View in the JustOut app
X

ஆடம்பர சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதியதாக 620டி கிரான் டுரிஸ்மோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் வரிசையில் இது அறிமுகமாகி இருக்கிறது. ட்வின் டர்போ தொழில்நுட்பத்தை கொண்ட புதிய கார் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

09:35:02 on 19 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட இரு ஊராட்சிகளில் வாக்கு இயந்திரத்தில் சீல் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவந்தண்டலம் மற்றும் வாயலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் அலுவலர் சீலை அகற்றியதாக புகார் எழுந்துள்ளது.

09:15:02 on 19 Apr

மேலும் வாசிக்க தினகரன்

ட்ராய் அமைப்பு நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் புள்ளிவிவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120.54 கோடியாக உயர்ந்துள்ளது.

08:55:01 on 19 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

பயணிகள் போராட்டம் எதிரொலியாக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக இன்று முதல் 21ம்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

08:35:03 on 19 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

வாட்ஸ்அப் நிறுவனம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் வெப் பயன்பாட்டிற்கு ‘அனிமேட்டட் ஸ்டிக்கர்' அப்டேட்டை கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாக WABetaInfo தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் இந்த புதிய வசதி குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

08:15:01 on 19 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.69 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.01-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:02 on 19 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

07:35:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

07:15:02 on 19 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

குளிர்பானங்கள், பழச்சாறு தயாரிக்கப் பயன்படும் பழங்கள், பால், தண்ணீர் போன்ற மூலப்பொருள்கள் தரமானதாகவும், கூழ், மோர், பால் போன்றவை துருப்பிடிக்காத பாத்திரத்திலும் வைக்கப்பட வேண்டும். பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் நன்னீரில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

06:59:32 on 19 Apr

மேலும் வாசிக்க விகடன்

2.0 படத்தை இயக்கிய ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள், கமலின் தேர்தல் வேலைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியை இயக்கும் வாய்ப்பு ஷங்கரை தேடி வந்திருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது.

06:25:02 on 19 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஸ்ரீ ரெட்டி யார் என தெரியாதவர்களே இருக்க முடியாது. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் கடந்த வருடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கினார். இந்நிலையில் அவரின் கோரிக்கைக்கு ஆந்திர அரசு தீர்வு கொடுத்துள்ளது.

05:55:02 on 19 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

மோட்டோரோலா ஒன், மோட்டோரோலா ஒன் பவர், மோட்டோரோலா ஒன் விஷன், மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஆகிய போன்களே அடுத்ததாக மோட்டோரோலா நிறுவனத்தால் வெளியிடப்படும் என்று பிரபல போன் வல்லுநரான இவான் பிளாஸ் தெரிவித்துள்ளார்.

05:25:01 on 19 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கடலில் மிதக்கும் ஒரு மிகப்பெரிய தீவுபோல காட்சியளிக்கும் உலக தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் "கர்னிகா" தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த கப்பலில் சுமார் 2700 பேர் பயணம் செய்யலாம். இதன் நீளம் 250 மீட்டர் ஆகும். 14 மாடிகளைக் கொண்ட பிரமாண்டமாக இருக்கும்.

04:55:01 on 19 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள திரைப்படமான ’அதிரன்’ கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இதில் ஃபகத் ஃபாசில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்து, 2 கோடி சம்பளத்துடன் ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அதில் அவர் நடிக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

04:25:02 on 19 Apr

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது மன அழுத்தம் மற்றும் உணர்வு நிலையில் ஏற்ற இறக்கம் போன்றவை உண்டாகும். மேலும் இதனால் தூக்கம் தடைப்படும். தினசரி இரவு நேரத்தில் தூங்க போகும் முன் வெந்நீர் குடித்துவிட்டு தூங்குவதால் உணர்ச்சி நிலை சீராக இருக்கும்.

03:55:02 on 19 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒருநாள் போட்டி தொடருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. கடந்த 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

03:25:01 on 19 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1,700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 40 பேரை கைது செய்தனர்.

02:55:02 on 19 Apr

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

சக்தி வாய்ந்த போர் தளவாடங்கள் அடங்கிய புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் நேரில் கண்காணித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

02:25:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார். மேலும், 'கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் உள்ளனர்.' எனவும் கூறினார்.

01:55:02 on 19 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது. அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது. தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வரண்டு விடும்.

01:26:02 on 19 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஹிமாச்சலில் உள்ள, நான்கு தொகுதி களுக்கு, கடைசி கட்டமான, மே, 19ல் தான் தேர்தல் நடக்கிறது. ஆனால், தேர்தல் பணியில் உள்ள, 50 ஆயிரம் பேரும், தங்கள் பணியை துவக்கி விட்டனர். சில பகுதிகளில் உள்ள, ஓட்டுச் சாவடிகளுக்கு, 20 கி.மீ., வரை, தேர்தல் பொருட்களை சுமந்து, நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

12:56:01 on 19 Apr

மேலும் வாசிக்க தின மலர்

ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் 'டெட்' எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும்.

12:25:01 on 19 Apr

மேலும் வாசிக்க தினமணி

தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும். நீர்ச்சுருக்கு போன்றவை குணமாகும்.

11:59:53 on 18 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு இன்னும் தொடங்கப்படாததால் மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

11:25:01 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

ஏரல் கடல் என்றழைக்கப்படும் உலகின் நான்கு பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்ந்த ஏரல் ஏரி 1991ல் சோவியத் யூனியன் பிரிந்தபோது கஜகஸ்தான் நாட்டின் தெற்குப்பகுதியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் வடக்கிலும் உள்ளடக்கியதாக அமைந்தது. இந்த ஏரியானது காலப்போக்கில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக மிக சிறியதாக சுருங்கியது.

10:55:02 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

புதிய சீரிஸ் 50 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திற்கு விடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி சீரிஸ் என்ற பெயரில் புதிய ரக 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளன.

10:26:01 on 18 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

சீனாவின் யான்சூன் நகரைச் சேர்ந்த டாவ் தனது கர்ப்பிணி மனைவியை மருத்து பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனைக்காக தாயின் கருவறையை படம் பிடித்த போது, உள்ளிருந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டது தெரியவந்தது.

09:56:01 on 18 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ராகுல் காந்தி உரையை மொழிபெயர்த்த கேரளப் பெண் ஜோதி விஜயகுமார், கேரளாவில் வைரலாகிவருகிறார். இதனால் 'யார் அந்த ப்ளூ சேலை பெண். நன்றாக பேசுகிறாரே' என்கிற ரீதியில் கேரள மக்கள் அவரை தேடினர். ஜோதி, பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

09:25:01 on 18 Apr

மேலும் வாசிக்க விகடன்

இன்று தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போதே எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் தத்தமது கட்சி நிர்வாகிகளிடமும், முதல்வர் கூடுதலாக உளவுத்துறை அதிகாரிகளிடமும் தேர்தல் நிலைமையை விசாரித்து அறிந்துகொண்டனர். அவர்கள் விசாரித்தது பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் சூடாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன.

08:57:01 on 18 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்க முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் பூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக அனுஷ்கா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

08:39:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்க முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் பூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக அனுஷ்கா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

08:36:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜெட் ஏர்வேஸ் மிகவும் மோசமான நெருக்கடியில் சிக்கிய பின்னர் நிர்வாகம், தங்களை மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் தள்ளிவிட்டுள்ளது என்று நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மும்பை மற்றும் டெல்லியில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

08:18:02 on 18 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜெட் ஏர்வேஸ் மிகவும் மோசமான நெருக்கடியில் சிக்கிய பின்னர் நிர்வாகம், தங்களை மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் தள்ளிவிட்டுள்ளது என்று நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மும்பை மற்றும் டெல்லியில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

08:15:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணி நிலவரப்படி சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக அரூரில் 86.96%, குறைந்தபட்சம் சாத்தூரில் 60.87% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்தார்.

08:08:27 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

சமீப காலங்களாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சரியான பார்மில் இல்லாத தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹஷிம் ஆம்லா, இந்த முறை உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவாரா என்று ஐயம் இருந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா இன்று அறிவித்த உலகக்கோப்பை அணியில் ஆம்லா இடம்பெற்றுள்ளார்.

07:57:01 on 18 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் தண்டா, தார்க்காடு, ஏழரைமத்திக்காடு உள்ளிட்ட கிராமங்கள் வனத்தை ஒட்டியுள்ளன. இந்நிலையில் அதிகாலை மேட்டூர் அடுத்த ஏழரைமத்திகாடு சேங்கிரெட்டி தோட்டத்தில் சுரேந்திரன் என்பவருடைய பட்டியில் புகுந்த சிறுத்தை ஒன்று ஆடு ஒன்றை கொன்று விட்டு மற்றொரு ஆட்டை வாயில் கவ்விச் சென்றது.

07:55:02 on 18 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஈரோடு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுயில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வந்தது. இந்நிலையில் மதியம் அ.தி.மு.க. முகவர்களுக்கு சூடாக கோழி பிரியாணிகள் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட அவர்கள் சிறிது நேரத்திலேயே ஒன்றன் பின் ஒருவராக வாக்குச்சாவடிகளை விட்டு வெளியே போகத் தொடங்கினார்கள்.

07:39:02 on 18 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

ஈரோடு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுயில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வந்தது. இந்நிலையில் மதியம் அ.தி.மு.க. முகவர்களுக்கு சூடாக கோழி பிரியாணிகள் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட அவர்கள் சிறிது நேரத்திலேயே ஒன்றன் பின் ஒருவராக வாக்குச்சாவடிகளை விட்டு வெளியே போகத் தொடங்கினார்கள்.

07:36:01 on 18 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவின் போது இடையே இந்த மோதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது.

07:22:58 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”2014ஆம் ஆண்டில், நீங்கள் தேநீரில் நம்பிக்கை வைத்திருந்தீர்கள், ஆனால் அந்த தேநீர் நல்லதாக இல்லை. ஏனெனில் பால் இல்லாமல் தேநீர் நல்லா இருக்காது. அவர்கள் டீக்காரர் என்றால், எனவே நாங்கள் பால்காரர்கள். பால்காரர்கள் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது” என\ அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

07:18:01 on 18 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

”2014ஆம் ஆண்டில், நீங்கள் தேநீரில் நம்பிக்கை வைத்திருந்தீர்கள், ஆனால் அந்த தேநீர் நல்லதாக இல்லை. ஏனெனில் பால் இல்லாமல் தேநீர் நல்லா இருக்காது. அவர்கள் டீக்காரர் என்றால், எனவே நாங்கள் பால்காரர்கள். பால்காரர்கள் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது” என\ அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

07:15:01 on 18 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

அரியலூர் மாவட்டம், அங்கனூரில் வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிகாரிகளின் துணையுடன் நடந்துள்ளது என்றும், நேர்மையாக தேர்தல் நடத்தக்கூடிய துணிவு தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

06:55:02 on 18 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு கீழ்விஷாரத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச்சூட்டை அடுத்து கூட்டத்தினர் கலைந்து ஓடியதில் சிலர் காயமடைந்தனர்.

06:49:16 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சி.எஸ்.கே அணி பேட்டிங்கின்போது, புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் 4வது பந்தை புவனேஸ்வர் குமார் பவுன்சராக வீசினார். அடுத்த பந்தையும் அவர் பவுண்சராக வீசிய போதும் அம்பயர் நோ-பால் கொடுக்கவில்லை. ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே வீச முடியும், ஆனால், இரண்டு பவுன்சர் என ஜடேஜாவும், ராயுடுவும் அம்பயரிடம் வாக்கு வாதம் செய்தனர்.

06:39:01 on 18 Apr

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

சி.எஸ்.கே அணி பேட்டிங்கின்போது, புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் 4வது பந்தை புவனேஸ்வர் குமார் பவுன்சராக வீசினார். அடுத்த பந்தையும் அவர் பவுண்சராக வீசிய போதும் அம்பயர் நோ-பால் கொடுக்கவில்லை. ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே வீச முடியும், ஆனால், இரண்டு பவுன்சர் என ஜடேஜாவும், ராயுடுவும் அம்பயரிடம் வாக்கு வாதம் செய்தனர்.

06:36:01 on 18 Apr

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தைப் பாராட்டி அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட வாழ்த்து ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவர், ”நீங்கள் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்'' என்றும் தெரிவித்துள்ளார்.

06:18:01 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

தமிழகத்தின் 37 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

06:16:20 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தைப் பாராட்டி அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட வாழ்த்து ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவர், ”நீங்கள் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்'' என்றும் தெரிவித்துள்ளார்.

06:15:01 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான சூழல் மாறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:57:02 on 18 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தவிர தமிழகத்திலுள்ள 38 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி தேர்தல் 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

05:47:12 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நயன்தாரா நடித்திருக்கும் கொலையுதிர்காலம் படத்தை, இன் கம்ப்ளீட் – முடிக்கப்படாத படம் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விமர்சித்திருந்தார். இதற்கு படத்தின் தயாரிப்பாளர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், கொலையுதிர் காலம் படத்தை முடித்து தணிக்கைச் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.

05:39:01 on 18 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நயன்தாரா நடித்திருக்கும் கொலையுதிர்காலம் படத்தை, இன் கம்ப்ளீட் – முடிக்கப்படாத படம் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விமர்சித்திருந்தார். இதற்கு படத்தின் தயாரிப்பாளர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், கொலையுதிர் காலம் படத்தை முடித்து தணிக்கைச் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.

05:36:02 on 18 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாக்குச்சாவடி அருகே அமமுக வேட்பாளர் பாலசுப்ரமணியம் கார் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதிமுக - அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

05:17:36 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்ட வெற்றிபெற்ற படம் கில்லி. தளபதிக்கு இப்படம் ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது என்று கூறலாம். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபரின் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

04:57:01 on 18 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

இன்றைய வாக்குப்பதிவில், பெண்களின் ஓட்டு கணிசமாக இருக்கிறது என்று உளவுத்துறை குறிப்பு அனுப்பியிருக்கிறது. அந்தக் குறிப்பில் பெண் வாக்காளர்களின் உள்ளக் குறிப்பும் இருப்பதாகவும் அதனாலேயே மேலிடம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

04:39:02 on 18 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இன்றைய வாக்குப்பதிவில், பெண்களின் ஓட்டு கணிசமாக இருக்கிறது என்று உளவுத்துறை குறிப்பு அனுப்பியிருக்கிறது. அந்தக் குறிப்பில் பெண் வாக்காளர்களின் உள்ளக் குறிப்பும் இருப்பதாகவும் அதனாலேயே மேலிடம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

04:36:02 on 18 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்து வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக திமுக சட்டத்துறை செயலாளர் புகாரளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

04:32:16 on 18 Apr

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

கன்னியாகுமாரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததைச் சுட்டிக்காட்டி தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மீனவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

04:21:14 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூரில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே வாக்குப்பதிவின் போது மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

04:18:16 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மதுரை மாநகராட்சியின் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. திமுகவை சேர்ந்தவர். இவரது மருமகன் எம்.எஸ்.பாண்டியன். இவரை, முன்விரோதம் காரணமாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவரும் அதிமுகவைச் சேர்ந்தவருமான ராஜபாண்டியன் தரப்பினர் கீழவெளி வீதி பகுதியில் அரிவாளால் வெட்டினர்.

04:15:02 on 18 Apr

மேலும் வாசிக்க தினமலர்

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் புதுச்சேரி வாக்காளர்களை பண மழையில் நனைத்திருக்கிறது. ”வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில்லை” என்ற முழக்கத்துடன் களம் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம், வாக்காளர்களுக்கு 200 ரூபாய் கொடுத்திருப்பதுதான் இதில் ஹைலைட்.

03:57:01 on 18 Apr

மேலும் வாசிக்க விகடன்

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜிவில் நரசிம்ம ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று நரசிம்ம ராவ் மீது ஷூவைக் கழற்றி வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

03:35:01 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

03:18:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

03:15:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய மர்ம நபர்கள், பயணிகளை சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

02:57:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஒடிஸாவில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த குற்றத்துக்காக தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்த உயர் அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சோதனை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் சுமார் 15 நிமிடங்கள் காலதாமதமானதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

02:39:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினமணி

பகல் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.56%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 36.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.

02:38:53 on 18 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஒடிஸாவில் பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த குற்றத்துக்காக தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்த உயர் அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சோதனை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் சுமார் 15 நிமிடங்கள் காலதாமதமானதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

02:36:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினமணி

கோவை மாவட்டம் காந்திமாநகரில் வாக்குசாவடியில் வாக்கை பதிவு செய்துவிட்டு திரும்பிய பாலகிருஷ்ணன் என்ற முதியவர் உயிரிழந்தார். அதேபோன்று, ஈரோடு மாவட்டம் சிவகிரியில் முருகேசன் என்பவரும், சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் கிருஷ்ணன் என்பவரும் உயிரிழந்தனர்.

02:24:14 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய்சேதுபதி வாக்களித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், மக்கள் அனைவருக்கும் இன்றைய அரசியல் சூழ்நிலை நன்றான தெரிகிறது என்ரும் தெரிவித்தார்.

02:15:02 on 18 Apr

மேலும் வாசிக்க சன் நியூஸ்

உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய திறன் பெற்ற படகை தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளதாகவும், இது தாக்கும் திறன் கொண்ட படகு எனவும் சீனா கூறியுள்ளது.

01:55:01 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

'உள்நாட்டு துறைகளை வெளிநாட்டு போட்டியாளர்களிடமிருந்து காப்பதற்காக எடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஒருபோதும் வேலைவாய்ப்புகளை காப்பாற்ற உதவாது,' என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

01:35:01 on 18 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் தேர்தல் தொடர்பாக எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

01:16:34 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோவையைச் சேர்ந்த 99 வயதான நானம்மாள், தற்போதும் தீவிர யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, கற்றுக்கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஜனாதிபதியின் பெண் சக்தி விருதை வென்றிருக்கும் இவர் மக்களவைத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார்.

01:15:04 on 18 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஒரு தொழில் உங்களுக்கு நன்றாக செய்யத் தெரிகிறது. அந்தத் தொழிலை இன்னும் பல லட்சம் பேருக்கு சென்றடைகிற மாதிரி வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஆப்ஸ் நிச்சயம் அவசியம்.

01:07:30 on 18 Apr

மேலும் வாசிக்க விகடன்

சென்னை திருவொற்றியூரில் வாக்காளருக்கு தர வேண்டிய பூத் சிலிப் கட்டுக்கட்டாக சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீடு வீடாக பூத் சிலிப்பை தேர்தல் அலுவலர்கள் வழங்காததால் வாக்காளர்கள் பல இடங்களில் அவதிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

01:01:21 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மதுராந்தகம் அடுத்த கே.கே.பூதூர் வாக்குச் சாவடியில் இதுவரையிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மருத்துவ கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்றுகூறி 17வது நாட்களாகப் போராடி வரும் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

12:58:10 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

இந்தியாவில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த புதுமண தம்பதி திருமணம் முடிந்த கையோடு வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

12:55:03 on 18 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை கொளத்தூரில் காலையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் இரவு 7 மணி வரை வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் காலை 9 முதல் 11 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.

12:47:57 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழத்தில் இன்று நடக்கும் மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆனால், அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பதே உண்மை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு கரக்பூர் ஐஐடிக்கு வந்த போது எடுத்த படம்.

12:46:13 on 18 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னை சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளார். வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லாததால் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

12:41:59 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கௌதம பேட்டையில் ஒரே குடும்பத்தினர் 28 பேருக்கு ஓட்டு இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் வாக்கைப் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

12:35:09 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மக்களவை தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செயல் விளக்கம் அளித்தார்.

12:35:02 on 18 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பெண் மரணமடைந்தார். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டையில் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

12:31:39 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பைநாயக்கர் பட்டியைச் சார்ந்த சுபாஷ் மற்றும் பிரியா இன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நாட்டின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று திருமணம் முடிந்த கையோடு அப்பைநாயக்கர்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

12:27:02 on 18 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

'போக்குவரத்து ஏற்பாடுகள் எதுவும் எங்களுக்கு கீழ் இல்லை, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும்,' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

12:22:23 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:15:01 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் துபாயில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக துபாயில் இருந்து ரூ.50,000 செலவு செய்து வாக்களிக்க வந்துள்ளார்.

12:13:43 on 18 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. இந்நிலையில், 'தமிழகம் முழுவதும் சரியாக வேலை செய்யாத 305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன,' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

12:10:05 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அது யார் தவறு.. நிலைமை இப்படி இருக்கும் போது தேர்தல் ஆணையம் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என பிரச்சார விளம்பரம் வெளியிடுகிறது’ என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

11:59:48 on 18 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

11:49:59 on 18 Apr

மேலும் வாசிக்க தினகரன்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கேரி பாளையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பெண் அலுவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

11:47:40 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தஞ்சை மாவட்டம் அருண்மொழிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் 4 மணிநேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

11:41:47 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகளாக, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகள் உள்ளன.

11:35:01 on 18 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மராத்திய மாநிலத்தில் லாட்டூர் மக்களவை தொகுதியில் 105 வயது மூதாட்டி கவையாய் காம்ப்ளி வாக்களித்தார். லாட்டூர் தொகுதியில் அடங்கி உள்ள ஹரங்குல் பத்ரக்சில் உள்ள சாவடியில் வாக்களித்தார் கவையாய்.

11:32:34 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு வாக்காளர் பட்டியலில் இடம் இல்லாததால் அவர்கள் வாக்களிக்காமல் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:30:18 on 18 Apr

மேலும் வாசிக்க ஏசியாநெட் தமிழ்

கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. அதேபோல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.

11:15:02 on 18 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன்கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிடம் ஏற்பாடு செய்யப்படாத நிலையில், செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10:55:02 on 18 Apr

மேலும் வாசிக்க காமதேனு

கரூர் மக்களவை தொகுதியில் திருக்காம்புலியூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மாதிரி வாக்குப்பதிவின் போது செலுத்தப்பட்ட வாக்குகளையும் பிரதான வாக்கு கணக்கில் சேர்த்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மாதிரி வாக்குப் பதிவின் போது 60 வாக்குகள் வரை பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:50:28 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜ கண்டிகையில் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். நச்சு தொழிற்சாலையை மீண்டும் செயல்பட அனுமதித்ததற்கு நாகராஜ கண்டிகை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

10:48:30 on 18 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க