View in the JustOut app
X

ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஜேம்ஸ்பாண்டின் 25வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்டின் 25-வது படத்திற்கு ‘நோ டைம் டூ டை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல் கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கிறார்.

05:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கர்நாடகாவில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கெலரவப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 568 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது விநாடிக்கு 762 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 640 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

05:25:02 on 22 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அதிகமாக மாசுபட்ட நீர், சில நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை மூன்றில் ஒரு பங்குவரை குறைத்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதனால், மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படும். எனவே, உலக நாடுகள் உடனடியாகத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

04:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க விகடன்

இங்கிலாந்தின் எல்விங்டன் விமான தளத்தில் உள்ள ஓடுபாதையில் மணிக்கு 280.5 கிமீ வேகத்தில் சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த நீல் சாம்பெல். முன்னதாக 1995ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ஃப்ரெட் எனபவர் 268.8 கிமீ வேகத்தில் சைக்கிளை செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது.

04:25:01 on 22 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கடந்த இரண்டு ஆண்டுகளில், பங்குகள் விற்பனை இலக்கை மோடி அரசு விஞ்சியுள்ளது. உதாரணமாக 2018-19ஆம் ஆண்டில் அரசின் இலக்கு ரூ.80,000 கோடியாக இருந்த நிலையில், சற்றேறக்குறைய ரூ.85,000 கோடியை திரட்டிவிட்டது. எனவே, நடப்பு நிதியாண்டுக்கான இலக்கும் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டவுன்லோடு வேகம், அப்லோட் வேகம், இணைய வேகம் ஆகியவற்றில் எந்நெந்த நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வோடபோன் நிறுவனத்தை வீழ்த்த முடியாமல் இரண்டாம் இடத்திலேயே திணறி வருகிறது.

03:25:01 on 22 Aug

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நியூசிலாந்து அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீசிய விதம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

02:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க Behind Woods

சோமாலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோஹர் நகரின் ஷிம்பீரோ கிராமத்தில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இந்த மோதல் சம்பவத்தின் இறுதியில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

02:26:01 on 22 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவது உறுதியாகி விட்டது. ஆனால் அது காதல் கல்யாணம் இல்லையாம், பெற்றோர்கள் பார்க்கும் நபரை தான் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதனை ஒரு பேட்டியில் அவரே தெரியப்படுத்தியுள்ளார். அவரது பெற்றோர் தமன்னாவிற்கு தற்போது தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர்.

02:25:02 on 22 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

அக்‌ஷராவைப் பாதித்த படங்களின் பெயர்களை கேட்டபோது, கமல்ஹாசனின் வெற்றிப் படங்களை பட்டியலிடும் அவர், ”இதில் குறிப்பிட்ட ஒன்றை சொல்வது கடினம், ஆனால் அப்பா மற்றும் ரஜினி அங்கிளை வைத்து, ஒரு படத்தை இயக்க நான் விரும்புகிறேன்” என்று உற்சாகமாகிறார்.

01:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க ie தமிழ்

விழாக்கால சிறப்பு சலுகையாக எஸ்பிஐ குறைந்த வட்டியிலான கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் ஆகிய பிரிவுகளில் குறைந்த வட்டியிலான கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

01:25:01 on 22 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டெல்லி-மும்பை வழித்தடத்தில் பயண நேரத்தில் 5 மணி நேரம் குறைக்கப்படும் என்று மேற்கு ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில், ராஜ்தானி ரயிலின் வேகம் 130 கிமீ வேகத்தில் இருந்து 160 கிமீ வேகமாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது.

12:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பெரியாற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மக்கள் தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

12:25:01 on 22 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

‘பாரஸ் கம்ப்' இந்தி ரீமேக்கான ‘லால் சிங் சட்டா' படத்தில் தான் அமீர் கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. ‘பாரஸ்ட் கம்ப்' படத்தில், பப்பா என்ற கதாபாத்திரத்தில் மைகெல்டி வில்லியம்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். கம்ப் கதாபாத்திரம் ராணுவத்தில் இருக்கும் போது அவரது நண்பனாக இவர் தோன்றுவார்.

11:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்
Jobs: IFFCOவில் பணி!

IFFCO எனப்படும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க இன்று மறுத்திருந்த நிலையில், அவர் சிபிஐ அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார் .

10:57:38 on 21 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

எலும்பு தேய்மான பிரச்சனைக்கு வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

10:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை என்று சென்னையில் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், முழுக்க முழுக்க யாரையோ திருப்திபடுத்த மற்றும் அரசியல் காரணங்களுக்காக எனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

10:33:24 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

இத்தாலி நாட்டில் சார்டினியன் கடற்கரையில் மணல் எடுத்ததற்காக 2 சுற்றுலா பயணிகளும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் ஓராண்டு முதல் 6 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

10:25:02 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிதம்பரம் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர். அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது காரில் அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

10:18:28 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

கோவையில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இந்த கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தவர்களில் 4 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.

09:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

துபாயில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக இருக்கும் ஒரு பொய்யான பிம்பத்தை நம்பி மக்கள் செல்கிறார்கள். அங்கு கடற்கரைகள், மதுபான விடுதி இருக்கும். இரவு நேர மது விடுதியில் தாராளமாக ஆல்கஹால் அருந்தலாம் என நினைக்கிறார்கள்.

09:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகி யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு பேசும்போது, இப்படத்திற்காக மேக்கப் போடுவதற்கு 3 மணி நேரம் ஆகும் எனவும், அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம் எனவும் தெரிவித்தார்.

09:00:16 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்த, கல்லூரி மாணவரான ஜெயராஜ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் `உன்னை நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, உன்னை மறக்கவும் முடியவில்லை” என்று நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.

08:35:01 on 21 Aug

மேலும் வாசிக்க விகடன்

ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்டு வந்தநிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என் மீது எந்த தவறும் இல்லை என்றும், எஃப்.ஐ.ஆரில் எனது பெயரே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் நான் தலைமறைவாக மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

08:27:28 on 21 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ளார். அதன் ஷூட்டிங்கில் பிசியாகவும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தோஹாவில் நடந்த ஒரு SIIMA விருது விழாவில் அவரது ஹாட் உடை தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

08:18:02 on 21 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ளார். அதன் ஷூட்டிங்கில் பிசியாகவும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தோஹாவில் நடந்த ஒரு SIIMA விருது விழாவில் அவரது ஹாட் உடை தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

08:15:00 on 21 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

யோகி பாபு, யாஷிகா ஆனந்த நடித்துள்ள ஜாம்பி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு இடத்தில் ஜாம்பிக்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போல் டிரைலர் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்றும் படக்குழு ட்ரெய்லரில் தெரிவித்துள்ளது.

08:11:10 on 21 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக ஏற்பட்டுள்ள சிக்கலைத் தொடர்ந்து, மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

07:57:01 on 21 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நம்மூர் கடைகளில் எல்லாம் உணவுப்பொருட்களை பழைய நியூஸ் பேப்பர்களில் மடித்து கொடுப்பார்கள். அதற்காக சில பழைய நியூஸ் பேப்பர்களை எடைபோட்டு வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் அதில் உள்ள கெமிக்கல்கள் உணவுப்பொருட்களில் கலந்து உடலுக்கு எதிர்மறையான ஆபத்துகளை உண்டாக்குவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

07:42:53 on 21 Aug

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான அமெ சட்டர்த்வெய்ட், அணியின் சக வீராங்கனையான லியாவுடன் ஒன்றாக வசித்து வந்தார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் சட்டர்த்வெய்ட், தான் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். நியூசிலாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு.

07:39:02 on 21 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான அமெ சட்டர்த்வெய்ட், அணியின் சக வீராங்கனையான லியாவுடன் ஒன்றாக வசித்து வந்தார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் சட்டர்த்வெய்ட், தான் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். நியூசிலாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு.

07:36:01 on 21 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து பிரிங்கா சோப்ராவை நீக்க வலியுறுத்தி ஐ.நா சபை தலைமைக்கு பாகிஸ்தானின் மனித உரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்ரீரின் எம். மசாரி கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கியதற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்திருந்தார்.

07:25:59 on 21 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

துணிசியா நாட்டின் துணிஸ் என்ற பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த மூன்று நாட்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து சிறுவனிடம் மனநல மருத்துவர் நடத்திய விசாரணையில் சிறுவன் சுய இன்பத்துக்காக ஊசியை அந்த இடத்தில் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளான்.

07:20:26 on 21 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சென்னையின் தரமணி, பெசன்ட் நகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு, ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

07:18:02 on 21 Aug

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னையின் தரமணி, பெசன்ட் நகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு, ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

07:15:01 on 21 Aug

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.12,999 என்றும், 6 ஜி.பி.ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 23ஆம் தேதி துவங்குகிறது.

07:09:33 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவைச் சேர்ந்த சுமேத் மன்னார் (27) அமெரிக்காவின் ஓரிகன் பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர் அங்குள்ள கிரேடர் ஏரிக்கு கடந்த ஞாயிற்றுகிழமை சென்றுள்ளார். இந்த ஏரியின் ஜம்பிங் ராக் என்ற இடத்தில் இருந்து குதித்தார். ஏரியில் குதித்த சில நிமிடங்கள் ஆன பிறகும் அவர் மேற்பரப்புக்கு வரவில்லை.

07:02:54 on 21 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

மதுரையைச் சேர்ந்த கேசவமூர்த்தி, அவரது வீட்டருகே இருந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷிடம் நண்பனாக பழகிய கேசவமூர்த்தி, உன்னுடைய மனைவி என்னோட காதலி எனக் கூறியுள்ளார்.

06:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

சாலையின் ஓரத்தில் சிறுத்தை ஒன்று அடிபட்ட நிலையில் உள்ளது. சிறுத்தையைக் கண்ட பொதுமக்கள் அதை அருகில் சென்று பார்க்கின்றனர். கூட்டத்தில் ஒருவர் சிறுத்தைக்கு மிக அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயல்கிறார். இதனால் கடுப்பான அந்தச் சிறுத்தை ஒரே பாய்ச்சலில் அவரை கீழே தள்ளித் தாக்க முயல்கிறது.

06:50:25 on 21 Aug

மேலும் வாசிக்க விகடன்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது. இதனிடையே ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (ஆக.23) நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

06:41:58 on 21 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்பவருக்குச் சொந்தமான நகைக் கடையில், தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை வைத்து நூதனமாகத் திருட்டு செயலில் ஈடுபட்ட செல்வி மற்றும் ரத்னா ஆகிய இரு பெண்களை போலீசார் கைது செய்து கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

06:35:02 on 21 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நமிபியா-பொட்ஸ்வனா இடையிலானா சர்வதேச டி-20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நமிபியா அணியின் ஜேபி கொட்ஸி 43 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்களை விளாசினார். இதில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இவர் 43 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக சதமாக இது பதிவானது.

06:15:01 on 21 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள புதுவைப் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (54). இவரது மனைவி கீதா(53). இந்த தம்பதியின் மகள் நயனா(24). இந்நிலையில், காதலனுடன் தலைமறைவான நயனாவைப் பேசி அழைத்து வந்த அவர்களது பெற்றோர், நயனாவைக் கொலை செய்து விட்டு, அவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

05:55:02 on 21 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தான் நடந்து கொண்டதாகவும் கூடுதலாக நிகழ்ச்சி குழுவிடம் பணம் கேட்கவில்லை என்றும் மதுமிதா தெரிவித்தார். மேலும் அவர், தன் மீது இவ்வாறான புகார் பதிவாகியிருந்தால் அதற்கான விளக்கத்தை அளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

05:35:02 on 21 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

கடன் வாங்கியாவது விவசாயம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் கொண்ட கேரக்டரில் நடித்துள்ளார் விக்ராந்த். ஒரு விலங்கைப் புதிதாகத் தன் குடும்ப உறுப்பினராக ஆக்கிக் கொள்வது, அதன் இருப்பிடம் இது கிடையாது எனத் தெரிந்ததும், அதனுடைய சொந்த இடத்தில் கொண்டுபோய் விடத் தவிப்பது என படத்துக்காக தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுத்துள்ளார்.

05:32:15 on 21 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நிகோபார் தீவுகளில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. பிற்பகல் 2.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

05:24:59 on 21 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பொது விநியோகம் குறித்த தரவுகளுக்கான ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதாவின் மாணவர் என்ற முறையில், ஜெயலலிதா 9 முறை சிந்தித்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 16 முறை சிந்திப்பார் எனக் கூறியதாகவும், அதனை சிலர் கிண்டல் செய்து பெரிதுபடுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

05:15:02 on 21 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, 10,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு பிஸ்கட்டுக்கு, 5 முதல் 12% வரையிலான வரி, ஜி.எஸ்.டி-யின் கீழ் 18% அதிகரிக்கப்பட்டதன் காரணமாக விலை அதிகரித்து விற்பனையில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக பார்லே நிறுவனம் கூறியுள்ளது.

04:57:02 on 21 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஐம்பது மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

04:54:21 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லி தாகூர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, இளைஞர் ஒருவர் இரவு 11 மணியளவில், யாரும் இல்லாத அந்த ரயில் நிலைய நடைபாதையில் மிகவும் சாதரணமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் வந்த ரயில் முன் படுத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

04:50:35 on 21 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

1990களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும், நடன நடிகையாகவும் இருந்தவர் விசித்ரா. சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரையிலும் நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு மைசூரில் செட்டிலானார். அங்கேயே ஓட்டல் தொடங்கினார். 18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வந்திருக்கிறார்.

04:35:01 on 21 Aug

மேலும் வாசிக்க தினமலர்

உத்தரகாண்ட் மாநிலம் தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரகாசி மாவட்டம் மோரி பகுதியில் இருந்து இன்று காலை மோல்டி பகுதிக்கு ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ஹெலிகாப்டர் மோல்டியை நெருங்கியபோது மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

04:15:02 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பட்டியலின சமூக மக்களுக்கு எதிராகச் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால், பாலாற்றில் உள்ள பாலத்திலிருந்து கயிறு கட்டி சடலத்தைக் கீழே இறக்கி தகனம் செய்யும் அவலநிலை அரங்கேறியிருக்கிறது.

03:55:02 on 21 Aug

மேலும் வாசிக்க விகடன்

பாதி வழியில் இறங்கிய ப.சிதம்பரம் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை என அவரின் கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சிதம்பரத்தின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் இதை தெரிவித்தார். ப.சிதம்பரம் இதுவரை எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.

03:39:02 on 21 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பாதி வழியில் இறங்கிய ப.சிதம்பரம் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை என அவரின் கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சிதம்பரத்தின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் இதை தெரிவித்தார். ப.சிதம்பரம் இதுவரை எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.

03:36:01 on 21 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான 9 ஆண்டு கால பகையை பழித்தீர்க்கவே, அவரை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், சிதம்பரத்தை கைது செய்திருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகளிடம் அமித் ஷா கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

03:15:02 on 21 Aug

மேலும் வாசிக்க தினமணி

உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ”சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை அழைத்தபோதெல்லாம் விசாரணைக்கு நான் ஆஜராகியுள்ளேன். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ள நான் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை. எஃப்.ஐ.ஆரில் பெயர் குறிப்பிடாத நிலையில், முன்ஜாமீன் மறுக்கப்பட்டது ஏன்?” என குறிப்பிட்டுள்ளார்.

02:57:01 on 21 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

பள்ளியின் பெயரில் சர்வதேசம், குளோபல் என்றெல்லாம் வைத்திருந்தாலும் கூட சில விஷயங்களில் மட்டும் நமது பழைய கலாச்சாரத்தை பறை சாற்றும் வகையிலேயே மாணவ, மாணவிகளுக்கு விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சில விதிமுறைகளை, மாணவ, மாணவிகள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோரும் வெறுக்கிறார்கள்.

02:35:02 on 21 Aug

மேலும் வாசிக்க தினமணி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர் எனவே வழக்கை சட்டரீதியாகவே அவர் சந்திப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

02:15:03 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

உடல் எடை குறைப்பிற்கு ஏற்ற உணவான இந்த கோதுமை ரவையில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது. இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மையும் இருப்பதால் நாட்பட்ட நோய்கள் மற்றும் சரும பிரச்னைகள் ஏற்படாது.

01:57:01 on 21 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

01:39:31 on 21 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமலாக்கத்துறை , சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் பாஜக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று ட்விட்டரில் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

01:25:55 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு தன்னாட்சி கொண்ட ஒரே விஜிலென்ஸ் அமைப்பு அமைக்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் விஜிலென்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக முப்படைகளின் கர்னல் அந்தஸ்திலான 3 அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:20:58 on 21 Aug

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோழி பாண்டியனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

01:03:08 on 21 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் மும்பையில் கடந்த 2007ம் ஆண்டு இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரால் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்து வந்தது.

12:55:56 on 21 Aug

மேலும் வாசிக்க தினமணி

ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் மூன்று விருதுகளை பெற்று தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.

12:48:44 on 21 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி நாளை முதல் டெஸ்ட்டில் விளையாட உள்ள நிலையில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார். இந்திய அணி 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்டில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சரித்திர சாதனை படைத்தது.

12:29:31 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.28,808க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்க விலை ரூ.3 குறைந்து ரூ.3,601 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

12:23:16 on 21 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாம் வாழக்கூடிய இடம், சுற்றுச்சூழலுடன் மிகவும் இணைந்தும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டும் இருக்க 'மொபைல் காடு' காக்கிறது. அந்தவகையில், நெதர்லாந்தின் ஐன்ட்ஹோவன் (Eindhoven), பின்லாந்தின் தம்பேர் (Tampere) மற்றும் இத்தாலியின் ஜெனோவா (Genova) ஆகிய 3 இடங்களில் ஆரம்பகட்ட சோதனை முறையில் காடுகள் உருவாக்கும் பணிகள் தொடர்ந்தன.

12:17:42 on 21 Aug

மேலும் வாசிக்க விகடன்

'ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை வேட்டையாட முயல்வது வெட்கக்கேடு, உண்மையை பல நேரங்களில் கோழைகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை' என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

12:05:07 on 21 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காததால் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

11:55:33 on 21 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கோமாளி உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ 25 கோடி வசூலை கடந்துள்ளது.

11:46:24 on 21 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

பேஸ்புக் கணக்குகள் தொடங்குவதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று கோரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற பேஸ்புக் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

11:25:23 on 21 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

10:58:01 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்களால் மீண்டும் ஆடிப்போயிருக்கிறது ஆப்கானிஸ்தான். தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரும் களம் இறங்கியுள்ளதால் திருமண மண்டபம், மருத்துவமனை என தாக்குதல் கலாச்சாரம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது.

10:50:52 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு 4வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் விசாரணைக்கு செல்லாததால் ப.சிதம்பரம் வீட்டிற்கு மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றுள்ளனர்.

10:15:49 on 21 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர் இவனோப். இவர் அங்குள்ள கடற்கரை பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் 50 வருடங்களுக்கு முன் எழுதிய வினோத கடிதம் கிடைத்தது.

09:57:01 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் பலர் தங்கள் விடைத்தாளில் மறைமுக குறியீடுகளை எழுதியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்காக தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

09:39:02 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் பலர் தங்கள் விடைத்தாளில் மறைமுக குறியீடுகளை எழுதியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்காக தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

09:36:01 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

சூரிய குடும்பத்திற்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகளான மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர ஆகியோரே இந்த புதிய கோள் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

09:15:02 on 21 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சைய் (Shiey) என அழைக்கப்படும் நபர் ஒருவர் உலகின் பல உயரிய கட்டிடங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சங்களுக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி அனாயசமாக நடத்தல் போன்ற காரியங்களைப் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

08:55:02 on 21 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் உடல்நலக்குறைவால் காலமானார். மத்தியபிரதேச தலைநகர் போபாலில் உள்ள நர்மதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

08:39:02 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் உடல்நலக்குறைவால் காலமானார். மத்தியபிரதேச தலைநகர் போபாலில் உள்ள நர்மதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

08:36:01 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி தனியார் லாரிகளை பிடித்து உரிமையாளர்கள் மீது தண்ணீர் திருட்டு வழக்கு பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

08:18:01 on 21 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி தனியார் லாரிகளை பிடித்து உரிமையாளர்கள் மீது தண்ணீர் திருட்டு வழக்கு பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

08:15:01 on 21 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கடந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகள் பாதித்த மூன்று மாநிலங்களுக்கு 4,432 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதிகள் அனைத்தும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. இந்த நிலையில், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

07:35:02 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்துக்குள் பாகிஸ்தானை சேர்ந்த 5 ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

07:15:01 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய மத்திய அரசு, தனது முடிவை காஷ்மீர் மக்களும், உலக நாடுகளும் வரவேற்பதாக கூறியது. ஆனால், சீனாவோ இந்தப் பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கே கொண்டுபோய்விட்டது. அதாவது இந்தப் பிரச்சனை இப்போது சர்வதேச பிரச்சனையாகி இருக்கிறது என்பதே உண்மை.

06:55:02 on 21 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

ஷில்பா ஷெட்டி கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இந்நிலையில், விளம்பர நிறுவனம் ஒன்று உடல் எடையை குறைக்கும் மருந்து விளம்பர படத்தில் நடிக்க ஷில்பாவை ஒப்பந்தம் செய்ய முயற்சித்துள்ளனர். இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் தருவதாகவும் பேசினர். ஆனால் அதில் நடிக்க ஷில்பா ஷெட்டி மறுத்து விட்டார்.

06:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நயன்தாரா நிவின் பாலியுடன் இணைந்து ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ படத்தில் நடித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை கேரளாவின் முக்கியமான பண்டிகை தினமாகக் கொண்டாடப்படும் ஓணம் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

05:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

“எதையுமே திட்டம் போட்டு செய்யக் கூடிய கட்சி திமுக என்பது அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவுக்கு இருக்கும் பெயர். ஆனால் இப்போதைய திமுகவிலும் திட்டம் போடுகிறார்கள். ஆனால் திட்டம் போடுகிறவர்கள் யார், எதற்காகத் திட்டம் போடுகிறார்கள் என்பதுதான் திமுக சீனியர்கள் வட்டாரத்தில் இப்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

05:25:02 on 21 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஜாக்ஸன்வில் பகுதியில் செயல்பட்டு வரும் கடற்படை பயிற்சி மையத்தில், இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. இந்த வேலியை அங்கு வந்த முதலை ஒன்று, ஏறி மறுபக்கம் குதித்துச் சென்றது. இக்காட்சியை கிறிஸ்டினா ஸ்டீவார்ட் என்பவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

04:55:02 on 21 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

150 ஆண்டுகள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து, 1997இல் சீனாவோடு இணைந்தது முதலே ஹாங்காங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்தன. எனவே சமீப நாட்களாக ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்கள் ஹாங்காங்குக்கும் ஏன் சீனாவுக்கும் கூட புதிதல்ல.

04:25:02 on 21 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டெபிட் கார்டு பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில், எஸ்பிஐயின் யோனோ செயலி போன்ற டிஜிட்டல் தீர்வுகள் மூலம் டெபிட் கார்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை எட்ட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

03:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் மழையின்றி விலங்குகளுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டதுடன், தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழைபெய்து வருவதால் வனப்பகுதிகள் பசுமைக்குத் திரும்பியுள்ளன.

03:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

''இந்தியாவின் பொருளாதார மந்த நிலை கவலை அளிக்கிறது. 2018-19ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 6.8 சதவீதமாக இருக்கிறது. 2014-15 நிதியாண்டிற்கு பின் மிகவும் மோசமான சரிவை இந்தியா சந்தித்துள்ளது.” என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

02:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போனுடன் ரியல்மி ஐகானிக் கேஸ் மற்றும் ரியல்மி டோட் பேக் உள்ளிட்டவற்றை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஐகானிக் கேஸ் விலை ரூ.399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 21ஆம் தேதி துவங்குகிறது. ரியல்மி பட்ஸ் 2 விலை ரூ.599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

02:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

உடலுக்கு ஆரோக்கியமான ஜூஸ் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த ஒன்றாக விளங்குகிறது கற்றாழை ஜூஸ். இந்த கற்றாழை ஜூஸில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடித்தால் நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை தருகிறது. நம் உடலில் உள்ள நச்சுகிருமிகளின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

01:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

மேலும் வாசிக்க