View in the JustOut app
X

திருச்சி விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம், வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அகமதாபாத்தைச் சேர்ந்த நூர் ஷா குல் முகம்மத் என்பவர் 599 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 19.30 லட்சம் ரூபாய்.

04:56:02 on 16 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

பழ.நெடுமாறனுக்கு 2018ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதினை, வரும் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார்.

04:26:01 on 16 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
மேலும் அவர், இந்த இடஒதுக்கீட்டால் பொருளாதாரத்தில் பின் தங்கி பொதுப் பிரிவினருக்கு நன்மை கிடைக்கும் என்றார்.

03:56:01 on 16 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை பாக்ஸ் ஆபிஸில் பேட்ட முதலிடத்திலும், விஸ்வாசம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறில் சுமார் 444 திரையிடல்களில் 3.73 கோடிகளை பேட்ட வசூலித்தது. வியாழனையும் சேர்த்தால் 4.76 கோடிகள்.

03:26:01 on 16 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர நாட்டிற்கு உறுதியான பிரதமர் தேவை என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும் அவர், ”மோடி ஆட்சியில், ஆண்டிற்கு சராசரியாக 7.3% வளர்ச்சி கிடைத்தது. இது முந்தைய ஆட்சியைக் காட்டிலும் அதிகம். கடந்த ஆட்சிகளைவிட தற்போது தான் நிதி பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

02:56:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினமலர்

இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

02:26:01 on 16 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா கார் நிறுவனத்தின் காரான மராஸ்ஸோ இப்பொழுது எட்டு இருக்கையுடன் கிடைக்கிறது. இப்பொழுது M8 மராஸ்ஸோவின் விலையானது ரூ.13.98 இலட்சமாகும். டெக்னிக்கலாக், 7 இன்ச் தொடு திரை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஆட்டோ ப்ளே, 17 இன்ச் அலாய் வீல், லெதர் சீட்கள் என பல அம்சங்கள் உள்ளன.

01:56:01 on 16 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நந்துர்பார் மாவட்டத்தில் நர்மதை ஆற்றில் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படகில் பயணித்த 6 பேர் ஆற்றுக்குள் மூழ்கி பலியாகினர். இந்த படகில் அளவுக்கு அதிக பயணிகள் ஏற்றப்பட்டனரா? அல்லது ஆற்றில் வெள்ளம் எதுவும் ஏற்பட்டு படகு கவிழ்ந்ததா? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

01:25:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

கரூரில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உட்பட போதைப்பொருட்கள் 216 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 202 அட்டைப் பெட்டிகளில் இருந்த குட்கா, பான்பராக் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:55:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினகரன்

’world record egg' என்ற ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முட்டையின் புகைப்படம் பதியப்பட்டது. அந்த போஸ்டில் ‘நடிகை கெய்லி ஜென்னர் பெற்ற 18 மில்லியன் லைக்ஸ் இதுவரையில் உலக சாதனையாக இன்ஸ்டாகிரமில் உள்ளது. இதை முறியடிக்க இந்த முட்டைக்கு லைக் செய்யுங்கள்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

12:25:01 on 16 Jan

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலாவில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

11:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு ‘ஆங்ரி ரூம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறையில் டிவி, கடிகாரம், தொலைபேசி என அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. பெரும் கோபத்தில் வரும் வாடிக்கையாளர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு தங்கள் ஆவேசங்களை அந்தப் பொருட்களின் மீது வெளிப்படுத்தலாம்.

11:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

’எப்படி ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சாதனங்கள் இப்போது எதிர்காலம் இழந்து நிற்கின்றனவோ, அதேபோல ஸ்மார்ட் போன்களும் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கலாம்,’ என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

11:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

’world record egg' என்ற ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முட்டையின் புகைப்படம் பதியப்பட்டது. அந்த போஸ்டில் ‘நடிகை கெய்லி ஜென்னர் பெற்ற 18 மில்லியன் லைக்ஸ் இதுவரையில் உலக சாதனையாக இன்ஸ்டாகிரமில் உள்ளது. இதை முறியடிக்க இந்த முட்டைக்கு லைக் செய்யுங்கள்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

10:56:02 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

திருவனந்தபுரம் - கோரக்பூர் செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஜெயச்சந்திரன் என்பவரிடம் 17 வயது சிறுவன், டிக்கெட் சோதனைக்காக வந்துள்ளதாகக் கூறி டிக்கெட் கேட்டுள்ளார். தன்னிடம் டிக்கெட் கேட்ட அந்த சிறுவனை மடக்கிப் பிடித்த ஜெயச்சந்திரன், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.

10:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

குஜராத்தில் 2002-2006 காலக்கட்டத்தில் நடந்த 17 என்கவுண்டர்கள் பற்றி விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்ஜித் சிங் பேடி கமிட்டி, அந்த சம்பவங்களில் மாநில தலைவர்கள் யாருக்குமோ அல்லது அப்போதிருந்த உயரதிகாரிகள், உயர் பதவி வகித்தவர்கள் யாருக்குமோ தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறியுள்ளது.

10:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கிடந்த மூட்டையில் 15 நாய்க்குட்டிகள் இறந்து கிடந்தன. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நாய்க்குட்டிகள் விஷம் வைத்தும்,
கொடூரமாகத் தாக்கியும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

09:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

”கோடநாடு கொலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும். அப்போதுதான் முதல்வர் மீது உள்ள குற்றச்சாட்டில் உண்மை தெரிய வரும். இந்த விவகாரத்தில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் உள்ள 2 பேர் குற்றம் சுமத்தினால், முதல்வர் ஏன் பயப்படுகிறார்?” என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

09:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க காமதேனு

அயர்லாந்தைச் சேர்ந்த லிங்குரார் என்ற 29 வயது இளைஞருக்கு அவரது தந்தை கடந்த 2007ஆம் ஆண்டு பென்ஸ் காரை பரிசாக அளித்தார். தற்போது அந்தக் காரை அதிக ஆண்டுகள் பயன்படுத்தியதால் பழையதாகி விட்டதாக கூறி வந்த லிங்குரார், அதனை தீயிட்டு எரித்தார். அதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டார்.

09:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஓடும் ரயிலிலிருந்து பயணிகள் ஏறி இறங்கும்போது விபத்தில் சிக்கிக் கொள்வதைத் தடுக்க நீல நிற எச்சரிக்கை விளக்கு பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த விளக்குகள் ரயில் ஒரு குறிப்பிட்ட வேகத்தைப் பிடிக்கும்போது ஒளிரத் தொடங்கும். இது ஒளிர்ந்தால் பயணிகள் ரயிலில் ஏறுவதோ இறங்குவதோ உயிருக்கு ஆபத்து என்று அர்த்தம்.

08:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

08:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார். படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அம்ரீஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.

08:24:05 on 15 Jan

மேலும் வாசிக்க விகடன்

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள ஜிட்டே ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கோவா-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

08:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

பொங்கலையொட்டி சென்னையில் இருந்து கடந்த 4 நாட்களில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசு சிறப்புப் பேருந்துகள் மூலம்‌ சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக, வரும் 17 - 20 ஆம் தேதி வரை சென்னைக்கு 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

07:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள 'ஸ்ரீதேவி பங்களா' பாலிவுட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் பிரியா வாரியர் கவர்ச்சியாக தோன்றுகிறார். டீசர் முடிவில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் காட்சியில் ஒரு குளியல் தொட்டியில் கால்கள் காட்டப்படுகிறது.

07:48:54 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ளப் படங்களில் முதலில் ‘என்.ஜி.கே’ படத்தையும் தொடர்ந்து ‘காப்பான்’ படத்தையும் அடுத்தடுத்து திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு ‘இறுதி சுற்று’ படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

07:15:02 on 15 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் மாயாவதி பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக மிகப் பெரிய கேக் தயாராக இருந்தது. அப்போது ஏற்பட்ட களேபரங்களில் அங்கு கூடியிருந்தவர்கள் தங்கள் கைகளுக்கு கிடைத்த வரையில் அந்த கேக்கைத் திருடிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

06:53:58 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியைக் கலைக்க பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.

06:45:23 on 15 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவின் சவால்களை எதிர்கொண்டு, அதனை வீழ்த்த முடியும் என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார். மேலும் அவர், தேசிய அளவில், பாஜகவின் சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி வலுவாகவே உள்ளது எனவும் கூறியுள்ளார்.

06:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது. இதனையடுத்து 299 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

06:21:38 on 15 Jan

மேலும் வாசிக்க தினகரன்

கலை அனைவருக்குமானது. அதில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கூடாது. அதனை கற்க விரும்புபவர்களுக்கு எந்த பேதமும் இல்லாமல் சமவாய்ப்பும் மேடையும் கிடைக்க வேண்டும் என்கிறார் திருநங்கை பொன்னி.

06:15:02 on 15 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஒவ்வொரு கரும்பின் சுவையையும் அடிப்படையாகக் கொண்டு அடிப்பகுதி இனிப்பாகவும் நடுப்பகுதி மிகவும் இனிப்பாகவும் நுனிப்பகுதி உவர்ப்புத் தன்மையுடனும் இருக்கும். கணுக்கள் அதிகம் இருந்தால் அது மிகச் சிறந்த கரும்பு என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

05:56:02 on 15 Jan

மேலும் வாசிக்க விகடன்

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்தியரான வினோத்குமார் (73). தனது மனைவி திலோத்தமா (70) என்பவருடன் சென்னைக்கு சுற்றுலா வந்தார். இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேருந்தில் ஏற முயன்றபோது திலோத்தமா அணிந்து இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ் மாயமானது தெரிந்தது.

05:35:02 on 15 Jan

மேலும் வாசிக்க தினகரன்

எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும். தயிரை முகம் மற்றும் உடம்பில் தடவி வந்தால் வெயிலால் ஏற்பட்ட சரும கருப்பு நீங்கும்.

05:16:01 on 15 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

2019 இடைக்கால பட்ஜெட்டில் வீட்டு வாங்குவோர் பெரும் சலுகை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதாவது, புதிய ஆண்டில் ஒரு வீட்டை வாங்க திட்டமிட்டு இருந்தால், நீங்கள் பயனடைவீர்கள். குறைந்த வருமானம் பெறும் நபர்கள் வீடு வாங்குவதற்கு கூடுதல் மானியம் கிடைத்தால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

05:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க Zee Tamil

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்குக் கஞ்சா, சிகரெட், செல்போன் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதால், தண்டனையைக்கூட அவர்கள் ஜாலியாக அனுபவிப்பதாகப் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

04:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க விகடன்

”எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது பற்றி முதல்வர் குமாரசாமி, சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன்.” என கர்நாடக மாநில அமைச்சர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

04:35:02 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான தெய்வேந்திரபுரம், கீழவடகரை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் வெற்றிலைக் கொடி நடவு செய்வதற்காக முதற்கட்ட பணி துவங்கியுள்ளது.

04:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

"நம்பியின் உண்மையான தோற்றத்திற்காக மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறேன். அவரின் 15 வயது இளம் தோற்றம். எப்படி இந்தத் தோற்றம் வரும் என்று என்னிடம் எந்த யோசனையுமே இல்லை. நான் அவருடன் நெருங்கி இருந்ததும் இல்லை. ஆனாலும் நல்லவிதமாக கொண்டு வந்துவிடுமோ என நம்புகிறேன்" என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

03:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தென்னிந்திய பிரபலங்களான மாதவன், அஞ்சலி, அனுஷ்கா, ஷாலினி பாண்டே நடிப்பில் புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஹேமந்த் மதுர்கர் இயக்க உள்ளார். இந்த படம் ஒரு திரில்லர் படமாக உருவாக உள்ளது. 'இரண்டு' படத்தை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் மாதவன் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஜோடி சேர உள்ளனர்.

03:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரிகளால் கல்லக்குடி கிராமம் தூசு மற்றும் இரைச்சல் மாசுபாட்டினால் பாதிக்கப்படுகிறதா என்பதை அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

02:56:02 on 15 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோவை மாவட்டம் கணுவாய் அருகில் ஒரு குன்றுக்கு மேல் அமைந்துள்ளது மாணிக்கத்தின் வீடு. வீட்டின் முன்பகுதியில் சிறிய டீ கடை வைத்து நடத்துவதுடன், அருகிலிருக்கும் கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்கிறார். காஸ்ட்லியான கடைகளில் கிடைக்கும் கேப்புச்சினோக்களைத் தூக்கி சாப்பிடுகிறது இவரின் லேயர் டீ.

02:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க விகடன்

‘‘3 ஆண்டுகளுக்குப்பின் எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீசாருக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது.’’ என கண்ணய்யா குமார் விமர்சித்துள்ளார்.

02:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பொங்கல் பரிசாக அதிரடியாக இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். அதோடு படப்பிடிப்பு ஜனவரி 18ஆம் தேதி தொடங்க உள்ளது என்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.

01:55:01 on 15 Jan

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாட்டின் பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. நவம்பர் மாதம் 4.64ஆக இருந்த பணவீக்கம், டிசம்பரில் 3.80 சதவீதமாக குறைந்துள்ளது. 2017ல் இதே காலக்கட்டத்தில் 3.80 சதவீதமாக இருந்தது.

01:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க தினமலர்

நடிகர் விக்ரம் நடிக்கும் `கடாரம் கொண்டான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் முழுவதும் அதிரடி காட்சிகளால் நிரப்பப்பட்டுள்ளது. அதிரடி காட்டும் விக்ரம், இந்த டீசரில் தனது பார்வையாலே மிரட்டியிருக்கிறார். அவரின் லுக் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

01:15:02 on 15 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார்.

01:07:40 on 15 Jan

மேலும் வாசிக்க விகடன்

விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார் பிரபல தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இந்த அரிதான விஷயம் குறித்து ட்விட்டரில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் டிடி.

12:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

ரிக் தொழிலை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த திருச்செங்கோடு ரிக் தொழில், இப்போது உள்நாட்டுக்குள் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் திணறி வருகிறது. இதனால், இந்த தொழிலின் விரிவாக்கம் ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டது.

12:35:02 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இந்நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரகாஷ்ராஜ், மோகன்லால், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட நடிகர்கள் போட்டியிட தயாராகி வருகிறார்கள்.

12:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

பொங்கல் பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து மதுவிற்றால் ₹20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

11:56:02 on 15 Jan

மேலும் வாசிக்க தினகரன்

'பொங்கலுக்கு இப்படி ஒரு நல்ல படம் கொடுத்ததற்கு வாழ்த்துகள்,' என விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் ரஜினிகாந்த்துக்கு வாட்சப் மூலம் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

11:35:02 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்த முதியவரை நூதனமான முறையில் ஏமாற்றி ஏ.டி.எம்.,மில் பணம் திருடி மோசடியில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைதுச் செய்தனர்.

11:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க EENADU

குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் தொல்லைகள் குறித்துப் புகாரளிக்க செயல்பட்டு வரும் ஷீ-பாக்ஸ் என்ற வலைதளத்தில் 2017ஆம் ஆண்டில் மட்டும் 169 புகார்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

10:55:01 on 15 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

முதன்முதலாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி. இந்தத் தகவலை அவரே ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சந்தீப் கிஷண் மற்றும் ஹன்சிகா ஆகியோரோடு இணைந்து வரலட்சுமி நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல்.’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

10:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க தி இந்து

உசிலம்பட்டியில் பூ வரத்து குறைந்ததால் மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ மூவாயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், மற்ற பூக்கள் விலை சரிந்து காணப்பட்டது. பிச்சிப் பூ 1000 ரூபாய்க்கும், செவ்வந்திப் பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால், மலர் சந்தைக்கு வருவோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

10:15:02 on 15 Jan

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் YMCA மைதானத்தில் நடைபெறும் 42அவது சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருகைப் புரிகின்றனர். இந்தப் புத்தகக் கண்காட்சி திருவிழா போல் காட்சியளிக்கின்றது. இந்நிலையில், இந்தப் புத்தகக் கண்காட்சி கடந்து வந்தப் பாதையைப் பார்ப்போம்.

10:03:58 on 15 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விழாக்களின் தாய் நாடு இந்தியாதான். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாத நம் நாட்டில் தமிழர்களின் மிக முக்கியப் பண்டிகையாக விளங்குகிறது ‘பொங்கல்' திருவிழா. ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில்தான் இந்தியாவின் பல்வேறு இடங்களில் அறுவடைத் திருவிழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

09:55:01 on 15 Jan

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

ஹரியானாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தன் மனைவியை இப்படி செய்த கொடூரர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க தீவிரமாக போராடியும் வருகிறார்.

09:35:02 on 15 Jan

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட சயன், மனோஜ் இருவரையும் சைதாபேட்டை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவரையும் வரும் 18ஆம் தேதி 10 ஆயிரம் ரூபாய் பிணையுடன் ஆஜராக உத்தரவிட்டார்.

09:15:02 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலாப் படகின் சேவை கூடுதலாக 3 மணி நேரம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் படகின் சேவை இன்று முதல் 3 நாட்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

08:55:02 on 15 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 636 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கறே்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளை அடைக்க வீரர்கள் உற்சாகமாக உள்ளனர்.

08:43:03 on 15 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

14-01-2019 அன்று நிஃப்டி இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே டிரேடிங் செய்வது குறித்து சிந்திக்கலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை இது போன்ற சூழ்நிலைகளில் முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.

08:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க விகடன்

சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.இங்கு பூ, பழம், காய்கறி ஆகியவற்றுக்குத் தனித்தனியாகச் சந்தைகள் உள்ளன. இவை தவிரப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யப் பூச்சந்தைக்கு அருகே 7 ஏக்கர் நிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

08:15:02 on 15 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என வள்ளுவரால் வாழ்த்துப் பெற்ற உழவர்களைக் கொண்டாடும் திருநாள் இன்று. தை மாதப் பிறப்பின் தொடக்கமாகவும் இந்நாள் அமைந்துள்ளது.

07:55:01 on 15 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கல்விச் சேவைக்கு எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. அவற்றுள் சிரமப்படாமல் கல்லூரி கட்டுரைகளுக்கும், புராஜெக்ட் திட்டங்களுக்கும் கைகொடுக்க இணையதளங்களில் பல்வேறு அப்ளிகேசன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் நிஞ்சா எஸ்ஸேஸ்(NinjaEssays).

07:35:02 on 15 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.08ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.09ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:16:31 on 15 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் கும்பமேளாவின்போது ஒன்றாகத் கூடுவார்கள்.

07:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் பொங்கலையொட்டி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. அவை அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

06:55:01 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

எதிர்பாராத விதமாக கொட்டும் பனியில் காலையில் மக்கள் திண்டாடி வரும் சூழலில் சீசனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே பெரம்பலூரில் தர்பூசணிப் பழங்கள் விற்பனைக்காகக் கொண்டு வந்து குவிக்கபட்டுள்ளன.

06:25:02 on 15 Jan

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

05:55:02 on 15 Jan

மேலும் வாசிக்க தி இந்து

‘பப்ளிஷிங் நெக்ஸ்ட் இன்டஸ்ட்ரி அவார்ட்ஸ்’ (PNIA) வழங்கும் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த பதிப்பகம் விருதைக் காலச்சுவடு பதிப்பகம் பெற்றுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர்களான சல்மா, பெருமாள் முருகன் ஆகியோரை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவந்ததற்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என விருதுக் குழு தெரிவித்துள்ளது.

05:26:01 on 15 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வித்தியாசமாக செல்பி எடுத்து நண்பர்களிடையே பாராட்டு பெறவேண்டும் என்று மலை உச்சியில் தலைகீழாய் தொங்குவது, மிக உயரமான கட்டிடங்களின் மேல்தளத்தின் விளிம்பில் அமர்ந்து போட்டோ எடுப்பது என்று ஆபத்தை உணராமல் விபரீத சாகசம் செய்ய ஆரம்பித்து விட்டனர் இன்றைய இளம் தலைமுறையினர்.

04:56:02 on 15 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

கொடைக்கானலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் டிகிரியைத் தொட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அங்கு கடும் உறைபனி நிலவுவதன் காரணமாக இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

04:26:01 on 15 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக, PIRPANJAL உள்ளிட்ட மலைப்பகுதியில், வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.

03:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜன 15ஆம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கரும்பு விற்பனைக் களைக்கட்டியுள்ளது.

03:26:02 on 15 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வரும் 16ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

02:56:02 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புது பைக்காக ராயல் என்ஃபீல்ட் 500 சிசி ABS அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வாகனங்களில் ABS வசதியுடன் வெளிவரும் முதல் பைக் இதுதான். 1.86 லட்ச ரூபாய் விலை நிர்ணைக்கப்பட்டுள்ள இந்த பைக், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

02:26:01 on 15 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மதுரையில் 1,264 கோடி ரூபாயில் அமையவுள்ல எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்திற்கு பாஜகவினர் அதிக அளவில் உரிமைக் கொண்டாடுவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

01:56:01 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தனியார் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் அதிக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதால் அரசுக்குச் சொந்தமான காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் சந்தை பங்களிப்பு 2017-18ஆம் ஆண்டில் 70 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

01:26:01 on 15 Jan

மேலும் வாசிக்க தி இந்து

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக கழிவுநீரை சுத்திகரித்துக் குடிநீராக விநியோகிக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புதிதாக 6 திட்டங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

12:56:03 on 15 Jan

மேலும் வாசிக்க தினகரன்

நிலவில் ஏற்படும் இரவு நேரக் குளிர்நிலையை அளவிட, சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, நிலவில் ஏற்படும் கடுமையான குளிரால், விண்கலம் பழுதடைந்துவிடாமல் இருப்பதற்காக, அதில் உள்ள வெப்ப மூட்டியைக் கொண்டு, உருவாக்கப்படும் மின் சக்தியைப் பயன்படுத்தி, குளிர்நிலையைத் துல்லியமாக கணக்கிட சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

12:35:01 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரிஷாப் பண்ட்டுக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழுத்தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். இதனால், தோனியின் இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

12:15:01 on 15 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சமீபத்தில் பட அதிபர் சங்க அலுவலகத்தை அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் பூட்டினர். அதை உடைக்க முயன்ற விஷால் கைதாகி பின்னர் விடுதலைச் செய்யப்பட்டார். இந்நிலையில் விஷால் கைதானது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

11:56:01 on 14 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட முத்ரா கடன் திட்டத்தில் வழங்கப்பட்ட கடன்களீல் ரூ. 11,000 கோடி வாராக்கடனாகியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

11:35:01 on 14 Jan

மேலும் வாசிக்க தி இந்து

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, முருகேசன். இவர், கடந்த ஓராண்டாக ஒரு பச்சைக்கிளியை வீட்டில் வளர்த்துவந்தார். இந்நிலையில் இந்தக் கிளியை, முருகேசனின் மகன் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த கிளி, வீட்டிலிருந்து பறந்துசென்றுவிட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் தேடியும் கிளி கிடைக்கவில்லை.

11:15:01 on 14 Jan

மேலும் வாசிக்க விகடன்

சிக்கிம்மில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார். காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

10:56:01 on 14 Jan

மேலும் வாசிக்க தினமலர்

சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளபட்டி பகுதியை சேர்ந்த மூக்குத்தி கவுண்டர், அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகே கறி கடை நடத்தி வருகிறார். அங்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் பாலசுப்பிரமணி, ஆட்டுக்கறி தருமாறு மிரட்டியும், மூக்குத்தி கவுண்டர் மற்றும் அவரது மகனையும் தாக்கியுள்ளார்.

10:35:01 on 14 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “டெல்லி முதல்வர் உண்ணாவிரதம் இருப்பார். அவற்றை உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டுமென எண்ணுகிறீர்களா?” எனக் கூறி மனுவினைத் தள்ளுபடி செய்தது.

10:15:02 on 14 Jan

மேலும் வாசிக்க தினமணி

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மேம்பாட்டு துறையின் சார்பில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளி ஹாஸ்டலில் 8ஆம் வகுப்பு மாணவி குழந்தைப் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

09:56:01 on 14 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வேலூர் மாவட்டத்தில் "மீண்டும் நாம் பள்ளிக்கு செல்லலாம்" என்ற தலைப்பில் முன்னாள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சி மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுடைய சக தோழர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

09:35:01 on 14 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

போகி பண்டிகையின் போது சென்னையில் கடந்த ஆண்டைவிட 40% காற்று மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மாசு குறைவால் சென்னையில் விமான போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

09:15:01 on 14 Jan

மேலும் வாசிக்க தினகரன்

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என ஆளுனர் சந்திப்புக்கு பின் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் பழனிசாமியை உடனடியாக பதவி விலக்க வேண்டும் எனவும் கூறினார்.

08:56:01 on 14 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் புதிய மாவட்டம் உருவாகிறது. இதற்காக பாஜக ஆளும் உ.பி.யின் ஆக்ரா பிரிக்கப்பட உள்ளது. இதையடுத்து, உ.பி.யின் 76ஆவது மாவட்டம் 'அட்டல் நகர்' என்பதை அதிகாரபூர்வமாக உ.பி.யின் முதல்வரான யோகி ஆதித்யநாத் விரைவில் அறிவிக்க உள்ளார்.

08:35:02 on 14 Jan

மேலும் வாசிக்க தி இந்து

2016ஆம் ஆண்டில் கண்ணையா குமார், உமர் காலித் உள்ளிட்ட ஜேஎன்யு மாணவர்கள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் டெல்லி மாநில போலீஸார் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளனர். இந்திய குற்றவியல் சட்டம் 124A, 323, 465, 471,143, 149, 120B ஆகிய பிரிவுகளின்கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

08:15:01 on 14 Jan

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக சதி செய்து வருவதாக அம்மாநில அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

07:56:01 on 14 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், 12 ரூபாய் ப்ரிமீயம் செலுத்தி இரண்டு லட்ச ரூபாய்க்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

07:35:01 on 14 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 5 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

07:15:02 on 14 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சபரிமலையில் மகர ஜோதி விளக்கு தெரிந்தது. மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இதனையொட்டி சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

06:57:35 on 14 Jan

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க