View in the JustOut app
X

கடந்த ஏப்ரல் மாதம் வரை சிலிண்டர் முன்பதிவு செய்து ரூ.782 பணம் செலுத்தி பெற்றவர்களின் வங்கிக் கணக்குக்கு மானியத் தொகை கிடைக்கப்பெற்றது. அதேநேரத்தில் மே மாதம் பதிவுசெய்து, ரூ.584.5 பைசா செலுத்திய சிலிண்டர் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை சென்றடையவில்லை.

06:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,012 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது.

06:54:39 on 03 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் முதல் விநியோகிக்கப்படும் என்றும், மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

06:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க Asiavillenews

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

06:02:00 on 03 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகத்தின் பதவிக்காலத்தை மூன்று மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 46வது தலைமைச் செயலாளராக இருந்த க.சண்முகம், வருகின்ற ஜூலை மாத இறுதியில் பதவி முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

05:30:01 on 03 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யக்கோரி பல முறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து இளையராஜா என்பவர், டிரான்ஸ்பார்மரில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துகொண்டு போராட்டம் நடத்தினார்.

04:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

04:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார். அதில் ”நான் கமலுக்கு ஒரு கதை ரெடி செய்தேன். பின் படம் ட்ராப் ஆனது. அந்த கதை விஜய்க்கு செட் ஆகும் என நினைக்கிறேன். அந்த படம் பௌத்தம் குறித்த ஒரு படம், செம்ம ஆக்‌ஷன் ப்ளாக் அதில் இருக்கும்” என்றார்.

03:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் கங்கன் பகுதியில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

03:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினமணி

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் என்பது ஒரு மாயை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார். மேலும் அவர், ”ஏற்கனவே ஒவ்வொரு அக்கவுண்டிலும் பணம் போடுவதாக தெரிவித்திருந்தார், நடந்ததா? அதுபோன்ற மாயை தான் ரூ.20 லட்சம் கோடி திட்டமும்.” என விமர்சித்துள்ளார்.

02:57:02 on 03 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு இருக்கும் மத்திய அரசின் தொடர்பைப் பயன்படுத்தி Zee5 நிறுவன உரிமையாளர்களையும் அச்சுறுத்தி காட்மேன் தொடரை வரவிடாமல் செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெற்றிக்களிப்புடன் பதிவிட்டு வருகிறார்கள்.

02:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், ராயப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கிண்டி அருகே, எதிர்பாராத விதமாக மாஞ்சா நூல் ஒன்று பறந்து வந்து அவரது கழுத்தை அறுத்துள்ளது.

01:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து கிடந்தது. இது தொடர்பான விசாரணையில், காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ வெடி பொருட்கள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர். அந்த யானை, பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடித்துள்ளது.

01:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்மில் நிரப்ப எடுத்துச் சென்ற பணத்தை இயந்திரங்களில் நிரப்பாமல், 78 லட்சம் ரூபாய் அளவுக்கு, சிறுக சிறுக கையாடல் செய்து, ஆன்லைனில் ரம்மி விளையாடி பறிகொடுத்த பணம் நிரப்பும் ஊழியர்கள் 2 பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

12:55:01 on 03 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாளவிகா தேவதி என்பவர், தனது கணவருடன் சேர்ந்து, திருமண இணையதளம் ஒன்றில் பல்வேறு புனைப்பெயர்களில் போலியான பக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் மோசடி செய்துள்ளார். இந்நிலையில், மாளவிகாவிடம் ரூ.1.02 கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாகக் கூறி ஒருவர் அளித்த புகாரில் மாளவிகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

12:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,921 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 2,007 திரு.வி.க.நகரில் 1,711 பேருக்கும், தேனாம்பேட்டையில் 1871 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

11:57:02 on 03 Jun

மேலும் வாசிக்க தினகரன்

இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு" என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

11:25:01 on 03 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவில் கருப்பின நபரின் மரணத்தில் ஆங்காங்கே போராட்டம் வெடித்து வரும் நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் முன்பு மண்டியிட்டது மட்டுமின்றி, அவர்களை அரவணைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

10:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

வீடு திரும்பும் தொழிலாளர்களால், எதிர்பாராத கர்ப்பங்கள் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை, பீஹார் அரசு துவக்கி உள்ளது. முகாம்களில் இருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, தலா இரண்டு, 'பாக்கெட்' ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

10:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினமலர்

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 97வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், திமுக தொண்டர் அசோக்குமார் - மகாலட்சுமி திருமணத்தை நடத்தி வைத்தும் புதிய தம்பதிக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

09:57:02 on 03 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டம் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள ஹரிகேஸ்வர் பகுதிகளுக்கு இடையே இன்று நண்பகல் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/ என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

08:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 11 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.10,999; 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் வயலட் வண்ணங்களில் விற்பனைக்கு வருகின்றன. எம் 01 3 ஜிபி ரேம், 32 ஜிபியின் விலை ரூ.8,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தரையில் கால்களை அகட்டி நின்று கொள்ளவும். இரண்டு கால்களுக்கு நடுவே கெட்டில் பெல்லை வைக்கவும். பின்னர் மெதுவாக குனிந்து இடுப்பை பின்னோக்கி தூக்கியவாறு அடிவயிறை உள்ளிழுத்துக் கொண்டு கெட்டில்பெல்லின் பிடிகளை பிடித்து நிற்கவும். இடுப்பிலிருந்து முதுகுவரை தட்டையாக இருக்க வேண்டும்.

06:55:01 on 03 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

05:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில், "நான் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக பரவும் செய்தி போலியானது. அந்த படத்தில் நடிக்கும்படி இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை" எனக் கூறி உள்ளார். இதன்முலம் சிம்ரன் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

10:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

தெய்வமகள் சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறார் அண்ணியார். அந்த வகையில், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டும் ட்ரான்ஸ்பரண்ட் உடையிலும் போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

09:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க Behind Talkies

ஆசியாவில் இதுவரை நடந்த மிக விலை உயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது சீன தம்பதியின் விவாகரத்து. இந்த விவகாரத்தால், உலகிலேயே மிகப் பணக்கார கோடீஸ்வரிகளில் ஒருவராக இடம்பெற்றுள்ளார் சீனப் பெண்மணி. இந்த விவாகரத்தின் மூலம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார். ரூ.24 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.

08:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

08:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினமணி

”அமெரிக்க அதிபர் அவர்களே, என்னை ஒன்று மட்டும் சொல்ல விடுங்கள். முன்னேற்றங்களை ஏற்படுத்தும் விதமான கருத்துக்கள் எதையும் உங்களால் கூற முடியவில்லை என்றால், எதுவும் பேசாமல் வாயை மூடுங்கள்” என ஹூஸ்டன் நகர காவல்துறை தலைமை அதிகாரி ஆர்ட் தெரிவித்துள்ளார்.

07:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சதுரங்க விளையாட்டில் வல்லவரான அமித் ஷா எப்போதுமே தனது போட்டியாளர்களை வியூகம் வகுத்து வென்று மகிழ்கிறார். அமித் ஷாவின் செயல்படும் பாணியே அவரை பிற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

07:25:01 on 02 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,586-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 809 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

07:16:24 on 02 Jun

மேலும் வாசிக்க தினகரன்

நாடு முழுவதும் மின் விநியோகத்தையும், கட்டணம் வசூலிப்பதையும் மாநில அரசுகளிடமிருந்து பறித்து தனியாரிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட மசோதாவுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மின்வாரிய தொழிலாளர்களும், விவசாயிகளும் பல வகையில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

06:27:02 on 02 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

திமுக பொதுச் செயலாளரைச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கலாம் என்பதே இப்போதைய முடிவு. இது துரைமுருகனுக்குத் தெரியவர கடுமையான அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள். துரைமுருகனின் அதிருப்தி என்றேனும் வெடிக்கலாம் என்ற எச்சரிக்கைத் தகவல் ஸ்டாலினுக்கும் சில சீனியர்கள் மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

05:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நிறவெறி காரணமாக கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் பரிதாபமாக கொல்லப்பட்டதை எதிர்த்து சமூக வலைதள நிறுவனங்கள் கருப்பு நிறத்தில் லோகோவை மாற்றியுள்ளன. கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக #BlackLivesMatter, #USAonFire என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

05:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ஏற்கனவே கரோனாவினால் உலக நாடுகள் திக்குமுக்காடி வரும் நிலையில் காங்கோவில் புதிய எபோலா வைரஸ் தொற்றுக்கள் வங்கத்தா மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையத்து அங்கு பீதி நிலவி வருகிறது. இதுவரை 6 பேருக்கு எபோலா கண்டுப்பிடிக்கப்பட்டதில் 4 பேர் மரணமடைந்துள்ளனர். 2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

04:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டிக்டாக்கில் வாள்வீசும் வம்சம் என வீடியோ பதிவிட்ட கமுதி மாணவர் ஒருவர், வாளால் பிறந்தநாள் கேக் வெட்டியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் கேக் வாங்கி தின்பதற்காக கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தியவர்களையும் போலீசார் கொத்தாக தூக்கிச்சென்றனர்.

04:55:01 on 02 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன். பொறியியல் பட்டதாரி. வங்கியில் கடன் உதவி பெற்று, பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் கல்வி கடனை திரும்ப செலுத்தகோரி வங்கி தரப்பில் இருந்து தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

04:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி காவல் நிலையத்திகு உட்பட்ட அல்லிகுண்டம் கிராமத்தில், 65 வயது மதிக்கத்தக்க அய்யக்காள் என்ற மூதாட்டி வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

03:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

''அமெரிக்காவில் இப்போது நடப்பது அமைதியான போராட்டம் அல்ல. இவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும், கடவுளுக்கு எதிரான குற்றமாகும்,'' என டிரம்ப் கூறியுள்ளார்.

03:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நம் தமிழ் சினிமாவில் தற்போது சிறந்து விளங்கி வரும் முன்னணி இயக்குனர்களான ஷங்கர் 46 கோடி ரூபாயும், ஏஆர் முருகதாஸ் 25 கோடி ரூபாயும், அட்லீ 20 கோடி ரூபாயும், மணிரத்னம் 10 கோடி ரூபாயும், செல்வராகவன் 7 கோடி ரூபாயும், பா.ரஞ்சித் 4 கோடி ரூபாயும், கார்த்திக் சுப்புராஜ் 5 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

02:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திரையரங்கில் தான் முதலில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அமேசான், நெட்நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்கள் மாஸ்டர் படத்தை வாங்க பெருந்தொகை அளிக்க முன் வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை விஜய் மறுத்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

01:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரித்துள்ளது.

01:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

புதுக்கோட்டை அருகே கந்தர்வக்கோட்டையில் 13 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு, சிறுமியை பன்னீர்செல்வம் நரபலி கொடுத்தது தெரியவந்துள்ளது.

12:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினமலர்

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா 1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேற்கத்திய இசைக் கருவிகளை கொண்டு அவர் மெட்டமைத்த பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் இசைத்தன. இளையராஜா பாடல்கள் பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களுடன், இன்றும் இரண்டற கலந்துள்ளன.

12:25:01 on 02 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதல் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரனை நியமித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார். இயக்குநர் நியமனத்துக்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

11:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினமலர்

திருப்பூர் - அவினாசி சாலை, குமார் நகரிலுள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் தடையை மீறி ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், தடையை மீறி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

11:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா அரசை, கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு வந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

10:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினமலர்

கொரோனா தடுப்பு தொடர்பாக 25.3.2020 முதல் பொது பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஜூன் 1-ந்தேதி முதல் 50 சதவீத பொது பஸ் சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில், மதுரை மண்டலத்துக்குட்பட்ட அரசு பேருந்துகளில் மார்ச் மாத பஸ் பாஸை ஜூன் 15 வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10:27:02 on 02 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்திய இராணுவமும் சீன இராணுவமும் பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கிழக்கு லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகிலுள்ள தங்களது பகுதியில் குவித்து வருகின்றன. இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

09:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

09:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சலூன்கள், அழகு நிலையம், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, செல்போன், ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:00:23 on 02 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழில் ரீமேக்காகும் இப்படத்தில் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

08:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.drbtvmalai.net/notification.php?id=201 என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

07:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பதற்றத்தை ஒரு கோளாறின் அறிகுறியாக ஏற்றுக்கொள்ளுங்கள், வேண்டுமென்றே நிகழ்ந்த நிகழ்வு அல்ல. யாரும் கவலைப்படுவதை விரும்புவதில்லை, ஆனால் அது கவலை மற்றும் உடனடி உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகள் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால், அதைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும்.

06:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மாம்பழம் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பதை மிகச் சிலருக்குத் தெரியும். உண்மையில், மா பழத்தின் சாறில் கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், டெர்பெனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இந்த எல்லா நன்மைகளாலும், மாம்பழம் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

05:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய உள்ளது. 43 இன்ச் கொண்ட இந்த டிவி ஜூன் 4-ம் தேதி பிளிப் கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 31,000 - 34,000 ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

10:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க Asiavillenews

ஆண்கள் உடல் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதித்து, சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள் கோபம், மனக்குறைகளுக்கு செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. எவ்வளவு வேலை இருந்தாலும் செக்ஸுக்கான நேரத்தை தம்பதியர் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

09:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகை கிரண் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போஸ்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் வின்னர் படத்தில் வருவது போல மீண்டும் பிகினி உடையில் போஸ் கொடுப்பேன் என்று உறுதி செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

08:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க Behind Talkies

மே 21ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பரவல் இருக்காது என குஜராத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான பேஜன் தருவாலா கூறியிருந்தார். இந்நிலையில், கொரோனா தொற்றால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

08:27:01 on 01 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

வீட்டில் வேலை பார்த்து வந்த வட மாநில இளம் பெண் ஒருவரை மர்ம நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதுடன் காரில் கொண்டு வந்து தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியில் வீசி விட்டுச் சென்றதாக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

07:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க விகடன்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் அரசுப்பணி வாங்கித் தருவதாக ரூ.15,00,000 லட்சம் மோசடி செய்த போலி ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்கள் பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா எனவும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

07:25:02 on 01 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது.

07:19:26 on 01 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரதமர் பாராட்டிய முடிதிருத்தும் தொழிலாளி மோகன், தான் பாஜகவில் சேரவில்லை என்றும், வாழ்த்து அட்டை என நினைத்து பாஜக உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானதால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

06:55:01 on 01 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நாட்டில் உளவு பார்த்ததற்காக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணிபுரியும் அபீத் உசேன், தாஹிர்கான் ஆகியோரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது.

06:28:18 on 01 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திருச்செந்தூர் அருகே குரும்பூர் யோகரத்தினம் நகரில் வசித்து வரும் தூசி முத்து(18) மற்றும் அவரது உறவினரான அஜித்குமார் (22). ஆகிய இருவரும் வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் குடும்பத்தினரிடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் வேதனையடைந்த இருவரும் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.

06:22:54 on 01 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.

06:17:05 on 01 Jun

மேலும் வாசிக்க தினமலர்

கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ. 11.50 முதல் 37 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 37 ரூபாய் அதிகரித்து 606.50 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனையாகிறது.

06:10:08 on 01 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மதுரை பெத்தானியபுரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பெண், ரேசன் கடையில் அரிசி குறைவதாக வழங்குவதாக புகார் தெரிவித்தார். இதனையடுத்து அந்த குறிபிட்ட ரேசன் கடைக்கு அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தி, அந்த ஊழியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

06:08:21 on 01 Jun

மேலும் வாசிக்க தினமணி

திண்டுக்கல் அருகே ஆத்தூர் பிரிவு பகுதியில் உள்ள தோட்டத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக செம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அப்போது தோட்டத்தில் சூதாடிய கும்பலை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.16 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

06:02:15 on 01 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

05:51:57 on 01 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீரில் இந்தியா எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவத்தினர் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நவுசரா எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

05:47:29 on 01 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

கொரோனாவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வரின் உருவப்பொம்மை எரித்தவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமியின் உருவப்பொம்மை எரித்த, தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த ராகு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

05:41:02 on 01 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

05:36:49 on 01 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை, காஞ்சி, வேலூர், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, நெல்லை, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

05:27:08 on 01 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விக்ரம் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. 'சீயான் 60'- ஐ இயக்குவதற்கு கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நடிகருக்கு நெருக்கமான நம்பகமான வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

05:27:02 on 01 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உலக சுகாதார அமைப்பின் கொரோனா டிராக்கரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் வழக்குகளின் பாதிப்புகளின் அடிப்படையில் 1,82,143 எண்ணிக்கையுடன் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.

04:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலணி பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்மநபர், காவலாளியிடம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய காவலாளியும் அவரை ஏடிஎம் மையத்திற்குள் அனுமதித்து உள்ளார். இதையடுத்து உள்ளே சென்ற மர்மநபர், சாவி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்து உள்ளார்.

04:27:01 on 01 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிங்கமுத்து, வடிவேலு தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் வடிவேலு.

03:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

''இன்றய சூழலில் தொலைக்காட்சித்தொடரில் 10 வயதுக்குள், 60 வயதுக்கு மேல் பணியாற்ற கூடாது என அரசின் அறிவிப்பு வந்துள்ளதா?” என எஸ்வி சேகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை குஷ்பூ, ''ஐயா, நீங்கள் இதில் எந்த வகை வயதினருக்குள்ளும் பொருந்தவில்லை. எனவே நீங்கள் ஓய்வெடுக்கலாம்'' என பதிலளித்துள்ளார்.

03:27:01 on 01 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டு இருப்பதால், திருமணம் செய்து கொள்ளாமல் சில நடிகைகள் இருப்பார்கள். மற்றும் சிலர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள். அந்த வகையில், எஸ்.ஜெ.சூர்யா (51), விஷால் (42), சிம்பு (37), திரிஷா (37), நயன்தாரா (35) திருமணம் ஆகாதவர்கள்.

02:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்தலாபுரம் கிராமத்தில் வசிக்கும் 7 வயது சிறுவன் மற்றும் அவனின் சகோதரி 3 வயது குழந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவரையும், கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

02:27:01 on 01 Jun

மேலும் வாசிக்க விகடன்

சூடான பைக் மீது சானிடைசர் தெளிக்கும் போது ஏற்படும் தீவிபத்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. எனினும் சானிடைசர் தெளிக்கும்போது கவனம் தேவை என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

01:55:01 on 01 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமையகத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது. அலுவலகத்தல் சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது.

01:27:01 on 01 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

சீனாவுடனான சமரச முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால், ராணுவ வீரர்களும், இந்தோ - திபெத் எல்லைக்காவல் படையினரும் லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

12:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த ரோசின் சுல்தானாவின் ஆண் குழந்தையைக் கடத்திச் சென்ற, தேவாங்கர் நகரைச் சேர்ந்த நஹினா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனக்கு குழந்தை பிறந்ததாக காதலனை நம்ப வைப்பதற்காக அவர் குழந்தையைக் கடத்தியது தெரிய வந்தது.

12:27:01 on 01 Jun

மேலும் வாசிக்க விகடன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்தத் துறை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதிய நிதியமைச்சராக கே.வி.காமத் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி, இந்தியா முழுதும் அரசியல் வட்டாரங்களில் இதுவே பேச்சாக இருக்கிறது. கே.வி.காமத், மூத்த வங்கியாளர் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.

11:57:02 on 01 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள பள்ளபாளையத்தைச் சோந்தவா் சுரேஷ் (34). இவா், அதே பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர், அந்த வாகனத்தை தனியார் பார்சல் நிறுவனம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளார்.

11:27:01 on 01 Jun

மேலும் வாசிக்க தினமணி

பிரதமர் மோடி நேற்றைய 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பேசும்போது, மதுரை மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் ஊரடங்கு நேரத்தில் ஏழைகளுக்கு உதவியுள்ளதாகவும், எனவே தான் அதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாஜகவில் இணைந்தனர்.

10:57:02 on 01 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை முக்கியமான 25 நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளதுடன், போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் என ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

10:27:01 on 01 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

லடாக் எல்லையோரம், இந்திய சீன ராணுவத்திற்கு இடையில் மோதல்கள் ஏற்படுவது போல் வெளியான, 'வீடியோ'விற்கு, இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதில், சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோ, உண்மையானது அல்ல என்றும், தற்போது, லடாக் பகுதியில் எந்த மோதலும் நடக்கவில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

09:57:02 on 01 Jun

மேலும் வாசிக்க தினமலர்

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

09:23:32 on 01 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடியில் மூன்று மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். சுழற்சி அடிப்படையில் 240 விசைப்படகுகளில் 120 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

09:17:00 on 01 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,386 கனஅடியில் இருந்து 4,159 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 101.05 அடியாகவும், நீர் இருப்பு 66.20 டிஎம்சியாகவும் இருக்கிறது.

09:15:06 on 01 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதால் முடி திருத்தும் கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

09:13:50 on 01 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் தொடங்கின. பேருந்துகளில், மொத்த இருக்கைகளில், 60% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுத்துறை ஆகிய ஊர்களுக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

09:04:03 on 01 Jun

மேலும் வாசிக்க தினகரன்

“நாம் இறந்தபிறகு ஆன்மா எங்கு செல்கிறது? நம்மைச் சுற்றி ஏன் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன இப்படி நமக்குள் பலவிதமான கேள்விகள் வரும், அப்படி தோன்றிய சமயத்தில் குர்ஆனை எடுத்து ஓதும்போது அதற்கான விடைகள் எனக்கு நேரடியாக கிடைத்தது போல இருந்தது.” என யுவன் சங்கர்ராஜா தெரிவித்துள்ளார்.

08:57:02 on 01 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

காடுகளுக்குள் வாழும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படையிலேயே மற்ற மக்களுக்கு இருப்பதுபோல் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்காது. ஆகவே, அவர்களுடைய உடல்நலம் கோவிட் 19-க்குப் பாதிக்கப்படுவது எளிது. அதுமட்டுமன்றி பழங்குடியின மக்களுடைய வாழ்வாதாரமும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

07:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க விகடன்

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு http://icfre.gov.in/vacancy/vacancy352.pdf என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

06:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க