View in the JustOut app
X

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு படத்தில் கங்கை அமரன் நடிக்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகின. இதற்கு வெங்கட்பிரபுவே 'அப்பா இந்த படத்தில் நடிக்கவில்லை, இணையத்தில் சுற்றும் அந்த செய்தி பொய்' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

03:25:01 on 22 May

மேலும் வாசிக்க நக்கீரன்

இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஐ. எஸ் அமைப்பால் தயாரிக்கபட்ட சாத்தானின் தாய் எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

03:10:02 on 22 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, ’தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.

02:48:01 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

02:34:37 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்? அரசின் நோக்கம் மக்களைப் பாதுகாப்பதா? அச்சுறுத்துவதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

02:29:10 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முக்கறும்பூரில் உள்ள விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பருத்தி வயலில் இறங்கி, கையில் விஷ பாட்டில்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

02:26:29 on 22 May

மேலும் வாசிக்க தின மலர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி வெங்கடேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

02:17:17 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துமோ அதற்கு சற்றும் குறைந்தது அல்ல தமிழக சட்டமன்றத்திற்கான 22 தொகுதி இடைத்தேர்தல். அதிமுக ஆட்சி தொடர போகிறதா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறதா என்று தீர்மானிக்க போகும் தேர்தல் இது.

01:55:02 on 22 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

’நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ’தல 60’ படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

01:50:22 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

முன்பதிவுகளை ரத்து செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை மூலம் 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 2018-19ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு 182 கோடியே 56 லட்சம் ரூபாய் அபராதம் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.

01:35:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின்போது உச்ச நீதிமன்றம் கூறியபடி தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.

01:15:02 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

அமலாக்கத்துறை அதிகாரிகள் யாரும் மீடியாக்களுடன் பேசக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பின் இயக்குனர் எஸ்கே மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

12:55:01 on 22 May

மேலும் வாசிக்க தினமலர்

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் தன் எடையை பாதியாக குறைத்து கிரீடம் படத்தில் இருந்தது போல் மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

12:35:27 on 22 May

மேலும் வாசிக்க சினி உலகம்

நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

12:32:51 on 22 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் குறித்து இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:19:37 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 மாடலின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 7 மாடலுக்கு மாற்றாக புதிய ரெட்மி நோட் 7எஸ் இருக்கும். ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்களில் ரெட்மி நோட் 7 அதிகளவு வரவேற்பு பெற்று வருவதால், ஸ்டாக் இருக்கும் வரை ரெட்மி நோட் 7 விற்பனையை நடத்த சியோமி திட்டமிட்டுள்ளது.

12:12:03 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ’கராத்தே போன்ற தற்காப்பு கலையை மாணவர்கள் கற்றுக்கொள்வது அவசியம்’ எனவும், ’இதற்கு அரசு உதவ வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்தனர்.

12:04:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கார்த்தி தற்போது கைதி படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகி இல்லை. இதனைத் தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் (ரெமோ இயக்குநர்) இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ராஷ்மிகா நாயகி. இந்தப் படத்துக்கு சுல்தான் என்று பெயர் வைத்துள்ளனர்.

12:00:22 on 22 May

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

தாம்பரம் – முடிச்சூர் சாலையில் உள்ள குளக்கரை அருகே டிராவல்ஸ் கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அதில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:55:46 on 22 May

மேலும் வாசிக்க ie தமிழ்

மேற்கவங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பின் நிலவி வரும் பதற்ற நிலயை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை கொண்டுவருமாறு பாஜக வலியுறுத்தியுள்ளது. இதற்காக ஆளுநர் திருப்பதி அவர்களையும் பாஜக குழு சந்தித்து கோரிக்கை கடிதத்தை அளித்துள்ளாதக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:47:26 on 22 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

புல்வாமா தாக்குதலுக்குப் பின் மதுரை விமானநிலையத்தை எட்டிப்பார்த்தால், வேடிக்கை பார்த்தால் குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறை விநோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

11:43:57 on 22 May

மேலும் வாசிக்க காமதேனு

நடிகை அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராட்சசன். அதோ அந்த பறவை போல, ஆடை படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், சிறுமி ஒருவருடன் சுட்டித்தனமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

11:37:58 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

குஜராத் மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

11:33:02 on 22 May

மேலும் வாசிக்க தினமணி

ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது மகனைக் கொன்ற தாய் போலிசாரிடம் பிடிபட்டவுடன் தூக்கத்தில் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. இதையடுத்து அவருக்கு மனநிலை பாதிப்பு எதாவது இருக்கிறதா என்ற சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் தெளிவான மனநிலையிலேயே இருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

11:30:46 on 22 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

டெல்லியைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலம் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட மோகித் மோர் என்பவர் டிக்-டாக் செயலி மூலம் தொடர்ந்து ஃபிட்னஸ் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

11:22:12 on 22 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் பெற்றோருக்கு எச்.ஐ.வி இல்லாத போது, குழந்தைகளுக்கு மட்டும் எப்படி பரவியது என விசாரித்து வருகின்றனர்.

11:19:53 on 22 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். அதில், ’21 வயதில் திருமணம் பிரபல ஹிந்தி நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற்று, 4 வருடங்களில் பிரிந்துவிட்டதாக’ தெரிவித்துள்ளார்.

11:17:52 on 22 May

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு செய்தார். மேலும் சென்னையில் உள்ள 3 மையங்களில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார்.

11:04:23 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

சிதம்பரம் அருகேயுள்ள கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் திருநங்கைகள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் திருநங்கைகள் ஒன்று கூடி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

10:56:11 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூலேரிக்காடு பகுதியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அப்பகுதி இளைஞர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

10:48:31 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க மக்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு நபர் தனது காரை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நூதன வழியைக் கையாண்டுள்ளார். அவர் தனது கார் முழுவதும் மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார்.

10:41:14 on 22 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

10:31:59 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பலநாள், பல இடையூறுக்கு பின் கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளிக்கு கோதண்டராமர் சிலை சென்றது. தமிழக எல்லையான ஜூஜூவாடியை கடந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சென்றடைந்தது. ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றை கடக்க முடியாமல் 13 நாட்கள் சிலை செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

10:25:56 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ உள்பட 11 பேர் பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் சம்பவத்திற்கு, தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதல்வருமான சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

10:20:28 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஏழாம் அறிவு படத்தில் வில்லன் டாங்லீ ஆக மிரட்டியவர் ஜானி ட்ரி நியூயன். அதன்பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது வியட்நாமில் உள்ள அவரிடம் நடிகர் அருண் விஜய் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருகிறார்.

10:15:41 on 22 May

மேலும் வாசிக்க சினி உலகம்

அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

10:12:50 on 22 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. ஆனால், இதுவரை துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

10:08:59 on 22 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலின் விலை ரூ.1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

09:55:02 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தங்கமங்கை கோமதி மாரிமுத்து, தடகள வீராங்கனை சாந்தி என தமிழக வீராங்கனைகள் சர்ச்சையில் சிக்குவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்படும் தமிழக வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்பதில் தேசிய தடகள சம்மேளனம் பாரபட்சம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

09:35:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி.46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி46 ராக்கெட், ரீசாட் 2பி செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

09:09:18 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது.

08:55:01 on 22 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

இந்தோனேஷியாவில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றிபெற்று தனது பதவியை தக்கவைத்துள்ளார். இதற்கிடையே, தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ள சுபியாண்டோ வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளார்.

08:35:01 on 22 May

மேலும் வாசிக்க ETV Bharat

வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, நுண் பார்வையாளர்கள் ஆகியோர் மட்டும் செல்போன் எடுத்து செல்ல தடை இல்லை. அதற்கு அவர்களுக்கு முறையான அனுமதி உண்டு என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

08:15:03 on 22 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.97-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:03:18 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் 4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

07:35:02 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சொகைல் முகமது பணியாற்றி வந்த நிலையில் அவரை பாகிஸ்தான் வெளியுறவு செயலாளராக பணிமாற்றம் செய்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காலியாகும் இந்திய தூதர் பதவிக்கு தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றும் மொய்ன் உல்ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

07:15:01 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் ராகெட்ரி: நம்பி விளைவு படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். மேலும் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை படக்குழு நிறைவு செய்துள்ளது.

06:55:02 on 22 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மத்திய உள்துறை அமைச்சகத்தில் 219 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேருவதற்கான தகுதி, தேர்வுகள் உள்ளிட்டவை www.bprd.nic.in. என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

06:25:02 on 22 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உணவு கடை ஒன்றில் சஜித் பதான் என்ற ஆட்டோ ஓட்டுநர் பர்கர் சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் இருந்த கண்ணாடித்துண்டுகள் அவரது தொண்டைக்குள் சிக்கி அவரது வாயிலிருது ரத்தம் கசிந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நிலை தேறியுள்ளார்.

05:55:01 on 22 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த கட்டிடங்களை ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் தேவிகா தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

05:25:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிக்கும் ஆலையில், ராஜேஷ் அகர்வாலும், ஐ.சி.எஃப். பொது மேலாளர் ராகுல் ஜெயினும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜேஷ் அகர்வால், ’சென்னை மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்டு வரப்படுவதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

04:55:01 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு நல்லதாகவும், சில சமையங்களில் கெட்டதாகவும் கூட அமைந்து விடுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீரான நிலையில் இருப்பதுதான் சிறந்தது. இதன் அளவு சற்றே அதிகமாகிவிட்டால், இருதய நோய்களின் அபாயம் அதிகரித்துவிடும்.

04:25:02 on 22 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தன்னுடைய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டனர், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும்’ என கூறியுள்ளார்.

03:55:02 on 22 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனை தொடர்ந்து நோக்கியா 3.2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை ரூ.10,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

03:25:01 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டி, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.

02:55:01 on 22 May

மேலும் வாசிக்க விகடன்

தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பல ஊர்களில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

02:26:02 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

'பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி' என்ற திரைப்படம் வரும் 24ம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை சுட்டிக் காட்டி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

01:56:02 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதோடு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் உற்பத்தித் துறையின் விரிவாக்கம் ஆகியவை குறித்து வாக்குறுதி அளித்துள்ளன. CO2 (கரியமில வாயு) உமிழ்வை பொறுத்தவரை ஏற்கனவே உலகளவில் மூன்றாவது நாடாக விளங்கும் இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற அச்சம் எழுந்துள்ளது.

01:26:01 on 22 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஏமாலி படம் மூலம் அறிமுகமான சாம் ஜோன்ஸ் லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அவர், ’அஞ்சலி எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார்’ எனக் கூறியுள்ளார்.

12:55:02 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்வதில் உலக நாடுகள் மத்தியில் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 54 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:25:02 on 22 May

மேலும் வாசிக்க ETV Bharat

தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் டெல்லி, மைசூரு, புவனேஸ்வர், போபால் உள்பட 5 இடங்களில் தொடங்கப்பட்டது.

11:55:01 on 21 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரில் 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நிறுவனங்கள், தலைசிறந்த பொறியாளர்கள், ரோபோ வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.

11:25:01 on 21 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10:55:01 on 21 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28 கோடி) வழங்கப்படும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது. இரண்டாம் இடம் (ரன்னர்-அப்) பிடிக்கும் அணிக்கு $2,000,000 டாலர் (ரூ.14 கோடி) கிடைக்கும்.

10:25:01 on 21 May

மேலும் வாசிக்க விகடன்

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும். துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

09:56:01 on 21 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பூமி கண்காணிப்பிற்கான ரீசாட் செயற்கைக்கோளை சுமந்தபடி இந்தியாவின் பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பூமியைக் கண்காணிப்பதற்கான ரீசாட் 2பி ஆர்1 என்ற புதிய செயற்கைக் கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி உள்ளது.

09:26:02 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

அஜித் விஜய் இருவரையும் இயக்கியுள்ளீர்கள் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, ’விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாகச் செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அரசியலுக்கு வருவதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

08:56:01 on 21 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் குஜராத்திற்கு வருகிறது என எல்லைப் பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவலை உளவுத்துறை கொடுத்துள்ளது. இதனையடுத்து இந்திய கடலோர காவல்படையின் ரோந்து பணியின்போது 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

08:40:01 on 21 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலவகத்தில் நடந்த மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு தின நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ’வாக்கு எண்ணிக்கையின் போது பாஜகவினர் அதிகாரிகளை பயன்படுத்தி முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே ஏஜெண்டுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

08:25:01 on 21 May

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழக - கர்நாடக எல்லையில் தாளவாடியை அடுத்து உள்ளது ஒண்ணள்ளி கிராமம். இந்த கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கிராமத்தில் உள்ள தோட்டங்களில் சுற்றித் திரிந்தது. இந்த சிறித்தையை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனத்துறையினர் பிடித்தனர்.

08:10:02 on 21 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பூமியைக் கண்காணிப்பதற்கான ரீசாட் 2பி ஆர்1 என்ற புதிய செயற்கைக் கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 5.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

07:55:01 on 21 May

மேலும் வாசிக்க தின மலர்

கொழும்பு, சார்ஜா, அபுதாபியில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 988 கிராம் தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 32 லட்சம் மதிப்பு தங்கத்தை கொண்டுவந்த 3 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:40:01 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ’சாஹோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான first look போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மேலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:30:45 on 21 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலின் குகையில் 18 மணிநேரம் தியானம் மேற்கொண்டார். இந்த தியானத்தைக் கலாய்க்கும் வகையில் பாலிவுட் நடிகையும், நடிகர் அக்சய்குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கண்ணா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

07:25:01 on 21 May

மேலும் வாசிக்க நக்கீரன்

வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற வி‌ஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்று கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது. தி ஹிண்டு- சிஎஸ்டிஎஸ்- லோக் நிதி- நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

07:10:02 on 21 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

”நாளை மறுதினம் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடத்திற்கு பின் மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை தொடங்கும். மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை பணி முடிந்த பின் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

07:05:07 on 21 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல் தன்னுடைய பாதுகாப்பு காவலரால்தான் கொல்லப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

06:55:01 on 21 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

06:40:02 on 21 May

மேலும் வாசிக்க மாலை மலர்

’தமிழகத்தின் இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் கருத்து கூற விரும்பவில்லை என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். மேலும் அவர், இதுதொடர்பாக ’கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை’ என்ற கருணாநிதி கருத்தையே தானும் சொல்வதாகத் தெரிவித்துள்ளார்.

06:33:53 on 21 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீட்டில் 197 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சங்ககிரியில் மளிகை கடை நடத்தி வரும் அப்துல் என்பவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

06:25:02 on 21 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’நெருக்கடிகளைச் சமாளிப்பதே உலகக் கோப்பைத் தொடரில் முக்கியமானதாக இருக்கும். எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள். நான் பங்கேற்ற மூன்று உலகக் கோப்பைகளில் இந்தத் தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும்’ என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

06:10:01 on 21 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் நடந்த 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா டுடே ஆங்கில செய்தி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக 3 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

05:55:01 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் சரணடைந்த அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமாரை ஐந்து நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

05:37:30 on 21 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகர் விஜய் தேவரகொண்டா ’டியர் காம்ரேட்’ படத்தைத் தொடர்ந்து ’ஹீரோ’ படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறார். ’காக்கா முட்டை’ படத்துக்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இந்தப் படத்தை இயக்குகிறார். இதற்காக சென்னையைச் சேர்ந்த ரஜினி கிருஷ்ணனிடம் முறையாகப் பயிற்சியும் பெற்றுள்ளார்.

05:08:27 on 21 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ரியல் எஸ்டேட் தொழிலில் கமிஷன், புதிய சட்டங்கள் நெருக்கடி காரணமாக தொழில் வீழ்ச்சியால் மனமுடைந்த மதுரவாயலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சின்னராஜா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். சாகும்முன் காணொலியில் உருக்கமாகப் பேசி நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

04:59:56 on 21 May

மேலும் வாசிக்க காமதேனு

’உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி பந்து வீச்சாளர்கள் தயாராகி விட்டனர்’ என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கு தங்களது முழுத்திறனை வெளிப்படுத்துவர்’ எனவும் தெரிவித்துள்ளார்.

04:49:04 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

மக்களவைத் தேர்தலின் முடிவுகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ பெறாமல் இருக்கும் சூழலில், தனிப்பெரும் கட்சியாக பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தால் அக்கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

04:43:15 on 21 May

மேலும் வாசிக்க நக்கீரன்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் உள்ள Morehouse கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக Robert F Smith அழைக்கப்பட்டிருந்தார். இதில் பேசிய அவர், அந்தக் கல்லூரியில் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் ரூ.278 கோடி கல்விக் கடனையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

04:40:03 on 21 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளர் R.D.சீத்தாபதி உடல் நலக்குறைவால் காலமானார். இவர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டவர் ஆவார். சூளையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

04:38:37 on 21 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

04:25:01 on 21 May

மேலும் வாசிக்க மாலை மலர்

வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக,தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தபின் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதாக கூறியதை ஏற்க முடியாது எனவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

04:24:15 on 21 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின் 28வது நினைவுதினத்தையொட்டி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, அவருக்கும், சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய திரைப்பட நடன இயக்குனர் காயத்ரி ரகுராமிற்கும் இடையே, காரசார மோதலை உருவாக்கியுள்ளது.

04:20:32 on 21 May

மேலும் வாசிக்க ie தமிழ்

தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களில் வெறும் 25 சதவிகிதத்தினர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் 40 சதவிகிதத்தினர் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:11:10 on 21 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

புதிய ரூ.10 நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. புதிதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்து ரூ.10 நோட்டில் இடம்பெற்றிருக்கும். புதிய நோட்டில் ’பாரத்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட செக்யூரிட்டி திரட் இருக்கும். அதே சமயம் பழைய ரூ.10 நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:07:55 on 21 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ரெட்மீ நிறுவனம், 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ரெட்மீ K20 ஸ்மார்ட்போனினை வரும் 28ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஒரு டீசர் வாயிலாக இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரெட்மீ நிறுவனம். இந்த கேமரா மூன்று பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

04:03:21 on 21 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அட்லீ விஜய்யை வைத்து விளையாட்டை மையப்படுத்தி எடுத்து வரும் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக் கொண்டு இருந்தாராம் சஞ்சனா சாரதி. இதுகுறித்து அவர், ’அட்லீ-விஜய் படத்தில் சின்ன வேடத்திலாவது கூப்பிடுவார்களோ என ஏங்கிக் கொண்டிருந்தேன். இப்போது வரை இல்லை, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது’ என கூறியுள்ளார்.

03:56:26 on 21 May

மேலும் வாசிக்க சினி உலகம்

ரயிலில் பயணம் செய்ய பலரும் ஏஜென்டுகளை நாடுவார்கள். ஆனால், ஒருவர், ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் ஆக மாறினால் மாதம் ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். டிக்கெட் புக்கிங் ஏஜென்ட்களுக்கு கமிஷன் மூலம் சம்பாதிக்க முடியும். இது டிக்கெட்களின் வகையைப் பொறுத்து மாறுபடும்.

03:55:02 on 21 May

மேலும் வாசிக்க தின மலர்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என தேர்தலுக்குப் பின் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மும்பை வடக்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி அளித்த ஆர்டரின் அடிப்படையில் 2 ஆயிரம் கிலோ இனிப்பு தயாராகி வருகிறது.

03:49:29 on 21 May

மேலும் வாசிக்க தினமணி

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இருந்தாலும்கூட, உளவுத்துறையின் மூலம் பாஜக மேலிடம் பெற்ற ரிப்போர்ட் வேறு விதமாக வந்துள்ளது. அதன்படி பாஜகவுக்கு தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காது, தொங்கு பாராளுமன்றமே அமைக்க முடியும் என அறிவித்துள்ளது.

03:40:02 on 21 May

மேலும் வாசிக்க நக்கீரன்

இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ’அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம்’ என்று கூறியுள்ளார்.

03:39:27 on 21 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மேலும் வாசிக்க