View in the JustOut app
X

வாட்ஸ்அப் செயலியில் யாரேனும் எம்.பி.4 தரவினை அனுப்பினால் அதனை டவுன்லோடு செய்ய வேண்டாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். செயலியில் பகிரப்படும் எம்.பி4 தரவினை டவுன்லோடு செய்தால் சாதனத்தில் டிடாஸ் (டினையல் ஆஃப் சர்வீஸ்) தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது.

07:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பரிசோதனை முயற்சியாக நடைபெற்ற சமீபத்திய சோதனையில், டிக்-டொக் கிரியேட்டரிகளின் அக்கவுண்டில் உள்ள ‘Bio' பகுதியில், வணிக நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான லிங்க்(Link)களை சேர்க்கும் விதத்தில் தனது அப்ளிகேஷனை மாற்றியமைத்திருக்கிறது டிக்-டொக்.

07:06:40 on 19 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது. 13 ஆண்டுகள் பலன் தரும் இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

03:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நவம்பர் 19 அன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாக பயனாளர்கள் புகார் அளித்து உள்ளனர். 63% பேர் மொத்த இருட்டடிப்பு செய்ததாகக் கூறினாலும், 16% பேர் தங்கள் செய்திகளை பதிவிடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கூறி உள்ளனர்.

02:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

சமூக வீடியோ செயலியான டிக்டோக் (TikTok) App Store-ரிலும், Google Play-விலும் உலகளவில் 1.5 பில்லியன் பதிவிறக்கங்களை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் 466.8 மில்லியனுடன் அல்லது அனைத்து தனித்துவமான இன்ஸ்டால்களிலும் சுமார் 31 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது.

03:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

Redmi Note 5 Pro ஒரு புதிய அப்டேட்டைப் பெறுகிறது. இது நவம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் (November Android security patch) கொண்டுவருகிறது. இந்த போன் ஏற்கனவே கடந்த மாதம் MIUI 11 அப்டேட்டைப் பெற்றது. இப்போது புதிய அப்டேட் சமீபத்திய மென்பொருள் இணைப்பைக் கொண்டுவருகிறது.

04:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஒடிசாவில் உள்ள பாலாசூர் மையத்தில் நேற்று இரவு அக்னி ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. அக்னி ஏவுகணை நிர்ணயித்த இலக்கை துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் தாக்கியதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

12:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்க் டிக்டாக் செயலியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அக்கவுண்ட் வெரிஃபை செய்யப்படவில்லை என்றாலும், இதில் @finkd எனும் பெயரில் இயங்குகிறது.

12:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

03:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இன்ஸ்டாகிராம் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியயாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரில் புதிய அம்சத்தை சோதனை செய்ய துவங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் 15 நொடிகளுக்கு வீடியோக்களை உருவாக்கி, அவற்றில் இசையை சேர்த்து ஸ்டோரிக்களில் பகிர முடியும்.

08:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து இந்தியாவில் இருக்கும் அனைத்து சைபர் பாதுகாப்பு பிரச்னைகளைக் கண்காணிக்கவும் தாக்குதல்களைத் தடுக்கவும் முதன்மையான ஒரு தனி அதிகார மையம் உருவாக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

05:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க விகடன்

ஃபேஸ்புக் நிறுவனத்திடம் பயனர்களின் தரவுகள் கேட்டு அவசர கோரிக்கைகள் விடுக்கும் அரசுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் இந்தியா உள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இந்திய அரசு 22,684 அவசர கோரிக்கைகளை அனுப்பியுள்ளது.

02:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

வாட்ஸ் ஆப்பில் 3 புளூ டிக்குகள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என தகவல் வெளியாகி வருகிறது. 2 புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் அனைத்தும் பொய்யானவை இதை நம்ப வேண்டாம் என வாட்ஸ் ஆப் தெளிவுபடுத்தியுள்ளது.

04:57:02 on 15 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

வரும் ஆண்டு இறுதியில் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தி மீண்டும் நிலவில் சாப்ட் லேண்டிங் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரயான்-3ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப முடிவு செய்துள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

05:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

Redmi 8A மற்றும் Redmi 8-க்கான MIUI 11 நிலையான அப்டேட் நவம்பர் 13 முதல் வெளியிடப்படும் என்று ஜியோமி அக்டோபரில் மீண்டும் அறிவித்தது. பயனர்களுக்கு மகிழ்ச்சியான ஆச்சரியமாகத் தெரிந்த நிலையில், Redmi 8 மற்றும் Redmi 8A-க்கான MIUI 11 நிலையான அப்டேட் இந்திய திட்டமிடலுக்கு முன்னதாகவே ஜியோமி தொடங்கியுள்ளது.

12:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சூரியனை 88 நாட்களுக்கு ஒருமுறை புதன் கிரகம் சுற்றி வருகிறது. ஆனால் சூரியன், புதன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது மட்டுமே புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வை நம்மால் காண முடியும். அந்த வகையில் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நாளை நிகழவுள்ளது.

01:57:01 on 10 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மின்சாரத்தில் இயங்கும் சிறிய ரக விமானத்தை உருவாக்கி வருகிறது. எக்ஸ்.57 மேக்ஸ்வெல் எனப்படும் அந்த விமானம், இரட்டை என்ஜின் விமான தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

05:55:01 on 10 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஒருகாலத்தில் உலகின் முன்னணி இன்டெர்நெட் நிறுவனமாக இருந்த Yahoo, யாஹூ க்ரூப்ஸ் சேவை மூலம் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிலையில் இச்சேவையை நிறுத்திக்கொள்வதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14ஆம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

07:55:01 on 09 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

விண்வெளிக்கு என்னென்ன பொருள்களை அனுப்பலாம், அப்படி அனுப்பப்படும் பொருள்கள் என்னென்ன மாற்றத்துக்கு உள்ளாகின்றன என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அந்தவகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து 12 ஒயின் பாட்டில்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டின் இந்த முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

05:55:02 on 09 Nov

மேலும் வாசிக்க விகடன்

உலக நாடுகளில் 5ஜி சேவை வழங்கும் பணிகளே துவக்க கட்டத்தில் இருக்கும் நிலையில், சீனா 6ஜி சேவைக்கான பணிகளை துவக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் 5ஜி சேவை வழங்க துவங்கி ஒரு மாதம் நிறைவுறாத நிலையில் 6ஜி சேவைக்கான துவக்க பணிகளில் சீனா ஈடுபட துவங்கி விட்டது.

04:55:01 on 09 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

121 இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸால் (Israeli spyware Pegasus) சமரசம் செய்யப்பட்ட பின்னர், பேஸ்புக்கிற்கு சொந்தமான தளம் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ள கட்டண அம்சம், டிஜிட்டல் வங்கி முறையை ஆபத்தில் வைக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

02:55:01 on 09 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ட்விட்டரில் இணைந்த சில நாட்களிலேயே அமித்ஷா மகன் ஜெய்ஷாவிற்கு மட்டும் ப்ளூ டிக் எப்படி வழங்கப்பட்டது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஜெய்ஷாவை வெறும் 218 பேர்தான் பின் தொடர்வோர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12:55:01 on 09 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

செல்போன் அடிக்‌ஷனால் இதயத்துடிப்பு அளவு குறைதல் மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் குறைபாடு நிகழ்கிறது. இதை சரிசெய்யும் விதமாக ’நெட்டாக்ஸ்’(Nettox) என்ற கருவியைக் இந்தியோனேஷியாவில் பல்கலைக்கழக மாணவர் கண்டுபிடித்துள்ளார். டியாஸ் சிசியானந்திதா என்ற மாணவர் தான் இந்தக் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

05:55:01 on 08 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஹாலிவுட் படமான "அயர்ன் மேன்" படத்தில் வரும் காட்சிகளைப் போன்று, ராணுவ வீரர்கள் திடீரென பறந்து பறந்து எதிரிகளை தாக்கவல்ல, ஆயுதம் தாங்கிய கவச உடைகளை வடிவமைக்க சீன ராணுவம் முடிவு செய்துள்ளது. குண்டுகளை அடுத்தடுத்து உமிழும் பிரத்யேக கருவிகள் கொண்டதாக, அந்த கவச உடையைத் தயாரிக்க சீன ராணுவம் உத்தேசித்துள்ளது.

04:55:01 on 08 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதற்காக பிரபல இகாமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. கூடிய விரைவில் டிவி இந்திய சந்தைக்குள் நோக்கியா நிறுவனம் நுழையவுள்ளது.

01:55:01 on 08 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வாட்ஸ் அப்பில் My contacts Excepts ஆப்ஷன் புதிதாக இடம் பெற்றுள்ளது. நாம் தேர்வு செய்யும் நபர்களால் மட்டுமே நம்மை மற்ற குழுவில் இணைக்க முடியும். whatsapp settings > account > Privacy > Group என்ற ஆப்ஷன்களில் சென்று அதில் உள்ள Everyone, My contacts , My contacts Excepts போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

12:55:01 on 08 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகிய செயலிகளுக்கெல்லாம் தலைமை நிறுவனமாக உள்ள ஃபேஸ்புக் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் புதிய லோகோ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆப் மற்றும் நிறுவனத்துக்கு இடையே வேறுபாட்டை காண்பிக்கும் வகையில் இந்தப் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

08:57:01 on 06 Nov

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

வாட்ஸ்அப்-ஐ திறக்கவும். மேல் வலது பக்கம் உள்ள 3 புள்ளிகள் இருக்கும் இடத்தை சொடுக்கவும். பின்னர் Settings-க்குள் நுழையவும். அதைத் தொடர்ந்து Account > Privacy > Fingerprint Lock என்ற வரிசையில் செல்லவும். இதைத் தொடர்ந்து வரும் திரையில் Unlock with Fingerprint என்கின்ற ஆப்ஷனை ஆன் செய்யவும்.

06:57:01 on 06 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

லைம் லைட் நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம், 2019இல் ஆன்லைன் வீடியோக்களின் நிலை ("State of Online Video 2019") என்ற பெயரில் நடத்திய ஆய்வில் ஆன்லைன் வீடியோக்களில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் ஒவ்வோர் ஆண்டுமே இதுபோன்ற ஆய்வை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

03:57:02 on 05 Nov

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

மேலும் வாசிக்க