View in the JustOut app
X

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடியம் மண்டலம், துல்லா கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது அத்தை சத்தியவதி மகளை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சத்தியவதி தனது மகளை, சீனிவாசுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

08:25:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது சுரேஷ் என்பவரது பெட்டியில் அரிய வகை வனவிலங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

07:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பில் அண்மை காலமாக பெண்களின் ஆடைகள் மற்றும் செருப்புகள் திருடுப்போவது தொடர்கதையாகவே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

07:25:02 on 22 Jan

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ்- திமுக ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று தான் ஏற்கனவே சொல்லியிருந்ததாகவும், அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

06:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க விகடன்

மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

06:25:02 on 22 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

‘நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். இதனால் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள்.” என்று கூறியுள்ள நடிகை பார்வதி மேனன், படம் இயக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக 2 கதைகளை எழுதி தயாராக வைத்துள்ளாராம்.

06:00:00 on 22 Jan

மேலும் வாசிக்க குமுதல் டாட் காம்

‘நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். இதனால் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள்.” என்று கூறியுள்ள நடிகை பார்வதி மேனன், படம் இயக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக 2 கதைகளை எழுதி தயாராக வைத்துள்ளாராம்.

05:57:01 on 22 Jan

மேலும் வாசிக்க குமுதல் டாட் காம்

பா.ஜ.க.வில் இருந்து வெளியேற தகுந்த நேரம் பார்ப்பதாக அ.தி.மு.க அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது இரு கட்சியினர் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, குடியுரிமை சட்டத்திற்கு தங்கள் அமைச்சரவையிலேயே பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

05:27:01 on 22 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

1971ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளிவந்துள்ளது. இந்த பத்திரிகையில் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் ராமர் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக குறிப்பிட்டதோடு ஒரு புகைப்படமும் அந்த கட்டுரையில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

04:57:01 on 22 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஏரியில் சுரேஷ் என்பவரது உடலை போலீசார் மீட்டனர். இந்நிலையில் அஜித்குமார் என்பவர் போலீசாரிடம் சரணடைந்தார். கிருஷ்ணவேணி எனபவர், தனக்கும் பழக்கமானவர் எனவும், அவரை சுரேஷ் திருமணம் செய்துகொள்ளும்படி தொந்தரவு செய்துவந்ததால் அவர் கூறியே இந்தக் கொலையை செய்ததாகவும் அஜித்குமார் கூறியுள்ளார்.

04:27:01 on 22 Jan

மேலும் வாசிக்க BehindWoods News

2014ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடித்தனம் நடத்தி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான நிலையில் தான் மது போதையில் சண்டையிட்டு திரிந்த ராஜசேகர், டிக்டாக் மூலம் பல பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளாதாகக் கூறப்படுகிறது.

03:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வாஷிங்டன் போஸ்ட்டில் சவுதி இளவரசர் குறித்த கட்டுரைகளை எழுதி வந்த ஜமால் கசோக்கியை முகமது பின் சல்மான் கொடூரமாக கொன்றார். இந்நிலையில் தற்போது அமேசான் நிறுவனரான ஜெப் பெஸோஸ் போனை சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான் வாட்ஸ்அப் மூலம் ஹேக் செய்தது தற்போது தெரியவந்துள்ளது.

03:27:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னை விமான நிலையத்துக்குள் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை பொழுதுபோக்காக கழிக்கும் வகையில் 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் முயற்சியில் பி.வி.ஆர். நிறுவனம் இறங்கியுள்ளது. சினிமா தியேட்டர் துறையில் முன்னணியில் இருக்கும் பி.வி.ஆர் நிறுவனம், 50 நகரங்களில் 584 திரைகளை வைத்திருக்கிறது.

02:57:01 on 22 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் குமரி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:27:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

வரும் 28ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

02:08:23 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகை ஸ்வேதா பாசு பிரசாத், கடந்த 2014இல் ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 2018 டிசம்பர் 13ல் அவருக்கு ரோஹித் மிட்டல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் வாழ்க்கை துவங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே அவர்கள் தற்போது பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

01:27:01 on 22 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிலும் இந்த வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவரெட் பகுதியில் உள்ள மருத்துவ மையத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார்

12:57:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினமலர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

12:32:27 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஈரான் படைகளின் புதிய தளபதியாக இஸ்மாயில் குவானி என்பவர் தற்போது பதவியேற்று உள்ளார். இவர் அமெரிக்காவால் கொல்லப்பட்ட சுலைமானிக்கு நெருக்கமாக இருந்தவர். இவர் பதவியேற்ற அடுத்த 6 மணி நேரத்தில் முதல் வேலையாக ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே, 3 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

12:27:02 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள நிமோடியா என்ற கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது. பிறக்கும்போதே அந்தக் குட்டி நீண்ட காதுகளுடன் இருந்தது. அதன் முகம் மனித முகத்தின் வடிவில் காணப்பட்டதால், நிமோடியா கிராமத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

11:57:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 18ஆம் தேதி, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கு ஆதரவாக மத்திய அரசும் இவ்வழக்கில் இணைந்திருப்பதால், 8 வழி பசுமைச் சாலை விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

11:27:01 on 22 Jan

மேலும் வாசிக்க விகடன்

நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா, வாய் பேசமுடியாமல் காது கேட்காமல் இருந்து வருபவர். இந்த குறைகளை கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

10:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறியப்பட்ட வுகான் நகரிலேயே அனைவரும் பலியாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

10:25:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக 10 பேரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்த வழக்கு என்ஐஏ.-வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

09:57:02 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

அதிமுக ஆட்சிக்கும் அமைச்சருக்கும் 11 அமாவாசைதான் கெடு என்று தகுதியிழந்த எம்.எல்.ஏ அரூர் முருகன் பொது மேடையில் சபதம் ஏற்றுள்ளார். இது அமமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

09:27:01 on 22 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியன் 2 படத்தின் வேடம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘இதுவரை நான் நடிக்காத கதபாத்திரம் இது. வழக்கமாக எல்லோரும் கூறுவது தானே என கேட்க வேண்டாம். இது உண்மையிலேயே வித்தியாசமானது.” எனக் கூறியுள்ளார்.

08:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

சர்வதேச பொருளாதார வளர்ச்சி தாழ்ந்து காணப்பட்டாலும், பன்னாட்டு பெருநிறுவன தலைமை செயல் அதிகாரிகளின் பார்வையில், முதலீட்டுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து நான்காவது இடத்தைப் பிடித்து, இந்தியா சாதனை படைத்துள்ளது.

07:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கூட்டுறவுச் சங்கங்களின் நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் தற்போது 37 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினமணி

அத்திமரம் மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் ஆரோக்கிய பலன்களை அள்ளி வழங்கும் தன்மை கொண்டன. இந்த பழங்கள் மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.
அத்திப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.

05:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

முதல் அறிகுறி அடிக்கடி மயக்கம் வருதல். தலை சுத்தல், அடுத்து அதிக உணவு சாப்பிட்டது போல் மூச்சி விட முடியாமல் ஒரு நிமிடம் வரை கஷ்டப்படுதல். இரவில் நல்ல உறக்கத்தில் திடீரென விழிப்பது அப்போது ஏற்படும் சிறு மூச்சுத் திணறல், அதிக வேர்வை, அதிக தண்ணீர் தாகம்.

10:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

சுந்தர்.சி இயக்கத்தில் ஹிட் அடித்த அரண்மனை 1 மற்றும் அரண்மனை 2 ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகத் தொடங்கிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

09:57:01 on 21 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில், 82 பேர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள், நிர்வாகத்திடம் இல்லை என்பது, தெரியவந்துள்ளது.

08:57:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினமலர்

பல நடிகைகளின் மார்க்கெட் கேள்விக் குறியாவதற்கும், அவர்களது வாய்ப்புகள் பறிபோகவும் காரணமாக இருந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால், இன்று அவரது வாய்ப்பையே ஒருவர் தட்டிப் பறித்திருக்கிறார். அவர் பிரியாமணி.

08:27:02 on 21 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பெரியார் சர்ச்சை குறித்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ”சரியோ அல்லது தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.” என்றார்.

07:57:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

அயோத்தியில் 3 மாதத்தில் ராமர்கோயில் கட்டுமானப் பணி தொடங்கும் என்று லக்னோவில் அமித்ஷா கூறியுள்ளார். சிஏஏ சட்டம் பற்றி ராகுல், மம்தா, மாயாவதி, அகிலேஷ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

07:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கடையின் வாசலில் இருந்த பால் பாக்கெட்டுகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

06:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

சைக்கோ படம் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் உதயநிதி பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள “தாய்மடியில் தலையைச் சாய்க்கிறேன்” என்ற பாடல் கேட்பவர்களை சிலிர்க்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.

06:25:01 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தவறான உறவுக்கு இடையூறாக இருந்த பெண்குழந்தைக்கு, பெற்ற தாயே மதுவை புகட்டி கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம், ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

05:57:02 on 21 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு நன்கொடை வசூலிக்க இங்கு வந்து தங்கியிருப்பதாகவும் அவர்கள் காவல்துறையிடம் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:46:06 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியாவில், தனது ஊபர் ஈட்ஸ் (Uber Eats) ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை ஸொமேட்டோவுக்கு (Zomato)ரூ.1224 கோடிக்கு விற்க ஊபர் முடிவு செய்துள்ளது. ஊபர் ஈட்ஸ், சுவிக்கி (Swiggy) மற்றும் ஸொமேட்டோ ஆகிய உணவு விநியோக நிறுவனங்களின் கடும் போட்டியை சந்திக்க முடியாமல் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

05:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

04:57:01 on 21 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இந்தோனேசியாவில் பாலத்தில் நின்று ஆற்றுவெள்ளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர், ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.

04:27:02 on 21 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னையில் வரும் 24ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தவுள்ளன. சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை முகாம் நடைபெற இருக்கிறது.

03:57:02 on 21 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கன்னியாகுமரியை அடுத்த மயிலாடியைச் சேர்ந்தவர் குருசாமி (58). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் தம்பதியின் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் அழுதபடியே கூறியுள்ளார்.

03:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க விகடன்

மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் டாப் ரேங்க் இந்திய வீரரும் சென்னையைச் சேர்ந்தவருமான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஜப்பான் வீரருக்கு எதிராக நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

02:57:01 on 21 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னை ஆவடி காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற அவர்களின் பெற்றோர், ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

02:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

மெர்சல், பிகில் போன்ற இரு படங்களிலும் விஜய்யுடன் இணைந்து நடித்து துணை நடிகை தேவதர்ஷனி, ”பிகில் ஆடியோ லாஞ்ச் அரங்கத்திற்குள் வருவதற்கு மிக கஷ்டப்பட்டேன். ஏனென்றால் அத்தனை லட்சம் பேர் கூடியிருந்தனர்.” என்றார்.

01:57:01 on 21 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை.

01:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஜூன் 1ஆம் தேதிக்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். இதன் மூலம் மக்கள் தங்களது ரேஷன் அட்டை மூலம் நாடு முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் உணவுப் பொருட்களை வாங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

12:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட தேர்வர்களை குறிவைத்து அரசியல்வாதிகள் வசூல் வேட்டையில் ஈடுபடும் தகவல் வெளியாகியுள்ளது.

12:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினமலர்

சென்னையில் இருந்து பொங்கல் கொண்டாட ஊருக்கு சென்றவரின் மோட்டார்சைக்கிள், திருடப்பட்ட நிலையில் ஜிபிஎஸ் உதவியால் துப்புத் துலக்கி திருடப்பட்ட வாகனத்தை சில மணி நேரங்களில் சாமர்த்தியமாக மீட்டுள்ளார் இளைஞர் ஒருவர். "பைக் திருட்டு புள்ளீங்கோ" குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

11:57:01 on 21 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”ஐ.எம்.எஃப் உண்மையை நிலையை காட்டியுள்ளது. நாட்டின் 2019-20-ம் ஆண்டின் ஜி.டி.பி வளர்ச்சி 5-க்கும் குறைவாக கணித்துள்ளது. அதாவது 4.8 சதவிகிதம். இதற்கு கீழே சென்றாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன். இனி மத்திய அமைச்சர்கள் ஐ.எம்.எஃப் மீதும் விமர்சனங்களை முன்வைப்பார்கள்” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

11:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க விகடன்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்களை அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடியில் அல்கெராபி என்ற நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க இருக்கிறது.

10:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெரியார் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், 1971ல் நடந்த பேரணி குறித்து கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை என்றும், பத்திரிகைகளில் கேள்விப்பட்டதை மட்டும் தான் தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

10:41:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

திமுகவின் தலைமைச் செயற்குழு அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் சில முக்கிய முடிவுகளை எடுத்து அதிரடியாக அறிவிக்கப் போகிறார் என்று அறிவாலய வட்டாரங்களில் சொல்கிறார்கள். தலைமைக் கழகப் பதவிகளில் சில முக்கிய மாற்றங்களை ஸ்டாலின் செய்யப்போகிறார்.

10:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

09:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

5, 8ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொது தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத தேவையில்லை என்றும், 20க்கும் குறைவான மாணவர்கள் படித்தால் அருகில் உள்ள பள்ளியில் தேர்வு எழுத வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

09:27:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

விஜய் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மாஸ்டர் படத்திற்காக விஜய் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். விஜய் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.

08:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

07:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினமணி

சமீபத்தில் ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், கீர்த்தி சுரேஷின் நடிப்பு குறித்து பேசினார். அவர் கூறுகையில், “ நான் கீர்த்தியின் ரசிகை. ‘மகாநடி’ படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. அழுது கொண்டே அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினேன்.” என்று கூறினார்.

06:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

ஆண்ட்ராய்டு இங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை சுமார் 500 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் இத்தனை கோடி டவுன்லோடுகளை கடந்த கூகுள் அல்லாத இரண்டாவது செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது.

05:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என கூறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் நடிகர் விஜய். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது விஜய் பற்றி நடிகை த்ரிஷா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. "விஜய் ஒரு சைலன்ட் கில்லர்" என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

10:57:01 on 20 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

மக்களுக்குச் சேவை செய்து அதன்மூலம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவதற்கு முயற்சிசெய்யாமல், அரசியல் ரீதியாக எதிரிகளை வீழ்த்த யாகங்கள் வளர்ப்பது, டன் கணக்கில் பசுநெய்யை ஊற்றுவது, லட்சக்கணக்கில் செலவு செய்வது போன்ற பிற்போக்குத்தனமான காரியங்களை செய்துவருவது வேடிக்கையாக உள்ளதாகக் கூறுகிறார்கள் அதிமுகவில் உள்ள முற்போக்காளர்கள்.

09:57:01 on 20 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

‘தர்பார்’ படம் 11 நாட்களையும், ‘பட்டாஸ்’ படம் 5 நாட்களையும் கடந்துவிட்டன. இனி வரும் நாட்களில் இந்தப் படங்களுக்கு எதிர்பார்க்கும் கூட்டம் வருமா என்பது சந்தேகமே. ‘தர்பார்’ படம் நல்ல வசூலை ஈட்டியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,’பட்டாஸ்’ படம் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

08:57:02 on 20 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சூடானில் உணவுப் பற்றாக்குறை காரணமாக ஊட்டச்சத்து குறைந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கங்களுக்கு உதவ வேண்டும் எனக் குரல்கள் வலுத்து வருகின்றன. #SudanAnimalRescue என்ற ஹாஸ்டேக் உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது.

08:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க விகடன்

இலங்கையில் ஹோட்டலுக்குள் சென்ற யானை, சாவகாசமாக அங்கு சுற்றி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகி வருகிறது. உப்புலி என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஹோட்டலின் முன்பகுதிக்குள் நுழைந்த அந்த யானை அறையின் ஒவ்வொரு பக்கமாக சென்று பார்வையிடுகிறது.

07:55:02 on 20 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டுமெனில், சசிகலா, தினகரன் இருவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென்று பாஜக நினைக்கிறது. இதற்காகவே, பெங்களூரு சிறையில் சசிகலாவை பா.ஜ.க சார்பில் ஒரு முக்கியப் பிரமுகர் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

07:25:01 on 20 Jan

மேலும் வாசிக்க விகடன்

இந்திய அரசின் நிட்டி ஆயோக் மூலம் கையாளப்படும் அடல் புதுமைச் சிந்தனை திட்டத்தில் நிறைய மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர்.

06:55:01 on 20 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணம் எடுக்க மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என தகவல் பரவியதால் மக்கள் வங்கியில் குவிந்தனர்.

06:39:11 on 20 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஜனவரி 24 அன்று திரைக்கு வர இருக்கும் சைக்கோ திரைப்படத்தின் விளம்பரம் கடந்த நவம்பர் மாதமே தொடங்கிவிட்ட நிலையில், தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் மிஷ்கினுடன் இணைந்து குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

05:57:01 on 20 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதம் அளவுக்கு இருக்கும் பணக்காரர்கள், 70 சதவீத ஏழைகளுக்கு (95.3 கோடி பேர்) தேவையானதை விட அதிக சொத்துக்களை வைத்துள்ளனர். இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட, 63 கோடீஸ்வரர்கள் அதிக சொத்துக்களை வைத்திருக்கின்றனர்.

05:27:02 on 20 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

மலேசியாவிலிருந்து வரும் பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா பலத்த கட்டுபாடுகளை விதித்துள்ளதற்கு பதிலடி ஏதும் கொடுக்கப்போவதில்லை என மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். சி.ஏ.ஏ. குறித்து மலேசிய பிரதமர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்தியா மலேசியவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

04:57:01 on 20 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (62). இவரது மகன் பூபதி, பழனிசாமியிடம் தொடர்ந்து சொத்துத் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், பூபதி தனது தந்தையைக் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு நாடகமாடியதை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

04:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க விகடன்

காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரிகள், சிறார் ஆபாச பட விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் திரட்டப்பட்ட 600 ஐபி முகவரிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

03:57:02 on 20 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்துவீச்சாளர் பட்டியலில் இந்தியாவின் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.

03:38:31 on 20 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மிகவும் விலை உயர்ந்த ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆடி நிறுவனம் இந்தியாவில் ஆடி க்யூ 8 எஸ்யூவி ரக கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதனை விராட் கோலி 1.33 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

03:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமித்ஷாவுக்கு பதிலாக ஜே.பி.நட்டா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

03:25:44 on 20 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற ஜெகன்னாதர் ஆலயம். அங்கு பிச்சை எடுப்பவர்களில் ஒருவர்தான் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவர் வழக்கமாக பிச்சை எடுக்கும் இடத்தில், ரிக்‌ஷாக்காரர் ஒருவர் தனது வாகனத்தை வண்டியை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

02:57:01 on 20 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னைப் பல்கலையில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரங்களுக்கு https://www.unom.ac.in/webportal/uploads/miscelloneous/appointments/instructions.pdf லிங்க்கில் தெரிந்து கொள்ளலாம்.

02:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01:55:02 on 20 Jan

மேலும் வாசிக்க தினமணி

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரசன்னா நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. வலிமையில் நடிக்கிறீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

01:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழ்நாட்டில் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ள பரப்பளவு 3,200 ச.கி.மீ. ஆனால், இப்போது 5-வது உரிமம் வழங்கப்படவுள்ள நிலப்பரப்பு 4,064 ச.கி.மீ. அதாவது, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவைவிட, 5-வது திட்டத்தின் பரப்பளவு மிகவும் அதிகம்.

12:57:01 on 20 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார். அவருக்கு வயது 74. சிவாஜியின் ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘தீர்ப்பு’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். 1978-இல் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.

12:50:20 on 20 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடிய காற்றின் சுழற்சி காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், தமிழகம், புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

12:37:30 on 20 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஏமன் தலைநகர் சனாவில் இருந்து கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் மத்திய மாரீப் மாகாணத்தில் அமைந்த ராணுவ முகாமில் உள்ள மசூதியில் மாலைநேர பிரார்த்தனை நடைபெற்றது. இந்த மசூதி மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் திடீரென ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் வழியே தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

12:36:53 on 20 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஹிந்தியில் நடந்து வரும் 13வது பிக்பாஸ் சீசனில் பல விஷயங்கள் நடந்து வருகிறது. அதில் முக்கிய போட்டியாளராக இருந்தார் நடிகை மதுரிமா. ஒரிசாவை சேர்ந்த அவர் இதற்கு முன்பு ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார். மதுரிமா துளி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது விஷால் ஆதித்ய சிங் என்ற போட்டியாளருடன் சண்டை போட்டுள்ளார்.

12:25:01 on 20 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

”சமீபத்தில் பிரதமருடனான ஒரு ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை. உடனே எனக்கு பொறுப்பு இல்லை, பொருளாதாரம் சீரழிகிறது... கவலை இல்லையா... என்று விமர்சனம் தருகிறார்கள். வேலையை அப்படியே விட்டுவிட்டு நான் ஊர் சுற்றவில்லை.” என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

11:57:01 on 20 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

வேலூா் கோட்டை பகுதியில் காதலனை தாக்கிவிட்டு கத்தி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வசந்தபுரம் பகுதியைச் சோந்த அஜித் (19) மற்றும் சக்திநாதன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டனை (45) தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

11:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க தினமணி

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ்வழியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. ஆன்மிகவாதிகள், தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடி, வரும் ஜன.22-ம் தேதி தஞ்சையில் மாநாடு நடக்கவுள்ளது. இந்நிலையில், சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டு முறைகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

10:57:02 on 20 Jan

மேலும் வாசிக்க விகடன்

ஜனவரி 3ஆம் வார நிலவரப்படி நாடு முழுவதும் 120% மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழக்கத்தை விட இரண்டு முதல் 3 மடங்கு அதிகமான மழைப் பொழிவைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

10:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர் பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார். இந்நிலையில் பிந்து தனது மகள் திருமணத்திற்கு உதவும்படி செருவாலி முஸ்லிம் ஜமாத்தை நாடியுள்ளார்.

09:55:01 on 20 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், பயங்கரவாதிகளுக்கு செல்போன் ‘சிம் கார்டு’ வழங்கியதாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், சேலத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், அன்பரசன் ஆகியோரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

09:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஆரோக்யா, டோட்லா, ஹெரிடேஜ் ஆகிய நிறுவனங்கள் லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்தப் புதிய விலை நிர்ணயம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

08:57:01 on 20 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

08:27:01 on 20 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையால் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கை அடைவது கடினமான ஒன்று என்றும், இந்தியாவில் உள்ள வளங்களை பயன்படுத்துவதே இதற்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.

07:55:01 on 20 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான்.” என மீரா வாசு தேவன் கூறியுள்ளார்.

06:55:01 on 20 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

மும்பையில், புறாக்களின் எச்சங்களால் உருவான மாசு நிறைந்த காற்று, சுவாச கோளாறை கடுமையாக்கி, 2 பெண்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை, கொண்டுவந்து விட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

05:55:01 on 20 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தங்கள் இணையதளத்தில் சீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் பர்மிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆபாசமான பொருள் தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

10:55:01 on 19 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

‘‘நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் சாப்பிட வேண்டியதில்லை’’ என்ற கருத்தை வைத்து உருவாகியிருக்கிறது ஸ்லீப்பிங் பியூட்டி டயட். உலகம் முழுவதும் எடை குறைப்புக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கினால் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம் என்பது.

09:55:02 on 19 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள, திவாகரன் இல்லத் திருமணத்திற்கான வேலைகளை மன்னார்குடியில் தற்போதே துவங்கிவிட்டது. திருமணத்தில் சசிகலா நிச்சயம் கலந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் திவாகரன் கூறிவருகிறார்.

08:57:01 on 19 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க