View in the JustOut app
X

ஈரோட்டைச் சோந்த இளம்பெண் ஒருவா் உடல் எடையைக் குறைக்க போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதில் உயிரிழந்த சம்பவம் சா்ச்சைகளை எழுப்பியது. இதைத் தவிர, நூற்றுக்கணக்கானோர் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நம்பி உடல் நலிவுற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

03:30:17 on 17 Sep

மேலும் வாசிக்க தினமணி

கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும்.

02:55:01 on 17 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

நாவல் பழத்தில், எரிசக்தி, மாவுச்சத்து, நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துகளான தயாமின், ரிபோஃப்லோவின், நியா சின், வைட்டமின் ஏ (அ) சி ஆகியவற்றோடு சுண்ணாம்புச்சத்து, இரும் புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், உப்பு மற்றும் நீர்ச்சத்து ஆகியன மிகுதியாக உள்ளது.

03:00:07 on 15 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

“ மன அழுத்தங்கள் இல்லாமல், ரிலாக்ஸாக இருங்கள். பழைய ஆடைகள் இறுக்கமாக உள்ளது என தூரம் வைக்காதீர்கள். மீண்டும் அவற்றை போடுவேன் என சபதம் ஏற்று எடுத்து வையுங்கள். அனைத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள்.” என நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

04:55:01 on 15 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால்தான் கவலையினால், டென்ஷனால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும். உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நன்றாக இயங்கும்.

05:00:08 on 14 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால்தான் கவலையினால், டென்ஷனால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும். உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நன்றாக இயங்கும்.

04:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை அருந்தக்கூடாது. அதில் நார்ச்சத்து துளியும் இல்லை. மேலும் அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை தவிர்த்து பழங்களை சாப்பிடலாம். குறிப்பாக தர்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு ஆகிய பழங்களை சாப்பிடலாம். 100 கிராம் பழங்கள் சாப்பிடுவதே போதுமானது.

04:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகலில், சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். பொன்னாங்கன்னிக் கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும்.

12:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

உணவில் இருக்கும் முடி, உணவில் நுண்ணுயிரிகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாதக் கணக்கில் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய் போன்றவற்றில் முடி இருந்தால் அவை நோய்க் கிருமிகளுக்கு வழிவகுக்கும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

04:55:01 on 12 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

சின்ன, சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது. இப்போதெல்லாம் ஃபீலிங் எலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது. இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.

04:00:08 on 11 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

தேங்காய் எண்ணெய் தலை அரிப்பை நீக்குவது மட்டுமன்றி வேர்களுக்கும் நல்லது. வேரை ஒரு லேயராக மறைத்து பராமரிக்கும். அதேபோன்று கடுகு எண்ணெய்யை அடுப்பில் காய வைத்து வெப்பம் கொஞ்சம் தனிந்ததும் பூண்டை இடித்து எண்ணெயில் போடுங்கள். அந்த எண்ணெய்யை வேரில் படும் படி தேய்க்க வேண்டும். இதனால் தலை முடி வேர்கள் உறுதியாகும்.

03:25:01 on 11 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சம அளவில் எடுத்து கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பூண்டு, அன்னாசிப்பழம், ஆப்பிள் சிடர் வினிகர், ப்ரோக்கோலி, இஞ்சி போன்ற உணவுகள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடியவை. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

03:55:01 on 10 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மூட்டு தேய்மானம், குதிகால் வலி இது போன்ற மற்ற மருத்துவத்தில் சரி செய்ய முடியாதவற்றை உடற்பயிற்சி, சுடுநீர் ஒத்தடம், மின்சார சிகிச்சை, குளிர்ந்த நீர் ஒத்தடம் இன்னும் சில மருத்துவ உபகரணங்களையும் பிசியோதெரபி மருத்துவர்களால் கைகளை கொண்டு செய்யும் இது போன்ற சிகிச்சைகளை கொண்டு நிரந்தர தீர்வு தர முடியும்.

12:55:01 on 10 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

மாரடைப்பு வந்தவர்கள் கடினமான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. கடினமான பயிற்சிகள் செய்தால் ரத்தக்குழாய் சுருங்கி மீண்டும் மாரடைப்பு வரலாம். நடைப்பயிற்சி செய்தால் ரத்தக்குழாய்கள் விரிவடையும். ஆனால், கைகாலை ஆட்டி வேகமாக நடக்கக்கூடாது. மிதமான வேகத்தில் நடக்கலாம்.

12:54:09 on 09 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

பழுத்த தக்காளியை அரைத்து முகத்தில் தடவிய பின் 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்திற்கு நல்ல பொழிவு தரும்.முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க உதவும். வெள்ளரிக்காய் மற்று தக்காளி சாறினை கலந்து காட்டனில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

05:26:30 on 08 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

இரும்பு சத்து கொண்ட டானிக் வகைகள் மற்றும் வாய் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களில் உள்ளடங்கி இருக்கும் குளோரெக்சிடின், செட்டில்பிரிடினியம் குளோரைடுகள் போன்றவையும் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. முதுமையும் பற்களின் நிறமாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாகும்.

03:24:23 on 08 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

.சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் காய்கறிகளை மட்டுமே சாப்பிடும் சைவப் பிரியர்களுக்கு 20 சதவீதம் பக்கவாதம் வரும் ஆபத்து அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதோடு குறைவான உடல் எடை, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்களும் சைவம் சாப்பிடுவோருக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:54:29 on 07 Sep

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும். பொதுவாக எண்ணெய், அதிக மசாலா, காரம் செறிந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. பதப்படுத்த‍ப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை குடிக்கக் கூடாது. அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

06:15:58 on 06 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

புரோட்டீன் அதிகம் எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் சிக்கன் மற்றும் மீன் ஆகியவற்றை தந்தூரியாக செய்து சாப்பிடுங்கள். சிவப்பு இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளது. வெஜிடேரியன் பன்னீரை இதற்கு மாற்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

03:45:06 on 05 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

தொடர்ச்சியாக, மது அருந்துவதால் நரம்பியல் கோளாறுகள், கை, கால் தளர்ந்து போவது, கால் எரிச்சல், ‘எரெக்டைல் டிஸ்பங்ஷன்’ என்ற ஆண்மை கோளாறு போன்றவை ஏற்படும். இதுமட்டுமன்றி பார்வைக் கோளாறுகள், உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

01:55:02 on 05 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

கணினியை தினமும் தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கு, தசை வேதனை மற்றும் தசை சோர்வு, தோள்பட்டை வலி, தண்டுவட வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை மிக சாதாரணமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் ஒரே இடத்தில உட்கார்ந்தபடி வேலை செய்வது தான்.

05:55:01 on 04 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

சிலருக்கு கண்கள் எப்பொழுதும் வீங்கயது போலவே காட்சியளிக்கும். அப்படி உள்ளவர்கள் Ice cube-னினை கண்ணுக்கு கீழே 10-15 நிமிடம் வைத்தால் உடனே வீக்கம் குறைந்துவிடும். சிலருக்கு வெயிலில் சென்றால் முகம் சிவந்துவிடும். அந்த இடத்தில் Ice cube-ஐ வைத்தால் எரிச்சல் மற்றும் சிவந்த இடத்தினை சரிசெய்து முகத்திற்கு பொலிவு தரும்.

04:55:01 on 04 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தொடர்ச்சியாக நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இருதய ஆரோக்கியம் சீராக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். தினசரி அல்லது வாரத்தில் பல முறை நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இருதய நோய்கள் தடுக்கப்பட்டு, நோய்களின் அபாயம் 17 சதவிகிதம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

12:55:01 on 04 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று கறிவேப்பிலை, இது உங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படுத்துவதில்லை. இத்தனை நாட்களாக நீங்கள் கறிவேப்பிலை பயன்படுத்தாவிட்டால், உங்கள் உடல்நலம் சிறப்பாக இன்று முதல் கறிவேப்பிலை உண்பதை துவங்குங்கள்.

06:55:01 on 03 Sep

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

நீங்கள் அதிக வலி நிவாரணிகளை எடுக்கத் தொடங்கும் போது, ​​அது படிப்படியாக சிறுகுடலின் சவ்வை பலவீனப்படுத்தி, குடலில் புண்களை ஏற்படுத்துகிறது. வயிற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இந்த மருந்துகளில் அசிட்டமினோபன் உள்ளது, இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.

01:55:01 on 02 Sep

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். இஞ்சி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து, செரித்தலை சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

02:55:01 on 01 Sep

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது உணவைக் குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். தண்ணீர் குடிக்கும்போது, வயிற்றுப் பகுதி உணவின் செரிமானத்திற்குத் தயாராகிறது. வயிற்றின் புறப் பகுதிகள் ஈரப்பதமாக இருப்பதால், உடையக்கூடிய அல்லது அமில உணவுகளைச் செரிக்கச் செய்வது எளிதாகிறது.

06:55:02 on 01 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

”ஃபெர்ரோசையனைட் உப்பு பதப்படுத்தப்படுவதற்கு பெரும் பங்காற்றுகிறது. அதை நுகர்வதால் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதுமட்டுமன்றி உலக உணவு தர நிலை நிர்ணயித்திருக்கும் 14 மில்லி கிரமிற்கும் குறைவாக 10 மில்லி கிராம் தான் இந்தியாவில் அனுமதிக்கப்படுகிறது” என்று உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

02:55:02 on 01 Sep

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

மேலும் வாசிக்க