View in the JustOut app
X

நயன்தாரா தன் படத்தின் ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று அக்ரீமெண்ட் போட்டு தான் நடிக்கவே போகின்றாராம். அஜித் இத்தனை நாட்கள் பட ப்ரோமோஷன் வரவில்லை என்றாலும், இந்த அக்ரீமெண்ட் விஷயம் நயன்தாராவை பார்த்து தான் முடிவு செய்தாராம்.

10:57:02 on 25 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லாத நடிகை அஞ்சலி, பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அஞ்சலிக்கு முன் நடிகை நயன்தாரா மற்றும் அனுஷ்காவை நடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

09:57:02 on 25 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

"கோட்டையும் கொடியும் நொடியில் மாறும்! நீங்கள் அரசியலுக்கு வந்தால்!" என்று விஜயை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசியலுக்கு அழைப்பதை போன்று போஸ்டர் தமிழகத்தில் பல பகுதிகளில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டு அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

08:57:01 on 25 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவரான பெர்னி சாண்டர்ஸ் குடியரசுக் கட்சியின் அதிபரான டிரம்ப்பின் இந்திய பயணம் குறித்து கடுமையாக கருத்து வெளியிட்டுள்ளார். அதிபர் டிரம்ப் ராணுவத்துக்கு ஆயுத விற்பனை செய்வதற்காக இந்தியாவுக்கு சென்றிருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.

08:27:01 on 25 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், அமெரிக்காவிடம் ஏராளமான ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க உள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே டிரம்பின் வருகையால் இந்திய மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

07:55:02 on 25 Feb

மேலும் வாசிக்க விகடன்

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

07:25:01 on 25 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுடன் இணைக்கமாக தாங்கள் செயலாற்றி வருவதாக பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்தார். மேலும் அவர், குடியுரிமை சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்றும், CAA பற்றி பதில் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

07:11:38 on 25 Feb

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுடன் இணைக்கமாக தாங்கள் செயலாற்றி வருவதாக பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்தார். மேலும் அவர், குடியுரிமை சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்றும், CAA பற்றி பதில் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

07:00:53 on 25 Feb

மேலும் வாசிக்க தினகரன்

ஆவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் மாஃபாவின் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆவடி அதிமுக நிர்வாகிகள் சிலர் கலந்து பேசி பிரச்சினையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

06:55:01 on 25 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்டத்தில் ஒரு தொகுதியை இளைஞர் அணிக்கு அளிக்கலாம் என்றும் பிரஷாந்த் வியூகம் வகுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

06:27:01 on 25 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வந்தால் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள், குடிமக்களாக அங்கீகரிக்கப்படமாட்டார்கள் என்ற அச்சம் நிலவுவதால், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், சென்னை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

05:57:01 on 25 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத், மௌஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் பகுதிகளில் சிஏஏ ஆதரவானவர்களும், எதிரானவர்களும் இடையிலான மோதல் வன்முறையானதில் தலைமைக் காவலர் உட்பட 7 பேர் வரை உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக அதிகரித்துள்ளது.

05:46:01 on 25 Feb

மேலும் வாசிக்க தினமணி

வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத், மௌஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் பகுதிகளில் சிஏஏ ஆதரவானவர்களும், எதிரானவர்களும் இடையிலான மோதல் வன்முறையானதில் தலைமைக் காவலர் உட்பட 7 பேர் வரை உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக அதிகரித்துள்ளது.

05:42:50 on 25 Feb

மேலும் வாசிக்க தினமணி

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மீண்டும் இருதரப்புக்கு இடையே பயங்கர மோதல் நிலவியது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற என்.டி.டிவியின் செய்தியாளர்கள் அரவிந்த் குணசேகர் மற்றும் சவுராப் சுக்லா ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

05:37:48 on 25 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பாணியைப் பின்பற்றி ‘ஜுராசிக் வேர்ல்டு’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக படத்தின் நாயகன் கிறிஸ் ப்ராட் தெரிவித்துள்ளார். மார்வெல் நிறுவனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’, ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’, ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ உள்ளிட்ட படங்களில் கிறிஸ் ப்ராட் நடித்துள்ளார்.

05:27:01 on 25 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பிரபாகர், துர்கா தேவி தம்பதி, தங்களது ஒரு வயது மகன் ரித்திக்குடன் பெரியாயிபாளையத்தில் வசித்து வந்தனர். தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

04:57:01 on 25 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

04:27:02 on 25 Feb

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

டெல்லியில் கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், கலவரம் பாதித்த இடங்களில் அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

03:57:01 on 25 Feb

மேலும் வாசிக்க குமுதல் டாட் காம்

இந்தியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவலாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர், ஹெச்1 என் 1 வைரஸ்களை உருவாக்கும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

03:27:01 on 25 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நினைவு தப்பிய நிலையில் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்து காணப்படுகின்றனர்.

03:12:28 on 25 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நினைவு தப்பிய நிலையில் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்து காணப்படுகின்றனர்.

03:09:39 on 25 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதேபோல, அணுசக்தி, பாதுகாப்பு, அறிவுசார் சொத்துடமை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .

02:53:09 on 25 Feb

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதேபோல, அணுசக்தி, பாதுகாப்பு, அறிவுசார் சொத்துடமை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .

02:42:58 on 25 Feb

மேலும் வாசிக்க தினகரன்

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்நிலையில், பண தட்டுப்பாடு காரணமாக, இடையில் படப்பிடிப்பு நின்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து, படத்தின் தலைப்பு வலிமை என்று இருப்பதால் தான், தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆகவே, தலைப்பை மாற்றலாம் என தயாரிப்பாளர் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

02:27:01 on 25 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தொலைபேசி மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ள செல்ஃபோன் எண்ணில் இருந்து இனி வாட்ஸ் ஆப் மூலமாகவும் பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

02:00:01 on 25 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தொலைபேசி மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ள செல்ஃபோன் எண்ணில் இருந்து இனி வாட்ஸ் ஆப் மூலமாகவும் பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

01:57:02 on 25 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் 3 மணி நேரத்தில் 18 செல்போன்களை பறித்துச் சென்ற திருடனை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. கைதான பாலாஜி 5 வருடத்திற்கு முன்பு செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

01:27:01 on 25 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓ மை கடவுளே படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். சிறு பட்ஜெட் படம் பெரியளவில் எதிர்ப்பார்ப்பு இல்லை என்றாலும், படத்தின் விமர்சனம் அடுத்தடுத்த நாட்களில் பெரும் கூட்டத்தை அழைத்து வந்துள்ளது.

12:57:01 on 25 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

கோவை அருகே ஆத்துப்பாலம் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்த போராட்டக்காரர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த, 19ஆம் தேதியில் இருந்து, அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

12:27:02 on 25 Feb

மேலும் வாசிக்க தந்தி டிவி

சென்னையில் இருந்து இலங்கையில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் பகுதிக்கு செல்லும் அல்லயன்ஸ் ஏர் விமான சேவை 27ஆம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.

11:57:02 on 25 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஜியோ நிறுவனம் ரூ.49 மற்றும் ரூ.69 மதிப்புகளில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.49 திட்டத்தில் அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள், 250 நிமிடங்கள் மற்ற நிறுவனங்களுக்கான அழைப்பு நிமிடங்கள், 2 ஜிபி 4ஜி இன்டர்நெட் சேவை மற்றும் 25 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட பல ஆஃபர்கள் வழங்கப்படுகிறது.

11:27:02 on 25 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

உத்தர பிரதேச அரசு வழங்கியுள்ள, 5 ஏக்கர் நிலத்தில், மசூதி மற்றும் மருத்துவமனை கட்ட, சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வாரியத்தின் தலைவர் ஜூபர் பரூக்கி, மசூதியுடன், இந்திய - இஸ்லாமிக் ஆய்வு மையம், பொது நுாலகம், மருத்துவமனை ஆகியவவையும் கட்டப்படும் என்றார்.

10:57:01 on 25 Feb

மேலும் வாசிக்க தினமலர்

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட 17 மாநிலங்களை சேர்ந்த 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைவதையடுத்து தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

10:46:54 on 25 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. எனினும் பலி எண்ணிக்கை அச்சப்படும் அளவிலேயே காணப்படுகிறது. இதுவரை கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது.

10:25:01 on 25 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரி, கேரளம் என தென்னிந்தியா முழுவதும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக பாஜகவின் அஜெண்டாவுக்கு எதிராக பேசி வருகிறார் கனிமொழி. பிரதமரும், பாஜகவினரும்தான் பாகிஸ்தான் பெயரை அதிகம் உச்சரிக்கிறார்கள் என்றும் வேண்டுமென்றால் அவர்கள் பாகிஸ்தானுக்குப் போகட்டும் என்றும் கனிமொழி தொடர்ந்து பேசி வருகிறார்.

09:57:01 on 25 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லியில் டிரம்ப் தங்கியுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திடீரென மீண்டும் மோஜ்பூர், பிராஹ்ம்ப்யூரில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

09:27:01 on 25 Feb

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லியில் மோஜ்பூர், பிராஹ்ம்ப்யூரில் வன்முறை வெடித்துள்ளதை அடுத்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வன்முறை நடைபெற்ற தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுடன் தமது இல்லத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

09:11:39 on 25 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு மார்ச் 16ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf ZVdJ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

08:55:01 on 25 Feb

மேலும் வாசிக்க தினமணி

டெல்லி: போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் யார்? குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வாலிபரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். டெல்லி வன்முறைக்கு தேச விரோத சக்திகள் தான் காரணம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.

08:52:06 on 25 Feb

மேலும் வாசிக்க தினமலர்

"சிஏஏ.க்கு எதிராக போராடுபவர்களை கலைக்க டெல்லி போலீசுக்கு நாங்கள் 3 நாட்கள் கெடு விதிக்கிறோம். அதன் பின் நீங்கள் சொல்வதை கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்ப செல்லும் வரையில்தான் நாங்கள் அமைதி காப்போம்," என்று பாஜகவின் கபில் மிஸ்ரா ட்விட்டரில் பதிவிட்டதுதான் வன்முறைக்கு காரணம் என சிஏஏ எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

08:38:54 on 25 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டெல்லி வன்முறையில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. கலவரத்தில் தலைமை காவலர் ஒருவர், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் இறந்த நிலையில் 105 பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

08:26:38 on 25 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

Samsung Galaxy A71 இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது, இது சாம்சங் ஸ்டோர் மற்றும் அமேசானில் கிடைக்கிறது. இந்த போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC-யால் இயக்கப்படுகிறது. இது மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது. Galaxy A71-ன் விலை ரூ.29,999 ஆகும்.

07:55:02 on 25 Feb

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரைத் தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

06:55:01 on 25 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

05:55:01 on 25 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனை அந்நாடுகளை சேர்ந்த சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. ஈரான் நாட்டில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

10:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் ட்ரம்ப் உரை நிகழ்த்தினார். அப்போது உச்சி வெயிலில் உட்கார முடியாமல் தவித்து வந்த மக்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து வெளியேறத் துவங்கினர். மக்களைச் சமாதானப்படுத்தி அமரவைக்க பா.ஜ.க.,வினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.

09:57:02 on 24 Feb

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

காட்ஃபாதர் படம் நட்டி நாயகனாக நடித்திருக்கும் படம். இந்த படத்தை ஜகன் ராஜசேகர் இயக்கி இருக்கிறார். வில்லனாக லால் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

08:55:02 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

08:25:02 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் முத்துவேலு. இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்றிரவு முத்துவேலு தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த நாகராஜன் துண்டித்த தலையை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

07:57:02 on 24 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சீனாவில் மருத்துவப் படிப்பு படித்து வந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த விஸ்வநாத் என்ற மாணவர் கடந்த 15-ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரனா அறிகுறி இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மருத்தவமனையில் போதிய வசதிகள் இல்லை என புகார் தெரிவித்துள்ளார்.

07:27:01 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்புகளில் நடைபெற்ற சில தற்கொலை சம்பவங்களில் பின்னணியிலும் கந்துவட்டி கொடுமை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் ஆயுதப்படை போலீசாருக்கு கந்து வட்டி மற்றும் ஏலச்சீட்டு உள்ளிட்டவை மூலம் கடும் நெருக்கடியில் இருந்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்தது.

06:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ரஜினிகாந்தின் 168வது படத்துக்கு ‘அண்ணாத்த’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்க, டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான டைட்டில் மோஷன்பிக்சரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

06:30:38 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாநாடு படத்தின் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடையும்படி ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். "மாநாடு படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா சிறந்த இசையை தந்துள்ளார்” என கூறியுள்ளார்.

05:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்வி குழுமத்தின் நட்சத்திர விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நிறையப் பேர் தன்னை பெண்களுக்கு எதிரானவன் என நினைத்திருப்பதாகவும், அது தவறு எனவும் கூறினார். பெண்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்து, அவர்களுக்காக போராடுவேன் எனவும் அவர் கூறினார்.

05:27:01 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் சென்னையில் நடத்தவும் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

04:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லியில் சி.ஏ.ஏ.,போராட்டத்தில் இன்று (பிப்.24) வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் கோலக்பூரி தலைமை காவலர் ரத்தன்லால் பலியானார். வன்முறையை கட்டுக்குள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

04:31:34 on 24 Feb

மேலும் வாசிக்க தினமலர்

டெல்லியில் சி.ஏ.ஏ.,போராட்டத்தில் இன்று (பிப்.24) வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் கோலக்பூரி தலைமை காவலர் ரத்தன்லால் பலியானார். வன்முறையை கட்டுக்குள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

04:28:05 on 24 Feb

மேலும் வாசிக்க தினமலர்

சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் தோன்றியுள்ளதாகத் தெரிகிறது. சைக்கோ படம் வெற்றியடைந்த நிலையில் துப்பறிவாளன் 2 படத்துக்கு மிஷ்கின் கேட்ட சம்பளம் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

04:27:02 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

புது தில்லியில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தலைநகர் தில்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அவசரமாக புது தில்லி விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

04:18:23 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

புது தில்லியில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தலைநகர் தில்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அவசரமாக புது தில்லி விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

04:13:55 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

திருநெல்வேலி வட்டாரத்திலுள்ள கிராமத்தின் எல்லையோரம் இருக்கும் மரம்தான் அந்த ஊரின் பேருந்து நிறுத்தம். அவ்வழியாக செல்லும் பேருந்து ஒன்று மற்ற கிராமங்களில் நின்று மக்களை ஏற்றிச் சென்றாலும், குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் நிறுத்தாமல் செல்கிறார்கள். இதனை எதிர்த்து தனுஷ் போராடுவதுதான் கதை.

03:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,166-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

03:42:44 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பீகார் மாநிலம் தர்பங்காவில் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல் படுத்த மாட்டோம். தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010ஆம் வருடம் நடந்த அதே அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

03:27:01 on 24 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பலர் மீது பெண் ஒருவர் இ.மெயில் புகார் அளித்து வந்தார். பிரியா, பிரியதர்ஷினி போன்ற பெயர்களில் இந்த புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. போலீஸ் விசாரணையில் புகார் அளித்தது பெண் அல்ல என்றும், பெண் வேடத்தில் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆண் என்பது தெரிய வந்தது.

02:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

”உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மற்றும் மகளை மனதார வரவேற்கிறேன். அமெரிக்க அதிபரின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்திய, அமெரிக்க உறவு சாதாரண உறவல்ல, ஆழமான நட்புறவு கொண்டது.” என பிரதமர் மோடி பேசினார்.

02:44:09 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கோலா என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியிடம் ஆதார் அட்டையைக் காண்பிக்கும்படி கேட்டு மிரட்டுகிறார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

02:25:01 on 24 Feb

மேலும் வாசிக்க விகடன்

டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். குரங்கு பொம்மைகள் சொல்லும் பாடம் குறித்து ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கினார். காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப்.

02:10:29 on 24 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோனி பிரகாஷ் - தீபா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தான். தீபாவுக்கு, சொரிமுத்து என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில் சிறுவன் லோகேஷை சொரிமுத்து கடுமையாக தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

01:55:02 on 24 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகர் சந்தானத்தின் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் காமெடியனாக நடிப்பதை நிறுத்திய பிறகு அவரது இடத்திற்கு வேறு எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சந்தானத்தின் மகளும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

01:25:01 on 24 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பிரியங்கா என்பவரும், கருங்காலிப்பட்டையைச் சேர்ந்த காவலர் சரத்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சரத்குமார், தனது முன்னாள் காதலியை திடீரென திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த பெண் போலீஸ் பிரியங்கா விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

12:55:01 on 24 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

அகமதாபாத்தில் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க ட்ரம்புக்கு குஜராத் பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். அகமதாபாத் விமானநிலையம் வந்தடைந்த அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி.

12:49:14 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளுள் அதிபர் ட்ரம்புக்கு இந்தியாவில்தான் அதிக சொத்துகள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ட்ரம்ப்பின் முதல் சொத்து புனேவில் உள்ள 23 அடுக்குமாடி கட்டடமான ’ட்ரம்ப் டவர்’ ஆகும். இதுபோல், கொல்கத்தாவில் உள்ள 36 அடுக்குமாடி கட்டடமான ட்ரம்ப் டவர் அந்நகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது.

12:27:02 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை தந்துள்ளார். இந்நிலையில் டிரம்பை வரவேற்கும் விதமாக #IndiaWelcomesTrump என்ற ஹேஷ்டேக்கும், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackTrump என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

12:07:03 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல், 'காஸ்' வழங்கும் ஒப்பந்தத்தை எதிர்த்து, 'அதானி' நிறுவனம் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக, இந்த ஒப்பந்தத்தை குஜராத்தைச் சேர்ந்த, 'டோரன்ட் காஸ்' என்ற நிறுவனத்துக்கு பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு கட்டுப்பாடு வாரியம் வழங்கியிருந்தது.

11:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினமலர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார். அதிபரை வரவேற்க அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி தயாராக இருக்கிறார். குஜராத் முதல்வர் மற்றும் ஆளுநரும் அகமதாபாத் விமான நிலையத்தில் டிரம்பை வரவேற்க தயாராக உள்ளனர்.

11:53:32 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தங்க விலை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். நேற்று ரூ.4000ஐ தாண்டிய கிராமின் விலை இன்று ரூ.28 உயர்ந்து கிராமுக்கு ரூ.4,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:37:56 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தங்க விலை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். நேற்று ரூ.4000ஐ தாண்டிய கிராமின் விலை இன்று ரூ.28 உயர்ந்து கிராமுக்கு ரூ.4,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:32:40 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

திரை உலகில் ஜெயலலிதா கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்த நேரம். அப்போது அவருடைய பேட்டி ஒரு பத்திரிக்கையில் வெளிவந்தது. அதில் அவர், என்னை சிலர் கன்னட நாட்டிலிருந்து வந்தவள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். அது தவறான செய்தி நான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தமிழ்ப்பெண். தமிழ்தான் என் தாய்மொழி; கன்னடமல்ல" என்று கோரியிருந்தார்.

11:27:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ரஜினி ஆஜராக வரும் பட்சத்தில் தற்போதைய அவரது கருத்துகளால் சிஏஏ எதிர்ப்பாளர்கள் தனக்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக ரஜினி சந்தேகப்படுகிறார். எனவேதான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கிறார்.

10:27:02 on 24 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

09:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

'அம்மா' என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது. அவருடைய பாட்டியின் பெயரான 'கோமளவல்லி' என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது.

09:25:07 on 24 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

'அம்மா' என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது. அவருடைய பாட்டியின் பெயரான 'கோமளவல்லி' என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது.

09:21:24 on 24 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மாம்பழம், எலுமிச்சை பழங்களில் உள்ள வைட்டமின் சி சரும பளபளப்பை தரும். மேலும் எலும்பு, மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்தும். இளமையை தக்க வைக்கவும் உதவும். மஞ்சள் நிற உணவுகளுக்கு மனநிலையை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது.

08:55:01 on 24 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.

08:40:51 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

07:55:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

பொதுத்துறை வங்கிகள் தங்களது நிதி செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தன. இதனால் வங்கிகள் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விட்டன என நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையை பொசுக்கும் வகையில், வங்கிகளின் மொத்த வாராக் கடன் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

06:55:02 on 24 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது.

05:55:01 on 24 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சமூக வலைதளத்தில் விஜய்யின் மாஸ்டர் படம் தொடர்பான புகைப்படம் ஓன்று தீயாய் வைரலாகி வருகிறது. இதில் ஒரு கார் பிரிட்ஜ் மேல் நிற்பதுபோல் தெரிகிறது. இந்த புகைப்படம் மாஸ்டர் படத்தின் Climax காட்சி என்று பலரும் சமூக வலைதள பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.

10:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

உப்பு பற்களில் உள்ள கறைகளை போக்க மிகச்சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகின்றது. தினமும் நாம் பல் துவக்குவதற்கு முன் உப்பு தூளை வைத்து பல் துலக்க வேண்டும். பின்பு பேஸ்ட் கொண்டு துலக்கிக் கொள்ளலாம். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துவிடும்.

09:55:01 on 23 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 47 ஆயிரத்து, 300 கோடி டாலராக இருந்தது. தற்போது 309 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 609 கோடி டாலராக அன்னிய செலாவணி இருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

08:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவை சேர்ந்தவர் குருநாதன். இவர் சமத்துவ மக்கள் கட்சியில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். நடிகை மைனா நந்தினி என்ற பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, அதில் குருநாதனின் செல்ஃபோன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது.

08:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா பாதிப்பால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ள நிலையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

கொல்லம் மாவட்டத்தின் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜோஷி மற்றும் அஜீஸ். நண்பர்களான இவர்கள், திருவனந்தபுரம் - தென்மலை நெடுஞ்சாலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சென்றபோது, பிளாஸ்டிக் கவரில் ஏதோ ஒரு பொருள் கீழே கிடப்பதை நேற்று மாலை 3 மணியளவில் பார்த்திருக்கிறார்கள்.

07:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க விகடன்

வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது.

06:55:01 on 23 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிப்.25ஆம் தேதி ட்ரம்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

06:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் லேசான வன்முறை வெடித்தது. சட்டத்தை எதிர்ப்போர் மற்றும் ஆதரிப்பவர்கள் என இரு பிரிவினராக மோதிக்கொண்டனர். போலீசார் மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து போலீசார் லேசான தடியடியும், கண்ணீர் புகையும் வீசி கூட்டத்தினரை கலைத்தனர்.

06:21:05 on 23 Feb

மேலும் வாசிக்க தினமலர்

வெளிநாட்டு மதுபான வகைகளை ஆன்லைன் முறையில் வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு ஏற்படுத்தியுள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கான மத்தியப்பிரதேச அரசின் புதிய கலால் கொள்கையின் கீழ், ஆன்லைனில் மதுபானம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

05:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க தினமணி

திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இதில் திரிஷா கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து, விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று திரிஷாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

05:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அருண் மிஷ்ராவின் கருத்து இந்தாண்டின் மிக சிறந்த நகைச்சுவை எனவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சாவந்த் தெரிவித்துள்ளார்.

04:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மேலும் வாசிக்க