View in the JustOut app
X

பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டியணைக்கும் புகைப்படம் மும்பை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் “நாங்கள் அன்பால் வெல்வோம், வெறுப்பால் அல்ல” [“Nafrat se nahi, Pyar se jeetenge] என்று எழுதப்பட்டிருக்கிறது.

02:48:42 on 23 Jul

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நடிகர் சூர்யாவுக்கு இன்று 43-வது பிறந்த நாள். இது முன்னிட்டு இரு தினங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்தார். அப்போது வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் முன், “எப்போதும் ஒரு புது அனுபவம் வைத்துக் கொள்ளுங்கள். நம்ம வாழ்க்கை, நம்ம ஓட்டம்னு இருக்கனும், நாம் செய்யும் வேலையில் நாம்தான் சிறந்து இருக்கனும் என மனசுல ஆழமா நினைங்க.” என ரசிகர்களிடம் கூறினார்.

02:40:01 on 23 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். இயற்கையாகவே கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இயற்கையாகவே முகப்பரு மற்றும் முகப்பருவால் வரும் தடத்தைக் குறைப்பதில் மிகச் சரியான தீர்வு எது என்றால் டீ ட்ரீ ஆயில்தான்.

02:25:02 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் கார்த்தி சிதம்பரத்துடன், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு, முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளார்.

02:12:48 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவில் நடைப்பெறும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிஜுர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

02:10:02 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”அனைத்து அரசியல் கட்சிகளுமே தாங்கள் செய்வது சரி என்று நினைக்கிறார்கள். ஒரு வேளை அவர்களது நடவடிக்கையை எதிர்த்து கருத்துகள் முன் வைக்கப்பட்டால் அவர்கள் மீது தேசத் துரோகி என்று பட்டம் சுமத்துவது அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.”

02:08:50 on 23 Jul

மேலும் வாசிக்க தினமணி

கற்றல் குறைபாடு பத்தில் ஒரு குழந்தைக்கு உள்ளது. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளில் பலர் மற்ற துறைகளில் ஈடுபாடும், சிறந்த அறிவும், ஆற்றலும் பெற்றிருப்பதை காணமுடிகிறது. எனவே, அவர்கள் ஆர்வத்தை கவனித்துப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனை வளர்க்கும் வாய்ப்புகள் அளிக்க வேண்டும்.

01:55:02 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லாரிகள் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரும் 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

01:40:33 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

மலேரியா சிகிச்சைக்கான மருந்து ஒன்று 60 வருடங்களில் முதன்முறையாக அமெரிக்க அதிகாரிகளால் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. டஃபினான்குயின் என்னும் இம்மருந்தை கண்டறிந்தது ஒரு "மிகப்பெரிய சாதனை" என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறிப்பாக ஒருமுறை வந்தால் மீண்டும் வரக்கூடிய மலேரியாவுக்கான மருந்தாகும்.

01:40:02 on 23 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை காசிமேட்டில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த மீனவர், குடும்பத் தகராறில் தனது மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

01:35:30 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

திருச்சியில், நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் சிலர், சமூக வலைதளங்களில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.” என கூறி இவ்வாறு, ‘மு.க.ஸ்டாலினை விமர்சித்தால் மன்னிப்பே கிடையாது’ என தம் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

01:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 100-வது பிறந்தநாள் விழா, தமிழக அரசால் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, எம்ஜிஆர் நினைவு சிறப்பு அஞ்சல்தலை, சிறப்பு நாணயம், வெள்ளை நிற அஞ்சல் உறை ஆகியவை வெளியிடப்பட்டன. இந்த சிறப்பு அஞ்சல்தலையை அஞ்சல் நிலையங்கள் ஏற்க மறுப்பது, அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

01:16:19 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 95 சதவீதம் ரசாயனம் வெளியேற்றப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கந்தக அமிலம் 95 சதவீதம், பாஸ்பாரிக் அமிலம் 100 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

01:10:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை பெருநகர மாநகராட்சியில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50% வரையும், இதர மாநகராட்சிக்கு 50% மிகாமலும் சொத்துவரி உயரும் எனவும், மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கான வாடகை 100%-க்கு மிகாமல் சொத்துவரி உயர்த்தப்படும். குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100%-க்கு மிகாமல் சொத்துவரி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

01:06:27 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மதுவால் இறந்ததாகக் கருதிய டிரைவரின் மரணத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுவில் சயனைடு கலந்து அவரை இளம்பெண் ஒருவர் நண்பர் மூலம் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

01:05:15 on 23 Jul

மேலும் வாசிக்க விகடன்

ஷாப்பிங் முடிந்த கையோடு அருகில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டலுக்கு சென்று அவசரமாக சாப்பிட்டலாம் என நினைக்காதீர்கள். உணவின் தரம் முக்கியம். பெரிய ஓட்டல்களில் உணவருந்த ஆசைப்பட்டால் முன்பதிவு செய்யுங்கள். அதன் மூலம் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதை மென்மையாக எடுத்துக் கூறுங்கள்.

12:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வெப்பசலனம் காரணமாக மிதமான மழை பெய்யலாம்.

12:52:12 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு தூக்கு விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அவசர சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

12:49:24 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

பொதுப்பணித்துறை டெண்டர் விடும்போது 30 கான்ட்ராக்டர்கள் இருந்தால் கூட 1 அல்லது 2 பேர் கலந்துகொள்வது போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், எடப்பாடியும் அவர் சம்பந்தி ஆகிய செய்யாதுரைக்கு இவ்வளவு பெரிய கான்ட்ராக்ட் கொடுத்திருக்கிருக்கலாம் என்றுதானே அர்த்தம் என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர், ஜெயராம் கூறியுள்ளார்.

12:40:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மதுரையில் ஒத்தக்கடை விவசாயக் கல்லூரியின் எதிரேயுள்ள மைதானத்தில் நேற்று மாலை பாஜக மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், "தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இனி பிரதமர் மோடி தான் அம்மா" என தெரிவித்துள்ளார்.

12:39:01 on 23 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்ட மராத்தா சமூகத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

12:35:43 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

உலக கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் நெதர்லாந்து- தென் கொரியா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

12:29:43 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

கோவையில் உதவி பேராசிரியர், விஜயகுமார் (வயது 42) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இவருடைய தந்தை, தாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டனர். இதனால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:26:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

நாட்டில் இயங்கிவரும் ஐஐடி எனும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமை பெறுதல் மூலமாக வருவாயை ஈட்டுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இதன்மூலம் அதிக வருவாய் ஈட்டியதில் முதல் இடத்தை ஐஐடி பாம்பே, 2ஆம் இடம் ஐஐடி மெட்ராஸ் மற்றும் 3ஆம் இடத்தை ஐஐடி டெல்லியும் பிடித்துள்ளது.

12:11:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சிலுவைபுரத்தைச் சேர்ந்த சோபியா என்பவர், இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் சிதம்பரத்தில் கைது செய்யப்பட்டார். இவர் பல்வேறு இடங்களில் 4 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

12:01:21 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சிறந்த நிர்வாகத்தை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில், தொடர்ந்து 3-வது ஆண்டாக கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. அத்தியாவசிய உள்கட்டமைப்பு, மனிதவள மேம்பாட்டுக்கு ஆதரவு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு என 10 அம்சங்களை ஆராய்ந்து இந்த மையம் மாநிலங்களை தரவரிசைப்படுத்தப்படுகிறது

11:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 4 அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுக தலைமை, அவர்கள் யார்? என கண்டுபிடிக்க ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

11:54:18 on 23 Jul

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

கோவையில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றிக் சென்ற தமிழக லாரி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் லாரியின் க்ளீனர் முபாரக் பாட்ஷா பலியாகி உள்ளார். நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெற்று வரும் நிலையில் ஸ்டிரைக்கை மீறி லாரி இயக்கியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:53:10 on 23 Jul

மேலும் வாசிக்க தினமலர்

முதல்வர் பழனிசாமி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவினருக்கு ஒப்பந்தம் வழங்குவதாக திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுவதாக சாடினார்.

11:47:57 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

டொரண்டோவின் டன்போர்த் மற்றும் லோகன் அவென்யூ பகுதியில் நேற்றிரவு மர்மநபர் ஒருவர் 14 பேரை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு, தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் ஒரு இளம்பெண் உயிரிழந்தார். மேலும், சிறுவர் உட்பட 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11:45:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் முதலமைச்சர் ஆலோசனை. மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளதால் காவிரி கரையோரம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு.

11:41:52 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவில் நேற்று நடந்த பைனலில் முதல் நிலை வீரர் குன்லாவத் விதித்சர்னுடன் (தாய்லாந்து) மோதிய லக்ஷ்யா சென் நேர் செட்களில் போராடி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

11:41:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க நடைபெற்ற பணிகளை அந்நாட்டு ஓவியக் கலைஞர்கள் தத்ரூபமாகச் சுவரில் வரைந்து அசத்தியுள்ளனர். காட்டுப் பன்றி மற்றும் அதன் சிறு குட்டிகள், கடற்படை அதிகாரி சமானின் காலடியில் தஞ்சமடைந்துள்ளதுபோல் ஒரு சிறிய சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

11:38:33 on 23 Jul

மேலும் வாசிக்க விகடன்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்தாண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜந்தர்மந்தரில் போராட தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

11:26:56 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

திருச்செங்கோடு அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

11:26:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த அமர்நாத் (வயது 25), என்பவர், கோவை மாவட்டம் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர், இன்று காலை பட்டாலியன் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

11:21:40 on 23 Jul

மேலும் வாசிக்க மாலைமலர்

தொல்லை தரும் அழைப்புகளுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் தீர்வு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வணிக ரீதியில் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மூலம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக டிராய் அமைப்பிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

11:16:24 on 23 Jul

மேலும் வாசிக்க தினமணி

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘என்.ஜி.கே’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

11:11:01 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் சூழல் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி கர்நாடகாவிலிருந்து உபரி நீர் முழுவதும் திறக்கப்படுவதால் காவிரி பாசன பகுதி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11:07:49 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஐ.டி சோதனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் அவர் கோரியுள்ளார்.

11:05:43 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

"வெளிநாட்டினர்களே சிலர் ஹெராயின், அபின் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களிடம் போலீஸார் விசாரித்தால் தூதரக அதிகாரிகள் வெளிநாட்டினரை டார்ச்சர் செய்வதாகத் தமிழக போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதால், போலீஸாரும் ஒதுங்கி நின்று கொடுப்பதை வாங்கிக்கொண்டு சமூக விரோத தொழிலுக்கு வழிவிட்டுச் செல்கிறார்கள்"

11:01:57 on 23 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் துப்பாக்கி முனையில் அனைவரையும் சிறைவைத்ததோடு ஒருவரை சுட்டு வீழ்த்திய சம்பவம், அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்துள்ளது. விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக அவரது பாட்டி மற்றும் மனைவியை கொன்றுவிட்டு அதே கோபத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

10:55:02 on 23 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியது. 11 கல்லூரிகளில் 1411 இடங்களுக்கு இன்று முதல் வரும் 26 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. தகுதிபெற்ற 7342 பேரில் முதல் நாள் கலந்தாய்வுக்கு 404 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

10:53:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக மூன்றாவது நீதிபதி தனது விசாரணையை துவக்கியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் முன் வழக்கு விசாரணை துவங்கியது. இவ்வழக்கில் டிடிவி தரப்பினர் முதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.

10:51:13 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ஜியோ ஃபோன் எக்ஸ்சேஞ் சலுகை இப்போது ஜியோவின் ஷோ ரூம் மற்றும் அதன் மற்ற விற்பனை மையங்களில் கிடைக்கத் தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், புதிய ஜியோ ஃபோன்களை 501 ரூபாய்க்கு எக்ஸ்சேஞ் செய்து கொள்ளும் திட்டத்தை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

10:41:01 on 23 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறையாக அனுமதி பெறாமல் ஜெனரேட்டர் அறை கட்டியது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து ஜெம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று நோட்டீஸ் அனுப்பினர்.

10:25:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக மூன்றாவது நீதிபதி விசாரணையை துவக்க உள்ளதால், வழக்கு நடைபெறும் நீதிமன்ற அறைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்கு கூடுதல் மத்திய படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

10:18:43 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 80,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 30000 கன அடி கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 51,038 கன அடி நீர் திறக்கப்பட்டது

10:15:52 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைப்பெற்றது. அங்கு, இரும்பு சாரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 35 பேரில் 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பிகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு, மூச்சு திணறி பலியானார். இன்று, மேலும் பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

10:10:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4-ம் நாளாக நீடிப்பதால் தமிழகம் முழுவதும் காய்கறி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது மக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.

09:55:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

பாஜக தலைவர் அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் வகையில், பாஜக சார்பில் 1,800 ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் உருவாக்கப்பட்டு , அதில் அனைத்திலும் அமித்ஷா இடம் பெற்றுள்ளார். மக்களவை தேர்தலுக்கு பாஜக நிர்வாகிகளை தயார் படுத்தவும், மக்களுக்கு பாஜக தொடர்பான தகவல்களை கொண்டு சேர்க்கவும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

09:41:01 on 23 Jul

மேலும் வாசிக்க இப்போது.காம்

திருப்பூர் மாவட்ட அவிநாசி வட்டம் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலர் பாப்பாள் ஒரு தலித் பெண் என்பதால் சத்துணவு சமைக்க சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த பாப்பாளை நேரில் சந்திக்கச் சென்ற அனைவருக்கும் அவர் சமைத்த உணவை விருந்தளித்தார்.

09:26:01 on 23 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

விஜய்யின் 62 வது படமான சர்காரை முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்நிலையில், 63 வது படம், தெறி, மெர்சலை தொடர்ந்து விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

09:11:01 on 23 Jul

மேலும் வாசிக்க இப்போது.காம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று தன் விசாரணையைத் தொடங்குகிறார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தொடர்ந்து 5 நாள்கள் விசாரணை நடைபெறவுள்ளதால், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

08:59:42 on 23 Jul

மேலும் வாசிக்க விகடன்

தென்-மேற்கு சிரியாவின் போர் நிகழும் பகுதியிலிருந்து சிரியாவின் 'வைட் ஹெல்மெட்ஸ்' எனப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த சுமார் 422 பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழுள்ள கோலன் ஹைட்ஸ் வழியாக ஜோர்டானுக்கு மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

08:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நடைபெறும் ரோஸஸ் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான் கிளார்க் கிரிக்கெட் ஆட்டத்தின் உயர்தர ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

08:50:56 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

"ஆரம்பத்திலேயே எல்லாம் கொடுத்துவிட்டால் தேர்தலுக்கு ஒன்றும் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறையில் கொடுக்கிறார்கள். தான்தான் புத்திசாலி என்ற நினைப்பு. மக்களும் புத்திசாலிகள்தான்,"

08:43:11 on 23 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஆல்வாரில் முஸ்லிம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இப்போது இருக்கும் நிலையில் முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

08:41:01 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பெருங்களூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

08:26:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று புறப்பட்டு செல்கிறார். முதல் நாள் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு மோடி இன்று செல்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

08:10:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் தேவாஸ் நகரை சேர்ந்தவர் ஆஷாராம் சவுத்ரி (18). இவரது தந்தை தெருவோர குப்பைகளில் இருந்து விலைபோகும் பொருள்களை சேகரித்து விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது மகன் எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு தேர்வானதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

07:56:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அப்போதுதான் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

07:41:01 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கேமரா சென்சாரின் கீழ் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

07:26:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், 28 சதவீத, உயர் வரி பிரிவில், தற்போது, 35 பொருட்கள் மட்டுமே உள்ளன. ஜி.எஸ்.டி., விதிப்பு முறை, ஸ்திரத்தன்மையை அடையும் பட்சத்தில், 28 சதவீத உயர் வரி பிரிவில் உள்ள, மேலும் சில பொருட்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

07:11:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினமலர்

நான் அரசியலுக்கு வந்து இருந்தால், முதல்–அமைச்சராகி இருப்பேன் என்று டைரக்டர் பாரதிராஜா கூறினார். மேலும், டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருக்கிறது. அதனை அரசிடம் வற்புறுத்துவேன் என்றும் தொடர்ந்து படங்கள் டைரக்டு செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

06:56:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

புதிய ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்புதிய ஹோண்டா ஜாஸ் காரின் முன்புறத்தில் அகலமான ஏர்டேம் கொண்ட பம்பர் அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய கார், இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் விலை ரூ.6 லட்சம் ஆகும்.

06:41:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

06:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

"கேலோ இந்தியா" திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 734 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வான வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:11:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

இந்தியா-ரஷ்யா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டி வருவதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலாய் குடாசேவ் தெரிவித்தார். இந்தியாவின் ராணுவம் மற்றும் அரசியல் வெளியில் இருந்து தங்களை வெளியேற்ற அமெரிக்கா தவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

05:56:01 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

’2047ஆம் ஆண்டில் இந்திய உலகின் 2ஆவது அல்லது 3ஆவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்’ என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார். மேலும் அவர், ’2022ஆம் ஆண்டு 75வது சுதந்திர தினத்தில் புதிய இந்தியாவுக்கான திட்டங்களை நிதி ஆயோக் வெளியிட உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

05:40:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ரஜினி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், கமல் தமிழர் கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று சாருஹாசன் கூறியுள்ளார். மேலும் அவர், அவர், இருவருக்கும் ஓட்டு போடுவதை விட ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

05:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

நடிகர்கள் மீது ஸ்ரீரெட்டி தொடர் புகார் தெரிவிப்பது என்பதே தவறு என்றும், விளம்பரத்திற்காக மட்டுமே அவர் இப்படி பேசி வருகிறார் என்றும் நடிகை பழம்பெரும் லதா தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தொழில்களிலும் நல்லது, கெட்டது இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

05:10:01 on 23 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஈரானுடனான போர் அனைத்துப் போர்களுக்கும் தொடக்கமாக அமையும் என்பதை அமெரிக்கா அறிந்துகொள்ள வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார். சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாட வேண்டாம். அத்தகைய செயல் மிகவும் வருத்தப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிடும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

04:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ். காதல் மற்றும் ஆக்‌ஷன் கலவையான இந்தப் படம், கோயம்புத்தூரைப் பின்னணியாகக் கொண்டு உருவாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘வட்டம்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

04:40:01 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) (Endometriosis) 3ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக இது உள்ளது. இதனால் பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

04:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் காப்புரிமை மூலம், கடந்த 3 ஆண்டுகளில் மும்பை ஐஐடி அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி 2017- 18 கல்வியாண்டில் 17.99 கோடி , 2016- 17 ல், 17.11 கோடி, 2015- 16 ல் 10.55 கோடி ரூபாயும் வருமானமாக ஈட்டியுள்ளது.

04:10:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினமலர்

தென்னாப்பிரிக்காவில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வாடகைக் கார் ஓட்டுவோர் சங்கங்களுக்கு இடையே நிலவும் தொழில் போட்டியே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்றும் கவ்டெங் என்ற டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்த நபர்களே இதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

03:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரிக்க முடிப்பதற்காக 5 ஆயிரம் புலனாய்வு கருவிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வாங்கியுள்ளது என்று அதிகாரி ஓருவர் தெரிவித்தார். மேலும் இந்த ஒவ்வொரு கருவியிலும்,தலா 200 முதல் 300 ரூபாய் மதிப்பிலான சோதனை குழாய்கள், கண்ணாடி பாட்டில்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

03:40:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினமலர்

மனிதர்களின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை கண்டறியும் புதிய வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வழிமுறை வெற்றிபெறும் பட்சத்தில் மன அழுத்த அளவு சீராக இல்லாத நிலையில், பயனர்கள் வீட்டில் இருந்தபடியே முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

03:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரை மாவட்டம் மேலூர் கீழையூர் பகுதியில் உள்ள தனியார் கிரானைட் குவாரி குட்டையில் குளித்த, வெள்ளநாதன்பட்டியை சேர்ந்த சதாம்ஹூசைன்(22) மற்றும் அவரது சகோதரர் சலீம்(20) ஆகியோர் நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

03:10:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினமலர்

அமெரிக்கா- சீனா நாடுகள் இடையே தற்போது வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள சி.ஐ.ஏ. அதிகாரி மைக்கேல் கோலின்ஸ், அமெரிக்காவுக்கு எதிராக சீனா அமைதியான முறையில் பனிப்போரை தொடுத்து இருப்பதாகவும், இது அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே நிலவிய பனிப்போரைப் போன்றது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

02:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

கட்சி குறித்து வதந்தி, பொய் செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப்பில் 1,800 குழுக்களை பாஜ உருவாக்கியுள்ளது என பாஜ மீடியா பொறுப்பாளர் நீலகந்த் பக்ஷி தெரிவித்தார். மேலும், மாவட்டம் மற்றும் மண்டலங்கள் அளவிவல் சமூக வலைதளங்கள் மூலமான கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

02:40:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினமலர்

திரைத்துறையினரை பற்றி புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, நடிகைகளை அனுபவிக்கத்தான் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். ஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

02:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சாங்யாங் நிறுவனத்தின் புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 என்ற பெயரில் அழைக்கப்படும் இப்புதிய பிரிமியம் கார் மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

02:10:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ஐரோப்பிய நாடுகளில் தற்போது வெயில் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மனியில் வெயிலில் சிக்கித் தவித்த 3 அணில் குட்டிகளை அங்கிருந்த அணில் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த் விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டனர். அவற்றிக்கு உணவும், நீரும் கொடுக்க அதனை அணில் குட்டிகள் வாங்கி கொண்டன .

01:55:02 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பைகானீர் ரயில் நிலையம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இரு நாட்களாக பெய்து வரும் மழையால் ரயில் நிலையம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது. நடைமேடை வரை மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

01:40:01 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துள்ளார். அதில், ‘அனைவருக்கும் வணக்கம்.. தமிழ் உட்பட பல மொழிகளில் என் கதை சொல்லப்படுகிறது என்று நான் மிகவும் ஆவலாக உள்ளேன். என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் ’ என்று கூறியிருக்கிறார்.

01:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆறுகள், வாய்க்கல்களை தூர்வார ஜனவரியிலேயே நிதி ஒதுக்கியும் பொதுபணித்துறை காலம் தாழ்த்துகிறது என பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தண்ணீர் திறந்தபிறகு தூா்வாரினால் முறைகேடுகள் நடக்கும் எனவும் காவிரிநீர் கடைமடை விளைநிலங்களுக்கு செல்ல பாசன வாய்க்கால்களே இல்லை எனவும் அவர் கூறினார்.

01:10:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

விண்வெளி மையத்தில் சிக்கலான ஆய்வுகளுக்கு இயந்திர மனிதர்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஃபெடார் என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதர்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ராணுவத்தில் வீரர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க போரில் இயந்திர மனிதர்களை ஈடுபடுத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

12:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

சிறுதானியம் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் உள்ள சிறிய அளவிலான தானியங்கள் ஆகும். எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்து கொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.

12:40:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சோலையம்மா படத்தில் வில்லனாக நடித்த கரிகாலன், காமராஜர் கனவுக் கூடம் என்ற ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு 10 படங்கள் தயாரிக்க உள்ளோம் என அவர் கூறினார்.

12:25:02 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

உலகம் முழுக்க இணைய வசதியை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதெனா என்ற பெயரில் உருவாகும் ஃபேஸ்புக்கின் செயற்கைக்கோள் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

12:10:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

கிரீமியாவில் உள்ள தைகன் விலங்கியல் பூங்காவின் நிர்வாக அலுவலர், அங்கு சுற்றுலா வந்திருந்த பெண் பயணியுடன் பூங்காவில் சுற்றி பார்த்து கொண்டிருந்தார். சிறிய பெண் சிங்கம் ஒன்றை மற்ற சிங்கங்கள் தாக்கியதை பார்த்த அலுவலர், விரைந்து சென்று தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி சிங்கங்களை விரட்டியடித்தார். இது வைரலாக பரவி வருகிறது.

11:55:01 on 22 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

யோ யோ டெஸ்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு வீரர்களைத் தேர்வு செய்வது எந்தவிதத்திலும் சரியல்ல.வீரர்களின் மற்ற திறமைகளையும் ஆய்வு செய்து அதனடிப்படையில் தேர்வு நடக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார். அநாவசியமான, தேவையில்லாத மாற்றங்களைச் செய்தது அணியின் ஸ்திரத்தன்மையை குலைத்துவிடும் என்றும் அவர் கூறினார்.

11:40:01 on 22 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாயூ எரிமலை கடந்த மே மாத இறுதியில் வெடித்த நிலையில், அதிலிருந்து வெளியேறிய லாவா எனும் நெருப்பு குழம்பு, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கடலில் கலக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 712 வீடுகளை அழித்த அந்த நெருப்பு குழம்பு, கடலில் சென்று கலக்கவுள்ளது.

11:25:01 on 22 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக (தீர்மானத்துக்கு ஆதரவாக) ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

11:10:01 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்திய சினிமாவில் ஒரு முன்னணி ஆளுமையாக இருப்பவர் கமல்ஹாசன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி என இரு வேறுபட்ட துறைகளில் முக்கிய ஆளுமையாக இருந்துவரும் இருவர் குறித்தும் நே‌ஷனல் ஜியாகிரபி சேனலில் ஆரம்பிக்கப்பட உள்ள ‘மெகா ஐகான்ஸ்’ எனும் புதிய தொடரில் விவரிக்கப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் இந்தத் தொடர் தொடங்கவுள்ளது.

10:55:01 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

’பாராளுமன்ற பொதுத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஒன்றாக வரும் என்று உறுதியாக நம்புகிறோம்.எடப்பாடி தொகுதி மட்டுமல்ல;234 தொகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்துவோம்.அதிலும் துரோகிகள் பட்டியலில் முக்கியமான 10 பேருக்கு மேல் இருக்கிறார்கள்.ஜனநாயக முறைப்படி அவர்களை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்’ என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

10:40:01 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

’தமிழகத்தில் பல வருமான வரி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதன் முடிவு என்ன? என்பது எதுவும் தெரியாமல் மூடுமந்திரமாக உள்ளது. இந்த வருமான வரி சோதனை குறித்து மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு மேல் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

10:26:01 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அனில் அம்பானி தலைமையிலான 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம் 'சீனியர் செக்யூர்டு நோட்ஸ்' கடன் பத்திர முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. லண்டனில் ஆகஸ்டு 10இல் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கடன் பத்திரங்களின் மறுசீரமைப்பு, முதிர்வு காலத்தை நீட்டிப்பது உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிகிறது.

10:10:02 on 22 Jul

மேலும் வாசிக்க தின மலர்

மேலும் வாசிக்க