View in the JustOut app
X

சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மோடி, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இன்று காலை டெல்லி வந்தடைந்த பிரதமர் மோடியை, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

06:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

காஷ்மீர் மாநிலத்தில், 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை அலியாபட், இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதேயென்று, ஒரு பெண்ணாக, மனிதப் பிறவியாக வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். இந்த சம்பவத்துக்கு அனைவரும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

06:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து முக்கிய நகரங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். உத்தரப்பிரதேசம் நொய்டாவில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.21 லட்சம், 40 செல்போன்கள், 3 லேப்டாப்புகள், 3 எல்இடி டிவிக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

05:56:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 407 கன அடியில் இருந்து 685 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 35.40 அடியாகவும், நீர் இருப்பு 9.84 டிஎம்சி.,யாகவும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது.

05:41:01 on 21 Apr

மேலும் வாசிக்க தின மலர்

உள்நாட்டு விவகாரங்களை வெளியே பேசி வருவதாக பிரதமர் மோடிக்கு சிவசேனா கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது. வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா இங்கிலாந்தில்தான் பத்திரமாக உள்ளார். பிரதமர் மோடி இது போன்ற விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் கையுடன் திரும்புகிறார் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

05:25:02 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மாதவன் - விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் இதில் நடிக்க விரும்புகிறார். என்றாலும், மாதவன் தமிழில் நடித்த பாத்திரத்தில் இந்தியிலும் நடிக்க வேண்டும். விஜய் சேதுபதி பாத்திரத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

05:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்கம், தங்களது பள்ளிக் கூடங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை என்ன பாடங்கள் நடத்தப்படுகின்றன?, அந்த பாடத்திட்டத்தின் விவரங்கள் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

04:56:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று விஷால் வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இதற்கு ஒரு முடிவுகட்டுவார் என எதிர்பார்க்கிறோம் என்றும் நடிகர் விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

04:41:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

2017-ம் ஆண்டு ஏப்ரலில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,435.95 கோடி வழங்கியது. ஆனால் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ரூ.3,894 கோடி ஒதுக்கப்பட்டது. வறட்சி நிதி ஒதுக்கியதில் மத்திய அரசு கர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியுள்ளது என்று பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.

04:25:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய தேசியக் கொடியை கிழித்த விவகாரத்தில், இங்கிலாந்து அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானத்தில் போராட்டம் நடைபெற்ற போது இதில் தொடர்புடைய பொறுப்பாளிகள், அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

04:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க தின மலர்

பெரும்பான்மை மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி இருக்கும் போது, பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர, மத்திய அரசு ஏன் மறுக்கிறது என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களுக்கு கூட இதற்கான காரணம் தெரியும். நுகர்வோர் மீது வரிச்சுமையை ஏற்ற வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை என்றும் கூறியுள்ளார்.

03:56:02 on 21 Apr

மேலும் வாசிக்க தின மலர்

ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி ரயில்களில் பயணியருக்கு ஒரு குடிநீர் பாட்டில் இலவசமாக வழங்கப்படுகிறது. ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு பயண நேரம் 20 மணி நேரத்தை தாண்டினால் பயணியருக்கு மேலும் ஒரு குடிநீர் பாட்டில் இலவசமாக வழங்கும்படி ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

03:41:02 on 21 Apr

மேலும் வாசிக்க தின மலர்

ஜனநாயகத்தின் 4வது தூணாக இருக்கிற பத்திரிகையாளர்களை எல்லாம் எஸ்.வி.சேகர் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இச் செயலை நிச்சயமாக அனுமதிக்க முடியாது. இது ஒரு சைபர் சைக்கோ என்றால், இன்னொரு சைபர் சைக்கோ எச்.ராஜா இருக்கிறார். இந்த இரண்டு சைபர் சைக்கோவும் தமிழ்நாட்டுக்கு கேடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

03:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டும் இல்லாது உலக வளர்ச்சிக்கு உதவும் என்றும் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் வடகொரியா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

03:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

கோடைகால விடுமுறையின்போது பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் தவிர, வேறு எந்த வகுப்பு மாணவர்களுக் கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இந்த உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாட புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களிடம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

02:56:02 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.மேலும் அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

02:41:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

தமிழ்நாட்டில் செய்வதை போன்று ஆந்திராவையும் தனது பிடிக்குள் கொண்டு வர மத்திய அரசு முயலுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி 12 மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். பின்னர் உண்ணாவிரதத்தை மாலையில் அவர் நிறைவு செய்தார்.

02:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஐ.பி.எல். போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 40 செல்போன்கள், 3 லேப்டாப், 2 எல்.இ.இ. டிவி மற்றும் ஒரு பிரின்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

02:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயல்படலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன் பின்னர் பேசிய சீதாராம் யெச்சூரி, மக்களவைத் தேர்தலில் பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரையும் வீழ்த்துவதே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

01:56:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

புதுச்சேரி மாநிலம் மணமேடு கிராமத்தில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் புதுச்சேரி முதலிடத்தை பிடித்துள்ளது என பெருமிதத்துடன் கூறினார்.

01:41:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். சிறுமி வழக்கில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

01:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை மறைக்கவே ஆளுநர் மீது குற்றம் சாட்டப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் பேராசிரியை நிர்மலா தேவியிடம் முறையாக விசாரணை நடத்தினால், எந்தெந்த கட்சியினருடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

01:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் விலைஇல்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.கால்நடைகளை பரிசோதிக்க வசதியாக லிப்ட், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய கால்நடை அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் சேவை 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

12:56:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பிரதமர் மோடி, அமித்ஷாவும் என் மீதும், என்னுடைய அரசு மீதும் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அமித்ஷா என்னை இந்து கிடையாது என கூறி வருகிறார். ஆனால் அமித்ஷா இந்துவே கிடையாது. அவர் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.

12:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

நாட்டிலேயே முதல் முறையாக HUB AND SMOKE என்ற தீவிர இருதய சிகிச்சை முறை தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் உள்ளிட்ட மேல் சிகிச்சைகளை தருமபுரி அரசு மருத்துவமனையிலேயே பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

12:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

தமிழக அரசின் செயல்பாடு குப்பை என கூறிய விஜயகாந்தின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தின் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல் போன குப்பை விஜயகாந்த் என கூறினார். சமூகத்திற்கு கேடாக எஸ்வி.சேகர் இருக்கிறார். புகாரின் தன்னைகளை கொண்டு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

12:11:57 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பை நீரஜ்பாண்டே இயக்க வேண்டும் என ஷாருக்கான் விரும்புவதாக தெரிகிறது. ஷாருக்கானின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தி விக்ரம் வேதா படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மாதவன் தமிழில் நடித்த பாத்திரத்தில் இந்தியிலும் நடிக்க வேண்டும் என்றும் ஷாருக்கான் கூறியுள்ளார்.

12:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையில் போலீசார் நள்ளிரவில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். மேலும் கைதிகள் தங்கியுள்ள அறைகளில் தனித்தனியாக சோதனை நடத்தினர். அப்போது, கைதிகளிடம் இருந்த 11 செல்போன்கள், 25 சிம் கார்டுகள், பென் டிரைவ், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

11:56:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் பல நிலைகளில் இருந்து தீவிரவாத பயிற்சியை அளிக்கிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.தமிழகம்,கேரளத்திற்கு பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக வலைத்தளங்கள் மோசமான சூழ்நிலையில் செயல்படுத்தப்படுகின்றன என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

11:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியிடப்படும். திறன் மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

11:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதன்பின் பேசிய அவர், இத்திட்டத்தை செயல்படுத்த ‘ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

11:10:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

அர்ஜுனா விருதுக்கு காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் 4 பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா, தங்கப்பதக்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்ற ஹர்மீத் தேசாய் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைக்கான கடிதத்தை இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

10:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. தாக்கலான மொத்த வேட்புமனுக்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்டதுடன் வழக்கை மே 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

10:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெண்கள் பற்றி எஸ்.வி.சேகர் கூறிய கருத்து அதிர்ச்சியாக உள்ளது. பெண்கள் பற்றி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நியூட்ரினோ திட்டத்தை 8 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறேன் என்றும் எத்தனை விஞ்ஞானிகள் சொன்னாலும் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

10:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜெர்மன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டுஅதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி அதிபருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இந்தியா- ஜெர்மனி ஒத்துழைப்பு விவகாரத்தில் உள்ள பல அம்சங்கள் இருவரும் விவாதித்தோம் என்றும் தெரிவித்து இருந்தார்.

10:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தில், காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சிபிசிஐடி குழுவினர் அவர்களைப் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.

09:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

குழந்தைகளை பாலினக் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு குழந்தைகள் பாலின கொடுமை சட்டத்தில் மரண தண்டனை கொண்டு வரப்படும் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என தெரிகிறது

09:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பஞ்சாப்பில் 9 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். அமைச்சரவை விரிவாக்க நடவடிக்கை எடுத்த அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங், ஒன்பது புதிய அமைச்சர்களின் பெயரை வெளியிட்டுள்ளார். அதனையடுத்து அவர்கள் அனைவரும் இன்று சண்டிகரில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர்.

09:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன். நான் எந்த கட்சிக்கும் சொந்தமானவன் அல்ல, அரசியலில் குதிக்கவும் மாட்டேன் என பிரகாஷ்ராஜ் கூறினார். கர்நாடகவில் சட்டபேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது போல் மத்திய அரசு நாடகமாடி மக்களிடம் வாக்கு பெற முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்

09:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இரட்டை இலைச் சின்னத்தை, இபிஎஸ் - ஒபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து, சசிகலா, தினகரன் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும், 24- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

08:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

பஞ்சாப் மாநிலத்தில் 9 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். அமைச்சரவை விரிவாக்க நடவடிக்கை எடுத்த அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங், 9 புதிய அமைச்சர்களின் பெயரை வெளியிட்டார். அந்த 9 புதிய அமைச்சர்களும் இன்று சண்டிகரில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர்.

08:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க தின மலர்

ஜார்கண்ட மாநிலத்தில் ராஞ்சி,ஹசாரிபாக்,ஆதித்யபூர்,கிரிதிக்,மெதினி நகர் ஆகிய மாநகராட்சிகளுக்கு ஏப்-16ல் தேர்தல் நடந்தது.இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.முடிவில் 5 மாநகராட்சிகளிலும் பாஜ வெற்றி பெற்றது.இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் ரகுவர்,மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என கூறினார்.

08:25:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த, சர்ச்சை பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரம் தொடர்பாக, அவரிடம் இரண்டாம் நாளாக சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று இரவு முதல் விசாரணை நடத்திய அதிகாரிகள், 2வது நாளாக இன்று தங்களது விசாரணயை துவக்கியுள்ளனர்.

08:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க தின மலர்

மொபைல் போனில், அதிவேகமாக, படங்கள், தரவுகளை அனுப்ப, '5ஜி' தொழில்நுட்பம் உதவுகிறது. இதை, இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய, உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின், மூன்றாவது ஆய்வுக் கூட்டம், டில்லியில் நடந்தது. இந்த குழுவின் அடுத்த கூட்டம், ஜூன், 14ல் நடைபெற உள்ளது.

07:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 25 முதல், 29 வரை, டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. வரும் 25ல் நாகப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்,ஒபிஎஸ், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகின்றனர். திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகிறார்.

07:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

புனேவில் நேற்று இரவு நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக வாட்சன், ராயுடு களமிறங்கினர். இப்போட்டியின் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 64 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

07:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.99 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.06 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை கேபாபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று கருணாநிதி வந்தார். அவருடன் செயல் தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

06:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

‘குயின்’ தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கி வந்த நீலகண்ட ரெட்டிக்கும் படக்குழுவினருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டதனால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார்.ஆனால், தற்போது தமிழ் ‘குயின்’ ரீமேக் படத்தை இயக்கி முடிந்துவிட்டார் ரமேஷ் அரவிந்த். அடுத்ததாக அவர் தெலுங்கு மற்றும் மலையாள ரீமேக் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

06:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க சமயம்

காமன்வெல்த் தலைவர்கள் உச்சி மாநாடு பிரிட்டனின் வின்ட்ஸோர் கோட்டையில் துவங்கியது. மாநாட்டை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்தார். முன்னதாக மாநாட்டில் பங்கேற்க சென்ற 52 நாடுகளின் தலைவர்கள் அணிவகுத்து வந்தனர். இதில் இந்திய பிரதமர் மோடி, பாக். பிரதமர் ஷாகித் அப்பாசி முன் வரிசையில் அணிவகுத்து வந்தனர்.

06:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

சீனாவில் தங்க நிற முடியுடைய குரங்குகள் தனிப்பெருமையை உடையது. காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவுகளால், இந்த வகை குரங்குகள் அழிந்து வரும் பட்டியலில் தள்ளப்பட்டது. இவற்றை பாதுகாக்கும் வகையில் தென்மேற்கு சீனாவில் வாழ்விடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது இந்த குடும்பத்தில் புதிய வரவாக மேலும் 7 குரங்கு குட்டிகள் கிடைத்துள்ளன.

06:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

கடந்த மார்ச் மாதம் தமிழநாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான பார் கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 25-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் எனவும் 302 பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுக்கள் ஐகோர்ட் வக்கீல் கூடுதல் கட்டடத்தில் எண்ணப்படும் என பார்கவுன்சில் தெரிவித்துள்ளது.

05:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

ராஜஸ்தான் அணிக்கு எதிராக புனேவில் ஐபிஎல் 17வது லீக் போட்டி நடைப்பெற்றது. இந்த டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.சென்னை அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் ஆரம்பம் முதல் அதிரடி காட்டினார். மிக வேகமாக ரன் சேர்த்த வாட்சன் சதத்தை கடந்து ஐபிஎல் போட்டியில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார்.

05:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க சமயம்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.அதேநேரத்தில், இந்த மனுவில், திமுக, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்து போடவில்லை.

05:25:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார். ஜூன் 7ம் தேதி இந்த படம் உலகெங்கும் பல மொழிகளில் வெளியாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார். பா.ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, சாயாஜி ஷிண்டே என பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

05:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க சமயம்

பயன்படுத்திய பழைய விமானங்களை வாங்கும் நடவடிக்கை ஆசிய பிராந்தியத்தில் உள்ள விமான நிறுவனங்களிடையே அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் ஆசிய நிறுவனங்கள் 61 பழைய விமானங்களை வாங்கிய நிலையில், 54 புதிய விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன.

04:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது. தரமற்ற அரசியல் நடைமுறைகளால் தமிழர்கள் இழந்த பெருமையை மீட்டு அரசியல் தரத்தை உயர்த்த வேண்டும் கிராமியத்தை வளர்த்து மக்கள் நலனை முழுமையாக மே்படுத்துவது எளிதான காரியம் அல்ல என கூறி உள்ளார்.

04:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

நிர்மலாதேவியிடம் விசாரணை நடந்து முடிந்த பின்னர் எந்தெந்த கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு என்பது தெரிய வரும் கவர்னரை குற்றவாளியாக்குவதற்கான சதி தமிழகத்தில் நடந்து வருகிறது.விசாரைணையை திசை திருப்பவே கவர்னர் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது என மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

04:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

இந்­தி­யா­வின், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 2017ல், 2.60 லட்­சம் கோடி டாலரை எட்­டி­யுள்­ளது. இதை­ய­டுத்து, உல­கின் மிகப் பெரிய பொரு­ளா­தார நாடு­கள் பட்­டி­ய­லில், பிரான்சை விஞ்சி, 6வது இடத்­திற்கு இந்­தியா முன்­னே­றி­யுள்­ள­தாக, சர்­வ­தேச நிதி­யம் அறிக்கை வெளி­யிட்­டு உள்­ளது.

04:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

கடந்த நிதி­யாண்­டில், பய­ணி­யர் கார் பிரி­வில், அதி­கம் விற்­ப­னை­யான கார்­களின், ‘டாப் – 10’ பட்­டி­ய­லில், ‘மாருதி சுசூகி இந்­தியா’ நிறு­வ­னத்­தைச் சேர்ந்த, ஏழு கார்­கள் இடம் பெற்­றுள்ளன. இதில், ‘ஆல்டோ’ கார் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. மேலும், ஹூண்­டாய் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த, மூன்று கார்­கள் இடம் பெற்­றுள்ளன.

03:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் உயர்ந்து ரூ.953 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.751 கோடியாக நிகர லாபம் இருந்தது. இந்த காலாண்டில் மொத்த வருமானம் ரூ.5,858 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.5,041 கோடியாக இருந்தது.

03:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளியை 57 முறை தாக்கிய பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதியவரை சுமார், மூன்றரை மணி நேர இடைவெளியில் 57 முறை கன்னத்தில் அடித்த பராமரிப்பாளர் மறைமுக கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கியுள்ளார்.

03:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மத்திய அரசை எதிர்த்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போது அவர், மாநில நலன்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மத்திய அரசு, தமிழகத்தை தங்கள் பிடிக்குள் வைத்திருப்பதை போன்று ஆந்திராவையும் வைக்க விரும்புகிறது. அது நடக்காது என கூறினார்.

03:10:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

நாடு முழுவதும் உள்ள அரசு நிறுவனங்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கங்களில், யாருடைய பக்கம் முதலிடத்தில் உள்ளது என்ற தகவலை, 'பேஸ்புக்' நிர்வாகம், சமீபத்தில் வெளியிட்டது. இதில், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்தின் பக்கம், முதலிடம் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

02:55:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

இந்தியாவைப் போலவே, பெட்ரோல், டீசல் விலையின் கடும் உயர்வு அமெரிக்காவையும் கலங்கச் செய்திருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பில் உள்ள நிலையிலும், OPEC நாடுகள் எண்ணெய் விலையை செயற்கையாக உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

02:40:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

நீதித்துறைக்கு எதிராக ஊடகங்களில் அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பது வருத்தமளிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் கருத்துகள் பற்றிய முறையீட்டில் வருத்தமளிப்பதாக கூறி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

02:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

உலகிலேயே முதல் முறையாக சிறுநீரை பரிசோதித்து புற்றுநோயை கண்டறியும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது ஜப்பான். ஒருவருக்கு புற்று நோய் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இரத்த பரிசோதனை மூலம் கண்டறிவது வழக்கம். இதற்கு மாற்றாக, சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டரியும் இந்த புதிய முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

02:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஜீ நியுஸ் தமிழ்

தற்போது தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். எந்த போராட்டம் நடைபெற்றாலும் அது எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

01:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மே மாதம் இறுதிக்குள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

01:40:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து. இது தொடர்பாக மே 3ல் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

01:25:02 on 21 Apr

மேலும் வாசிக்க தின மலர்

சீனாவை சேர்ந்த 10-வயது சிறுவன் பென்ங் சான்குஷானுக்கு தாடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேசமுடியாமல் போனது. இவருக்கு செயற்கை முறையில் 3D இயந்திரத்தால் உறுவாக்கப்பட்ட தாடையினை பொறுத்தி மருத்துவர்கள் சாதனைப் படுத்தியுள்ளனர்.இதன் மூலம், உலகிலேயே முதன்முறையாக செயற்கை தாடை பொறுத்தப்பட்ட சிறுவன் என்ற பெயரை இவர் பெற்றுள்ளார்.

01:10:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஜீ நியுஸ் தமிழ்

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காமலும், தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற, பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அப்பொறுப்பில் நீடிப்பது மானக்கேடு. அவர் உடனே பதவியில் இருந்து விலக வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

12:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே குழந்தைகள், பெண்கள் பலாத்காரம் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இப்போதுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

12:40:02 on 21 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அரியானா மாநிலத்தில் இஷாபூர் கிராமத்தில் இளம்பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்து அக்கிராமத்தின் ஊராட்சி தலைவர் பிரேம்சிங் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நவீன உடைகளால் பெண்களுக்கு ஆபத்து என தெரிவித்துள்ள பிரேம் சிங் செல்போன் மூலம் இளம்பெண்களை ஆண்கள் எளிதில் தொடர்புகொள்ள முடிவதாக கூறியுள்ளார்.

12:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மத்தியில் இருக்க கூடிய அரசாங்கம் தமிழ் மக்களை, தமிழ்நாட்டை எந்த வழியில் எல்லாம் நசுக்க முடியுமோ அதற்கான அத்தனை வழிகளையும் அவர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இருக்ககூடிய அரசாங்கம் தமிழனுடைய உரிமை, தமிழனுடைய வாழ்க்கை, தமிழனுடைய எதிர்காலம் என எதை பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்

12:10:02 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

எஸ்எஸ்எல்சி தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24ம் தேதி துவங்கி மே 7ம் தேதி நிறைவடையும் என தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.மே 23ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:55:01 on 20 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

தமிழகத்தில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், கவர்னரை ஒரு பக்கம் எதிர்த்துவிட்டு, மறுபுறம் ஆதரிக்கும் திமுகவின் போராட்டம் வியப்பாக உள்ளது. காவிரி விவகாரத்தில் அரசு மற்றும் எதிர்க்கட்சியினரின் நிலை குறித்து மக்களுக்கு தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

11:40:01 on 20 Apr

மேலும் வாசிக்க தின மலர்

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நிரந்தரமாக நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி நீட் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநா் கௌதமன் எங்கள் உரிமையை பறிக்கும் வகையில் நீட்தேர்வை மே 6ம் தேதி நடத்த முற்பட்டால் மாணவர்கள் மற்றும் ஒட்டு மொத்த தமிழக மக்களை திரட்டி அதை தடுத்து நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

11:25:01 on 20 Apr

மேலும் வாசிக்க சமயம்

க‌ர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆர்.அசோக், பெங்களூருவின் மையப் பகுதியில் வீடு தேடும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் பெங்களூருவின் சாளுக்கிய சதுக்கம் அருகேயுள்ள ஃபீல்ட் லே-அவுட்டில் வாடகைக்கு ஒரு பங்களாவில் அமித் ஷா நேற்று குடியேறினார்.

11:10:01 on 20 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழக அரசு லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

10:56:01 on 20 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நாடு முழுவதும் உள்ள விற்பனை நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 8 ஆயிரம் சுவைப் மெஷின்களில் 4 லட்சத்து 78 ஆயிரம் மெஷின்களில் அந்த வங்கி மற்றும் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

10:41:02 on 20 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். இவன், பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறான். இந்நிலையில், தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமாக மும்பையில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

10:25:01 on 20 Apr

மேலும் வாசிக்க தின மலர்

நடப்பு கோடைக்காலம் முதல், முன்னறிவிப்பு இன்றி மின்வெட்டு ஏற்பட்டால் டெல்லி மக்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு முன்னெடுத்துள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் இந்த முடிவுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலும் ஒப்புதல் தெரிவித்து உள்ளார்.

10:11:02 on 20 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் பாரதிய ஜனதா நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து கூறி வருகிறார்களே? என கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், பெண்களை இழிவுப்படுத்த கூடாது என்பதே என் கருத்து. இந்த மாதிரியான விஷயத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

09:56:01 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்களை செலுத்தும் முறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் பேசுகையில், போலி முத்திரை தாள் முறையை ஒழிக்க தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாவட்ட கோர்ட்களிலும் விரைவில் இஸ்டாம்ப் கவுன்டர் திறக்கப்படும் என்று கூறினார்.

09:41:01 on 20 Apr

மேலும் வாசிக்க தின மலர்

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பான ‘க்ரை’ நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதில், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அதிர்ச்சி நிலவரம் தெரியவந்துள்ளது.

09:26:01 on 20 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

பாரதீய ஜனதாவின் விமர்சனத்திற்கு ராகுல் காந்தி தனது டுவிட்டரில், நீதிமன்ற முடிவை கருத்தில் கொள்ளாமல் உண்மை என்னவென்பது உளப்பூர்வமாக அனைத்து மக்களுக்கு தெரியும். இந்தியர்கள் மிகுந்த புத்திசாலிகள். பாரதீய ஜனதா கட்சியினர் உட்பட பெரும்பாலான இந்தியர்கள், அமித்ஷாவை பற்றிய உண்மையை அறிந்து இருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

09:11:01 on 20 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

சேலம் குமரகிரி ஏரியை பார்வையிட்ட நடிகர் சிம்பு பின்னர் மூக்கனேரியில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷூடன் பரிசல் சவாரி செய்தார். கரை இறங்க முற்படும் போது அங்கு திரளான ரசிகர்கள் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு விடக் கூடாது என நினைத்த சிம்பு, மாற்று வழியில் சென்று கரை சேர்ந்தார்.

08:56:02 on 20 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

அமெரிக்க அதிபர் டிரம்பை அவரை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியுள்ளார். மேலும் டிரம்பின் நடத்தையானது நாட்டின் சட்டம் மற்றும் நேர்மை போன்ற தேசிய மதிப்பீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கோமி கவலை தெரிவித்துள்ளார்.

08:40:01 on 20 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நாச்சியார் படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் ராதாமோகன், இந்த படத்தின் தலைப்பை கண்டுபிடிக்கும் படி ரசிகர்களுக்கு போட்டி வைத்தார். தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது. இப்படத்திற்கு ‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

08:26:02 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் கவர்னர் பெயர் சம்பந்தப்பட்டு உள்ளதால் அவரே தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை திசை திருப்பி தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டுமென்று கருத்துக்களை தெரிவித்த எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

08:11:01 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் இலவச மொபைல் ஆப் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். ஜல்லிக்கட்டு போராட்டம் உள்பட பல விஷயங்களில் நேரடியாகக் களமிறங்கிப் போராடிய அவர், தற்போது நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் இலவச மொபைல் ஆப் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

07:56:01 on 20 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டுள்ளார். தெலுங்கானா போலீசார் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களை பார்வையிட்ட அவர் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

07:40:01 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது. இதனால் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய தேவையும் ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.

07:26:01 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். பெண்கள் சுதந்திரமாக நடக்கவும், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.மணி கூறினார்.

07:10:01 on 20 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மும்பையில் நடைபெற்ற அழகுப் போட்டியில், நடிகை டாப்சி, மினுக்கும் வைரங்களுடன் சேலை அணிந்து வந்தார். இதில் பேசிய அவர், சமூகம் பெண்களை கௌரவமாக நடத்த வேண்டும் என வலியுறுத்திய டாப்சி, பெண்களால் மட்டும் சமூகத்தை மாற்றிவிட முடியாது. ஆண்களின் துணையோடுதான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

06:56:01 on 20 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிபிஐ விசாரணை தேவை என வைகோ தெரிவித்துள்ளார். நெல்லை மாணவர்கள் நீட்தேர்வு எழுத எர்ணாகுளத்தில் தேர்வு மையம் போடப்பட்டது என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

06:41:01 on 20 Apr

மேலும் வாசிக்க தினகரன்

உலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு(225 மில்லியன்) அடுத்து இந்தியா 2ம் இடம்(190 மில்லியன்) வகிக்கிறது. உலகில் வங்கி கணக்கு இல்லாத 11% பேர் இந்தியாவில் உள்ளனர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

06:26:01 on 20 Apr

மேலும் வாசிக்க தின மலர்

போலி முத்திரைத்தாள் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் விரைவில் இ-ஸ்டாம்ப் கவுன்டர் திறக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இ-ஸ்டாம்ப் முறை தொடக்க விழாவில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

06:11:01 on 20 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பேனாசோனிக் நிறுவனம், பி101 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.6,999 ஆகும். இரட்டை சிம் கார்டுகள் பொறுத்தும் வகையில், 5.45 இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது. குவாட்-கோர் மீடியாடெக் பிராஸசருடன், 16 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜுடன், கூடுதலாக 128 ஜிபி மைக்ரோ கார்டை இதில் பொறுத்த முடியும்.

05:56:01 on 20 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மேலும் வாசிக்க