View in the JustOut app
X

கெளரவமிக்க கேன்ஸ் பால்மி டோர் விருதை தென் கொரிய இயக்குநர் பாங் ஜோன் ஓ பெற்றார். அவர் இயக்கிய பேரசைட் என்னும் அவல நகைச்சுவைத் திரைப்படத்திற்காக அந்த விருது வழங்கப்பட்டது. பதினொரு நாட்கள் நடைபெற்ற விழா முடிவுக்கு வந்தது. இதில் புதிய திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

08:35:02 on 26 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

முல்லை பெரியாற்றில் குளிக்கச்சென்ற நண்பரகள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.

08:15:02 on 26 May

மேலும் வாசிக்க ETV Bharat

சேலம், கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07:55:02 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது.

07:35:02 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.39 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகும் முன்பு, அப்படத்தில் நடிப்பதற்கு ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காத்திருப்பதாக ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

06:55:01 on 26 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

புதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் 4 சதவீத துணை கட்டணத்ததுடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள 4.59 சதவீதம் உயர்வும் சேர்த்து 8.59 சதவீதமாக கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

06:25:02 on 26 May

மேலும் வாசிக்க தினமலர்

நீயா 2 படத்தை ஆன் லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். படம் வெளியான நாளிலேயே முழுப் படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். படத்தின் வசூலையும் இது பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

05:55:01 on 26 May

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது. அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

05:25:02 on 26 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சாலையோரங்களிலும் தெருக்களிலும் கைவிடப்பட்ட அல்லது இடையூறாக இருக்கும் வாகனங்கள் போக்குவரத்து காவல் துறையால் கைப்பற்றப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. பின்னர் அவை விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் அடுத்த சில வாரங்களுக்குள் 2,400 கைவிடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யவுள்ளன.

04:55:02 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தேனி மாவட்டத்தின் குன்னூர், திருமலாபுரம், மரிக்குண்டு, சுப்புலாபுரம் உள்ளிட்ட இடங்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. இறவை பாசனம் நடைபெறும் இப்பகுதி விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது வைகை ஆறு. பருவமழை பொய்த்து, கோடைக்கு முன்னரே நீர்நிலைகள் வறண்டதால் விவசாயிகள் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றனர்.

04:25:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் கார்தியால்யா பாபா ஆசிரமத்திற்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையம் இருக்கிறது. அங்கு ராஜ்குமார் என்பவர் காவலராக இருந்து வந்துள்ளார். சில நாட்களாக மையத்தில் ஏதோ தவறு நடப்பதாக சந்தேகித்த ஆசிரம நிர்வாகிகள் சிலர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ச்சி செய்தனர்.

03:55:01 on 26 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தடகள வீரர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு கீடோ டயட்டை பின்பற்றுவது சிறந்ததாக இருக்கிறதாம். ஆனால் கீடோ டயட் உடனடியாக உடலில் வேலை செய்வதில்லை. எந்த ஒரு டயட்டும் உடலில் தன் வேலையை செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்து கொள்ளும்.

03:26:02 on 26 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் செய்தி பகிர்ந்த அனுராக் “டியர் மோடி சார். உங்களுடைய வெற்றிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். என் மகளை பாலியல் ரீதியாக மிரட்டி உங்கள் வெற்றியை கொண்டாடும் உங்கள் தொண்டர்களை நான் எப்படி கையாள்வது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

02:56:01 on 26 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

`கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `தர்மபிரபு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும், ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 28ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

02:26:02 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜெயம் ரவியின் 25வது படத்தை லட்சுமணன் இயக்கிவிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருவரும் நடிக்கிறார்களா என்பது உறுதியாகவில்லை.

01:56:02 on 26 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

காத்மண்டு விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

01:26:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர வறட்டு இருமல் குணமாகும்.

12:55:02 on 26 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

அஸ்வின் சரவணன் இயக்கத்திக் நடிகை டாப்ஸி நடித்துள்ள படம் ‘கேம் ஓவர்’. இப்படம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ல நிலையில், இந்தப் படத்தின் புரமோஷனுக்கு நடிகை டாப்ஸியை அழைத்தால் பிடிகொடுக்காமல் நழுவுகிறாராம்.

12:25:02 on 26 May

மேலும் வாசிக்க தின மலர்

பறவை இனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெர்கரின் பால்கன் குடும்பத்தைச் சேர்ந்த ஷஹீன் பால்கன் இனப்பெருக்க எண்ணிக்கை நீலகிரி காடுகளில் அதிகரித்து இருப்பது பறவையியலாளர்கள் மத்தியில் ஒரு புறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அவற்றின் வாழிடமும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

11:55:01 on 25 May

மேலும் வாசிக்க விகடன்

கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த விவசாயிகள் கோடை உழவிற்காக தங்களுடைய விவசாய நிலங்களை சீர்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

11:25:02 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக வரும் 30ஆம் தேதி பதவியேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்க பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

10:55:01 on 25 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழக வேலை தமிழருக்கே என்கிற போராட்டத்தின் எதிரொலியாக, சென்னை ஐ.சி.எப்.இல் பழகுநர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அறிவிப்பாணையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.

10:25:01 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். பெண்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய நாள் 1ஆம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12ஆம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

09:55:01 on 25 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தூத்துக்குடியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீன்பிடி தடைக்காலத்தில் வழங்க வேண்டிய நிவாரண உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

09:25:01 on 25 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

மணிரத்னம் இயக்கிய ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கிய ‘தடம்’ படமும் அருண் விஜய்க்கு ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.

08:57:01 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

தாப்ஸி நடித்துள்ள கேம் ஓவர் படத்துக்கு கொடுத்திருக்கும் கேப்ஷன் அனைவரையும் கவர்ந்துள்ளது. ‘நீங்கள் இதைப்போல் எதையும் பார்த்திருக்க முடியாது…’ இதுதான் அந்த கேப்ஷன். கேம் ஓவரில் முழுக்க வீல் சேரில் அமர்ந்திருக்கும் கதாபாத்திரத்தில் தாப்ஸி நடித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

08:39:01 on 25 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தாப்ஸி நடித்துள்ள கேம் ஓவர் படத்துக்கு கொடுத்திருக்கும் கேப்ஷன் அனைவரையும் கவர்ந்துள்ளது. ‘நீங்கள் இதைப்போல் எதையும் பார்த்திருக்க முடியாது…’ இதுதான் அந்த கேப்ஷன். கேம் ஓவரில் முழுக்க வீல் சேரில் அமர்ந்திருக்கும் கதாபாத்திரத்தில் தாப்ஸி நடித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

08:36:01 on 25 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கரூரைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனுக்கு, தர்ப்பூசணிப் பழத்தை வெட்டவைத்து, திருக்குறள்களை ஓதி தமிழ்முறைப்படி நடைபெற்ற தமிழ் மரபிலான பிறந்தநாள் விழா, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த பாராட்டைப் பெற்றிருக்கிறது.

08:18:01 on 25 May

மேலும் வாசிக்க விகடன்

கரூரைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனுக்கு, தர்ப்பூசணிப் பழத்தை வெட்டவைத்து, திருக்குறள்களை ஓதி தமிழ்முறைப்படி நடைபெற்ற தமிழ் மரபிலான பிறந்தநாள் விழா, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த பாராட்டைப் பெற்றிருக்கிறது.

08:15:01 on 25 May

மேலும் வாசிக்க விகடன்

என்.ஜி.கே படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவம் பற்றி நடிகை சாய்பல்லவி பேசிய போது, ”ஒரு நாள் காலை முதல் மாலை வரை செல்வராகவன் எதிர்பார்த்த ரியாக்‌ஷன் என் முகத்தில் வரவில்லை. அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறிவிட்டார். அன்று இரவு முழுக்க அழுதேன்.” எனக் கூறியுள்ளார்.

08:06:31 on 25 May

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

திருச்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ மொபைல் கண்காட்சி நடைபெறும். 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் 120க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. இந்தமுறை சிறப்பு நிகழ்ச்சியாக பழங்கால கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

07:57:02 on 25 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

மோடியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு விவேக் ஓபராய் நடித்த படம் மோடி நேற்று வெளிவந்தது. இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாள் ரூ. 2.8 கோடிதான் வசூல் செய்துள்ளது. பலரும் ரூ 5 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்த்தார்கள்.

07:56:13 on 25 May

மேலும் வாசிக்க சினி உலகம்

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக மக்களவை கொறடாவாக ஆ.ராசாவும், திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழியும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

07:45:22 on 25 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ”கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு வழங்கி கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது” என கூறினார்.

07:15:01 on 25 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சித்தார், பெருஞ்சாணி ஆகிய இடங்களில் 6 செ.மீ., பேச்சிப்பாறை, பேரையூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

06:57:01 on 25 May

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு என்பவர், காளை ஒன்றை அடக்க முற்பட்ட போது, அவரை தனது கூர்மையான கொம்புகளால் காளை குத்திக் கிழித்தது. இதில் அவர் உயிரிழந்தார்.

06:39:01 on 25 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு என்பவர், காளை ஒன்றை அடக்க முற்பட்ட போது, அவரை தனது கூர்மையான கொம்புகளால் காளை குத்திக் கிழித்தது. இதில் அவர் உயிரிழந்தார்.

06:36:01 on 25 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வங்காள விரிகுடா கரையோரத்தில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் யானம் பகுதி அமைந்துள்ளது. அங்கு 32,000 பேர் வாழ்கின்றனர். அதில் இந்தச் சிறிய கிராமத்தில் உள்ள 80 வாக்காளர்கள், மே 23 முதல் 26 வரை நடைபெறும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

06:18:02 on 25 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வங்காள விரிகுடா கரையோரத்தில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் யானம் பகுதி அமைந்துள்ளது. அங்கு 32,000 பேர் வாழ்கின்றனர். அதில் இந்தச் சிறிய கிராமத்தில் உள்ள 80 வாக்காளர்கள், மே 23 முதல் 26 வரை நடைபெறும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

06:15:01 on 25 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

06:11:23 on 25 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள சார்தானா என்ற இடத்தில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் மாணவர்களுக்கான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

05:55:02 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல என்றும், அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

05:39:01 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 7

இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல என்றும், அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

05:36:01 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 7

அமெரிக்கப் போர்க் கப்பல்களை ஈரான் மூழ்கடிக்கும் என்று அந்நாட்டு ராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரான் வல்லுநர்கள் கூறும்போது,“ ஈரானின் ஏவுகணைகள் குறித்து கவலைகள் இருந்த போதிலும் அரபிக் கடலில் உள்ள அமெரிக்கப் போர்க் கப்பலை ஈரான் தனது ரகசிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மூழ்கடிக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

05:18:02 on 25 May

மேலும் வாசிக்க காமதேனு

அமெரிக்கப் போர்க் கப்பல்களை ஈரான் மூழ்கடிக்கும் என்று அந்நாட்டு ராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரான் வல்லுநர்கள் கூறும்போது,“ ஈரானின் ஏவுகணைகள் குறித்து கவலைகள் இருந்த போதிலும் அரபிக் கடலில் உள்ள அமெரிக்கப் போர்க் கப்பலை ஈரான் தனது ரகசிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மூழ்கடிக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

05:15:02 on 25 May

மேலும் வாசிக்க காமதேனு

நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன. இதில் கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. கருப்பா நதி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

04:57:01 on 25 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஏழு இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

04:39:01 on 25 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஏழு இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

04:36:01 on 25 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கொண்டாட்டத்தைக் கிண்டல் செய்து, 'கொரில்லா' இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசினார். அப்போது அவர், ”முதன்முறையாக இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிக்காரனும் வெடி வெடிக்கிறான். பொதுஜனமாக இருந்து, நான் பார்த்த முதல் தேர்தல் இதுதான்.” என்றார்.

04:18:02 on 25 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கொண்டாட்டத்தைக் கிண்டல் செய்து, 'கொரில்லா' இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசினார். அப்போது அவர், ”முதன்முறையாக இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிக்காரனும் வெடி வெடிக்கிறான். பொதுஜனமாக இருந்து, நான் பார்த்த முதல் தேர்தல் இதுதான்.” என்றார்.

04:15:01 on 25 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மத்திய பிரதேசம் சியோனியில் மாட்டிறைச்சி கொண்டு செல்லப்பட்டதாக கூறி பசுக்குண்டர்கள் ஒருவரைத் தாக்கியுள்ளனர். பின்பு அவரிடம் வீட்டிலிருக்கும் பெண்ணை அடிக்குமாறும், ஜெய் ஶ்ரீராம் என்று கூறுமாறும் வற்புறுத்தியிருக்கின்றனர்.

03:55:01 on 25 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இரவு வெகுநேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும். அவ்வாறு தூங்காமல் இருந்தால், மனநிலை பாதிப்பு, அதிக எடை கூடுதல், சர்க்கரை நோய், இருதய சம்பந்தமான நோய் போன்றவைகளால் பாதிக்கப்படக் கூடும்.

03:39:01 on 25 May

மேலும் வாசிக்க மாலை மலர்

இரவு வெகுநேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும். அவ்வாறு தூங்காமல் இருந்தால், மனநிலை பாதிப்பு, அதிக எடை கூடுதல், சர்க்கரை நோய், இருதய சம்பந்தமான நோய் போன்றவைகளால் பாதிக்கப்படக் கூடும்.

03:36:01 on 25 May

மேலும் வாசிக்க மாலை மலர்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அக்கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

03:24:37 on 25 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

காமெடி நடிகர் கவுண்டமணிக்கு இன்று 80வது பிறந்தநாள். அவர் பிறந்தநாள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கவுண்டமணியின் காமெடி இன்றளவும் மீம்ஸ்கள் மூலம் ட்ரெண்டிலேயே உள்ளது. அந்த அளவு அவரின் ஆல் டைம் காமெடி நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது.

03:19:20 on 25 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ் சினிமாவைக் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம், தன்னுடைய நக்கல் பேச்சுகளாலும், நய்யாண்டித்தன நகைச்சுவையாலும் ஆட்சி செய்தவர், நடிகர் கவுண்டமணி. வயது பேதமில்லாமல், எல்லோராலும் கொண்டாடப்பட்ட வெகுசில கலைஞர்களில் ஓர் அதிசயக் கலைஞர் அவர்.

03:08:24 on 25 May

மேலும் வாசிக்க விகடன்

தமிழகத்தில் உள்ள பாஜகவினரை மகிழ்விக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் அமைச்சர் பதவி வழங்க இருக்கிறதாம் பாஜக தலைமை.

02:56:10 on 25 May

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

நான் நோட்டாவுக்குத்தான் வாக்களித்தேன் என்று கூறிய பல வாக்காளர்களை கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது இந்தியா. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் நோட்டாவைவிட பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளன.

02:44:40 on 25 May

மேலும் வாசிக்க தினமணி

தமிழகத்தில் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

02:29:53 on 25 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விசித்ரா 90களில் தமிழ் படங்களில் அதிகம் பார்த்த முகங்களில் ஒன்று. இவரிடம், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வீர்களா? என கேட்டதற்கு, 'காலையில் எழுந்து குத்து டான்ஸ் ஆடிவிட்டு, அவர்கள் கொடுக்கும் சில்லியான டாஸ்கை என்னால் செய்ய முடியாது' என அதிரடியாக கூறியுள்ளார்.

02:17:14 on 25 May

மேலும் வாசிக்க சினி உலகம்

பாகிஸ்தான் அணியின் ஜெர்ஸியில் தோனி பெயர் மற்றும் 7 என்ற எண் பதிவிட்டதை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பல இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய பல பாகிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தானில் தோனிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என தெரிவித்து வருகின்றனர்.

02:11:14 on 25 May

மேலும் வாசிக்க நக்கீரன்

மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 16வது மக்களவையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலைத்தார். 17வது மக்களவைக்கு தேர்வான எம்பிக்களின் விவரங்கள் குடியரசு தலைவரிடம் சமர்பிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் சுனில் அரோரா ஒப்படைத்தார்.

01:46:49 on 25 May

மேலும் வாசிக்க தினகரன்

சிம்பு தன் திரைப்பயணம் மூலம் பேமஸ் ஆனதை விட சர்ச்சையால் தான் பேமஸாகினார். நடிகை ஹன்சிகாவுடன் காதலில் பிரிந்து முதன் முறையாக மகா என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றார் சிம்பு. இது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

01:31:58 on 25 May

மேலும் வாசிக்க சினி உலகம்

2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முறையே 30 மற்றும் 34 முஸ்லிம் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த் 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது இது 23ஆகக் குறைந்தது. இந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் 27 முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

01:26:39 on 25 May

மேலும் வாசிக்க தினமணி

பூசணி விதைகளை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து அதனை சாஸாக பயன்படுத்தலாம். பெஸ்டோ சாஸ் மற்றும் டார்டர் சாஸுடன் ருசியாக இருக்கும். இந்த சாஸை தோசை, இட்லி மற்றும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பயன்படுத்தி கொள்ளலாம். பூசணி விதைகளை லேசாக வறுத்து அதனை சாலட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

01:25:02 on 25 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், தெலுங்கு நடிகர் மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்நிலையில், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராய் அதை உறுதி செய்துள்ளார்.

01:18:01 on 25 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாண்டி என்பவரது வயிற்றிலிருந்து மேஜைக் கரண்டிகள், ஸ்குரு டிரைவர்கள், கத்தி உள்ளிட்ட பொருட்கள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

01:14:15 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்த தேர்தலில் பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அதிமுக - பாமக கூட்டணி அமைந்ததால் பாமகவில் இருந்து ராஜேஸ்வரி ப்ரியா, ’நான் சரியான முடிவுதான் எடுத்திருக்கிறேன். பாமக தனித்து போட்டியிட்டிருந்தால் தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றிப் பெற்றிருப்பார்’ என்று கூறியுள்ளார்.

01:10:17 on 25 May

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் இனி அதிமுகவை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

01:01:55 on 25 May

மேலும் வாசிக்க மாலை மலர்

காஷ்மீரில் நேற்று பயங்கரவாதி கொல்லப்பட்டதையடுத்து, அசம்பாவித சம்பங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், குல்காம், புல்வாமா ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், 2வது நாளாக இந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

12:50:03 on 25 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நிலவும் குடிநீர் பஞ்சத்தால், நகர் பகுதியில் பெருகி காணப்படும் குரங்குகள், மனிதர்களிடம் குடிநீர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டால், அவற்றைப் பறித்துச் சென்று விடுகின்றன. இதனால மக்கள் வற்றின் தாகத்தை புரிந்துகொள்ள முடிவதாகவும், சில வேளைகளில் இடையூறாக அமைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

12:44:23 on 25 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோயமுத்தூர் மாவட்டம் இருகூர் அருகே உள்ள பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பஞ்சுகள் சேதமாகின. பஞ்சு கிடங்கில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

12:40:54 on 25 May

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினா செய்ய முன்வந்ததாகவும், அவரது ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

12:38:12 on 25 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’மக்களவை, பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிக்காக சூட்டப்படும் மாலைகள் கருணாநிதிக்கு உரியவை. திமுகவை அழிக்க நினைத்தோரை வாக்கு எனும் கரண்டியால் வாக்காளர்கள் துரத்தியடித்தனர்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12:27:22 on 25 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாட்டின் 2வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கும் நிலையில், மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவர் ஜூன் 13ஆம் தேதி கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். ஜூன் 28இல் ஜப்பான் செல்கிறார். ஆகஸ்டில் பிரான்ஸ், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.

12:08:35 on 25 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோடை விடுமுறை சில நாட்களில் முடிய உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளால் உதகை களைக் கட்டியுள்ளது. இந்நிலையில், உதகையின் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இறுதி நிகழ்ச்சியான 61வது பழக்கண்காட்சி தொடங்கியுள்ளது.

11:55:01 on 25 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சமீபத்தில் டயட்டீஷியன் ருஜுட்டா திவாக்கருடன் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஆகிய இருவரும் சந்தித்து உறையாடினார்கள். கரீனா தன் மகன் தைமூரின் உணவு பழக்கத்தை மட்டும் மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வைக்கிறார் என இந்த உறையாடல் மூலமாகத் தெரியவந்துள்ளது.

11:52:13 on 25 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவர் தன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தனது குடும்ப பிரச்சனையை மதுரை நகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

11:40:04 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று 2வது முறை பிரதமராகும் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புதிதாக பலர் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இவருக்கு உள்துறை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

11:25:02 on 25 May

மேலும் வாசிக்க தின மலர்

வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் மக்களின் நலன்கருதி வேலைநிறுத்தத்தை தள்ளி வைப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

11:18:59 on 25 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி., மற்றும் எல்.எல்.ஏ.,க்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஊர்வலமாகச் சென்று சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

11:03:00 on 25 May

மேலும் வாசிக்க தின மலர்

இந்தியா சுதந்திரம் பெற்று 72 வருடங்களில் முதல்முறையாக 78 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்பை விட தற்போது 14% அதிகமான பெண்கள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்துவைக்கவுள்ளனர். இருந்தாலும் 24% கொண்ட உலக அளவையும், 18% கொண்ட தெற்கு ஆசிய அளவையும் இந்திய பெண்களால் முந்த முடியவில்லை என்பது வருத்தம்தான்.

10:53:55 on 25 May

மேலும் வாசிக்க விகடன்

குஜராத் மாநிலம் சூரத் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தில் இருந்து குதித்ததாலும், மேலும் சிலர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

10:41:58 on 25 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் அடைந்துள்ள படுதோல்விக்கு, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட எதிர்மறை பிரசாரமே காரணம் என கட்சியின் முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே குற்றம்சாட்ட துவங்கியுள்ளனர்.

10:38:24 on 25 May

மேலும் வாசிக்க ie தமிழ்

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரீசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் கட்சியின் தலைவராக மட்டுமின்றி பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பதவி ஏற்பார்கள்.

10:35:00 on 25 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திண்டிவனத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட அருணாச்சலம், பாண்டியன், வேடியப்பன் ஆகிய மூன்று பேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 36 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

10:25:18 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நேற்றைய வலை பயிற்சியின் போது உலகக் கோப்பை அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடுவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

10:21:47 on 25 May

மேலும் வாசிக்க நக்கீரன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தாலும், கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.

09:55:02 on 25 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத் குமார், ’அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவுகள் எனக்குக் கிடையாது’ என்று கூறியுள்ளார். இவர் இப்படிக் கூறினாலும், பன்னீர்செல்வம் தரப்பு ரவீந்திரநாத்துக்காக கப்பல் போக்குவரத்துத் துறையை பெறும் முனைப்பில் இருக்கிறதாம்.

09:35:01 on 25 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே டி.வல்லகுளத்தில் ராதிகா என்ற பெண்ணை தகாத உறவு காரணமாக அடித்துக் கொலை செய்து எரித்துள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஆறு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

09:15:01 on 25 May

மேலும் வாசிக்க தினகரன்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணியை, ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

08:55:01 on 25 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி, தோல்வி மாறி, மாறி அமைந்திருப்பதால் வெற்றிகளைக் கொண்டாட முடியாமல் திமுக, அதிமுகவினர் தவித்து வருகின்றனர்.

08:35:02 on 25 May

மேலும் வாசிக்க தினமணி

புதுச்சேரி முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதியில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ஓட்டலில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

08:15:01 on 25 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை முறைப்படி அவர் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

07:55:01 on 25 May

மேலும் வாசிக்க மாலை மலர்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற, திமுக எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அதில் லோக்சபாவில் புதிய எம்.பி.,க்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

07:35:01 on 25 May

மேலும் வாசிக்க தின மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.25 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.37 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:16:53 on 25 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுப்பதுடன் வெயில் காலங்களில் சருமத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

06:55:02 on 25 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:25:02 on 25 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

"அரசியலில் கொஞ்சம் ‘முன்ன பின்ன’ இருக்கத்தான் செய்யும். ஆனால், பேச்சில் சுத்தம் இருக்கணும். அதெல்லாம் எங்க கேப்டனோட போச்சு. இப்ப கட்சியில அண்ணியார் எடுக்கிற முடிவால் ரொம்ப ரொம்ப பாதிப்பு ஏற்பட்டிருக்கு.." என்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.

05:55:01 on 25 May

மேலும் வாசிக்க நக்கீரன்

மேலும் வாசிக்க