View in the JustOut app
X

‘‘நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் சாப்பிட வேண்டியதில்லை’’ என்ற கருத்தை வைத்து உருவாகியிருக்கிறது ஸ்லீப்பிங் பியூட்டி டயட். உலகம் முழுவதும் எடை குறைப்புக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கினால் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம் என்பது.

09:55:02 on 19 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள, திவாகரன் இல்லத் திருமணத்திற்கான வேலைகளை மன்னார்குடியில் தற்போதே துவங்கிவிட்டது. திருமணத்தில் சசிகலா நிச்சயம் கலந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் திவாகரன் கூறிவருகிறார்.

08:57:01 on 19 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமலாபால் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் அமலாபாலுடன் ஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கொச்சர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

08:25:01 on 19 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் வித்தியாசமான போட்டி வெளிநாடுகளைப் போன்று தென்காசியிலும் மனைவியை கணவன் தூக்கிக் கொண்டு ஓடும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டது.

07:55:02 on 19 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

“ஆப்ரிக்காவின் ஆணுறை அரசன் நான். மக்கள் கேட்டால் மட்டுமே நான் அவர்களுக்கு ஆணுறை அளிப்பேன். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் மாதிரிகளையும், ஆணுறைகளையும் என்னிடம் பார்க்கும்போது, மக்கள் ஆர்வமடைவார்கள்” என்று கூறுகிறார் ஸ்டான்லி காரா.

07:25:02 on 19 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”எப்போது தோனி ஓய்வு பெறுவார்...எவ்வளவு காலம் அவர் விளையாடுவார்.. என பல விஷயங்களைத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நிச்சயம் அவர் விளையாடுவார். அந்த உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இந்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரில் அவர் கலந்துகொள்வார்.” என்று சிஎஸ்கே உரிமையாளரும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சீனிவாசன் தெரிவித்தார்.

06:57:01 on 19 Jan

மேலும் வாசிக்க விகடன்

உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிக்கல் குறித்து வாட்ஸப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. #Whatsappdown என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 3வது இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

06:25:01 on 19 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சீனாவின் உகான் மாகாணத்தில் கொரனா என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடுமையான சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த வைரஸுக்கு சீனாவில் இருவர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் எதனால் உருவாகிறது மற்றும் இதன் அறிகுறிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

05:55:01 on 19 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மின் பற்றாக்குறை, காலி பணியிடங்கள், ஊதிய உயர்வு தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் மின் வாரியத்தை திக்குமுக்காடச் செய்து வருகிறது. அ.தி.மு.க நிர்வாக சீர்கேட்டால் மரணப்படுக்கையில் உள்ள மின் வாரியம் விரைவில் திவாலாகும் நிலை உண்டாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

05:27:01 on 19 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இறங்க விரும்புவோர் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்படுவதற்கு நாடு முழுக்க நடைபெறும் முதல்கட்டத் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர். அரசியல் சாசனத்தில் இந்த பூர்வாங்க நிலை போட்டியாளர்கள் பற்றி எதுவும் இல்லை. எனவே இந்தப் போட்டி, கட்சி மற்றும் மாகாண சட்டங்களின்படி நடத்தப்படுகிறது.

04:27:01 on 19 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தியாவில் வேலையின்மையால் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணம் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரியவந்துள்ளது.

03:57:01 on 19 Jan

மேலும் வாசிக்க தினமணி

திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்தும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை ஒப்பிட்டும் கிண்டலாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "அட சும்மா இருங்கப்பா.." என தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

03:27:02 on 19 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை என்று திருத்தப்பட்ட அறிவிக்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால், பல நிறுவனங்கள் நேரடியாக ஆய்வுக் கிணறுகளை அமைக்க முடியும்.

02:57:01 on 19 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு http://tasco.in/JA%20APPLICATION.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

02:27:01 on 19 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 5ஜி ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபேட் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 2020 ஐபோன் வெளியீட்டு விழாவிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

01:57:01 on 19 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

புதுடில்லியில் தற்போதைய உறுப்பினர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அமர கூடிய வகையில், பார்லி வளாகம் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய பார்லி கட்டடம் முக்கோண வடிவில் அமைக்கப்பட உள்ளது.

01:27:01 on 19 Jan

மேலும் வாசிக்க தினமலர்

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். ஏறக்குறைய 250 கிலோ (560 பவுண்டுகள்) உடல் எடை கொண்ட அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியும் வந்துள்ளார்.

12:55:01 on 19 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ். ஆனால் அது கடந்த காலங்களில் குறைவாகவும், அதிகமாகவும் இருந்து வந்துள்ளது. பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

12:27:01 on 19 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அகமதாபாத்தில் உருவாகி வருகிறது. அந்த புகைப்படத்தை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கிரிக்கெட் மைதானம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வருகிறது.

11:57:01 on 19 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஆல்பாபெட்'டின் (Alphabet) சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக 2018-ல் ஆப்பிளும், அதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களும் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பு என்ற மைல் கல்லை எட்டியிருந்தன.

11:27:01 on 19 Jan

மேலும் வாசிக்க விகடன்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தொலைபேசி, மொபைல் மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு ப்ரீபெய்டு மொபைல்களுக்கான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

10:57:02 on 19 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

"தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை மூலம் பாஜக தனது பொருளாதாரத்தை இயக்க நினைக்கிறது. நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை மூடி மறைக்கப்படுகிறது" என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே குற்றம் சாட்டியுள்ளார்.

10:27:02 on 19 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

‘தமிழகத்துல இப்போ அரசியல் மோசமா இருக்கு. மக்கள் திமுக, அதிமுக என இரு கட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மார்ச் மாதத்துக்கு மேல் ஒரு நல்ல முடிவை எடுப்போம். அப்போது என் தலைமையை ஏற்றுவருபவர்கள் வரட்டும். எல்லாம் அந்த ஆண்டவன் முடிவு’ என்று ரஜினி கூறியதாகச் சொல்லப்படுகிறது.

09:57:01 on 19 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இரு அணிகளும் போட்டி தொடரை சொந்தமாக்க கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

09:27:01 on 19 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தைச் சேர்ந்த பாரதி, அசோக், சக்தி, மணி ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

09:14:11 on 19 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஜியோ நிறுவனம் 56 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. அதே சமயம் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.

08:55:02 on 19 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

எலுமிச்சைசாறு மற்றும் எலுமிச்சை தோலும் சேர்த்து கொதிக்க வைத்த பானத்தை குடித்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தப்படுத்தும்.

07:55:01 on 19 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சீன விண்வெளி ஆய்வு மையம், நடப்பாண்டில், 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. லாங் மார்ச் 5B, 7A, 8 போன்ற அதிக எடைகளை தாக்கிச் செல்லும் ராக்கெட்டுகளையும் சீனா விண்ணில் செலுத்தவுள்ளது.

06:55:01 on 19 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அதிகம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது. அசைவ சூப் தயாரிக்கும்போது, அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம், அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

05:55:01 on 19 Jan

மேலும் வாசிக்க விகடன்

தமிழக பாஜக தலைவராக ஹெச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஒரு சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதில், “தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் ஜனவரி 17 அன்று முடிவடைந்தது. தலைவராக அதிக உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக ஹெச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.” என்று ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:57:01 on 18 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

எள்ளில் 20% புரதமும், 50% எண்ணெயும், 16% மாவு பொருட்களும் உள்ளன. ஆராய்ச்சி ஒன்றில் எள்ளு விதை மற்றும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.

09:55:01 on 18 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) முதல் மக்கள் சென்னை திரும்பத் தொடங்கி உள்ளனர். இதையொட்டி பொதுமக்கள் வசதிக்காக முக்கிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

08:57:02 on 18 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

08:27:01 on 18 Jan

மேலும் வாசிக்க தினகரன்

“அடிமுறை” என்ற பாரம்பரிய தமிழ் தற்காப்பு கலையை மையக்கருவாக கொண்டது பட்டாஸ் திரைப்படம். இதில் சிநேகா அடிமுறை கொண்டு எதிரிகளை தாக்குவதாக சில காட்சிகள் உள்ளன. தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

07:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ஜ.க விலகினால் அது பம்பர் பரிசு’ என்று அன்வர்ராஜா பற்றவைத்த நெருப்பு, கூட்டணிக்குள் திகுதிகுவென எரிகிறது. ‘என்.ஆர்.சி-யை மத்திய அரசு கொண்டுவந்தால் அதை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்’ என்று சட்டமன்றத்திலேயே அமைச்சர் உதயகுமார் பேசியது, கூட்டணிக்குள் மேலும் புயலைக் கிளப்பியது.

07:25:01 on 18 Jan

மேலும் வாசிக்க விகடன்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யாரை வேண்டுமானாலும் தடுப்புக் காவல் மையத்தில் வைக்க மத்திய அரசு டெல்லி காவல்துறைக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இந்தச் சட்டம் நாளை முதல் (ஜனவரி 19) ஏப்ரல் 18 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க சன் நியூஸ்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அநேக இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காவிட்டாலும் தடையை மீறி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதனிடையே நேற்று நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் ஆவேசமாக வந்த காளை எதிரில் வந்த தாய் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்றது.

06:25:02 on 18 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உலகம் முழுவதும் இறப்பவர்களில் 20 சதவீதம் பேர் சீழ் பிடிப்பதால் இறப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2017ஆம் ஆண்டு, உலக அளவில் 4 கோடியே 90 லட்சம் பேருக்கு சீழ் பிடித்ததாகவும், இவர்களில் 1 கோடியே 10 லட்சம் பேர் மரணம் அடைந்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

05:57:01 on 18 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பாட்டத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சாதி மோதலைத் தூண்டும் வகையில் டிக்டாக் செயலியில் வீடியோ பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

05:27:02 on 18 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

புதிதாக பிளக்ஸ் சேலஞ்ச் என்ற ஒன்று பிரபலமாகி வருகிறது. இந்த சவால் விதிகளின் படி தரையில் குப்புற படுத்து கைகளை பின்புறமாக கட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் கைகளின் உதவி இல்லாமல் கால்களை உந்தி தள்ளி தரையில் இருந்து மேலே எழுந்திருக்கவேண்டும்.

04:57:01 on 18 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

”ஐரோப்பிய அரசுகள் ஈரானுக்கு எதிரான வரலாற்று விரோதத்தை காட்டி வருகின்றன. (ஈரான்-ஈராக் போரின் போது) சதாம் உசேனுக்கு தங்களால் இயன்ற அளவு உதவியது இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி. அவர்கள் அமெரிக்காவின் எடுபிடிகள்” என ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறி உள்ளார்.

04:25:02 on 18 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகம் முழுவதும் நாளை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்காக தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

03:57:01 on 18 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் ரயிலில் உள்ள டாய்லெட்டில் இருந்து தண்ணீரை பிடித்து பாலில் ஊற்றுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

03:27:01 on 18 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

உள்நாட்டு தேவையில் மந்த நிலை மற்றும் அமெரிக்கா-சீனா இடையே 18 மாதங்கள் நீடித்த வா்த்தகப் போர் ஆகியவை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டில் சீனப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 6.1 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளது. இது, கடந்த 29 ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.

02:55:01 on 18 Jan

மேலும் வாசிக்க தினமணி

சிம்புவின் மாநாடு படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் கருணாகரன் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன்சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ஆம் தேதி மலேசியாவில் தொடங்கவுள்ளது.

02:27:02 on 18 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

ஒவ்வொரு துறையிலும் தனக்கு உரியவர்களை நியமித்து காரியத்தை சாதித்துக்கொள்வதில் பாஜக திறம்பட செயல்படும். அது போல பிசிசிஐயின் செயலாளராக உள்ள அமித்ஷாவின் மகன் ஜே ஷா மூலம் தோனியை பழிவாங்கும் படலத்தில் பாஜக இறக்கியுள்ளதா என்ற யூகம் தவிர்க்க முடியாத ஒன்று.

01:57:01 on 18 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

உத்தரபிரதேசத்தின் கான்பூர் பகுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 13 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட அந்த கும்பல் புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது.

01:27:02 on 18 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

முரசொலி படிப்பவர்கள் தி.மு.கவினர் என்றும் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு பதில் தரும் விதமாக, முரசொலி படிப்பவர்கள் யார் என அந்த நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. "முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள்.” என குறிப்பிட்டுள்ளது.

12:57:01 on 18 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”காங்கிரஸ் விலகிப்போனால் எங்களுக்கு நஷ்டமில்லை” என்று ஓப்பனாகக் கருத்து தெரிவித்துள்ளார் துரைமுருகன். கிட்டத்தட்ட கூட்டணி விரிசல் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. ஆனால், இதற்குப் பின்னால் பி.ஜே.பி இருப்பதாக இப்போது புதிய தகவல்களைக் கசியவிடுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

12:27:01 on 18 Jan

மேலும் வாசிக்க விகடன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சீனாவின் சங் மற்றும் பெங் ஜோடியை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சானியா மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

11:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஜினிகாந்த் மீது காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு உடனடியாக சி எஸ் ஆர் நகல் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற புகார்கள் அளிக்கும் போது வாங்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிடும் போலீசார் இந்த முறை உடனடியாக புகாரை பதிவு செய்துகொண்டு சிஎஸ்ஆர் வழங்கி இருக்கிறார்கள்.

11:27:01 on 18 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

‘நாட்டில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையை ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டத்தில் சேர்த்து உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் அவசியம். 2 குழந்தைகள் திட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம்.’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

10:55:01 on 18 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

உச்சநீதிமன்ற அனுமதியுடன் பரோலில் வெளிவந்து மாயமாகி விட்ட வெடிகுண்டு வழக்கு குற்றவாளி ஜலீஸ் அன்சாரியை மும்பை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். 83 வயதான டாக்டர் ஜலீஸ் அன்சாரி மீது 50க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் உள்ளன.

10:25:01 on 18 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

எஸ்.ஐ.வில்சன் கொலை செய்யப்பட்ட போது முதலில் கொலை வழக்கு, ஆயுதச் சட்டம், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த கொலையில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது தற்போது ‘உபா’ சட்டமும் பாய்ந்துள்ளது.

09:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் உள்பட 2 பேர் இறந்தனர். திருச்சியில் மாடு உரிமையாளரும், சேலம் இடைப்பாடியில் வேடிக்கை பார்த்த வாலிபரும் பலியாகினர். இதுதவிர, பார்வையாளர்கள், வீரர்கள் உள்பட 313 பேர் காயம் அடைந்தனர்.

09:54:36 on 18 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் உள்பட 2 பேர் இறந்தனர். திருச்சியில் மாடு உரிமையாளரும், சேலம் இடைப்பாடியில் வேடிக்கை பார்த்த வாலிபரும் பலியாகினர். இதுதவிர, பார்வையாளர்கள், வீரர்கள் உள்பட 313 பேர் காயம் அடைந்தனர்.

09:44:05 on 18 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 824 கன அடியில் இருந்து 882 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர் மட்டம் 109.45 அடியாகவும், நீர் இருப்பு 77.631 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து 8000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

09:29:49 on 18 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 300 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

09:26:27 on 18 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாம் ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்று தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு முதல் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளில், இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது.

09:19:07 on 18 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.19 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.50 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

09:14:20 on 18 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி / கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08:55:01 on 18 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தர்பூசணியில் தண்ணீர் சத்து மட்டுமே நிறைந்திருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை அதிகரிப்பதோடு தசைகளை வலிமையாக்குகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

07:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு பயனாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வசதி முற்றிலும் ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

06:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க தினமணி

தமிழ் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாகி பெரியளவில் கலக்கி வருகின்றன. வசூலிலும் இப்படங்கள் செய்யும் சாதனை தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதில் ரஜினிகாந்த், விஜய் இருவரின் படங்கள் தான் பெரும் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகள் செய்து வருகின்றன.

05:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

இசைஞானி இளையராஜாவை கௌவரப்படுத்தி கேரள அரசு அவருக்கு ஹரிவராசனம் விருதை வழங்கியுள்ளது. மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்க்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரள அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

10:55:02 on 17 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

களியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் ஏற்கனவே கைதான அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷாவை காவல்துறையினர் கைது செய்தாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

09:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடிகர் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்திற்கு ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இன்று படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

08:57:02 on 17 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாஜக கட்சியின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலும் நடைபெறவுள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜே.பி நட்டா பாஜக தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

08:25:02 on 17 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அர்ஜெண்டினாவில் லாரா சன்சோன் என்ற இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் உள் தையல், வெளி தையல் என 40 தையல் போடப்பட்டுள்ளது.

07:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சிறந்த காளைக்கான முதல் பரிசை மதுரை குலமங்கலம் மார்நாடு காளை தட்டிச் சென்றது. 12 மதிப்பெண்கள் பெற்ற குலமங்கலம் காளை களத்தில் 53 வினாடிகள் நின்று விளையாடியது.

07:25:01 on 17 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

என்.ஆர்.சி-க்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் என்.பி.ஆர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் மாநிலத்தில் நிறுத்தி வைத்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

07:04:20 on 17 Jan

மேலும் வாசிக்க விகடன்

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 14 காளைகளை அடக்கிய அழகர்கோயிலைச் சேர்ந்த கார்த்திக்கு 2ஆம் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

06:35:48 on 17 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்71 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

05:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறை நிர்வாகம் கோரிக்கையை ஏற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்துள்ளது.

05:39:50 on 17 Jan

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் விஷ்ணு விஷால் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது சினிமாவில் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், அவை என்ன பிரச்சினைகள் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், அத்தனைப் பிரச்சினைகளையும் ரசிகர்களின் முன்பு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

05:27:02 on 17 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்நிலையில் இந்த கருணை மனுவை ஜனாதிபதி இன்று நிராகரித்தார். இதனால் வரும் 22ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேறும் என்பது உறுதியாகி உள்ளது.

04:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான இன்று, அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்த ஒரு பாடலின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

04:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்து மாடுபிடி வீரர் பரிசு பெற்ற பிரபாகரன் உள்ளிட்ட மாடுபிடி வீரர்கள் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

03:57:02 on 17 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

காஷ்மீரின் மூத்த காவல்துறை அதிகாரி தேவிந்தர் சிங், பணம் மீது கொண்டிருந்த பேராசை காரணமாக போதை மருந்து கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கார் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும், அதைத்தொடர்ந்து பெரும் பணத்திற்காக தீவிரவாதிகளுக்கு உதவும் வேலையிலும் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

03:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்ற வருடம் தீபாவளி அன்று வெளிவந்த படங்கள் தான் பிகில் மற்றும் கைதி. இப்படங்களில் விஜய்யின் பிகில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கைதி தான் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து வரும் summer அன்று விஜய்யின் மாஸ்டர் படமும் கார்த்தியின் சுல்தான் படமும் ஒன்றாக வெளிவரவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

02:57:02 on 17 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

மக்கள் தொகை பதிவேட்டு படிவத்தில் தவறான தகவல்களை நிரப்பினால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது எந்த ஆவணங்களையும் காட்ட தேவையில்லை என்றும் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எண்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

02:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கோடிக்கணக்கில் வங்கியின் அதிகாரியே மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் டிஜிபி.,யை கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர், அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

01:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க தினமலர்

இராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்தில் ஈரான் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க வீரர்கள் பலியானதாக ஈரான் கூறியது. ஆனால் இத்தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்று அமெரிக்கா கூறி வந்த நிலையில் தற்போது ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக, அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.

12:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-30 செயற்கைக்கோளை இன்று அதிகாலை 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான் ராக்கெட் 5 மூலம், ஜிசாட்-30 விண்ணில் செலுத்தப்பட்டது.

12:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரகசியமாக சேவற்கட்டு நடப்பதாகவும், சேவல்கள் காலில் கத்தி கட்டுவது உள்ளிட்டவற்றை அவர்கள் செய்வதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் மேற்பார்வையிட்ட அரவக்குறிச்சி போலீசார் வெவ்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 10 பேரை கைது செய்துள்ளனர்.

11:57:02 on 17 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

விழுப்புரம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில், 10 அடி ஆழம் கொண்ட குறுகலான அஸ்திவாரக் குழிக்குள் விழுந்த 4 வயது சிறுமியை, இளைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

11:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. டெல்லி ஆளுநர் நிராகரித்த நிலையில், கருணை மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:02:55 on 17 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாகிஸ்தானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முக்கிய நகர்வு ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டை நடத்தும்போது அதன் அனைத்து உறுப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களையும் இந்தியா அழைக்கும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

10:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் இன்று காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை பகுதியில் 5 ஆயிரம் போலீசாரும், பெசன்ட்நகர், திருவான்மியூர், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களில் 5 ஆயிரம் போலீசார் என மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட இருக்கிறார்கள்.

10:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. அந்த வகையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், 2ஆவது போட்டி, குஜராத்தில் உள்ள சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

09:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்கப்பட்ட உயரிய போலீஸ் அதிகாரிக்கான பதக்கம் பறிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

09:33:08 on 17 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் பரிசாக கார் வழங்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனம், தங்கம், வெள்ளிக் காசுகள், சைக்கிள், பீரோ உள்ளிட்டவையும் பரிசாக வழங்கப்படுகிறது.

09:15:44 on 17 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் விஜயபாஸ்கரின் 3 காளைகளையும் மாடுபிடி வீரர்களால் பிடிக்கமுடியவில்லை. சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகளை வீரர்கள் யாராலும் அடக்க முடியவில்லை.

09:12:59 on 17 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

08:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இந்தியாவில் நிகழும் குற்றங்களை ஆண்டுதோறும் வெளியிடும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2018ஆம் ஆண்டு, நாடு முழுவதும் நிகழ்ந்த குற்றங்கள் பற்றிய தரவுகளை மாநில வாரியாக வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் தமிழகம் குற்றச் செயல்கள் எண்ணிக்கையில் ஏழாவது இடத்தில் உள்ளது.

07:55:02 on 17 Jan

மேலும் வாசிக்க விகடன்

மனிதனைப் போன்று மற்ற உயிரினங்களிலும் புத்திக்கூர்மை உள்ள உயிர்கள் உள்ளன என்பது நாம் அறிந்த உண்மை. இந்நிலையில், கடல்வாழ் உயிரினமான கணவாய் மீன்களுக்கு மனிதர்களை போன்று முப்பரிமாண படங்களை பார்த்தறியும் பண்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

06:55:02 on 17 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

இந்தியா முழுவதிலுமிருந்தும் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகை காஜல் அகர்வால், “என்னுடைய வாழ்நாளில் இப்படியொரு படத்தில் நடித்ததில்லை. என் லெவலே வேறு தளத்துக்கு செல்லும் அளவுக்கு நடித்திருக்கிறேன். வேறு எதுவும் இப்போதைக்கு சொல்லமுடியாது. சொன்னால், என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

05:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் லுக்கில் அவர் இடம்பெறுவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நனவாகவில்லை. மாறாக அவருக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்துள்ளது மாஸ்டர் படக்குழு.

10:57:02 on 16 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரது கணவரான சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

09:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மேலும் வாசிக்க