View in the JustOut app
X

“நான் எப்போதும் கடவுள் என்று என்னை சொல்லிக்கொண்டதே இல்லை. அதிமுக மீது எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஸ்டாலின் கடவுளை வழிபடுவதில்லை, நம்பிக்கை இல்லை என்கிறார். ஆனால் அவர் வீட்டிலிருப்பவர்கள் விழுந்து விழுந்து கடவுளை வழிபடுகிறார்கள்.” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

05:25:01 on 25 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாஜகவை வீழ்த்தும் நோக்கில், மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்காக இடங்களை விட்டுக்கொடுத்து, வலுவான கூட்டணியை காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் கூட்டணிக் கட்சிகளுக்காக அதிகமான இடங்களை மாநிலங்களில் விட்டுக்கொடுத்து தேர்தலைச் சந்திப்பது இது முதல் முறையாகும்.

05:10:01 on 25 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

உதயசூரியன் சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவதில் வைகோவிற்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லையாம். ஒரு தொகுதியை ஒதுக்கியது மட்டுமல்லாமல், அதில் உதயசூரியன் சின்னத்தில் தான் நின்றாக வேண்டும் என நம்மை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்துவிட்டார்களே என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி நொந்ததாகச் சொல்கிறார்கள்.

04:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க விகடன்

ராஷ்மிகா மந்தானா தனது ரசிகர் கேட்ட கேள்விக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பதில் அளித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அந்த ரசிகர் ராஷ்மிகா சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ராஷ்மிகா மந்தானா, அவள் என்னுடைய தங்கை என்று கூறியுள்ளார்.

04:40:01 on 25 Mar

மேலும் வாசிக்க ETV Bharat

அள்ளி அள்ளி கொடுப்பதற்கு தயாராக உள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் தேனி தொகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பெற்றுத்தருவார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தேனி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ரவீந்திரநாத் குமாரை பொக்கிஷமாக, வரப்பிரசாதமாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

04:26:02 on 25 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

இந்து மதத்தைச் சேர்ந்த சிறுமிகளைக் கடத்தி, மதம் மாற்றப்பட்டு இஸ்லாம் இளைஞர்களுக்குக் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பூதாகரமாக வெடித்துள்ளது.

04:10:01 on 25 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

என் வளர்ச்சியைத் தடுத்தவர் ப.சிதம்பரம் என முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

03:56:02 on 25 Mar

மேலும் வாசிக்க தினகரன்

நீங்கள் ஊற வைக்கும் டிட்டெர்ஜண்ட் கலவையில் பாதியளவு எலுமிச்சை சாறைப் பிழிந்து கலக்கி துணிகளை ஊற வைத்துப்பாருங்கள் துணி வெண்மையில் ஜொலிக்கும். அதே போன்று ஆடையின் வண்ணத்தைப் பராமரிப்பதற்கு மிஷினின் முதல் கட்டம் துவைக்கும் போது ஒரு ஸ்பூன் உப்பு கொட்டினால் நிறம் வெளுக்காமல் இருக்கும்.

03:40:01 on 25 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

திருவண்ணாமலை மாவட்டம் மலைரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், அருகிலிருந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் தனது 60 வெள்ளாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தொட்டியின் தண்ணீரைக் குடித்த முருகேசனின் ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாயில் நுரை தள்ளி இறந்துள்ளன.

03:25:02 on 25 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மக்களவைத் தேர்தலில் அத்வானி போட்டியிடாதது குறித்து, பாஜகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உமா பாரதி கூறுகையில், ”தேர்தலில் அத்வானி போட்டியிடாதது அவரது விருப்பம். அவரிடம்தான் இதைப் பற்றி கேட்க வேண்டும். இந்த குழப்பங்களுக்கு அத்வானி விரைவில் பதிலளிப்பார். அது அவர் முடிவு.” என்றார்.

03:10:02 on 25 Mar

மேலும் வாசிக்க தினமலர்

கிர்ணிப்பழத்தில் அதிக தண்ணீர் சத்து உண்டு. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழம் கண்ணுக்கு நல்லது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் எ மற்றும் சி இன்ஃ பக்சன் தீர்ப்பதோடு சருமத்தைப் பொலிவடையச் செய்யும்.

02:55:02 on 25 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி, சிறிதளவு தேனில் கலந்து குழைத்து சருமத்தில் பூசி இருபது நிமிடம் வைத்திருந்து கழுவுங்கள். சருமத்தில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை இதுபோக்கும். ஆப்பிளையும், நேந்திரம் பழத்தையும் சம அளவில் எடுத்து சிறிதளவு பால் ஆடை கலந்து ‘பேக்’ ஆக முகத்தில் பூசவேண்டும்.

02:40:02 on 25 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

கார்களின் விலையை ரூ.25 ஆயிரம் வரை உயர்த்துவதற்கு டாடா கார்ஸ் முடிவு செய்துள்ளது. காரை உருவாக்குவதற்கான மூலப்பொருட்களுக்கு ஆகும் செலவு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள டாடா நிறுவனம், சர்வதேச பொருளாதார விவகாரங்களைக் கருத்தில் கொண்டும் விலை உயர்வைக் கொண்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

02:25:01 on 25 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

”திமுக நிறுத்தும் வேட்பாளர் தகுதி பெற்றவரா என ஆராயுங்கள், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம். அதிமுக ஆட்சி கோமா நிலைக்கு சென்றுவிட்டது; தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

02:10:01 on 25 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பப்ஜி கேம் விளையாட விதிக்கப்பட்டிருக்கும் தடையை கருத்தில் கொண்டு இதேபோன்று மற்ற பகுதிகளில் கேம் விளையாட தடை ஏற்பட கூடாது என்பதால் இந்த கேமினை உருவாக்கியவர்கள் கேமில் சில மாற்றங்களை செய்திருக்கின்றனர். அதன்படி தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.

01:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

தே.மு.தி.க-வின் பெயரைச் சொல்லும்போது, தேசிய திராவிட முற்போக்கு (தே.தி.மு.க) கழகம் என்று அமைச்சர் வேலுமணி கூறிவிட்டார். வேலுமணி பேசியதில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க பிரமுகர்கள் சிறிய ஜர்க்குடன் சிரித்துக் கொண்டே, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று வேலுமணியிடம் கூறினர்.

01:40:01 on 25 Mar

மேலும் வாசிக்க விகடன்

கர்நாடகாவில் ஓலா வாடகை கார் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் வழக்கம் போல் வாடகை கார் சேவை மீண்டும் துவங்கி இருக்கிறது.

01:25:01 on 25 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

துபாயில் இருந்து சென்னை வந்த 3 பயணிகளிடம் இருந்து ரூ.1.35 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ககன்தீப் சிங், சாகித் கமல், அப்துல்காதர், காலந்தர் இர்பான் ஆகியோரிடம் இருந்து 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

01:10:01 on 25 Mar

மேலும் வாசிக்க தினகரன்

‘கீ’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அப்படத்தின் நாயகன் ஜீவா, ‘வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியைப் பார்த்துதான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது’ எனக் கூறியுள்ளார்.

12:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

கொலையுதிர்காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன், ’நயன்தாரா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றவுடன் ஒரு வகையில் நான் சந்தோஷப்பட்டேன். ஏன் என்றால்? நயன்தாரா வந்திருந்தால் சுசீந்திரன் நாளைக்கு நயன்தாராவையும் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்திருப்பார்’ என்று கூறியுள்ளார்.

12:40:01 on 25 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப் பகுதியில் மான் வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 35 கிலோ மான் இறைச்சி மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

12:25:02 on 25 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலால் உருவாகியுள்ளது. அந்நாட்டில் திடீரென வீசிய புயலால் மிசெளரி ஆறு அபாய அளவைக் கடந்து பாய்கிறது. ஆற்றங்கரையில் உள்ள அச்சுசல், வெளன்வோட் ஆகிய நகரங்களுக்குள் வெள்ளம் புகும் சூழல் உருவாகியுள்ளது.

12:10:02 on 25 Mar

மேலும் வாசிக்க தினகரன்

ராணுவ அணிவகுப்பில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அலி, பாகிஸ்தானுக்கு போர் மீது நம்பிக்கையில்லை என்றும், பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘நமது உண்மையான யுத்தம் வறுமையுடனும் வேலை வாய்ப்பின்மையுடனும்தான்’ என்றும் கூறியுள்ளார்.

11:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை, போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கோபிநாத். இவர் தனியார் டாக்ஸி நிறுவனமான ஃபாஸ்ட்ராக்கில் (Fast track ) கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஃபாஸ்ட்ராக் மூலம் வந்த சவாரியால் கொலை செய்யப்படும் நிலைக்கு சென்று, உயிருடன் திரும்பியுள்ளார்.

11:40:01 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

’வாக்குச்சாவடியில் பணியாற்றுபவர்கள் அதிமுக அரசின் மீது கோபத்தில் உள்ளதால், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாக்குச்சாவடி முகவராக செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்’ என அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.

11:25:02 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சிகிச்சைக்காக பங்களாதேஷில் இருந்து சிகிச்சைக்கு வந்த நபர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களை அதிகாரிகளிடம் கூட்டிச்சென்ற ஆட்டோ ஓட்டுநர் மருத்துவ ஆவணங்களைக் காண்பித்து நடந்தவற்றை கூறினார். இதையடுத்து அதிகாரிகள் பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

11:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

அடுத்த சில நாட்களில் ஒடிசாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரங்களை மாற்ற ஒடிசா அரசு அறிவுறுத்தி உள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பள்ளிகளின் நேரத்தை காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தின மலர்

நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்த 'கொலையுதிர் காலம்' படத்தின் இயக்குநர் சக்ரி, நடிகை நயந்தாரா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா யாரும் இல்லாமல் ஒரு டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. டிரய்லர் வெளியான சில மணிநேரத்தில் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

10:40:01 on 24 Mar

மேலும் வாசிக்க விகடன்

கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே நாட்டின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

10:26:01 on 24 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு இயந்திரம் துணை போயுள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளையர்கள் மீது மட்டும் இல்லாமல், அவர்களுக்குத் துணைபோகும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

10:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க ETV BHARAT

புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இந்தப் பட்டுப் பாதை திட்டம் செயல்படுத்துவதாக சீனா கூறுகிறது.

09:40:01 on 24 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக உருவாகிறது. விஜய் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரானவ்த்துக்கு ரூ.24 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

09:26:02 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளர் எச்.ராஜா, ’ப.சிதம்பரம் போல சிவகங் கையை கண்ணாடி வழியாகப் பார்க்க மாட்டேன். மக்களோடு மக்களாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

09:10:02 on 24 Mar

மேலும் வாசிக்க காமதேனு

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகர ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ வாங்கிக் கொடுக்காமல் கட்சிக்குள் தனக்கு எதிராக அரசியல் செய்த புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மகன் ராஜ் சத்யனுக்கு‘சீட்’ வாங்கிக் கொடுத்ததால் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் பெரியளவில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

08:56:02 on 24 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தேர்தல் ஆணையம் டிவிட்டர் கணக்கைத் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் செய்திகள் உடனுக்குடன் பொதுமக்களுக்குச் சென்று சேரும் வகையில் டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

08:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மக்களவை மற்றும் இடைத்தேர்தலையொட்டி கோவையில் கட்சிக் கொடிகளைத் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கட்சிகளின் கொடிகளும் இங்கு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் பேட்ஜ்கள், அரசியல் தலைவர்கள் முகமுடிகளும் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

08:25:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, ஈரோட்டில் போட்டியிடுகிறது. இக்கட்சியின் பொருளாளர் கணேச மூர்த்தி வேட்பாளராக களம் காண்கிறார். இந்நிலையில் தனிச்சின்னத்திற்குப் பதிலாக திமுகவின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் கணேச மூர்த்தி போட்டியிடுகிறார்.

08:18:16 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தீ விபத்தில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். மாரத்தான் பந்தயத்தை நடிகை ஹன்சிகா மோத்வானி தொடங்கி வைத்தார்.

08:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4.ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

08:06:37 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

’தமிழகத்தில் 75 சதவீத இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி இல்லை என வாக்குகளுக்காக கூறவில்லை, தேர்தலில் வெற்றி பெற்றாலும் இதே நிலைதான் நீடிக்கும். அதிமுகவுடன் இணைவதற்குப் பதிலாக கடலில் குதிக்கலாம்’ என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

07:55:02 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

பிரபுதேவா முதன்முறையாகக் காவல் துறை அதிகாரியாக நடிக்கும் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் படக்குழு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபாக் கூறியுள்ளார்.

07:40:01 on 24 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.199 மற்றும் ரூ.499 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளில் பயனர்களுக்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச கிரிகெட் எஸ்.எம்.எஸ். அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

07:25:02 on 24 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ பிடித்ததால் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. விபத்து சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க முடியாமல் 4 வாகனகளில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

07:22:14 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் இதை அறிவித்தார். ப.சிதம்பரம் தன் மகன் கார்த்திக்காக அதிகம் மெனக்கெடலில் ஈடுபட்டநிலையில் அது உறுதியாகியுள்ளது.

07:11:41 on 24 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னை திருவொற்றியூரில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

07:10:02 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

அயோத்தி விவகாரம் தொடர்பாக விவாதிக்க, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அவசர கூட்டத்தை நடத்தியது. மத்தியஸ்த குழுவினரிடம் என்னென்ன விஷயங்களை முன்வைப்பது என்பது தொடர்பாக இன்றைய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

06:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

"தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்சின் குடும்பம் மன்னர் ஆட்சி போல் செயல்படுகிறது. தேனி மக்கள் ஓபிஎஸுக்கும், அவரது மகனுக்கும் பாடம் புகட்டுவார்கள். உண்மையான அதிமுக தொண்டர்கள் தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள். என அமமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

06:35:05 on 24 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

”திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. தமிழ்நாட்டின் கதாநாயகன் ஸ்டாலின். இந்தியாவின் வில்லன் மோடி. ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் காமெடியன்கள், அன்புமணி அல்லக்கை, மொத்தத்தில் அதிமுக கூட்டணி காமெடி கூட்டணி” என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

06:15:02 on 24 Mar

மேலும் வாசிக்க ETV Bharat

காச நோய், முதலில் நுரையீரலைப் பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையைப் பாதிக்கிறது. அதுமட்டுமன்றி ஃபலோபியன் குழாயையும் பாதிக்கிறது. இதனால் குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படும் ஆபத்து இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

05:56:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

''ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருவருப்பானவை. தன் மீதான கவனத்தை ஈர்க்கவே ராதாரவி இப்படி செய்கிறார். மூளையற்றவர். அந்த குப்பைக் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்து கைதட்டியது இன்னும் கவலையான விஷயம்.” என இயக்குநர் விக்னேஷ்சிவன் கூறியுள்ளார்.

05:35:02 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த 17ஆம் தேதி காலமான மனோகர் பரிக்கரின் உடல், பனாஜியில் உள்ள கலா கலை மற்றும் கலாச்சார கல்வி நிறுவனத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வளாகம் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி, மதகுருமார்களை வைத்து மந்திரங்கள் ஓதி தூய்மைப்படுத்துதல் சடங்குகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

05:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அதிமுக அணியில் 21 இடங்களில் இரட்டை இலையும், திமுக அணியில் 24 இடங்களில் உதய சூரியனும் களத்தில் உள்ளது. கூட்டணி அடிப்படையில் திமுகவின் சின்னமே அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது...இதுவே தேர்தல் களத்தில் ஃபைனல் பட்டியல்.

04:57:01 on 24 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

பாஜகவின் எதிர்ப்பாளர்கள் என்று அறிவித்துக்கொள்ளும் சிலர், ‘இந்தப் படம் நிச்சயம் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டும். அதுதான் எதிர்க்கட்சியினருக்கு மேலும் சாதக நிலையைத் தரும்’ என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கும்போது, ‘ஜிகர்தண்டா’ படத்தின் ‘அழுகுணி குமார்’ கதாபாத்திரம்தான் நினைவில் நிழலாடுகிறது.

04:39:01 on 24 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாஜகவின் எதிர்ப்பாளர்கள் என்று அறிவித்துக்கொள்ளும் சிலர், ‘இந்தப் படம் நிச்சயம் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டும். அதுதான் எதிர்க்கட்சியினருக்கு மேலும் சாதக நிலையைத் தரும்’ என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கும்போது, ‘ஜிகர்தண்டா’ படத்தின் ‘அழுகுணி குமார்’ கதாபாத்திரம்தான் நினைவில் நிழலாடுகிறது.

04:36:01 on 24 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது என்று மோடியும், ஜேட்லியும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.” என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

04:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”டெல்லியில் இருந்து அதிகாரிகள் என்னை தொடர்புகொண்டு பேசினர். உங்களுக்கு என்ன பிரச்னை எதற்காகப் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடுகிறீர்கள் என்றனர். உங்கள் டிமாண்டை எங்களிடம் கூறுங்கள் நாங்கள் அதனைப் பூர்த்தி செய்து வைக்கிறோம் என்றார்கள்.” என அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

03:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க விகடன்

”வரும் மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும். பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸ் 60 இடங்களாக சுருங்கிப் போகும். அவர்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்.” என என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

03:39:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமலர்

”வரும் மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும். பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸ் 60 இடங்களாக சுருங்கிப் போகும். அவர்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்.” என என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

03:36:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமலர்
கவலையில் தோனி...!!

‘‘ஆடுகளம் இந்த அளவிற்கு ஸ்லோவாகவும், அதிக அளவில் பந்து திரும்பும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை.” சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

03:15:02 on 24 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

சமாஜ்வாடி கட்சி தனது நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது. இதில் அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ், ஆசம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அக்கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் சிங் யாதவின் பெயர் இடம் பெறவில்லை.

02:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்‘ டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பூஜா என்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

02:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

"ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன், தனிப்பட்ட முறையில் ஒருமையில் விமர்சித்தது கிடையாது" என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் பெண் சாதனையாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீது தனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது எனவும் கூறினார்.

02:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அரசு மற்றும் தனியார் சுவர்களில் செய்யப்பட்டிருந்த 23 ஆயிரம் தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

01:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கோயமுத்தூரில் மாவட்டம் ஆணைக்கட்டிப் பகுதியில் அமைந்துள்ளது பெரிய நாக்கம்பாளையம். இதன் எல்லைக்கோட்டுப் பகுதியில் மின்சார வசதி இல்லாமல் 17 வருடங்களாக இயங்கி வருகிறது அரசு நடுநிலைப்பள்ளி. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தப் பள்ளிக்கு தற்போதுதான் மின் இணைப்பு கிடைத்துள்ளது.

01:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் நகரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தானிய படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

01:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரை அதிகபட்சமாகக் கலாய்த்தே யு டியூபில் பெரும்பணம் சம்பாதித்து வரும் ‘பாவங்கள் பரிதாபங்கள்’ புகழ் கோபியும் சுதாகரும் தங்களது படத் தயாரிப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 17 லட்சம் நிதி திரட்டியுள்ளனர்.

12:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

கேரள மாநிலம் எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், தனது தொகுதி வருவதற்கு முன்பாக இருந்த சாலக்குடி தொகுதியில் வாக்கு சேகரித்துள்ளார். அப்போது பாஜக நிர்வாகிகள் அல்போன்சின் காதில் கிசுகிசுத்தனர். இதையடுத்து அவர் காரில் ஏறி எர்ணாகுளம் தொகுதி நோக்கி புறப்பட்டார்.

12:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க விகடன்

நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு. இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63வது படத்தின் கதை வெளியாகிவிட்டதாகப் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

12:15:02 on 24 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

’சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார்’ என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’தமிழகத்துக்கு ராகுல் காந்தியும், பிரியங்காவும் தேர்தல் பிராச்சாரத்துக்கு வருவார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.

11:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட உள்ளது. ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேச மூர்த்தி போட்டியிடுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தத் தொகுதியில் தனிச் சின்னத்திற்குப் பதிலாக உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

11:35:02 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

21 பேர் கொண்ட மகக்ள் நீதி மய்யத்தின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 18ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டார். இந்நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் வெளியிட உள்ளார்.

11:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாமக கோரிக்கை வைத்தது. இதையடுத்து புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக இருப்பதால் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கலாம் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

10:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் மோதின. இதில் சென்னை அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி குறித்து சமூக வலதளங்களில் பல்வேறு விதமான மீம்ஸ்கள் வந்து குவிந்தன.

10:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்கிறார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்கிறார்.

10:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

09:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வரும் 26ஆம் தேதி அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் குக்கர் சின்னம் வழக்கு 25ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

09:35:02 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

’மோடி எப்போதும் தன்னை நாட்டின் காவலாளி என்று கூறிக் கொள்கிறார். ஆனால் நடைமுறையில் அவர் சில குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களுக்கும், அதன் அதிபர்களின் வீடுகளுக்கும் மட்டுமே காவலாளியாக இருக்கிறார்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

09:15:02 on 24 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

கடற்படை தலைமைத் தளபதி சுனில் லாம்பாவின் பதவிக் காலம் வரும் மே மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவைகிறது. அந்தப் பதவிக்கு துணை அட்மிரல் கரம்வீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

08:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

மெக்ஸிகோவில் போபோகேடபெட் (Popocatepetl) எரிமலையில் பெரும் வெடிப்புகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 6 ஆயிரத்து 562 அடி உயரத்திற்கு சாம்பலும், புகையும் வெளியேறின. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

08:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

08:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

07:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

காங்கிரஸ் பொதுச் செயலாரக பிரியங்கா நியமிக்கப்பட்ட பின், கட்சிக்குள் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கட்சியின் பெரும்பாலான பொறுப்புகளை, பிரியங்காவிடம் கொடுக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

07:35:02 on 24 Mar

மேலும் வாசிக்க தின மலர்

பெட்ரோல் மற்றும் டீசம் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.67 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.37 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சதீஷை படுகொலை செய்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

06:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க மாலைமுரசு

”ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காகிதத்தில்கூட விமானம் செய்யத் தெரியாது. அப்படி இருக்கும்போது, விமானப்படை விமானம் செய்வதற்கான காண்ட்ராக்டை எப்படி மோடி அரசு கொடுத்தது?” என்று தேர்தல் பிரச்சாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி வருகிறார்.

06:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

1989ஆம் ஆண்டில் இருந்து, காந்திநகர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யக்கூடிய தொகுதியாகவே இருந்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பேயி, எல்.கே. அத்வானி, போன்ற முன்னிலை தலைவர்களோடு, காந்திநகர் முக்கிய பிரமுகர்களின் தொகுதியாக இருந்து வருகிறது.

06:25:01 on 24 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மீடு-வை உக்கிரமாக கையாண்ட பெயர் ஸ்ரீரெட்டி. அது மீடு-வாக இல்லாமல் வீடு வாக – பலர் சம்பந்தப்பட்டு இருந்ததால் ஸ்ரீரெட்டியின் புகார்கள பிசுபிசுத்தன. ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்த ஸ்ரீரெட்டியின் பொய்கள் பலரை காவு வாங்கியிருப்பது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.

06:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

எப்&ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

05:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க விகடன்

மாதுளம் பழத்தை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம். இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம்.

05:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சிரியாவில் ஐஎஸ் படைகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா ஆதரவு பெற்ற அந்நாட்டுப் படைகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து சிரிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியா மற்றும் இராக்கில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள்.'' என்றார்.

05:25:02 on 24 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தேனி மாவட்ட கிராமப் பகுதிகளில் விவசாயத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அழைத்துச் செல்லப்படுவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

05:10:02 on 24 Mar

மேலும் வாசிக்க காமதேனு

ராகியில் கால்சியம், புரோட்டீன்ஸ், இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உள்ளன. இது மனித உடல் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் தேவையானதைக் கொடுக்கிறது. நார்ச்சத்து அதிகமும் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும் சிறப்பான உணவு. உடல் எடை குறைப்புக்கான டயட்டில் இடம் பெற வேண்டியதும் கூட.

04:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

எடியூரப்பாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ரூ.18,000 கோடி வரை பாஜக முக்கிய தலைவர்களுக்கு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த விவகாரத்தையே பிரசார ஆயுதமாக காங்கிரஸ் கட்சியினர் எடுத்துள்ளனர்.

04:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலுக்கு பின்பு நரேந்திர மோடி ஒரு இரும்பு மனிதராக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் மோடி பிரதமராக அமர்ந்த பின்பு இங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

04:26:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, “அங்கே நடந்தது தவறுதான் என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியும். வெளியான வீடியோவில் கதறிய பெண்ணின் குரலை என்னால் 10 விநாடிகள்கூட கேட்க முடியவில்லை. மனது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறினார்.

04:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் டுவிட்டரிலும் வழங்கப்பட உள்ளது. டுவிட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிப்களாக மாற்றுவதற்கான அம்சம் குறித்து சோதனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

03:56:02 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகர் சூர்யா நடித்துவரும் காப்பான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. விரைவில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தூங்குவதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே சூர்யா என்ஜிகே படத்தின் டப்பிங் பணிகளிலும் பிசியாகியுள்ளார். எனவே வரும் மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு சிறந்த விருந்து காத்திருக்கிறது.

03:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உடல் பல உபாதைகளைச் சந்திக்கிறது. குறிப்பாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டிப்பட்டு அதன் ஓட்டம் பாதிக்கிறது. அதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால் சட்டென்று தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்பும்கூட ஏற்படுகிறது.

03:26:01 on 24 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்று இருந்தது.

03:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கிய மம்தா, 21 ஆண்டுகளுக்கு பிறகு கட்சியின் பெயரில் இருந்த காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். எனினும் தேர்தல் ஆணையத்தின் பதிவில் பழைய பெயரே நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

02:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

மேலும் வாசிக்க