View in the JustOut app
X

ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர் சேர்ப்பில் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ புதிதாக 94 லட்சம் சந்தாதார்களை ஈர்த்து ஆதிக்கம் செலுத்துகிறது.

04:55:01 on 23 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் கிராமத்தில் பேரூராட்சி சார்பில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகள் அடிக்கடி எரிக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால், மூச்சுத் திணறல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்படுவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

04:25:01 on 23 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பம் பகுதியில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில், பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்ப கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

03:55:01 on 23 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சர்வதேச உயிர்பன்மய தின விழாவில் பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ’இயற்கையையும், கலாச்சாரத்தையும் நேசிக்க வேண்டும். பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

03:25:01 on 23 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

உடல் எடை குறைக்க நினைத்தீர்களானால், நிச்சயமாக உணவில் மைதாவை தவிர்க்க வேண்டும். ஆகவே, மைதாவிற்கு பதிலாக வெள்ளை சோளத்தை பயன்படுத்தலாம். நார்ச்சத்து நிறைந்த இந்த வெள்ளை சோளத்தில் சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம், குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்கும்.

02:55:01 on 23 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

புதுக்கோட்டை வெள்ளாற்றில் இயங்கி வரும் சட்டவிரோத மணல் குவாரிகள் பற்றி அறிக்கை தர ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வெள்ளாற்றில் மணல் கொள்ளை குறித்தும் சோதனைச்சாவடி மற்றும் சிசிடிவி அமைக்கப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.

02:25:02 on 23 May

மேலும் வாசிக்க தினகரன்

ரஷ்யாவின் போர் விமானங்களை அலாஸ்கா அருகே இடைமறித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. அச்சுறுத்தலை கண்டுபிடிக்கவும், முறியடிக்கவும், 365 நாட்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

01:56:01 on 23 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’ஷெர்பா’ இனத்தை சேர்ந்த கமி ரிடா ஷெர்பா 24–வது தடவையாக எவரெஸ்டில் ஏறி, தனது சாதனையை தானே முறியடித்தார். இதன்மூலம், உலகிலேயே அதிக தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்.

01:26:01 on 23 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி படத்தில் நடிக்கும் காஜல், பாரீஸ் பாரீஸ் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துள்ளார். இந்நிலையில், இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களைப் பதிவேற்றும் காஜல் கடந்த சில நாட்களாகப் பதிவேற்றும் படங்களில் உடல் எடையைக் குறைத்து கிளாமராக தோற்றம் அளித்துள்ளார்.

12:55:01 on 23 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

போரடிக்கும் உணர்வாலோ கவனிப்பு இல்லாத சூழலால் கை சூப்பும் பழக்கத்தை மேற்கொண்டால், விரல்கள் மூலம் செய்யும் விளையாட்டுகளைக் குழந்தைக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து கை சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்கலாம்.

12:25:01 on 23 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியின் காரணமாக தற்காலிகமாக தங்கியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த குறிப்பிடத்தகுந்த நபர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் அறிவித்தார்.

11:55:01 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

'ராம்பூர் மக்களவை தொகுதியில் தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என அர்த்தம்,' என்று சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ளார்.

11:25:01 on 22 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

மரங்களோடு ஆழமாக வேரூன்றியிருக்கும் நம் வரலாற்றை மறந்து, அவற்றைச் சகட்டுமேனிக்கு அழித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் மனிதர்களால் பல லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன.

10:55:02 on 22 May

மேலும் வாசிக்க விகடன்

தோனி குறித்து ரவி சாஸ்திரி, ‘இந்த உலகக்கோப்பை தொடரில் தோனியின் பங்கு மிக முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளாக கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார் தோனி. அவரைவிட சிறந்த விக்கெட் கீப்பர் வேறு யாரும் இல்லை.’ என கூறினார்.

10:26:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஐஸ்வர்யா ராய் பச்சன் கென்ஸ் திரைப்படவிழாவில் அட்டகாச உடைகளுடன் வலம் வருகிறார். அவர் தற்போது அசரவைக்கும் நீல நிற உடையில் வந்து அனைவரையும் ஈர்த்தார். சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் ஐலைனர் மற்றும் கண்ணுக்கு சில்வர் மேக்கப் அணிந்து இருந்தார்.

09:55:02 on 22 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் (Neyveli Lignite Corporation India Ltd) ஒரு வருட அப்ரண்டிஸ் பணி 170 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த நிறுவனத்திற்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 12185 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:26:01 on 22 May

மேலும் வாசிக்க நக்கீரன்

கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை காவல்நிலைய ஆய்வாளர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லாட்டரி தொடர்பான வழக்கில் சரவணன் என்பவரிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

08:55:01 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

நாளை மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், புதுச்சேரியில் லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆண்கள் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதனால் லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஏர்போர்ட் ரோடு மூடப்படுகிறது.

08:40:01 on 22 May

மேலும் வாசிக்க நக்கீரன்

’விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. மற்ற வீரர்களும் தங்களது பங்களிப்பை முக்கியமான நேரங்களில் அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் 1996, 1999 மற்றும் 2003 உலகக் கோப்பையில் தனக்கு ஏற்பட்ட சுமைபோல் விராட் கோலிக்கு ஏற்பட்டுவிடும்’ என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

08:25:01 on 22 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

குஜராத்தில் 2018-19ஆம் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 2017-18 கல்வியாண்டில் 67.5% தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 66.97% ஆகக் குறைந்துள்ளது.

08:10:02 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நெல்லை மாவட்டத்தில் திருநங்கையை திருமணம் செய்து மோசடி செய்த புகாரில் அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. விஜய சண்முகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விஜய சண்முகநாதனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சாரட்கர் உத்தரவு வழங்கினார்.

07:42:08 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

சமீபத்திய தேர்தல் வேலையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் அகில இந்திய அளவில் இணையதளங்களில் ‘தேர்தல் தேவதைகளாக’ப் பிரபலமாகியிருக்கிறார்கள். ‘தேர்தல் பணிகளைச் செய்ய நடிகைகள் வந்திருக்கிறாரா..’என்று கேட்கும் ரேஞ்சிற்கு சிலர் போய்விட்டார்கள்.

07:25:02 on 22 May

மேலும் வாசிக்க தினமணி

உத்தரப்பிரதேசத்தின் பர்டாபூர் என்ற பகுதியில் உள்ள வாக்கு இயந்திரங்கள் மையத்திற்கு அருகே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் டெண்ட் போட்டு தங்கியுள்ளனர். அத்துடன் அவர்கள் தொலைநோக்கிகள் (பைனாகுலர்) மூலம் வாக்கு இயந்திரங்களைக் கண்காணித்து வருகின்றனர்.

07:10:01 on 22 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் நடத்தப்படும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’நாம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ அதுதான் நாளை நடக்க உள்ளது; ராகுல் காந்திதான் பிரதமராக வரப்போகிறார். மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ எனக் கூறியுள்ளார்.

07:05:54 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அங்கன்வாடிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்து அரசின் கொள்கை முடிவெடுக்கவும் தெரிவித்துள்ளது.

06:55:01 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

’உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் சூழ்நிலையில் தனது திறமையைப் பற்றி எதிராளிகளுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு என்னை கண்டால் நடுக்கம் வரும்’ என்று மேற்கு இந்திய தீவுகள் வீரர் கிறிஸ் ஜெய்ல் தெரிவித்துள்ளார்.

06:40:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

’டி.டி.வி தினகரன் அணியினர் ஒரு பொருட்டே அல்ல. நாடாளுமனறத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். பாமக, புதிய தமிழகம், தேமுதிக போன்ற கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வாங்கி சாதாரணமானது அல்ல. டி.டி.வி பிரிப்பதாகச் சொல்லும் வாக்குகளை இந்தக் கட்சிகளின் வாக்குகள் சமன் செய்யும்’ என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

06:25:01 on 22 May

மேலும் வாசிக்க விகடன்

ஓமன் நாட்டைச் சேர்ந்த ஜோகா அல்-ஹரத்தி (Jokha Alharthi) என்ற பெண் எழுத்தாளருக்கு அவரது செலஸ்டியல் பாடீஸ் (Celestial Bodies) என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் (Man Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விருதைப் பெற்ற முதல் அரபிக் எழுத்தாளர் என்ற பெருமையை ஜோகா அல்-ஹத்தி பெற்றுள்ளார்.

06:10:01 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மும்பையைச் சேர்ந்தவர் பத்மகார் நந்தேகர் (52). இவர் மும்பையில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பிரேசிலைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து அப்பெண்ணைக் கற்பழித்துள்ளார்.

05:52:30 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தில் மெடாக் நோ இந்தியா என்ற தனியார் தொழிற்சாலை அருகே பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் தீக்கிரையாகின.

05:26:55 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மக்களவைத் தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

05:10:02 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, பாமகவிற்கு இந்த தேர்தலில் ஓட்டு வங்கி குறைந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாமக, தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

04:59:15 on 22 May

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னை மதுரவாயல் அருகே சினிமா பைனான்சியரின் மனைவி கடன் தொல்லை காரணமாக இரு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

04:52:11 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் அரசும், காவல்துறையும் இருக்கிறது என தெரிவித்திருந்த முகிலன் என்ன ஆனார் என்று தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக இதற்குப் பின்னால் இருக்கக்கூடியவர்களக் கண்டறிந்து தண்டிக்கப்படுவார்கள். அது நடக்கும்’ என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

04:50:13 on 22 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல், தெற்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையின் போது கேரள மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

04:25:02 on 22 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

’தமிழகத்தில் இரண்டு ஆளுமைகளின் மறைவுக்குப் பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தைக் கணிக்க முடியாது. ஆனால் மக்களின் ஆதரவு அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான்’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

04:11:28 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ’அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது; விழிப்புடன் இருங்கள், கண்காணியுங்கள். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள்; கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனம் உடைந்து விடாதீர்கள். காங்கிரஸ் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

04:10:02 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று முடித்து வைத்தது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இழப்பீடு தொகைகள் தங்களுக்கு திருப்திகரமாக இருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

03:55:01 on 22 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அகமதாபாத்தில் வெயில் 45 டிகிரி செல்சியஸ் வாட்டி வதைத்து வரும் நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குளிர்ச்சியாகப் பயணம் செய்ய புதிய யுத்தி ஒன்றை கண்டறிந்துள்ளார். அந்தப் பெண் தனது காரை மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார்.

03:40:02 on 22 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு படத்தில் கங்கை அமரன் நடிக்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகின. இதற்கு வெங்கட்பிரபுவே 'அப்பா இந்த படத்தில் நடிக்கவில்லை, இணையத்தில் சுற்றும் அந்த செய்தி பொய்' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

03:25:01 on 22 May

மேலும் வாசிக்க நக்கீரன்

இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஐ. எஸ் அமைப்பால் தயாரிக்கபட்ட சாத்தானின் தாய் எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

03:10:02 on 22 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, ’தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.

02:48:01 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

02:34:37 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்? அரசின் நோக்கம் மக்களைப் பாதுகாப்பதா? அச்சுறுத்துவதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

02:29:10 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முக்கறும்பூரில் உள்ள விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பருத்தி வயலில் இறங்கி, கையில் விஷ பாட்டில்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

02:26:29 on 22 May

மேலும் வாசிக்க தின மலர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி வெங்கடேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

02:17:17 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துமோ அதற்கு சற்றும் குறைந்தது அல்ல தமிழக சட்டமன்றத்திற்கான 22 தொகுதி இடைத்தேர்தல். அதிமுக ஆட்சி தொடர போகிறதா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறதா என்று தீர்மானிக்க போகும் தேர்தல் இது.

01:55:02 on 22 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

’நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ’தல 60’ படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

01:50:22 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

முன்பதிவுகளை ரத்து செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை மூலம் 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 2018-19ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு 182 கோடியே 56 லட்சம் ரூபாய் அபராதம் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.

01:35:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின்போது உச்ச நீதிமன்றம் கூறியபடி தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.

01:15:02 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

அமலாக்கத்துறை அதிகாரிகள் யாரும் மீடியாக்களுடன் பேசக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பின் இயக்குனர் எஸ்கே மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

12:55:01 on 22 May

மேலும் வாசிக்க தினமலர்

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் தன் எடையை பாதியாக குறைத்து கிரீடம் படத்தில் இருந்தது போல் மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

12:35:27 on 22 May

மேலும் வாசிக்க சினி உலகம்

நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

12:32:51 on 22 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் குறித்து இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:19:37 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 மாடலின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 7 மாடலுக்கு மாற்றாக புதிய ரெட்மி நோட் 7எஸ் இருக்கும். ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்களில் ரெட்மி நோட் 7 அதிகளவு வரவேற்பு பெற்று வருவதால், ஸ்டாக் இருக்கும் வரை ரெட்மி நோட் 7 விற்பனையை நடத்த சியோமி திட்டமிட்டுள்ளது.

12:12:03 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ’கராத்தே போன்ற தற்காப்பு கலையை மாணவர்கள் கற்றுக்கொள்வது அவசியம்’ எனவும், ’இதற்கு அரசு உதவ வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்தனர்.

12:04:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கார்த்தி தற்போது கைதி படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகி இல்லை. இதனைத் தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் (ரெமோ இயக்குநர்) இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ராஷ்மிகா நாயகி. இந்தப் படத்துக்கு சுல்தான் என்று பெயர் வைத்துள்ளனர்.

12:00:22 on 22 May

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

தாம்பரம் – முடிச்சூர் சாலையில் உள்ள குளக்கரை அருகே டிராவல்ஸ் கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அதில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:55:46 on 22 May

மேலும் வாசிக்க ie தமிழ்

மேற்கவங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பின் நிலவி வரும் பதற்ற நிலயை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை கொண்டுவருமாறு பாஜக வலியுறுத்தியுள்ளது. இதற்காக ஆளுநர் திருப்பதி அவர்களையும் பாஜக குழு சந்தித்து கோரிக்கை கடிதத்தை அளித்துள்ளாதக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:47:26 on 22 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

புல்வாமா தாக்குதலுக்குப் பின் மதுரை விமானநிலையத்தை எட்டிப்பார்த்தால், வேடிக்கை பார்த்தால் குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறை விநோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

11:43:57 on 22 May

மேலும் வாசிக்க காமதேனு

நடிகை அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராட்சசன். அதோ அந்த பறவை போல, ஆடை படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், சிறுமி ஒருவருடன் சுட்டித்தனமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

11:37:58 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

குஜராத் மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

11:33:02 on 22 May

மேலும் வாசிக்க தினமணி

ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது மகனைக் கொன்ற தாய் போலிசாரிடம் பிடிபட்டவுடன் தூக்கத்தில் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. இதையடுத்து அவருக்கு மனநிலை பாதிப்பு எதாவது இருக்கிறதா என்ற சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் தெளிவான மனநிலையிலேயே இருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

11:30:46 on 22 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

டெல்லியைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலம் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட மோகித் மோர் என்பவர் டிக்-டாக் செயலி மூலம் தொடர்ந்து ஃபிட்னஸ் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

11:22:12 on 22 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் பெற்றோருக்கு எச்.ஐ.வி இல்லாத போது, குழந்தைகளுக்கு மட்டும் எப்படி பரவியது என விசாரித்து வருகின்றனர்.

11:19:53 on 22 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். அதில், ’21 வயதில் திருமணம் பிரபல ஹிந்தி நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற்று, 4 வருடங்களில் பிரிந்துவிட்டதாக’ தெரிவித்துள்ளார்.

11:17:52 on 22 May

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு செய்தார். மேலும் சென்னையில் உள்ள 3 மையங்களில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார்.

11:04:23 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

சிதம்பரம் அருகேயுள்ள கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் திருநங்கைகள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் திருநங்கைகள் ஒன்று கூடி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

10:56:11 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூலேரிக்காடு பகுதியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அப்பகுதி இளைஞர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

10:48:31 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க மக்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு நபர் தனது காரை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நூதன வழியைக் கையாண்டுள்ளார். அவர் தனது கார் முழுவதும் மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார்.

10:41:14 on 22 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

10:31:59 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பலநாள், பல இடையூறுக்கு பின் கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளிக்கு கோதண்டராமர் சிலை சென்றது. தமிழக எல்லையான ஜூஜூவாடியை கடந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சென்றடைந்தது. ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றை கடக்க முடியாமல் 13 நாட்கள் சிலை செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

10:25:56 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ உள்பட 11 பேர் பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் சம்பவத்திற்கு, தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதல்வருமான சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

10:20:28 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஏழாம் அறிவு படத்தில் வில்லன் டாங்லீ ஆக மிரட்டியவர் ஜானி ட்ரி நியூயன். அதன்பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது வியட்நாமில் உள்ள அவரிடம் நடிகர் அருண் விஜய் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருகிறார்.

10:15:41 on 22 May

மேலும் வாசிக்க சினி உலகம்

அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

10:12:50 on 22 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. ஆனால், இதுவரை துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

10:08:59 on 22 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலின் விலை ரூ.1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

09:55:02 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தங்கமங்கை கோமதி மாரிமுத்து, தடகள வீராங்கனை சாந்தி என தமிழக வீராங்கனைகள் சர்ச்சையில் சிக்குவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்படும் தமிழக வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்பதில் தேசிய தடகள சம்மேளனம் பாரபட்சம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

09:35:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி.46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி46 ராக்கெட், ரீசாட் 2பி செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

09:09:18 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது.

08:55:01 on 22 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

இந்தோனேஷியாவில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றிபெற்று தனது பதவியை தக்கவைத்துள்ளார். இதற்கிடையே, தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ள சுபியாண்டோ வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளார்.

08:35:01 on 22 May

மேலும் வாசிக்க ETV Bharat

வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, நுண் பார்வையாளர்கள் ஆகியோர் மட்டும் செல்போன் எடுத்து செல்ல தடை இல்லை. அதற்கு அவர்களுக்கு முறையான அனுமதி உண்டு என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

08:15:03 on 22 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.97-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:03:18 on 22 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் 4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

07:35:02 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சொகைல் முகமது பணியாற்றி வந்த நிலையில் அவரை பாகிஸ்தான் வெளியுறவு செயலாளராக பணிமாற்றம் செய்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காலியாகும் இந்திய தூதர் பதவிக்கு தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றும் மொய்ன் உல்ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

07:15:01 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் ராகெட்ரி: நம்பி விளைவு படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். மேலும் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை படக்குழு நிறைவு செய்துள்ளது.

06:55:02 on 22 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மத்திய உள்துறை அமைச்சகத்தில் 219 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேருவதற்கான தகுதி, தேர்வுகள் உள்ளிட்டவை www.bprd.nic.in. என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

06:25:02 on 22 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உணவு கடை ஒன்றில் சஜித் பதான் என்ற ஆட்டோ ஓட்டுநர் பர்கர் சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் இருந்த கண்ணாடித்துண்டுகள் அவரது தொண்டைக்குள் சிக்கி அவரது வாயிலிருது ரத்தம் கசிந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நிலை தேறியுள்ளார்.

05:55:01 on 22 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த கட்டிடங்களை ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் தேவிகா தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

05:25:01 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிக்கும் ஆலையில், ராஜேஷ் அகர்வாலும், ஐ.சி.எஃப். பொது மேலாளர் ராகுல் ஜெயினும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜேஷ் அகர்வால், ’சென்னை மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்டு வரப்படுவதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

04:55:01 on 22 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு நல்லதாகவும், சில சமையங்களில் கெட்டதாகவும் கூட அமைந்து விடுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீரான நிலையில் இருப்பதுதான் சிறந்தது. இதன் அளவு சற்றே அதிகமாகிவிட்டால், இருதய நோய்களின் அபாயம் அதிகரித்துவிடும்.

04:25:02 on 22 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தன்னுடைய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டனர், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும்’ என கூறியுள்ளார்.

03:55:02 on 22 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனை தொடர்ந்து நோக்கியா 3.2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை ரூ.10,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

03:25:01 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டி, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.

02:55:01 on 22 May

மேலும் வாசிக்க விகடன்

தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பல ஊர்களில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

02:26:02 on 22 May

மேலும் வாசிக்க தினகரன்

'பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி' என்ற திரைப்படம் வரும் 24ம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை சுட்டிக் காட்டி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

01:56:02 on 22 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதோடு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் உற்பத்தித் துறையின் விரிவாக்கம் ஆகியவை குறித்து வாக்குறுதி அளித்துள்ளன. CO2 (கரியமில வாயு) உமிழ்வை பொறுத்தவரை ஏற்கனவே உலகளவில் மூன்றாவது நாடாக விளங்கும் இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற அச்சம் எழுந்துள்ளது.

01:26:01 on 22 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஏமாலி படம் மூலம் அறிமுகமான சாம் ஜோன்ஸ் லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அவர், ’அஞ்சலி எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார்’ எனக் கூறியுள்ளார்.

12:55:02 on 22 May

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்வதில் உலக நாடுகள் மத்தியில் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 54 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:25:02 on 22 May

மேலும் வாசிக்க ETV Bharat

தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் டெல்லி, மைசூரு, புவனேஸ்வர், போபால் உள்பட 5 இடங்களில் தொடங்கப்பட்டது.

11:55:01 on 21 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

மேலும் வாசிக்க