View in the JustOut app
X

மில்க் மேன் என்ற நாவலில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை பற்றி விரிவாக எழுதியுள்ளார் அன்னா பர்னஸ். இவரது இந்த புத்தகம் உலக அளவில் பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதையும் இந்த நாவல் பெற்றுள்ளது.

03:40:02 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்கியுள்ளது கனடா. கஞ்சா பயன்பாடு சட்டபூர்வமாக்கியது தொடர்பாக, கஞ்சா பயன்பாட்டளர்கள் மற்றும் அந்த தொழிலில் முதலீடு செய்பவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

10:56:01 on 17 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

எத்தியோப்பிய பிரதமர் அபீ அகமது தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளார். அதற்கான காரணமாக, ’ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவுவார்கள்’ என்றும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

08:10:02 on 17 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவில் நுழைந்த ஹோண்டூராஸைச் சேர்ந்த 1600க்கும் மேற்பட்ட அகதிகள், 'தாங்கள் அகதிகளே தவிர குற்றவாளிகள் இல்லை' என்று கோஷமிட்டவாறு குவாத்தமாலா எல்லைப்பகுதியைக் கடந்தனர்.

06:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க EENADU

பிரிட்டனை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அளித்த புகாரை, ஆதாரங்கள் இல்லை என கூறி தாய்லாந்து அரசு வழக்கைத் தள்ளுபடி செய்தது. மேலும், இது குறித்து பேசிய தாய்லாந்து போலீஸ் அதிகாரி, அப்பெண் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை எனவும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:56:01 on 17 Oct

மேலும் வாசிக்க EENADU

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடையவரின் கூட்டாளி மொரோக்கோவைச் சேர்ந்த மவுனி அல்-மொசாஸாடெக்கை சிறையிலிருந்து ஜெர்மனி விடுதலை செய்யவுள்ளது. தனது தண்டனை காலத்தில் பெரும்பகுதியை அனுபவித்துவிட்ட இவர் தற்போது மொரோக்கோவிற்கு நாடு கடத்தப்படுகிறார்.

07:55:02 on 16 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை இனக்குழுக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஆசிய விண்ணப்பதாரர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பாஸ்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடங்கியது.

04:25:02 on 16 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கசோஜிக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என சவுதி அரசர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

11:55:12 on 16 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாலஸ்தீன் உயர் தேசிய குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் காசா கடற்பகுதியில் படகுகள் மூலம் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 24 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

09:35:01 on 16 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

06:26:01 on 16 Oct

மேலும் வாசிக்க தி இந்து

சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறை அக்குபஞ்சர். இதன் பயனை விளையாட்டு வீரர்களும் அடைய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி 2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அதிக வெற்றிகளை குவிக்க வீரர்களுக்கு பாரம்பரிய மருத்துவமுறைகளுடன் கூடிய அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க அந்நாட்டு ஒலிம்பிக் குழு முடிவு செய்துள்ளது.

05:55:02 on 16 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவ வீரர்களை வெளியேற்றுவது குறித்து விவாதிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், அமெரிக்கா ராணுவம் திரும்ப பெறப்படலாம் என தெரிகிறது.

05:25:01 on 16 Oct

மேலும் வாசிக்க EENADU

சிரியாவில் ஏழாண்டுகளாக நடந்து வரும் அரசு எதிர்ப்பு படைகளுக்கு எதிரான தாக்குதலில் இதுவரை 3,50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இப்போரில் அந்நாட்டின் அதிபர் பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கிவிட்டதாகக் கருதப்படுகிறது. அவரது வெற்றிக்குப் பின்னால் ரசாயன ஆயுதங்கள் பெரும் பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.

07:11:02 on 15 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ள சூசெக்ஸ் அரண்மனை வரும் வசந்தகாலத்தில் புது வரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ஹாரி - மேகன் மார்கல் தம்பதியர் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்துக்குப் பின்னர் அவர்கள் பிஜி தீவுக்கும் செல்கின்றனர்.

06:25:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

லெஸ்லி புயலின் கடும் தாக்குதலில் போர்ச்சுக்கல்லின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சுமார் 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

04:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க தி இந்து

ஹோடேய்டா மாகாணத்தில் உள்ள ஜபால் ராஸ் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது திடீர் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பேருந்தில் பயணம் செய்த 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

08:41:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

மத்திய மற்றும் வடக்கு போர்ச்சுகல்லை லெஸ்லி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி துடைத்தெறிந்துவிட்டது. நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளன, சுமார் மூன்று லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் அங்குள்ள கலையகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

05:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர். புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள்.

03:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சலீம் பட்டேல் ஜர்னலிஸம் படித்து, தற்போது பிபிசியில் பணியாற்றி வருகிறார். இவர் பார்வை குறைபாடு கொண்டவர். இன்னும் சில வருடங்களில் பார்க்கும் திறனை அவர் மொத்தமாக இழந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. அவர் சாலையைக் கடப்பதற்கும், சரியான இடத்துக்கு அழைத்துச் செல்லவும் குதிரைக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

02:56:01 on 15 Oct

மேலும் வாசிக்க விகடன்

பொதுமக்களுக்கு மானியங்களை வழங்குவதற்காக ஆதார் போன்ற ஒரு முறையைக் கொண்டுவர உள்ளதாக மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார். ஒருவரே இருமுறை மானியம் பெறுவதையும் மோசடிகளையும் தடுக்க இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

01:56:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரஷ்யாவைச் சேர்ந்த 129 வயதான கோக்கு இஷ்டாம்புலோவா, உலகின் மிக வயதான பெண்மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். செசன்யா பகுதியைச் சேர்ந்த அவர், இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்ததாகவும், இரண்டாம் சார் நிக்கோலஸ்சின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

12:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களின் தகுதிகள் என்ன என்பது பற்றி அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பேட்டி அளித்துள்ளார் அதில், 'இந்தியாவில் இருந்து வரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு உதவி செய்கின்றனர். அவர்களைப் போன்றவர்கள்தான் அமெரிக்காவுக்குள் வர வேண்டும்,' என்றார்.

09:40:02 on 14 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

புளோரிடாவைச் சேர்ந்தவர் ப்ராயன் டெனுமோய்ஸ்டர்(33). பிரபல டேட்டிங் வலைப்பக்கத்தில் பெண் அடையாளத்தில் வலம் வந்த இவர் இணையத்தில் சிக்கிய ஆண்களை தன் வலையில் சிக்க வைத்துள்ளார். கிட்டத்தட்ட 150 ஆண்களைத் தனிமையில் அழைத்து அவர்களுடன் வலுக்கட்டாயமாக உடலுறவுக்கொண்டு அதனை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

06:42:02 on 14 Oct

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

செளதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானதையடுத்து, செளதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றை புறக்கணிப்பது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா யோசித்து வருவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

11:25:01 on 14 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இன்றைய இடைத்தேர்தலுக்காக பாகிஸ்தானில் 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

09:26:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அன்வர் இப்ராஹிம் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மகாதிர் வசம் இருந்து பிரதமர் பதவியை அவர் விரைவில் பெற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

08:40:02 on 14 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசெபத்தின் பேத்தியான இளவரசி யூஜெனியின் காதல் திருமணம் வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரிட்டன் அரச குடும்பத்தின் திருமணம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மட்டுமே சுமார் ரூ.40 கோடி செலவு செய்யப்பட்டது.

07:40:01 on 14 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

சீனாவுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்க அரசு குறைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து அணு ஆயுதம் தொடர்பாக ஏற்றுமதி செய்யப்படும், தொழில்நுட்பங்களை, சீனா அதன் நீர்மூழ்கிக் கப்பல்களிலும், விமானங்களில் பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

10:10:02 on 13 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:40:02 on 13 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ரஷியா நாட்டின் கிழக்கே உள்ள குரில் தீவுப்பகுதியில் இன்று மாலை சுமார் 4.40 மணியளவில் பயங்கர நிலநடுக்க்கம் ஏற்பட்டது. பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்ச்சாட்ஸ்கை நகரில் இருந்து சுமார் 355 கிலோமீட்டர் தூரத்தில் குரில் தீவுப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

06:01:56 on 13 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 9 மாதங்களில் சுமார் 2 ஆயிரத்து 800 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி இருப்பதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்புகளில் சிக்கி, நடப்பாண்டில் மட்டும் 5 ஆயிரத்து 252 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

12:26:01 on 13 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உலகம் முழுவதும் உள்ள வளரும் இளம்பெண்கள் அனைவரையும், கல்வி எனும் ஆகப்பெரிய சக்தி கொண்டு மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய முயற்சி குறித்து மிஷெல் ஒபாமா பேசியுள்ளார். அதாவது, 'உலகளாவிய பெண்கள் கூட்டமைப்பை' ஒபாமா அறக்கட்டளை துவக்கி உள்ளது என்று பெருமையுடன் தெரிவித்தார்.

09:41:01 on 12 Oct

மேலும் வாசிக்க EENADU

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், கடந்த வாரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனியாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. அப்போது, அவர் அளித்தப் பேட்டியில், 'உலகிலேயே அதிகமாக கேலிக்குள்ளாக்கப்படும் நபர் நான்தான்' என தெரிவித்துள்ளார்.

08:26:02 on 12 Oct

மேலும் வாசிக்க விகடன்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயுஸ் ராக்கெட்டில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

07:41:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினமலர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, பல இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால்பதித்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாதுகாப்புப் படைகளின் அதிரடியான நடவடிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர்.

08:11:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

தனது நகர காவல்துறையை தொழில்நுட்ப மயமாக்கும் வகையில், பறக்கும் ரோவர் பைக், ரோபோ காவலர் என பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை துபாய் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. ரோபோக்கள் காவலர்களாக இருக்கும் காவல் நிலையங்களில் மனிதர்கள் யாரும் பணியில் இருக்க மாட்டார்கள்.

06:40:01 on 12 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்க கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ’ஆயுதங்கள் வாங்குவதற்காகத் தடை விதிப்பது குறித்து இந்தியா விரைவில் தெரிந்து கொள்ளும்’ என்று பதிலளித்துள்ளார்.

01:56:01 on 12 Oct

மேலும் வாசிக்க தின மலர்

சீனா உட்பட சில நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ’நவம்பர் 4ஆம் தேதிக்குப் பிறகும் ஈரானிடம் இருந்து எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என மிரட்டல் தொனியில் பதிலளித்தார்.

01:26:02 on 12 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

பாகிஸ்தானின் போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறையில் ஏற்கனவே சீனா பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில் மீண்டும் சீனாவிடம் கடன் கேட்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.

12:25:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கூறப்படும் மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

10:26:01 on 11 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா செல்லும் இடைநில்லா விமான சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது. 19 மணிநேரத்தில் 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இது கடக்கும். இதுவே இப்போது அதிக தூரம் பயணிக்கும் இடைநில்லா விமான சேவையாகும்.

08:26:01 on 11 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய ‘மைக்கேல்’ என்ற புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன. மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.

04:11:01 on 11 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:25:02 on 11 Oct

மேலும் வாசிக்க தினமணி

வங்கதேசத்தில் அரசியல் கட்சிக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் மந்திரிகள் உள்பட 19 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

08:40:01 on 11 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

08:11:02 on 11 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

’தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவின் அட்டூழியத்தை வேடிக்கைப் பார்க்கப்போவதில்லை. முன்னாள் அதிபர் ஒபாமா அரசைப் போல இவ்விவகாரத்தில் நான் கையாலாகாதவனாக இருக்க மாட்டேன். சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

06:26:02 on 11 Oct

மேலும் வாசிக்க தின மலர்

1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி அதிகாலை அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் செர்னோபிள் அணு உலை வெடித்தது. இதன் காரணமாக கதிர்வீச்சு அண்டை நாடுகளுக்கும் பரவியது. தற்போது அந்தப் பகுதியில் சூரிய சக்தி ஆலையை உக்ரைன் அமைத்துள்ளது.

03:10:01 on 11 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

‘தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் இதற்கு முன் அமெரிக்காவில் இருந்து ஒபாமா அரசு கையாளாகாத தனத்துடன் செயல்பட்டது. அதனால்தான் தெற்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதுபோன்று என்னுடைய அரசு இருக்காது’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

12:56:01 on 11 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

வாடிகனின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த பிரார்த்தனையின்போது பேசிய போப் பிரான்சிஸ், “பெண்கள் கருக்கலைப்பு செய்வது என்பது கூலிப்படையினரை வைத்து ஒருவரைக் கொலை செய்வதற்குச் சமம். ஒரு கர்ப்பத்தில், நாம் தலையிடுவது என்பது ஒருவரை அழிப்பதாகும்.” என்றார்.

11:40:01 on 10 Oct

மேலும் வாசிக்க தினமலர்

தலைநகர் நைரோபியில் இருந்து கிசுமு என்ற நகருக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து சாலையிலிருந்து விலகிக் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கவிழ்ந்ததாகவும், இதில் 51 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

06:40:03 on 10 Oct

மேலும் வாசிக்க தின மலர்

வடகொரியாவுக்கு வருகை தருமாறு போப்பாண்டவருக்கு அதிபர் கிம் ஜங் உன் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே,போப்பாண்டவரிடம் இதனை தெரிவிப்பார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

12:26:02 on 10 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

அமெரிக்காவில் சுமார் 6.3 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு கோரி விண் ணப்பித்துள்ளனர். இந்நிலையில் புதிய விதிகள் அமலுக்கு வந்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

11:42:01 on 10 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இரண்டு வருட பணிக் காலத்துக்கு பிறகு அவரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதே சமயம் 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாக எழுந்துள்ள ஊகங்களை மறுத்துள்ளார்.

10:55:01 on 10 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவராக உள்ள மசூத் அசார் உயிருக்கு ஆபத்தான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் உரித்தாக்குதலை நடத்திய முக்கிய பயங்கரவாதி ஆவார்.

12:26:02 on 10 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 என்ற நவீன ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு 48 அதி நவீன ஆளில்லா ராணுவ விமானங்களை விற்பனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது. இது கண்காணிப்பு, தாக்குதல் உள்ளிட்ட பன்முனை பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் வசதி கொண்டது என்று கூறப்படுகிறது.

10:40:01 on 09 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்காவின் நீதிபதியாக பதவியேற்றுள்ள பிரெட் கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப். கேவனோ மீது கூறப்பட்ட பாலியல் புகார்கள் "பொய் பிரசாரம்" என டிரம்பால் விவரிக்கப்பட்டு அதற்காக கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப்.

08:26:01 on 09 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தோனேஷியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆயிரம் பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

09:25:02 on 09 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன ‘கவுரி’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றிக்கு, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

07:41:02 on 09 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது 1500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என உள்ளூர் அருங்காட்சியத்தில் இருக்கும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

11:55:01 on 08 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இவர், லஞ்சம் பெற்றதாக ஒப்புக் கொண்டுள்ளார் என சீனா தெரிவித்து உள்ளது.

10:55:02 on 08 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இடையேயான இரண்டாவது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. சந்திப்புக்கான நேரம் மற்றும் தேதி குறித்து இரு தரப்பிலும் முடிவு எடுத்த பின் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

09:41:01 on 08 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சீனாவின் புராணங்கள், வரலாற்று சம்பவங்களை நினைவுகூரும் வகையில் 83 அரங்கங்கள், வண்ண வண்ண விளக்குகளால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வெறும் மின் விளக்குகள் மட்டுமின்றி பல்வேறு நவீன அம்சங்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

09:26:01 on 08 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மத்திய அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மழை பாதிப்பு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாக மீட்பு மற்றும் அவசரகால பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

07:26:01 on 08 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

பாங்காக்கில் ஐந்து பேர் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகப் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

04:55:01 on 08 Oct

மேலும் வாசிக்க தினகரன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை கைது செய்யப்பட்டார். முன்னதாக, விஜயகலா மகேஸ்வரன் கடந்த ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

01:04:47 on 08 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முன்னணி டெக் நிறுவனங்களின் மதர் போர்டுகளில் உளவுக் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்னால் செய்தி வெளியிட்டிருந்தது ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம்.

12:25:01 on 08 Oct

மேலும் வாசிக்க விகடன்

சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே பதவி வகித்து வந்தார். இந்நிலையில், சீனாவால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இவர், ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

08:56:01 on 08 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் சுமார் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

07:41:01 on 08 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

அந்தரத்தில் தொங்கியப்படி திரைப்படம் பார்க்கும் அதிசய வசதி இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரேன் போன்ற அமைப்பில் அந்தரத்தில் அமர்ந்தபடி திரைப்படத்தை கண்டுகளிக்கும் இந்த வசதியை 4ஜி இஇ என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

03:26:01 on 08 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இங்கிலாந்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவியான ஹானா மேரி, ’கெல்லோக்’ நிறுவனத்தின் கோகோ பாப்ஸ் உணவுப் பொட்டலத்தின் மேலே உள்ள, “அம்மாக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்ற வாசகத்தை மாற்றும்படி கோரிக்கை விடுத்தாள். இதனை அந்நிறுவனமும் ஏற்றுக்கொண்டது.

07:56:02 on 07 Oct

மேலும் வாசிக்க தினமணி

ஹைதியின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது பத்து பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கமானது 5.9 அளவில் இருந்தது. அரசின் செய்தித் தொடர்பாளர், இந்த நிலையை எதிர்க்கொள்ள பேரிடர் மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

05:10:01 on 07 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 1763 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன 5 ஆயிரம் பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மலையடிவாரங்களிலும், சகதிக்குள்ளும் சிக்கிக் கிடக்கும் பல பிரேதங்களை மீட்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:40:02 on 07 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்ட கல் ஒரு விண்கல் என தெரியவந்துள்ளது. பெரும்பாலான விண் கற்களில் 90% முதல் 95% இரும்பு இருக்கும். ஆனால் இந்த விண்கல்லில் 88% இரும்பும் 12% நிக்கலும் இருப்பது இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

09:40:02 on 07 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

06:26:01 on 07 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலகின் தலைசிறந்த ஓப்பரா பாடகி மான்ஸெரட் கேபலுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் பார்ஸிலோனா மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் உடலை விட்டு பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

04:40:01 on 07 Oct

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ மியுங்-பாக்குக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 76 வயதான லீ மியுங் 2008 முதல் 2013 வரை தென் கொரியாவின் அதிபராக இருந்தார். இந்த நிலையில் அவர் தனது ஆட்சிக்காலத்தின்போது ஊழல், மோசடிகளைச் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

03:26:01 on 07 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில், ‘‘சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, சட்டப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வால் முடியவில்லை’’ என்று இந்திய பிரதிநிதி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

01:26:02 on 07 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் உள்ளது. இதன் தலைவரான மெங் ஹாங்வே காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

03:10:02 on 06 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தோனேஷியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காகவும், அவர்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டு பிரபல பாடகர்கள் ஒன்று சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

09:15:02 on 06 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியாவைச் சேர்ந்த பாபர் கல்சா என்ற சீக்கிய அமைப்பு தனி நாடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் இந்த அமைப்புக்கு ஆதரவாளர்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் இந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

08:55:01 on 06 Oct

மேலும் வாசிக்க தின மலர்

இந்தோனேஷியாவின் பலு நகரில் கடந்த மாதம் 29ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த நகரம் பேரழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்து உள்ளது.

07:55:01 on 06 Oct

மேலும் வாசிக்க தின மலர்

சீனாவில் 'டான்சிங் ஆன்டீஸ்' எனும் பெயரில் ஓய்வுபெற்ற முதியவர்கள் பூங்காக்களில் ஒன்று கூடி நடனமாடும் நிகழ்வில் பங்கேற்போர் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:10:02 on 06 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆக்சன் ஏய்டு அமைப்பைப் போல, மேலும் 17 தொண்டு நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உள்துறை இத்தகைய நோட்டீஸை விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

01:10:02 on 06 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

சர்வதேச போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை காணவில்லை என அவரது மனைவி அளித்துள்ள புகாரின் பெயரில் பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

05:40:01 on 05 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

2018ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

02:55:01 on 05 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானது என்று அமெரிக்க புவியில் மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ஹொக்கைடோ பிரதேசத்தின் சில பகுதிகளில் மட்டும் குறைந்தது 5 ஆகவும் உச்சபட்சமாக 7 ஆகவும் ஜப்பானிய தீவிர அதிர்வு அளவில் பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

01:54:44 on 05 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

வங்கதேசத்தில் நேற்று 'மிஸ் வங்கதேசம்' அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு அழகிகள் கலந்துகொண்டனர். இதில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்களிடம் நடுவர்கள் கேள்விகள் கேட்டனர். அப்போது, போட்டியில் பங்கேற்ற ஒருவரிடம், `H2O என்றால் என்ன ’ என்ற கேள்வியை நடுவர்கள் எழுப்பினார்.

10:10:02 on 04 Oct

மேலும் வாசிக்க விகடன்

அமெரிக்கா சில தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் அமைதி ஒப்பந்தத்தைக் கைவிடபோவதாக அறிவித்திருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தில் வியன்னா அமைதி ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இரான் ஓர் வழக்கை நடத்திவந்த நிலையில் இவ்வொப்பந்தத்தை அமெரிக்கா கைவிடும் என பாதுகாப்பு செயலர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

09:41:01 on 04 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான இடத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் சிறிசேனவின் தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், அவ்வப்போது தமிழர்களின் நிலங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

06:40:02 on 04 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் வரையிலான பணக்கார அமெரிக்கர்கள் பெயர் பட்டியலை முன்னணி பத்திரிகையான போர்பஸ் வெளியி்ட்டது. இதில் முதல் 400 இடங்களைப் பிடித்துள்ள பணக்கார அமெரிக்கர்கள் பெயரில் அதிபர் டெனால்டு டிரம்ப் 121வது இடத்தில் இருந்து கீழறங்கி 138 இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

07:55:01 on 04 Oct

மேலும் வாசிக்க தின மலர்

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், தனது எல்லைப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகளை தென்கொரியா அகற்றியுள்ளது. மேலும், 250 கிலோமீட்டர் நீளம் கொண்ட கூட்டு ராணுவ பகுதியில் இனி ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:55:01 on 04 Oct

மேலும் வாசிக்க தினகரன்

தென் சீனக் கடலில் பயணித்த அமெரிக்க போர் கப்பல் தமது பயணப் பாதையை மாற்றிச் செல்லும்படி செய்தது சீனப் போர்க்கப்பல். தம்முடைய கப்பலுக்கு மிக அருகிலும், தொழில்முறையற்ற தன்மையோடும் சீனக் கப்பல் பயணித்து வந்ததாகவும் அதனால் அமெரிக்கக் கப்பல் பாதையை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது அமெரிக்க கடற்படை.

04:40:01 on 04 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஈராக் நாட்டின் புதிய அதிபராக பர்ஹாம் அகமது சலேவை தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். புதிய அதிபர் பர்ஹாம் அகமது சலே ஈராக் நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் பாதுகாவலராக தான் இருப்பேன் என்று உறுதியளித்தார்.

03:56:01 on 04 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பசிபிக் பெருங்கடல் அருகே உள்ளா லோஜா மற்றும் எல் ஒரோ ஆகிய மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 3000 முதல் 3,700 மீட்டர் உயரத்தில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) வசிப்பதாக கூறும் பறவையியலாளர்கள், இப்போது இப்பறவைகளின் அந்த வாழ்விடம் சுரங்கத் தொழிலால் அச்சுறுத்தலில் உள்ளதாக விவரிக்கிறார்கள்.

03:25:02 on 04 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணை நடந்து வரும் சூழலில், ’இது அமெரிக்க இளம் ஆண்களுக்கு மிக மோசமான கால கட்டம், செய்யாத தவறுக்குப் பழி சுமக்கும் கால கட்டம்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

11:40:01 on 03 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

2018ஆம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர் வேதியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.

03:55:02 on 03 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தோனேசியாவின் சுலவேசி என்னும் தீவுப்பகுதியில் சமீபத்தில் சக்திவாய்ந்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்குப் பின்னர் இன்று ஒரு மணி நேரத்தில் இரண்டாவது எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அதிகளவிலான நிலநடுக்கும், எரிமலை மற்றும் சுனாமி தாக்குதல் நடைபெறும் பகுதியாக இந்தோனேசியா திகழ்கிறது.

02:40:01 on 03 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்தோனேசியா நாட்டில், 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப் பகுதிகளில் சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

11:52:24 on 03 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாஸ்கோவைச் சேர்ந்த மைக் கோரஸ்டலவ் என்ற நீர்மூழ்கி வீரர், நடுக்கடலில் திமிங்கலம் ஒன்றுடன் விளையாடிய சுவாரசியக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விளையாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

11:32:51 on 03 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஈராக் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான பார்லி. கூட்டம் நடந்தது. இதில் குர்தீஷ் இனத்தினைச் சேர்ந்த குர்தீஷ் தேச பக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர்.இதில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

09:55:02 on 03 Oct

மேலும் வாசிக்க தின மலர்

மேலும் வாசிக்க