View in the JustOut app
X

சமீபத்தில் தேனி நகர காவல் துறையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறை அலுவலகத்துக்கு விஜய் ரசிகர்கள் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை வழங்கினர். தற்போது நெல்லை மாநகர காவல்துறையினர் பயன்பாட்டிற்காக தடுப்புகளை வழங்கி உதவி செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

07:55:01 on 30 Jun

மேலும் வாசிக்க Behind Woods News

“அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும் காவல்துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்.” என்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

05:27:01 on 30 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?. தமிழ் திரை உலகில் இருக்கும் அரசியலால் உங்களை ஜெயலலிதா வேடத்துக்கு தேர்வு செய்து தவறு செய்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

03:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்கள் விஜய், விக்ரம். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்களும் கூட. இந்நிலையில் விஜய் பல மெகா ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார், அதில் மேலும் ஒரு படம் தான் தூள். ஆம், தூள் கதை முதன் முதலாக விஜய்க்காக தான் தரணி எழுதியுள்ளார், பிறகு தான் தூள் விக்ரமிற்கு சென்றுள்ளது. படமும் மெகா ஹிட் ஆகியது.

02:27:01 on 30 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே சமூக வலைதளத்தில் உள்ளன. இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் சிறந்த நடிகை என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பட்டியலில் ரக்ஷா ஹோல (நாம் இருவர் நமக்கு இருவர்), நித்யா ராம் (நந்தினி) உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

11:00:01 on 29 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே சமூக வலைதளத்தில் உள்ளன. இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் சிறந்த நடிகை என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பட்டியலில் ரக்ஷா ஹோல (நாம் இருவர் நமக்கு இருவர்), நித்யா ராம் (நந்தினி) உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

10:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

ஷ்வேத் புரடெக்‌ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். இதில் வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படம் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

09:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகை ஸ்ரீபிரியா ‘யசோதா' எனும் குறும்படத்தை, கமீலா நாசர் மற்றும் ‘சிங்கக்குட்டி' புகழ் நடிகர் சிவக்குமார் (சிவாஜி தேவ்) ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இதில் நடிகர் நாசர் மற்றும் சில சீரியல் நடிகர்கள் நடித்துள்ளனர். ‘யசோதா' குறும்படம் முழுவதுமாக மொபைலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படம் இன்று வெளியானது.

08:55:01 on 29 Jun

மேலும் வாசிக்க Behind Woods News

பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “அழகுசாதன நிபுணரான ப்ரீத்தி ஸ்ரீ என்பவரை நாங்கள் சந்தித்தோம், அவர் சிச்சோர் படத்திலிருந்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இரண்டு வித்தியாசமான தோற்றங்களின் படங்களை எங்களுக்குக் காட்டினார். அப்போதுதான் விஜய் அவர்களை இரு வேடங்களிலும் நடிக்கச் சொல்ல நினைத்தோம்.” என்று கூறியுள்ளார்.

08:25:01 on 29 Jun

மேலும் வாசிக்க IndiaGlitz Tamil

”இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை" என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலளித்துள்ளார்.

07:36:43 on 29 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகர் சிவகார்த்திகேயன், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

05:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

பிரபல பிண்ணனி பாடகி எஸ்.ஜானகி போனில் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்லா திட்டிவிட்டேன். மறுபடியும் இப்படிச் செய்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.

12:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

ஷாஜஹான் (புதியவன்) என்ற பெயரில் உள்ள ஃபேஸ்புக் ஐடியில் வனிதாவின் திருமணம் குறித்த பதிவு ஒன்றைக் காண முடிந்தது. உரையாடல் வடிவில் இருக்கும் இப்பதிவு வனிதாவின் திருமணத்தை குறைகூறுவோருக்கு நெத்தியடி பதிவாக அமைந்திருக்கிறது.

11:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழ் சினிமாவில் வெளிவரும் ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் மிக பெரிய அளவில் அப்படம் வெற்றியடைய உதவுகின்றது. அந்த வகையில் எந்த ஒரு பாடலும் இல்லாமல் வெளிவந்த ஹிட்டான படங்களில் வீடு, குருதிப்புனல், ஆரண்ய காண்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், விசாரணை, கைதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

10:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்'. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 10-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.

09:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், பீட்டர் பால் என்பவரை நேற்று மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர்பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

07:34:55 on 28 Jun

மேலும் வாசிக்க IndiaGlitz Tamil

அடுத்த மாதம் 28ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும் துல்கர் சல்மானிற்கு 30 நாட்களுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாழ்த்துக்களை வெளியிட்டு அதற்காக ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.

05:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நடிகை வனிதா திருமணம் இன்று கிறிஸ்துவ முறைப்படி நடந்து முடிந்தது. இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் வனிதாவிற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் பீட்டர் பால் குடும்பத்தினர் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

10:57:01 on 27 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

மலையாள தொலைக்காட்சி நடிகை அர்ட்ரா தாஸ். திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டுக்குள் சிலர் புகுந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர்.

09:57:01 on 27 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நந்திதா ஸ்வேதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் IPC 376. ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் இது உருவாகி வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதா டூப் இல்லாமலே நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

08:55:01 on 27 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தன்னுடன் போட்டோ எடுக்க வந்த ரசிகர் ஒருவருக்கு அமலா பால் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் விஐபி 2 படத்தை நாளை பாருங்க, என்னுடைய சிறந்த நடிகை அமலா பால் என பேசிக்கொண்டிருக்கும் போதே சந்தோஷத்தில் அமலா பால் ரசிகரின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.

07:36:46 on 27 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பிக்பாஸ் நிகழ்ச்சி ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதாக இருந்து தற்போது கொரொனா காரணமாக செப்டம்பர் மாதம் சென்றுள்ளது. அதோடு இந்த நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் அனைவருக்குமே கொரொனா டெஸ்ட் எடுத்து தான் அனுப்பாவர்கள் என்று கூறப்படுகிறது.

04:57:01 on 27 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகை நயன்தாராவை விட, மாளவிகாவுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ‘மாஸ்டர்' படத்தில் ‘தளபதி' விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளதால் தான் கடந்த சில மாதங்களாக ஊடகங்களின் கவனத்திற்கு வந்து, தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

02:57:01 on 27 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாலிவுட் சினிமாவின் நடிகையான பூனம் பாண்டே சமூக வலைதளங்களில் எப்போதுமே ஹாட் டாப்பிக் போல தன்னை லைம் லைட்டில் வைத்திருப்பவர். இந்நிலையில் தற்போது கையில் வெறும் டார்ச் லைட் மட்டும் வைத்துக்கொண்டு லவ் ரோபாட் என தலைப்பிட்டு மேலாடையில்லாமல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

10:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் தும்பி துள்ளல் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. ஜூன் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பாடலை வெளியிட உள்ளனர். இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

09:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வரும் படம் தான் கோப்ரா. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த படத்திற்காக 20 விதமான கெட்டப்புகளில் அவர் நடிக்க உள்ளாராம்.

07:55:01 on 26 Jun

மேலும் வாசிக்க IndiaGlitz Tamil

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சியா கக்கார். 16 வயதே ஆன இவரின் வீடியோக்கள் வைரல் ஹிட் அடிக்கக் கூடியது. டிக்டாக்கில் சுமார் 11 லடசத்துக்கும் அதிகமான பேர் அவரை பின் தொடர்ந்தனர். இந்த நிலையில், அவர் திடீரென இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

12:27:01 on 26 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

தலைநகரம், நகரம் ஆகிய படங்களின் தொடர்ச்சியாக 'தலைநகரம் 2' என்ற புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. ஊரடங்கு காலத்தில் இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் மீண்டும் வடிவேலு மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் உருவாகவுள்ளது.

10:57:01 on 25 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவரது தாயார் கொச்சி நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸ் வடநபில்லியைச் சேர்ந்த ரபீக் , கடவன்னூரைச் சேர்ந்த ரமேஷ், கைபமங்கலத்தைச் சேர்ந்த ஷரத், சேட்டுவாவைச் சேர்ந்த அஷ்ரப் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

09:57:01 on 25 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து அறம் 2 திரைப்படத்தை எடுக்க போவதில்லை என்று அதன் இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

05:27:01 on 25 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

”விஜய் என்னோடு சேர்ந்து படம் செய்ய ஒத்துக்கொண்டார். நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.” என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

02:57:01 on 25 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான வனிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''விஜய் ஸ்ரீஹரியின் முதல் பிறந்தநாள் விழாவில் தளபதி'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

01:57:01 on 25 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் சக்தியாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இவரது திரைப்பயணத்தில் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படம் விவேகம் தான். இப்படம் ரூ 13 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.

01:27:01 on 25 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

உலக இசை தினத்தை முன்னிட்டு டோக்கியோ தமிழ் சங்கம் கங்கை அமரனுக்கு பெரிய பாராட்டு விழா ஒன்றை ஜூம் செயலி வழியே நடத்தியது. இதில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “ஆயிரம் இருந்தாலும் இளையராஜா நல்ல அற்புதமான கலைஞன். இன்னமும் சொல்வேன், இளையராஜா நல்ல தம்பியை மிஸ் செய்துவிட்டான். இவன் ஒரு நல்ல தம்பி" என்றார்.

10:57:02 on 24 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இயக்குனர் ராஜமவுலி, தான் இயக்கும் RRR படத்தில் சமுத்திரகனியை நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே சமுத்திரகனியும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொன்னார். சமுத்திரகனியும் சொன்ன மாதிரி நடித்து கொடுத்தார். அதற்கு ராஜமௌலி, சமுத்திரகனிக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

09:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க Behind Talkies

2013ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இயக்குனர் கோகுல் – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த இந்த படத்தில் சுமார் மூஞ்சி குமார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த சூழலில் “கொரோனா குமார்” எனும் படத்தை இயக்க உள்ளதாக கோகுல் அறிவித்துள்ளார்.

08:34:27 on 24 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பெரிய நடிகர்களின் படங்களெல்லாம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் என்று கறாராக இருந்த சூழல் மெல்ல மாற ஆரம்பித்திருக்கிறது. இதில், தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ ஜூலை இறுதியில் அமேஸானில் ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள். அப்படி ரிலீஸ் ஆனால், ‘ஓ.டி.டி-யில் முதலில் ரிலீஸ் ஆன கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம்’ இதுவாகத்தான் இருக்கும்.

06:51:18 on 24 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மீடியாவில் ஆர்.ஜே.வாக அறிமுகமாகி, சினிமாவில் களமிறங்கி ஹீரோவாகும் நடித்து பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில், இவரது தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

05:27:01 on 24 Jun

மேலும் வாசிக்க தினச்சுவடு

நடிகை பூமிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷாந்த் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''உன்னை எது எடுத்துச் சென்றதோ? அந்த சீக்ரெட் உன்னுடனே சென்று விட்டது. ஏன் உனக்கு இப்படி நடந்தது என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மறைந்த ஒரு உயிர்க்கு மரியாதை கொடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

04:27:02 on 24 Jun

மேலும் வாசிக்க Behind Woods News

நடிகை சமந்தா, தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நடிகை சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

03:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகர் அஜித் இதுவரை பல நல்ல படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்துள்ளார். அதே போல் சில படங்களை காப்பியடித்துகூட நடித்துள்ளார். அதில் விஸ்வாசம் - துளசி (தெலுங்கு); வேதாளம் - ஏய் (தமிழ்); ஜனா - பாட்ஷா (தமிழ்); வாலி - பூமணி (தமிழ்); காதல் கோட்டை - The Shop Around The Corner ( ஹாலிவுட்) ஆகிய படங்கள் அடங்கும்.

12:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

"சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும். டிக்டாக் மற்றும் பப்ஜி ஆப்-களை புறக்கணிக்க வேண்டும். சீன நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி விட்டு இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்." என நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

10:57:01 on 23 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

ஸ்ரீ தேவியின் கடைசி படமான 'மாம்' படத்தின் இயக்குநருடன் தனது அடுத்த படத்தை துவங்கவுள்ளார் மாளவிகா மோகனன். ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ரன்வீர் சிங்கின் கல்லி பாய் படத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதியுடன் மாளவிகா மோகனன் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

09:57:01 on 23 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

விஜய்யுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் மாஸ்டர் பட பாடலுக்கு வயலின் வாசித்து தனது வாழ்த்தை தெரிவித்திருந்த நிலையில், நடிகை சம்யுக்தா ஹெக்டே வாத்தி கம்மிங் பாடலுக்கு வித்தியாசமான நடனமாடி பர்த்டே விஷ் சொல்லியுள்ளார்.

08:55:01 on 23 Jun

மேலும் வாசிக்க IndiaGlitz Tamil

எனை நோக்கி பாயும் தோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் அஸ்வின் குமார் உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

03:27:01 on 23 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார் இந்துஜா. அந்த வகையில் சமீபத்தில் அட்டைப் படத்திற்கு புடவையில் படு கிளாமராக போஸ் கொடுத்திருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் நேத்து அதுல்யா இன்னிக்கி இந்துஜா, நாளைக்கு? சிங்களுக்கு ட்ரீட் இருக்கு என்று கமன்ட் அடித்துள்ளார்.

09:57:02 on 22 Jun

மேலும் வாசிக்க Behind Talkies

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு #HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைப்பார்த்த அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கினர். #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய அவர்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட் செய்து முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

07:17:17 on 22 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

சோனாக்ஷி சின்கா தனது தந்தைக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து இளம் நடிகைகளை வளர விடுவது இல்லை என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுகளால் கடுப்பான சோனாக்ஷி சின்ஹா, கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாமல் ட்விட்டர் கணக்கை டெலிட் செய்துவிட்டார்.

05:57:01 on 22 Jun

மேலும் வாசிக்க Asiavillenews

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், "எங்களுக்கு கொரோனா இருக்கிறது என்று கூறி வெளியாகும் செய்திகளை கண்டு நகைப்பாக உள்ளது. நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடன் இருக்கிறோம்” என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.

03:57:02 on 22 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பெரிய இயக்குநரோட புள்ள அதான் பெரிய ஹீரோ ஆயிட்டாரு' என்று விஜய்யின் வளர்ச்சியை இரண்டு வரிகளில் கடந்து செல்லலாம். ஆனால், இந்திய சினிமா மொத்தத்தையும் எடுத்துக் கொண்டால் எஸ்.ஏ.சந்திரசேகரைவிட பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய தயாரிப்பாளர்களின் வாரிசுகள்கூட சினிமாவுக்கு வந்து ஜொலிக்கத் தவறியிருக்கிறார்கள்.

11:57:02 on 22 Jun

மேலும் வாசிக்க விகடன்

விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் மாஸ்டர் படக்குழுவினர்கள் ’மாஸ்டர்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டருக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

09:57:01 on 22 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இயக்குநர் கவுதம் மேனன் ’மதக்கம்’ என்ற வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த வெப் தொடரை, கிடாரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே கவுதம் மேனனுடன் இணைந்து குயின் வெப் தொடரை இயக்கி இருந்தார். இந்த வெப் தொடர் திருடன் - போலீஸ் கதை போல இருக்கும் எனக் கூறப்படுகிறது.

10:57:02 on 21 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா ஊரடங்கு தொடங்கிய காலத்தில் இருந்து பல திரைத்துறை பிரபலங்களின் இழப்பு ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றது. இந்நிலையில் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் உஷா ராணி (65) இன்று, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

09:57:02 on 21 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கொரோனா அச்சத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் பாரதிராஜா, ஸ்ருதிஹாசன், கமல் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

12:57:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினமணி

ஆபாசப் பட நடிகையான கார் ரேஸ் வீராங்கணை ரினி கிரேசி, தனது ஆபாசப் படங்கள் அடங்கிய தளத்தில், இந்தியர்களுக்கு எதிராக கொந்தளித்துள்ளார். அதற்கு காரணம், அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை பலர் அங்கிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

10:57:02 on 21 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

விஜய் தன் மகனைப் பிரிந்து இருந்தாலும் அவரின் அன்பையும், அக்கறையையும் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவார். சமீபத்தில்கூட கொரோனா லாக்டவுனில் தன் மகன் கனாடாவில் என்ன செய்கிறாரோ எனக் கவலைக் கொண்ட செய்திகள் வெளியாகின. அதிகம் வெளியே வரவில்லை என்றாலும் அவ்வபோது இவர்களின் பாசம் கசியும்.

09:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மயூகாம் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகை அபர்ணா நாயர். இந்நிலையில் முகநூலில் தன்னை ஆபாசமாக பேசி பதிவிட்ட நெட்டிசன் ஒருவர் மீது சைபர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் அந்த நபரை கைது செய்த பின் நடிகை அபர்ணாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

02:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஹாலிவுட் டிவி, சினிமா புகழ் பிரபல நடிகர் டேனி மாஸ்டர் சன் மீது நான்கு பெண்கள் தங்களை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த வருடம் புகார் அளித்துடன் வழக்கு பதிவும் செய்தனர். இந்நிலையில் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 40 வருடங்கள் வரை ஆயுள் தண்டை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

02:27:01 on 20 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

கார்த்தியை வைத்து 'கைதி 2' படத்தைக் குறைந்த நாட்களுக்குள் முடித்துவிடலாம் என்று லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கத் தயாராகவே இருக்கிறார் என்கிறார்கள். கரோனா ஊரடங்கில் 'கைதி 2' படத்துக்கான திரைக்கதையினை முழுமையாக முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

10:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சன் தொலைக்காட்சியில் ரோஜா சீரியலில் நடிகை யாஷிகா ஆனந்த் கமிட்டாகியிருக்கிறார். ஒரு எபிசோடுக்கு அம்மணிக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு ரோஜா சீரியலின் படப்பிடிப்பு துவங்கபட்டால் அந்த எபிசோடுகளில் யாஷிகாவை காணலாம்.

09:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க Behind Talkies

“கொரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரி செய்யவும் ஏதுவாக இருக்கும்.” என இயக்குநர் சேரன், முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

05:55:07 on 19 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்திய வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்திய நிலையில், சீன பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் சமூக வலைத்தள கணக்குகளான டிக்டாக், ஹலோ ஆகியவற்றில் இருந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியேறியுள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

02:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

படத்தின் துவக்கத்தில் நடக்கும் கொலை, இந்தக் கதைக்கான மனநிலையை அட்டகாசமாக ஏற்படுத்துகிறது. ஆனால், ஏனோதானோவென்ற கதை, நம்பமுடியாத திருப்பங்கள், நடிகர்கள் தேர்வு ஆகியவற்றால் மிகச் சாதாரணமான படமாக வெளியாகியிருக்கிறது 'பெண்குயின்'.

01:57:02 on 19 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பெண்குயின். ஆனால் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டலில் வெளியாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில், படம் வெளியாகி மிக பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

12:21:32 on 19 Jun

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் (48), உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

08:38:50 on 19 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

மேலும் வாசிக்க