on 21 May

மேலும் வாசிக்க தினமலர்

திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி பாஜக தலைவரைச் சந்ந்திதது தொடர்பாக திமுக தலைமை, துரைசாமியைத் தொடர்பு கொண்டு அதற்கான காரணத்தைக் கேட்டுள்ளது. அதற்கு அவர், “என் மச்சான் பாஜக தலைவர் முருகனை பார்க்கணும்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருந்தாப்ல. அதான் போய் பார்த்துட்டு வந்தேன்.” எனக் கூறியுள்ளார்.

10:27:01 on 21 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

50 நாட்களுக்கு மேல் ஊரடங்கை நீடித்துள்ள அரசு, மக்களை தனிமைப்படுத்தி மேலும் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பதற்கு பதில், இந்த கொரோனா ஊரடங்கு சூழலை சாதகமாக பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது மிகுந்த வேதனை ஏற்படுத்துகிறது.

05:57:01 on 19 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பாஜக தலைவர் எல்.முருகன் ஏற்கனவே எஸ்சி.எஸ்டி ஆணைய துணைத் தலைவராக இருந்தவர். அவரது உத்தரவின் பேரில்தான் மாநிலம் முழுதும் தயாநிதிமாறன் மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இதன் மூலம் தயாநிதிமாறனைக் கைது செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

09:57:02 on 19 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

“பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூபாய் 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்.” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

06:57:01 on 18 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

05:33:05 on 18 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, ”மக்களை மீண்டும் ஏமாற்றும் முயற்சி நடந்துள்ளது. தன் அறிவிப்புகள் எந்த வகையில், மக்களுக்கு உதவும் என்பது குறித்து விவாதிக்க, நிர்மலா சீதாராமன் முன்வர வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

09:57:01 on 18 May

மேலும் வாசிக்க தினமலர்

தமிழகத்தில் மே 7ஆம் தேதி 14,102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, நேற்று, 8,270ஆக குறைந்துள்ளது. இதனால் கொரோனா தொற்றுப் பரிசோதனைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம், நோய்த் தொற்று குறைந்து வருவது போன்று வெளி உலகத்திற்குக் காட்ட நினைக்கிறது தமிழக அரசு என்று குற்றம்சாட்டியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

08:57:01 on 17 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

‘‘20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?. மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு’’ என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

07:57:01 on 17 May

மேலும் வாசிக்க மாலைமலர்

‘நான் இதுவரைக்கும் பணியாற்றின கட்சிகளுக்கெல்லாம் அடிமட்டம் வரை கட்டமைப்பு கிடையாது. ஆனால் திமுகவைப் போல மேலேர்ந்து கீழே வரைக்கும் உறுதியான கட்டமைப்பு கொண்ட கட்சியை நான் இதுவரைக்கும் இந்தியாவுல பார்த்ததில்லை’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

11:57:01 on 17 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”மதுக்கடை திறப்பில் உத்வேகத்தைக் காட்டும் அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்க அவகாசம் கேட்டுக்கொண்டேஉச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளது. இனி மக்களே நீதி மய்யமாக மாறும் காலம் வந்துவிட்டது” என்று கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

05:27:01 on 15 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

டெல்லியில் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சுயசார்பு திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-ம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் மீனவர்கள் புதிய மீன்பிடி கப்பல்கள் வாங்க நிதிஉதவி வழங்கப்படும் என்றும், மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

04:47:34 on 15 May

மேலும் வாசிக்க தினகரன்

திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைமைச்செயலாளர் குறித்து திமுக எம்.பி.க்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அந்த வேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா' என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

12:55:01 on 15 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்ற நிலை உருவாகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். தமிழகத்தில் கரோனா பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

11:57:01 on 15 May

மேலும் வாசிக்க தினமணி

முதல்வர் தனது சார்பில் விலையில்லா அரிசி சிப்பத்தை தனது தொகுதி மக்களுக்கு வழங்கும் பொறுப்பை அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து அவர்கள் கொடுத்த அரிசிச் சிப்பத்தில் ரேசன் அரிசி இருப்பதாலும், கட்சி பேதம் பார்த்து வழங்கப்படுவதாலும் எடப்பாடி தொகுதியில் முதல்வருக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டிருக்கிறது.

10:57:02 on 15 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரதமர் மீது அவதூறு பரப்பியதாக கூறி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் மீது நாகர்கோவில் மாநகர பாஜக தலைவர் நாகராஜன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், மனோ தங்கராஜ் மீது 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

10:27:01 on 15 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையில் ஜெயஸ்ரீ என்ற சிறுமி எரித்துக் கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜெயஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாஜக தலைவர் முருகன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் ஊரடங்கை மீறும் விதமாக கூட்டமாக வந்ததால் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

09:27:02 on 15 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நெல்லை பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மொய்தீன் கான். இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது மகன் காஜா பீர் முகமது (வயது 53). சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவால் முகமது அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்து உள்ளார்.

08:53:54 on 15 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

”பெரம்பலூர் அ.தி.மு.க மாவட்டச்செயலாளர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரையும் சரிவர மதிப்பதில்லை. அவரை மாற்ற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கியவர்கள் மீது மாவட்டச் செயலாளரின் அக்கா மகன் கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

08:57:01 on 14 May

மேலும் வாசிக்க விகடன்

சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், வட்டி தள்ளுபடி சலுகையால் 3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்து பேசும்போது இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

05:25:01 on 14 May

மேலும் வாசிக்க தினகரன்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேலும் 2 மாதம் இலவச அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும், ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்றும், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு அரிசி அல்லது கோதுமை தலா 5 கிலோ வழங்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

05:02:57 on 14 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”கொரோனாவுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும். இப்போது உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் தடுப்பூசிக்காக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். தடுப்பூசி கிடைக்கவில்லை, தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

10:57:02 on 14 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “சிறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் 3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே சென்றது” என்று கேள்வி எழுப்பினார்.

09:57:02 on 14 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும், மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிர நிலையில் உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து சென்றவர்களால்தான் மற்ற பகுதிகளில் கொரோனா பரவியது என்றும் தெரிவித்துள்ளார்.

08:27:01 on 13 May

மேலும் வாசிக்க தினகரன்

பிரதமர் மோடியின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ”லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், மோடியின் உரை இல்லை என்பதால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

09:27:01 on 13 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

” பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதாரத் திட்டத்துக்காக ஆத்மா நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஒதுக்கப்படும். அதன் மொத்த ஒதுக்கீடு 20 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

08:49:37 on 12 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலிருந்து புகழ்பெற்ற பாடலை எடுத்து அதை திமுக தலைவரின் புரமோஷனுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். இது குறித்து திமுக தரப்பில், “அந்தப் பாடலை ரஜினி படப் பாடல் என்பதால் அல்ல...கொடையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வரிகளுக்காகவே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.” என்கிறார்கள்.

07:55:01 on 12 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க