View in the JustOut app
X

மியான்மர் நாட்டின் மாண்டலே நகரில் நடைபெற்ற உலக பில்லியர்ட்ஸ் இறுதிப் போட்டியில் மியான்மர் வீரர் நே த்வே ஊ-வை இந்தியாவின் பங்கஜ் அத்வானி 6-2 என்ற ஸ்கோரில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

10:27:01 on 16 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை எடுத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதையும், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

07:57:02 on 16 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

”எங்கள் ஊரில் அனைவரும் குடும்பமாக வந்து வரவேற்பு அளித்ததைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உலககோப்பை போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன்.” என இளவேனில் தெரிவித்துள்ளார்.

12:00:05 on 15 Sep

மேலும் வாசிக்க விகடன்

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான டோனி எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உண்டு. இதனையடுத்து டோனி கேப்டனாக பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும் இந்நிலையில் #12YEARSOFCAPTAINDHONI என்ற ஹேஸ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

02:29:57 on 14 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. விராட் கோலி, மயங் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விகாரி, ரிசப் பந்த், விருத்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

06:57:01 on 12 Sep

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். 5 மணி நேரம் பரபரப்பாக நடந்த போட்டியில் மெத்வதேவை ரபேல் நடால் வீழ்த்தினார். ரஷிய வீரர் மெத்தேவை 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீரர் ரபேல் நடால் வீழ்த்தினார்.

07:50:59 on 09 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் மற்றும் கனடா நாட்டை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரீஸ்கு விளையாடினர். இந்த போட்டியில் பியாங்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

08:04:12 on 08 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 2வதுஇடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பிரிட்டினியை(24) எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நடால் 7-6, 6-4, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

11:49:02 on 07 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மலிங்கா வீசிய பந்தில் முன்ரோவை க்ளின் போல்ட் ஆனார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனைத் தொடர்ந்து மேலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

02:55:01 on 07 Sep

மேலும் வாசிக்க விகடன்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 319 பந்துகளில் இரட்டை சதம் (211) அடித்து அசத்தினார். இதன்மூலம் குறைவான போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் சாதனை முறியடித்துள்ளார்.

06:37:36 on 06 Sep

மேலும் வாசிக்க Behind Woods News

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் உக்ரைனின் ஸ்விட்டோலினாவை 6-3, 6-1 என்ற நேர் செட்டில் செரீனா வில்லியம்ஸ் வீழ்த்தினார். அமெரிக்க ஓபனில் 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செரீனா இதுவரை 6 முறை பட்டம் வென்றுள்ளார்.

08:46:28 on 06 Sep

மேலும் வாசிக்க தினகரன்

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். தனக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

08:57:01 on 03 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 28-வது வெற்றியை விராட் கோலி பதிவு செய்துள்ளார்.

08:03:06 on 03 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்ய அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

08:55:48 on 02 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அஃப்ரிடியின்(98 விக்கெட்டுகள்) சாதனையை மலிங்கா முறியடித்துள்ளார்.

12:57:01 on 02 Sep

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டியில் எச்.ராஜாவும், நயினார் நாகேந்திரனும் முதலிடத்தில் இருப்பதாக தெரிகிறது. மேலும் சி.பி.,ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது.

05:57:01 on 01 Sep

மேலும் வாசிக்க தினமலர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்கா நகரில் நடைபெற்று வருகிறது, இப்போட்டியில், ஜஸ்பிரீத் பும்ரா முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். டேரன் பிராவோ, ஷமாரா புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது விக்கெட்டை ஹாட்ரிக்காக எடுத்தார்.

08:32:42 on 01 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

மேலும் வாசிக்க