View in the JustOut app
X

6வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இன்று தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

10:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் அணிக்கான கேப்டனாக செயல்பட்ட சர்ஃபராஸ் அகமதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென நீக்கியுள்ளது. தொடர் தோல்வியின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

12:27:02 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி, பேட்ரிக் டே என்ற வீரருக்கும் சார்லஸ் என்ற வீரருக்கும் இடையே நடைபெற்றது. அப்போது சார்லஸ் விட்ட சரமாரியான குத்துகளில் பேட்ரிக் டே நிலைகுழைந்து கீழே சாய்ந்தார். அவரது தலையில் குத்துகள் விழுந்ததால் சுயநினைவை இழந்தார்.

01:27:02 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே மீண்டும் போட்டிகள் நடத்துவதற்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் அனுமதியளிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

04:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

''எல்லோரையும் போல களத்தில் எனக்கும் கோபமும், விரக்தியும் ஏற்படும். ஆனால் அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால் அது அணியின் தவறான போக்கிற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் கோபமாக உணர்வேன், சில நேரங்களில் ஏமாற்றமடைவேன்.” என தோனி கூறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

07:57:02 on 17 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ஓபிஎஸ், அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு 1000 வாங்கினீர்களா? இல்லையா...என்று கேட்டார். அதுக்கு பொதுமக்கள் வாய்திறக்காததால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ், பணம் வாங்கிவிட்டு வாயே திறக்க மாட்டீங்களே என்றார்.

03:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின், மும்பை - ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில், 17 வயது ஆகும் ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

09:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ஆம்தேதி முதல் 16ஆம்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

09:57:01 on 16 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

ஐசிசி சார்பில் நடக்கும் அனைத்துப் போட்டிகளில் ஆட்டம் சமனில் முடிந்தால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் மட்டுமே பயன்படுத்தப்படும், பவுண்டரி எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் இந்த விதிமுறை மாற்றத்தை நியூஸிலாந்து வீரர்கள் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளனர்.

07:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

புனேவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை வெளியிட்டுள்ளது. இதில், கோலி 936 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

12:57:01 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான புளோர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ், மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவரது ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்தது.

12:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் செயலராக மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேலை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

10:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினமணி

ஈரான் நாட்டில் ஆடவர் விளையாடும் கால்பந்துப் போட்டியை பார்ப்பதற்கு கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பெண்களுக்கு கால்பந்து போட்டியை பார்க்க அனுமதி வழக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஆசாதி மைதானத்தில் கால்பந்தாட்டம் நடைபெற்றது.

04:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மும்பையில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானத்தா யு-18 உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார். இந்தப் போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் வெற்றியடைந்து, நான்கு ஆட்டங்களை டிரா செய்தார்.

08:27:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினமணி

11வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை புசெனாஸை எதிர்கொண்டார் மேரி கோம். பரபரப்பான ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில், மேரி கோம் போராடி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

12:57:02 on 12 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே, நடிகர் அஷ்ரித்தா ஷெட்டியை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் காதல் திருமணம் வரும் டிச.2ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நடிகை அஷ்ரித்தா ஷெட்டி, 2013ஆம் ஆண்டு வெளியான உதயம் என்.எச்.4 படத்தில் நடிகர் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்தவர்.

07:27:01 on 11 Oct

மேலும் வாசிக்க ETV Bharat

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதமெடுத்துள்ளார். இரட்டைச் சதம் எடுத்தபோது 7000 டெஸ்ட் ரன்களையும் அவர் கடந்தார். டெஸ்ட் அரங்கில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்களில் கோஹ்லி, நான்காவது இடத்தை ஜெயவர்தனா (இலங்கை), ஹம்மண்டுடன் (இங்கிலாந்து) பகிர்ந்து கொண்டார்.

04:27:01 on 11 Oct

மேலும் வாசிக்க தினமலர்

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி, தனது 26வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இருந்த துணை கேப்டன் ரகானே அரைசதம் அடித்து ஆட்டமிழக்க இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 376 ரன்கள் குவித்தது.

02:27:01 on 11 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கராச்சியில் உள்ள டி.எம்.சி மைதானத்தில் நேற்று உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் 52 வயதான நஷீம் ஷேக் நடுவரில் ஒருவராக இருந்தார். கிரிக்கெட் போட்டியின் நடுவே நஷீம் திடிரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

09:00:11 on 09 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

01:00:18 on 09 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்கிற விநோத சாதனையைச் சமன் செய்துள்ளார் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல். இதுவரை 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள உமர் அக்மல், 10 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

11:55:01 on 08 Oct

மேலும் வாசிக்க தினமணி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஷமி, ஜடேஜா ஆகியோரின் அபார பந்து வீச்சினால் தென் ஆப்பிரிக்காவை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

03:55:02 on 06 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியாவின் இளம் டி20 கிரிக்கெட் வீராங்கனையான ஷஃபாலி வர்மா, தனது இளம் வயதில் சிறுவன் என்று கூறி கிரிக்கெட் பயிற்சி பெற்றதாக வெளியாகியுள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

04:55:01 on 04 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மேலும் வாசிக்க