View in the JustOut app
X

ஊரடங்கு உத்தரவால் அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள், ரயில் சேவை, ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ சேவைகளும் நிறுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து இன்றி மதுரை மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

07:25:01 on 29 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் தலைநகர் டெல்லியில் வேலைவாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கானோர் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

06:55:01 on 29 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தாய்லாந்து நாட்டில் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், அந்நாட்டு அரசர் மகா வஜிரலொங்கோன், ஜெர்மனியின் ஜூக்ஸ்-ஸ்ப்லிட்ஸ் மலையடிவாரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், 20 அழகிகளுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

06:35:08 on 29 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், அதில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

06:07:48 on 29 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி உழவர் சந்தையில் புதிய முயற்சியாக 18 வகையான பொருள்களைக் கொண்டு, காய்கறித் தொகுப்புப் பை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

05:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க விகடன்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாட்ஸ்ஆப் சர்வர் வேகத்தைக் குறைக்க அதன் வசதிகளைத் தளத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி வாட்ஸ்ஆப்பில் 16 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியாது.

04:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினமலர்

ஆணுறை தயாரிப்பில் மலேசியா மிகப்பெரிய அளவில் உற்பத்தி மேற்கொள்ளும் நாடாக விளங்குகிறது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியாவில் பல ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்னும் சில மாதங்களில் உலக அளவில் அனைத்து நாடுகளிலும் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

04:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர். கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.

03:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தொழில்கள் போலவும் சினிமா, சின்னத்திரை வேலைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டிவி சானல்களும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட தொடர்களை முக்கிய பகுதிகளாக கட் வெர்சனாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டன. இதனால் வருமானம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

03:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஆன்லீக்ஸ் மற்றும் ஐகீக்ஸ் பிளாக் மூலம் வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் போனில் பன்ச் ஹோல் கேமரா டிஸ்ப்ளேவின் இடதுபுற ஓரத்தில் வழங்கப்படுகிறது.

02:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கொரோனா பாதிப்பை விட ஏழைகளின் வாழ்வாதார பாதிப்பு மிகப்பெரிய பேரிழிவை ஏற்படுத்தும் என்றும் கண் எதிரே பெருந்துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, பிரதமரும் மத்திய நிதியமைச்சரும் எதற்காக காத்திருக்கின்றனர்.? என கேள்வி எழுப்பியுள்ளார்.

02:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். 86 வயதான ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ள செய்தியை அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த முதல் அரச குடும்ப இளவரசி மரியா தெரசா என்பது குறிப்பிடத்தக்கது.

01:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னை மாநகராட்சி சார்பில்வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பொதுப் பயன்பாடுகள், ஊடக சேவை, சுகாதார மருத்துவ சேவைகளில் ஈடுபடுபவர்களும் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மக்கள் நலன் கருதி, மளிகை பொருள்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளும் வகையில் உள்ளூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், முன்னணி மளிகைக் கடைகளுடன் இணைந்து சேலம் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

12:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து சிகிச்சை மூலம் மீண்டு வருபவர்களிடமிருந்து பிளாஸ்மாவை எடுத்து கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு நல்ல பலன்கள் தெரிவதாக ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

12:27:02 on 29 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

காய்கறி சந்தை, பிற காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

11:57:02 on 29 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார். இதேபோன்று எல்லா பாஜக எம்.பி.க்களும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

11:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 979-ஆக உயர்ந்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 86 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:02:47 on 29 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருக்கின்றனர். முகக்கவசம் மற்றும் கைக்குட்டைகளை முகத்தில் கட்டிக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுக் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.6 லட்சத்தை தாண்டியது. பலியானவர்கள் எண்ணிக்கை 30,800-ஐ கடந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களில் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று இத்தாலியும் மிக மோசமான நிலையில் உள்ளது. இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது.

10:25:01 on 29 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று (மார்ச் 29) மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

09:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினமலர்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 42 பேரில் 17 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே சென்னை தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உள்ளவர்களின் வீடுகளை சுற்றிலும் 8 கி.மீ. தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

09:27:02 on 29 Mar

மேலும் வாசிக்க தினகரன்

திருச்சியில் செயல்பட்டு வரும் ஐஐஎம்-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, மேலும் விவரங்களுக்கு https://www.iimtrichy.ac.in/sites/default/files/upload/23Mar2020154856_20200323154842Detailedadvt-Contractposts-Mar2020-Final-20.03.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

08:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி அளிப்பதாக ரத்தன் டாடா அறிவித்தார். இந்நிலையில், தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினமணி

பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா சஞ்சய் மிஷ்ராவுடன் இணைந்து காஞ்ச்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் தன்னார்வலராக இணைந்து செவிலியர் பணி செய்து வருகிறார்.

06:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

05:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு உணர்த்தும் வகையில், நடிகர் ஜீவா என்று இருந்த தனது டுவிட்டர் ஐடியையே உள்ளே போ என்று பெயர் மாற்றியிருக்கிறார்.

10:57:02 on 28 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

சத்திய மங்கலம் எல்லை அருகில் தங்க வைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை கமுதியிலுள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்து வந்தது மாவட்ட நிர்வாகம். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து, மீனவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

09:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாக ஆண்களே பாதிக்கப்படுவதாக புதிய சர்வதேச அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 60 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன், இறந்தவர்களில் 70 சவீதமானவர்களும் ஆண்கள் என தெரியவந்துள்ளது.

08:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்திய மக்கள் கடந்த 10 நாட்களாக பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித பதிலோ அறிவிப்போ வெளியிடாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் அமித்ஷா எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

08:27:01 on 28 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநரக வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, சமூக விலகலை உறுதி செய்வதற்கான எந்த ஏற்பாடும் செய்தியாளர்கள், அதிகாரிகளுக்குச் செய்து தரப்படவில்லை.

08:10:37 on 28 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநரக வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, சமூக விலகலை உறுதி செய்வதற்கான எந்த ஏற்பாடும் செய்தியாளர்கள், அதிகாரிகளுக்குச் செய்து தரப்படவில்லை.

08:01:35 on 28 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநரக வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, சமூக விலகலை உறுதி செய்வதற்கான எந்த ஏற்பாடும் செய்தியாளர்கள், அதிகாரிகளுக்குச் செய்து தரப்படவில்லை.

07:54:01 on 28 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த மூன்று வருடங்களாக சென்னை கே.கே.நகர் அசோக் பில்லர் பகுதியில் 108 வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை இவர் ஆம்புலன்ஸ் வாயிலாக அழைத்து வந்ததாக தெரிகிறது.

07:25:01 on 28 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொரோனாவால் உலகம் முழுவதும் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளதால் மாசுபாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. படிம எரிபொருளின் காரணமாக ஏற்படும் மாசுபாடு இது.

06:54:16 on 28 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஏப்ரல் 3ஆம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு 3ஆம் தேதிக்கான விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

06:38:51 on 28 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா தொற்றில் தற்போது 2-வது கட்டத்தில் தமிழகம் நுழைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தோர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு பரவியதே 2ஆம் கட்ட நிலையாகும், சமூகத்திற்கு இடையே கொரோனா தொற்று பரவினால் அது 3ஆம் நிலையாகும் என தெரிவித்தார்.

06:34:12 on 28 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “19க்கு பிறகு ஷூட்டிங் நிறுத்தப்பட்ட பிறகு அத்தனை சானல்களிலும் ஒரு எபிசோட் கூட தடைபடாமல் சீரியல் வருகிறது. முன்பே எடுக்கப்பட்டதா? ஊரடங்கு தடை மீறி எடுக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

05:27:02 on 28 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர், மாநில அரசுகள் கூடுதல் கடனுதவியாக ரூ.1 லட்சம் கோடி கடன் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

04:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க தினமலர்

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 69. இது ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

04:25:01 on 28 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஊரடங்கு பணியில் உள்ள காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது; ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என போலீசார்களுக்கு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

03:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

"கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று தாயகம் திரும்பியதால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு கமல்ஹாசனின் பழைய வீட்டு முகவரியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இருப்பினும் கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் நோட்டீஸ் அகற்றப்பட்டது" என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

03:27:01 on 28 Mar

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் ஜென் என்ற எழுத்தாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 97,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல சீன உணவகம் ஒன்றின் வாசலில், “அமெரிக்காவின் இந்த நிலைக்கு வாழ்த்துகள்.” என எழுதப்பட்டுள்ளதாகக் கூறி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

02:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க Asiavillenews

கொரோனா அச்சத்தால் 144 தடை உத்திரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அறையில் முடங்கி கிடப்பதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது என்றும் தனக்கு உதவும் படி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராம் என்பவர் டிவிட் செய்துள்ளார்.

02:27:01 on 28 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கர்நாடகா மாநிலத்தை ஒட்டி தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கொத்தஜீகூர் கிராம மக்கள் தங்களது கிராமத்திற்குள் நோய் பரவுதலை தடுக்கும் விதமாகவும் வெளியூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்திற்குள் நுழையாதவாறு கிராம எல்லைகளை டிராக்டர்கள் மற்றும் மரங்களை கொண்டு மூடியுள்ளனர்.

01:55:01 on 28 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

1981-ல் எழுதிய புத்தகத்தில், 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டீன் கூன்ட்ஸ் எழுதிய தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ் (The Eyes of Darkness, written by Dean Koontz). என்ற புத்தகம் தான் கொரோனா தாக்குதல் குறித்து விவரிக்கிறது.

01:27:01 on 28 Mar

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி, தற்போது இயக்கி வரும் தனது RRR படத்தில் விஜய்யை கெஸ்ட் ரோல் நடிக்க அனுகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய் மட்டும் இதில் நடித்தால் கண்டிப்பாக இவரின் மார்க்கெட் பல மடங்கு பெரிதாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

12:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

”2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலையை விட இனி வரும் காலங்கள் மோசமாக இருக்கும். உலகமே பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்பது தெளிவாகிறது" என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா என எச்சரித்துள்ளார்.

12:27:02 on 28 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இறந்தோர் எண்னிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில் முட்டத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, திருவட்டார் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

12:00:28 on 28 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலத்தில், இந்தோனேஷியாவைச் சேரந்த மத போதகர்கள் பரப்புரையில் ஈடுபட்ட பள்ளிவாசல்கள், மசூதிகளில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் கிருமிநாசினி மருந்துதெளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பழமையான சிஎஸ்ஐ கிறித்தவ தேவாலயம், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில், ஆகிய இடங்களிலும் மருந்து தெளிக்கப்பட்டது.

11:57:02 on 28 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 38லிருந்து 40ஆக உயர்ந்துள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர் மற்றும் காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணம் நபருக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

11:49:05 on 28 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாகர்கோவில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது, மேலும் பேருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

11:44:36 on 28 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் 21 நாள் மக்கள் ஊரடங்கையே பல இந்தியர்கள் புறக்கணிக்கும் வேளையில் தற்போது நீண்ட கால ஊரடங்கு இந்தியாவில் சாத்தியமில்லை என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

11:27:02 on 28 Mar

மேலும் வாசிக்க தினமலர்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், கோய்ரிபுர் கிராமத்தில் முஷாஹர் இனத்தைச் சேரந்த பத்து வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகள், ஊரடங்கு உத்தரவால் உணவு ஏதும் கிடைக்காமல் ஆடு மாடுகளுக்காக போடப்படும் புற்களை உப்பு தொட்டு சாப்பிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

10:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நாட்டின் முதல் கொரோனா தொற்று கேரள மாநிலத்தில் தான் உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 30ஆம் தேதி இது உறுதி செய்யப்பட்டது. அந்த நோயாளிக்கு எடுக்கப்பட்ட மைக்ரோஸ்கோபி படத்தை இந்திய விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். இது ஐ.ஜே.எம்.ஆர். ஜர்னலில் வெளியிடப்பட்டு உள்ளது.

10:27:01 on 28 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது ஈவிரக்கமின்றி 5 வயது குழந்தை உட்பட 8 தமிழர்களை சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

09:55:01 on 28 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

தேனி ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 34 வயதான இளைஞர் ஒருவர், இலங்கைக்கு ஜவுளி வியாபாரத்துக்கு சென்று திரும்பியநிலையில், கொரோனா அச்சத்தால் இளைஞரை வீட்டில் சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் மனஉளைச்சால் அடைந்த இளைஞர் வீட்டை விட்டு வெளியே ஒடி வந்தவர் 90 வயதான மூதாட்டியை கடித்தார்.

09:31:13 on 28 Mar

மேலும் வாசிக்க தினமணி

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. மேலும், ஒரேநாளில் 268 பேர் இறந்தனர். இங்கு மொத்தம் 1304 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து இதுவரை 1,04,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

09:04:00 on 28 Mar

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. மேலும், ஒரேநாளில் 268 பேர் இறந்தனர். இங்கு மொத்தம் 1304 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து இதுவரை 1,04,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

08:57:08 on 28 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனா வைரஸ் நொய் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சாதனங்களுக்கான வாரண்டியும் 30 நாட்கள் வரை நீட்டிக்கப்படுவதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

07:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஓரிரு உணவுப் பொருட்களை மட்டுமே உண்ணுவதால் கரோனா காய்ச்சல் வராமல் தடுத்துவிடலாம், அல்லது உணவை உண்டவுடன் காய்ச்சல் குணமாகிவிடும் என்னும் சில ஊடகச் செய்திகளை ஏற்றுக்கொண்டு குழப்பமடைய வேண்டாம்.

06:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க தினமணி

மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 400 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது) நாட்டுச்சர்க்கரை - 400 கிராம் தண்ணீர் 1 லிட்டர். இதனை காய்ச்சி வடிகட்டி குடித்து வர நுரையீரல் சுத்தம் ஆகும்.

05:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கொரோனா வைரஸால் மாஸ்டர் படம் எப்போது வரும் என தெரியாத நிலையில் உள்ளது. தற்போது இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடம் மாஸ்டர் தயாரிப்பாளர் மீதி பணத்தை கேட்டுள்ளார்.அதில் கோயமுத்தூர் விநியோகஸ்தர் இந்த நேரத்தில் பணத்தை எங்களால் திருப்பி தர முடியாது என கூறியுள்ளார்.

10:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக்காக ’குட்டி ஸ்டோரி’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டது. தற்போது இந்தப் பாடல் யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை சோனி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

09:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோன்று பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

08:57:02 on 27 Mar

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு RRR திரைப்படத்தில் இருந்து சிறப்பு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திரைப்படம் 2021 ஜனவரி 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

08:25:02 on 27 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா பரவலை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். கூடவே தமிழக அரசும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

07:55:01 on 27 Mar

மேலும் வாசிக்க விகடன்

அமெரிக்காவிலிருந்து கொரோனா தொற்று உடையவர்கள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக மெக்சிகோ நாட்டு எல்லையை அந்நாட்டு போராட்டக்காரர்கள் இழுத்து மூடியுள்ளனர். தற்போது உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

07:25:02 on 27 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போரிஸ் ஜான்சனுக்கு அறிகுறி இருந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றை அடுத்து பிரதமர் தனிமைப்படுத்துதலில் உள்ளார்.

06:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழக மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் 530 மருத்துவர்களை நியமித்து முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதேபோன்று 1,000 செவிலியர்கள், 1,508 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

06:25:02 on 27 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை நாஜிப் படை நிகழ்த்திய பெரும் இன அழிப்பிலிருந்து காப்பாற்றிய ஜெர்மானிய தொழிலதிபர் ஆஸ்கர் ஷிண்ட்லரின் கதையைச் சொன்ன படம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய, மனிதாபிமானத்தின் மகத்துவத்தைச் சொன்ன இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

05:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க விகடன்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான கீரவாணி என்கிற மரகதவாணி தனது ட்விட்டர் பதிவில், இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

05:27:01 on 27 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

04:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

கட்டணத்தை குறித்த தேதிக்குள் செலுத்தவில்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது தவறானது என்று மின்வாரியம் கூறியுள்ளது. மார்ச் மாதத்திற்கான மின்கட்டணத்தை ஏப்.15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:27:02 on 27 Mar

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

04:03:56 on 27 Mar

மேலும் வாசிக்க தினமலர்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

03:56:44 on 27 Mar

மேலும் வாசிக்க தினமலர்

இந்தியாவில் தற்போது தான் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் மாதம் வரையிலும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதை அறிய முடிகிறது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த சலுகைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் நாடு கடும் அபாய கட்டத்தில் பயணிப்பதைக் காண முடிகிறது.

03:27:01 on 27 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஊரடங்கை மீறி, சாலையில் வாகனத்தில் சுற்றித்திரிந்த தம்பி ஒருவர், பெண் போலீசாரிடம் சவால் விடும் வகையில், வீராவேசமாக முழங்கியதால், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர் முட்டி வைத்தியம் செய்து அனுப்பி வைத்தனர்.

02:55:01 on 27 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொரோனா அச்சம் தொடர்பாக நடிகர் வடிவேலு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மிகவும் எமோஷ்னல் ஆகி கண் கலங்கி அழுதார். மேலும், நம்ம சந்ததிகளுக்காக நம்ம வம்சாவழிக்காக வீட்டிற்குள்ளேயே இருங்கய்யா...என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.

02:25:01 on 27 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வெப்பமான, ஈரப்பதம் மிக்க தட்பவெப்பத்தில் கரோனா நோய்க்கிருமி வழக்கத்தைவிட குறைவான வேகத்தில் பரவும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கோடைக் காலங்களின்போது கொரோனா நோய்த்தொற்றின் வேகம் சற்று குறையக்கூடும் என்ற கருத்தை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

01:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க தினமணி

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கணினி, செல்போன், சுவிட்ச் போர்டு உள்ளிட்ட பொருள்களை தொடுவதற்கு முன்பும், பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக சோப்பு அல்லது ஆல்கஹால் கொண்டு கழுவ வேண்டும் என எச்சரிக்கிறது அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலை.

01:27:01 on 27 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

மனித உடம்பில் உள்ள 332 புரதங்களை, கொரோனா வைரஸ் புரதங்கள், நேரடியாக தாக்குவது தெரிய வந்தது. இதையடுத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றுக்கு வழங்கப்படும் 70 வகையான மருந்துகள், கொரோனா சிகிச்சைக்கு சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

12:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க தினமலர்

கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் கை கழுவும் விஷயம் மிக முக்கிய இடம்பிடித்துள்ளது. எனினும், பல நாடுகளில் கை கழுவும் விஷயத்தில் மக்கள் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர். கை கழுவும் விஷயத்தில் சவுதி அரேபிய மக்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.

12:27:01 on 27 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்படாத அமெரிக்கர்கள் மூலம் தங்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அமெரிக்காவுடனான எல்லையை மெக்ஸிகோ போராட்டக்காரர்கள் மூடியுள்ளனர்.

11:57:02 on 27 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று அமெரிக்காவில் ஒரே நாளில் 13,700 பேருக்கும் கொரோனா தொற்றியது. இதனால் அங்கு மொத்தம் 82,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகிலேய கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

11:27:01 on 27 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அனைத்து கடன்களின் தவணைகளும் 3 மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், விளைச்சல் அமோகமாக உள்ளதால் வரும் நாட்களில் உணவு பொருட்களின் விலை குறையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

11:12:07 on 27 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 85 ஆயிரம் பேரைகண்காணிக்கவும் மதுரை, ஈரோடு மாவட்டங்களை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

10:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தொடர்பான தரவுகளை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதன் முடிவில், ‘இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இதே வேகத்தில் இருந்தால், மே மாத இடைப்பகுதிக்குள் இந்தியாவில் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது’ என கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

10:05:03 on 27 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை 22,200 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

09:27:25 on 27 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமின்றி மருத்துவரும் கூட. இந்நிலையில், இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

08:57:30 on 27 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் திறந்த வெளியில் செயல்பட்டு வருகின்றன. மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர். திறந்த வெளியில் மாற்றப்பட்ட சந்தைகளில் சமூக விலகலைப் பின்பற்றி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

08:52:11 on 27 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை, ஒப்பந்தக் கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இன்று முதல் https://www.rbi.org.in/ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.

07:55:02 on 27 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நீரழிவு நோயாளிகள் 2 மேஜைக்கரண்டி நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஆஸ்துமா நோயும் குணமாகிவிடும்.

06:55:01 on 27 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

உடல் ஆரோக்கியம் என்பது உணவு, தூய்மை மட்டுமல்ல. உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளும் அவசியம். மேலும் வீட்டிலேயே முடங்கியிருந்தாலும் வயிற்றில் உணவு சற்று கூடுதலாகவே செல்லும். உடல் எடையும் அதிகரிக்கும்.

05:55:01 on 27 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

சிவா-அஜித் கூட்டணியில் இதுவரை 4 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட் தான். அதிலும் கடைசியாக வந்த விஸ்வாசம் எல்லாம் மெகா ஹிட் அடித்தது. இந்நிலையில் அஜித் சிவா மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றது இணையத்தில்.

10:57:01 on 26 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

மதுரையில் கொரோனா முகாமில் வாலிபர் ஒருவர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் முகாமிலிருந்து தப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இருந்தனர். இதனிடையில் கொரோனா முகாமில் இருந்து தப்பிச் சென்ற வாலிபர் ஒரு சில மணி நேரங்களில் திரும்பி வந்துவிட்டார்.

09:57:01 on 26 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழரின் பாரம்பரியத் நோய் தடுப்பு முறைகளான மஞ்சள் கலந்த தண்ணீரிரை வீடுகளில், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் மக்கள் தினமும் தெளிக்கத் தொடங்கினர். மேலும் பலர் இதனுடன் வேப்பிலைச் சாற்றை கலந்து வீடுகளிலும், வாசல்களிலும் தெளிக்கத் தொடங்கியுள்ளனர்.

08:57:01 on 26 Mar

மேலும் வாசிக்க தினமணி

தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் ஏப்ரல் 2 முதல் 15ஆம் தேதி வரை வழங்கப்படும். ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் விலையில்லாமல் வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு 200 ரூபாய் பயணம் செலவினம், மாஸ்க் மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

08:32:00 on 26 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

உ.பி.யைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குர்ஜா, “ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் கால்களை உடைத்தாலோ, துப்பாகியால் சுட்டாலோ அவர்களுக்கு நான் 5,100 ரூபாய் பரிசளிப்பேன். மக்கள் மதகுருக்களின் பேச்சைக் கேட்கவில்லையென்றால் அவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கவேண்டும் என்று எச்சரிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

07:56:19 on 26 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சாதாரண காலத்திலேயே பேட்டிகளுக்கும் பிரஸ்மீட்டுகளுக்கும் பெயர் பெற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இப்போது வாய் திறக்காமல் இருக்கிறார். ஆவின் நிர்வாகமே அறிவிப்புகளை வெளியிடுகிறது. எனவே ராஜேந்திர பாலாஜி அமைச்சர்தான், ஆனால் அமைச்சர் இல்லை என்ற நிலையே தற்போது நிலவுவதாக கூறுகிறார்கள் பால்வளத் துறை அதிகாரிகளே.

07:38:52 on 26 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க