View in the JustOut app
X

கோவா சட்டசபை சபாநாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த், புதிய முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், கோவா சட்டப்பேரவையில் இன்று பிரமோத்சாவந்த் தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கு கோருகிறது.

08:15:02 on 20 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும், தேர்ச்சியா, இல்லையா என்பதைக் குறிக்கும் கல்வி சான்றிதழும் தனித்தனி சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண், கல்வி என இரண்டுக்கும் ஒரே சான்றிதழாக வழங்கப்பட உள்ளது.

07:55:01 on 20 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:40:01 on 20 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவை, பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை, திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்துத் தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தேர்தல் பரப்புரையின்போது, சிறுவர் சிறுமிகளுடன் ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.

07:37:43 on 20 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கலை சினிமாஸ் தயாரிப்பில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த படம் தாதா 87. இவர் அடுத்ததாக, பிரைன் எனும் புதுவித சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை கலை சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக மாதவனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

07:25:01 on 20 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

ஐநா பொது சபையில் கடந்த ஆண்டு ஐநாவின் அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில், ஐநா சபையில் பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு மட்டும் 259 புகார்கள் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

07:11:02 on 20 Mar

மேலும் வாசிக்க தினகரன்

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டு சீசன் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசனையும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள். கமல்ஹாசன் மக்களவைத் தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெற்றுவிட்டால் இந்த சீசனை அவர் தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

06:55:01 on 20 Mar

மேலும் வாசிக்க தின மலர்

தென்கொரிய வாகன உற்பத்தியாளர்களான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மற்றும் கியா மோட்டர்ஸ் கார்ப் ஆகியவை இணைந்து 300 மில்லியன் டாலர் முதலீட்டினை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்திய ஓலாவில் முதலீடு செய்யவுள்ளது.

06:41:01 on 20 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இலங்கையில் வறட்சியுடனான காலநிலை நிலவும் தருணங்களில் செயற்கையான முறையில் மழையை உருவாக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதில் இலங்கை அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளது. தாய்லாந்து நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

06:25:02 on 20 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றை மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் ஆரோக்கியமானதாக இருக்காது என்கிறார் உணவியல் நிபுணர்.

06:11:01 on 20 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியன் யூனியன் வங்கியில், ஸ்பெசலிஸ்ட் ஆபிசர்ஸ் பணிக்கு 181 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05:55:02 on 20 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வந்த ராஜேஸ், சதீஸ் ஆகியவர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27 சவரன் தங்க நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

05:40:01 on 20 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கை தாக்கிய இடை புயல் தாக்கியதில் ஆறுகள் உள்ளிட்ட பல இடங்களில் சடலங்கள் மிதப்பதால், பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று அந்நாட்டு அதிபர் பிலிப் நையுசி தெரிவித்துள்ளார்.

05:25:02 on 20 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தில் செயல்படும் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி நிர்வாகி ரவி, கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் ரவியைக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:10:01 on 20 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கோடைக் காலம் என்பதால் அதிக தாகம் எடுக்கும். எனவே போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். கற்றாழைச் சாறு, நன்னாரி சர்பத் அருந்துவது அதிக சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி, சிறுநீர்ப் பாதை எரிச்சல், வெள்ளைப் படுதல் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு தரும்.

04:55:01 on 20 Mar

மேலும் வாசிக்க விகடன்

IRCTCஇல் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு 10% முதல் 100% வரை வெவ்வேறு வகைக்கு கீழ் சலுகைகளை வழங்குகிறது இந்தியன் ரயில்வே. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், போரின் காரணமாக கணவனை இழந்த பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயணச் சீட்டுகளில் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

04:40:02 on 20 Mar

மேலும் வாசிக்க ie தமிழ்

பொதுத்துறை நிறுவனமான ‘Rashtriya Chemicals and Fertilizers Limited'-இல் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

04:26:01 on 20 Mar

மேலும் வாசிக்க தினமணி

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.

04:10:01 on 20 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கடன் சுமையில் திவாலாகும் நிலையிலுள்ள எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் வாங்கும் நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்டி) நிபந்தனை ஒப்புதல் வழங்கியுள்ளது.

03:55:01 on 20 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் மூன்று இடங்களை முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

03:25:01 on 20 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மதுரையில் அமமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகனுமான டேவிட் அண்ணாத்துரை நாம் தமிழர் கட்சி வேட்பாளரான சீமானின் மைத்துனர் என்பதால் அவரை எதிர்த்து சீமான் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

03:10:01 on 20 Mar

மேலும் வாசிக்க காமதேனு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அயனம்பாளையத்தில் வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருட்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

02:55:01 on 20 Mar

மேலும் வாசிக்க EENADU

அமெரிக்கா மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’ எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்குள் டெஸ்லா தடம் பதிக்கும் என அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை தனது கார் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு செலவே செய்ததில்லை.

02:40:02 on 20 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 465 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 8 தங்க கட்டிகளை சூட்கேஸுக்குள் மறைத்து எடுத்து வந்த சென்னையைச் சேர்ந்த சுல்தான் என்பவரைக் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

02:25:01 on 20 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மக்களவைத் தேர்தலை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 750 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 14 கட்சிகளின் மீது 72 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

02:10:02 on 20 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமிதாப் பச்சன், தப்ஸி உள்ளிட்டோர் நடித்த பட்லா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையைத் தயாரிப்பாளர் தனஞ்சயன் பெற்றுள்ளார். இப்படத்தில், தப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்கப் படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

01:56:01 on 20 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த, 19 வயது இளம்பெண் மீது, ஆசிட் வீசியது தொடர்பான வழக்கில், 'ஆசிட் வீசி தாக்குவது என்பது, நாகரிகமற்றவர்கள் செய்யும் கொடூர குற்றம். இந்த குற்றம் செய்வோருக்கு கருணை காட்டக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

01:40:02 on 20 Mar

மேலும் வாசிக்க தினமலர்

மணிரத்னமிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

01:26:01 on 20 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

போக்குவரத்து விதிகளை மீறியதால் கர்நாடக முதலமைச்சரின் காருக்கு 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வரின் காரே போக்குவரத்து விதிகளை மீறியது கர்நாடகாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

12:56:01 on 20 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நாடாளுமன்றத் தேர்தல் விரிவடைந்துள்ள நிலையில் தினகரனின் அமமுக வேட்பாளர்களை பேரம் பேசி விலைக்கு வாங்கும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

12:40:01 on 20 Mar

மேலும் வாசிக்க ஏசியாநெட்

இந்தியாவில் அறிமுகமாகி ஒரே வருடத்தில் 20 கோடி முறை பப்ஜி கேம் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் pubg கேம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தடை நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களுக்கு பரவுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

12:25:02 on 20 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப்பெரிய எரிவாயுக் குழி முதன்முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கபட்டுள்ளது. காரகும் பாலைவனத்தில் காணப்படும் இந்த நெருப்புக்கு குழி இயற்கையாக உருவான ஒன்றாகும்.

12:10:01 on 20 Mar

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறைக் கூட்டமைப்பான நாஸ்காம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 2018-19 நிதியாண்டில் 9.1 சதவிகித வளர்ச்சியையும், 2019-20 நிதியாண்டில் 9 சதவிகித வளர்ச்சியையும் இந்திய ஐடி துறை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

11:55:01 on 19 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான, பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த கேரக்டர் வீரம், காதல், காமெடி மற்றும் தந்திரம் போன்றவை கலந்து இருப்பதால் கார்த்தியை தேர்வு செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

11:40:02 on 19 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கடந்த 1964ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 55 ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வரும் ஐடிபிஐ வங்கி நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டுள்ள சம்பவம், ஐடிபிஐ வங்கி ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

11:25:01 on 19 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, திரைப்பட நடிகர்களான எம்.விஜய்கணேஷ், வி.எம்.சுப்புராஜ், போண்டாமணி, காதல் சுகுமார், இயக்குநர் பி.ஆனந்த் ஆகியோர் சந்தித்தனர்.

11:10:02 on 19 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, ' நிஜ வாழ்க்கையில் அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதலிப்பேன்.' என கூறினார்,

10:55:01 on 19 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

முடி கொட்டுவதற்கு முக்கியமான காரணம் போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கம் மற்றும் நமது பழக்கவழக்கங்கள்தாம். மேலும், பூமி வெப்பமயமாதலும் முடிஉதிர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

10:41:02 on 19 Mar

மேலும் வாசிக்க விகடன்

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் இதுவரை 7 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் நடத்திய ஆய்வில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.60 லட்சத்து 1000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

10:26:01 on 19 Mar

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அபுதாபிக்கு செயல்படுத்திவரும் விமான சேவையை உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

10:10:01 on 19 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பொறியியல் படிப்பதற்கான தகுதி மதிப்பெண்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

09:56:01 on 19 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் தனது தயாரிப்பான ஹானர் 10 லைட் போனை அறிமுகம் செய்திருந்தது. இந்த ஹானர் 10 லைட் போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

09:41:01 on 19 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

காங்கிரஸ் கடைசியாக ஆட்சி செய்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தீவிரவாதத்தோடு தொடர்புடைய தாக்குதல்கள் மொத்தம் 1,717 நடந்த நிலையில், 2014 முதல் 2018 வரையிலான பாஜகவின் ஆட்சிக்காலத்தில் சற்றே குறைவாக 1,708 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

09:25:01 on 19 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும். கர்ப்பிணிகள் தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும்.

09:10:01 on 19 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

'மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்ன இடத்தில் போட்டியிடுவேன்,' என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

08:55:01 on 19 Mar

மேலும் வாசிக்க EENADU

’புல்வாமா போன்ற தீவிரவாத செயல்களுக்கு மற்றும் அதற்கு உதவியாக இருப்பவர்களுக்கு திறமையுடன் பதிலடி தருவதற்கு நாட்டின் தலைமை முழு தகுதியுடன் உள்ளது என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்’ என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.

08:41:01 on 19 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

'தேர்தலில் நிற்கவேண்டும், பதவி கிடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை,' என்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ள கோவை சரளா தெரிவித்தார்.

08:26:01 on 19 Mar

மேலும் வாசிக்க காமதேனு

டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் பாஜக தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

08:25:16 on 19 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் அதிமுகவினர் கடுகளவும் குன்றாத வெற்றியைக் கரைசேர்க்க வேண்டும். தேர்தலுக்காக இப்பொழுதே மடைதிறந்த வெள்ளமென அதிமுக தொண்டர் படை புறப்படட்டும். தேர்தல் பணியாற்றுவதில் அதிமுக தொண்டர்களுக்கு நிகரில்லை என்பதுபோல் களப்பணியில் ஈடுபட வேண்டும்’ என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

08:17:38 on 19 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாளை முதல் தொடர்ந்து 18 நாட்களுக்கு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்த அவரது சுற்றுப்பயண விவரம் குறித்தத் தகவல் வெளியாகியுள்ளது.

08:10:01 on 19 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சீனா முழுவதும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட 13,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், நாடு முழுவதும் மத, மொழியியல் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், சீனாவின் ஜின்ஜியாங் பகுதி பண்டைய காலத்திலிருந்து பயங்கரவாதிகளின் எல்லையாக இருந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:55:01 on 19 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறார். கார்த்திக் வேணுகோபாலன் என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் பெயர் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என்று பெயரிடப்பட்டுள்ளது.

07:40:01 on 19 Mar

மேலும் வாசிக்க தினமணி

சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் இடையே ஏப்ரல் 6, மே 11, 18, 25ஆம் தேதிகளில் இரவு 8.10 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி இடையே மே 15, 22ஆம் தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

07:34:54 on 19 Mar

மேலும் வாசிக்க தினகரன்

நெல்லை மாவட்டம், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 28 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் திமுக பொட்டியிடுகிறது. இதுவரை நேரிடையாக தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது.

07:25:01 on 19 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம்கள்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

07:10:02 on 19 Mar

மேலும் வாசிக்க தினகரன்

தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் ஆகியோர் களமிறங்க உள்ளநிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும், தீபாபேரவை தீபாவும் இதே தொகுதியில் களமிறங்க உள்ளனர்.

06:53:44 on 19 Mar

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக வட சென்னை தொகுதியில் முதல் நாளிலேயே 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

06:47:53 on 19 Mar

மேலும் வாசிக்க தினகரன்

அரியானா அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவினர் தங்கள் பெயரின் முன்னால் ‘சவுகிதார்’ என்று போட்டுள்ளதைப்போல் காங்கிரசார் பப்பு (பாஜகவினர் 'ஏதுமறியாக சிறுவன்' என்பதைக் குறிக்கும் வகையில் சில வேளைகளில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிடுவதுண்டு) என சேர்த்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

06:35:01 on 19 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தங்கப்பாண்டி தனது இயக்க நிர்வாகிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர், எழுத்தாளர் வெங்கடேசனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் விஜய் ரசிகர்களின் கூடுதல் ஆதரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்துள்ளது.

06:22:50 on 19 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான அமேதி மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியை இரண்டாவது தொகுதியாகப் போட்டியிடத் தேர்வு செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

06:15:01 on 19 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அண்ணா, எம்ஜிஆர் சமாதியில் 54 பேருக்கு துப்பரவு, தோட்டப் பராமரிப்பாளர் பணிக்கான டெண்டர் தமிழில் அளித்தால் நிராகரிக்கப்படும் என அரசுத்துறையே அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துளளார்.

05:55:01 on 19 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரின் காவலை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிசிஐடி. போலீசார் காணொலி காட்சி மூலம் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த 4 பேரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

05:35:02 on 19 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகர் பகுதியில் மூன்று மாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

05:15:02 on 19 Mar

மேலும் வாசிக்க EENADU

இந்தியா அணுவாயுதப் பரவலாக்கத் தடை சட்டத்தில் கையெழுத்துப் போடாத நிலையிலும் தன்னுடைய கொள்ளை லாபத்துக்காக அமெரிக்கா அணு உலைகளை விற்கிறது என்றும், இந்த பத்தாம்பசலித்தனத்தில் இந்தியாவும் பங்கெடுப்பது தவறானது என்றும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

05:01:29 on 19 Mar

மேலும் வாசிக்க EENADU

நாட்டின் இலாபகர பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான LIC நிறுவனம், ஐடிபிஐ நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்கியுள்ளதன் மூலம், ஐடிபிஐ பொதுத்துறை வங்கியிலிருந்து, தனியார்வங்கி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, பொதுத்துறை வங்கி நிறுவனம் ஒன்று தனியார்மயமாக்கப்படுவது, இதுவே முதல்முறை.

04:43:23 on 19 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தேர்வு.

04:38:34 on 19 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

புதுடெல்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

04:35:01 on 19 Mar

மேலும் வாசிக்க தினமணி

கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 40க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்க முடியாமல் தரையிறக்கி விட்டது. பல வழித்தடங்களில் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், விமானப் போக்குவரத்து இயக்குநகரத்திற்கு, ஜெட் ஏர்வேஸ் விமான பராமரிப்பு பொறியாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

04:34:58 on 19 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ கடந்த 2017ஆம் ஆண்டு யோனோ (Yono App) என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை அறிமுகம்செய்தது. இந்த செயலிமூலம் எஸ்.பி.ஐ பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்க முடியும். பயனர்கள், முதலில் யோனோ கேஷ் (Yono Cash ) மொபைல் அப்ளிகேஷனை டவுண்லோடு செய்ய வேண்டும்.

04:27:35 on 19 Mar

மேலும் வாசிக்க விகடன்

ஒவ்வொரு ஆணும் 2-3 வாரத்திற்கு ஒரு முறை ஹேர் கட் செய்து கொள்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு முடியின் வளர்ச்சி குறைவாக இருந்தால், 3-4 வாரத்திற்கு ஒருமுறை ஹேர் கட் செய்து கொள்ளுங்கள். இதனால் முடி ஆரோக்கியம் மேம்படுவதோடு, உங்களின் தோற்றமும் மேம்படும்.

04:16:11 on 19 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும் மறைந்த ஜி.கே. மூப்பனாரின் தம்பியுமான ஜி.ஆர். மூப்பனார் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

04:15:01 on 19 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாகவே ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை என நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் ஏகடெரின்பர்க்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி மூலம் ஒலிம்பிக் தகுதி பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

04:09:10 on 19 Mar

மேலும் வாசிக்க தினமணி

ராஜபாளையத்தில் 3வது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர் உள்ளிட்ட ஊர்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

04:03:26 on 19 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சதவீதத்தின் அடிப்படையில் கடந்த 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரை பாஜக, காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 21 கட்சிகளைச் சேர்ந்த 153 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு சராசரியாக 143 சதவீதம் உயர்ந்துள்ளது.

03:55:01 on 19 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

ராஜகண்ணப்பனைக் கிண்டல் செய்ய எஸ்.வி.சேகர் பதிவு செய்த ட்வீட் அவருக்கே எதிராகத் திரும்பியிருக்கிறது. உங்கள் பாதை என்ன என நெட்டிசன்கள் கேட்க, எஸ்.வி.சேகர் அதிமுக, காங்கிரஸில் இருந்துவிட்டு பின்னர் பாஜகவுக்கு வந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சிலர் மீம்ஸ் போட்டும் அவரைக் கிண்டல் செய்திருக்கின்றனர்.

03:54:26 on 19 Mar

மேலும் வாசிக்க காமதேனு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 21ஆம் தேதி மீண்டும் தென் தமிழக பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

03:35:04 on 19 Mar

மேலும் வாசிக்க தினகரன்

நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியையும் வாங்கிக்கொள்ள முடியும். எனவே, துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, துப்பாக்கி வாங்குவது மற்றும் வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா முடிவெடுத்துள்ளார்.

03:33:27 on 19 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அதிமுக தலைமையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பதவியை ராஜினாமா செய்துள்ளேன்' என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

03:19:33 on 19 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி (Bhadohi) சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சீதை கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் 70 ஆண்டுகளாக செய்தது என்ன? என்ற வாதம் காலாவதியாகி விட்டதாகக் கூறியுள்ளார்.

03:15:01 on 19 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தைக் காப்பாற்ற அஜித்தால் மட்டுமே முடியும், அவர் அரசியலுக்குவர இதுவே சரியான நேரம் என்று இயக்குநர் சுசீந்திரன் அஜித்தின் கால்ஷீட்டுக்காக ஒரு மெகா தூண்டிலை போட்டிருக்கிறார். தலக்கு தெரியாதா வேண்டுதல் எது தூண்டில் எது என்பது.

03:12:27 on 19 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஓட்டப்பிடாரம் தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வெற்றியை எதிர்த்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தொடந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

02:55:02 on 19 Mar

மேலும் வாசிக்க தினகரன்

நாம் தமிழர் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 23ஆம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

02:35:02 on 19 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுகவின் தேர்தல் அறிக்கை அரைவேக்காட்டுத் தனமான அறிக்கை. தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். ஆனால், திமுக இணை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் எனக் கூறுகிறது’ என தெரிவித்துள்ளார்.

02:15:03 on 19 Mar

மேலும் வாசிக்க தின மலர்

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கூடாது என்று முன்னாள் வீரர்கள் கங்குலி, காம்பீர், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட வீரர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், ’ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும்,’ என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.

01:55:01 on 19 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரை மகாத்மா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் 70 ஆயிரம் ரூபாய் பணம், 2 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் மொபைல் போனை திருடிச் சென்றுள்ளான். சிசிடிவி காட்சிகள் மூலமாக இந்தத் திருடனை சில மணி நேரங்களிலேயே போலீசார் கைது செய்து விட்டனர்.

01:51:11 on 19 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சாத்தூர் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் “தமிழகத்திலே முதலமைச்சராக இருக்கக்கூடிய அண்ணன் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடைத்தேர்தலே நடக்கிறது என்பதை உங்களிடத்திலே தெளிவாகச் சொல்லிகொள்கிறேன்." என்று பேட்டி கொடுத்து டிடிவி தினகரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

01:38:29 on 19 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இதில் சில அம்சங்கள் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் பொதுவாக இடம்பெற்றுள்ளன.

01:35:01 on 19 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சீமான் தனது கட்சி தொண்டரிடம் ஆவசேமாக பேசும் ஆடியோ ஒன்று தற்போது லீக் ஆகியுள்ளது. சீமான் கோபக்காரர் என்பது அதிகமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால் கட்சி தொண்டரிடமே சீமான் இவ்வளவு கோபமாக பேசுவாரா? என அனைவரையும் வியப்பட வைத்திருக்கிறது இந்த ஆடியோ.

01:31:14 on 19 Mar

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளைக் கடுமையான பிரிவுகளில் தண்டிக்கக் கோரியும், முறையான விசாரணை நடத்தக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் - அனைத்துக் கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சி நகரம் முழுவதும் வணிக நிறுவனங்கள் முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

01:22:50 on 19 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த ஜெ.தீபா, இன்னும் இரண்டு நாள்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு, பிரசாரத்தில் குதிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் செலவை அந்தந்த வேட்பாளரே பொறுப்பேற்றுக் கொள்ளும்படி தீபா பேரவையின் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

01:18:27 on 19 Mar

மேலும் வாசிக்க விகடன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரிய வழக்கில் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்கக் கூறி சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

01:15:02 on 19 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. மேலும், பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தற்போது தமிழகமும் சேர்ந்துள்ளது என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூறியுள்ளது.

01:13:47 on 19 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரசிடமிருந்து விலகிய திமுக, இந்தத் தேர்தலில் காங்கிரசைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டுள்ளது. அதேபோன்று மோடியா? லேடியா? என விமர்சித்துப் போட்டியிட்ட அதிமுக, தனது அணியில் பாஜகவைச் சேர்த்துக் கொண்டது. யாரும் வேண்டாம் எனக் கூறிய பாமக, தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து கொண்டது.

01:06:32 on 19 Mar

மேலும் வாசிக்க தினமணி

வேல்ஸ் குழுமத்திற்குச் சொந்தமாக பல்லாவரம், தாழம்பூர், ஈஞ்சம்பாக்கம், தெலங்கானா மாநிலம் நிசாமாபாத், விகாராபாத் ஆகிய இடங்களில் பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், வேல்ஸ் கல்விக்குழுமத்திற்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

12:55:04 on 19 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னையில் குடும்பநல நீதிமன்றத்திற்குள் நீதிபதி முன் மனைவியை கணவன் கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணவன் கத்தியால் வெட்டியதில் காயமடைந்த மனைவிக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

12:52:58 on 19 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் போதிய மழையின்மை, தூர்வாராதது காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. இங்குள்ள முக்கிய நீராதாரமான மருதாநதி அணை வறண்டு ஆடு, மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலமாக மாறி விட்டது.

12:50:04 on 19 Mar

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றிபெறும் என்றும், அதிமுக கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் TIMES NOW கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், திமுக கூட்டணிக்கு 52.20% வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 37.20% வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

12:45:58 on 19 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ஈரோடில் பிரசித்தப்பெற்ற பண்ணாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் விழாவில், தீ மிதிக்கும்போது பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அங்கே தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

12:35:01 on 19 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதில், அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:18:45 on 19 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

Follow ads எனும் புதிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகமாகி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரண மக்களை சிறு குறு வியாபாரிகள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர்களுடன் இணைக்க இது உதவுகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு அருகேயுள்ள வியாபாரிகளை அணுக செய்கிறது.

12:17:34 on 19 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மேலும் வாசிக்க