View in the JustOut app
X

சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. இப்போது இது உடனடியான பிரச்சனை இல்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.

11:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,04,07,209 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,318 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.

09:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தனது ஆதரவாளர் ஒருவர் “வெள்ளை அதிகாரம்" என்று கோஷமிட்ட காணொளியை டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஃப்ளோரிடாவில் டிரம்புக்கு ஆதரவான நடைபெற்ற பேரணியில் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் இவ்வாறு கோஷமிட்டுள்ளார். அதன் காணொளியைத்தான் டிரம்ப் மறுபகிர்வு செய்துள்ளார்.

01:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரு கோடியை தாண்டிய நிலையில் இன்று 1,02,38,232ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,49,897ஆக உள்ளது. தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,04,078 -ஆக உயர்ந்திருக்கிறது.

11:15:42 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்துள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் காய்ச்சல் தொடர்பான நோய்களின் எண்ணிக்கையைவிட இந்தக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக உள்ளது.

10:43:09 on 28 Jun

மேலும் வாசிக்க விகடன்

ஐக்கிய நாடுகளின் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் அதன் அதிகாரி உடலுறுவு வைத்துக் கொள்ளும் காணொளி வைரலாக பரவியதை அடுத்து, இது குறித்து விசாரிக்க ஐ.நா சபை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த சம்பவமானது இஸ்ரேலில் நடந்துள்ளது.

03:57:01 on 27 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஐ.நா. தலைவர் ஆண்டனியோ கட்டரெஸ் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் கோவிட்-19லிருந்து மீளும் திட்டத்தில் எந்த ஒருநாடும் நிலக்கரியைச் சேர்க்க வேண்டியதில்லை, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு செய்யுங்கள் என்று சூசகமாக அறிவுறுத்தியுள்ளார்.

05:27:01 on 26 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் போலி பைலட் உரிமங்களை வைத்து இருப்பதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ள தகவல், அந்நாட்டு பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

03:27:01 on 26 Jun

மேலும் வாசிக்க தினச்சுவடு

உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,10,205 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 4,91,783 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,308 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.

08:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவின் டெலவேர் என்னும் இடத்தில் உள்ள கடற்கரையில், மெகா சைஸ் சுறா மீன் ஒன்றை தன் வெறும் கைகளால் பிடித்துள்ளார் ஒரு நபர். பிடித்தது மட்டுமல்லாமல் அதன் வாயைப் பிளந்து போட்டோகளுக்குப் போஸ் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

06:57:02 on 26 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் 2 ஆபாசப்பட நடிகர்கள் சிறுவனின் தாய் முன் ஆடையின்றி நிற்கின்றனர். லேப்டாப் உடன் வரும் இவர்களை கண்டு அதிர்ச்சியில் செய்வதறியமால் நிற்கிறார். இந்த விளம்பரம் சிறார்கள் இணையத்தில் ஆபாசப்படங்கள் பார்ப்பதை தடுப்பதை மையமாக கொண்டுள்ளது.

04:55:01 on 25 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்துப் பரிசோதிக்கும் பணி தொடங்கியது. இந்த மருந்தினை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிற தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்துவது தொடங்கிவிட்டது.

11:57:02 on 25 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95,25,937ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 4,84,925 பேர் உயிரிழந்த நிலையில் 51,74,686 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,418 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10:27:01 on 25 Jun

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியா- சீனா எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

04:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க Asiavillenews

உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,53,734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 4,79,805 பேர் உயிரிழந்த நிலையில் 5,041,711 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440,215 ஆக அதிகரித்துள்ளது.

08:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க தினகரன்

வணிக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்ததால் சீனாவின் வீகர் முஸ்லிம்கள் நன்னடத்தை முகாம்களில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் சீன அதிகாரிகளுக்கு மேற்கொண்டு புதிய தடை எதையும் விதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

12:57:01 on 23 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மெக்கா நகருக்கு பல்வேறு நாடுகளில் இருந்து அதிகளவில் மக்கள், ஹஜ் புனித பயணம் மேற்கொண்டால், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்றும், எனவே. வெளிநாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

08:55:18 on 23 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் பிரச்சாரத்துக்கு தயாரானார். இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு 40,000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் வந்ததோ வெறும் 25 பேர் தான்.

02:57:02 on 22 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

“இந்திய பிரதமர் ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை வழங்கியிருந்தாலும், அவர் மோதலைக் குறைக்க விரும்புகிறார். தனது நாடு சீனாவுடன் மேலும் மோதலை ஏற்படுத்த முடியாது என்பதை அவர் புரிந்துகொள்கிறார். எனவே பதற்றங்களைக் குளிர்விக்க அவர் ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறார்” என்று குளோபல் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

09:27:01 on 22 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க