View in the JustOut app
X

ஒடிஸா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அஸ்திரா ஏவுகணை, நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

08:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க தினமணி

சியோமி நிறுவனம் சார்பில் இந்தியாவில் Mi பேண்ட் 4 சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கென டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது.

02:55:01 on 16 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

ரியல்மி பவர் பேங்கில் இருவழி 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் டைப்-ஏ போர்ட்களை கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தியாவில் இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

11:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

Gionee Smart 'Life' Watch இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோனியின் இந்த ஸ்மார்ட் 'லைஃப்' வாட்ச் 24 மணி நேரம் இதய துடிப்பை கண்கானிக்கும் ஹார்ட் ரேட் சென்சாருடன் கலோரி மீட்டர், உடற்பயிற்சி, உடல்நலம் மற்றும் பல விளையாட்டு செயல்பாடு என அனைத்தையும் கண்கானிக்கும் திறனை கொண்டுள்ளது.

05:30:08 on 14 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கூகுள் நிறுவனத்தின் கிளை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிறது. கூகுள் நிறுவனம் 2016ஆம் ஆண்டு சுமார் 13 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய பிரான்ஸ் அரசு, 2 ஆண்டுகளுக்கு மேலாக கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை கண்டுபிடித்தது.

04:00:11 on 14 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஒருவர் எப்போது உடலுறவு கொள்கிறார் என்பது உள்பட தனிநபர்களின் அந்தரங்க தரவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படுவதாக 'பிரைவேசி இன்டர்நேஷனல்' (PL) நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

02:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சூரிய குடும்பத்திற்கு வெளியே இதுவரை 4 ஆயிரத்து 109 கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், பூமியைப் போல 8 மடங்கு நிறையும் இரு மடங்கு பெரியதுமான K2-18B என்ற கோள் விஞ்ஞானிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

05:30:07 on 13 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

புதிய ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களையும் தாண்டி, இந்த புதிய வகை வடிவமைப்பிற்கு ட்ரைஃபோபியா ஒவ்வாமை உள்ளவர்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர். இந்த போபியா உள்ளவர்கள் ஐபோன் 11 வரிசையை வாங்குவதற்கு தயக்கம் காட்டலாம் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

05:25:02 on 13 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

தகவல் தொடர்பை இழந்த சந்திரயான் 2 உடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வரும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான 2 வகையான ஊதிய உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

07:12:01 on 10 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். விக்ரம் லேண்டரை நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. விரைவில் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை பெற முயற்சித்து வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

02:52:47 on 08 Sep

மேலும் வாசிக்க தினகரன்

செல்போன் உற்பத்தியில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நோக்கியா, தற்போது மீண்டும் புதிய தொழில்நுட்பத்துடன் களத்தில் இறங்க உள்ளது. விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க, புதிய தொழில் நுட்பங்களுடன் குறைந்த விலையில், நோக்கியா 1100, நோக்கியா 2720, நோக்கியா 800 என்ற மாடல்களை, களமிறக்க இருக்கிறது.

12:55:01 on 08 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

இஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ”நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். எதிர்கால திட்டங்களில் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.

08:09:47 on 08 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜியோமி நிறுவனம் சமீபத்தில் தனது முதல் ரெட்மி டி.வியை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி டி.வி., ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ எனப் பெயரிடப்பட்டது. இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

12:55:02 on 08 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் தற்போது கூகிளுக்கு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் பயனர்கள் தற்போது கூகிள் அசிஸ்டென்ட் மூலம் நேரடியாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

05:44:56 on 07 Sep

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சந்திரயான் -1, மங்கள்யான் ஆகியவற்றைத் தொடர்ந்து விண்வெளித் துறையில் இந்தியாவின் அடுத்த முக்கியமான மைல் கல்லாக சந்திரயான் -2 பார்க்கப்பட்டது. இது முழு வெற்றி இல்லையென்றாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு விண்வெளித்துறையில் சாதனை படைக்க முயற்சித்த நான்காவது நாடு என்ற பெருமையை இஸ்ரோ பெற்றுள்ளது.

07:59:04 on 07 Sep

மேலும் வாசிக்க தினமணி

‘சந்திரயான்-2’ திட்டத்தின் முக்கிய நிகழ்வு நாளை அதிகாலையில் நடக்கிறது. அப்போது விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரை இறங்கும் என்று இஸ்ரோ கூறி உள்ளது. இந்த நிகழ்வை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

08:08:20 on 06 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ரியல்மி நிறுவனம், ரியல்மி எக்ஸ்டிஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 4 ஜிபி மற்றும் 64 ஜிபி, 6 ஜிபி மற்றும் 64 ஜிபி, மற்றும் 8 ஜிபி மற்றும் 128 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளன. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன் புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் அமோல்ட்திரை போனில் வழங்கப்பட்டுள்ளது.

11:55:01 on 05 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

முகநூல் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், 41 கோடியே 9 லட்சத்திற்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

12:16:19 on 05 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை இன்று முதல் குறிப்பிட்ட சில பெருநகரங்களில் அறிமுகமாகிறது. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இன்று அறிமுகப்படுதப்பட இருக்கிறது. விரைவில் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

12:04:38 on 05 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

17,000 யூடியூப் சேனல்களில் இருந்து வெறுப்பை விதைக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு லட்சம் வீடியோக்களை நீக்கியிருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு வெறுப்பை உமிழும் வகையில் பதிவிட்ட 500 மில்லியன் (50,00,00,000) கமெண்ட்டுகளையும் நீக்கியிருக்கிறது.

12:55:02 on 05 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவை சுற்றி வரும் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை இன்று மேலும் குறைக்கப்பட்டது. இதனால், லேண்டர் நிலவை மேலும் நெருங்கி, குறைந்தபட்சம் 35 கி.மீ., அதிகபட்சம் 101 கிமீ என்ற நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

09:09:18 on 04 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

தைவானைச் சேர்ந்த ‘ஹெச்டிசி’ நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியாவில் ‘டிசையர் 19+’(HTC Desire 19+) என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த மாடல் தைவானில் ரிலீசாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

06:55:01 on 04 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

Xstream ஸ்டிக் என்பது அனைத்து ஹெச்டி டிவி மூலமாகவும் இயக்க முடியும். ஏர்டெல் ப்ளாட்டினம் அல்லது ஏர்டெல் கோல்ட் வாடிக்கையாளர் என்றால் அனைத்து சேவைகளும் உங்களுக்குக் கிடைக்கும். இதர ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 999 ரூபாய் சந்தா செலுத்தி Xstream சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

02:57:01 on 03 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மேலும் வாசிக்க