View in the JustOut app
X

பிரதமர் மோடி ஒரு திருடன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்நிலையில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் , ’ராகுல் காந்தி ஓர் உதவியற்றவர், உண்மைகளை பற்றி அறியாத அவர் யாரோ எழுதி கொடுப்பவற்றைப் படித்துவிட்டு மத்திய அரசின் மீது குற்றம்சாட்டுகிறார்’ என்று கூறியுள்ளார்.

10:10:01 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’வர்மா’ படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்போஸ்டர்கள் அனைவராலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடிக்கிறார்.

10:01:11 on 23 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழகம் முழுவதும் சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் இன்று மதுரை மத்திய சிறையில் டி.ஜ.ஜி., பழனி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் சுமார் 150 போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

09:38:14 on 23 Sep

மேலும் வாசிக்க தின மலர்

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலே சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின்போது திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு சுப்ரியா சுலே வாழ்த்து தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:35:01 on 23 Sep

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆய்வுக்குப் பின்னர் பின்னர் வல்லுநர்குழு பொதுமக்களிடம் கருத்துக் கேட்க உள்ளது.

09:24:27 on 23 Sep

மேலும் வாசிக்க தினகரன்

மெர்சல் படத்தில் நடித்ததற்காக 2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லண்டனைச் சேர்ந்த IARA அமைப்பின் மூலம் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே மெர்சல் படம் பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த அயல்நாட்டுப் படமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

09:15:02 on 23 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

’யார் வேண்டுமானாலும் கூட்டம் போடலாம். முயல், ஆமை கதை போல ஆகி விடக்கூடாது. மைக்கில் பொதுப்படையாகச் சொல்ல முடியாது. அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு, ஆட்சி போய் விட்டால் நாய் கூட நம்மளை மதிக்காது’ என்று சிவகங்கையில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

08:55:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினகரன்

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைத்ததில் மத்திய அரசின் பங்கை பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே விளக்கி உள்ளார். இந்த முறைகேட்டுக்கு பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

08:35:02 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைக்கும் விதமாக ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட விமான நிலையத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர், ’தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள 2வது விமான நிலையம் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மாநிலமாக உருவாக்கும்’ என்று கூறினார்.

08:15:01 on 23 Sep

மேலும் வாசிக்க தின மலர்

போர்ச்சுகல் நாட்டின் கடற்கரை நகரமான கஸ்காய்ஸ்-இல் நடந்த வண்ணமய ஒளித் திருவிழா பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாக, லுமினா எனப்படும் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் அங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கஸ்காய்ஸ் நகரம் வண்ண ஒளிகளால் ஜொலித்தது.

07:55:01 on 23 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’ரஷியாவிடம் இருந்து சீனா போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்க முடிவு எடுத்தது, வழக்கமான நடவடிக்கைதான். இறையாண்மை கொண்ட இரு நாடுகள் இடையேயான ஒரு ஒத்துழைப்பு செயல்தான். இதில் தலையிட அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்று சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வு கியான் கூறியுள்ளார்.

07:35:02 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.87 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து , லிட்டருக்கு ரூ.78.20 காசுகள் எனவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:01 on 23 Sep

மேலும் வாசிக்க தின மலர்

புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.

06:55:01 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அவர்மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையே சாலிகிராமம் வீட்டில் இருந்த அவரை, போலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

06:40:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினத் தந்தி

இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் விரைவில் பயன்பாட்டிற்கு வரயிருக்கிறது. யுடிராக் என பெயரிடப்பட்டுள்ள இந்திய ஜி.பி.எஸ். சேவை இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பில் இருக்கும் விவரங்களை கொண்டு இயங்குகிறது.

06:26:01 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

புதுவை மாநிலத்தில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் குரும்பாபேட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைதுச் செய்தனர்.

06:10:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

வெள்ளரியையும் உருளைக்கிழங்கையும் நன்றாக கழுவி தனி தனியாக மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். இதில் தேனும், கற்றாலை ஜெல் கலந்து நன்கு கலக்கவும். இந்த கிரீமை கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் கண்களை சுற்றி சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போட வேண்டும். மறுநாள் காலை கழுவி விடலாம். இதனால் கருவளையம் போகும்.

05:55:01 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சரியான வேலை கிடைக்காததால் கடுமையான மன உளைச்சலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:40:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினகரன்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனம் அமேசான் எக்கோ போன்றே வேலை செய்யும். இரண்டு வேரியன்ட்களில் உருவாகி இருக்கும் போர்டல் சாதனத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.28,894 மற்றொரு மாடல் ரூ.21,670 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

05:26:02 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒடிசாவில் வரும் நவம்பர் மாதம் 28-ந் தேதி, 14-வது உலகக்கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை போட்டியின் துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று இசையமைக்க உள்ளதாக ஒடிசா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

05:10:02 on 23 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் தேவி 2 படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இது தவிர வைபவ்வுக்கு ஜோடியாக `டாணா' என்ற படத்திலும் நந்திதா நடித்து வருகிறார். இது ஒரு பேண்டசி போலீஸ் படமாக உருவாகி வருகிறது.

04:56:02 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

சேலம் அருணாச்சலம் ஆசாரி தெரு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.80 ஆயிரம் மதிப்பிலான குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாட்ஜில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

04:40:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர்களுக்கு இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை ரத்துச் செய்தது இந்தியாவின் அகங்காரத்தையும், எதிர்மறையான பதிலாகவும் இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.

04:25:01 on 23 Sep

மேலும் வாசிக்க தி இந்து

சாலையில் ஓடும் டாக்சிகளுக்குப் பதிலாக வானில் பறக்கும் விமான டாக்சி சேவை இங்கிலாந்தில் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்த விமான டாக்சி அமையும் என்பதால் எதிர்காலத்தில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

04:10:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த், மிசா கைதியாக நடிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

03:56:01 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மற்ற அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி எச்சரிக்கையுடனே விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

03:40:02 on 23 Sep

மேலும் வாசிக்க தி இந்து

ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் பிராட்பேன்ட் சேவையில் நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு சந்தாவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி மொத்தம் 16 மாதங்களுக்கு சேவைகளை பயன்படுத்த முடியும்.

03:25:01 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைத் திட்டத்தால் சீனாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்ட அதே நேரம், அங்கு முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மனிதவளம் குறைந்தது. இதனால், ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

03:10:02 on 23 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

`இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்திற்காக நடிகர் அதர்வா மொட்டையடித்துக் கொண்டு நடித்திருக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.

02:56:02 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதே இதற்கு காரணம் என்றும், அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

02:40:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினமலர்

டிடிசிஏ கண்டுகொள்ளாமல் இருந்த போது விராட் கோலி, இஷாந்த் சர்மா டெல்லி அணிக்கு ஆடியே ஆக வேண்டும் என்று கொண்டு வந்தது நான் தான் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அடுல் வாசன் தெரிவித்துள்ளார்.

02:25:01 on 23 Sep

மேலும் வாசிக்க தி இந்து

உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் பரா பகுதியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினால் நடத்தப்படும் தீன் தயாள் தம் என்ற மையம் உள்ளது. இந்த மையம், பசுஞ்சாணம், கோமியம் ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட சோப்புகள், சாம்புகள் ஆகியவற்றை அமேசானில் விற்பனை செய்ய உள்ளது.

02:10:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழ் சினிமாவில் பிசியான நடிகரான விஜய் சேதுபதி அடுத்ததாக ரோகநாத் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக இசைக் கருவிகளை கற்றுவருவதாக ரோகநாத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதியின் விவசாயி தோற்றம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

01:56:01 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

மது குடிப்போர் எண்ணிக்கை, மதுவால் விளையும் தீமைகள் ஆகியவை குறித்து உலக நலவாழ்வு நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதில், அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக 2016ஆம் ஆண்டில் முப்பது லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

01:40:01 on 23 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி மாடல் டீசர் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 6டி விளம்பர வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. விலையை பொருத்த வரை இந்திய மதிப்பில் ரூ.39,718 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

01:26:02 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

’ஆண் பெண் சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக,’ உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

01:10:01 on 23 Sep

மேலும் வாசிக்க தினமணி

’ஒரு பொண்ணு அழகா, ஒல்லியா இருக்கணும். வெயிட் போடக்கூடாது. இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நம்முடைய கண்ணுக்கு நாம அழகா தெரிஞ்சா போதும். உடலை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதுதான் முக்கியமே தவிர, உடம்பை வருத்திக்கிறதுல இல்லை’ என நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.

12:56:01 on 23 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக டிஜிட்டல் சந்தைகள் உருவாகி வருகின்றன. இவற்றின் வாயிலாக வர்த்தகர்களும், நுகர்வோரும் பொருட்களையும், சேவைகளையும் பரிமாறிக்கொள்கின்றனர். உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முதலிடத்திலிருக்கும் பேபால் நிறுவனம், பயனர்கள் எளிதான, வேகமான கட்டண முறைகளை விரும்புவதாக தெரிவித்துள்ளது.

12:40:01 on 23 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லியில் நடைபெற்ற 19வது தேசிய தேர்வு வாரிய விருது வழங்கும் விழாவில் பேசிய குடியரசுத் துணை தலைவர் வெங்கைய நாயுடு, ’கிராம மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் கிராமப் புறங்களுக்கு சென்று பணியாற்ற முன்வரவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

12:26:01 on 23 Sep

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு வரை இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் தான் 3ஆவது இடத்தில் இருந்து வந்தது.

12:10:01 on 23 Sep

மேலும் வாசிக்க தின மலர்

ஷட்கர்மா பயிற்சியும் உட்டியாண பந்தமும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பயனுள்ளது. செரிமான கோளாறுகள் நீங்கும். வயிறு முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரித்து வயிற்றில் உள்ள உறுப்புகளையும், அட்ரீனல் போன்ற சுரப்பிகளையும் நன்கு இயங்க ஊக்குவிக்கிறது. குடலில் தீய கிருமிகள் உண்டாவதைத் தடுக்கிறது. சோர்வை நீக்கும்.

11:56:02 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய இணையதளங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். குழந்தைகளை ஆபாசமாகக் காட்டுவது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்பான ஆட்சேபத்திற்குரிய பாலியல் தகவல்களுக்கு எதிராக “cybercrime.gov.in” என்ற இணையதளத்தில் பொதுமக்கள் புகார் செய்யலாம்.

11:40:01 on 22 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உளுந்தூர் பேட்டையில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த ஏழுமலை என்பவரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை செலுத்த உதவி செய்ததாகக் கூறி ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:26:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

மின்துறை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பியூட்டி பார்லர், பிரியாணி கடை பஞ்சாயத்துகளை பார்ப்பதற்கே திமுக தலைவருக்கு நேரம் சரியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

11:10:01 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஏ.டி.எம்மில் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்துக் கவனமாக இருங்கள். அறிமுகமில்லாத நபர்கள் உரையாட முயற்சிக்கும்போது எச்சரிக்கை அவசியம். சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏ.டி.எம்.-மில் ஏதேனும் கூடுதல் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

10:56:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜிஎஸ்டி வாயிலான வரி வருவாய் அதிகரிக்கும் வரையில் வரி விகிதங்கள் எதுவும் குறைக்கப்படாது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவ்வாறு வரிக் குறைப்பு இருந்தாலும் அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

10:40:02 on 22 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

திருப்பூரில் 7வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காவலர் சுரேஷ் திருப்பூர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

10:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’என்னை அரிச்சந்திரன் என்று கூறிய கருணாசுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், ’கருணாஸ் எல்லா சமூகங்களையும் கீழ்த்தரமான முறையில் பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது’ என்றும் கூறியுள்ளார்.

10:10:01 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மத்தியாசை காதலிப்பதாக நடிகை டாப்சி கூறியுள்ளார். இந்நிலையில் அவர், ’காதல்தான் முக்கியம்; கல்யாணம் அல்ல. நான் எப்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேனோ, அப்போது தான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை, மத்தியா சோடு ஒன்றாக வாழ்வேன்’ என தெரிவித்துள்ளார்.

09:56:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

சினிமாத் துறைக்கு வரும் முன்பாக, பல விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாள சினிமா உலகில் தனக்கென ஒரு வலுவான இடத்தையும் பிடித்திருக்கிறார். நடிப்புத் துறைக்கு வந்த 6 ஆண்டு காலங்களில் இப்படியொரு பெயரை சம்பாதிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.

09:40:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினத் தந்தி

ராசிபுரம் சிறார் கிளைச்சிறை முதல்நிலை தலைமை காவலர் முருகேசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமைக் காவலர் முருகேசனை சேலம் மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்து கண்காணிப்பாளர் ஆண்டாள் உத்தரவிட்டார். கைதியின் உறவினர்களிடம் பொருட்களைப் பெற்றதாக வந்த புகாரில் சேலம் சிறைக் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

09:25:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

’தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை’ என்ற நிலை இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்கள் பற்றைக்குறை நீங்கிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

09:10:02 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் வரும் 27ஆம் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

09:08:48 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. பார்கவுன்சில் தேர்தலில் 195 பேர் போட்டியிட்டனர். மார்ச் மாதம் பார்கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 25 பேர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

09:06:18 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான திவாகர் ரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன் போலீசாரை சரமாரியாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, போலீசாரை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசினால் உங்களின் நாக்கு துண்டாக்கப்படும் என எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ஆந்திரா இன்ஸ்பெக்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

09:04:45 on 22 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உறவுகள் என்பது நம்மை பாதுகாக்கும் அழகிய வலை. நாம் அதனை அறுத்தெறியும் போது அபாயகரமான பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தமும், தனிமையும் தற்கொலைக்கு கூட தூண்டுகோலாக மாறிவிடுகிறது. இதில், குடும்ப பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்ளும் விஷயம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

08:56:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

மண்ணச்சநல்லூர் அருகே ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாசியில் உள்ள சேட்டு வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை நடந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

08:40:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

’எங்கள் கட்சியைச் சேர்ந்த சுபாஷ் குத்தேதார் எம்.எல்.ஏ.வை இழுக்க குமாரசாமி முயற்சி செய்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை கூட இழுக்க முயற்சி செய்யவில்லை. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு பாஜக பொறுப்பு அல்ல’ என அறிக்கையில் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.

08:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் வயல்வெளிகளில் 25க்கும் மேற்பட்ட மயில்கள் பலியான வழக்கில் வயலில் விஷம் வைத்ததாக ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். புதைக்கப்பட்ட மயில்களை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

08:10:02 on 22 Sep

மேலும் வாசிக்க தின மலர்

’ஃபிடா’ படத்திற்கான ’வசிண்டே’ பாடல் யூடியூப்பில் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சாய் பல்லவியின் ஆட்டம் ரசிக்கும்படியாக இருந்தது. தென் இந்தியப் படங்களில் இதுவரை வெளியான எந்தப் படத்தின் பாடலும் இந்த அளவுக்கு அமோக ஆதரவைப் பெற்றதில்லை. அதாவது 15 கோடி ரசிகர்கள் ஒரே பாடலைப் பார்த்துள்ளது இதுவே முதல் தடவை.

07:56:01 on 22 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மினி லாரியில் சென்னைக்கு குட்கா பொருட்களைக் கடத்திச் சென்ற ஓட்டுநர் பாபு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:40:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

’அ.தி.மு.க.வினர் பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவர்களது நப்பாசை நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

07:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

கடலூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தவிடு மூட்டைகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 10,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

07:10:03 on 22 Sep

மேலும் வாசிக்க தின மலர்

ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சி தான் என ரவிசங்கர் பிரசாத் ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ‘பிரதமர் மோடி மீது ராகுல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு வருந்தத்தக்கது,’ என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

06:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டும் இடத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு ஆய்வு நடத்தி வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி வல்லுநர் குழு ஆய்வு செய்வதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

06:42:20 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை ஐஐடியில் பெருங்கடல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், கல்லூரியில் குறைந்த வருகைப் பதிவு இருந்த காரணத்தால், இறுதித் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி ஷஹல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

06:40:02 on 22 Sep

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், அங்கு 31 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் மக்கள் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், 'நாகர்கோவில் நகராட்சி மாநராட்சியாக தரம் உயர்த்தப்படும்,' என்று அறிவித்துள்ளார்.

06:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உள்நாட்டு ரெமிடன்ஸில் விதிகளை பின்பற்றாததற்காக யெஸ் வங்கிக்கு ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

06:10:01 on 22 Sep

மேலும் வாசிக்க தி இந்து

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழக அரசு மீதான விமர்சனங்கள் அடிப்படை ஆதாரமற்றவை.’ என்றார். மேலும், ‘ உலகத்தரத்தின் கல்வி தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.’ என்றும் கூறியுள்ளார்.

05:55:02 on 22 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஃபேல் ஒப்பந்தத்தில், இந்திய அரசின் பரிந்துரையால் தான் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டனி வைக்கப்பட்டது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.

05:40:02 on 22 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டஸால்ட் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரைக்கவில்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது. டஸால்ட் ரிலையன்ஸ் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பங்களிப்பும் இல்லை, பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்தை வைத்து தேவையில்லாத சர்ச்சை உருவாகிறது என அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

05:27:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வந்தடைந்தது. ஒய்வு பெற்ற தருண் அகர்வால் தலைமையிலான குழுவை மாவட்ட ஆட்சியர் நந்தூரி வரவேற்றார். தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை 8 மணிக்கு ஆய்வு செய்கிறது.

05:10:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பட்டாபிராம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் பட்டாபிராம் குளக்கரை தெருவில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைதுச் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

04:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ரஃபேல் போர்விமானம் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலந்து கூறியது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

04:40:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், சூதாட்டம், மதமாற்றத்தைத் தூண்டுதல், வதந்திகளைப் பரப்புதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க, சீனாவின் ஆபாச மற்றும் சட்டவிரோத வெளியீடுகளுக்கு எதிரான தேசிய அமைப்பு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 4 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

04:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பா.ஜனதா நடத்திய குதிரை பேர வீடியோ சிக்கி இருப்பதாகவும், அதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக கர்நாடகத்தில் முதல்-மந்திரி, குமாரசாமி எச்சரித்ததையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

04:10:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

கேரளாவில் பாலியல் புகார் வழக்கில் சிக்கிய முன்னாள் பேராயர் ஃபிராங்கோவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கோட்டயம் பாலா நீதிமன்றம் அவருக்கு செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

03:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழக அரசின் மலேசிய மணல் விற்பனை திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு மணல் விலை அதிகம் என்பதால் இதுவரை 4 பேர் மட்டுமே முன்பதிவுச் செய்துள்ளனர்.

03:40:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப்பின் தற்போது ஆசியக் கோப்பைக்கு அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய 480 நாட்கள் ஒருநாள் அணியில் இவர் இல்லை. இந்நிலையில், ’நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கவேண்டியது இல்லை, எனது திறமை எனக்குத் தெரியும்,’ என்று கூறியுள்ளார்.

03:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க தி இந்து

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஹெச்-4 விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு உரிமை 3 மாதத்துக்குள் நீக்கப்படும் என்று ஃபெடரல் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

03:10:01 on 22 Sep

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

நடிகர் விஜய் நடித்த படத்தின் பாடலின் வரிகளை, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக இயக்குநர் ராஜேஷ், "சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் முடிவுச் செய்யப்படவில்லை. வெகுவிரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.'' என்று பதிவிட்டுள்ளார்.

02:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க விகடன்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

02:40:02 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மீஞ்சூரில் சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்த வாலிபர், உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். அப்போது, மீஞ்சூர் பஸ்நிலையம் அருகே வந்த போது நிலக்கரி ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

02:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆப்கானிஸ்தானில் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 குழந்தைகள் பலியானர். ஃபர்பாய் மாகாணத்தில் காவல் நிலையத்தை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவல் நிலையம் அருகே விளையாடி கொண்டிருந்த 8 குழந்தைகள் உயிரிழந்தனர்.

02:10:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர பாஜக அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

01:56:01 on 22 Sep

மேலும் வாசிக்க தின மலர்

இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள தியுனி சாலையில் ஸ்னைல் என்ற பகுதி அருகே இன்று காலை பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஜீப், எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

01:53:57 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆஸ்திரியாவைச் சேர்ந்த சண்டைப் பயிற்சியாளரான கண்டர் சாசர்மெயர் என்பவர் தனது வெஸ்பா ஸ்கூட்டருடன் வானிலிருந்து குதிக்க வேண்டும் என்று ஆசை கொண்டார். இதையடுத்து, சிறிய ரக விமானம் ஒன்றின் மூலம் 13 ஆயிரத்து 500 அடி உயரத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்து ஸ்கூட்டரில் அமர்ந்தவாறே விமானத்திலிருந்து குதித்தார்.

01:52:04 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அதிகம் பணம் புழங்கும் இடம் சினிமா என்பதனாலும் சினிமாவில் நுழைந்து பெரிய ஆளாக வேண்டும் எனும் மோகம் இளைஞர்களுக்கு அதிகரிக்கின்றது. இது ஒரு புறம் இருக்க சினிமா துறைக்குள் வந்தவர்களோ அதில் நிலைக்க முடியாமல், காதல் தோல்விகளாலும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

01:42:49 on 22 Sep

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் 'Village Rockstars' என்ற இந்தியத் திரைப்படம் பங்கேற்க உள்ளது. அசாமியத் திரைப்படமான 'Village Rockstars' பங்கேற்கிறது என்று FFI தலைவர் தெரிவித்துள்ளார். 'Village Rockstars' ரிமாதாஸ் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம் ஆகும்.

01:40:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது, இந்திய தேசிய கீதத்தைப் பாடி சமூக வலைதளவாசிகள் மனதில் இடம்பிடித்துவிட்டார் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர்.

01:32:02 on 22 Sep

மேலும் வாசிக்க விகடன்

உத்தரப் பிரதேச மாநிலம் பாராய்ச் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் தொற்று நோயால் 450க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 45 நாட்களில் மட்டும் 71க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

01:25:03 on 22 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மணிரத்னம் இயக்கத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள `செக்கச் சிவந்த வானம்' படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பிரகாஷ்ராஜை மையமாக வைத்து, அடுத்து அந்த இடத்துக்கு யார் வருவது என்பது போன்ற காட்சிகளுடன் டிரெய்லர் முழுவதும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்துச் சிதறி பரபரப்பாக உள்ளது.

01:22:59 on 22 Sep

மேலும் வாசிக்க விகடன்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி, உலகம் முழுவதும் “வாகனங்களில்லா தினமாகக்” கொண்டாடப்படுகிறது. நாம் அனுதினமும் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் எரிபொருளுக்கும் மாற்றாகவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இந்நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

01:11:39 on 22 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆந்திர மாநிலத்தில் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு, ’நாங்கள், மனிதனை சாப்பிடும் புலிகள் அல்ல. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பதற்காக மாநில அரசுகள் பயப்படத் தேவையில்லை; தைரியமாக செயல்படலாம்’ எனக் கூறினார்.

01:10:01 on 22 Sep

மேலும் வாசிக்க தின மலர்

’அரசுப் பள்ளிகளை மூடுவதைக் கைவிட்டு தனியார் பள்ளி கட்டமைப்பைப் போல் அரசுப் பள்ளி கட்மைப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்து தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்’ என்று மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.

12:55:09 on 22 Sep

மேலும் வாசிக்க விகடன்

விகரம் நடிப்பில் வெளிவந்த சாமி 2 படத்தில், ’விஜய் சேதுபதியா இருந்தா என்ன... இன்னைக்கு விடமாட்டேன்’ என்று சொல்லியபடி சூரி ஒருவரை அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு, ’இந்தக் காட்சியை நீக்கவில்லையென்றால், நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சூரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

12:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

’ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ’ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்த பேட்டி ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தம் குறித்து உண்மை நிலையை அறிய முறையான விசாரணை நடத்த வேண்டும்’ என்றும் வலிறுத்தியுள்ளார்.

12:52:54 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ராட்சசன். இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநோளில் தான் விஜய் சேதுபதியின் 96 படமும், விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:12:43 on 22 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வரும் 30ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

11:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

14வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவம்பர் 28ஆம் தேதி ஒடிசாவில் நடக்கிறது. இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று டைட்டில் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

11:39:18 on 22 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மேலும் வாசிக்க