View in the JustOut app
X

விக்ரம் லேண்டரின் ஆயுள் காலமான 14 நாள் இன்று முடிகிறது. மீண்டும் அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் தராமல் போய் விட்டது. நிலவின் தென் துருவப்பகுதியில் ஆராய்ந்து புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் லேண்டர் கனவாக கலைந்து இருக்கிறது.

10:27:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

அசாமில் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம், இம்மாநிலத்தில் 19 லட்சம் வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, ‘நாடு முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10:00:05 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

”அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது. எனவே, இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தை மதித்து நடக்க வேண்டும். நமது நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

09:27:02 on 20 Sep

மேலும் வாசிக்க தினமணி

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, பூழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

08:57:01 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் நடைபெற்ற பிகில் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், 'காரில் செல்லும்போது கருணாநிதி பற்றி தவறாக பேசியவரை காரில் இருந்து இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும்” என்று கூறினார்.

08:25:02 on 20 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.93, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.07 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:01:11 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பலகாரம் செய்ய எண்ணெய் சுட வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது. சீனியில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது நீர்த்தும் போகாது.

06:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

திமுகவின் எம்.பியும் செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன், இந்தியாவின் அடையாள மொழியை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு இந்தியைவிட தமிழ் மொழிக்குத் தான் தகுதி உண்டு என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸின் சித்தாந்த்தை திணிக்கவே நாடெங்கும் இந்தியை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

05:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

டெல்லியில் உள்ள கீதா காலனியில் வசிப்பவர் அதுல் அகர்வால். இவரது மனைவி டெல்லி காவல் நிலையத்தில், தனது கணவர் பாலியல் வன்கொடுமைக்கு தன்னை ஆளாக்கினர் என்றும், அவருடைய நண்பர்களுடன் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தியதாகவும் கட்டாயப்படுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார்.

04:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீர்மூழ்கி கப்பல் மூலம் பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பூச்சாடி போன்று தோற்றம் கொண்ட புதியவகை ஜெல்லிமீனைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

03:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

02:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி, விதிமுறைகள் மீறியும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருபவர்களுக்கும் அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட இது தமிழகத்தில் தீவிரமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

01:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். மேலும், மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

12:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் 4399 இடங்கள் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் இடங்களில் வசிப்பவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

11:57:01 on 19 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி இந்து முன்னணி ஒன்றியச் செயலாளரான குழந்தைவேலு என்பவர், கணபதி வீட்டிற்கு சென்று சிறுமியை பெண் கேட்டுள்ளார். அதற்கு கணபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியைக் கடத்தியுள்ளார். அவரைத் துரத்தி சென்று பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து சிறுமியை மீட்டனர்.

10:57:02 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மதுரையில் ரமணா மெஸ் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வந்த செந்திலுக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை. தொழிலில் இன்னும் உச்சத்தை தொடவேண்டுமென்றால் விலை உயர்ந்த காளை மாடுகளை வாங்கிக்கொண்டே இருந்தால் செல்வமும், புகழும், தொழிலும் உலகம் முழுவதும் பரவ தொடங்கும் என்று ஒரு ஜோசியர் சொன்னதை நம்பி, அதன்படியே செய்தார்.

09:57:01 on 19 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

இரயில்வே துறை பணியாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

08:57:01 on 19 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஏமனில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு வாய்ப்பே இல்லை. தாக்குதல் வடக்குப் பகுதியிலிருந்து நடந்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரான்தான் ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது” என்றார்.

08:27:02 on 19 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியின்போது கேப்டன் கோலி, தேவையில்லாமல் ஸ்டெம்பை உடைத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

07:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

இந்தோனீசிய காட்டுத் தீயால் உருவாகும் புகைமூட்டம் அந்நாட்டை மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மேலும் சில நாடுகளையும் மிரள வைத்திருக்கிறது. குறிப்பாக, மலேசியாவில் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய காற்று மாசுபாட்டின் அளவானது மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் மலேசியாவில் 2,000 பள்ளிகள் மூடப்பட்டன.

07:27:01 on 19 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பேனர் விழுந்ததில், லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த இன்ஜினீயர் சுபஸ்ரீ வழக்கை விசாரிக்கும் பள்ளிக்கரணை சப்-இன்ஸ்பெக்டரும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரும் போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ வெளியானதும், காவல்துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

06:25:01 on 19 Sep

மேலும் வாசிக்க விகடன்

கோவை கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா என்பவர், அதே பகுதியில் அமைந்துள்ள செல்வம் மருந்தகத்தில் பல் வலிக்காக மாத்திரை வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று மாத்திரையை உடைத்து உண்ண முற்பட்டார். அப்போது மாத்திரைக்குள் சிறிய இரும்புக் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

05:57:01 on 19 Sep

மேலும் வாசிக்க தினமணி

பெரியாரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா மேம்பாலம் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி தி.நகரைச் சேர்ந்த அதிமுக 114-வது வட்டச் செயலாளர் சின்னையா என்பவரது பையில் இருந்து ரூ.16 ஆயிரத்தை ஒருவர் திருடினார்.

05:27:01 on 19 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழக அரசு, குறித்த நேரத்தில் நிலங்களை கையகப்படுத்தி தராததால், ரூ.3,600 கோடி மதிப்பிலான 3 நெடுஞ்சாலை திட்டங்களை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. விழுப்புரம் – புதுச்சேரி நான்கு வழிச்சாலை, மீன்சுருட்டி – சிதம்பரம் உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

05:00:03 on 19 Sep

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை நிர்வகித்து வரும் உறுப்பினர்கள் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது. புதிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய ஆலோசகராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்கை நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.

04:41:12 on 19 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

எல்.இ.டி., எல்.சி.டி. டிவிக்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எல்.இ.டி, எல்.சி.டி, டிவிக்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

04:27:01 on 19 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

லைபிரீயா தலைநகர் மோன்ரோவியாவிற்கு அருகில் உள்ள பேவெஸ்வில்லே என்ற நகரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்கள், நேற்று இரவு தூங்கி கொண்டிருந்த போது தீவிபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் 10 முதல் 20 வயது வரை உள்ளவர்கள்.

04:25:01 on 19 Sep

மேலும் வாசிக்க தினமலர்

வெப்பச்சலனம் காரணமாகவும், வளமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கடந்த 17-ம் தேதி முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த மழை 21ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், எதிர்பார்க்கிறேன். இதுபோன்று இரவில் தொடங்கி அதிகாலை வரை நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

04:00:14 on 19 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாரதி. இந்நிலையில் கத்தி குத்து சம்பவத்தால் காயம்பட்டிருந்த பாரதிக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தையல் போடப்பட்டது. ஆனால், அதன்பின்பு வலி பொறுக்க முடியாமல் கதறிய நிலையில், பாரதியின் முதுகுப் பகுதியை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர்.

03:30:16 on 19 Sep

மேலும் வாசிக்க விகடன்

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் தற்போது பரபரப்பு அதிகமாகிக்கொண்டே வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்களுக்கு கடும் டாஸ்க் தருவதால் தான். அந்த வகையில் இன்று சாண்டி ஒரு டாஸ்கில் லொஸ்லியாவை தள்ளிவிட, அது கவினுக்கு மிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

02:25:01 on 19 Sep

மேலும் வாசிக்க சினி உலகம்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவனின் தந்தைக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர் டாக்டராக இருப்பதால் தனது மகனையும் டாக்டராக்க நினைத்து இதற்காக தவறான வழிமுறைகளை தேர்ந்தெடுத்தாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

01:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

ஷெரீன் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே மிக தெளிவாக இருப்பவர். அவருக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். இந்நிலையில் இன்று கவின் ஒழுங்காக கேம் விளையாடமால் இருக்க, ஷெரீன் ‘கேம் விளையாட இஷ்டம் இல்லை என்றால் எதற்கு வருகிறீர்கள்?’ என கேட்டார்.

01:25:01 on 19 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வரும் நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணையை தயார் செய்து நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது.

12:57:01 on 19 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

அமெரிக்கா செல்வதற்காக பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசிடம், மத்திய அரசு அனுமதி கோரியிருந்தது. ஆனால், மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடியாக அனுமதி மறுத்துள்ளது.

12:27:02 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஒரு கொலை வழக்கின் மீதான சந்தேகத்தின் பேரில் மாசிலாமணியை (பார்த்திபன்) போலீஸ் கைது செய்கிறது. அவ்வப்போது தனக்குள்ளேயே பேசிக்கொண்டு, தன்னிலை மறக்கும் மாசிலாமணி, தொடர்பின்றி முன்பின் உரையாடுகிறார். போலீஸ் விசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் அதிர்ச்சிகரமான பதில்களே ஒத்த செருப்பு.

12:00:15 on 19 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார் என்பவர், “இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா!”என்றும் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

11:30:12 on 19 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.28,632க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமிற்கு ரூ.21 குறைந்து ரூ.3,579க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 காசுகள் குறைந்து ரூ.49.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

10:55:01 on 19 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரிகள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஈடுபட்டுள்ளன.

10:30:01 on 19 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பெஞ்சமின், ராஜலட்சுமி உள்ளிட்ட நால்வரை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டு, தோப்பு வெங்கடாசலம், குமரகுரு உள்ளிட்டவர்களை அமைச்சராக்க எடப்பாடி முடிவெடுத்திருந்தாராம். அவர்களை நீக்கினால் அவர்களும், மேலும் சிலரும் தி.மு.க.விற்கு மாறிவிட்டால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என உளவுத்துறை கூறியதாக சொல்லப்படுகிறது.

09:59:51 on 19 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

புதுக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைந்துள்ள இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அந்தப் பள்ளியையே இடிக்கச் சொல்லியுள்ளனர். அந்த இடத்தில்தான் கோயில் கட்ட வேண்டும் என்று கடவுளே தங்களிடம் கேட்டுக்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

09:27:01 on 19 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தூத்துக்குடியில் மூன்றே மதங்களில் 19 கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததால் காவல்துறையினர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் அடுத்தடுத்து கொலை சம்பவங்களில் ஈடுபட்ட கொலையாளிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பியபோது வழுக்கி விழுந்து கைகால் முறிந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

09:25:01 on 19 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல், நேரடி ராணுவ தாக்குதல் உள்பட வெவ்வேறு வகையான தாக்குதல்களுக்குரிய திட்டங்களை டிரம்பிடம் ராணுவ தலைவர்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு டிரம்ப் மறுத்துவிட்டதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

08:57:02 on 19 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, அடையார், குரோம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

08:27:01 on 19 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 19 Sep

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலெட்சுமி அறிவித்துள்ளார். அதேபோன்று திருவள்ளூரிலும் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் மகேஷ்வரி அறிவித்துள்ளார். விடிய விடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:41:37 on 19 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.56 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.77 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:38:00 on 19 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜகவினரோடு நெருக்கமாக இருப்பவர்களுடனும் நெருக்கத்தை ரவீந்திரநாத் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் போன்லெஸ் பீஸ் என்கிற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அது குறித்து என்ன என்று பார்த்த போது ரவீந்திரநாத்தை அப்படி கூறி திமுகவினர் மட்டும் அல்லாமல் பலரும் அழைத்து வருவது தெரியவந்துள்ளது.

06:55:01 on 19 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

ஜப்பானில் நாட்டையே உலுக்கிய 5 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி தாய்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ப்புத் தந்தை மீதான வழக்கு அக்டோபர் 1ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

05:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள் தொடர்பான ஆய்வில் பல வகையான கேள்விகள் பெண்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. 5,000 பெண்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையில் 55% பேர் பணியிடங்களில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து புகாரளிப்பதால் தன்னுடைய வாழ்க்கைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

04:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களிலேயே அதிக பேட்டரி திறனை பெற்ற ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையிலான ஸ்மார்ட் போன்களில் Galaxy M30s போனே அதிக திறன்மிக்க பேட்டரியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

03:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இரவு தூங்குவதற்கு முன் முகத்தை வெந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும். பின்பு ஆமணக்கு எண்ணெய்யை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவிட்டு உறங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உங்கள் முகத்தில் கருகருவென மீசையும், தாடியும் வளர தொடங்கிவிடும். கருஞ்சீரக எண்ணெய்யையும் நீங்கள் முகத்தில் தேய்க்க பயன்படுத்தலாம்.

02:55:01 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள சமையலர், கார்பெண்டர், சுகாதாரப் பணியாளர், பிளம்பர், பெயின்டர் போன்ற 900க்கும் மேற்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

01:55:01 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த வருடம் சுமார் 5000 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. திருப்பூரில் தற்போது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை என்பது சுமார் 60% அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள்.

12:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தியருக்கு ஏற்படும் பாதிப்பை பொறுத்தவரை, எண்ணெய் உற்பத்தி எத்தனை நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமையும். ஆலையில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சில நாட்கள் ஆகும் என்று சவுதி தெரிவித்துள்ளது. அதிக நாட்கள் ஆக ஆக எண்ணெய் விலை உயரும் என்பதால் மேலதிக பாதிப்புகள் ஏற்படும்.

11:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை பீச் ஸ்டேஷனில், சுமார் 20 மாணவர்கள் கைகளில் கத்தியுடன் நேருக்கு நேராக மோதிக்கொள்ள, இதனைப் பார்த்த பயணிகள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். தகவல் அறிந்து ரெயில்வே காவல்துறையினர் வரும்போது மாணவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.

10:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க Behind Woods News

சுஜா வருணித்தாவின் கணவர் சிவகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், முகென் ஒரு கறுப்புக் குதிரை என்றும் அவர் அமைதியாக பிக்பாஸ் டைட்டிலை கொத்திக் கொண்டு போகப் போகிறார் என்றும் என் இதயம் சொல்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

09:57:02 on 18 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

பிகில் படத்தில் விஜய்க்கு நாயகியாக மாளவிகா மோகனன் இணைந்திருக்கிறார். இவர் பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்தவர். 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் பிஹைண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச கவனம் பெற்றார்.

08:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மத்தியப்பிரதேசத்தின் ரஹ்லி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ஷ்யாம் லால் யாதவ் (74) அவருக்கு 2014ஆம் ஆண்டு தலையில் அடிபட்டது. அதன் பின் நகம் போன்ற ஒன்று தலையில் முளைக்கத் தொடங்கியது. ஒவ்வொரு முறை சிகையலங்காரக் கலைஞரிடம் செல்லும் போது அதை நறுக்கிவிடுவது வழக்கம். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே சென்றது.

08:25:01 on 18 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

இனிப்பும், கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை. எல்லோரது வாழ்க்கையிலும் கசப்பான இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்யும். அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது. பெரும்பாலான பெண்கள், ‘திருமணத்திற்கு முந்தைய தங்களது கசப்பான அனுபவங்களை, திருமணத்திற்கு பின்பு கணவரிடம் சொல்லலாமா? கூடாதா?’ என்று குழப்பம் அடைகிறார்கள்.

07:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

”நேரு ஒரு பெண் பித்தர். அவர் பிரிட்டிஷாருடன் இணைந்து நாட்டை துண்டாக்கியவர். அவரது குடும்பமே இச்சையை விரும்பக் கூடியது. அதனால் தான் ராஜிவ், இத்தாலியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார்” என உ.பி.யைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ.வான விக்ரம் சைனி பேசியுள்ளது, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

07:30:20 on 18 Sep

மேலும் வாசிக்க தினமலர்

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மருத்துவர்களிடம் காங்கிரஸ் கட்சியினர், ராஜேந்திர பாலாஜிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சையளிக்கும்படியும் மனு அளிக்கச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

06:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் வடமாவட்ட துறைமுகங்களில் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

06:29:46 on 18 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”தேனி மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து சேர்நததாக புகார் வந்துள்ளது. வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை புகார்தாரர் தந்துள்ளார்” என்று மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

06:07:23 on 18 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பாஜக எப்போது பிரச்சினைகளில் சிக்குகிறதோ அப்போது மட்டும் பேட்டி அளிக்கிறார் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார். மேலும் அவர், ”பேனர் விவகாரத்தில் ரஜினி கருத்து சொன்னாரா? ஏன் அதுகுறித்து அவர் வாய் திறக்கவில்லை? தமிழக மக்களுக்குத் தேவையான செய்திகளுக்கு அவர் வாய் திறக்க மாட்டார்.” என்றார்.

05:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள் 11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சரவை அறிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

05:27:01 on 18 Sep

மேலும் வாசிக்க தினகரன்

தேனி மாவட்டம், கானாவிலக்கில் உள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இக்கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவன் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

05:00:10 on 18 Sep

மேலும் வாசிக்க விகடன்

1884 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜா உடையாரின் அம்பா விலாஸ் அரண்மனையில் தான் முதல் முதலில் மைசூர் பாகு தயாரிக்கப்பட்டது. இனிப்புப் பாகில் செய்யப்பட்ட பண்டம் என்பதாலும், மைசூரில் செய்யப்பட்டது என்பதாலும், இரண்டையும் சேர்த்து மைசூர் பாகு என்று கூறப்படுகிறது.

04:33:17 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பா.ஜ.க மூத்த தலைவரும் சித்ரதுர்கா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நாராயணசாமி, இரு தினங்களுக்கு முன்னர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக தும்கூர் மாவட்டத்திலுள்ள கோலாரஹட்டி கிராமத்துக்குச் சென்றுள்ளார். அவர் தலித் என்பதால் கிராமத்திற்குள் அவரை அனுமதிக்கவில்லை.

04:00:10 on 18 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தற்போது அரசு அறிவித்துள்ள ஆன்லைன் டிக்கெட்டிங் ஒருங்கிணைப்பு மூலம், ஒரு படத்தின் உண்மையான வசூல் என்ன, அதில் லாபம் எவ்வளவு என்பது தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு காட்சிக்குமே வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதேபோல ஒரு நடிகருக்கான ஓபனிங் என்ன, இயக்குநருக்கான ஓபனிங் என்ன என்பது துல்லியமாக வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

03:30:03 on 18 Sep

மேலும் வாசிக்க தினமணி

பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாகச் சொன்னார். காந்தி, தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பினார். பெரியாருக்கு திராவிட தென்னிந்தியா போதுமானதாக இருந்தது.

03:00:11 on 18 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ராஜபாளையத்தை அடுத்துள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் மாடசாமியை 4 ஆண்டுகளுக்கு முன் மணந்தார் ஸ்டெல்லா மேரி, பொறியியல் படித்திருந்தாலும், சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார் மாடசாமி. ‘படித்துவிட்டு விவசாயம் பார்க்கிறாரே!’ என்ற கோபத்தில் ஸ்டெல்லா மேரி தற்கொலை செய்துகொண்டார்.

02:25:01 on 18 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

மீண்டும் 2ஜி வழக்கை முதலில் இருந்து விசாரிக்குமாறு அனைத்து 2ஜி தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கவுள்ள நீதிபதி அஜய்குமார் குஹாரிடம் சிபிஐ கோரிக்கை வைக்கக் கூடும் என்று டெல்லி உயர் வட்டாரத்தில் வலுவான பேச்சிருக்கிறது.

02:00:06 on 18 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோவையில் ரவுடி சுந்தர்ராஜன் என்பவருடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவரது கூட்டாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் காவல் நிலையத்தில் உள்ள லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது தனது கூட்டாளிகளிடம் சுந்தர்ராஜன் பேசிய பேச்சுத்தான் அவர் கொலை செய்ததை அம்பலப்படுத்திவிட்டது.

01:27:01 on 18 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் பொதுவான மொழி இருந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

01:00:15 on 18 Sep

மேலும் வாசிக்க தினகரன்

ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, அவருடைய மனம் நேர்விதமாகச் சிந்திக்கிறது, அவர் தினசரிவாழ்க்கையின் கவலைகள் மற்றும் அழுத்தங்களை மறந்துவிடுகிறார். குறிப்பாக, வெளியே சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஒரு ஜாலியான விஷயம்; இதனால் பிறருடன் சமூகரீதியில் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது, இது ஒருவருடைய மனோநிலையை மேம்படுத்துகிறது.

12:29:43 on 18 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

பிக்பாஸ் சீசன் 3 விரைவில் 100வது நாளை எட்டவுள்ளது. இறுதி நாட்கள் மிக அருகில் வந்துவிட்டன. வெற்றியாளரை மக்களின் ஓட்டுகள் தான் தீர்மானிக்கும் என்றாலும் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

11:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3611க்கும், சவரன் ரூ.28,888க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

11:32:25 on 18 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அரசுப் பள்ளிகளில் விளையாட்டு, திறன் மேம்பாடு, கற்றலை மேம்படுத்தும் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் தாமதம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11:30:13 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அயோத்தி வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இடம் பெற்றுள்ள நிலையில் அவர் நவம்பர் 7ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தமது காலத்திற்குள் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்று ரஞ்சன் கோகய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

11:00:04 on 18 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆம்பூரைச் சேர்ந்த நீலம்பாரி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த காதல் ஜோடி, போளுர் சப்தகிரி மலை மீது ஏறி, அதன் உச்சியிலிருந்த குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

10:25:01 on 18 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே இரவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் காரை மறித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசிய பின் அமைச்சரின் கார் விடுவிக்கப்பட்டு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னியாகுமரி தோவாளை சென்றார்.

10:00:04 on 18 Sep

மேலும் வாசிக்க தினமலர்

”சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஆனால் நாங்கள் அதற்கு பலியாக மாட்டோம். இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது” என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

09:27:01 on 18 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

ஒடிஸா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அஸ்திரா ஏவுகணை, நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

08:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க தினமணி

"முன்பெல்லாம் ஒரு நபர் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்ததும் துறவியாக மாறி ஆன்மிக பாதைக்கு திரும்புவார். ஆனால் இப்போது மக்கள் காவி அங்கி அணிந்துகொண்டு போலி மருந்து விற்கிறார்கள். காவி அங்கிகளில் கற்பழிப்புகள் நடக்கிறது. கோவில்களில் கற்பழிப்புகள் நடக்கிறது. இதுதான் நமது மதமா?" என திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

08:27:02 on 18 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 2 லாரிகளில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெசல் கிராமத்தில் வாகன சோதனையின் போது 25,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தில் 500 கேன்களில் எரிசாராயத்தை கடத்திய ஓட்டுநர் உட்பட 4 பேர் தப்பியோடியுள்ளனர்.

07:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.26 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.57 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:38:51 on 18 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஐஸ் கட்டிகள் உடல் வலியை நீக்க சிறந்த நிவாரணி. குறிப்பாக முதுகு வலி, முட்டி வலி என உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டிருந்தாலும் ஐஸ் கட்டிகளால் மசாஜ் செய்ய பறந்து போகும். ஐஸ் மசாஜ் செய்ய வீட்டில் ஃபிரிஜ்ஜில் வைக்கக் கூடிய ஐஸ் கட்டிகளே போதுமானது.

05:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், புதுவிதமான உணவுக் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் வீரர்களுக்கு விதித்துள்ளார். அதன்படி, அவர்கள் பிரியாணி, எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுப்பொருட்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகள் உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

04:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சோனியும் - டிஸ்னியும் இணைந்து புதிய ஒப்பந்தம் போடத் தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தில் டிஸ்னி எதிர்பார்த்த 50 சதவிகித ஷேர் கிடைக்கவில்லை என்றாலும் 30 சதவீதம் கிடைத்துள்ளதால் இந்த ஒப்பந்தம் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே அளவான அளவிலான சர்கரையை மட்டும் பயன்படுத்துங்கள்.

02:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கர்நாடகாவில், வடகனரா மாவட்டம், கார்வாரில் இயங்கி வருகிறது எம்.இ.எஸ். சைத்தன்யா கல்லூரி, இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் ஆர்.எம். பட். இவர் மிகவும் கண்டிப்பானவர் என கூறப்படுகிறது. இவர் மாணவர்கள் கல்லூரிக்கு செல்போன் கொண்டு வர முற்றிலுமாக தடை விதித்துள்ளார்.

01:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க Behind Woods News

அரைத்த பீட்ரூட் விழுது மற்றும் கடைகளில் இயற்கையான முறையில் கிடைக்ககூடிய மருதாணி பவூடர், இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும் பின்னர் அதனை தங்களது தலைமுடியில் தேவைபட்ட இடத்தில் அப்ளை செய்த பின், 20 நிமிடம் கழித்து பார்த்தால் இயற்கை முறையில் ஹேர் கலர் கிடைத்திற்கும்.

12:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

”சிஸ்டம் மாறவேண்டும் என்று ரஜினி சார் சொல்லிக்கொண்டு வருகிறார். உங்கள் படம் மூலமாக சிஸ்டத்தை மாற்ற முயற்சி செய்யவேண்டும். இதுபோல அனைத்து பெரிய நடிகர்களும் தங்கள் படங்களுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று கூறவேண்டும்” என ரஜினிக்கு நடிகர் ஆரி கோரிக்கை விடுத்துள்ளார்.

11:55:01 on 17 Sep

மேலும் வாசிக்க தினமணி

நடிகை யாஷிகா ஆனந்த் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார். ”என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என கூறியுள்ளார்.

10:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, “ ரஷ்யாவின் விளாடிவோஸ்தக் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த போது, ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து அவர் என்னிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.

09:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

டெல்லியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்துள்ளது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. நம்மால், நம்முடைய இலக்கை எட்ட முடியுமா? அவர்கள் அவநம்பிக்கையடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

08:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி எல்.என்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரைச்சேர்ந்த ரோஷன் பானுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து ரோஷன் பானுவுடன் தகாத உறவு வைத்திருப்பதாக கூறி அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

08:27:01 on 17 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை கிளை நூலகம். இங்கு அமைதியான முறையில் நடக்க இருந்த பெரியார், அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே விவாதப்பொருளாக மாறியுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இதே இடத்தில் விழா நடந்து வந்துள்ளது.

07:57:02 on 17 Sep

மேலும் வாசிக்க விகடன்

ஹவுத்தி ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "எங்களது நீண்ட கைகள் நாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என சவுதி அரசுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம்" எனக் கூறியுள்ளது. ஏமனின் கிளர்ச்சியாளர்களின் இந்த மிரட்டலால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

07:27:01 on 17 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆர்.டி.ஜி.எஸ். மூலம் ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செய்ய முடியும். தற்போது ரிசர்வ் வங்கி என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். முறையிலும் ஆன்லைனில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

06:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மேலும் வாசிக்க