View in the JustOut app
X

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என மேற்குவங்க அரசு அறிவித்து 4 நாட்களே ஆன நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் தங்கள் மாநிலத்திலும் புதிய சட்டம் அமல்படுத்தப்படாது என அறிவித்துள்ளார்.

05:30:13 on 16 Sep

மேலும் வாசிக்க தினமலர்

சென்னையில் 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். மேலும் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இவரை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இவரிடமிருந்து, போலி ஆதார் அட்டை, போலி சப்-இன்ஸ்பெக்டர் அடையாள அட்டை, போலி வாக்காளர் அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

04:55:02 on 16 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

மத்தியப்பிரதேச மாநிலம் சீயோனி என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது நடைபெற்ற விழாவின் போது தாகூர் என்ற நபர் நாகினி நடனம் ஆடியுள்ளார். மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது திடீரென அவர் கீழே விழுந்தார். இதில் தாகூர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

04:25:02 on 16 Sep

மேலும் வாசிக்க Behind Woods News

சென்னை மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் சுந்தரி என்பவரின் கடைக்கு, தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் இருந்தும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்தும் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

03:57:01 on 16 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிதம்பரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுபடுகையில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் முதலைகளின் கூடாரமாக மாறிவருகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார். கூத்தன் கோயில் கிராமத்தில் 10 அடி நீளமுள்ள 800 கிலோ எடையுள்ள முதலை பிடிபட்டது.

03:30:11 on 16 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு தனது கட்சிக்காரர்களைக் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சிவசேனாவும் பாஜகவும் வாக்கெடுப்புக்கு முன்னர் தொகுதி பங்கீடு குறித்து கலந்துரையாடுவார்கள் என நம்பப்படுகிறது.

03:03:01 on 16 Sep

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

உத்தரகாண்டின் டேராடூன் புறநகர் பகுதியில் உள்ள சார்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் ஹாசன். இவர், தனது மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பங்கஜ் குமார் தலைமையிலான காவலர்கள் மாட்டுவண்டிக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து ரசிது வழங்கியுள்ளனர்.

02:27:01 on 16 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னை, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்கள் மற்றும் கோயில்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதனையடுத்து, சிறப்புப் படையினர் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

01:57:02 on 16 Sep

மேலும் வாசிக்க தினமணி

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசு வரும் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே பரூக் அப்துல்லாவை நேற்று இரவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

01:38:15 on 16 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

'கோட்சே காந்தியை சுட்ட பிறகு வன்முறை வெடித்தது. கோட்சேவின்‌ துப்பாக்கியை உடைக்கும்படி பெரியார் கூறினார். கோட்சே வெறும் துப்பாக்கிதான் என்பது பெரியாரின் கருத்து. ஒரு நிகழ்வின் பின் ஒரு சித்தாந்தம் உள்ளது என பெரியார் கூறினார்' என காப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

01:32:53 on 16 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்குச் சென்று, ‘ஹவுடி, மோடி' (Howdy, Modi) என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் கலந்து கொள்வார் என்று வெள்ளை மாளிகை அதிகாரபூர்வத் தகவலை தெரிவித்துள்ளது.

01:27:01 on 16 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

"ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு நிறுவனம் அல்ல, மாறாக நாட்டையும் உலகத்தையும் மாற்றக்கூடிய ஒரு புரட்சி அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இல்லை எனில் இந்துஸ்தான் இருந்திருக்க முடியாது." என ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஸ் பூனியா கூறியுள்ளார்.

12:55:02 on 16 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று 74வது பிறந்தநாள். இந்நிலையில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், "அன்புள்ள அப்பா, இன்று உங்களுக்கு 74 வயதாகிறது. எந்த 56-ஆலும் உங்களைத் தடுக்க முடியாது” என கூறியுள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் இந்தக் கடிதம் தேசிய அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.

12:27:01 on 16 Sep

மேலும் வாசிக்க விகடன்

அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. நேரலை செய்வதற்கான வாய்ப்புக்கள் எந்த அளவிற்கு உள்ளன என அறிக்கை சமர்ப்பிக்க பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

12:09:02 on 16 Sep

மேலும் வாசிக்க தினகரன்

அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. நேரலை செய்வதற்கான வாய்ப்புக்கள் எந்த அளவிற்கு உள்ளன என அறிக்கை சமர்ப்பிக்க பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

12:06:01 on 16 Sep

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அரசு சார்பாக ஆறுதல் சொல்ல கூட யாரும் வரவில்லை, என சுபஸ்ரீயின் தாயார் கீதா வேதனை தெரிவித்துள்ளார்.

11:57:02 on 16 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இந்த போட்டியில் அதிகம் நன்றாக விளையாடி தர்ஷன் முதல் இடத்தை பிடித்திருப்பதாக புரொமோவில் தெரிகிறது.

11:25:02 on 16 Sep

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,626க்கும் ஒரு சவரன் ரூ.29,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40க்கு விற்பனையாகிறது.

10:57:46 on 16 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மியான்மர் நாட்டின் மாண்டலே நகரில் நடைபெற்ற உலக பில்லியர்ட்ஸ் இறுதிப் போட்டியில் மியான்மர் வீரர் நே த்வே ஊ-வை இந்தியாவின் பங்கஜ் அத்வானி 6-2 என்ற ஸ்கோரில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

10:27:01 on 16 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஷ்மீர் விஷயத்தில் அரசின் நடவடிக்கைக்கு பாஜகவின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும், காஷ்மீர் பிரிவினைவாதிகளும், இந்தியாவில் எதிர்க்கட்சியினர் சிலரும், இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, இது கண்ணீரில் போய்தான் முடியும் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

10:00:17 on 16 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைவில் சென்றடையவும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வரும் நிலையில், அதை முன்னுதாரணமாகக் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியையும் மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

09:27:01 on 16 Sep

மேலும் வாசிக்க தினமணி

புதுச்சேரியில் இப்போது இருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தே தீருவது என்றும் அதற்கு பதில் பாஜக ஆட்சியை கொண்டுவருவது என்றும் திட்டமிட்டு செயலாற்றியது டெல்லி. அந்த திட்டம்தான் பலத்த அடி வாங்கியிருக்கிறது. இதனால் கடைசி ஆயுதமாக காங்கிரஸ் பிரமுகர்கள் மீது ரெய்டு, சிபிஐ கேஸ் என மிரட்டத் திட்டமிட்டுள்ளது டெல்லி.

09:00:18 on 16 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் உள்ள பாழுங் கிணற்றில் இருந்து மனித உடல் பாகங்கள் இருந்த 119 பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் 44 பேரை கொலை செய்து அவர்களது உடல்பாகங்களை துண்டு துண்டாக்கி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றுக்குள் வீசியது தெரியவந்துள்ளது.

08:25:01 on 16 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை எடுத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதையும், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

07:57:02 on 16 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

போக்குவரத்து விதி மீறல் அபராதத்தைக் குறைக்க வலியுத்தி நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி லாரி ஸ்டிரைக் நடக்கிறது. அன்று தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளை இயக்க மாட்டோம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

07:27:02 on 16 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.85, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.15 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

06:59:14 on 16 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

``தற்போதைய சூழலில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ அமைப்பு மீதும், தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

05:55:01 on 16 Sep

மேலும் வாசிக்க விகடன்

கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், சென்னை வில்லிவாக்கதத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவதாகவே, அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கார்த்திக்குக்கும், மாதவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

04:55:01 on 16 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் வில்லினூவ் என்ற நகரில் உள்ள ஒரு பூங்காவில், மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்துவைத்தார். அந்த இடத்திற்கு காந்தி சதுக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

03:55:02 on 16 Sep

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சியோமி நிறுவனம் சார்பில் இந்தியாவில் Mi பேண்ட் 4 சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கென டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது.

02:55:01 on 16 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

சவுதி அரேபியாவில், தாக்குதலுக்குள்ளான இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, சேதமடைந்த ஆலைகளில் அடுத்த இரு நாட்களில் மீண்டும் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு, நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:55:01 on 16 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நமது நாடு இப்போதுள்ள சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா, இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளார்.

12:55:02 on 16 Sep

மேலும் வாசிக்க தினமணி

மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்து என்பவரின் மனைவி சக்திகாளி. நிறைமாத கர்ப்பிணியான இவர், புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

11:55:02 on 15 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளரும் வழக்கறிஞருமான பூவரசன் தனது மனைவி பூவரசிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தயாளிஸ்வரன், தனியார் ரத்தப் பரிசோதனை மையத்திற்கு செல்ல பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

10:57:01 on 15 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

திருப்பூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், 5 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடியுள்ளார். பின்னர், அருகே உள்ள வீட்டிலும் திருட முயன்று, அங்கு பணம், நகைகள் ஏதும் இல்லாததால், அங்கிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான டிவியை தூக்கியெறிந்துள்ளார்.

10:00:15 on 15 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பிகில் இசைவெளியீட்டு விழாவை தான் தொகுத்து வழங்க இருப்பதாக நடிகையும், தொகுப்பாளினியுமான ரம்யா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 19ஆம் தேதி நடைபெறும் இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு சன்.டிவியில் ஒளிபரப்பாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

09:00:06 on 15 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மரபான போர் மூண்டால், அதில் பாகிஸ்தான் தோற்றுவிடும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அது இறுதியாக அணுஆயுதப் போரில்தான் முடியும் என்று அறிவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

08:27:02 on 15 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்து தயாராக உள்ள 65வது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற நெற்றிக்கண் படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரஜினிகாந்த் மற்றும் நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனத்துக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

08:00:10 on 15 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 6.5 சதவிகிதம் சரிந்து 1.86 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல, இறக்குமதியும் 13.45% அளவுக்கு சரிந்து, 2.81 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

07:27:01 on 15 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

”நாட்டில் வேலைவாய்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது. எனவே, வேலைக்கு இங்கு பஞ்சமில்லை. ஆனால், அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் தான் நம் நாட்டில் இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும்பட்சத்தில், அவர்கள் வழங்கும் வேலைக்கு இங்கு தகுதியானவர்கள் இல்லை” என அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார்.

07:00:00 on 15 Sep

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

”அரசு திட்டம் துவக்கப்படும் இடத்தில் அந்த திட்டத்தை விளக்கும் வகையில் ஒரு பேனர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அந்த திட்டம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள முடியும். திருமணமோ, அரசு விழாவோ அதனை விளக்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் ஒரு பேனர் வைப்பதில் தவறு இல்லை'' என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

06:29:58 on 15 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

"பாஜகன்னா உங்களுக்கெல்லாம் எளக்காரமா இருக்கான்னு" அங்கிருந்து கடுமையான குரலில் சொல்ல அதிமுக தலைமை அதிர்ந்து போனது. இதனால் ஷாக்கான எடப்பாடி, அப்படியெல்லாம் இல்லை என்று டெல்லி பாஜக தலைமையை சமாதானம் படுத்தியுள்ளார்.

05:57:02 on 15 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

05:26:53 on 15 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஆவின் நெய் 1 லிட்டர் ரூ.460-ல் இருந்து ரூ.495ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் தயிர் 1 லிட்டர் ரூ.25-ல் இருந்து ரூ.27 ஆக அதிகரித்துள்ளது. ஆவின் பால்கோவா 1 கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.520 ஆக விலை அதிகரித்துள்ளது. பன்னீர் 1 கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக அதிகரித்துள்ளது.

04:57:02 on 15 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஆந்திராவின் தேவிபட்டனம் அருகே கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. படகில் அதிக பாரம் ஏற்றியதால் இந்த விபத்து நடந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 60 பேரில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.

04:26:32 on 15 Sep

மேலும் வாசிக்க தினமலர்

கோவையில் தங்க நகைப் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருபவர் பாருக் கெளசீர். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர், பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் துப்பாக்கி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் பகிரப்பட்டிருப்பதைப் பார்த்த கடையின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

04:00:03 on 15 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பஞ்சாப் மாநில போதை தடுப்பு பிரிவினர், அமிர்தசரஸில் ஒரு வீட்டில் சோதனையிட சென்றனர். அப்போது பல்தேவ் சிங் என்ற உதவி ஆய்வாளரை அங்கிருந்த கும்பல் தாக்கியது. இதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த 3 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

03:29:54 on 15 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நாவல் பழத்தில், எரிசக்தி, மாவுச்சத்து, நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துகளான தயாமின், ரிபோஃப்லோவின், நியா சின், வைட்டமின் ஏ (அ) சி ஆகியவற்றோடு சுண்ணாம்புச்சத்து, இரும் புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், உப்பு மற்றும் நீர்ச்சத்து ஆகியன மிகுதியாக உள்ளது.

03:00:07 on 15 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 27ஆம் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது. சட்டத்தை திரும்பப் பெறும் வரை லோக் அதாலத், சமரச மையத்தில் வழக்குரைஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

02:27:01 on 15 Sep

மேலும் வாசிக்க தினமணி

தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், ”ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. மேலும் கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது” என்றார்.

01:57:02 on 15 Sep

மேலும் வாசிக்க தினகரன்

"மனசாட்சி இல்லாத எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாய கடன்கள் ரத்து, கல்விக் கடன் ரத்து, வங்கிக் கடன் ரத்து என்று அளவுக்கு அதிகமாக பொய் சொல்லிவிட்டார். ஸ்டாலினால் வெறும் சட்டையை மட்டும் தான் கிழிக்க முடியும்." என அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

01:27:01 on 15 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 18,000 கன அடியிலிருந்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்காக விநாடிக்கு 18,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 9,00 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

12:59:55 on 15 Sep

மேலும் வாசிக்க தினகரன்

அமேசான் நிலத்தைக் காக்க கயாபோ இனக்குழுவும், பனரா இனக்குழுவும் , ஒன்றிணைந்துள்ளது. "இப்போது எங்களுக்கு எதிராக எந்த பிணக்கும் இல்லை. எங்களது ஒரே எதிரி எங்களது நிலத்தை அபகரிக்கப் பார்க்கும் சயீர் பொல்சனாரூ தலைமையிலான பிரேசில் அரசுதான்” என இனக்குழுவினர் கூறியுள்ளனர்.

12:30:02 on 15 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”எங்கள் ஊரில் அனைவரும் குடும்பமாக வந்து வரவேற்பு அளித்ததைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உலககோப்பை போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன்.” என இளவேனில் தெரிவித்துள்ளார்.

12:00:05 on 15 Sep

மேலும் வாசிக்க விகடன்

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏராளமான திமுகவினரும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

11:55:01 on 15 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது ரகசிய இடத்தில் வைத்து கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

11:27:01 on 15 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

சவுதி அரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் எண்ணெய் கிணறு பற்றி எரிந்தது. தற்போதுவரை 5 மில்லியன் பேரல் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுவதால் அந்த எண்ணெய் கிணற்றில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

10:59:56 on 15 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தெலங்கானா மாநிலம் ஆழ்வார் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு அனிதா என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கோபால் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இதனையறிந்த அனிதா, கோபாலை சரமாரியாக தாக்கினார்.

10:27:01 on 15 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வெப்பச்சலனம், காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

10:00:04 on 15 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

09:25:02 on 15 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சில வாரங்களுக்கு முன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ஏற்கெனவே பல முறை பால் விலையை உயர்த்திய தனியார் பால் நிறுவனங்கள், அரசு உயர்த்தியதை ஒட்டி மீண்டும் விலையை உயர்த்திவிட்டன. இதனால் தனியார் பால் லிட்டர் 60 ரூபாயைத் தொட்டிருக்கிறது.

09:00:05 on 15 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் இதுவரை 3 ஆயிரத்து 964 பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைக்கப்படும் பேனர்கள் குறித்து, 9445190205; 9445190698; 9445194802 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

08:25:01 on 15 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் குருசடைத்தீவு மற்றும் பூமரிச்சான் தீவு கால்வாய் பகுதியில் வேகமாக செல்லும் நீரோட்டங்கள் தீவுகளுக்கு அப்பால் ஒன்றாக சந்திக்கும்போது, ஏற்படும் மோதலால் கடலில் ஏற்படும் வெண்நுரை திட்டு அதிகளவில் நேற்றும் மிதந்து சென்றது.

08:01:37 on 15 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.85, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.15 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:47:35 on 15 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுக்கோட்டை பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கும் முறங்கள் போன்றவற்றிற்கும் பதிலாக பனைமட்டை, ஈச்சமட்டையில் தயாரிக்கப்படும் பைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த வகை கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் வாழ்வில், மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

06:55:01 on 15 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

“ மன அழுத்தங்கள் இல்லாமல், ரிலாக்ஸாக இருங்கள். பழைய ஆடைகள் இறுக்கமாக உள்ளது என தூரம் வைக்காதீர்கள். மீண்டும் அவற்றை போடுவேன் என சபதம் ஏற்று எடுத்து வையுங்கள். அனைத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள்.” என நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

04:55:01 on 15 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

டிவி நிகழ்ச்சி அரசியல் பணிகளுக்கிடையே இந்தியன் 2 படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார் கமல்ஹாசன். தற்போது படப்பிடிப்பு குழுவிற்கு கமல் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளாராம். அது படப்பிடிப்பை தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் பட வேலைகள் வேகமாக நடைபெறுகிறதாம்.

03:55:02 on 15 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நடிகை அசின் மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம், அசினை விரைவில் இந்தி படத்தில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. தமிழ் படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது என்றேதான் கூறப்படுகிறது.

02:55:01 on 15 Sep

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஒசாமா பின்லேடனை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார் ஹம்சா பின்லேடன். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு தொடர்ந்து 30 வயதான ஹம்சா பின்லேடன் ஆடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில் டிரம்பும் அதனை உறுதிசெய்துள்ளார்.

01:55:01 on 15 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

”ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினைக் கொண்டு வருவது என்பது பொதுத்தேர்வுகளின் பெயரால் குழந்தைகள் மீது செலுத்தப்படும் ஆகப்பெரும் வன்முறையாகும். இது உளவியலாக அவர்களைச் சிதைத்து அவர்களது தனித்திறன்களையும், சமூகப்பார்வையையும் முற்றிலும் அழித்தொழிக்கும் கொடுஞ்செயல்.” என சீமான் கூறியுள்ளார்.

12:55:02 on 15 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

ரியல்மி பவர் பேங்கில் இருவழி 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் டைப்-ஏ போர்ட்களை கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தியாவில் இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

11:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

”துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் போல 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சி நடத்தப்படும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

10:57:01 on 14 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

09:57:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

இம்மாத இறுதிக்குள் மீண்டும் திரைக்கு வருவேன் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், வாழ்க்கையில் சனியன் இருக்கத்தான் செய்யும் எனக் கூறியுள்ள வடிவேலு, திரைப் பயணத்தை தொடர்வது உறுதி என கூறியுள்ளார்.

09:00:03 on 14 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன். இந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.

08:27:01 on 14 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னை, தாம்பரம் அருகே எருமையூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரவி. இவரது மனைவி ரேணுகா கடந்த 2006ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மனைவியின் நினைவாக தாம்பரத்தில் கோயில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.

07:59:52 on 14 Sep

மேலும் வாசிக்க தினமணி

ஊனமுற்றோர், மன நோயாளிகள், புற்றுநோய் நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, நோயாளிகள், இதய அறுவை சிகிச்சைக்கு பயணிக்கும் இருதய நோயாளிகள் போன்றவர்களுக்கு ரயில்வே அதிகபட்சமாக 75% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒரு நோயாளி இந்த சலுகையை விரும்பினால், அவர் மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

07:30:07 on 14 Sep

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு இளைஞர்களின் இப்போதைய கனவுக் கன்னி என்றால் அது லாஸ்லியா தான். இந்நிலையில், பிரபலமான சரவணன்-மீனாட்சி சீரியலை இயக்கிய பிரவீன், ”நான் இயக்கப்போகும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக லாஸ்லியா இருப்பார்” என கூறியுள்ளார்.

07:00:15 on 14 Sep

மேலும் வாசிக்க சினி உலகம்

சவுதி அரேபியாவின் இரு மிகப்பெரிய கச்சா எண்ணெய்த் தொழிற்சாலை மீது இன்று (செப்டம்பர் 14) ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்பதால் உலகம் முழுதும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

06:30:12 on 14 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நாளை முதல் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

05:55:02 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்

Gionee Smart 'Life' Watch இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோனியின் இந்த ஸ்மார்ட் 'லைஃப்' வாட்ச் 24 மணி நேரம் இதய துடிப்பை கண்கானிக்கும் ஹார்ட் ரேட் சென்சாருடன் கலோரி மீட்டர், உடற்பயிற்சி, உடல்நலம் மற்றும் பல விளையாட்டு செயல்பாடு என அனைத்தையும் கண்கானிக்கும் திறனை கொண்டுள்ளது.

05:30:08 on 14 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால்தான் கவலையினால், டென்ஷனால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும். உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நன்றாக இயங்கும்.

05:00:08 on 14 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால்தான் கவலையினால், டென்ஷனால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும். உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நன்றாக இயங்கும்.

04:55:01 on 14 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

கூகுள் நிறுவனத்தின் கிளை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிறது. கூகுள் நிறுவனம் 2016ஆம் ஆண்டு சுமார் 13 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய பிரான்ஸ் அரசு, 2 ஆண்டுகளுக்கு மேலாக கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை கண்டுபிடித்தது.

04:00:11 on 14 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

இந்தியாவை இணைக்கும் மொழி இந்தியாகதான் இருக்கும் என அமித் ஷா டிவிட்டரில் பகிர்ந்துள்ளதால் #StopHindiImposition என்னும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில்தான் இந்த #StopHindiImposition என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிறது.

03:27:01 on 14 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு என ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகவும், அது செப்டம்பர் 24ஆம் தேதி நடக்கலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வெளிநாட்டு தூதர்களை சந்தித்து மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ். பற்றி விளக்கியிருக்கிறார்.

02:57:01 on 14 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான டோனி எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உண்டு. இதனையடுத்து டோனி கேப்டனாக பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும் இந்நிலையில் #12YEARSOFCAPTAINDHONI என்ற ஹேஸ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

02:29:57 on 14 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஈரோடு பஸ் நிலையத்தில் பிக் பாக்கெட் ஆசாமிகள் மற்றும் வழிப்பறி திருடர்களை போலீசார் கண்காணித்து ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் மறு பக்கம் காதல் ஜோடி மற்றும் கள்ளக்காதல் ஜோடியினரும் தங்களது செக்ஸ் விளையாட்டில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

02:00:01 on 14 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

கர்நாடக அரசு ஜம்முவில் நிலம் வாங்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி தெரிவித்துள்ளார். மேலும் அவர், இரு யூனியன் பிரதேசங்களிலும் முதலீடு செய்வோம் என்றும், சுற்றுலா விடுதிகள் அங்கு கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

01:25:01 on 14 Sep

மேலும் வாசிக்க விகடன்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ் கோடிக்கு வரும் இளைஞர்கள், ஆள், அரவமற்ற இடங்களில் உள்ள பழமையான கட்டிடங்களின் உச்சிக்குச் சென்று புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இந்த பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

01:00:21 on 14 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பிகில் பாடல் வெளியீட்டு விழா குறித்து படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, ”வார நாளில் நிகழ்ச்சி நடப்பதால், நேரலை ஒளிபரப்பு சாத்தியமில்லை. சன் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது டிஆர்பி ரேட்டிங்குகளில் சாதனை நிகழ்த்தப்படும்” என்று கூறியுள்ளார்.

11:57:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினமணி

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில் அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

11:27:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்

அருணாச்சல பிரதேசத்தில் வருகிற அக்டோபர் மாதம் போர் ஒத்திகையை நடத்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி ஹிம் விஜய் என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சியில் முதல் முறையாக 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சீனாவின் எல்லைக்கு அருகில் ஹிம் விஜய் போர் ஒத்திகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

11:00:07 on 14 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சீனாவில் புவியீர்ப்பு விசைக்கே சவால் விடும் வகையில் வரை ஆடுகள் செங்குத்துப் பாறையில் நடந்து செல்வது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த்யுள்ளது. திபெத்தியப் பீடபூமியில் உள்ள கேட்ஸ் பள்ளத்தாக்கில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

10:25:01 on 14 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. வேலூர், ஆம்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

10:00:06 on 14 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பயணிகள் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், தாம்பரம்-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 4, நவம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82615) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

09:27:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினமணி

தேவேந்திர சமுதாயத்தை தொடர்ந்து அதிமுக புறக்கணிப்பதாக மக்கள் நம்பத் தொடங்கினால் அது அதிமுகவுக்கு ஏற்கனவே இருக்கும் சாதி முத்திரையை உறுதிப்படுத்தி வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’ என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் எடப்பாடிக்கு எச்சரிக்கைத் தகவல்கள் சென்றுள்ளன.

08:57:01 on 14 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”நல்ல ‘கேட்ச்’ பிடிப்பதற்கு பந்தின் மீதே கண்பார்வையை வைத்திருப்பதும், உண்மையான விளையாட்டு உணர்வு கொண்டிருப்பதும் முக்கியம். இல்லாவிட்டால், புவிஈர்ப்பு விசை, கணிதம், ஊபர்-ஓலா ஆகியவற்றைத்தான் குறை சொல்ல வேண்டி இருக்கும்.” என மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.

08:27:02 on 14 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறுவது, ராஜினாமா செய்வது, பதவி உயர்வில் செல்வது போன்ற காரணங்களால் காலியிடம் ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 1,079. இதில் இந்த மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி 414 நீதிபதி பதவிகள் காலியிடங்களாக உள்ளன.

07:57:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.78 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 69.09 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்தும், டீசல் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்தும் விற்பனையாகி வருகிறது.

07:32:43 on 14 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க