View in the JustOut app
X

ஆண்மை பெருக நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும். சிறுநீர் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது.

05:57:01 on 25 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஊரடங்கு நேரத்தில் குடும்பத்தோடு தனது நேரத்தை செலவிட்டு வரும் அதுல்யா ரவி தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் புதிதாக எடுத்த போட்டோஷூட் ஒன்றை இப்பொது வெளியிட்டுள்ளார்.

10:57:01 on 24 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

“நம்பிக்கையுடன், தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை. அவருக்குப் பாராட்டுகள்” என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

09:57:01 on 24 May

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை நடத்தியதாகவும் அது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் சீனா அறிவித்துள்ளது. இது குறித்து பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ ஆய்விதழான ‛தி லான்செட்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

08:57:01 on 24 May

மேலும் வாசிக்க தினமலர்

நடிகர் அப்பாஸ் இப்போது இந்தியாவிலேயே இல்லை என்றார்கள். தனது மனைவி குழந்தைகளுடன் நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார். அவருடைய மனைவி அங்கு முன்னணி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். அப்பாஸும் முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்குப் பணிபுரிந்து வருகிறார்.

07:57:01 on 24 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

06:57:01 on 24 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னையில் இன்று மட்டும் 587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 64.97% ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:28:02 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தைத் தொடர விரும்புவதாக 70 சதவிகிதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ‘நைட் பிராங்’ எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், சமூக இடைவெளியைப் பராமரிக்கவும் வணிகத்தைத் தொடர்ந்து நடத்தவும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் இந்தத் திட்டத்தை நிறுவனங்கள் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

05:57:01 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததன் விளைவு கொரோனா தொற்றும் மேலும் மேலும் அதிரித்து வருகிறது. இந்நிலையில் பசியால் இறந்த பசுவை நல்லடக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

04:57:01 on 24 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை மட்டும் இயக்கிக்கொள்ள ரெயில்வே நிர்வாகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில், மயிலாடுதுறை-கோவை, மதுரை - விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில், கோவை - காட்பாடி. ஆகிய வழித்தடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

03:57:01 on 24 May

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

சிக்கிம் தனி நாடு என்று குறிப்பிட்டிருந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் அளித்துள்ளார்.

02:57:01 on 24 May

மேலும் வாசிக்க தினமணி

திரிஷா நடித்து வரும் ராங்கி படத்தை முருகதாஸ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் ஆப் ரெடியாக தற்போது செகண்ட் ஆப் வேலைகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து பலரும் இந்த படத்தை OTTயில் கேட்க முருகதாஸ் முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம்.

01:57:01 on 24 May

மேலும் வாசிக்க சினி உலகம்

சேலத்திலிருந்து சாலக்குடி வரை செல்லும் சரக்கு ரயில் வெளிபாளையம்-மகுடஞ்சாவடி இடையிலான ரயில் பாதையில் பயணித்தது. ரயில் ஆலங்காடு புதுப்பாளையம் பகுதியில் சென்றபோது, சுமார் 5.5 அடி உயரமுள்ள மைல் கல்லை சில இளைஞர்கள் தண்டவாளத்தில் வைத்துள்ளனர்.

12:57:01 on 24 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழகத்தில் நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 25% தொழிலாளர்களை மட்டும் கொண்டு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

12:08:19 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், இவ்வருட ரம்ஜானை புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

11:57:02 on 24 May

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலுார், திருச்சி, கரூர், மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட 11 மாவட்டங்களில், இன்று 40 முதல், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

10:57:01 on 24 May

மேலும் வாசிக்க தினமலர்

தமிழ்நாட்டில் உள்ள திருமலை திருப்பதி கோவிலுக்கு சொந்தமான ரூ.1.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்யும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #TTDForSale ஹெஷ்டேக் டிரென்டிங் ஆகி வருகிறது. முன்னதாக, மத்திய அரசை எதிர்த்து டுவிட்டரில் #IndiaforSale என்ற ஹெஷ்டேக் டிரெண்டானது.

10:00:00 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

தமிழ்நாட்டில் உள்ள திருமலை திருப்பதி கோவிலுக்கு சொந்தமான ரூ.1.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்யும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #TTDForSale ஹெஷ்டேக் டிரென்டிங் ஆகி வருகிறது. முன்னதாக, மத்திய அரசை எதிர்த்து டுவிட்டரில் #IndiaforSale என்ற ஹெஷ்டேக் டிரெண்டானது.

09:57:01 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக புதுப்புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பில் கியூஆர் கோட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா 2.20.171 பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

08:57:01 on 24 May

மேலும் வாசிக்க மாலைமலர்

பல் துலக்குவதால் மட்டும் துர்நாற்றம் நீங்கிவிடாது. நாவை சுத்தம் செய்யவில்லை என்றாலும் துர்நாற்றம் வீசும். மேலும் அந்த துர்நாற்ற சுவாசம் உடல்நிலையை பாதிக்கலாம். குறிப்பாக உங்களின் செரிமாணத்தை பாதிக்கலாம். வேறுவிதமான உடல்நிலை ஆபத்துகளையும் உண்டாக்கலாம்.

07:57:01 on 24 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு https://nhai.gov.in/current-vacancies.htm என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

06:57:01 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இரண்டாக மடிக்கக் கூடிய வகையில் சாம்சங் ஃபோல்ட் என்னும் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம். இதற்கு போட்டியாக மோட்டோ ரேசர் வரவுள்ளது. இது, 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதிகளைக் கொண்டுள்ளது.

06:00:00 on 24 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இரண்டாக மடிக்கக் கூடிய வகையில் சாம்சங் ஃபோல்ட் என்னும் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம். இதற்கு போட்டியாக மோட்டோ ரேசர் வரவுள்ளது. இது, 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதிகளைக் கொண்டுள்ளது.

05:57:01 on 24 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஆர்.எஸ். பாரதி கைதை கண்டித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அரசியல் விளையாட்டுக்கு தலித் மக்களைப் பகடைக் காயாக்குவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி அவர்கள் தமது அரசியல் விளையாட்டுகளை நேரடியாக நடத்துவதே முறையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

10:57:01 on 23 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

09:55:01 on 23 May

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரமலான் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

09:17:57 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கன்னியாகுமரி அருகே தென் தாமரைக்குளம் அருகில் கட்டுவிளை பகுதியில், அனுமதியின்றி ஐந்தடி உயரத்தில் பாரதமாதா சிலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் சிலையை துணியால் மட்டும் மூடிவிட்டுச் சென்றனர். இதனைக் கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08:57:01 on 23 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கொரோனா தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இனி பெரும்பாலான ஊழியர்கள் நிரந்ததரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். மேலும் அவரவர் இடங்களுக்கு ஏற்றவாறு சம்பளம் மாறுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

07:57:01 on 23 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஆஸ்திரேலியாவின் மோனாஷ், ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் வினாடிக்கு 44.2 டெராபிட் (டிபிபிஎஸ்) வேகமான இணைய தரவு வேகத்தை பதிவு செய்துள்ளனர். இது ஒரு பிளவு நொடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கும் திறன் கொண்டது.

06:57:02 on 23 May

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

06:48:31 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காயமடைந்த தன் தந்தையை 1200கிமீ சைக்கிளில் வைத்து அழைத்துக்கொண்டு, 15 வயது சிறுமி ஒருவர் வீடு வந்து சேர்ந்துள்ளார். தன் தைரியத்தின் மூலம் சாதித்துக்காட்டியுள்ள அந்த சிறுமிக்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்தாலும், இப்படியான நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

05:57:01 on 23 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கொரோனாவால் இறப்போர் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சென்னையில் 33 வார்டுகளில் கொரோனா பாதிப்பு சவாலாக உள்ளது என்றும், ராயபுரம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்கள் சவாலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

05:10:02 on 23 May

மேலும் வாசிக்க தினகரன்

நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து தமிழ்நாடு-உ.பி. , மராட்டியம் - தமிழ்நாடு, ஆந்திரா-அசாம், குஜராத்-கர்நாடகம் இடையே ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:05:34 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மலேரியாவிற்கு வழங்கப்படும் மருந்தான ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை கொரோனா நோய் தொற்று நேயாளிகளுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், மாறாக அதனால், நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

03:57:01 on 23 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கொர்ரகுண்டா பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஒன்பது பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களில் காயம் இல்லாததால் தற்கொலை வழக்காக போலீசார் இதனை பதிவு செய்துள்ளனர்.

02:57:01 on 23 May

மேலும் வாசிக்க நக்கீரன்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ”திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. அடுத்து காத்திருப்பு பட்டியலில் தயாநிதிமாறன்? என்று தெரிவித்துள்ளார்.

01:57:01 on 23 May

மேலும் வாசிக்க தினமணி

நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை நன்றாக கவனித்து கொள்வது மாநிலங்களின் பொறுப்பு என தெரிவித்துள்ளார். மேலும் அவர், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை பெரிய சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

12:57:01 on 23 May

மேலும் வாசிக்க தினமலர்

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சலூன்கள், அழகு நிலையங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன்களை திறக்கலாம் என்றும், குளிர்சாதன வசதியை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

11:57:02 on 23 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,654 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 137 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

10:57:01 on 23 May

மேலும் வாசிக்க தினகரன்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப் பிரிவு போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது பேச்சு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம், ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

10:55:53 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப் பிரிவு போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், அதிமுக அரசின் நிர்வாக தோல்விகளை திசை திருப்பவே அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

10:39:42 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த பங்குனி, சித்திரை மாதங்களில் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதேபோல நேற்று வைகாசி அமாவாசை தினத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

10:30:28 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,003 கன அடியில் இருந்து 1,787 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 100.29 அடியாகவும், நீர் இருப்பு 65.21 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

10:29:32 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஏழெட்டு தாழ்த்தப்பட்டவர்கள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார். தான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார்.

10:23:31 on 23 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் 193 கி.மீ தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு இளம் நஸ்ர் பணிபுரிந்து வருகிறார். இப்போது ரஷ்யாவில் கோடை காலம் என்பதால் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து அதற்கு மேல் கொரொனா வார்டில் பணிபுரிவதற்குரிய பி.பி.இ என்று அழைக்கப்படும் முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.

09:57:02 on 23 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சமூக வலை தளங்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுகின்றனர். இதனால் சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது.

08:57:01 on 23 May

மேலும் வாசிக்க மாலைமலர்

ஏப்ரல் 16-ம் தேதியிலிருந்து புதிதாக ஒரு கொரோனா பாசிட்டிவ் கேஸ்கூட ஈரோட்டில் ரிப்போர்ட் ஆகாமல் இருந்தது. சிவப்பிலிருந்து - ஆரஞ்சு - பச்சை மண்டலம் என ஈரோடு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய சூழலில், 36 நாள்களுக்குப் பிறகு புதிதாக ஒருவருக்குக் கொரோனா பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் ஆகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

07:57:01 on 23 May

மேலும் வாசிக்க விகடன்

கடந்த சில நாட்களாக, TikTok செயலியின் ரேட்டிங் மதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றன. செவ்வாயன்று, டிக்டாக்கின் மதிப்பீடு 4.5-ல் இருந்து 2-ஆக குறைந்தது. இப்போது ஒரு நாளில், இந்த மதிப்பு 1-ஆக குறைந்துள்ளது.

06:57:02 on 23 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மலச் சிக்கல் மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்க மிளகு உதவுகின்றது. இது மட்டுமல்லாது, சுவாச பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதனை போக்க மிளகு பெரிதும் உதவுகின்றது. சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும் ஒரு முக்கிய மூலிகையாக மிளகு செயல்படுகின்றது.

05:57:02 on 23 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

விபி துரைசாமியின் விலகலையடுத்து அவர் கொங்கு மண்டலம் முழுதும் திமுக தன்னை அருந்ததியர் என்பதால் எப்படியெல்லாம் நடத்தியது என்று தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் திமுகவின் அருந்தியர் வாக்கு வங்கியில் விபி துரைசாமி ஒரு கீறலை ஏற்படுத்த முடியும்.

09:57:01 on 22 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 107 பேர் பலியாகியுள்ளனர். இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது.

08:55:01 on 22 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

08:27:01 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை மடிப்பாக்கம் உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் தனியார் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த, கோவில் அர்ச்சகராக உள்ள சிவக்குமார் என்ற அந்த நபர், கடந்த புதன்கிழமை அதே குடியிருப்பிலுள்ள 10 வயது சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

08:09:52 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மே 31ஆம் தேதி நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைவதற்குள் ராஜினாமா செய்துவிடும்படியும், இல்லையேல் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்றும் தாங்கள் மிரட்டப்படுவதாக இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

07:27:01 on 22 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வடதமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்து வெப்பக்காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு, காலை 11 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியில் வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:57:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்பவர், தன்னை சிங்கிள் எனக் கூறி, கேவி குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் லாவண்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் இருப்பதை அறிந்து பிரவீன்குமார் அதிர்ந்து போனார்.

06:25:01 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழக டாஸ்மாக் கடைகளில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. உயர்தர மதுபான வகைகள் மட்டுமே இருப்பு உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து திறக்கப்படாத 1,600 டாஸ்மாக் கடைகளில் உள்ள குறைந்த விலை மதுபானங்களை, திறந்துள்ள கடைகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

05:57:02 on 22 May

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பழியை எத்தனை ஆண்டுகளானாலும் பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

05:27:01 on 22 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலையில், பசிக் கொடுமையால் சாலையில் இறந்துகிடந்த ஒரு நாயின் இறைச்சியை ஒருவர் தின்றதை அவ்வழியாகச் சென்ற ஓர் இளைஞர் செல்லிடப்பேசியில் எடுத்து சுட்டுரையில் வெளியிட, இன்று வலைத்தளங்களில் வெகு வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

04:55:01 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திண்டுக்கல் மாவட்டத்தில் சலூன் கடைகளில் வாடிக்கையாளர் பதிவேட்டை அவசியம் பராமரிக்க வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், ஒருவருக்கு முடி திருத்தம் செய்து முடித்ததும் உபகரணங்களை கிருமிநாசினி மருந்தால் கண்டிப்பாகச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ரும் தெரிவித்துள்ளது.

04:27:01 on 22 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

03:57:01 on 22 May

மேலும் வாசிக்க விகடன்

ஈரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருப்பதற்கு அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என வெனிசுவேலா தெரிவித்துள்ளது. இந்த கப்பல்களில் வரும் பெட்ரோல், வெனிசுவேலாவுக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ளதால், வெனிசுவேலா இவ்வாறு அறிவித்துள்ளது.

03:27:01 on 22 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நெல்லையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்டாக்கில் அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக தான் செல்லமாக வளர்த்த பூனையைத் தூக்கிலிட்டு அதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மிருகவதை இயக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

02:57:01 on 22 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மனைவி, தன் கணவர் எங்கெல்லாம் சென்று வந்தார் என்பதை கண்டறிய கூகுள் மேப்பில் டைம்லைனை பார்த்து வந்துள்ளார். இதில் சந்திரசேகர் செல்லாத இடங்களை கூட கூகுள் மேப் டைம்லைனில் காட்டியதால் கணவன்- மனைவிக்குள் பிரச்சினை வெடித்துள்ளது.

02:27:01 on 22 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து பல புதிய வசூல் சாதனைகளை புரிகிறது. இந்நிலையில் யுடியூபில் விஜய்யின் 7 பாடல்கள் மற்றும் ட்ரைலர்கள் மட்டும் இதுவரை 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. மேலும் இந்திய அளவில் நடிகர் விஜய் மட்டுமே இந்த சாதனையை முதலில் படைத்துள்ளார்.

01:57:01 on 22 May

மேலும் வாசிக்க சினி உலகம்

உலகப்புகழ் பெற்ற இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெனட்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கிறிஸ்டோபர் நோலன் எடுத்ததிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சயின்ஸ் பிக்‌ஷன் படம்.

01:25:02 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

01:13:26 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம் என்றும், ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டுமே ஆட்டோவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

01:07:33 on 22 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான இஎம்ஐயை செலுத்துவதற்கு மேலும் 3 மாதங்கள் தளர்வு அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் 4.4% ஆக இருந்த ரெப்போ விகிதம் 4% ஆக குறைக்கப்படுவதாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% ஆக குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

01:02:44 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நடுவலசை கிராத்தைச் சேர்ந்த ரஞ்சித், லோகநாதன், முத்துக்குமார் மற்றும் சிலருக்கும் அருகில் உள்ள மெய்யனேந்தல் கிராத்தில் சிலருக்கும் இடையே டூவிலர் ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

12:57:02 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சேலம் அழகாபுரம் பெரிய புதூர் பம்பரகார வட்டம் போயர் தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (22) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மாணவியின் குடிசைக்கு தீ வைத்துள்ளார்.

12:27:02 on 22 May

மேலும் வாசிக்க நக்கீரன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்தது. கொரோனா ஊரடங்கிலிருந்து படிப்படியாக விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மாவட்ட மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

11:57:01 on 22 May

மேலும் வாசிக்க விகடன்

கரூர் மாவட்ட எஸ்.பி ரா.பாண்டியராஜனிடம் அம்மாவட்ட பாஜக தலைவர் கே.சிவசாமி அளித்துள்ள புகாரில், எம்.பி ஜோதிமணி, பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததுடன், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அதனால் அவரை அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

11:27:01 on 22 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக திறக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மண்டல ரயில்வே மற்றும் மற்றும் ஐ.ஆா்.சி.டி.சி ஆகியவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

10:57:01 on 22 May

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க, கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணமானது. ஒரு நபர் பாதிக்கப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த, 20 முதல் 60 பேர் வரை, பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 10 முதல், 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் தினமும், 500க்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

10:27:01 on 22 May

மேலும் வாசிக்க தினமலர்

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

09:57:01 on 22 May

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான, வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

09:27:02 on 22 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.34 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,435 ஆகவும், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 94ஆகவும் அதிகரித்துள்ளது.

09:04:33 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

'கபடதாரி' படத்தில் நாசர் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். அத்துடன் 15 சதவீதம் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அவர் தாமாக முன்வந்து தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

07:57:01 on 22 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஒவ்வொரு மனிதனும் உற்சாகமாக வாழ ஜூலாசனம் தினமும் செய்யலாம். கைகளை தலைக்கு பின்னால் வைக்கவும் மூச்சை இழுத்துக் கொண்டே கால்களையும், கைகளையும் இடுப்புக்கு மேல் உயர்த்தவும். இரு கைகளால், கால் பெரு விரலை பிடித்து உடலை ஒரு ஊஞ்சல் போல் நிறுத்தவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இழுக்கவும்.

06:57:01 on 22 May

மேலும் வாசிக்க மாலைமலர்

ரத்தம் உறைதலே பக்கவாதம், வலிப்பு நோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. ரத்தத்தை உறையச்செய்யாமல் இருக்க வைட்டமின் கே சத்து உதவுகிறது. இஞ்சி சாப்பிடுவதன் மூலம், நம் உடலுக்கு வைட்டமின் கே சத்து கிடைக்கிறது.

05:57:01 on 22 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் நாச்சியார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருக்கும் நிலையில் இவர், ”நான் வேலை இல்லாமல் இருக்கிறேன்... எனது போன் தான் எனக்கு கம்பெனி கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

10:57:01 on 21 May

மேலும் வாசிக்க மாலைமலர்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் முதலிடத்தில் இருப்பது நியூயார்க். இந்நிலையில், நியூயார்க் நகரில் சுரங்கப் பாதை ரயில் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமி அழிப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

09:55:46 on 21 May

மேலும் வாசிக்க Behind Woods News

கொரோனா கோர ஆட்டத்தால் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நிலையில், நிலுவைத் தொகையும் இழுத்தடிப்புச் செய்யப்படுவதால் கூடுதல் சுமையைச் சந்திக்கும் நிலைக்கு மாநில அரசுகள் ஆளாக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிதி இழப்பை சமாளிக்க தமிழக அரசு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

08:26:35 on 21 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

07:45:02 on 21 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அம்பன் புயலுக்கு 72 பேர் வரை பலியாகி உள்ளனர் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இவர்களில், கொல்கத்தா நகரில் 17 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும், மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில் மற்றும் மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

07:38:16 on 21 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967- ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

07:32:00 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

”பிரதமர் மோடியை மக்கள் கல்லால் அடிக்கும் நிலை உருவாகியிருக்கும் என்று ஜோதிமணி கூறியதை தமிழகத்தில் பாஜகவினர் மட்டுமே கண்டித்தோம். நம்மோடு கூட்டணியில் இருக்கிற அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட யாருமே கண்டிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி இருக்கிறதா இல்லையா?” என்கின்றனர் பாஜகவினர்.

06:27:01 on 21 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வெள்ளித்திரை அளவிற்கு தற்போது சின்னத்திரையும் நன்றாக வளர்ந்து வருகிறது. வெள்ளித்திரைக்கு இருக்கும் ரசிகர்கள் அதே அளவிற்கு சின்னத்திரையிலும் இருக்கிறார்கள். செம்பருத்தி, ரோஜா, சந்திரலேகா, பாண்டியன் ஸ்டோர்ஸ், சித்தி 2 போன்ற சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்தவையாக உள்ளன.

05:57:01 on 21 May

மேலும் வாசிக்க சினி உலகம்

சேலம் கருப்பூர் அருகே உள்ள தேக்கம்பட்டியில் உள்ள காமராஜர் சிலை சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கருப்பூர் காவல்துறையினர், தேக்கம்பட்டி 13- வது வார்டைச் சேர்ந்த சுகவனேஸ்வரன் (27), அரவிந்தன் (22), வெற்றிவேல் (26) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

05:27:01 on 21 May

மேலும் வாசிக்க நக்கீரன்

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் 4 பேர் ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் கொடுத்து வரவழைத்துள்ளனர். இது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பெரும் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. இதை தொடர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

04:57:01 on 21 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் குறித்து சிலர் அவதூறாக கருத்துகளை பதிவிட்டதாக ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, அரவிந்தன், மனோகரன், செல்வேந்திரன், அந்தோணி, கலீம் உள்ளிட்ட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

04:27:02 on 21 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சீர்காழியை அடுத்த கூத்தியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (42). இந்நிலையில் அங்குள்ள கோயிலுக்கு சொந்தமான குளங்களை ஏலம் விடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு தரப்பினர், சரவணனை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.

03:57:01 on 21 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை மணலியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக சொல்லப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் 50 நாட்களாக வீட்டுக்குள் இருந்தவர் அவசர தேவைக்கு பணம் எடுக்க சென்று பணத்தோடு கொரோனாவையும் வாங்கி வந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

03:25:01 on 21 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். ரசிகர்களிடம் இணையதளம் வாயிலாக உரையாடியபோது இந்த தகவலை அவர் கூறியுள்ளார். இது குறித்து நடிகர் விஜயிடம் அவ்வப்போது உரையாடியதாகவும் அனிருத் கூறியுள்ளார்.

02:57:02 on 21 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் பகுதி சித்தலம்பட்டில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற புதுச்சேரி ஐஆர்பிஎன் காவலர்கள் மணிகண்டன், கோகுல், பிரசன்னா, போக்குவரத்து காவலர் செல்வம் ஆகியோர், அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

02:27:01 on 21 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது இரட்டை மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தாய்-தந்தை இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவதுதான் காரணம் என தெரிய வந்துள்ளது.

01:57:01 on 21 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மதுரை மகபூப்பாளையம் பகுதியின் அன்சாரி தெருவில் அமைந்துள்ள பொதுப்பாதையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இரவு 9 மணிக்கு முதல் 10.25 வரை தொழுகை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:25:02 on 21 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா தொற்று ஏற்பட்ட சென்னை சிறுவன் ஒருவனுக்கு அதி அழற்சி நோய்க்குறி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘ஹைப்பர் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்’ (Hyper-inflammatory syndrome) என்று அழைக்கப்படும் இந்த நோய்க்குறி, கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட குழந்தை ஒன்றிடம் காணப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.

12:57:02 on 21 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள செங்குளம் பகுதியின் ஊர் சின்ன நாட்டாண்மையாக பாலுச்சாமி என்பவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், முன்விரோதம் காரணமாக, அதே பகுதியில் வசிக்கும் அருண் பாண்டியன் என்பவர் பாலுசாமியைக் கத்தியால் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க வந்த பாலுசாமியின் மகனையும் குத்தியுள்ளார்.

12:27:01 on 21 May

மேலும் வாசிக்க தினமணி

மேலும் வாசிக்க