View in the JustOut app
X

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.29,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.3,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.49.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:25:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் - கரூர், பழனி - கோயம்புத்தூர், பொள்ளாச்சி - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது.

10:57:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வாடகை பாக்கித் தொகையை வழங்கக்கோரியும், புதிய வாடகை ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

10:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மன அழுத்தம் காரணமாக உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 16 பேர் மன அழுத்தம் காரணமாக இறந்ததாகவும், குறைந்த ஊதியத்தை வழங்கிவிட்டு ஓய்வில்லாமல் பணியாற்றுமாறு நிர்பந்திப்பதே அதற்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

09:57:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

09:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.15 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

09:10:27 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடியில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று செவ்வாய்கிழமை(அக்.15) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

09:07:26 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் ஹனுமனின் புகைப்படமும், Jai Hanuman என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் பெற்ற மாநிலமான தமிழகத்தில் மாநில அரசின் பேருந்துகளில் இதுபோன்று குறிப்பிடப்பட்டுள்ளது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

09:00:12 on 15 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதன் அறிகுறியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. இன்றும், சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

08:59:21 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

OnePlus இப்போது அதன் OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro ஸ்மார்ட்போன்களுக்கான புதிய Android 10 அடிப்படையிலான OxygenOS புதுப்பிப்பை வெளியிடுகிறது. இந்த புதிய மென்பொருள் புதுப்பிப்பு வேறுபட்ட உருவாக்க பதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் முந்தைய பதிப்பில் இருந்த அனைத்து பிழைகளையும் சரிசெய்கிறது.

06:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

புதிய ஐபேட் (iPad 2019) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐபோன் 11 மற்றும் ஆப்பிள் வாட்ச் (Apple Watch Series 5) அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபேட் (2019) iPadOSஇல் இயக்குகிறது. மேலும் 10.2-இன்ச் (2160×1620 பிக்சல்ஸ்) ரெட்டினா ஐபிஸ் டிஸ்பிளே(Retina IPS display) உடன் வருகிறது.

05:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உகாண்டாவில் “கில் த கேஸ்’ (kill the gays) எனும் பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

04:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கோவில், சில ஆண்டுகளாக பெரிய அளவில் பராமரிக்கப்படாத நிலையில், விளையாடுவது, உறங்குவது என அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோவிலை தங்களின் சுய தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

03:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

02:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

விஜய்யின் பிகில் திரைப்படம், சென்சார் குழுவினரால் இன்று(14.10.19) பார்க்கப்பட்டு U/A சர்டிஃபிகேட் பெற்றிருக்கிறது. பிகில் திரைப்படம் U சர்டிஃபிகேட் பெற்றதாக ஒரு சென்சார் சர்டிஃபிகேட் சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது. அது போலியான ஒன்று என்று தெரியாமல் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

01:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த கோபால் கஞ்சு, காமேஸ்வர் ஜங்கு என்னும் இரு இளைஞர்கள் வயிறுவலி காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் முகேஷ் குமார் இருவரையும் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளும்படி பரிந்துரை செய்துள்ளார்.

12:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க Behind Woods News

கைதி படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதில் பிகில் படத்துக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் பிகிலுக்கு முன்னரே தயாராகிவிட்டது கார்த்தியின் கைதி.

11:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், பத்துக்கும் மேற்பட்ட புது புது கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10:55:02 on 14 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த ரெட்லபள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தனா. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

09:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

லட்ச ரூபாய் சம்பளம் என்ற ஆசையில் குவைத்துக்குச் சென்ற சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண் சந்தித்த துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று எய்ம்ஸ் என்ற என்.ஜி.ஓவைச் சேர்ந்த கன்னியாபாபு தெரிவித்தார்.

08:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க விகடன்

அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களின் ஒலிபெருக்கியாக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சாதாரண மக்களை பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை என்றும், மக்கள் பணத்தை பிடுங்கி நாட்டின் பெரும் பணக்கார்கள் 15 பேருக்கு கொடுக்கிறா்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

08:27:01 on 14 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான புயல் ஒன்று தாக்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகனோ நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் உலக புகழ்ப்பெற்ற அதிவேக புல்லட் ரயில்கள் பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

08:00:22 on 14 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனீஷ், தனீஷ், ராஜேஷ், பிரகாஷ் ஆகியோரிடம் தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை ஏஜெண்டுகளிடம் கட்டி, மலேசியாவில் வெல்டர் பணிக்காக சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அங்கு வேலையும் இல்லாமல், உணவும் இல்லாமல் 4 பேரும் தவித்து வந்துள்ளனர்.

07:25:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் கருதப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது பிரதான சர்ச்சையாக உள்ளது. அது பாபர் மசூதி இருந்த இடம் என்றும். அங்கு ஏற்கெனவே இருந்த இந்துக் கோவிலை இடித்துவிட்டோ அல்லது மாற்றி அமைத்தோ மசூதி உருவாக்கப்பட்டது என்றும் சில இந்து அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.

06:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.33% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம், முந்தைய ஜூலை மாதத்தைப் போலவே மாற்றமின்றி 1.08 சதவீதம் என்ற அளவிலேயே இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் 0.33% ஆகக் குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

06:30:05 on 14 Oct

மேலும் வாசிக்க தினமணி

தெலங்கானா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களுக்கு மேலாகப் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலை இழப்பு, அரசின் நடவடிக்கை, மன அழுத்தம் ஆகிய காரணங்களால் தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலைக்கு முயல்வது தொடர்கதையாகி வருகிறது.

06:00:12 on 14 Oct

மேலும் வாசிக்க விகடன்

நீலகிரி, ஈரோடு, கோவை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

05:27:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

விஜய்யின் பிகில் வரும் தீபாவளிக்கு எவ்வளவு சத்தமாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் மட்டும் ரூ.25 கோடிக்கும், டிஜிட்டல் மட்டும் ரூ.20 கோடிக்கும் மொத்தமாக ரூ.45 கோடிக்கு படம் விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.

05:03:17 on 14 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

இந்திய அமெரிக்கப் பொருளாதார வல்லுநரான அபிஜித் பேனர்ஜிக்கு இந்த வருடத்துக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பேனர்ஜியுடன் எஸ்தர் டஃபலோ மற்றும் மைகேல் க்ரெமெருடன் அபிஜித் பேனர்ஜி இந்த பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

04:27:01 on 14 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

விக்ரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரச்சாரம் செய்து முடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று அக்டோபர் 14 அதிகாலை முதல் திமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது.

04:00:11 on 14 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’, இது பேடிஎம், கூகுள் பே போன்ற பல டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் போல செயல்படும். கடந்த ஒரு வருடமாக சோதனை முயற்சியில் இருக்கும் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ இன்னும் 2 மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

03:29:56 on 14 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஜம்மு-காஷ்மீரில் மொபைல் போஸ்ட்பெய்ட் சேவைகள் மீண்டும் தொடங்கியது. கடந்த ஆக.5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் சேவைகள் மற்றும் இணைய வசதிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

02:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனையடுத்து சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

02:27:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, அவர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் பேசிய கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை என சீமான் கூறியுள்ளார்.

01:55:02 on 14 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

”உங்களுக்கும் எனக்கும் நடந்த படம் தொடர்பான உரையாடல்கள் வீடியோவாகவும் ஆடியோவாகவும் இருக்கிறது. அதை நான் வெளியிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பப் பெண்களையும் பாதிக்கும். வெளியிடட்டுமா?” என இயக்குநர் நவீனை மிரட்டும் தொனியில் ட்விட்டர் பதிவிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.

01:29:59 on 14 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் அப்பாவு விடுத்த கோரிக்கையை, உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு, நிராகரித்து விட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளோடு ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

01:12:57 on 14 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் இந்தியாவின் சமூக-கலாச்சார மாலையில் வண்ணமயமான மற்றும் திகைப்பூட்டும் மணிகள்” என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார்.

12:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினமலர்

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான புளோர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ், மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவரது ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்தது.

12:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

தொழில்துறை உற்பத்திக் குறைவு, இறக்குமதி குறைவு, நிதிச் சந்தையில் ஏற்படும் பதற்றமான சூழல் ஆகியவை தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சிக் குறைவை ஏற்படுத்துகின்றன. தனியாரின் நுகர்வை அதிகரித்தல், முதலீட்டை வரவழைத்தல் மூலம் வளர்ச்சியைப் பெருக்க முடியும்.

12:27:02 on 14 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள், திடீரென ரூபாய் செல்லாது என்று அறிவிப்பதைவிட படிப்படியாக புழக்கத்தைக் குறைத்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

11:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிரதமர் ‌நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வந்து சென்றதை அடுத்து அங்கு சுற்றுலா பயணி‌களின் கூட்டம் நேற்று அலைமோதியது. ஆ‌னால், புராதனச் சின்னங்களில் உள்ள மின்விளக்குகள் இரவில் எரியாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

11:27:02 on 14 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் செயலராக மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேலை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

10:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினமணி

விக்கிரவாண்டியில் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

10:27:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,943 கன அடியிலிருந்து 8,290 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக 18,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கன அடியும் நீர் திறக்கபட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 114.40 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 84.82 டி.எம்.சி.யாக இருக்கிறது.

09:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. முன்னதாக, அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

09:27:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

“முதல்வர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு வந்தால் ரூ.200 கொடுப்பதாகக் கூறி பெயரை எழுதிக்கொண்டார்கள். டாடா ஏசியில் ஏறச் சொன்னார்கள். கிளம்பி வந்துவிட்டோம். இன்னும் பணம் கொடுக்கவில்லை. வீட்டுல இருக்குற ஆம்பளைங்க ஓட்டுக்கு பணம் வாங்கி மதுக்கடைக்கு சென்றுவிடுகிறார்கள்.” என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

08:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டிவி சானல்களிடையே இப்போதெல்லாம் கடும் போட்டி எனலாம். தீபாவளிக்கு எப்படியும் இரண்டும் நாட்கள் கடும் போட்டு இருக்கும். அந்த வகையில் ஜீ தமிழ் சானலில் அஜித் நடிப்பில் அண்மையில் வந்த நேர்கொண்ட மாணிக்கம் படத்தை ஒளிபரப்புகிறார்களாம். இந்த விசயத்தை இப்படத்தில் நடித்த அர்ஜூன் சிதம்பரம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

07:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

கேரளத்தைச் சேர்ந்த ஆடம் ஹாரி. 20 வயதான இவர், திரிசூரைச் சேர்ந்தவர். தனியார் விமான ஓட்டி உரிமம் பெற்றுள்ளார். ஒரு வணிக விமான ஓட்டியாக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால், இவருக்கு நிதியுதவி அளிக்காமல் நிராகரித்தது இவர் குடும்பம்.

06:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க விகடன்

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் டெங்கு அறிகுறியுடன் சுமார் 3000 பேர் அனுமதிக்கப்பட்டதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகப் பரவியதாகவும் தெரிவித்தார்.

05:55:02 on 14 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெண்களுக்கு உடலில் கொழுப்பு எளிதில் சேர்ந்துவிடும். அதனால்தான் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவில் வயதிற்குப் பொருந்தாத உடல் பருமனை அடைந்து விடுவார்கள். இதற்கு உணவு மட்டுமல்ல. உடல் சார்ந்தும், மனம் சார்ந்து பல பிரச்னைகளை முன் வைக்கின்றனர்.

04:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

ஒரே நாளில் 3 படங்கள் மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்கிறது என்றால், பொருளாதார சரிவு எங்கே இருக்கிறது என்று தான் சொல்லியிருந்த கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திரும்பப் பெருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

03:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

02:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

01:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து தன்னை விளக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தமாக்கியுள்ளதாக கூறி சர்சையை ஏற்படுத்தினார் மீரா மிதுன். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் அப்படத்தின் இயக்குனர் நவீன்.

12:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் புதிதாக சலுகை ஒன்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1 GB வீதம் மொத்தம் 71 நாட்கள் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இதில் இனிமேல் 1.5 GB டேட்டா கூடுதலாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 2.5 GB டேட்டா பயன்படுத்த முடியும்.

11:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க Behind Woods News

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித்தாளில், ''காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?'' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கேள்வியால் மாணவர்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

10:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழககத்தில் வரும் 17ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட 2 நாட்கள் முன்னதாகவே தொடங்குமென தெரிவித்துள்ளது.

09:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க ஜெயா டிவி

வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) என்பது பொதுவாக விலங்குகளுக்கு ஏற்படும் நோயாகும். அந்த விலங்குகள் மனிதனை கடித்து விட்டால் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவிவிடும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம். இந்த நோய் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

08:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

நெல்லையில் நடைபெற்ற டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப் பொறுப்பான நிகழ்ச்சி அல்ல. டி.வி நிகழ்ச்சி என்பது பொறுப்புள்ள பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.” என்றார்.

08:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க விகடன்

அஜித்திற்கு பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது. தீபாவளிக்கு அஜித் படங்கள் சமீப காலமாக வராதது அவர்களுக்கு வருத்தமே. இந்நிலையில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் இந்த தீபாவளி வெத்து, அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு என பேனர் வைத்துள்ளனர். இது பலரின் கண்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

07:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

பொன்.ராதாவுக்கு எதிராக ஹெச்.ராஜாவும், தமிழிசையின் ஆதரவாளர்களும் இணைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கு வேட்டி கட்டி, தமிழ்பேசி பிரதமர் மோடி கவர்ச்சிகரமான காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமரை வரவேற்பதிலேயே இத்தனை கோஷ்டிகளா என தமிழக பாஜக மீது கோபத்தில் இருக்கிறது பாஜக தேசிய தலைமை.

07:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரபல இந்தி நடிகை அமிஷா படேல். இவர் தமிழில் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரூ.2.5 கோடி கடனை திருப்பிக் கொடுக்காத வழக்கில், ராஞ்சி சிவில் நீதிமன்றத்திம் நடிகை அமிஷா படேலுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

06:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிறுத்தை ஒன்று நாயைக் கடித்த பின்னர் விரட்டிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ எந்த பகுதியில் பதிவானது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் இந்தக் காட்சி தற்போது பகிரப்பட்டு வருகிறது.

06:25:02 on 13 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 பேர் நாட்டுப்படகில் இருந்து தப்பிச் சென்றனர். இதனால், சந்தேகம் அடைந்த வனத்துறையினர், நாட்டுப்படகில் சோதனை நடத்தினர். அப்போது, அதிலிருந்து, ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரியவகை கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

05:57:02 on 13 Oct

மேலும் வாசிக்க தினமலர்

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு நடைபெறவிருந்ததால் அங்கு சுற்றித்திருந்த குரங்களை பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் மாமல்லபுரத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அங்கு சுற்றித்திரிந்த குரங்குகளை வலைகள், கூண்டுகளை வைத்து பிடித்தனர்.

05:27:02 on 13 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தஞ்சை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே சரபோஜிநகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் அமிர்தகணேசன். இவர், கிணறு, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க புதிய கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

04:57:02 on 13 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மதுரை ஆரப்பாளையம் அருகே இருக்கும் மேலபொன்னகரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவரது மனைவி வசந்த மணி(47). இந்நிலையில், மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் இருக்கும் தனது அக்கா கண்ணம்மா வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர்.

04:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கீழ் இம்மாத இறுதியில் இளம்பெண்கள் பேரவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

03:57:02 on 13 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

திருவள்ளூர் ஆரம்பாக்கம் அருகே செங்கல் சூளைமேடு கிராமத்தில் முருகன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முருகனின் மனைவி தேவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருடன் தகாத உறவு இருந்ததையும், வினோத்துடன் இணைந்து தேவி கணவரை கொலை செய்ததும் தெரியவந்தது.

03:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கும் போது, குறிப்பிட்ட நபரை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள KYC எனும் சுய விவரங்கள் அடங்கிய படிவத்தை சமர்பிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனை வரும் ஜன.1ஆம் தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ஆர்பிஐ எச்சரித்துள்ளது.

02:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், "மாமல்லபுரத்தில் நான் குப்பைகள் சேகரித்தபோது என் கையில் இருந்த உபகரணம் குறித்து நிறைய பேர் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அது நான் அடிக்கடி பயன்படுத்தும் அக்குபிரஷர் உபகரணம். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

02:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினமணி

புதுவை அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் அய்யனார் கோவில் ஏரிக்கரையில் உள்ளது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

01:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

சிலம் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும் அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

01:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, புகைப்படம் திருத்தம் செய்ய, பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

01:00:02 on 13 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

பீகாரில் வசித்து வரும் பெண் நூரி பாத்திமா. கடந்த 2015ஆம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவருடன் நூரிக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், நவீன பெண்கள் அணிவது போன்று உடை அணியும்படி மனைவியிடம் இம்ரான் கூறியுள்ளார். இதற்கு மறுத்த நூரியை ஒவ்வொரு நாளும் இம்ரான் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.

12:30:12 on 13 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

”கீழடி வைகை நதி நாகரீகம் சாதி, மதம், அரசியல் சார்பற்றது, கீழடி நமது வரலாறு. கீழடிக்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகளவில் செல்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது, கீழடி பள்ளி பாட புத்தகத்தில் பாடமாகவும், திரைப்படமாகவும் வர வேண்டும்'' என நடிகர் சசிக்குமார் கூறியுள்ளார்.

12:00:23 on 13 Oct

மேலும் வாசிக்க விகடன்

ஜப்பான் நாட்டை ஹகிபிஸ் புயல் நேற்று தாக்கியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

11:30:15 on 13 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் 10 நாள்கள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்கு புறப்படுகிறார். அங்கு கேதார்நாத், பாபாஜி குகை, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு சென்று தங்க திட்டமிட்டிருக்கிறார்.

11:00:07 on 13 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,943 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும், நீர்இருப்பு 85.86 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

10:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினமலர்

"தேசிய விடுமுறை தினமான அக்டோபர் 2ஆம் தேதி வெளியான மூன்று இந்தி திரைப்படங்கள் அன்றைய தினமே ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. எனவே, நாட்டின் பொருளாதாரம் நன்றாகத்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார் இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

10:00:12 on 13 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து செல்போன், இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் மீண்டும் செல்போன்கள் ஒலிக்கப் போகின்றன. இதனால் அங்கு முழு அளவுக்கு இயல்பு நிலை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

09:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழக முதல்வரின் குடும்பத்தினர் அவரது நண்பர்கள் நெருங்கிய நண்பர்கள் என ஒரு சிறு வட்டத்துக்கு மட்டும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புடைய சொத்துகளும் நிறுவனங்களும் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். மூலம் பாஜகவுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனைக்கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

08:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் 6வது நாளாக தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத் தீயில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

08:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.14, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.20 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:07:52 on 13 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து டீசர்களின் மூலம் தெரிவித்தது.

06:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

நெல்லிக்காய் ஜூஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் பெக்டின் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் கொண்டுள்ளது. இவை நமது உடலில் இருக்கின்ற ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, மேற்கண்ட குறைபாடு ஏற்படாமல் காக்கிறது.

05:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஈரான் நாட்டில் ஆடவர் விளையாடும் கால்பந்துப் போட்டியை பார்ப்பதற்கு கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பெண்களுக்கு கால்பந்து போட்டியை பார்க்க அனுமதி வழக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஆசாதி மைதானத்தில் கால்பந்தாட்டம் நடைபெற்றது.

04:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது. சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் மேற்கூறிய பிரச்சனைகள் தீரும்.

03:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

சிங்கப்பூரில், நீரிழிவு நோய் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக அதிக இனிப்பு அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு, சிங்கப்பூரில் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

02:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

Mi.com-ன் விற்பனை பக்கத்தின்படி, 'Diwali with Mi' விற்பனையில் Redmi Note 7 Pro-வின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோஜின் விலை 13,999 ரூபாயிலிருந்து தள்ளுபடி விலையில் ரூ.11,999-க்கு விற்பனை செய்யவுள்ளது. மறுபுறம் Redmi Y3, ஜியோமி விற்பனையின் போது 7,999 ரூபாய்க்கு ஆரம்பமாகும். handset-ன் ஆரம்ப விலை ரூ. 9,999-யாக உள்ளது.

01:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

HONOR Band 5 மற்றும் Mi Band 4 இரண்டும் 0.95 இஞ்ச் 2.5D கிளாஸுடன் ஒரு AMOLED முழு வண்ண தொடு காட்சியைக் கொண்டுள்ளன. இருந்தாலும், HONOR Band 5 பிரகாசமான டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது மிகவும் எளிதானதாகவும் படிக்க வசதியாகவும் இருக்கிறது. எனவே, HONOR Band 5 ல் பேண்டை சூரிய ஒளியில் பார்க்கும்போது நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.

12:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் 370 ஆவது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மூன்றாக பிரிக்கப்பட்டு முற்றிலும் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், தலைநகரான ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

11:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில், கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்த நாட்டின் தொழில்துறை உற்பத்தி 1.1% அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு எனவும், கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஏற்பட்ட வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:55:02 on 12 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களின் தகவல்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தோல்வியடைந்த 7,484 வேட்பாளர்களில் வெறும் 587 வேட்பாளர்களே டெபாசிட் பெற்றுள்ளனர்.

08:57:02 on 12 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மும்பையில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானத்தா யு-18 உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார். இந்தப் போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் வெற்றியடைந்து, நான்கு ஆட்டங்களை டிரா செய்தார்.

08:27:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினமணி

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் கொள்ளையன் முருகனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். இந்த நோயினால் உடல் மெலிந்தும் பற்கள் விழுந்து மிக மோசமான நிலையில் காணப்பட்டான்.

07:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருபவர் தஸ்லீமா. இவரது கணவர் அன்சாரி. வெளியே சென்ற கணவன் வீட்டுக்கு வந்ததும் பிரெஞ்சு முத்தம் வேண்டும் என்று தஸ்லீம் அன்சாரியிடம் கேட்டுள்ளார். கணவர் அவருக்கு முத்தம் கொடுக்கும்போது, மனைவின் நாக்கை பிடித்துக் கையில் இருந்த கத்தியால் அறுத்துள்ளார்.

07:25:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

கள்ளத்துப்பாக்கி தயாரித்தல், விற்பது, வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் ஆயுதங்கள் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது மொத்தம் 35 லட்சம் துப்பாக்கி லைசென்சுகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

06:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

மேலும் வாசிக்க