View in the JustOut app
X

'அனைத்து மாநகராட்சிகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவக்க நிலையில் உள்ளன. அவை முழுமை பெற்றதும் மின் கட்டணமும் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும்' என்று மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

07:56:01 on 21 Sep

மேலும் வாசிக்க தின மலர்

தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு லேக் விக்டோரியா எனும் ஏரி வழியாக படகு மூலம் 400க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 44 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

07:35:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.58 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில், லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் எனவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:01 on 21 Sep

மேலும் வாசிக்க தின மலர்

ஹாங் காங்கை சேர்ந்த ஐவூமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.3,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் ஐவூமி ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

06:56:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

சீனாவின் பிரபல நாயகியும், அதிகம் வருமானம் பெறும் நடிகையாகவும் வலம் வந்த ஃபேன் பிங்பிங் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாயமாகி இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்துக்கு உள்ளாகி உள்ளது. எக்ஸ் மேன், அயர்ன் மேன் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கும் ஃபேன் பிங்பிங் கடந்த ஜூலை மாதம் மாயமாகி இருந்தார்.

06:41:01 on 21 Sep

மேலும் வாசிக்க தி இந்து

ஹுவாவே நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் நான்கு நாட்களுக்கு “ஹானர் டே சேல்” என்ற பெயரில் தனது பிரபலமான ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் பிரத்தியேகமாக ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

06:26:01 on 21 Sep

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

ஜப்பான் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் என்று அந்நாட்டுப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மக்கள்தொகையில் 28.1% பேர் 65 வயதைக் கடந்தவர்கள். உலக அளவில் இந்த விகிதம் ஜப்பானில்தான் அதிகம்.

06:11:01 on 21 Sep

மேலும் வாசிக்க தி இந்துசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் தற்சமயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது.

05:56:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே ஆளும் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அவர் கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பார். இதன்மூலம் நீண்டகாலம் கட்சித் தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமை அபேவுக்கு கிடைத்திருக்கிறது.

05:40:01 on 21 Sep

மேலும் வாசிக்க தி இந்து

'பாதுகாப்பற்ற, மருத்துவரின் பரிந்துரை இல்லாத கருக்கலைப்பில் யாரும் ஈடுபட வேண்டாம்,' என மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் மரு.ருக்மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ’காலம் கடந்து, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்புச் செய்வது சட்டப்படி குற்றம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

05:26:01 on 21 Sep

மேலும் வாசிக்க விகடன்

செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு நெல்லையில் பாளையங்கோட்டை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட இடங்களில் மின்சாரம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது எனவும் இந்த 9 மணி நேர மின்வெட்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

05:10:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினகரன்

வடசென்னை மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் எஸ்.அப்துல் சமதுவின் சமூக சேவையை பாராட்டி உலக செம்மொழி தமிழ் பல்கலைக் கழகம் சார்பில் சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டத்தை நீதிபதிகள் என்.எப்.ஜே. பொன்னுதுரை, என்.வைத்யநாதன், வெங்கடேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்வரன்சிங் ஆகியோர் வழங்கினர்.

04:56:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

குஜாராத்தின் கிர் காடுகளில் 3 ஆசிய சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இறந்த சிங்கங்களும் உடல்கள் அழுகிய நிலையில் உள்ளதால், அவை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்துவருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

04:40:01 on 21 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

யுடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ‘சின்ன மச்சான்..செவத்த மச்சான்’ பாடல். இப்பாடல் 50 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியதையொட்டி படக்குழுவினர் சந்திப்புச் சென்னையில் நடைபெற்றது.

04:26:01 on 21 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சையோமி நிறுவனம், எம்ஐ ஏ2 ஸ்மார்ட் போனின் சிவப்பு வண்ணம் வேரியன்டை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, நானோ டூயல் சிம் வசதி, 5.99 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பக்ட் ரேஷியோ, 403 பிபிஐ பிக்சல் அடர்த்தி உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளன.

04:10:01 on 21 Sep

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்.வி.சி.எச். 308 ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அந்தத் துப்பாக்கியை பயன்படுத்தி, இரண்டாயிரம் அடி தூர இலக்கை துல்லியமாகத் தாக்கினார்.

03:56:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் லாரி உரிமையாளரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்த மர்மநபர்கள் அவரை அறிவாளால் வெட்டினர். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துச் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

03:40:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பிக் பாஸ் முதல் சீஸன் முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி. இந்நிலையில் தற்போது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன் 'ஜாக்குவார் கார் வாங்கியிருக்கிறார்' என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

03:26:01 on 21 Sep

மேலும் வாசிக்க விகடன்

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி குறித்து ஃபேஸ்புக்கில் தவறாகப் பதிவிட்ட கட்டுரையாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருப்பது, மியனமரின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

03:10:01 on 21 Sep

மேலும் வாசிக்க தி இந்து

உட்கார்ந்தே அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். ஐஸ் கட்டியை எடுத்து ஒரு துண்டில் சுற்றி வலி இருக்கும் இடத்தில் அந்த துண்டை வைத்து ஒத்தி எடுக்கவும். 2 நிமிடம் தொடர்ந்து இதனை செய்யதால் கழுத்து வலி குணமாகும்.

02:56:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டார். பந்துவீச்சாளர்கள் தீபக் சஹர், சித்தார்த் கவுல் ஆகியோரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

02:40:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினகரன்

‘அழகிரியைக் கட்சியில் சேர்த்தால் மட்டுமே திமுக வெற்றி பெறும், மு.க. அழகிரிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருவதாகவும், அழகிரியைக் கட்சியில் சேர்த்தால் தான் உதயச்சூரியன் உதிக்கும்’ என மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

02:25:01 on 21 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளில் முன்னணி நிறுவனமான கென்ட் தனது புதிய மேம்படுத்தப்பட்ட தயாரிப்பினை அறிமுகம் செய்துள்ளது. `நெக்ஸ்ட் ஜென் ஆர் ஓ’ என்கிற பெயரில் அறிமுகமாகி யுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதியுடன் உள்ளது.

02:10:01 on 21 Sep

மேலும் வாசிக்க தி இந்து

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகள் தருவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அத்தகைய உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும்.

01:55:02 on 21 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் தறிப்பட்டறையில் பதுக்கி வைத்திருந்த 220 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் குட்கா புகையிலை பொருள்கள் சிக்கியது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:40:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினகரன்

'நயன்தாரா மேடம் நடிக்கிற படத்துல நீங்க அவங்களோட ஃப்ரெண்டா நடிக்கணும்னு, கோ படத்தின் டைரக்டர் நரேஷ் சொன்னதுமே நான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சிட்டேன்,' என்று கூறிய திருநங்கை ஜீவா, ‘இப்போதைக்கு படத்துல மட்டும் நான் மேடத்தோட ஃப்ரெண்டு. சீக்கிரம் அவங்க மனசுலேயும் இடம் பிடிக்கணும்.’ என்று கூறியுள்ளார்.

01:25:01 on 21 Sep

மேலும் வாசிக்க விகடன்

ஜப்பானில் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்திவரும் ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது கிட்டத்தட்ட 42 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் திருடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:10:01 on 21 Sep

மேலும் வாசிக்க தி இந்து

பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். பொடுகுத் தொல்லை நீங்க 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

12:56:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

அரசுப் பள்ளிகளில்தான் தரமான ஆசிரியர்கள் உள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டியளித்துள்ளார். மேலும அவ்ர், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

12:40:02 on 21 Sep

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சென்னையில் 80, கோவையில் 20 பேட்டரி பேருந்துகளும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

12:26:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய நீதித் துறை தகவல் சேமிப்பு அமைப்பானது, சமீபத்தில் ஒரு புள்ளிவிவர அறிவிப்பை வெளியிட்டது. அதில், சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் சுமார் 22 லட்சத்து 90 ஆயிரத்து 364 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:10:01 on 21 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

முதல் முறை கர்ப்பமான பிறகு, குழந்தையைப் பெற்றெடுத்த பின் வயிற்றுத் தசைகள் இயல்பான முறையில் பழைய படி சேர்ந்திருக்காது. சற்று தளர்வாகவே இருக்கும். முதல் குழந்தைக்குப் பிறகு, வெகு விரைவிலே இரண்டாவது முறை தாயானால் வயிறு பெரியதாக இருக்கும். பெரும்பாலோனோருக்கு இரண்டாம் முறை தாயானால், வயிறு பெரிதாக இருக்கும்.

11:56:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், 350 ரயில்களில் டீ, காபி மற்றும் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுநாள் வரை, ஏழு ரூபாய்க்கு தேநீர் அல்லது காபி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவற்றின் விலை ரூ.10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளது.

11:40:01 on 20 Sep

மேலும் வாசிக்க தின மலர்

ஒட்டப்பிடாரம் அருகே ஒசனாத்தூர் சிவன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.2 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு்ள்ளது. 5000 ஆண்டுகள் பழமையான கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:26:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பிரதமரின் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து இதுவரையில் விவசாயிகளுக்கு ரூ.65,634.93 கோடியை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 86 நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் ரூ.23,402.70 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாகவும் நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.

11:10:01 on 20 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகை சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்துப் பேசிய சன்னிலியோன், ’இதை கவுரவமாகக் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

10:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

அடுத்த மாதம் 10ஆம் தேதி நவராத்திரி விழா துவங்க உள்ளதால், சேலத்தில் கொலு பொம்மைகள் சிறப்பு விற்பனைக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான 10 விழுக்காடு தள்ளுபடி விற்பனை மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை பார்வையிட்டார்.

10:41:01 on 20 Sep

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சேலம்-எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு பகுதியில் அழகர் என்பவர் குடோனில் பதுக்கப்பட்ட 988 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.90 லட்சம் மதிப்பு கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

10:26:02 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

‘இன்கார்’ எனும் படத்தில் உஷா மங்கேஷ்கர் குரலில் ஹெலன் நடனமாடியிருந்த பாப்புலர் பாடலான ‘ஓ முங்க்டா முங்க்டா’ எனும் பாடலைத் தான் நடிக்கும் ‘டோட்டல் தமால்’ படத்துக்காக ரீகிரியேட் செய்து அதில் நடனமாடவுள்ளார் சோனாக்ஷி.

10:11:01 on 20 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 2 இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இணையதளங்களை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

09:56:42 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

வாரத்தில் மூன்று முதல் 5 நாட்கள், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மன நலத்திற்கு நன்மை சேர்க்கும் என்பது ஆய்வுத்தகவல். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதயநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற அபாயங்களை குறைக்கலாம் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

09:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, 'அமைச்சர் தங்கமணி பதவி விலகத் தயாரா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

09:51:52 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

செம்மஞ்சேரி புனித ஜோசப் பொறியியல் கல்லூரி நுண்ணுயிரியல்துறை மாணவியான ஹேமலதா, சிறிய வெள்ளைக் காகிதத் துண்டை உருவாக்கியுள்ளார். அதனைப் பாலில் நனைக்கும்போது அடர் மஞ்சள் நிறத்துக்கு மாறினால் கலப்பட பால் என்றும் நிறம் மாறாமல் இருந்தால் நல்ல பால் என்றும் கூறுகிறார்.

09:41:03 on 20 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மதுரை உசிலம்பட்டியில் வீரக்குமார் என்பவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 40 சவரன் நகை, 1.40 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:26:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

’கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். மேலும் அவர், ’பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உடனடியாக ஏற்படுத்தித் தரும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

09:11:01 on 20 Sep

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

வீட்டிற்குள் வளர்க்கக் கூடிய செடிகளை வளர்க்க வேண்டும். செடிகளுக்கு காற்றின் மாசினைக் குறைக்கும் சக்தி உண்டு. இதுவே தீர்வு என்றாகி விடாது. ஆனாலும் இந்த முயற்சி சிறிதளவு தீர்வினைத் தரும். செடிகள் மனதிற்கும் இதம் அளிக்கும். வீட்டினுள் வெளிக்காற்று வந்து செல்ல ஜன்னல்களை தகுந்த பாதுகாப்போடு திறந்து வையுங்கள்.

08:56:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளில் மெத்தனமாகச் செயல்படும் அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திடக்கழிவு முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாவும் தெரிவித்துள்ளார்.

08:41:02 on 20 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீக்குளித்து தற்கொலை முயன்ற பார்வதி சிகிச்சை பலனின்றி ஈரோடு மருத்துவமனையில் உயிரிழந்தார். ரூ.1.40 கோடி மோசடி செய்த காதலன் ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பார்வதி தீக்குளித்துள்ளார்.

08:26:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

’இஸ்லாம் மதத்தில் சாதியம் இல்லை’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’அம்பேத்கரைப் பின்பற்றும் மக்கள் புத்தமதத்தைப் பின்பற்றாமல், ஏன் இசுலாம் மதத்தைப் பின்பற்றினார்கள் என்பதை அறிவியல் பூர்வமாக ஆராயவே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டேன்’ என்றும் கூறியுள்ளார்.

08:11:01 on 20 Sep

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் 3ஆம் ஆண்டு படம் மூலம் அறிமுகமானவர் பூர்ணா. சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்த நடிகை பூர்ணா தனது உடல் எடையை ஓரளவிற்கு குறைத்துக் கொஞ்சம் ஒல்லியாக மாறியுள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

07:56:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து மதிப்பு கூட்டியப் பொருட்களாக மாற்றி ஆன்லைன் மூலம் விற்பனை செய்து விவசாயிகளை லாபமடைய வைத்திருக்கிறது ஈரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கம். இதன்மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும், நல்ல லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

07:41:01 on 20 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பாலாற்றில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைவதாக வாலாஜாபாத் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

07:26:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

சிறு மேசிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில் 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:11:01 on 20 Sep

மேலும் வாசிக்க தின மலர்

ரயில்களில், ரயில்வே நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே துறை வாரியம் முடிவுச் செய்துள்ளது. இதன்படி, 150 மில்லி அளவு கொண்ட டீபேக் கொண்ட தேநீரும், 170 மில்லி அளவு கொண்ட காபியும் 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.

06:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க தி இந்து

திருவண்ணாமலையில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. விஷச்சாரயம் குடித்து 13 பேர் இறந்தவழக்கில் 5 பேருக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்நிலையில் 5 பேரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்து, விடுதலை செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

06:49:46 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

கன்னியாகுமரியில் வரும் 22ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

06:40:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

06:36:46 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டீசர்கள் வெளியாகி வரும் நிலையில், இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

06:25:02 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆந்திரா கடலோரப்பகுதிகள் மற்றும் ஒரிசாவுக்கு அருகில் வங்காள விரிகுடா கடலில், தென்கிழக்கே 530 கி.மீ. தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. இதனால், கடலில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதாலும் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

06:10:50 on 20 Sep

மேலும் வாசிக்க EENADU

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்களை, கடன் மீட்பு தீர்ப்பாயம் ஏலத்தில் விட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை டெல்லியைச் சேர்ந்த சௌத்ரி ஏவியேஷன் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இவை ரூ.8.75 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:10:02 on 20 Sep

மேலும் வாசிக்க விகடன்

வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக 1,200 மரங்கள் நடவிருப்பதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மேலும், ‘சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் திட்டத்தைத் தொடரமுடியாது,’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் தர விருப்பம் இல்லாதோரை துன்புறுத்தக்கூடாது,’ என உத்தரவிட்டுள்ளது.

06:01:41 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை கட்ட அவகாசம் கேட்ட தமிழக அரசிடம் பணம் இல்லை என்பதை நம்ப முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், ஒரு வாரத்துக்குள் செலுத்தினால் வட்டியில்லாமல் செலுத்தலாம். கட்டத் தவறினால் நீதிமன்றத்தில் வட்டியோடு செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

05:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க தினமணி

கடந்த 5 வருடங்களாக, செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில், முக்கியமான கம்ப்யூட்டரில் மர்மமான கோளாறு ஏற்பட்டதால் இந்த விண்கலம் தனது ஆராய்ச்சிகளை தற்போது முழுவதுமாக நிறுத்தியுள்ளது.

05:54:49 on 20 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அமெரிக்காவில் நடக்கவுள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்துப் பேசுவார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

05:51:02 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

முதுபெரும் தமிழறிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான கி.த.பச்சையப்பன் சென்னையில் இன்று காலமானார். சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிவில் வழக்கிற்காக ஆஜராக வந்த பச்சையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நீதிமன்ற வளாகத்தில் உயிரிழந்தார்.

05:44:15 on 20 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பேரறிவாளனின் வாழ்க்கையே அழிந்து விட்டதாகக் கூறி கண்ணீர் வடித்த அவரது தாயார் அற்புதம்மாள், 7 பேரின் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மட்டும் எதிர்ப்பது ஏன்? என்று வினவியுள்ளார்.

05:40:02 on 20 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேனி மாவட்டத்தில் மனநலம் குன்றிய தாயையும், விபத்தில் அடிபட்டு நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையையும் பார்த்துக்கொண்டே கல்வி பயிலும் சிறுமி அனிதாவுக்கு பல இடங்களில் இருந்து உதவிகள் குவிகின்றன.

05:33:07 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி மாவட்டத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் இருக்கும் சிறுவன் தினேஷ், மனம் தளராமல் தனக்கிருக்கும் ஓவிய கலை திறமையை மேம்படுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நடிகர் சூர்யாவின் ரசிகர் என்றும் அவரை நேரில் பார்ப்பது தனது கனவு என்றும் கூறியதையறிந்த சூர்யா இவரை நேரில் சந்தித்துள்ளார்

05:28:58 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

2018 ஆம் ஆண்டுக்கான தயான்சந்த் விருது 4 பேருக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. வில்வித்தை போட்டியில் சத்யதேவ் பிரசாத், ஆக்கியில் பரத்குமார்சேத்ரிக்கும், தடகளப் போட்டியில் பாபி அலோய்சியஸ்க்கும் தயான்சந்த் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

05:25:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

குட்கா ஊழலை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

05:10:03 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோவை தற்காலிகமாக போப் நீக்கியுள்ளார். பிராங்கோ மீது கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலியல் புகார் குறித்து கேரள போலீஸ், பிராங்கோவிடம் விசாரணை நடத்தி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்று அறியாமல் தன்னை ஒரு தலைவராக கருதிக்கொண்டு அரசியல் பேசி வருகின்றார். வரலாறும் தெரிவதில்லை, வார்த்தையை விடுவதற்கு முன் அதற்கான தரவுகளை ஆராய்வதும் இல்லை.’ என்று கூறப்பட்டுள்ளது.

04:40:02 on 20 Sep

மேலும் வாசிக்க தி இந்து

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில், 14 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

04:25:01 on 20 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பி.எச்.எடியூரப்பா, வார்த்தைகளைக் கவனமாக பேச வேண்டும் என்றும், ’வயதிற்கு தகுந்த பக்குவம் வேண்டும், அது தோல்வியடைந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்றும் கூறியுள்ளார்.

04:10:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

2018ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 20 பேருக்க அர்ஜுனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

03:55:13 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

ஹரியாணாவிலுள்ள ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள் தங்களது மத சடங்குகளை செய்வதற்கு கிராம பஞ்சாயத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறித்து வாய்மொழியாக காவலாளியால் அறிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

03:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

'நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும். என் மக்கள், என் தமிழகம் என்று அனைவரும் நினைத்து பாடுபட வேண்டும். நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் உள்ளது.' என தாராபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

03:40:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை ஆலப்பாக்கத்தில் டிவி நடிகை நிலானி, கொசு மருந்து குடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தவவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

03:25:02 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’கருணாஸ் பேசிய பேச்சுக்கள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,’ என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், ’சட்டத்தை மீறி யார் பேசியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

03:10:03 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

செப்.16இல் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

03:07:15 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’உற்பத்தித் துறை நிறுவனங்கள் காலத்துக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் உற்பத்தி நிறுவனங்கள் அழித்துவிடும்,’ என்று அலிபாபா நிறுவனர் ஜாக் மா கூறியுள்ளார்.

02:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க தி இந்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் ஆணையத்துக்கும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து விசாரிக்கும் ஆணையத்துக்கும் நியாமான கால அவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு குறித்து விசாரிக்கும் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் அவகாசம் அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

02:40:01 on 20 Sep

மேலும் வாசிக்க விகடன்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த நாராயணன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து கருணாஸ் மீது போலீஸ் வழக்குப் பதிவுச் செய்தனர்.

02:29:46 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,‘பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் நடிகர் கருணாஸ் விவகாரத்தில் மவுனிப்பது ஏன்?’ என தமிழக அரசியல்வாதிகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ‘பாஜக என்றால் ஒரு நிலைபாடா?’ என கேட்டுள்ளார்.

02:25:01 on 20 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஏழை குடும்பங்கங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வருகிற 23ஆம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய சுகாதார நிறுவன தலைவர் கூறியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

02:10:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

”தினமும் காலையிலோ மாலையிலோ எப்போது நேரம் கிடைத்தாலும் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். உடற்பயிற்சிக் கூடத்துக்கெல்லாம் செல்வதில்லை. 'நூடுல்ஸ்', 'ஃப்ரைட் ரைஸ்', 'பன்னீர் பட்டர் மசாலா' போன்ற துரித உணவு வகைகளை நான் எப்போதும் சாப்பிடுவதில்லை. சாப்பிட்டதுமில்லை.” என்கிறார் நாஞ்சில் சம்பத்.

02:05:21 on 20 Sep

மேலும் வாசிக்க விகடன்

குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேருக்கு அக்டோபர் 4ஆம் தேதி வரை சிறை நீடிக்கப்பட்டுள்ளது. சீனிவாசராவ், செந்தில்முருகன், பாண்டியன், உமாசங்கர் ஆகியோருக்கு சிறைக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

02:00:02 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் யோகி பாபு நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு தனது டப்பிங்கை முத்திருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

01:41:02 on 20 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.

01:26:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

ஹெல்மெட் விதியைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னால் இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

01:02:08 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

12:56:18 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கரூரில் பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

12:34:05 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

"தெலங்கானாவில் நிகழ்ந்த பிரனாயின் படுகொலையை கேட்டவுடன், அது என் சங்கரைதான் எனக்கு நினைவுப்படுத்தியது. ஏனென்றால் சங்கரையும் அதேபோலத்தான் கழுத்தில் வெட்டினார்கள். சங்கரின் நினைவும், அந்த சம்பவமும்தான் என் கண் முன்வந்து நின்றது" என்று வருத்தத்துடன் கூறுகிறார் கௌசல்யா.

12:26:06 on 20 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது தொடங்கப்பட்ட வழக்கில் 5 பேர் முன்ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 5 பேரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

12:24:41 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

மங்களூரு பெஜை பேருந்து நிலையம் அருகே, நேற்று பட்டப்பகலில் அசோக் கவுடா என்ற போக்குவரத்துக் காவலர் சீருடையோடு கால்கள் பின்ன நடந்து வந்தார். இதைக் கண்ட ஒருவர் தமது போனில் வீடியோ எடுத்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்து, போக்குவரத்துக் காவலர் உளறியதையும், போதையில் தடுமாறி விழுவது போல் சென்றதையும் அவர் வீடியோவாக வெளியிட்டார்.

12:08:50 on 20 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் சொத்துகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கிறார்கள்" என்றதுடன் அதிகாரிகள் வீட்டுப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றையும் ஹெச்.ராஜா தெரிவித்திருந்தார். இதனையடுத்து, கோயில் ஊழியர்களைத் திட்டியதாக கோட்டார் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11:57:54 on 20 Sep

மேலும் வாசிக்க விகடன்

சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க குறிப்பிட்ட ரசிகர்களை தேர்வு செய்யப்போவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்

சர்கார் படத்தில் வெளிநாட்டில் இருக்கும் விஜய் இந்தியாவைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் தவறான எண்ணத்துடன் நெகடிவ் மைன்டில் இருப்பதுபோல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் உண்மை புரிந்து ஹீரேவாக விஜய் உருவெடுப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

11:44:36 on 20 Sep

மேலும் வாசிக்க ஏசியாநெட் நியூஸ்

’ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்துக்கு மூன்று மாதத்துக்கு மேல் அவகாசம் தரக்கூடாது’ என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், ’தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்துக்கு நியாயமான அவகாசம் தர வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளார்.

11:43:25 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மும்பையிலிருந்து ஜெய்பூர் நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்தது. விமானம் மேலே செல்லும்போது விமானத்தினுள் காற்றழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கருவியை இயக்க அதிகாரிகள் மறந்து விட்டனர். இவர்களின் இந்த அலட்சியத்தால் விமானத்தில் பயணித்த 160 பேரில் 30 பயணிகளுக்கு காது மற்றும் மூக்குகளில் இருந்து ரத்தம் வரத்தொடங்கியுள்ளது.

11:35:02 on 20 Sep

மேலும் வாசிக்க EENADU

மேலும் வாசிக்க