View in the JustOut app
X

பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஜெகதீஷ் தக்கார். மூத்த பத்திரிகையாளரான இவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

11:55:06 on 10 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக பல ஆய்வறிக்கைகளின் மூலமாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ‘ப்யூர் ஹிமாலயன் ஏர்’ எனப்படும் நிறுவனம், தூய்மையான காற்றை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.

11:49:56 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதிக்குள் மெரினாவை சுத்தப்படுத்துவது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

11:39:04 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெறும் விசாரணையில் வைகோ கடும் வாதம் செய்து வருகிறார். மேலும், தன்னை வாதம் செய்யவிடாமல் தீர்ப்பாயம் அவமதித்ததாக நீதிபதி கோயலிடம் வைகோ புகார் அளித்துள்ளார்.

11:33:55 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் சரிவுடன் தொடங்கியது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி அடைந்தது. வெள்ளிக்கிழமை அன்று ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் 80 காசுகளாக இருந்தது. இன்று ரூபாயின் மதிப்பு 61 காசுகள் வீழ்ச்சி அடைந்தது.

11:15:02 on 10 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

11:09:14 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

7 பேர் விடுதலைக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு எதிராக மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அப்பாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ரிட் மனு காலாவதியாகிவிட்டதாக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10:55:02 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அடிலெய்ட் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

10:47:51 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெண்களின் பாதுகாப்பிற்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். பாலியல் தொல்லை, வரதட்சனை கொடுமை ஆகிய புகார்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10:40:01 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமமுகவுடன் அதிமுக இணைய வேண்டும் என தங்கதமிழ்ச்செல்வன் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘காளானுடன் இமயமலை இணைய முடியுமா? பந்திக்கு கூப்பிடாத நிலையில் வாழை இலை ஓட்டை என்கிறார் தங்கதமிழ்ச்செல்வன்,’ என கூறினார்.

10:37:59 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தனது மனைவி கடத்தப்பட்டதாக சென்னை சிஎம்பிடி போலீசில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவியை கடத்தி ஊட்டியில் 11 பேர் சிறை வைத்துள்ளதாக பவர் ஸ்டார் சீனிவாசன் புகார் அளித்துள்ளார்.

10:26:21 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தோப்பூரில் கேபிஎன் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர். மதுரையில் இருந்து பெங்களூரு சென்ற பேருந்து தோப்பூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே தீப்பிடித்தது. இன்ஜினில் ஏற்பட்ட தீயால் சொகுசுப்பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது; பயணிகள் காயமின்றி தப்பினர்.

10:15:02 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

குமரி, பளுகல் அருகே பரமுபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் காவலர் மீது தாக்குதல் நிகழ்ந்தது. மர்ம நபர்கள் கல்வீசியதில் முதல்நிலை காவலர் அருண்குமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

09:55:02 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

வங்கக் கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு 'பேய்ட்டி' என்று பெயர் சூட்டப்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் உருவாகும் இந்த புயல் சின்னம், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு புயலாக மாறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

09:35:01 on 10 Dec

மேலும் வாசிக்க நியூஸ் J

அரியலூர் வட்டாட்சியர் அலுவலக உதவியாளரை தாக்கிய விவகாரத்தில் 3 வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கருப்பூர் சேனாதிபதி-ராயர், வெங்கனுர்- பிரபாகரன், குளமாணிக்கம் கிழக்கு-சுபாஷ், சந்திரகோபால் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

09:15:02 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி கொலை வழக்கில், மாநில அமைச்சரின் முன்னாள் உதவியாளர், 'சஸ்பெண்ட்' ஆன போலீஸ்காரர் மற்றும் பிரபல தொலைக்காட்சி நடிகை தேவோலீனா பட்டாசார்ஜி ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

08:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினமலர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'விஜய் சேதுபதியுடன் பழகிய பின்னர் தான் தெரிந்தது, அவர் சாதாரண நடிகன் இல்லை என்று. அவர் ஒரு மகா நடிகன். ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவத்தை கிடைக்க பெற்றேன்,' என்றார்.

08:35:02 on 10 Dec

மேலும் வாசிக்க EENADU

ஹூவாய் நிறுவன அதிகாரி மெங்வானை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ சீனாவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது” என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.

08:15:02 on 10 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

மக்களவை தேர்தலில், பாஜ.வை வீழ்த்துவது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகள் இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றன. இதில், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு முக்கிய கட்சித் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

07:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்கள் மட்டுமே இன்றைக்கு வியாபாரம் செய்யும் நோக்கத்தில் சந்தையை டிராக் செய்யலாம். அவர்களுமே மிகவும் குறைவான எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் வியாபாரம் செய்வதே நல்லது. ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை தற்போதைக்கு முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

07:40:02 on 10 Dec

மேலும் வாசிக்க விகடன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.92 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:25:01 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'மோடி அலை ஓய்ந்து, ராகுல் அலை வீசுகிறது,' என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் ராகுல் காந்தி பிரதமராவார் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமரிடம் பேசி மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

07:11:02 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

குளிர்காலத்தில் அரிசி, கோதுமை, பார்லி, வாழை, தக்காளி, தேங்காய், ஆப்பிள், பேரிக்காய் போன்ற உணவுகளை உண்ணுங்கள். இந்த பருவத்தில் இந்த உணவுகள் உடலுக்கு நலன் தருபவை. மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் உடலில் வாயு அதிகரிக்கும். இந்த வாயுவை நீக்க ஒரு தேக்கரண்டியளவு திரிகடுகம் சூரணத்தை பாலில் கலந்து உண்ணுஙகள்.

06:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

ஓவியக்கலையை மெருகூட்டும் விதமாக காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளியில் ஓவியத்துக்காக தனி அறையை உருவாக்கி மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட வழி செய்துள்ளார் ஓவிய ஆசிரியர் முத்துப்பாண்டியன். அழகப்பா பல்கலை துணைவேந்தர் இந்த ஓவிய அறையை திறந்து வைத்து மாணவர்களுக்கு அர்ப்பணித்தார்.

06:40:02 on 10 Dec

மேலும் வாசிக்க தினமலர்

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான கோடாக் மஹிந்ரா வங்கியும் இந்தியாவின் மிகப்பெரிய நகர்ப்புற கூட்டுறவு வங்கியான சரஸ்வத் வங்கியும், தங்களது வங்கி சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் வழங்கவுள்ளன.

06:25:01 on 10 Dec

மேலும் வாசிக்க EENADU

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி மதுபானங்களை விற்பனை செய்து வந்த தம்பதியை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கேரளாவிலிருந்து போலி மதுபானங்களை வாங்கி, போலி லேபில் தயாரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நபர்களுக்கு விநியோகம் செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

06:10:02 on 10 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நிசான் நிறுவனத்தின் புதிய ‘கிக்ஸ்’ எஸ்யுவி கார் தயாரிப்பு அதன் சென்னை தொழிற்சாலையில் துவங்கியது. ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்த ‘கிக்ஸ்’ ரக கார்களை விட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் நவீன வகையில் இருக்கும் எனவும் ஜனவரி 2019ஆம் ஆண்டு, இந்த காரின் விற்பனை அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

05:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

எகிப்தில் உலக புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி நிர்வாண படம் எடுத்த தம்பதியின் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அந்த நாட்டின் அரசு தலைமை வக்கீலுக்கு தொல்பொருள் துறை மந்திரி காலித் அல் அனானி உத்தரவிட்டுள்ளார்.

05:40:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஷாரிக் ஹாசன் தற்போது தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஷாரிக் ஹாசனுக்கு ஜோடியாக 2016ஆம் ஆண்டு மிஸ் குயின் ஆஃப் இந்தியா பட்டம் வென்ற அர்ச்சனா நடிக்கிறார்.

05:26:01 on 10 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அமெரிக்க அரசின் வேளாண் துறை மூத்த விஞ்ஞானி மேட் மூர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், பூச்சிக்கொல்லிகள் கலந்த ரசாயன கழிவுநீரை நெற்பயிர் சுத்திகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

05:10:02 on 10 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்திய மகளிர் அணிக்கான பயிற்சியாளர் போட்டியில் வெங்கடேஷ் பிரசாத், டாம் மூடி ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸும் உள்ளார். இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராவதற்கு கிப்ஸ் ஆவலாக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

04:56:02 on 10 Dec

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

தி.நகரில் பெருமுதலாளிகள் நடத்தும் துணிக்கடைகளில் வேலைசெய்வோரின் துயரத்தை படமாகிக்க இயக்குனர் வசந்தபாலன், சென்னை கண்ணகி நகர் மக்களின் கதையை ஜெயில் படத்தின் மூலம் வெளிகொண்டுவருகிறார்.

04:40:01 on 10 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னையில் உள்ள பழம்பெரும் கட்டிடங்களில் சுந்தர் மஹால் என்று அழைக்கப்படும் பிரபலமான ஜெய்பூர் மாளிகை 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மாளிகையை பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக வாங்கியுள்ளதாகவும், இதற்கான தொகையை குடும்பத்தினருக்கு கட்டிட நிறுவனம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

04:26:02 on 10 Dec

மேலும் வாசிக்க ie தமிழ்

தினந்தோறும் சாலை விபத்துகள் செய்திகளை கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கிறோம். இந்நிலையில், உலகில் ஒவ்வொரு 23 நொடிகளுக்கும் ஒருவர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

04:10:01 on 10 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா சென்சார் கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போனின் புது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா சென்சார் ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரமாக பொருத்தப்பட்டு இருப்பது தெரிகிறது. ஹூவாய் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட்டிருந்தது.

03:56:01 on 10 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பள்ளங்கி கோம்பையில் மூர்த்தி என்பவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வருகிறார் என்ற தகவல் கிடைத்து சோதனை செய்த போலீசார், அந்த விவசாய நிலங்களுக்கு இடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை கைதுச் செய்தனர்.

03:40:01 on 10 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

மலையாள படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர், அஜித்தின் ‘என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், பார்வதி நாயர் அளித்த பேட்டி ஒன்றில் “பள்ளி பருவத்தில் என்னுடைய முதல் காதல், நடிகர் அஜித் சார் மீது தான்.' என்று கூறியுள்ளார்.

03:26:01 on 10 Dec

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

சென்னை திருவல்லிகேணியில் 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்த திரிபுராவை சேர்ந்த இருவரை கைது செய்து, போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

03:10:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

சீனாவில், மிகவும் அழுக்கடைந்து காணப்பட்ட, சரக்கு கப்பல் இறக்கு தளம், பார்ப்போரை கொள்ளை கொள்ளும் விதமாக, நேர்த்தியான கலாச்சார மையமாகவும், தொழில்நுட்ப மையமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

02:56:01 on 10 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உயர் சாதி பெண்களை காதலிப்போம் என ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொங்கு பேரவை பாமக சார்பில் சேலம் சங்ககிரி காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

02:40:01 on 10 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளில் இப்போதே பிளாஸ்டிக்குகளைத் தடை செய்யவும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

02:26:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினமணி

'ரிசர்வ் வங்கிக்கு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், வலிமையான தன்னாட்சி அமைப்புகள் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. அதேசமயம், மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்கள் குழப்பத்துடன் இருப்பதால், அதை தெளிவுபடுத்த வேண்டும்,' என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

02:10:01 on 10 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் ஒன்பிளஸ், அடுத்ததாக ஸ்மார்ட் டி.வி. மாடல்களை விற்பனை செய்ய இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் ஒன்பிளஸ் டி.வி. மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்திருக்கிறார்.

01:56:01 on 10 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

"திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா தனது தொழில்முறை வாழ்க்கையை வலுப்படுத்திக்கொள்ளவே அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்டார்," என்று கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட அமெரிக்கப் பெண் எழுத்தாளர் மரியா ஸ்மித் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

01:40:01 on 10 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், 'மதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது ஆயிரம் யானைகளுக்கு சமம். தமிழக அரசு இலவச வீட்டுமனை வழங்க அரசாணை வெளியிட்டது சாகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்பதற்கு சமம்,' என்று கூறினார்.

01:26:01 on 10 Dec

மேலும் வாசிக்க EENADU

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் பனிப்பொழிவு துவங்கியது. இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் லாட்ஜ்களில் முடங்கி உள்ளனர்.

01:10:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் மும்பையில் இருந்து ஒரே விமானத்தில் உதய்பூருக்குச் சென்றுள்ளனர். மேலும், நடிகர் சல்மான்கானும் கத்ரினா கைப்பும் உதய்பூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

12:56:02 on 10 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கூகுள் நிறுவனம், மக்கள் தங்கள் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் எந்த ஒரு செய்தியையும் கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் காதுகளினால் கேட்கும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வசதியில், அரசியல், சினிமா, விளையாட்டு என ஏதேனும் தலைப்புகளில் பயனர்கள் விருப்பத்திற்கேற்ப செய்திகளை கேட்கலாம்.

12:40:01 on 10 Dec

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

மிதுன் மனுவேல் தாமஸ் இயக்கும் படம் ‘அர்ஜெண்டினா ஃபேன்ஸ் காட்டூர்கதவு’. இப்படத்தில் விபினன் என்ற கதாபாத்திரத்தில் காளிதாஸும் மெஹருனிஸா என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர். இவர்களது நட்பும் கால்பந்து விளையாட்டு மேல் கொண்ட காதலும் திரைக்கதையின் மையமாக உள்ளது.

12:26:01 on 10 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கன்னியாகுமரியில், 5½ ஏக்கர் பரப்பில் 22½ கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தனி அதிகாரி மற்றும் 8 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கோவிலில், அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:10:02 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற, கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இயல்பாகவே தன்னிடம் தீண்டாமைக்கு எதிரான உணர்வு இருப்பதாகவும், ஜாதிய உணர்வு முற்றாக கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

11:56:02 on 09 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அம்பேத்கர் படத்தின் முன்பு பெண்களைக் கொச்சைபடுத்தும் வகையில் பேசிய நபர் விசிகவைச் சேர்ந்தவர் அல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், ’திட்டமிட்டு விசிக மீது அவதூறு பரப்பும் பாமகவினர் மற்றும் எச்.ராஜா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

11:40:01 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

தமிழ்நாட்டில் 1.5 லட்சம் நெசவாளர்கள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்களுக்கு 2019-20ஆம் நிதியாண்டில் திறன் பயிற்சி வழங்கவுள்ளதாக ஜவுளித் துறை திறன் கவுன்சிலின் தலைவர் டி.ராஜ்குமார் கூறியுள்ளார்.

11:26:01 on 09 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், தல கூட நடி தல என்று ரசிகர்கள் ஆரவாரக்குரலில் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ’சான்ஸ் கொடுத்தா சந்தோஷம்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிலுக்கு அரங்கம் அதிர்ந்தது.

11:10:02 on 09 Dec

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.289 விலையில் புது சலுகையை அறிவித்துள்ளது. 48 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புது சலுகை அதிகளவு வாய்ஸ் மேற்கொள்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.289 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது.

10:56:01 on 09 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலூர் அருகே காட்பாடியில் வீட்டில் இருந்த பெண்களை கட்டிப்போட்டு 75 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த நளினி, தாய் இந்திராணி ஆகியோரைக் கட்டிப்போட்டு கொள்ளையர்கள் துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

10:40:02 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் தர்மபுரி மாவட்டக் கிளையில் காலியாக உள்ள, ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், டெக்னீஷியன் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10:26:02 on 09 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தற்போது நடிகர் ரஜினிகாந்தின் கைவசம் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என இரண்டு படங்கள் உள்ளன. இந்தப் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

10:10:02 on 09 Dec

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க தின மலர்

நெல்லையில் சிறுவர் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்கள் ஜன்னலை உடைத்துக் காப்பகத்தில் இருந்து தப்பிய 7 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தப்பியோடிய 7 சிறுவர்களும் குழந்தைத் தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:40:02 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

இரஞ்சித் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, டென்மா இசையமைக்கிறார்.

09:25:01 on 09 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குக்கிராமம் ஒன்றில் 6 ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகமான மாணவர் சேர்க்கையைப் பெற்று, பல்வேறு விருதுகளையும் குவித்தவாறு அமைதியாக இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

09:10:02 on 09 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஷ்மீரின் முஜ்குந்த் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

08:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க தின மலர்

’அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை’ என தங்க.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். புதிய தலைமையை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது எனவும் பாஜகவுடன் அ.ம.மு.க. கூட்டணி கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ’எடப்பாடி பழனிச்சாமி திருந்தி எங்களுடன் வந்து சேர வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

08:40:01 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

மறைந்த விவசாய வித்தகர் நெல் ஜெயராமனுக்கு மத்திய அரசின் பத்ம விருது வழங்கப்பட வேண்டும் என்று விவசாய அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இக்கூட்டமைப்பின் செயலாளரும், தமிழக கள் இயக்கத்தின் தலைவருமான அறச்சலூர் நல்லசாமி இந்தக் கோரிக்கையை முன்னெடுத்திருக்கிறார்.

08:25:01 on 09 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமமுக கொள்கை பரப்புச்செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், 'அதிமுக - அமமுக பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக எளிதில் வெற்றிபெற வழிவகை செய்துவிடக்கூடாது,' என கூறியுள்ளார்.

08:22:01 on 09 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் தொடர்பான விளம்பரங்களைப் பதிவிட விரும்புவோர் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

08:10:01 on 09 Dec

மேலும் வாசிக்க EENADU

குளிர்காலத்தில் அரிசி, கோதுமை, பார்லி, வாழை, தக்காளி, தேங்காய், ஆப்பிள், பேரிக்காய் உண்ணுங்கள். இந்தப் பருவத்தில் இந்த உணவுகள் உடலுக்கு நலன் தருபவை. மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் உடலில் வாயு அதிகரிக்கும். இந்த வாயுவை நீக்க ஒரு தேக்கரண்டியளவு திரிகடுகம் சூரணத்தைப் பாலில் கலந்து உண்ணுங்கள்.

07:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் நாளை பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர். முன்னதாக, வங்கிகளில் வாங்கிய கடனை மட்டும் திருப்பி அளிப்பதாக விஜய் மல்லையா கூறியிருந்தார்.

07:40:01 on 09 Dec

மேலும் வாசிக்க தினமலர்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31ஆவது கூட்டம் டிசம்பர் 22ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீஃபண்ட் செயல்பாடுகளை முழுமையாக ஆன்லைன் மயமாக்குவது குறித்த பரிந்துரைகளையும் நேரடி வரிகள் மற்றும் சுங்க வரிகளுக்கான மத்திய வாரியம் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளது.

07:25:02 on 09 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

’ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதியைத் தருமாறு மத்திய அரசு நிர்பந்திப்பது அதன் மீது தாக்குதல் நடத்துவதைப் போன்றது’ என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

07:10:03 on 09 Dec

மேலும் வாசிக்க EENADU

மெர்சல் படத்தில், விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்த கனடாவைச் சேர்ந்த பிரபல மேஜிஷியன் ராமன் ஷர்மா, தனக்கு இன்னும் ரூ.4 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும், அதை கொடுக்க ‘தேனாண்டாள்' நிறுவனம் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

06:55:02 on 09 Dec

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் தனியார் ஆசிரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யோகா பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து தியானம் செய்தார்.

06:35:01 on 09 Dec

மேலும் வாசிக்க EENADU

திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போதும் நாட்டு ஒற்றுமையை பலப்படுத்தும் என ஸ்டாலின் கூறியுள்ளார். அனைவரும் உள்ளடக்கிய நாட்டு ஒற்றுமைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி பாடுபடும் என டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து ட்விட்டரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

06:15:01 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

கேரளாவின் முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

06:04:17 on 09 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

வந்தவாசி அருகே 380 டன் எடைகொண்ட பெருமாள் சிலையை ஏற்றிய லாரி தார் சாலைக்கு வந்தது. பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மண்சாலையில் இருந்து தார் சாலைக்கு வாகனம் வந்து சேர்ந்தது. பெங்களூரு அருகே கட்டப்படும் கோயிலில் வைக்க பிரம்மாண்ட இந்த சிலை கொண்டு செல்லப்படுகிறது.

05:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

2008ஆம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் என்று பாகிஸ்தான் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் மும்பை தாக்குதலை நடத்தியது லஷ்கர் இ-தொய்பாதான் என்பதை ஒப்புக்கொண்டு உள்ளார்.

05:35:02 on 09 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னை விவசாயி பாண்டி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கஜா புயலால் தென்னை மரங்கள் சேதமடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முக்கரை கிராமத்தை சேர்ந்த பாண்டி 3 நாட்களுக்கு முன் மாயமான நிலையில் தற்போது சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

05:15:02 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

'கௌசல்யா மறுமணம் செய்து கொண்டது பாராட்டுக்குரியது,' என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மேலும், ஆணவக்கொலைக்கு எதிராக போராடுவோம் என கௌசல்யா-சக்தி தம்பதி கூறியது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

05:11:58 on 09 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதிப்பது சரியானதல்ல,' என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் கூறியுள்ளார். மேலும், 'ஆளுநரின் காலதாமதம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்,' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

04:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி பொங்களுக்கு ரிலீசாக தயாராக உள்ள பேட்ட படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். போஸ்டருடன், திரிஷாவின் பெயர் 'சரோ' என்றும் வெளியாகியுள்ளது.

04:35:01 on 09 Dec

மேலும் வாசிக்க ie தமிழ்

ஆந்திர முன்னாள் எம்.பி சீனிவாச ரெட்டியின் சென்னையில் உள்ள நிறுவனங்களில் 3ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாப்பூரில் உள்ள விடுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வருமான வரி சோதனையில் 7 கிலோ தங்கம், 11 கோடி ஹவாலா பணம் சிக்கியது.

04:15:02 on 09 Dec

மேலும் வாசிக்க நியூஸ் J

பிரான்சில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க 300 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 89 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

03:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர். கடலில் மூழ்கிய 3 பேரில் மீட்கப்பட்ட தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும், கடலில் மூழ்கிய பரத், ஜெய்கீர்த்தி என்ற இரண்டு மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

03:53:53 on 09 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் மெட்ரோ ரயில் பாதையின் இரண்டாம் தடம் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்கான நிலங்கள் கையகப்படுத்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள 90 வருட பழமையான தனியார் பள்ளியின் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

03:35:01 on 09 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மராட்டிய மாநிலம் அம்பெர்நாத்தில் உள்ள நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரியும், குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கலந்துக் கொண்டார். அப்போது மர்மநபர் அவரை தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

03:15:02 on 09 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

டெல்லியில் திமுக அலுவலகம் கட்டப்பட உள்ள இடத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மின்தோ என்ற இடத்தில் கட்சி அலுவலகம் கட்ட திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்த பின் கட்சி அலுவலக இடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

02:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'மேகதாது அணையால் தமிழகத்திற்கே பலன் கிடைக்கும்,' என கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக - கர்நாடக மக்கள் சகோதரர்கள் என தெரிவித்தார்.

02:35:01 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

'தி.மு.க.தான் முதல் எதிரி, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார்,' என்று தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், 'தமிழக அரசு உள்ளாட்சி, இடைத்தேர்தலை நடத்தாமல் உள்ளது. எனினும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.' என அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறினார்.

02:15:01 on 09 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.

01:56:01 on 09 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். இதன் மூலம், இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு கிடைத்துள்ளது.

01:35:02 on 09 Dec

மேலும் வாசிக்க தின மலர்

சென்னையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பினார். கடந்த 6ஆம் தேதி முதல் பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என அவரது மகள் போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

01:15:02 on 09 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாதி மறுப்பு மறுமணத்துக்குப் பின் பேசிய கவுசல்யா, ’சாதி ஒழிப்புக் களத்தில் நானும் சக்தியும் தொடர்ந்து இயங்குவோம்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், ’ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர தொடர்ந்து போராடுவோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

12:58:18 on 09 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தாயின் நினைவு நாளில் திதி கொடுக்க அதிகாரி விடுமுறை அளிக்கவில்லை எனக்கூறி மின்வாரிய ஊழியர் தனபால் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌவுசல்யா, நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்னன் தலைமையில் நடைபெற்றது.

12:35:02 on 09 Dec

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

உ.பி., காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபரான ராணுவ வீரர் உ.பி., காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீதேந்திர மாலிக் என்ற அந்த ராணுவ வீரரை, கடந்த 36 மணி நேரமாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ராணுவத்தால் ஜீதேந்தர் உ.பி. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

12:15:01 on 09 Dec

மேலும் வாசிக்க NDTV தமிழ்

டெல்லியில் சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள சோனியா இல்லத்தில் அவருக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு வருமாறு ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்தார்.

11:55:02 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

’தன் வாழ்நாள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக செயல்பட்டவர் அம்பேத்கர்’ என இயக்குநர் ரஞ்சித் கூறியிருந்தார். இதுகுறித்துப் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டரில், ’இவருக்கு ஆர்.எஸ்.எஸ்-ஸும் தெரியாது. அம்பேத்கர் அவர்களையும் தெரியாது. பாவம் மக்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

11:35:01 on 09 Dec

மேலும் வாசிக்க EENADU

இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம். ஆசியாவிலேயே ஊழல் மிகுந்த நாடு, இந்தியா. நம் மக்கள் தொகையில் ஏறத்தாழ 54% பேர், ஏதோ ஓர் இடத்தில் லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஏறத்தாழ 38% நிலம் விற்பனையாவதில் ஏதோ ஒரு வகையில் லஞ்சம் கைமாற்றப்படுகிறது.

11:15:01 on 09 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதியளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில், நிஜாமுதீன் தர்காவில் பெண்களை அனுமதிக்கக் கோரி புனேயைச் சேர்ந்த சட்டத்துறை மாணவர்களின் மகளிர் அமைப்பு பொதுநல மனுதாக்கல் செய்துள்ளது.

10:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மேலும் வாசிக்க