View in the JustOut app
X

கோவை அன்னூரில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருபவர் கனகராஜ். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தாயுடன் இரவு உறங்கிக்கொண்டிருந்த அந்த குழந்தை, காலை வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

06:45:02 on 24 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில், ஜூன் 2018ஆம் ஆண்டு, புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவோடு ஜூன் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவு ஒப்பிட்டப்பட்டுள்ளது.

06:27:02 on 24 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்நாடு

60 நாட்கள் மீன் பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு இந்த வார விடுமுறை தினத்தில் சந்தை குதூகலத்துடன் மீண்டும் தொடங்கியுள்ளது. வாவல், மத்தி, சூறை உள்ளிட்ட மீன் பிரியர்கள் இனி குறைந்த விலையில் இவற்றை வாங்கலாம். சென்ற வாரம் ஒரு கிலோ ரூ.350க்கு விற்பனையான மத்தி மீனின் விலை ரூ.150 முதல் ரூ.200க்கு இப்போது கிடைக்கிறது.

06:09:01 on 24 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேகதாது விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடித்தத்தில், மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

06:07:38 on 24 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

60 நாட்கள் மீன் பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு இந்த வார விடுமுறை தினத்தில் சந்தை குதூகலத்துடன் மீண்டும் தொடங்கியுள்ளது. வாவல், மத்தி, சூறை உள்ளிட்ட மீன் பிரியர்கள் இனி குறைந்த விலையில் இவற்றை வாங்கலாம். சென்ற வாரம் ஒரு கிலோ ரூ.350க்கு விற்பனையான மத்தி மீனின் விலை ரூ.150 முதல் ரூ.200க்கு இப்போது கிடைக்கிறது.

06:06:02 on 24 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அதேபோன்று, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.

05:49:43 on 24 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கனடா நாட்டைச் சேர்ந்த டிஃப்பனி ஆடம்ஸ் என்பவர் கடந்த 9-ம் தேதி ஏர் கனடா விமானத்தில், கியூபெக் நகரிலிருந்து டொரொண்டோவுக்குச் சென்றுள்ளார். சுமார் 90 நிமிடங்கள் கொண்ட அந்தப் பயணத்தின்போது ஆடம்ஸ் விமானத்திலேயே தூங்கியுள்ளார். பின்னர் கண் விழித்துப் பார்க்கும்போது ஒரே இருட்டாக இருந்துள்ளது.

05:45:02 on 24 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோப்பா அமெரிக்கா தென் அமெரிக்க கால்பந்துத் தொடரின் காலிறுதிக்கு மெஸ்ஸியின் அர்ஜெண்டினா தகுதி பெற்றது. கத்தாருடன் நடைபெற்ற போட்டியில் 2-0 என்று வெற்றி பெற்றது அர்ஜெண்டினா. செர்ஜியோ அகியுரோ மற்றும் லவுதாரோ மார்டினேஸ் தலா 1 கோல் அடித்து அர்ஜெண்டினாவை காலிறுதிக்கு இட்டுச் சென்றனர்.

05:25:02 on 24 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஈரோட்டில் இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் மாணவர்களின் போராட்டத்தை செய்தியாக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி தாக்கியதாக காயமடைந்த செய்தியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

05:19:36 on 24 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலகின் முதல் பேட்டரி ஆப்ரேட்டட் ஏர்கிராஃப்ட் தயாராகிவிட்டது. 2 பேரை ஏற்றிச்செல்லக்கூடிய இந்தக் குட்டி விமானத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் 160 கிமீ வரை பறக்கலாம். மற்ற விமானத்தில் விதிகள்படியே இயங்கும் இந்த விமானத்தில் ஒரே ஒரு மாற்றம்தான்; இதிலிருப்பது 60 கிலோவாட் மின்சார என்ஜின்.

04:48:01 on 24 Jun

மேலும் வாசிக்க விகடன்

உலகின் முதல் பேட்டரி ஆப்ரேட்டட் ஏர்கிராஃப்ட் தயாராகிவிட்டது. 2 பேரை ஏற்றிச்செல்லக்கூடிய இந்தக் குட்டி விமானத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் 160 கிமீ வரை பறக்கலாம். மற்ற விமானத்தில் விதிகள்படியே இயங்கும் இந்த விமானத்தில் ஒரே ஒரு மாற்றம்தான்; இதிலிருப்பது 60 கிலோவாட் மின்சார என்ஜின்.

04:45:01 on 24 Jun

மேலும் வாசிக்க விகடன்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையின் மீது ரயில்வே இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ரயில்வே ஒப்புதல் அளித்தால் மட்டுமே தண்ணீரை எடுத்து வருவதற்கான பணிகளை தொடங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:41:09 on 24 Jun

மேலும் வாசிக்க தினகரன்

குடிநீர் பஞ்சத்தைப் போக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உரிய வகையில் தீர்வு காணாமல் பாஜக பாதையில் பக்திப் போதையை ஊட்டி, திசை திருப்பலாம் என்று தமிழக அரசு கனவு கண்டால், அது கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்வதற்குச் சமம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

04:27:02 on 24 Jun

மேலும் வாசிக்க காமதேனு

இன்றைய தினம் எப்போதும் போல் ஆட்டம் பாட்டம் என செம்ம குத்தாட்டதோடு இன்றைய பொழுது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விடிந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

04:09:01 on 24 Jun

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

இன்றைய தினம் எப்போதும் போல் ஆட்டம் பாட்டம் என செம்ம குத்தாட்டதோடு இன்றைய பொழுது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விடிந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

04:06:02 on 24 Jun

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள பவஞ்சே என்ற இடத்தில் கேசர்ட் ஓஞ்சி தினா எனும் நிகழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நடனமாடி மகிழ்ந்தனர்.

03:45:01 on 24 Jun

மேலும் வாசிக்க தினமலர்

பெண்களை மானபங்கம் படுத்துவோரை நடுரோட்டில் பொதுமக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில் தூக்கிலிடுவதுதான் ஒரே தீர்வு என்று நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ”ஆண்டு கணக்கில் விசாரணை என்ற பெயரில் தள்ளிப்போடாமல் உடனடியாக தண்டனை கொடுத்தால் தான் இதுபோன்ற தவறுகள் செய்ய இன்னொருவருக்கு துணிவு வராது.”என்றார்.

03:25:01 on 24 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

விரால் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், வரும் பிப்ரவரி மாதம் நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழக்கத்தில், பேராசிரியராக இணையவிருந்ததாகவும் அதற்காக ஆகஸ்ட் மாதமே கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது

03:12:28 on 24 Jun

மேலும் வாசிக்க விகடன்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை ஒன்றாம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்றும், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை 23 நாட்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

03:01:12 on 24 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய இந்த மாத ஊதியமான ரூ.150 கோடிக்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ள பி.எஸ்.என்.எல் ( BSNL ) நிறுவனம் தனது செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலையில் நெருங்கிவிட்டதாகக் கவலை தெரிவித்துள்ளது.

02:55:02 on 24 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு இம்ரான் தாஹிரின் சாதனை சற்று ஆறுதலை அளித்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் முதல் பந்தை வீசியவர், முதல் விக்கெட்டை வீழ்த்தியவர், அதிலும் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் பந்தை வீசிய சுழற்பந்து வீச்சாளர் உள்ளிட்ட பெருமைகளும் இம்ரான் தாஹிரையே சேரும்.

02:47:10 on 24 Jun

மேலும் வாசிக்க தினமணி

மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் ரூ.3.2 லட்சத்துக்கு மேலான பணம் பயணிகளின் தொலைந்துபோன மணி பர்ஸ்களிலிருந்து கிடைத்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

02:42:02 on 24 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஈரோடு அடுத்த சத்தியமங்கலத்தில் இலவச மடிக்கணினி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கைது செய்யப்பட்டனர். ப்ளஸ் 2 படித்து முடித்த பிறகும் அரசு மடிக்கணினி தரவில்லை என மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

02:36:16 on 24 Jun

மேலும் வாசிக்க தினகரன்

’தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. அது மக்களிடையே எடுபடாது. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது மக்களுக்கு செய்யும் துரோகம் ’ என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

02:25:02 on 24 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

கவியரசர் கண்ணதாசனுக்கு இன்று 93வது பிறந்தநாள். அரை நூற்றாண்டைக் கடந்தும் அவருடைய பாடல்கள் இன்றும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றன. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி கண்ணதாசன்.

02:12:01 on 24 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேயிலைப் பொடியை வெதுவெதுப்பான நீரில் சற்று ஊறவைத்து அரை மணி நேரத்திற்குப் பின் எலுமிச்சை சாற்றை இணைத்து, அரைத்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் நரை முடி ஒருவிதமான ப்ரவுன் நிறத்திற்கு மாறி இருக்கும்.

01:59:53 on 24 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்த நடுகோம்பை கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கிராம மக்கள் நீர் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

01:40:02 on 24 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 600 உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01:29:57 on 24 Jun

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் குற்றங்களின் சாட்சிகளாக நிற்கும் கண்காணிப்புக் கேமராக்களை அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் ஒருபுறம் இருக்க, குற்றங்களைத் தடுக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையே பெரும்பாலும் நீடிக்கிறது.

01:25:02 on 24 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை நடத்துனர்கள் தவிர்க்க வேண்டும் என திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டலத்தில் சுற்றறிக்கை ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் வைரலாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

01:10:05 on 24 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

18 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை மாதம்தோறும் பராமரிப்பு தொகை தர உத்தரவிடக்கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

01:09:35 on 24 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சவுத்தாம்டனில் நடக்கும் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. பங்களாதேஷ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 2இல் வெற்றி கண்டுள்ளது. ஆக்பான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சுழலில் மிரட்டி இருப்பதால் பங்களாதேஷ் அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.12:55:02 on 24 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

12:51:04 on 24 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி-ஜாதவ் கூட்டணி ஆடிய விதத்தைப் பற்றி சச்சின் கருத்து தெரிவித்தார். உடனே பொங்கிவிட்டார்கள் நம் கேப்டன் கூல் ரசிகர்கள். 'அவங்க அந்த இடத்துல அப்படி ஆடலைனா இந்தியா அந்த ஸ்கோர்கூட வந்திருக்காது' என்று பேசத் தொடங்கியவர்கள் வகை தொகை இல்லாமல் அந்த ஜாம்பவானை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.

12:44:04 on 24 Jun

மேலும் வாசிக்க விகடன்

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படம் ஏற்கெனவே ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அன்று வெளியாகிவில்லை. இந்நிலையில், வரும் 28ஆம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12:42:01 on 24 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் டிக்-டாக் செயலியில் வீடியோவைப் பதிவேற்றம் செய்வதற்காக சாகசம் செய்ய முயன்றபோது அவரது கழுத்தெழும்பு முறிந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

12:24:24 on 24 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தும் திமுகவின் சார்பில் சென்னை, சேப்பாக்கத்தில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காலிக் குடங்களை கையில் ஏந்தி ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார்.

12:14:23 on 24 Jun

மேலும் வாசிக்க காமதேனு

பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே வெறும் புற்களை கைகளால் நெய்து செய்யப்பட்ட கெஸ்வாசாக்கா பாலம் உள்ளது. இந்தப் பாலம் 600 ஆண்டுகள் பழமையானது. இன்கா அரசில் இந்த பாலம் நகரங்களை இணைத்தது. யுனெஸ்கோவால் 2013ஆம் ஆண்டு உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டது.

12:12:01 on 24 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா தனது பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் இன்று திடீரென ராஜினாமா செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் ரிசர்வ் வங்கியில் உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் ராஜினாமா செய்வது இது 2வது நிகழ்வாகும்.

12:02:36 on 24 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

குஜராத் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் சாமி கும்பிட சென்ற ஒரு பெண் அங்கிருக்கும் யானை கற்சிலையின் ஒரு பகுதியில் புகுந்து மற்றொரு பகுதியில் வெளிவர திட்டமிட்டார். அப்படி சென்றபோது சிலையின் நடுவே சென்ற அவர் அப்படியே மாட்டிக் கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

11:55:03 on 24 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

ராஜஸ்தான் மாநிலம் ஜார்கண்டில் உள்ள சரைகேலா கர்சவானில் ஷாம்ஸ் தப்ரெஸ் என்ற இஸ்லாம் இளைஞரிடம் அப்பகுதி மக்கள் மத ரீதியாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் எனக் கூறுமாறு வற்புறுத்தி அடித்து உதைத்துள்ளனர். பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

11:43:05 on 24 Jun

மேலும் வாசிக்க ETV BHARAT

இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போதைக்கு விடப்படவில்லை.

11:40:01 on 24 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

உலக கோப்பை தொடர் முடிந்த பின் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு இந்த போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

11:34:57 on 24 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

மாதுளையில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இரத்த நாளங்களை இறுக செய்யும் என்சைம்களின் சுரப்பை தடுத்து உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். ஆரஞ்சில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட், பையோஃப்ளேவனாய்டு இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து உடலில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகிறது.

11:30:23 on 24 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சேலம் மாவட்டம் காடையம்பட்டி குண்டுக்கல் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதியில் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருகின்றன. இதனிடையே நேற்று ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த தகவலை அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடித்து யானையை காட்டுக்குள் அனுப்பினர்.

11:25:03 on 24 Jun

மேலும் வாசிக்க சத்தியம் நியூஸ்

மராத்தி மொழியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் 2 போட்டியில் பங்கேற்ற, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் பிஜுகாலே காசோலை மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டார். அபிஜித் பிஜுகாலே சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்.

11:11:10 on 24 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று ஆரம்பமானது. பிக் பாஸ் வீட்டிற்குள் விருமாண்டி தோற்ற கமல்ஹாசன் ஓவியமும், பேட்ட ரஜினிகாந்த் ஓவியமும் வரையப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வாரம் வரை இருந்த அந்த ரஜினியின் ஓவியம் சில நாட்களுக்கு முன்பு திடீரென நீக்கப்பட்டு விட்டதாம்.

11:10:01 on 24 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். 5 நாட்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 22 ஆம் தேதி ஊருக்குச் செல்ல வேண்டியவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

11:03:22 on 24 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

நேற்று வண்டு முருகன் அஜித் என ஒரு டேக், கைப்புள்ள விஜய் என மற்றொரு டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதில் வண்டு முருகன் அஜித் ட்விட்டை பார்த்த ஒரு அடர் லவ் பட புகழ் நடிகை நூரின் ஷெரிப் ’அவர் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்’ என கூறியுள்ளார். இதை பார்த்து கோபமான அஜித் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

10:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

போர்ச்சுக்கல் நாட்டில் மலையிலிருந்து கடலில் குதிக்கும் கிளிஃப் டைவிங் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பங்கேற்றவர்கள் செங்குத்துப் பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் 90 அடி உயரத்தில் இருந்து குதித்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.

10:44:40 on 24 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

10:36:58 on 24 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜீவா நடித்துள்ள கொரில்லா திரைப்படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு. இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். இதில், சதீஷ், ராதாரவி, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

09:55:01 on 24 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்தில் ரூ.20 கோடி செலவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தனி விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

09:35:01 on 24 Jun

மேலும் வாசிக்க தினமணி

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 92வது பிறந்தநாள். 700க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை மேதையாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இசையமைப்பாளராக மட்டுமின்றி நல்ல பாடகராகவும் திகழ்ந்த எம்.எஸ்.வி. ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

09:18:01 on 24 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 92வது பிறந்தநாள். 700க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை மேதையாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இசையமைப்பாளராக மட்டுமின்றி நல்ல பாடகராகவும் திகழ்ந்த எம்.எஸ்.வி. ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

09:15:01 on 24 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மராட்டிய மாநிலம் புனே, யவாத் பகுதியில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திரத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.30 லட்சம் வரை இருந்த எந்திரத்தையே தூக்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

08:59:49 on 24 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

08:35:01 on 24 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர். சமீப காலமாக தங்கம் விலை, கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதற்கு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களே காரணமாக அமைவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

08:18:02 on 24 Jun

மேலும் வாசிக்க தின மலர்

தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர். சமீப காலமாக தங்கம் விலை, கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதற்கு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களே காரணமாக அமைவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

08:15:02 on 24 Jun

மேலும் வாசிக்க தின மலர்

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராஜஸ்தானில் பாமர் மாவட்டத்தில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட கூடாரம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

07:35:01 on 24 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.77 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:21:45 on 24 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், ஊட்டங்களும் நம்முடைய உணவில் ஒரு சேர உள்ளது. இவைகளில் முக்கிய பங்கு வகிப்பவை சிறு தானியங்கள். இதில் புரதம், வைட்டமின்கள், கொழுப்பு சத்து, மினரல்கள், கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் உடல் எடை அதி கரித்தல், இதய நோய்கள் வராமல் நமது உடலை பாதுகாக்கிறது.

06:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

திருப்பூர் மாவட்டம் வறட்சி பகுதியான வெள்ளியம்பாளையம் கிராமத்தில் ஆடுகள் வளர்ப்பது மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம். இந்நிலையில், விவசாயி செல்வராஜ் தனது பட்டியில் அடைத்த 30 ஆடுகளும் வெறிநாய் கடித்து பலியாகியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு இழப்பீடு தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

06:25:01 on 24 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

’மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கியிருக்கின்றார்’ என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

05:55:01 on 24 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும். உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

05:25:01 on 24 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே பேசப்பட்ட இரண்டு முக்கியமான போன்கள் சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் ஹூவாய் நிறுவத்தின் மேட் எக்ஸ். ஜூன் மாதம் இந்த போனின் அறிமுக விழா இருக்கும் என்று அறிவிக்கப்படிருந்தது. பின்னர் இந்த வருடம் செப்டம்பர் மாதம் அந்த போன் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

04:55:01 on 24 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

சென்னை பெருநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அடையார் மண்டலம், ரஞ்சித் சாலையிலுள்ள குடியிருப்புகளில் நேரடியாகச் சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வுசெய்து மக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

04:25:01 on 24 Jun

மேலும் வாசிக்க ETV BHARAT

இந்தியாவிலுள்ள ரீனினல் ரூரல் (RRB) வங்கிகளில் ஆபிசர் (Scale I,II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (Multipurpose) போன்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

03:55:02 on 24 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தண்ணீர் சேமிப்பையும் மற்றும் தண்ணீர் சித்தனத்தையும் வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர், வியாபாரிகள், பொது மக்கள் உட்பட 700 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

03:26:01 on 24 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

தெலுங்கில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் ’சரிலேறு நீகேவ்வறு’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் விஜயசாந்தி சம்பளம் 5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேசிய விஜயசாந்தி, ’சம்பள விஷயம் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

02:56:01 on 24 Jun

மேலும் வாசிக்க விகடன்

’புதுடெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டவரைவை கொண்டு வர வேண்டுமென பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளோம்’ என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

02:26:01 on 24 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. ஆனால் இப்போது நடிகை அல்லாமல் பிரேசிலை சேர்ந்த இசப்பெல்லே என்ற பெண்ணுடன் விஜய் தேவரகொண்டா காதல் என்ற கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது.

01:56:02 on 24 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

இங்கிலாந்தை சேர்ந்த பிராம்பிள் என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்து 104 நாய்களை காப்பாற்றியுள்ளது. இந்த நாய் ஒவ்வொரு முறை ரத்ததானம் செய்யும்போது 450 மில்லி கிராம் ரத்தம் கொடுத்து வருகிறது.

01:26:01 on 24 Jun

மேலும் வாசிக்க தின மலர்

'இந்தியா சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டத்தின்படி, ககன்யான் விண்கலத்தை 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார் இஸ்ரோ தலைவர்.

12:55:02 on 24 Jun

மேலும் வாசிக்க தினமணி

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் ட்ரேடுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12:25:01 on 24 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பூண்டை அவ்வபோது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து விடும். எந்த அரிசியாக இருந்தாலும் 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஊற வைத்து உலையில் வேகவைத்தால் அது வேகும் நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும்.

11:55:01 on 23 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ராணுவ மந்திரியாக இருந்து வந்த ஜிம் மேட்டிஸ் கடந்த ஆண்டு பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ராணுவ மந்திரி பொறுப்பை வகித்து வந்த பேட்ரிக் ஷனகன் அந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை. இந்த நிலையில் புதிய ராணுவ மந்திரியாக மார்க் எஸ்பர் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார்.

11:25:01 on 23 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் நயீம் உல் ஹக், ‘சச்சின் டெண்டுல்கரின் சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு, பிரதமர் இம்ரான் கான் 1969வது வருடத்தில் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவருடைய பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.

10:55:01 on 23 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

உலகக் கோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர் இந்திய அணியை சேர்ந்த சேத்தன் சர்மா. அதாவது 1987 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சேத்தன் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார்.

10:25:01 on 23 Jun

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

மத்திய அரசு ஊழியர்களின் ஒரு சாராருக்கு ஜூன் மாத சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். ஆனால் சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த இரு நூறு ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

09:55:01 on 23 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டி கலிபோர்னியாவில் நடந்தது. இதில் உருவத்தால் அசிங்கமான ஏராளமான நாய்கள் கலந்து கொண்டன. நாயின் உரிமையாளர்களும் இந்த போட்டியில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற நாய்க்கு ஆயிரத்து 500 டாலர்கள் ரொக்கத் தொகையும், கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

09:25:02 on 23 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் நான்கிலும் தோற்றது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தே.மு.தி.க, நாளை ஆலோசனை நடத்துகிறது.

08:55:02 on 23 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை இருந்தாலும், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் அதிக அளவு பிரச்சனை இருப்பதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார்.

08:35:01 on 23 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 110 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

08:15:02 on 23 Jun

மேலும் வாசிக்க தினகரன்

விஜய் பிறந்தநாள் முன்பு துவங்கிய சண்டை ட்விட்டரில் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. இன்று விஜய் ரசிகர்கள் #VanduMuruganAJITH என ட்ரெண்ட் செய்ய, அஜித் ரசிகர்கள் #kaipullaVIJAY என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

07:57:01 on 23 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கும் அதிகமான மலைவாழ் குடும்பங்கள் வசிக்கும் சிறுவாட்டு காடு, செட்டுக்காடு பகுதி மக்களுக்கு மின்சாரசேவை வழங்கபட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

07:35:01 on 23 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஒரு உணவகத்தில், பர்கர் 1 லட்சம் யென்க்கு ( 1000 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் 69 ஆயிரம் ரூபாய்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த பர்கரின் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள உணவு விரும்பிகள், அப்படி அந்த பர்கரில் என்ன உள்ளது என்ற தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

07:18:01 on 23 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஒரு உணவகத்தில், பர்கர் 1 லட்சம் யென்க்கு ( 1000 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் 69 ஆயிரம் ரூபாய்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த பர்கரின் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள உணவு விரும்பிகள், அப்படி அந்த பர்கரில் என்ன உள்ளது என்ற தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

07:15:02 on 23 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை குறித்த நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை பெட்டிகள் அங்கேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:57:46 on 23 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உ.பி., மாநிலம் அமேதி தொகுதியில் உள்ள பாரோலியா கிராமத்தில் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி பிரதான் சுரேந்திரசிங் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி. அபோது பேசிய அவர், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி வாக்காளர்கள் பாடம் கற்பித்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

06:55:01 on 23 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ் சீசனின் மூன்றாம் பாகம் இன்று முதல் தொடங்குகிறது. இதில், கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்த உள்ளார்.

06:39:02 on 23 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

பிக் பாஸ் தமிழ் சீசனின் மூன்றாம் பாகம் இன்று முதல் தொடங்குகிறது. இதில், கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்த உள்ளார்.

06:36:01 on 23 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

06:18:01 on 23 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

06:15:02 on 23 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

நடிகை கொல்லங்குடி கருப்பாயிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் உறுப்பினர் அட்டை பெற்றுத் தந்தும் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என அவர் மன வருத்தமடைந்துள்ளார்.

06:10:21 on 23 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மதுரை மகபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாத் சார்பாக பள்ளிவாசலில் உலக நன்மை வேண்டியும் தொடர் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஹாஜத் நபில் நோன்புடன் கூடிய சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு விரதம் இருந்து மழை வேண்டி உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு தொழுகை நடத்தினர்.

05:57:01 on 23 Jun

மேலும் வாசிக்க ETV BHARAT

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் பற்றிப் பேசிய முகமது ஷமி, ’என்னுடைய திட்டம் ஒன்றுதான். யாக்கர் வீச வேண்டும். தோனியும் அதனைதான் என்னிடம் அறிவுறுத்தினார். ஹாட்ரிக் எடுப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது என தோனி கூறினார்’ என்று தெரிவித்துள்ளார்.

05:39:01 on 23 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் பற்றிப் பேசிய முகமது ஷமி, ’என்னுடைய திட்டம் ஒன்றுதான். யாக்கர் வீச வேண்டும். தோனியும் அதனைதான் என்னிடம் அறிவுறுத்தினார். ஹாட்ரிக் எடுப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது என தோனி கூறினார்’ என்று தெரிவித்துள்ளார்.

05:36:01 on 23 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ’தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். லட்சக்கணக்கான லிட்டர் நீரை ரசாயனம் கலந்து நிலத்துக்குள் செலுத்துவதால் பாதிப்பு ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.

05:35:04 on 23 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க