View in the JustOut app
X

”ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது இதற்கென 80 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானிய பொருட்கள் வரும் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும்.” என்று பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் தெரிவித்தார்.

06:09:36 on 30 Jun

மேலும் வாசிக்க தினமலர்

தனது சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாக, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

10:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா இருக்கிறார்.

05:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

2005ல் ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெற்றது தவறெனில் இந்தாண்டு சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமர் மோடியின் PMcares நிதி பெற்றது எப்படி நியாயம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

04:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு ஒரே கல்வித் திட்டம் கொண்டுவரக்கோரி, உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞரும், டெல்லி மாநில பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவரால் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

04:27:02 on 29 Jun

மேலும் வாசிக்க விகடன்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, சீனாவுடனான பதட்டங்களும் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு 2 போர்களை வெல்லும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

03:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

வெளிநாட்டுத் தாயின் வயிற்றில் பிறந்த ஒருவரால் எப்படி தேசபக்தராக இருக்க முடியும் என்று ராகுல் காந்தியின் பெயரைச் சொல்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் பாஜகவின் எம்பி பிரக்யா தாக்கூர்.

02:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அர்ஜுனன் சுங்கச்சாவடி வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அர்ஜுனனுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளது.

12:25:01 on 29 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆறு முறை நடந்த கூட்டங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு கட்டாயம் என்ற கருத்தையே மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

08:53:17 on 29 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "முதல்வருக்கு கடிதம் எழுதுவதாக கூறி, எம்.பி வெங்கடேசன் மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறார். தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

08:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 14-ந் தேதி தண்டனை கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும், அதன்படி சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

07:42:11 on 28 Jun

மேலும் வாசிக்க விகடன்

திமுக எம்பி கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார். இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?” என்று பதிவிட்டுள்ளார்.

06:43:36 on 28 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாத்தாகுளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெற்றபிறகு சிபிஐ விசாரணை பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

06:38:21 on 28 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

''நரசிம்மராவ் உடலைப் பரிசோதித்தபோது, பாபர் மசூதி இடிப்பினால் அவர் இடிந்து போய்விடவில்லை என்று உறுதி செய்துக்கொண்டேன். மனிதர்களின் வாய் வேண்டுமானாலும் பொய் சொல்லலாம் ஆனால் உள்ளுறுப்புகள் பொய் சொல்லாது." என்கிறார் மருத்துவர் ஸ்ரீநாத்.

03:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று இப்போதே தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் பொருளாதார குற்றம் இழைத்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று சிறைத்துறை விதிமுறைகள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

10:25:07 on 28 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா பரவல் காரணமாக, தேர்தல் ஆணையம் பரிந்துரையின்படி, சட்டசபை, மக்களவை தேர்தல்களில், 65 வயதுக்கு மேற்பட்டோர், தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை, இந்த ஆண்டு இறுதி வரை அமலில் வைத்திருக்க வேண்டும் என, சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

09:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க தினமலர்

கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். Tocilizumab (400 mg) Remdesivir (100 mg) 1,00,000 குப்பிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

05:56:44 on 27 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சரத்குமார் பாஜகவுக்கு வருவதை தமிழகத்தில் உள்ள குறிப்பாக சரத்குமார் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிச் சென்ற கரு.நாகராஜன் உள்ளிட்ட சிலர் விரும்பவில்லை. சரத்குமார் தமிழக பாஜகவுக்குள் வந்தால் அவரது தலைவர், சினிமா இமேஜ் முன் சிலரது இமேஜ் அடிபடலாம் அல்லது குறையலாம் என்று நினைக்கிறார்கள்.

04:27:01 on 27 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”கோவிட்19 பாதிப்பு காரணமாகக் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கடும் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் அளிக்கிறது.” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

01:27:01 on 27 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

12:57:01 on 27 Jun

மேலும் வாசிக்க தினமணி

அமைச்சர் சேவூர் ராமசந்திரன், திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது ஓட்டுநருடன் ஆரணிக்கு காரில் திரும்பியுள்ளார். அப்போது பாதி வழியிலேயே அவரது ஓட்டுனருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அமைச்சர் பாதி வழியிலேயே இறங்கி மாற்று வாகனத்தில் ஆரணிக்கு சென்றார்.

10:57:01 on 27 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

“போலீஸ் கொடூரம் ஒரு பயங்கரமான குற்றம். நமது பாதுகாவலர்கள் அடக்குமுறை செய்பவர்களாக மாறும்போது அது ஒரு சோகம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து, மரணம் அடைந்தவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய அரசிடம் முறையிடுகிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

08:40:41 on 26 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வு துரதிருஷ்டவசமானது, மிகவும் வேதனைக்குரியதுமாகும் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.

06:27:59 on 26 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”கொரோனா பரவலைத் தடுக்க அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவத் துறை சார்ந்த பிரச்னை என்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான தேவை ஏற்படவில்லை’’ என்றும் முதல்வர் தெரிவித்தார்.

06:21:30 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அரசின் பல்வேறு துறைகள் வழியாகத் தன்னை அச்சுறுத்துவதன் மூலம் அதன் நேரத்தை உத்தரப் பிரதேச அரசு வீணடித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா கூறியுள்ளார். மேலும், தாம் இந்திரா காந்தியின் பேத்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

04:57:02 on 26 Jun

மேலும் வாசிக்க தினமணி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை கோவை மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது தனிமனித இடைவெளி என்ற சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அவரின் கூட்டம் நடக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள்.

02:27:01 on 26 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிணைவோம் வா திட்டத்தினாலயே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனாவிற்கு பலியானதாக கூறிய முதல்வர் பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் பதில் அளித்துள்ளார்.

11:27:02 on 26 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு காத்திருக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை பெங்களூரு சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.

10:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பி.ஜே.பி முக்கிய தலைவர் ஒருவரும் சசிகலா விடுதலை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்போது சசிகலா விடுதலை தொடர்பாக எடியூரப்பா, கிரீன் சிக்னல் காட்டியதாகவும் சொல்கின்றனர். இந்தத் தகவல் டெல்லி பா.ஜ.க மேலிடத்துக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளது.

08:38:06 on 26 Jun

மேலும் வாசிக்க விகடன்

பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனைக் கருவிகள் வரை, இந்தக் கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் ஊழல் செய்து, கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டிருப்பதாக அதிமுகவை திமுக விமர்சிக்க, அதேவேளையில் திமுகவின் பழைய ஊழல் கோப்புகளை தூசி தட்டி எடுக்கவுள்ளது அதிமுக.

07:55:01 on 25 Jun

மேலும் வாசிக்க விகடன்

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் கூட திணறுகின்றன. ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவல் என்ற நிலைக்குச் செல்லவில்லை’’ என்றார்.

06:16:46 on 25 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அடிப்படையை மாற்றி - பா.ஜ.க. தனது சொந்த அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாகக் கொண்டு வரப்படும் அவசரச் சட்ட முயற்சியை உடனே கைவிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

03:57:02 on 25 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மணிப்பூர் வளர்ச்சிக்காக பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.பி.பி கட்சி தெரிவித்துள்ளது. இதேபோல என்பிஎஃப், எல்ஜேபி ஆகியவையும் ஆதரவு அளித்துள்ளன. இதனால் பாஜக அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி தீர்ந்துள்ளது. இதனால் மணிப்பூரில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

09:27:01 on 25 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், இன்று முதல் 30ஆம் தேதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

09:03:04 on 25 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

கோட்டையில் இருக்கும் துறைச் செயலாளர்கள் தங்களுக்குள் ஒரு வாட்ஸ் அப் க்ரூப் வைத்திருக்கிறார்கள். இந்த குரூப்பில் சமீப காலமாக அரசின் தவறான முடிவுகள் பற்றிய விமர்சனங்களும், அரசு போகும் போக்கு பற்றிய அதிருப்திக் குரல்களும் அதிகரித்திருக்கின்றன என்கிறார்கள் அந்த க்ரூப்பில் உள்ள சில அதிகாரிகளே.

11:57:02 on 24 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ வாக இருப்பவர் மூர்த்தி. இவரை பற்றி பாஜக இளைஞர் அணி கோட்டப் பொறுப்பாளர் சங்கரபாண்டியன் என்பவர் சமூகவலைதளங்களில் தவறாக செய்திகள் பரப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி சங்கரபாண்டியனின் வீட்டுக்கு முன் சென்று வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

10:27:01 on 24 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தொற்றை தடுக்க மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரியவரும்.

08:33:57 on 24 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

2015ஆம் ஆண்டு முதல் 2264 முறை சீனா இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது குறித்து விளக்கமளிக்க பிரதமர் மோடியிடம், பாஜக தலைவர் நட்டாவால் வலியுறுத்த முடியுமா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “நான் அவருக்கு சவால் விடுகிறேன். நட்டாவுக்கு அந்த கேள்வியைக் கேட்க தைரியம் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

06:27:02 on 23 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை. ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து கட்டணம் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும்” என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறி உள்ளார்.

05:27:01 on 23 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

மேற்கு வங்க மாநிலத்தின் மெடினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.கவின் பவன் ஜனா என்பவருக்கு அஞ்சலி நடத்துவதாகக் கூறி, கட்சி அலுவலகத்தில் 150க்கும் மேலானோரை அழைத்து பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் கூட்டம் கூட்டியுள்ளார். இதற்காக காவல் துறையிடம் இருந்து உரிய அனுமதியும் பெறவில்லை.

04:27:01 on 23 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மதுரையில் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் என்பவருடன், திமுக எம்.எல்.ஏ மூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கரபாண்டியனின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூர்த்தி எம்.எல்.ஏ, ஒரு கட்டத்தில் அவரை தாக்குவதற்காக பாய்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

02:57:01 on 23 Jun

மேலும் வாசிக்க தந்திடிவி

தமிழக முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை (24/06/2020) காலை 10.00 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலுமே ஒரு வார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

12:27:01 on 23 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ”கொரோனா வைரஸை அதிமுக அரசுதான் தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை வெளியிடுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும். அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்புவதும் அவதூறாக கருத்துகளைக் கூறுவதும் கண்டனத்திற்குரியது” என்று கூறியுள்ளார்.

10:57:05 on 23 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தினகரனை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அமமுக அதிமுகவும் சேர்ந்து செயல்பட்டால் அரசியலுக்கு நல்லது என்றும், எடப்பாடி பழனிசாமியுடன் நாங்கள் பேசுகிறோம் என்றும் சசிகலா வெளியில் வருவதில் எந்த சிக்கல்களும் இருக்காது என்றும் தினகரனிடம் குருமூர்த்தி பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

09:27:02 on 23 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துரைமுருகனை ஏலகிரி பங்களாவில் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் அப்போது மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் துரைமுருகன். இந்த நிலையில்தான் வசந்தம் கார்த்திகேயன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் தெரிந்ததும் பதற்றமாகிவிட்டார் துரைமுருகன்.

07:06:20 on 22 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியுமான அகிலேஷ் பிரசாத் சிங், ”நமது பிரதமரின் 56 இன்ச் மார்பு 26 இன்ச் ஆக குறைந்துள்ளது. நாம் தயார், தயார் என்று பிரதமர் ஒருபுறம் கூறுகிறார், ஆனால் சீனா நம் ஒட்டுமொத்த நாட்டையுமே காயப்படுத்தியுள்ளது. அரசு ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

05:27:01 on 22 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

”தவறான தகவல் அளிப்பது சிறந்த தலைமைக்கு அழகல்ல. தவறான தகவல்கள் மூலம் உண்மையை மறைக்க முடியாது. வெளியில் இருந்து வரும் அச்சுறத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில், அது வரலாற்று துரோகம் ஆகிவிடும்.” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

02:36:40 on 22 Jun

மேலும் வாசிக்க தினமலர்

”தவறான தகவல் அளிப்பது சிறந்த தலைமைக்கு அழகல்ல. தவறான தகவல்கள் மூலம் உண்மையை மறைக்க முடியாது. வெளியில் இருந்து வரும் அச்சுறத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில், அது வரலாற்று துரோகம் ஆகிவிடும்.” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

02:09:52 on 22 Jun

மேலும் வாசிக்க தினமலர்

”தெளிவான சிந்தனை தேவைப்படும்‌ போதெல்லாம்‌, உணர்வுகளைத்‌ தூண்டிவிட்டுத் தப்பிக்க முயல்வதை பிரதமரும்‌, அவரது சகாக்களும்‌ நிறுத்த வேண்டும்‌. கடந்த 6 ஆண்டுகளில்‌ எந்த ஒரு கேள்விக்கும்‌, சரியான பதில்‌ அளிக்காமல்‌, உணர்ச்சிகரமாகப் பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறீர்கள்‌.” என பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் கமல்.

08:57:01 on 21 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ராஜ்யசபாவுக்கு நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், எட்டு இடங்களில் வெற்றி பெற்றதன் வாயிலாக, பா.ஜ.க தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், 101ஆக அதிகரித்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 22 இடங்களே தேவைப்படுவதால், அடுத்த ஒரு ஆண்டுக்குள் எளிதாக அதை அடைந்து விட முடியும் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

01:57:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினமலர்

சர்வதேச விமானப் போக்குவரத்து என்பது இப்போதைக்கு இயலாத நிலையில், ஸ்டாலினின் மருத்துவ சிகிச்சைக்கான லண்டன் பயணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அதேநேரம் லண்டனில் தான் செல்லும் மருத்துவமனையிடம் சிறப்பு அனுமதி பெற்று, மத்திய அரசிடம் தனி விமானப் பயணத்துக்காக அனுமதி பெறுவதிலும் ஸ்டாலின் தரப்பினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

11:57:01 on 21 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”இதுக்குமேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்'- பக்தர்கள் சொல்லும் கடைசி வார்த்தைகள் இவை. ஆனால் இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள். கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்ளமாட்டான் தமிழக முதலமைச்சர் அவர்களே, இருந்தால் உங்களை தண்டிப்பான்” என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

09:57:02 on 21 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

யோகா தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”யோகாவிற்கு மதம், மொழி, நாடு என எந்த பேதமும் இல்லை. கொரோனாவை ஒழிக்க யோகா ஒரு சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. யோகா செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.” என்றார்.

08:55:07 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மண்டல பொறுப்பாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் உட்பட அனைத்து அமைச்சர்களிடமும் தான் பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், ‘கொரோனா டெஸ்ட் எடுத்தீங்களா? கவனமா இருங்க’ என்று அக்கறையுடன் விசாரித்து வருகிறார்.

08:27:02 on 20 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரதமர் மோடியின் கருத்து உள்நோக்கத்தோடு திசை திருப்பப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், ”எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு, இந்த முறை அதிகளவு சீன வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு உடனடியாக ராணுவம் பதிலடி கொடுத்தது என்பதை அனைத்து கட்சி கூட்டத்தில் தெளிவாக எடுத்து கூறப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:27:02 on 20 Jun

மேலும் வாசிக்க தினமலர்

“சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா? " என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

03:27:01 on 20 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, ”லடாக்கில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடப்பதாக வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்புகள் தகவல் சொல்லவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.

10:27:01 on 20 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

திமுகவின் சமூகநீதிப் போராட்டத்தின் மேலுமொரு வெற்றியாக மருத்துவ சேர்க்கையில், 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உட்பட்டு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய 27 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கத் தயார் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

09:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

“சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

09:27:01 on 20 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில் ”ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?” என்றும் கேட்டுள்ளார்.

05:46:36 on 19 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய நிலைப்பாட்டை மோடி ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆதலால், நாம் போருக்குப் போகப்போகிறோம், அது குறிப்பிட்ட இலக்கை நோக்கிய போராக இருக்கலாம்.” என குறிப்பிட்டார்.

03:27:02 on 19 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பத்தாம் வகுப்புப் பயின்ற மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

12:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினமணி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், வெறும் காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும், தற்போது காய்ச்சலும் சரியாகிவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

12:27:01 on 19 Jun

மேலும் வாசிக்க IndiaGlitz Tamil

கரோனா பாதிப்பு மற்றும் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்ததையொட்டி, இந்த ஆண்டு தமது பிறந்த நாளை (19-06-2020) கொண்டாடப் போவதில்லை என காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மறுத்து விட்டார். மேலும், உயிர் நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துங்கள்" எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

11:57:02 on 19 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

கே.பி.அன்பழகன் சில ஆண்டுகளுக்கு முன் கொழுப்பைக் குறைக்கும் அறுவை சிகிச்சையை பிரபல தனியார் மருத்துவமனையில் செய்துகொண்டார். இந்நிலையில்தான் கொரோனா பகுதிகளில் சென்று ஆய்வு செய்யும்போது தொற்று ஏற்பட்டால் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்துகொண்ட உடல் தாங்காது என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

09:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க