View in the JustOut app
X

ஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதுடன், தற்போது செயல்பாட்டு மூலதனம் மற்றும் வட்டி கட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறது. இதையடுத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த, 500 கோடி ரூபாய் நிதியை, வங்கிகளிடமிருந்து பெற உள்ளது.

07:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். எனவே புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும் டிரேடிங் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களைக் கட்டாயமாக முழுமையாகத் தவிர்க்க வேண்டிய நாளிது.

07:35:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 25 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும், உள்ளன. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ரன்தீப் சிங் என்பவரின் மகனான அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு `வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ விருதை வென்று சாதித்திருக்கிறார்.

06:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெண்பேடு அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே புதையுண்டிருந்த 4 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் பின்புறம் உள்ள இடத்தைத் தூர்வாரும்போது 4 சிலைகளை பொதுமக்கள் மீட்டனர். தோண்டி எடுக்கப்பட்ட 4 சிலைகளை கோயில் நிர்வாகத்தினர் வருவாய் அதிகாரி மூலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

06:41:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

என்னைக் கொலை செய்ய முயல்கிறது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா என்கிற குற்றச்சாட்டை தனது அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார் இலங்கை அதிபராக உள்ள மைத்திரிபாலா சிறிசேனா. இந்த தகவல் செய்தியாக வெளியாகி தற்போது சர்வதேச அரங்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

06:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்திய மருந்துவ ஆய்வு குழுவை ராஜஸ்தானுக்கு அனுப்பி உள்ளது மத்திய அரசு. ஜிகா வைரசாஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் கர்ப்பிணி பெண்கள் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

06:11:02 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் ஆலை அமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் க்விட். இது ரூ. 2.78 லட்சம் விலையில் கிடைக்கிறது. குறைந்த விலை பிரிவு கார்களில் இது மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 4.71 லட்சமாகும். இது 799 சி.சி. திறன் கொண்டது.

05:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

தலைவலிக்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம். தினமும் மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்தி வந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

05:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

அசுஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அசுஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் சென்ஃபோன் லைட் எல்1 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 என அழைக்கப்படுகிறது. பண்டிகை கால சலுகையாக சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

05:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

எச்1பி விசாவில் மாற்றங்களைச் செய்யவுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களால் பெரும்பாலும் நடத்தப்படும் சிறிய, நடுத்தர ஒப்பந்த நிறுவனங்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

05:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

சிபிஎஸ்இ பாடநூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், மத்திய பாஜக அரசு உடனடியாக, நாடார்குல மக்களைத் தவறாகச் சித்தரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

04:56:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பண்டிகை சீசனை முன்னிட்டு இந்த அக்டோபர் மாதத்துக்கான ஸ்மார்ட்போன் விற்பனை 24 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. அதேபோல, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 10 சதவிகிதம் அதிகமான அளவில் புதிய மொபைல்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:40:02 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத கட்டமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

04:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினமணி

பெற்றோர் கண்டித்த காரணத்தினாலும் மியூசிக்கலி கலையரசன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவருடன் நட்பு பாராட்டியதாகவும், இதனை கலையரசனின் பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

04:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 10.66 சதவீதமும், டாலர் மதிப்பில், 15.96 சதவீதமும் சரிவடைந்துள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர், சக்திவேல் கூறியுள்ளார்.

03:56:01 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை ஒப்பந்த ஊழியர்கள் அபேஸ் செய்துள்ளனர். இலவச தரிசன டிக்கெட் ஸ்கேன் ஆகவில்லை என கூறி ஒப்பந்த ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

03:40:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை ரவிந்திர ஜடேஜா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

03:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியாவைப் பொறுத்தவரையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எந்தவொரு விமான நிறுவனமும் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கவில்லை. ஆனால் இப்போது இதற்கான சந்தை மதிப்பு 69 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.

03:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா "சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பது அப்பட்டமான பொய். அவர் இந்து விரோத சக்தி. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்’’ என்றார்.

02:55:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

சென்னை காரம்பாக்கத்தில் பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசிச் சென்ற பெண், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினார். வேளச்சேரியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிக் கொன்ற தாய் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

02:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்புவதற்காகவே இது போன்ற மீடூ புகார்கள் வருகின்றன என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறி உள்ளார்.

02:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

’ஸ்க்ரீன்ஷாட்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம். ஸ்க்ரீன்ஷாட்கள் உட்பட. இந்திய சாட்சிய சட்டம் 1872 ஒரு வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு என எதுவாக இருந்தாலும் இது செல்லுபடியாகும்’ என்று சைபர் குற்ற வழக்கறிஞர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.

02:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான விஜய் தேவரகொண்டா, நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துவிட்டார் விஜய் தேவரகொண்டா. பெயரிடப்படாத இவரது அடுத்த தெலுங்கு படத்தில் வட சென்னை ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஸ் நாயகியாக நடிக்க உள்ளார்.

01:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

முதல்வர் கனவால், திமுக தலைவர் ஸ்டாலின் தூக்கிமின்றி தவிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் அவர், ”அ.தி.மு.க. என்பது மக்கள் இயக்கம். அதற்கு அழிவே இல்லை.” என்றார்.

01:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினமலர்

திமுக தலைவர் ஸ்டாலின், ராட்சசன் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், ”மிக்க மகிழ்ச்சி. திமுக தலைவர் ஸ்டாலின் தனது நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி, ராட்சசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு எனது நடிப்பை பாராட்டினார்.” என்று கூறியுள்ளார்.

01:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதால் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இது உடனடி புத்துணர்ச்சி அளிக்ககூடியது. லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

01:10:01 on 19 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

MeTooவுக்குப் போட்டியாக HeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகியதை மதம் சார்ந்ததாக பார்க்கக் கூடாது, மானம் சார்ந்ததாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

12:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த சில தினங்களில் மட்டும் மூன்று விமானங்களில் பழுது மற்றும் விமான விபத்து காரணமாகத் திருச்சி விமான நிலையம் திக் திக் எனக் கிடக்கிறது. கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் திருச்சியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், விமான நிலையத்தின் காம்பவுண்டு சுவர் மற்றும் ஆண்டெனா ஆகியவற்றில் மோதியது.

12:40:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

செப்டம்பர் 30, 2018 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஜியோ சேவையில் சுமார் 25.23 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பதாகவும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருவாய் மட்டும் ரூ.131.7 என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 11 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி வருகின்றனர்.

12:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

’பாகிஸ்தானில் அரசாங்கம் மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டை நாட்டினுடையக் கொள்கையில் அதே நிலைதான் உள்ளது. ஒரு புதிய அரசாங்கம் அமைந்த போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

12:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் விதமாக உள்நாட்டிலேயே விமானங்களை உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்து வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

11:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்யூப் ஜாவேத், ’பும்ரா வழக்கத்துக்கு மாறாக பந்து வீசுவதால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று கூறியிருந்தார். இதுபற்றிப் பேசிய பும்ரா, ’என்னைப் போல் இருக்கிற வேகப்பந்து வீச்சாளர்கள் யார்தான் காயம் அடையாமல் இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

11:40:02 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நாடு முழுவதும் தசரா விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வந்தனர். இதனை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

11:26:02 on 18 Oct

மேலும் வாசிக்க EENADU

வடமாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. தீமை ஒழிந்து நன்மை செழிக்கும் என்பதைக் குறிக்கும் வகையில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

11:10:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை சேப்பாக்கத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் வாயில் துணியை அடைத்துத் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்ய முயன்றதாக மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

'பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட குழுவின் கூட்டத்தில் , தற்பொழுது 9ஆம் வகுப்பிற்கு உள்ள முப்பருவக் கல்விமுறையை மாற்றி 10ஆம் வகுப்பில் உள்ளது போல் ஒரே புத்தகமாக வழங்கலாம்’ என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10:41:01 on 18 Oct

மேலும் வாசிக்க EENADU

போக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளது. FH 98 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானத்தை சீனாவின் ஏரோஸ்பேஸ் மின்னணு தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ளது. 1.5 டன் எடை கொண்ட பொருட்களை இந்த விமானம் சுமந்து செல்லும் திறன் பெற்றது.

10:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்கத் தமிழகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட குழுவை அமைந்துள்ளதாகத் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10:10:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்தால், அவர்களது சேர்க்கைக் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அதில், மாணவர்களைக் கல்லூரியின் சேர்க்கைக் கட்டணம், நிர்வாக வசதிகள் உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தகத்தை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

09:56:02 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்குப் பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

09:41:02 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

மழைக்காலம் தொடங்க உள்ளதால் காய்ச்சல், இருமல் போன்றவை இரண்டு நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

09:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

’கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் தங்கள் மனைவிகளை தங்க வைக்கும் கால அவகாசம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களுக்கு இதுகுறித்து முடிவெடுப்பதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. தற்போது இதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்ததாக உலவும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை’ என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

09:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க EENADU

திமிங்கலங்களுக்கு உணவு அளிக்கும் நேரத்தில், தொட்டிக்குள் ஒரு பெண் விழுந்தததை விளக்கும் வீடியோ, அதிர்ச்சியில் உறையவைக்கிறது. நல்ல வேளையாக, அப்பெண் எந்தவித காயமுமின்றி மீட்கப்பட்டார். இச்சம்பவம். ஜியாசிங் பகுதியில் உள்ள வியுயூ பிளாசாவில் நிகழ்ந்துள்ளது. சீன சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

08:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி.

”புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசராப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளாது. இதற்காக 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

08:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க விகடன்

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு நேற்று மட்டும் கூடுதலாக 770 பேருந்துகள் இயக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் சொந்த ஊர் செல்வதற்காகக் கோயம்பேட்டில் பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

08:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சிலி நாட்டில் சூரிய ஒளியில் இயங்கும் கார்கள் அறிமுக விழா பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தலைநகர் சாண்டியாகோவில் சூரிய ஒளியில் இயங்கும் கார்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அப்போது விசித்திரமான தோற்றத்துடன் வித்தியாசமாக இருந்த சூரிய ஒளிக் கார்கள் வேகமாக சீறிப்பாய்ந்த சென்றன.

08:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஞ்சிபுரம்-பெருமத்தூர் சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

கேரளாவில் சபரிமலையை நோக்கிச் செல்லும் பெண்களைத் தடுத்து போராடிவந்த போராட்டக்காரர்கள், பக்தர்களுடன் கலந்து விட்டதால், யார் போராட்டக்காரர்கள், யார் பக்தர்கள் என கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்களும், காவல்துறையினருமே போராட்டக்காரர்களின் இலக்காக உள்ளதாக கூறப்படுகிறது.

07:42:01 on 18 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

போராட்டத்தைக் கைவிட்டால் சமரசத்துக்குத் தயார் என்று கேரள தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்பினர் கேரளாவில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

07:27:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்குக் கர்ப்பப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராது. மேலும் தாய்ப்பால் கொடுப்பது ஒரு கருத்தடையாகவே பார்க்கப்படுகிறது.

07:03:52 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சண்டக் கோழியில் இருந்த புத்துணர்ச்சியும் உற்சாகமும் கச்சிதமான திரைக்கதையையும் எதிர்பார்த்துப் போகிறவர்களுக்குக் கிடைப்பதென்னவோ மிகச் சுமாரான ஒரு அடிதடி திரைப்படம்தான். எத்தனையோ படங்களில் பார்த்துப் பார்த்து சலித்த காட்சிகள் படம் நெடுக வந்துகொண்டேயிருக்கின்றன.

06:56:02 on 18 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாண்டிச்சேரியிலிருந்து மயிலாடுதுறைக்கு சுமார் 250 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்துகொண்டிருந்த வாகனத்தை சேத்தூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் சாராய கடத்தலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் குமார் சாராய வியாபாரியான பெத்தம்மாள், குமரேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

06:40:02 on 18 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ஓ.பன்னீர் செல்வத்தை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்ட டெல்லி லாபி, எடப்பாடியாரை தங்கள் கையில் வைத்து ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆனால் தி.மு.க.வின் வழக்கால் எடப்பாடியாரின் செல்வாக்கு ஏகத்துக்கு சரிவதைக் கண்டுவிட்டு டர்ன் பண்ண துவங்கிவிட்டது டெல்லி. அவர்களின் அடுத்த டார்கெட்டாக செல்வாக்கான தினகரன் மாறியிருக்கிறார்.

06:26:02 on 18 Oct

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு, சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜமால் படுகொலையில் ட்ரம்ப் உறுதியாக இல்லாமல், சவுதியிடம் பணம் பெறும் நேரம் இதுதானா என அந்நாட்டு பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பியுள்ளன.

06:10:02 on 18 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி அவுட் ஆன விதம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அசார் அலியின் ரன் அவுட்டை பாகிஸ்தான் பயிற்சியாளரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த அசார் சதம் அடிப்பார் என எண்ணிய நிலையில் இப்படி அவுட்- ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

05:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க விகடன்

கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு தலைவராக இருப்பவர் ஆசித் மோகன்பிரசாத். மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இவரிடம் கடந்த 15ஆம் தேதியன்று, டெபிட் கார்டு காலாவதியாகி விட்டதாகக் கூறி, அவரின் வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:41:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினமலர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு திரைப்பட விழாவின்போது, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் திருப்பதி கோயிலுக்கு வரும் பணம் முழுவதுமே பக்தர்கள் லஞ்சமாக கொடுக்கும் பணம் என பேசியிருந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றம் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது.

05:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க EENADU

ஐ.நா.சபையின் பேரிடர் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் 7,255 இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பேரிடர்களால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் சீனாவும், 3வது இடத்தில் ஜப்பானும், 4வது இடத்தில் இந்தியாவும் உள்ளது.

05:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். இவர் கடைக்கு கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவர்கள் சிலர் தூக்க மாத்திரை கேட்டு வந்துகொண்டிருந்தனர். இதனிடையே நேற்று இரவு கடைக்கு வந்த இளைஞர்கள் அதிகப்படியான தூக்க மாத்திரையை கேட்டு மருந்துக்கடை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

04:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ”அர்பன் நக்சல்கள் எனச் சொல்லப்படும் புதிய இடதுசாரி கொள்கைகள் கொண்டோர், தேசத்துக்கு எதிரான தலைமையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்பவர்கள்தான் அந்த அமைப்பில் உள்ளனர். எங்குச் சென்றாலும் நாட்டை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த அர்பன் மாவோயிஸ்ட்கள் செயல்படுகிறார்கள்.” என்றார்.

04:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் என்.டி.திவாரி (92) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் திவாரி உயிரிழந்தார். இவர் உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

04:25:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் கமல்ஹாசனை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். நெல்லை மகாபுஷ்கர விழாவில் கலந்து கொண்டு, குறுக்குதுறை முருகன் கோவில் அருகே புனித நீராடிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஸ்வரூபம் படத்திற்காக சிலரிடம் மண்டியிட்ட கமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை என்றார்.

04:10:03 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடர்ந்த வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. அத்துடன் விசாரணை 31ஆம் தேதி தொடங்கும் என்றும், அன்றைய தினம் எம்.ஜே.அக்பர் மற்றும் பிற சாட்சியங்கள் நேரில் ஆஜராகி தங்கள் சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

03:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆதார் அடிப்படையில் தனிப்பட்ட விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் குறித்து ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது எனவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

03:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ், அவரது வீடு பூட்டியிருந்ததால் திரும்பிவிட்டதாக நீதிமன்ற பதிவுத் துறை தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஹெச்.ராஜா விசாரணைக்கு ஆஜராவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

03:27:02 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

விஜயதசமி நாளான நாளை விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை நடத்தாத பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

03:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7

புகையிலை உள்ளிட்ட கேடு விளைவிக்கும் பொருட்களுக்குக் கூடுதல் செஸ் வரி விதிக்குமாறு பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். புகையிலைப் பொருட்கள் மீது கூடுதலாக செஸ் வரி விதிப்பதால் இரு பயன்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

02:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சபரிமலை பம்பையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்குவது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02:41:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினமணி

கேரள மாநிலம் நிலக்கல்லில் 144 தடையை மீறி பாஜக ஊர்வலம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. பாஜக ஊர்வலம் குறித்து நிலக்கல்லில் பத்தனம்திட்டா ஆட்சியர் நூகு விசாரணை நடத்திவருகிறார். பத்தனம்திட்டா எஸ்.பி. நாராயணன் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

02:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

கேரளாவில் எந்த வித கட்டாய மதமாற்றமும் இல்லை என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே மதமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

02:11:01 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

01:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

’டிடிவி தினகரன் காட்டும் வித்தைகள் மக்கள் மத்தியில் எடுபடாது’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மேலும் அவர், ’அதிமுக மூலம் டிடிவி தினகரன் தன்னை அடையாளப்படுத்த நினைத்தார். எங்களைப் பற்றியே டிடிவி தினகரன் பேசினார் என்றால் அவர்கள் இயக்கம் போனியாகவில்லை என்றுதான் அர்த்தம்’ என்றும் கூறியுள்ளார்.

01:41:01 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டி வில்வித்தையில் இந்திய வீரர் ஆகாஷ் மாலிக் ஆட்ட முடிவில் 0-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இருப்பினும், இளையோர் ஒலிம்பிக் போட்டி வில்வித்தையில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஆகாஷ் படைத்தார்.

01:25:01 on 18 Oct

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஆதாரை அடையாளமாகக் காட்டி பெறப்பட்ட 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கபடும் என தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு தொலை தொடர்புத்துறை மற்றும் தனிநபர் அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என வெளியான தகவல் உண்மையற்றது என தனிநபர் அடையாள ஆணையம் விளக்கமளித்துள்ளது.

01:11:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

அடுத்த இரு தினங்களுக்குத் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாளினை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

01:08:08 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில், ’சபரிமலை பிரச்சனைக்கு ஆர்எஸ்எஸ். மற்றும் சங் பரிவார் போன்ற அமைப்புகளே காரணம். பிற கோயில்களைப் போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை’ என்று பதிவிட்டுள்ளார்.

01:04:45 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’ஐயப்ப பக்தர்களுடன் எந்தவிதமான் மோதல் போக்கையும் அரசு விரும்பவில்லை. அமைதியாக இருக்கும் மாநிலத்தில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் ஆதாயத்துக்காகப் பதற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றன. ஆர்எஸ்எஸ்-இன் செயலைக் கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது’ என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

12:56:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினமணி

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ’மீடூ என்பது வக்கர புத்தியுடைய பெண்களின் எண்ணம்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், ’பெண்களைப் போலவே ஆண்களும் குறை சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

12:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 10ஆவது கட்டமாக 58 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

12:26:02 on 18 Oct

மேலும் வாசிக்க தின மலர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நடந்த சண்டையில் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியைச் சுட்டுக் கொன்றனர். அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

12:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அங்கு, கேரள பாஜக இளைஞரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி கேரள காவல்துறை அப்புறப்படுத்தியது.

12:00:43 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் பெண் நிருபரான சுபாஷினி ராஜ் என்பவர் இன்று சபரிமலை சன்னிதானத்திற்குச் செல்ல முயன்றபோது, தனக்கு 50 வயது என்று கூறி பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறிது தூரம் சென்ற பின்னர் அந்தப் பெண் கூறியது பொய் என்பதை அறிந்த பக்தர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

11:55:03 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ம.பி.,யின் கோத்ரா பகுதியில் திருவனந்தபுரம் ராஜ்தானி ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரக் டிரைவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் ரயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

11:40:02 on 18 Oct

மேலும் வாசிக்க தின மலர்

மாடலைக் கொன்றது ஏன் என்பது பற்றி கைது செய்யப்பட்ட மாணவன் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடன் தகாத உறவில் ஈடுபட அந்த மாடல் மறுத்ததால் அவரை அடித்தேன். இதனால் மயக்கமைடைந்த அவர், பிறகு எழுந்தார். பின்னர் அவரைக் கொலை செய்து சூட்கேசில் அடைத்ததாக சையத் தெரிவித்ததாகப் போலீசார் கூறியுள்ளனர்.

11:25:02 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது. ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றை வெளியிட ஒடிசா அரசு முடிவு செய்தது. இதில், ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ளார்.

11:18:28 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’முதலமைச்சர் தனது துறையைப் பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார். முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்து, வழக்கை சந்தித்திருக்க வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

11:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலைப் பகுதிகளில் வன்முறை நடைபெறாமல் தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’பம்பை, நிலக்கல்,சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு நீடிக்கும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

10:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 9 பேர் அடங்கிய பட்டியலில் குலுக்கல் முறையில் வாசுதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து நம்பூத்ரியை ஐயப்பன் கோயிலின் மேல்சாந்தியாக தேவசம்போர்டு தேர்வு செய்தது.

10:40:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

’தரமான குடிநீரை வீடுகளில் அரசே விநியோகிக்க முழு முயற்சி எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என தமிழ்க பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் அவர், தண்ணீர் லாரிகள், கேன் தண்ணீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவந்த அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

10:25:02 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோவையில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு, பேருந்துகளை சோதனை செய்தும் வருகின்றனர். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

10:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மும்பையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த, 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைவன், மெஹுல் சோக்சி உள்ளிட்டோரின், 218 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

09:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தின மலர்

’உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்திறவன் கிட்ட கம்முனும் இருந்தால் வாழ்க்கை ஜம்முனுக்கு இருக்கும் என்று விஜய் பேசியது எனக்குப் பொருந்தியது. நான் அப்படித்தான் இருப்பேன்’ என்று நடிகை ஜனனி கூறியுள்ளார்.

09:35:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவும், சீனாவும் வரும் டிசம்பர் மாதம் கூட்டு ராணுவ ஒத்திகை நடத்த உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மூன்று கட்டமாக நடக்கும் இந்த போர் பயிற்சியில் தலா 175 வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

09:15:01 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பாலியல் புகாரின் பேரில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதைனையடுத்து பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ராஜ்நாத்சிங் தலைமையிலான அமைச்சரவைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதது. இந்தக் குழு விசாரணை நடத்தி 3 மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

08:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தின மலர்

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த கஜானன் காரத் செல்போன் வாங்குவதற்காக பிரபல ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்தார். அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து அவருக்கு பார்சல் வந்தது. அந்தப் பார்சலை திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதை திறந்து பார்த்தபோது அதில் போனுக்கு பதிலாக செங்கல் இருந்தது.

08:35:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

கெளதம் வாசுதேவ் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தக் கூட்டணி அடுத்த படத்திற்காக இணைய உள்ளனர். மூவரும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

08:15:01 on 18 Oct

மேலும் வாசிக்க EENADU

ஹெக்ஸா எக்ஸ்.எம். பிளஸ் (Hexa XM+) என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த எஸ்.யு.வி. கார் விலை ரூ. 15.27 லட்சத்தில் ஆரம்பமாகிறது. இந்த காரில் பல்வேறு சொகுசு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

07:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

நவராத்திரி நிறைவடைந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ஆயுதபூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடைகளிலும் அலுவலகங்களிலும் மக்கள் தங்கள் தொழில் சிறக்க இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். வட மாநிலங்களில் தசரா கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

07:35:02 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.88 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.93 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க