View in the JustOut app
X

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீது குறுகியகால விலை குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஹானர் 20ஐ 4 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

07:57:01 on 23 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பாக அறியப்படும் பீட்டா அமைப்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலமானது. இந்த அமைப்பிற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல பிரபலங்கள் தூதர்களாகவும், தன்னார்வலர்களாகவும் உள்ளனர். இப்படிப்பட்ட பீட்டா அமைப்பு, 2019ஆம் ஆண்டின் சிறந்த நபராக விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளது.

06:55:02 on 23 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், சி.பி.ஐ. அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 5,532 ஆகும் என்றார். இதில் 4,503 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கும் நிலையில், 1,029 இடங்கள் காலியாக உள்ளதாக அவர் கூறினார். இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு சி.பி.ஐ. தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

05:55:01 on 23 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தொடுக்க உள்ளனர், இதனால், ராமர் கோயில் கட்டுவது மீண்டும் தாமதமாகும் அபாயம் இருப்பதாக மத்திய அரசிற்கு பிரவீன் பாய் தொகாடியா எச்சரித்துள்ளார்.

04:56:01 on 23 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் மாதந்தோறும் மர்மமான முறையில் பணம் கூடிவந்ததால், கறுப்பு பணத்தை மீட்டு பிரதமர் மோடி வழங்கியதாக கருதி ஏமாற்றமடைந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.

04:55:02 on 23 Nov

மேலும் வாசிக்க தினமலர்

ஐம்பதுகளிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன் மெமோகிராம் பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்து கொள்ளவேணடும் 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால் கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிருப்பதும் நல்லது.

03:55:01 on 23 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இந்தியாவில் Vivo U20 (First Impressions) 4GB + 64GB வேரியண்டிற்கு 10,990 ரூபாயும், 6GB + 64GB மாடல் 11,990 ரூபாயாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. விவோவின் சமீபத்திய போன் Racing Black மற்றும் Blaze Blue வண்ண விருப்பங்களில் வருகிறது.

02:55:02 on 23 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஆமை ஒன்று இளம்பெண்ணின் மீது ஏறி அவர் அணிந்திருக்கும் மேலாடையை நீக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் பிகினி உடையில் இருக்கிறார். அவரின் மடியில் ஒரு ராட்சச ஆமை உள்ளது. சிறிது நேரத்தில் அந்த ஆமை திடீர் என அந்த பெண்ணின் வயிற்றில் ஏறி அவரது மேலாடையை கொடுத்து இழுக்கிறது.

01:55:01 on 23 Nov

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. படத்துக்காக அவர் இளமை தோற்றத்துக்கு மாறிய புகைப்படமும் ஏற்கனவே வெளியானது. தற்போது கருப்பு கண்ணாடி அணிந்த இன்னொரு தோற்றமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

12:55:01 on 23 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

யாரெனினும் உங்களை பின் தொடர்வதாக உணர்ந்தால், உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு தொலைபேசியில் தெரிவித்து அவர்களின் உதவியை நாடலாம். அவர்கள் வரும் வரை கூட்ட நெரிசல் உள்ள இடங்கள் அல்லது கடைகளில் காத்திருக்கலாம்.

11:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

10:57:01 on 22 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

RKW டெவலப்பர்ஸ் நிறுவனம் பா.ஜ.க-வுக்கு தேர்தல் நன்கொடை அளித்ததாக பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2014-2015ஆம் ஆண்டில் பா.ஜ.க-வுக்கு ரூபாய் 10 கோடி நன்கொடை அளித்துள்ளது அந்நிறுவனம்.

09:57:01 on 22 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தஞ்சையில், ஒன்று அல்ல...இரண்டு அல்ல.., 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த தில்லாங்கடியை, 7வது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

08:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

நித்தியானந்தம் சிஷ்யை தத்துவப்பிரிய தன்னிலை விளக்கம் முகநூல் மூலம் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் காவல் துறையிடம் பேசியதாகவும் மேற்கொண்டு 5 நிபந்தனைகளை நிறைவேற்றினால் சகோதரி நந்திதாவை அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

08:25:01 on 22 Nov

மேலும் வாசிக்க சன் நியூஸ்

சென்னையில் உள்ள காப்பகங்களில் தேர்வுசெய்யப்பட்ட 25 குழந்தைகள் விமானம் மூலம் கோவைக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரி ரஹானா பாடகர் வேல்முருகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

07:55:02 on 22 Nov

மேலும் வாசிக்க தந்தி டிவி

ரஜினியும் கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்படுவார்களா என தமிழகத்தில் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் ரஜினி - கமல் இணைந்தால் என்ன மாற்றம் நடக்கும் என மக்கள் சிலர் தங்களது கருத்துகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

07:25:01 on 22 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்று திமுக எம். பி. டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

06:57:01 on 22 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கரீபியன் கடல் பகுதியில் இரண்டு குட்டித் தீவுகளை உள்ளடக்கிய `டிரினிடாட் அன்ட் டொபாகோ' என்னும் நாடு உள்ளது. உலக வரைபடத்தில் சிறிய புள்ளியாகத் தெரியும் இந்த நாட்டில்தான் இப்போது நித்யானந்தா பதுங்கியிருக்கிறார். எதற்காக நித்யானந்தா தங்கியிருக்கிறார் என்பதை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள்.

06:27:01 on 22 Nov

மேலும் வாசிக்க விகடன்

ஆதித்ய வர்மா திரைப்படம் தற்கால இளைஞர்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்பதற்கும் ஒரு உதாரணம். ஆனால், லிப்-லாக் காட்சிக்கும், கெட்டவார்த்தைகள் வரும் காட்சிக்கும் கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பார்த்தால் ‘மாடர்ன்’ உலகம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.

05:57:01 on 22 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் கமல்ஹாசனை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

05:27:01 on 22 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரின் மான்சரோவர் பகுதியைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங்கிற்கு வயது 21. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நீதிபதிகளுக்கான தேர்வில் மயங்க் பிரதாப் சிங், கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் நீதிபதியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

04:57:01 on 22 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7

இலங்கையில் பிரதமர், ஜனாதிபதி முதலிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல்வேலையாக இந்தியா வருவது வழக்கம். டெல்லியில் அவர்கள் பூஜை செய்யப் போகிறார்கள் என்றுகூட தமாஷாக சொல்வார்கள். ஆனால், தற்போது சீனாவை கருத்தில் கொண்டு, புதிய அதிபர் இந்தியா வருவதற்கு முன்பே இந்தியா தனது வெளியுறவு அமைச்சரை இலங்கை அனுப்பியுள்ளது.

04:27:01 on 22 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இந்நிலையில் சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் ஷங்கருக்கு பிறகு அதிக 1 மில்லியன் டாலர் வசூல் கொடுத்தது அட்லீ தானாம். இவரின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களும் சிங்கப்பூரில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

03:57:02 on 22 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டியில், ஜப்பானைச் சேர்ந்த கோட்டா அனோடா என்ற 23 வயது மாணவர் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகலில் இவர் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து தூக்கிட்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

03:27:02 on 22 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், சுமார் 30 லட்சம் சந்தாதாரர்களை பார்தி ஏர்டெல் நிறுவனம் இழந்திருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. நிகழ் நிதியாண்டின், செப்டம்பர் மாதத்தோடு முடிந்த இரண்டாவது காலாண்டு அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

03:01:50 on 22 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கள்ளக்குறிச்சி உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்து கோவில் மற்றும் இந்து மதத்தை பற்றி அவதூறு கருத்து தெரிவித்த திருமாவளவனை இந்தி சமயத்தில் இருந்து விலக்கி வைக்கும் சம்பிரதாய சடங்கு நடைபெற உள்ளது என அர்ஜூன் சம்பத் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

02:27:01 on 22 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் டாலர் மதிப்புள்ள வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான 3 வழக்குகளிலும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 வருடகாலம் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

01:57:01 on 22 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

”உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

01:27:01 on 22 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக தனி விமானத்திற்கு ரூ.255 கோடி செலவிடப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

12:57:02 on 22 Nov

மேலும் வாசிக்க தினமலர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆட்சியர் ஆய்வு செய்து மாற்று இடம் தேர்வு செய்யும் வரை பணிகளை துவங்கக்கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால், மின்கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

12:27:01 on 22 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:57:02 on 22 Nov

மேலும் வாசிக்க தினமணி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள துர்கை அம்மன் கோயிலில் நேற்று திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கிரீடம், தங்கச் சங்கிலி, கைகளில் இருந்த காப்பு உள்ளிட்டவை திருடு போயின. இதுதொடர்பாக கோயில் நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

11:27:01 on 22 Nov

மேலும் வாசிக்க விகடன்

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி தெற்கே ஆழ்வார்குறிச்சி முதல் வடக்கே சிவகிரி வரை பரந்து விரிந்திருப்பது தென்காசி மாவட்டம். ராமநதி, கடனாநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களும், மோட்டை, ஸ்ரீமூலப் பேரி ஆகிய இரு சிறிய நீர்த்தேக்கங்களும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன.

10:57:01 on 22 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆமதாபாத் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வி.அசாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.

10:27:01 on 22 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆண்டுதோறும் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நீட் பிஜி (PG - முதுநிலை) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

09:57:01 on 22 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, சென்னை சேப்பாக்கத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

09:25:51 on 22 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக மீண்டும் அறிவித்துள்ளது. விலை குறைப்பின் படி நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

08:57:02 on 22 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

திண்டுக்கலைச் சேர்ந்த செல்வகணேஷ், நாகை திருவெண்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் விஜயகணேஷ் என்பவரது டாடா சுமோ வாகனத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அதன் பின்னர் அதில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டியும், விளக்குக் கூம்புகள் பொருத்தியும், வாக்கி டாக்கி வைத்துக்கொண்டும் திண்டுக்கல், பழனியில் கெத்தாக வலம் வந்துள்ளார்.

07:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

06:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பால், பங்கு சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டன. இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் பி.பி எண்ணெய் நிறுவனத்தை விட மிஞ்சி உலகின் 6 வது பெரிய எண்ணைய் நிறுவனம் என்ற நிலையை எட்டியுள்ளது.

05:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

`அசுரன் படத்தினுடைய வெற்றி, மிக முக்கியமான வெற்றியாகப் பார்க்கிறேன். இக்கால திரைப்படச் சூழலில், சமூகச் சூழலில் `அசுரனி'ன் வெற்றி நிறைய பேருக்கு நிறைய நம்பிக்கை தந்திருக்கிறது. அதிலும் கமர்ஷியல் ரீதியான வெற்றியென்பதை மிக அவசியமானதாகப் பார்க்கிறேன்.” என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

04:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க விகடன்

நேபாளத்தை சேர்ந்த நிர்மல் நிம்ஸ் புர்ஜால் என்பவர் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட எவரெஸ்ட் (Everest ), பிராட் பீக் (Broad Peak), ச்சோ யூ (Cho You) போன்ற 14 சிகரங்களையும், குறைந்த காலத்தில் ஏறி முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

03:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

‘நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். எனக்கும் காதல் அனுபவம் உள்ளது. அவர் யார் என்று நான் இப்போ சொல்ல மாட்டேன். 3 வருடங்களுக்குப் பிறகு அவரை தான் திருமணம் செய்து கொள்வேன். அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்’ என்று நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.

02:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

யோகிபாபு நடிப்பில் புதுமுக இயக்குநர் மடேன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மண்டேலா என்ற படத்தில் நடிக்கிறார். காதலில் சொதப்புவது எப்படி, மாரி-1 மற்றும் மாரி-2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது.

01:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

மாரி செல்வராஜும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டன் சென்றுள்ளனர். அப்போது தனுஷிடம் கதையைச் சொல்லி ஓகே வாங்கியுள்ளார் மாரி செல்வராஜ். மேலும் படத்துக்கு ’கர்ணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

12:55:01 on 22 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை கொழுப்பு சக்தியை தரும். முட்டை, பால், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், இறைச்சி ஆகியவை புரத சக்தியை தரும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவை நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் நீர்சத்து அதிகம் தேவை. ஆகவே, தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

11:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

“சினிமாவில் ரஜினியும் கமலும் எனக்கு மூத்தவர்கள். அரசியலில் வேண்டுமானால் நான் இருவருக்கும் மேல் அனுபவத்துடன் இருக்கிறேன். திமுக கொள்கை பரப்புச் செயலாளராக, பூங்கா நகர் எம்எல்ஏவாக மாநில சிறுசேமிப்பு துறையின் துணைத் தலைவராக அமைச்சர் பதவிக்கு நிகரான பதவியில் இருந்துள்ளேன்.” என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

10:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”திருமாவளவனின் பேச்சு காயத்ரி ரகுராமுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால் அவர் தனது கருத்தை அப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். திருமாவளவன் பேசிய நல்ல பல கருத்துகள் எங்களுக்குப் பிடிக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஏன் இப்படி காயத்ரி ரகுராம் பேசினார் எனத் தெரியவில்லை” என விளக்கம் அளித்துள்ளனர்.

09:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சாதுக்கள் என்ற போர்வையில் கஞ்சா வியாபாரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

08:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க சன் நியூஸ்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இந்திரா, இடமாறுதலுக்காக நிகழ்ந்த கவுன்சிலிங்கில், தான் பொறுப்பு வகிக்கும் பள்ளியில் 2 மாணவர்களே வருவதாகவும் அவர்களும் எப்போதாவதுதான் வருகிறார்கள் என்றும் கூறி கதறியுள்ளார்.

08:25:03 on 21 Nov

மேலும் வாசிக்க தந்தி டிவி

ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின், வயிற்றில் ஊசியை வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டாக்டர் மற்றும் நர்ஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

07:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஈரானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெஹ்ரான் உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இணையவசதி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. குறைந்தது 106 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் நம்புகிறது.

07:25:01 on 21 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தேமுதிக பெண் நிர்வாகியின் காரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விஜயபுரம் பகுதியில் வசிக்கும் ரெஜினாமேரி, அவரது காரை வீட்டருகே நிறுத்திய நிலையில், மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு காரை திருடியுள்ளனர்.

06:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கெட்டவார்த்தை சொல்லிக்கொடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தங்களை பேசவைத்ததாக நித்யானந்தா மீது சிறுமி பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆசிரமத்தில் வசித்துவந்த தனக்கே, தனது மகளின் நிலை குறித்த தகவலை சொல்லவில்லை என்று சொல்லும் சிறுமியின் தந்தை, நித்யானந்தாவுக்கு தெரியாமல் மடத்திற்குள் எதுவும் நடக்காது என்கிறார்.

06:25:01 on 21 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

பாஜகவின் பெண் எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூரை பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்த வழக்கில் 8 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் ஆவார்.

05:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடகா, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர், சட்டவிரோதமாக தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க அரசின் விதிகளை மீறுமாறு பிரதமர் அலுவலகம் நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

05:27:01 on 21 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

காஷ்மீர் விவகாரம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்து மகாசபா அளித்த புகாரின் அடிப்படையில், பேராசிரியர் மீது 153-A , (பகைமை உணர்வை ஊக்குவித்தல்) 505 (2) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

04:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினமலர்

”நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தன காரணம் அவ்விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு” என ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், 2021ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை தமிழக மக்கள் அரசியலில் நிகழ்த்துவார்கள் என்றார்.

04:21:55 on 21 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும், நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று கேரள அரசு நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.

03:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தெலுங்கில் அசுரன் படத்தை ரீமேக் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. தனுஷ் கதாப்பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தில் ஸ்ரேயா நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இறுதியில் அனுஷ்காவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

03:27:01 on 21 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

02:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

02:40:38 on 21 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பொதுத்துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கன்கார் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகப்பெரிய ஊழல் எனக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

02:27:02 on 21 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னை போத்தீஸ் ஜவுளிக்கடை உரிமையாளரின் மகள் வசிக்கும் பங்களாவில் காவலாளியாக வேலைபார்த்த வட மாநில கொள்ளையன் ஒருவன், தாலிச் சங்கிலி மற்றும் வைர நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளான்.

01:57:02 on 21 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணாண கண்ணே பாடல் மக்களிடம் படு ஹிட்டடித்தது. இந்த பாடலை 2019ஆம் வருடம் பாடாதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் டி.இமான் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். அதில் நிகழ்ச்சியின் முடிவில் கண்ணாண கண்ணே பாடல் பாடப்பட்டுள்ளது. அதற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது,

01:27:01 on 21 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னை புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்துள்ளது. பள்ளிக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு, பழுதடைந்த கழிவறைகளில் கதவுகள் மாற்றப்பட்டு, புதிய மேஜை, நாற்காலிகள் வாங்கி தரப்பட்டு பள்ளியை முழுவதுமாக சுத்தம் செய்தனர்.

12:57:02 on 21 Nov

மேலும் வாசிக்க தினகரன்

நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான சித்ரலகரி படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து புரோசேவரெவருரா படமும் ஹிட்டானது. இதையடுத்து நிவேதாவுக்கு தெலுங்கில் படங்கள் குவிகின்றன.

12:27:02 on 21 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்கு‌தல் மற்றும் கைது நடவடிக்கைகள் கடந்த 3 ஆண்டு‌ளில் இல்லாத அளவு, ‌இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் 44 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:57:02 on 21 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பொதுத் துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கான்கார் ஆகிய நிறுவனங்களில் அரசின் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ள நிலையில், வருவாயை உயா்த்தும் நோக்கத்துடன் அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

11:27:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினமணி

கடலில் மீன்பிடிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள், சந்திக்கும் சவால்களை உலக அரங்குக்குக் கொண்டுவரவும் அவற்றுக்குத் தீர்வு காணும் பொருட்டும் கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் ஒன்றுகூடிய 40 நாடுகளைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் மீனவர் பேரவையை உருவாக்கினர். அந்த நாளே உலக மீனவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

10:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முதல்வர் குறைதீர் முகாம்களில் பெரும்பாலான மனுக்கள், முதியோர் பென்ஷன் கேட்டு வந்தவை. இதனையடுத்து, அனைத்து கிராமங்களிலும், ஒரு மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும் படி, வருவாய் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

10:27:02 on 21 Nov

மேலும் வாசிக்க தினமலர்

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

உள்ளாட்சித் தேர்தலில் இமேஜ் உருவாக்கத்துக்கான மெகா கூட்டணியெல்லாம் தேவையில்லை, மைலேஜ் கொடுப்பதற்காக மினிமம் கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

09:39:38 on 21 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உள்ளாட்சித் தேர்தலில் இமேஜ் உருவாக்கத்துக்கான மெகா கூட்டணியெல்லாம் தேவையில்லை, மைலேஜ் கொடுப்பதற்காக மினிமம் கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

09:28:39 on 21 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சாம்சங் நிறுவனத்தின் W20 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய W20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புதிய W20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

08:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

‘தளபதி 64’ படத்துக்கு ‘டாக்டர்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் பிரச்னை உள்ளிட்டவற்றை இந்தப் படம் பேசுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது தான் உண்மை தெரியவரும். அதுவரை காத்திருப்போம்.

07:55:02 on 21 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 647 உதவி பேராசிரியர் பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப அரசு பரிசீலித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிகளின் அடிப்படையிலான சிறப்புத் தேர்வு மூலம் இவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

06:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

2019 உலகக் கோப்பைப் போட்டி முடிவை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதேபோல விநோதமான விதிமுறையால் ஏற்பட்ட தோல்வியை நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனாலும் இன்னமும் மறக்க முடியவில்லை.

05:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினமணி

செவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது.

04:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சென்னை சூப்பர் கிங்க்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சென்னை அணி 20 நம்பர்களை பதிவிட்டு இன்று 20ஆம் தேதி 2020ஆம் ஆண்டு அணியில் விளையாடப்போகும் முதல் 20 வீரர்களின் பட்டியல் என அவர்களின் ஜெர்ஸி நம்பர்களை வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

03:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி 117 இந்தியர்களை அமெரிக்க அரசு இந்தியாவிற்கு நாடு கடத்திய நிலையில் தற்போது மீண்டும் 145 பேர் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் இருந்ததால் முதலில் அவர்களை வங்கதேசத்தில் விட்டுவிட்டு பின்னர் 145 இந்தியர்களை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விட்டுள்ளனர்.

02:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சு மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். உயர் இரத்த அழுத்த நோயாளிகளைப் பற்றிய ஆய்வுகளில், வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

01:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

‘உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா, நம்ம கட்சிக்காரங்களுக்கு அதிக பலன் இல்லைன்னா, இப்ப எப்படி நடத்த முடியும்? நம்ம உழைப்பையும், பணத்தையும் செலவழிச்சு கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைச்சு அப்புறம் பொதுத் தேர்தலுக்குள்ள வேற முடிவு எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது?’ என்று கேட்டிருக்கிறார் முதல்வர்.

12:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாட்டில் வருமான வரி சோதனையின் போது ரூ,2000 நோட்டுகள் பிடிபடுவது குறைந்துள்ளது. இதே போன்று ரூ.2000 புழக்கமும் நாட்டில் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது ரூ.2000 நோட்டுக்களின் புழக்கம் 31 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

11:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க தினமலர்

என்ன காரணமோ தெரியவில்லை, பெண்களுக்கு வயதை பற்றி பேசினாலோ அல்லது கேள்வி கேட்டாலோ பிடிப்பதே இல்லை. இளமை குறைகிறது என்ற எண்ணத்தை இது தருவதால், வயதை பற்றி பெண்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது. ஏன் உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற கேள்வி பல பெண்களை கோபப்பட செய்கிறதாம்.

10:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

நவம்பர் மாத தொடக்கத்துக்கு முன்னர் வரையில் ரஜினி என்றால் பா.ஜ.க ஆதரவாளர் என்ற எண்ணமே அனைவர் மத்தியிலும் இருந்தது. தற்போது அந்தப் பிம்பம் மறைந்து ரஜினி - கமல் இணைந்து செயல்படுவது என்ற மையப்புள்ளியில் வந்து நிற்கிறது. ரஜினியின் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் கமலுடன் அரசியல்ரீதியாக ஏற்பட்ட நெருக்கமே காரணம் என்கிறார்கள்.

09:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க விகடன்

”தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான். மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

08:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குழந்தைகளை கடத்துதல், சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதை செய்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஆமதாபாத் அருகே சுவாமி நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் மேலாளர்களை ஆமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

08:27:01 on 20 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக இணைவோம் என எந்த அர்த்தத்தில் ரஜினி, கமல் கூறியுள்ளனர் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

07:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ரஜினி-கமல் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். மேலும் அவர் ரஜினி-கமல் ஒன்று சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் ஒன்று சேரமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

07:25:02 on 20 Nov

மேலும் வாசிக்க தந்தி டிவி

இந்துக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக தனக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் இடுகைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப அணியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

06:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்? ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில். அதை அவர்கள் கலை என்றும் சொல்லலாம். இதுபோன்றவர்களுக்கு பதில் சொல்லி காலத்தை வீணடிக்க வேண்டாம்” என்று திருமாவளவம் காயத்ரி ரகுராம் குறித்து பேசியுள்ளார்.

06:25:01 on 20 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 31 வயதான மைதம் பிரசாந்த் என்ற மென்பொருள் இன்ஜினீயர், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி காணாமல் போனார். அனைத்து இடங்களிலும் அவரைத் தேடி அலைந்த குடும்பம் இறுதியாக, ஏப்ரல் 29ஆம் தேதி பிரசாந்த் காணாமல் போனதாக மதப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

05:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க விகடன்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7 ஆயிரத்து 510 கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 143 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 120 கன அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

05:27:02 on 20 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளையொட்டி, அகில பாரத இந்து மகாசபையின் தேசிய தலைவரும், நேதாஜியின் மருமகளுமான ராஜ்யஸ்ரீ சவுத்ரி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தவுலத்கஞ்ச் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாதுராம் கோட்சேவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

04:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 64வது படத்தில் கதாசிரியராக ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்ன குமார் பணியாற்றி வருகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜின் செல்போனில் இருந்து ரத்ன குமாருக்கு கால் செய்து “Machi Happy Birthday Da” என லோகேஷை போல் மிமிக்ரி செய்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

04:27:01 on 20 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் நடக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த காலங்களில், பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 95,700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

03:57:02 on 20 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 2020இல் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணியின் கேப்டன்சியில் கவனம் செலுத்திவரும் லஷித் மலிங்கா தன் உடலில் இன்னும் 2 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடும் தெம்பு உள்ளது என்று ஓய்வு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

03:27:01 on 20 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அதிமுகவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறும் போது, ‘முத்தலாக் தடை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ரவிந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மசோதாவை ஆதரித்து பன்னீர் செல்வமே பேசியிருந்தாலும் அது தவறு தான்’ என கூறியுள்ளார்.

02:57:02 on 20 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கூடங்குளத்தில் அணுக்கழிவை அகற்றுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், “அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும்.” என்றார்.

02:27:02 on 20 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க