View in the JustOut app
X

தென் ஆப்பிரிக்காவில் குவாசுலு நடால் என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொடரும் மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஐத் தாண்டியுள்ளதாக அவசரகால மருத்துவக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

09:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 36 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதன்பிறகு, சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது என்பது அரிதான விஷயமாக மாறிவிட்டது.

08:55:02 on 25 Apr

மேலும் வாசிக்க தினமணி

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசினார். அப்போது டிரம்ப், ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.

08:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இந்திய வீரர்-வீராங்கனைகள் மூன்று தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

08:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மக்களவைத் தேர்தல் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உ.பி., மாநிலம் வாரணாசியில் மே 19ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று வாரணாசி வரும் அவர், அங்கு மாபெரும் பேரணியில் கலந்து கொள்கிறார்.

07:55:03 on 25 Apr

மேலும் வாசிக்க தின மலர்

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

07:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.79 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.26 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 25 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

செங்கல்பட்டு கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரிய வழக்கில் நில உரிமையாளரை அலையவிட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

06:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கை கிரிக்கெட் வீரர் தசன் ஷனகா இலங்கை தொடர் குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார். ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதலில் 320 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல், ஷனகாவை தெருவில் கால் வைக்கவே அச்சுறுத்துவதாக கூறியுள்ளார்.

06:41:01 on 25 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஐசிஐசிஐ-வீடியோகான் பணமோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

06:25:01 on 25 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

06:11:01 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

பல வருடங்களாக டைனோசர்கள் பற்றின ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இராட்சத டைனோசர்களின் விரல் அடையாளங்கள் சிலவற்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

05:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மணிப்பூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், உலக அளவில் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் உரையாற்றப்போவது இந்தியர்களுக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது. மிக இளம் வயதிலேயே உலக அரங்கில் உரையாற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறார் என்பதற்காக சிறுமிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

05:40:01 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வாக காணப்படுகிறது. எனவே, வயிறு கோளாறுகளை எந்த வடிவத்தில் அனுபவிக்கும் போதும், கொத்தமல்லி இலைகளால் டீ செய்து குடித்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

05:25:02 on 25 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய படம் தான் 'தேவி'. இந்த படத்தின் இரண்டாம் பாகமான தேவி 2 படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

05:10:01 on 25 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கல்லூரியின் விடுதி வாழ்க்கை குறித்து கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது மயூரன் திரைப்படம். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் நந்தன் சுப்பாராயன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் மயூரன் திரைப்படத்தில் அஞ்சன் தேவ் கதாநாயகனாக நடிக்க, ஆஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார்.

04:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாம் பூமியை கையில் ஏந்தி நிற்கும் காற்றடைத்த பந்தைப்போல் கவனமாகக் கையாளவேண்டும். இல்லையேல் காலநிலை மாற்றம், உலகவெப்பமயமாதல் போன்ற பேராபத்துகள் அந்தப் பந்தை உடைக்க வெகுநேரம் எடுக்காது.

04:40:01 on 25 Apr

மேலும் வாசிக்க விகடன்

ஹிந்தியில் எடுக்கப்பட்ட 'பட்லா'வை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும். அதில் டாப்ஸி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

04:26:02 on 25 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் அளித்தப் பேட்டியில், ’தேர்தல் நேரத்தில் போட்டி இருந்தால்தான் நன்றாக இருக்கும்,’ என தெரிவித்தார்.

04:10:01 on 25 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஸ்பீட் கிராப்ட் ஏர் கிளாஸ் என்னும் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடிகளை அணிந்துக் கொண்டால் மூச்சு விடும் சிரமம் குறைகிறதாம். அணிந்து கொள்வதற்கு மிகவும் லைட் வெயிட்டாகவும் இருக்கிறது.

03:56:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

வார நாளில் வியாக்கிழமை மட்டும் சென்னையில் இருந்து வயநாடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நீங்கள் இந்த சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயிலில் பயணிகள் செல்ல வேண்டும்.

03:40:02 on 25 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

அவகாடோ க்ரீமியான பழம் மட்டும் கிடையாது. இதில் ஏராளமான ஆரோக்கிய பயன்களும் இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அவகாடோ டீ அருந்தலாம். அவகாடோவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

03:26:02 on 25 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இருமல் ஏற்பட்டால் அது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் நெஞ்செரிச்சலும் ஒரு காரணமாக இருக்கலாம். விழுங்குவதில் சிரமம் இருந்தாலும் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

03:10:02 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள குணங்குளத்தில் பூச்சி மருந்து கலந்த நீரை அருந்தி 4 பசுமாடுகள் உயிரிழந்துள்ளன. பருத்திக்காட்டுக்கு பாய்ச்சும் தண்ணீரில் பூச்சி மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரியாமல் மாடுகள் நீரை அருந்தியதால் உயிரிழந்துள்ளன.

02:56:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் இர்பான் பதான் அரசியலில் களமிறங்க ஆர்மாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தனது இணை ஆட்டக்காரர் கவுத்தம் கம்பீரின் அரசியல் பிரவேசதிதற்கு தனது வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்துக்கொண்டார்.

02:40:01 on 25 Apr

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த புத்தகக் கண்காட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர்.

02:26:02 on 25 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரவுடி பேபி, சண்டக்காரா பாடல்களை பாடிய தீ , சூரரைப் போற்று படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். கலக்கலான பாட்டு விரைவில்’ என்று பதிவிட்டுள்ளார்.

02:10:02 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

வெறும் வயிற்றில் 10-15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

01:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிரதமர் நரேந்திர மோதி தன்னை பதானின் மகன் என்றி விளிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக வருகிறது. இது தவறான நோக்கத்துடன் இந்த காணொளி தொகுக்கப்பட்டு, தவறான செய்தியை பரப்புவதற்காக இந்த காணொளி பகிரப்பட்டு இருக்கிறது என பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

01:40:02 on 25 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

விஜய் - அட்லி இணைந்து, விஜய்யின் 63வது படமாக உருவாகி வரும் படம் ‘தளபதி 63 ' என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில், ஷாருக்கான் தளபதி 63 படத்தில் முக்கிய வில்லன் ரோலில் நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

01:25:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினமணி

ரெட்மி Y3-யின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 9,999 ரூபாய்க்கு கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 11,999 ரூபாய்க்கு கிடைக்கும். போல்டு ரெட், எலிகன்ட் ப்ளூ, ப்ரைம பிளாக் உள்ளிட்ட வண்ணங்களில் ரெட்மி Y3 சந்தையில் கிடைக்கும்.

01:10:01 on 25 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கர்ப்பிணித் தாய்மார்கள் போஷாக்கான மிதமான உணவையே உட்கொள்ளவேண்டும். சராசரியாக இவர்களுக்கு 2500-லிருந்து 2800 கலோரி வரையுள்ள சக்தி உடைய உணவு தேவை. குண்டாக இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்க்குச் சிறிது குறைந்த அளவு சக்தி உடைய உணவு அளித்தால் போதுமானது.

12:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜப்பானில் கடந்த சில தினங்களாக டப்பாக்களில் அடைக்கப்பட்ட 'காற்று' விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜப்பானின் தெருவோரக் கடைகள் தொடங்கி, ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து விற்பனைச் சந்தைகளிலும் தளங்களிலும் இந்தக் 'காற்று' வலம் வந்து கொண்டிருக்கிறது.

12:40:01 on 25 Apr

மேலும் வாசிக்க விகடன்

திருச்சியில் கல்லூரி மாணவியைக் காதலிக்குமாறு மிரட்டி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய இளைஞருக்கு ஆறு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. திலகர் தெருவைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமாருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12:25:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதை அவரது சாதி நிர்ணயம் செய்யும் நிலை சற்று மாறியுள்ளது என்றாலும், சாதியின் பிடி முற்றிலுமாகத் தளர்ந்துவிடவில்லை. குறைவான வருமானம் ஈட்டித்தரும் வேலைகளில், பட்டியலின சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பங்கு, மொத்த தொழிலாளர்களில் அவர்கள் வகிக்கும் பங்கைவிட மிகவும் அதிகம்.

12:10:01 on 25 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த முட்டையைக் காலையில் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு நாளுக்கான முதல் உணவைச் சத்து நிறைந்ததாக மாற்ற நீங்கள் முட்டை மற்றும் கீரையை உண்ணலாம். கீரைகள் மற்றும் முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது.

11:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

செங்கம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் சூறைக் காற்றால் இரண்டு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதற்கான பயிர் காப்பீட்டு தொகையினை உடனே வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

11:40:01 on 24 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் முனிரா அப்துல்லா 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். தற்போது அவர் அதில் இருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளார்.

11:25:01 on 24 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது. தினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.

11:10:01 on 24 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிரதமர் மோடியின் வாழ்க்கை படமான பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை மே 19ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இப்படத்தின் பல காட்சிகளில் முக்கிய எதிர்க்கட்சி ஊழல் கட்சி எனவும், தாங்கள் ஏழைகளுக்கான கட்சி எனவும் காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

10:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க தின மலர்

இங்கிலாந்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் பனயிட்டோவும், எமி ஜாக்சனும் இணைந்து அவர்களது திருமணத்திற்கான இடத்தைப் பார்த்து உறுதி செய்துள்ளனர். 2020ஆம் ஆண்டு கிரீசில் எமி ஜாக்சன் ஜோடி திருமணம் செய்ய உள்ளது.

10:40:02 on 24 Apr

மேலும் வாசிக்க விகடன்

மாருதி சுஸூகி இந்தியாவின் புதிய ஆல்டோ 800 கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய ஆல்டோ 800 காரில் பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையிலான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

10:25:02 on 24 Apr

மேலும் வாசிக்க தினமணி

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழரின் பாரம்பரியக் கலைகளை கற்பிக்க பயிற்சி நிறுவனங்களை அமைக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிரப்பித்துள்ளது.

10:11:01 on 24 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்துவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ள நீச்சல் பயிற்சி வகுப்பில் ஆறு வயது சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஏராளமனோர் கலந்து கொண்டுள்ளனர்.

09:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க ETV BHARAT

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் போனாக வெளிவரவிருக்கிறது கேலக்ஸி M40. இந்த போனில் 5000 எம்.ஏ.எச் பேட்டரி, 128 ஜிபி சேமிப்பு வசதிகள் போன்றவை இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அதேபோல M வரிசை போன்களில் இந்த போன்தான் முதன்முதலாக ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

09:41:02 on 24 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தமக்குச் சொந்த மான மண்ணில் தனியாக விவசாயம் செய்ய நினைக்குன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி மிகக் குறைந்த கட்டணத்தில் கடன்களை வழங்குகிறது.

09:25:01 on 24 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

தமிழகத்தில் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

09:17:38 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை ’உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘மீத்தேன் உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் விருப்பம் இல்லையெனில் நிறைவேற்றப்படாது’ என்று கூறியுள்ளார்.

09:11:01 on 24 Apr

மேலும் வாசிக்க காமதேனு

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலனை மக்களுக்கு அளிக்காமல் ரூ.250 கோடி வரை பி & ஜி நிறுவனம் அளிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரி தொடர்பாக உரிய விவரங்களை அளிக்க தங்கள் நிறுவனம் தயார் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

08:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கர்நாடகா மாநிலம் பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இன்போசிஸ் நிறுவனம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 24,016 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 29,287 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

08:41:02 on 24 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

புகழ்பெற்ற மலர் சந்தையான குமரி, தோவாளையில் நடைபெற்ற முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் மலர் அலங்காரப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், பூ விற்பனையாளர்கள் மற்றும் பூ கட்டும்
கலைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் தேர் மாலை, தோரண மாலை என 20 ஆயிரம் கிலோ எடை கொண்ட, பூக்கள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டது.

08:25:02 on 24 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான புதிய பொறியியல் படிப்பு மற்றும் தொலைதூரக் கல்வியை விரிவுபடுத்துவது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், இந்த ஆண்டு ஆன்லைன் கவுன்சிலிங்கை கடைபிடிப்பதாகக் தெரிவித்துள்ளார்.

08:11:02 on 24 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அறிமுக இயக்குநர் தீரன் இயக்கத்தில் உருவாகும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கிறார். மகளுக்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்கும் அப்பாவின் கதையான இப்படத்தில் தடம் படத்தில் அறிமுகமான மகளாக ஸ்மிருதி வெங்கட் நடித்து வருகிறார்.

07:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இசைப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது கார்வான். இந்நிறுவனம் சமீபத்தில் கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் எடை வெறும் 88 கிராம் மட்டுமே. இதன் விலை ரூ.3,990 ஆகும்.

07:40:01 on 24 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிகளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன. ஜலதோஷம், நீரிழிவு, புற்றுநோய் இவற்றின் அறிகுறிகள் இருந்தாலும், அவை உடலை களைப்படையச் செய்துவிடும்.

07:25:01 on 24 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

’அனைத்து வாக்காளர்களையும் ஒரே கோணத்தில் பார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்’ என தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேலும் அவர், ‘பிரபலமானவர், வசதி படைத்தவர், அரசியல்வாதி என பார்க்காமல் உரிய ஆவணம் இருந்தால் நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

07:10:01 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தருமபுரியில் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் போதிய மழை இல்லாததால் அப்பகுதியிலுள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

06:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கின்றன. பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை சிலர் தவிர்ப்பார்கள். ஆனால் அது சரியல்ல. காரணம், அக்காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.

06:35:02 on 24 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சென்னை விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட விமான பயணிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சென்னை - சீரடி செல்லும் தனியார் விமான சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

06:31:56 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது கிடைத்த தகவலை கொண்டே இலங்கைக்கு இந்தியா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது என தெரியவந்துள்ளது.

06:17:34 on 24 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலா சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

06:15:01 on 24 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் என். சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் தேர்வில் எழுந்துள்ள முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

06:06:30 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மேலும், இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

06:05:28 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி மாணவி சிவனேஸ்வரி ஆய்வகத்தில் பாதரசத்தை குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜியை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 92 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,362 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது. இதில் மொத்த லாபம் 31 கோடி (இந்திய மதிப்பில் ரூ.2,143) ஆகும்.

05:35:02 on 24 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் சரக்கு வாகன ஓட்டுநர் ஜேம்ஸ் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர் பன்னீர் செல்வம், தண்டபாணி ஆகிய 3 பேரிடமும் உரிய அனுமதிச் சீட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதனை ஏற்காமல் சுங்கச்சாவடியில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் அவர்களை தாக்கியதாகத் தெரிகிறது.

05:20:39 on 24 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதைதொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் டிக்கெட் விற்பனை தொடங்கியது.

05:15:02 on 24 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரைப் பற்றி ச்சித்தரித்து வாட்ஸ் அப்பில், அண்மையில் ஆடியோ வெளியானது. இதுதொடர்பாக, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து, மதுரை மாவட்டம் மேலூர் அருகே, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

05:08:01 on 24 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நாகர்கோவிலில் இளம்பெண் ஒருவர் ஊனமுற்ற வாலிபரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை கைதுச் செய்து விசாரித்து வருகின்றனர்.

04:55:02 on 24 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கோவை பன்னிமடை கிராமத்தை சேர்ந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் பழனிசாமி நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், ‘குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,’ எனவும் கூறினார்.

04:35:02 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பெரும் பொருட்செலவில் மிகப்பெரிய சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், மின்சார உற்பத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

04:15:02 on 24 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

பொன்பரப்பி கலவரத்தைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், “இந்துக்களின் முதல் எதிரி பாஜக; வன்னியர்களின் ஒரே எதிரி பாமக” என்றார்.

03:55:59 on 24 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

உரம் தயாரிக்கும் மையத்தை சுற்றி குடியிருப்புகள் அமைந்துள்ளதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள், இதனால் பல்வேறு நோய்களும் பரவுவதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், உரம் தயாரிக்கும் மையத்தை குடியிருப்புகள் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென கோரி போராட்டம் நடைபெற்றது.

03:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

03:32:05 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய தற்கொலைப் படை தீவிரவாதிகள் யு.கே., ஆஸ்திரேலியாவில் படித்த பட்டதாரிகள். அவர்கள் நன்கு வசதியானவர்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

03:15:01 on 24 Apr

மேலும் வாசிக்க காமதேனு

உடலின் எடையைத் தாங்கக்கூடியதே மூட்டுகள்தான். மூட்டுகள் என்பது தனி உறுப்பல்ல. அது எலும்புகள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசை நாண்கள் முதலானவற்றை உள்ளடக்கியது. இவற்றை நம் உடலோடு சேர்த்து உறுதியாக பிடித்துக்கொள்ள கொலாஜன் என்னும் புரதம் உண்டு.

02:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க காமதேனு

விதியை மீறி சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும் அவரது வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், நீக்கப்பட்ட பெயர் பட்டியலில், சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால் இந்தச் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

02:35:01 on 24 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அறிவியல் எழுத்தாளர் த.வி.வெங்கடேஸ்வரனின் நேர்காணலில், ’மக்களுக்கு அறிவியல் தாகம் உள்ளது, அந்த அறிவுத்தாகத்தைத் தீர்க்க அறிவியலை எளிய முறையில் புரிய வைக்க வேண்டும்,’ என்றார். மேலும், பள்ளியில் இருக்கும் 'Project work' முதல் எஞ்சினியரிங் கல்வியை கற்பிக்கும்விதம் வரை பல்வேறு சுவாரசியமான செய்திகளைப் பகிர்ந்துக்கொண்டார்.

02:16:03 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

Jet Airways முடக்கதால் தற்போது விமான போக்குவரத்து சேவைக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கும் வகையில் Spice Jet 28 புதிய விமானங்களை களமிறக்கவுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி வரும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் டெல்லி - மும்பை வரை பல நகரங்களை இணைக்கும் விதமாக 28 புதிய விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

02:04:36 on 24 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ்குமார் ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம் தமிழக காவல்துறையினர் வாட்ஸ்அப் நிறுவனம் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறியுள்ளனர்.

01:56:20 on 24 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபோக்கஸ் லைட் விழுந்ததில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எலக்ட்ரீசியன் செல்வராஜை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

01:55:56 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை கடற்கரை பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

01:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வெற்றி ரகசியம் பற்றி தோனியிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த தோனி கூலாக, '’நான் அந்த ரகசியத்தைக் கூறினால், என்னை யாரும் ஏலத்தில் எடுக்கமாட்டார்கள். அது வியாபார உத்தி’ என்று கூறியுள்ளார்.

01:35:02 on 24 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (Right To Education Act) கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு, மே 19ஆம் தேதி வரை, ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

01:33:09 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இன்று காலை நடிகர் இமான் அண்ணாச்சியின் சென்னை அரும்பாக்கம் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். 41 சவரன் நகைகளும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும், வாட்ச் ஒன்றும் கொள்ளை போயுள்ளதாம். இந்த செய்தி கேட்டு அவரது குடும்பம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து இமான் அண்ணாச்சி காவல் துறையிலும் புகார் அளித்துள்ளாராம்.

01:14:23 on 24 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சூலூர் தொகுதியில் விஜயராகவனும், அரவக்குறிச்சி தொகுதியில் பா.கா.செல்வமும், திருப்பரங்குன்றம் தொகுதியில் இரா.ரேவதியும், ஒட்டாபிடாரம் தொகுதியில் மு.அகல்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

01:12:51 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வறுமையில் தவித்து, கடும் போராட்டத்துக்குப் பிறகு ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு, சல்லிக் காசுகூட பரிசுத்தொகை அறிவிக்காமல், வெறும் வாழ்த்துக் கடிதத்துடன் முதல்வர் பழனிசாமி முடித்துக் கொண்டது, விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

01:10:55 on 24 Apr

மேலும் வாசிக்க விகடன்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை படத்தின் டிரைலரை வெளியிட தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது. படத்திற்கான தரச்சான்று இதுவரை வழங்கப்படாத நிலையில் டிரைலரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

12:55:02 on 24 Apr

மேலும் வாசிக்க தின மலர்

பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

12:35:02 on 24 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கோமதியின் சொந்த ஊர் திருச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள முடிகண்டம் என்ற கிராமம். தந்தை மாரிமுத்து, விவசாயி. தாய் ராசாத்தி. கோமதிதான் இளைய மகள். ஹோலிகிராஸ் கல்லூரியில் படிக்கும்போது அவரது தோழி சுருதியைப் பார்த்து ஓட்டப்பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 20 வயதில்தான் பயிற்சியைத் தொடங்கினார்.

12:20:49 on 24 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி கண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ’நான் சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்தேன், பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை’ என்று கூறியுள்ளார்.

12:15:03 on 24 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா பாப்பநாயக்கன்பட்டியில், கரியகோயில் நீர்தேக்கமும், வாழப்பாடி தாலுகா புழதிக்குட்டையில் ஆனைமடுவு நீர்த்தேக்கமும் உள்ளது. கடந்த 3 நாட்களாக ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஏறத்தாழ 98 மிமீ மழை கொட்டி தீர்த்தது. ஆனால் நீர்தேக்கங்கள் உள்ள பகுதியில் 19 மி.மீ மழை அளவே பதிவானது.

12:07:23 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மணிமுத்தாறு கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த அஜின் ராஜ் என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 21 நாட்கள் விடுமுறைக்குப் பின் பணியில் சேர்ந்த அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைவிட பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த வருடம் பாஜக இதுவரை 437 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி 423 வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது.

11:35:02 on 24 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பணி நேரத்தில் மருத்துவர்கள் முறையாகப் பணியாற்றுகின்றனரா என்பதை மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

11:15:04 on 24 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இன்று சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள். இந்திய நாட்டின் கிரிக்கெட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் விளையாட்டுத் துறையிலும், உலக கிரிக்கெட்டிலும் ஒரு மிகப்பெரிய புரட்சிக்கு வித்திட்டார் சச்சின். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

11:13:15 on 24 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

இலங்கையின் கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடித்தது. இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்யும் போது குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது.

11:02:12 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை வெளியான தகவலின் படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது.

10:55:02 on 24 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

மதுரை மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாகக் கூறி சிறையில் உள்ள கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிறைத்துறை அளித்த புகாரின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

10:35:01 on 24 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மாதவரம் அடுத்த பால்பண்ணை பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றி அறிந்து கொள்வதற்காக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பயிற்சி முகாம் வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

10:15:01 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க