View in the JustOut app
X

நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா வைரசுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக்கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருக்கவும்.” காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

01:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

”கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நம் சந்தையில் அதிகம் இல்லை. இதனால், இங்குவரும் பொதுமக்கள் வழக்கம்போல் நெருக்கமாகவே உலவுகின்றனர். இதனால், சந்தையின் ஊழியர்களுக்கும் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.” என டெல்லியில் உள்ள ஆசாத்பூர் காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

12:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டுவருகிறது. கடந்த மார்ச் 28ஆம் தேதியோடு முடிவடைந்த வாரம் வரையில், 66 லட்சம் அமெரிக்கர்கள் வேலையின்மை சலுகை கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்தநாட்டின் தொழிலாளர்துறை தெரிவித்துள்ளது.

12:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படாது. அதன்படி கடந்த மார்ச் மாதம் மட்டும் அந்நாட்டு மக்கள் 2 மில்லியன் துப்பாக்கிகள் அதாவது 20 லட்சம் துப்பாக்கிகளை வாங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.

11:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க விகடன்

கோவை குனியமுத்தூர் பகுதியில், நிவாரணத் தொகை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மதத்தை குறிப்பிட்டு கொரோனா வதந்தி பரப்பப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்ததார். மேலும் அவர், வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

11:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா பாதிப்பை சமாளிக்க உலக வங்கி இந்தியாவிற்கு அவசர கால நிதியாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. நோயாளிகளை கண்டறிதல், தனி படுக்கை வசதிகளை உருவாக்குதல், கொரோனா குறித்த ஆய்வு மற்றும் மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு இந்த நிதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:57:01 on 03 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

”கொரோனா வைரஸ் பரவு வதைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு, எடுத்து வரும் நடவடிக்கையை உலக நாடுகள் பாராட்டி உள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறது.” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

10:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பாலசுப்ரமணி (21). இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரங்கு அமல்படுத்தப்பட்டதால் நாக்பூரில் இருந்து நாமக்கலுக்கு நடந்தே வர முயற்சித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

09:57:01 on 03 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது என பிரதமர் கூறினார்.

09:31:54 on 03 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது. இத்தாலியில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,915 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,062 ஆகவுள்ளது. இந்தியாவில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

09:03:42 on 03 Apr

மேலும் வாசிக்க தினகரன்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது. இத்தாலியில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,915 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,062 ஆகவுள்ளது. இந்தியாவில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

08:58:21 on 03 Apr

மேலும் வாசிக்க தினகரன்

”கொரோனாவை கூட அல்லா பார்த்துக் கொள்வார் என்று கண்டுகொள்ளாமல் விட்ட தப்லீக் ஜமாத்தினரின் அறியாமை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது. டெல்லியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தை அகற்ற ஒரு பெரும் முயற்சி நடக்கிறது இதை தப்லீக் ஜமாத் எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ?” என்கின்றனர் முஸ்லிம் அமைப்பினர்.

07:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நம்மை பயம்கொள்ளவைக்கும் விஷயங்கள் உலகில் நிறைய நடக்கின்றன. விபத்து, மரணம் போன்றவை நமக்குள்ளே மிகுந்த அதிர்வலைகளை உருவாக்குகின்றன. விபத்து பற்றிய ஒரு காட்சியை நீங்கள் காலையில் டெலிவிஷனில் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கே தெரியாமல் அது உங்கள் மனதில் பதிந்துவிடும்.

06:55:01 on 03 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன.

05:55:01 on 03 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் ரஜினி, அஜித், விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில் விக்ரம், சூர்யா ,சிம்பு, தனுஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் ரஜினி- 2.0- ரூ 675 கோடி; விஜய்-பிகில்- ரூ 300 கோடி; அஜித் - விஸ்வாசம்- ரூ 183 கோடி வசூல் செய்துள்ளது.

10:57:02 on 02 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் கீர்த்தியின் அப்பாவான சுரேஷ்குமார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் தான் கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

09:55:01 on 02 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

கரோனாவை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் மனிதநேயத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்களிடையே மத உணர்வின் அடிப்படையில் வெறுப்பை விதைத்து பிரிவினையை ஏற்படுத்தும் இத்தகைய வெறுப்புப் பிரசாரங்களை கைவிடவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

08:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மக்களிடம் உள்ள சுய-பொறுப்புணர்வு மூலம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமலேயே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று ஸ்வீடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதுகிறார்கள். அதனால்தான் இந்த கொரோனா காலத்திலும் அவர்களால் இயல்பாக இருக்க முடிகிறது.

08:25:01 on 02 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வேலூர் மாவட்டம், ஊசூர் அருகேயுள்ள புலிமேடு கிராமத்தில் அல்லேரி மலைப்பகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்தனர். இதனைத் தட்டி கேட்ட அந்தப் பகுதி இளைஞர்களை, சாராய வியாபாரிகள் 3 நாட்டு துப்பாக்கிகளுடன் வந்து சரமாரியாக சுட்டனர்.

07:55:03 on 02 Apr

மேலும் வாசிக்க சன் நியூஸ்

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களைத் திருடி சிறுவன் விற்பனை செய்வதை அறிந்த போலீசார், சிறுவனைப் பிடித்து அதேபோல் செய்து காண்பிக்கச் செய்தனர். அந்த சிறுவனும் அதனைச் செய்துக் காண்பித்துள்ளான்.

07:27:35 on 02 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

“நாளை காலை 9 மணிக்கு, எனது சக இந்தியர்களுடன் ஒரு சிறிய வீடியோ செய்தியைப் பகிர்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்துதான் பிரதமர் அறிவிக்கப் போகிறார் என்று பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

07:06:41 on 02 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்ற 1,103 பேருக்கும் சோதனை முடிந்து விட்டது. 1.103 பேரில் இன்னும் சிலருக்கு சோதனை முடிவுகள் வர வேண்டி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

06:59:25 on 02 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சித்தகவலை சீனா வெளியிட்டுள்ளது. அறிகுறிகளே தென்படாமல் இந்த வைரசால் 1541 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க Behind Woods News

தமிழக பொதுசுகாதாரத்துறையின் மூலமாக செய்தி தாள்களில் மக்களுக்கு ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது அதில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவ அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், இது போன்ற பாதிப்பு யாருக்காவது இருந்தால் உடனே தெரியபடுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

05:27:01 on 02 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

இத்தாலி மக்கள் பணக்கட்டுகளை சாலையில் தூக்கி வீசியுள்ளனர் என்று வெளியாகி உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உண்மையில் வெனிசுலா நாட்டில், 2019 ஆம் ஆண்டில் மெரிடா நகரத்தில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் என்பதே உண்மை.

04:57:02 on 02 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மருத்துவக்குழு ஒன்று கரோனா வைரஸ் பரவுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, அவர்களை பொதுமக்கள் கற்களை வீசி எறிந்து தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

04:27:01 on 02 Apr

மேலும் வாசிக்க Asiavillenews

தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

03:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளின் நேரம் 10 மணி முதல் 2 மணி வரை அண்மையில் மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் 10 மணி முதல் 4 மணி வரை வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

03:27:01 on 02 Apr

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

தலிபான் பாணியில் தப்லிக் ஜமாத் குற்றம் செய்துள்ளது என பாஜக அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசியுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊரடங்கு உத்தரவும், கடுமையான கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப் படுவதற்கு முன்னர், தற்செயலாக நடந்த இந்தச் சம்பவத்தை தீவிரவாதக் குழுவோடு தொடர்புபடுத்திப் பேசுவதா என எதிர்ப்பு எழுந்துள்ளது.

02:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கடலூர் தாழங்குடா மீனவ கிராமத்தில் கிருமிநாசினி தெளிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஊராட்சி மன்றத் தலைவருக்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

02:27:02 on 02 Apr

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனாவால் இதய நோயாளிகள் 10.5% பேரும், நீரிழிவு நோய் கண்டவர்கள் 7.3% பேரும், நீண்டகால நுரையீரல் கோளாறு மற்றும் சுவாசப்பிரச்சினை உள்ளவர்கள் 6.3% பேரும், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் 6% பேரும், புற்றுநோய் தாக்கியவர்கள் 5.6% பேரும், இவை எதுவுமேயின்றி 0.9% பேரும் பலியாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

01:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் மிக சில நாட்களில் 10 லட்சம் பேர் பாதிப்படைவர் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐநா எச்சரித்துள்ளது.

01:27:02 on 02 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடப்பதால் பிரபல தொலைக்காட்சிகளில் கடந்த 2 வாரங்களாக அதிக அளவில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ஒளிபரப்பு செய்யப்பட்ட படங்களில், 21 படங்கள் விஜய் நடித்த படங்கள் ஆகும்.

12:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

12:27:01 on 02 Apr

மேலும் வாசிக்க தினமணி

டாக்டர்களின் அறிவுரைப்படி மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி தெரிவித்துள்ளார். இதனிடையே திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, மாலையில் 60.மில்லி. பிராந்தி 3 பெக் முந்திரியுடன் குடிக்க டாக்டர் பரிந்துரை செய்ததாக ஒரு மருந்துச் சீட்டு வாட்ஸ்-அப்- உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வலம் வருகிறது.

11:57:02 on 02 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயால் மொத்த பலி எண்ணிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பது குறித்து வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. நிபுணர்கள் கணிப்புபடி குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளது; நிலைமை மிக மோசமாகிற போது 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.

11:27:01 on 02 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

10:55:01 on 02 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

தமிழகத்தில் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனோ நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 2574 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை கொரோனா நோய்த்தொற்று மையங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

10:27:01 on 02 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

”ஒரு இந்தியா வீட்டில் இருந்தபடி யோகா செய்கிறது; டிவியில் ராமாயணம் பார்க்கிறது; பாட்டுப்போட்டி நடத்துகிறது. மற்றொரு இந்தியா உணவின்றி, தங்குமிடமின்றி, ஆதரவின்றி, வாழ்வுக்காக போராடுகிறது.” என பிரதமர் மோடி, அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ஸ்மிருதி இரானி ஆகியோரை காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

09:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க தினமலர்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது. இத்தாலியில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,428 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,102ஆக உயர்ந்துள்ளது.

09:27:01 on 02 Apr

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்குபெற்று இந்தியாவின் பல மாநிலங்களில் திரும்பியோரில் கணிசமானோருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டு வரும் நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் தலைமையகமான மர்கஸ்ஸிலிருந்து அனைவரையும் வெளியேற்றியிருக்கிறது டெல்லி போலீஸ்.

08:57:27 on 02 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

"ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா" என்று பாடி நடித்த ரஜினியும், "இந்த மக்களுக்கு நான் எதாவது நல்லது செய்யவேண்டும்" என்று துடியாய்த் துடித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்த விஷாலும் ஏன் கொரோனா நிவாரண விஷயத்தில் மௌனம் சாதிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

07:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சாப்பிடும் முன்பும் பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, நாக்கின் பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. பெரும்பாலோருக்கு வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.

06:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியும் குணமாக்கும். மூல நோய் உள்ளவர்கள் வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும்.

05:57:02 on 02 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடிகை ஸ்ரீ ரெட்டி புதிதாக யூடுயுப் சேனலை ஆரம்பித்துள்ளாராம். இதற்காக அவர் ஆண்குறி என பொருள் படும் ஆங்கில வார்த்தையை பதிவிட்டு தன்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து ஆபாசமான பதிவுகளை இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டு வருகிறார்.

10:57:02 on 01 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூருக்கு 5-வது தடவையாக பரிசோதனை செய்தனர். இப்போதும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதையே முடிவுகள் வெளிப்படுத்தின. ஆனாலும், அவரது உடல்நிலை கவலைப்படும்படி இல்லாமல் சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

09:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸை வைத்துக் கலாய்க்கும் மீம்ஸ் வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பில் உலா வருகின்றன.

08:55:01 on 01 Apr

மேலும் வாசிக்க சன் நியூஸ்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு நாடுகள் பிரம்மாண்ட மருத்துவமனைகளை அமைத்து வருகின்றன

08:25:01 on 01 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,103 பேர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

07:55:02 on 01 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இருந்து பொளக்கட்டும் பற பற என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதிக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகப் பாடலாகும்.

07:25:01 on 01 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திரும்பிய வந்த போடியைச் சேர்ந்த 16 பேர், பெரியகுளம் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தலா 3 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

06:57:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினமணி

தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா லியோ, சவுவ் டோமே அன்ட் பிரின்சிபி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும், ஆசியாவில் வடகொரியா, மியான்மர், தஜ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளும் கொரோனா பிடியிலிருந்து தப்பியுள்ளன. அதேநேரத்தில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

06:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதம் குறையத் தொடங்கியது. அதன்படி சென்னையில் இன்று முதல் மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை 64.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதம் ரூ.826 ஆக விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை, ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

05:57:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினமலர்

சாம்பிராணி பொடியின் ஆவி பிடிப்பதின் மூலம் கொரோனா நோய் தாக்காது என்று சிலர் சொல்ல, மாலை 6 மணியில் இருந்து மூக்கு, வாய் வழியாக சாம்பிராணி ஆவி பிடிப்பதின் மூலம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்....என்கிற புதிய நம்பிக்கை கோவை மக்களிடையே பரவ ஆரம்பித்து இருக்கிறது.

05:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா பரவுவதற்கு காரணமே முஸ்லிம்கள்தான் என்று அபாண்டமாக பழி சொல்ல கூடாது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா காட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனாவையும் தப்லீக் ஜமாத்தையும் இணைத்து டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு டிவீட் செய்பவர்கள் எந்த வைரஸையும் விட ஆபத்தானவர்கள் என ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

04:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

‘கோழி, முட்டை, இறைச்சி குறித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. தவறாக வழிநடத்தும் வதந்திகள் மூலம் நமது புரத தேவையில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் கோழி, முட்டை மற்றும் இறைச்சியை உட்கொள்ளலாம்’ என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

04:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1637ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

03:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

பிப்.1ஆம் தேதியே வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர தடை விதித்திருந்தால் இந்த தப்லிகி மாநாட்டு குழப்பம் ஏற்பட்டிருந்திருக்காது என பா.ஜ.க எம்.பி.சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். மேலும், ஆரம்பத்திலேயே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்தியிருந்தால் இந்த குழப்பங்கள் ஏற்பட்டிருந்திருக்காது என கூறியுள்ளார்.

03:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

'சவுரவ் கங்குலி தலைமையில் விளையாடியது எனது மனதில் பசுமையான நினைவாக உள்ளது. எனக்கு கங்குலி உறுதுணையாக இருந்தார். ஆனால் அவரைப் போல தோனியும், கோலியும் எனக்கு உறுதுணையாக இல்லை. இருவரிடமும் சாதகமும் பாதகமும் நிறைய இருக்கிறது' என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

02:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

”இஸ்லாமியர்களுக்கு எதிராக பி.ஜே.பி தரப்பு இதுபோன்று நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவத்துறை உறுதி செய்த பிறகு, கொரோனா இருப்பதாக எங்கள் பகுதியில் மைக் மூலம் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது எங்களை மனதளவில் பாதித்துள்ளது” என்று பலரும் குமுறுகின்றனர்.

02:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க விகடன்

வீடியோ கான்ஃபரன்சிங் கால்களின் போது தேவையான போது மட்டும் வீடியோவை ஆன் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோவை மட்டுமே பயன்படுத்துங்கள். இது உங்களது கான்ஃபரன்சிங் கால் தடைப்படாமல் இருக்க உதவும். அதுபோல வைஃபை ரூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் தேவையற்ற சாதனங்களின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

01:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை திருவொற்றியூரில் சிக்கிய தம்பிகளை ஒற்றைக்காலில் நிற்க வைத்து நூதன வைத்தியம், செய்த போலீசார், அவர்களுக்கு கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். அதில் ஒரு தம்பி, ”சார் ஒத்தக்காலில் நின்னா கொரோனா வாராதா என கேட்க, அதற்கு போலீசார் கொரோனா வராது கால் வலி வரும். அதனால வீட்டிலேயே இரு” என்றனர்.

01:25:01 on 01 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சுனைனா. இவர் தற்போது காதலில் உள்ளார். அவர் வேறு யாருமில்லை விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா தானாம். இன்னும் 3 மாதத்தில் அவரை திருமணம் செய்யவுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியுப் சேனலில் கூறியுள்ளார்.

12:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா அச்சுறுத்தலால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், PM CARE FUND-க்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு, முழு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்த 49 நாட்கள் தேவைப்படும் என்று கேம்பிரிட்ஜ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என கேம்பிரிட்ஜ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேநிலை, செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. சேலம், தருமபுரி, கோயம்புத்தூா் விமானநிலையம், திருத்தணியில் தலா 100 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவானது.

11:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க தினமணி

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெல்லி சென்ற நபர்களை அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர்களில் நேற்று ஒருநாளில் மட்டும் நெல்லையில் 22 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லையின் மையப்பகுதியான மேலப்பாளையத்தின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுள்ளது.

10:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற பலர், விமானம், ரயில், பஸ் போக்குவரத்தின் மூலம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே திரும்பியுள்ளதை அடுத்து, அவர்களை கண்டறியும் முயற்சியை தீவிரப் படுத்தும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.

10:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க தினமலர்

‘என்னோட எயிம் முதலமைச்சர் ஆவறதுதான் என்று சொல்லிக் கொண்டிருந்தார் விஜயபாஸ்கர். அப்போதே இது எடப்பாடி கவனத்துக்குச் சென்றது. இதனிடையே ஆளுநருடனான சந்திப்பில் சுகாதாரத் துறை அமைச்சர் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விஜயபாஸ்கரின் ரியாக்‌ஷன் விரைவில் தெரியும்’ என்கிறார்கள்.

09:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், இனிமேல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளாக செயல்படும். சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டிகேட் வங்கிக்கிளைகள், கனரா வங்கிக்கிளைகளாக செயல்படும்.

09:27:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகளவில் நேற்று 37,780 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். 1,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

09:03:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினகரன்

உலகளவில் நேற்று 37,780 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். 1,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

09:00:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினகரன்

2003ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக சுகாதார மையம் மற்றும் ஆரோக்கியத்துக்கான தேசிய அமைப்பு ஆய்வு முடவுகளின் படி கிளாஸ் மீது கொரோனா வைரஸ் 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்களுக்கு உயிர்வாழும் என கருத முடியும். ஆய்வின்படி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அனைத்துவித கிளாஸ் பரப்புக்கும் பொருந்தும்.

08:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முடிந்த வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

07:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைக்கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

05:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

உடலுறவு கொள்ளக் கூடிய இணையுடன், ஒரே வீட்டில் நீங்கள் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் உங்கள் இருவரில் ஒருவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் இருவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

10:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது அமலாபாலுக்கும் வழங்கப்படுகிறது.

09:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட தேவைக் குறைவு மற்றும் விநியோகம் செய்வதில் உள்ள தடைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைவதால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கடினமாவதோடு மட்டுமல்லாமல், 13.6 கோடி வேலைவாய்ப்புகள் உடனடி ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

08:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், டெல்லி சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.

08:25:02 on 31 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, கொரோனா வைரஸை மையமாகக் கொண்டு, பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

07:55:02 on 31 Mar

மேலும் வாசிக்க சன் நியூஸ்

``எங்களுக்கு நிவாரணம் வேண்டும். நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் பணியாற்றும் எங்கள் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு ஓய்வு வேண்டும். நீங்கள் தற்போது ஓய்வில் இருக்கிறீர்கள் என்றால், எங்களுக்கு உதவ முன்வாருங்கள். நாங்கள் உங்களுக்கு தேவையானதை செய்வோம்.`` என நியூயார்க் மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

07:25:01 on 31 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணோ, சும்மா இல்லாமல் செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ்களிடம் ஓடி ஓடி சென்று காட்டி கொண்டிருந்தார்.

06:55:01 on 31 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், வீட்டு வாடகை தொகையை 2 மாதம் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

06:34:44 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லி நிஜாமுதீனில் மத வழிபாடு மாநாடு நடத்தியதில் ஏராளமானோருக்கு கரோனா பாதிப்பு வந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவுக்கு ஆளாகியுள்ள தப்லிக் ஜமாத் மவுலானா தாங்கள் எந்த சட்டத்தையும் மீறி நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

05:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் 130 கோடி மக்களும் சக்திமானை காண வாய்ப்பு கிடைக்கும். அறிவிப்புக்காக காத்திருங்கள் என வீடியோவுடன் ட்வீட் செய்துள்ளார்.

05:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க Asiavillenews

உலக அளவில் அதிக பட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா பரவலை தடுக்க அமெரிக்க அரசு தவறியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிகப்படியாக நியூயார்க் மாகாணத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

04:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

மக்கள் ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை விரட்டியடித்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது, உயிர் சேதங்கள் தொடர்வது, பொருளாதாரம் பாதிக்கப்படுவது என எதையும் தவிர்க்க இயலாது என மருத்துவத் துறையினர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

04:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

03:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஊரடங்கு உத்தரவால் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. வட்டி வசூலிக்கப்படாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவு குறித்த தகவல்கள் அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

03:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, டெல்லியின் நிஜாமுதீன், தில்சாத் கார்டன், உ.பி.யின் நொய்டா, மீரட், ராஜஸ்தானின் பில்வாரா, அகமதாபாத், மும்பை, புனே ஆகிய 10 மாவட்டங்களை தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர உத்தரவு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

03:08:25 on 31 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, டெல்லியின் நிஜாமுதீன், தில்சாத் கார்டன், உ.பி.யின் நொய்டா, மீரட், ராஜஸ்தானின் பில்வாரா, அகமதாபாத், மும்பை, புனே ஆகிய 10 மாவட்டங்களை தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர உத்தரவு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

02:59:41 on 31 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பதவி பறிபோன பின் யாருடனும் பேசாமல் மனம் புழுங்கிக் கிடந்த ராஜேந்திர பாலாஜியிடம் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள். ‘கவலைப்படாதீங்க. உங்களுக்கான நேரம் வரும்னு ரஜினி சார் சொல்லச் சொன்னார்’ என அவரகள் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தகவலால் ராஜேந்திர பாலாஜி உற்சாகமாகியுள்ளார்.

02:29:40 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்த படம் 'திருடன் போலீஸ்'. புதுப்பேட்டை படத்துக்கு பின், அதாவது 2006ம் ஆண்டு இப்படத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் கைவிட்டப்பட்டது.

01:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

அஜித் ரசிகர்கள் என்ற பெயருடன் தன்னை ட்விட்டரில் விமர்சிப்பவர்களுக்கு நடிகை குஷ்பு காட்டமாக பதிலளித்துள்ளார். டுவிட்டரில் தன்னை விமர்சித்த ஒருவருக்கு, “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்” என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.

01:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

`ஏழாம் அறிவு டாக்டர் விஜயபாஸ்கர் வெர்ஷன்' என்ற வைரல் வீடியோ எடப்பாடி தரப்பை ஏகத்துக்கும் கொதிக்க வைத்து விட்டதாம். அந்த வீடியோவில், எந்த இடத்திலும் எடப்பாடி பற்றியோ அ.தி.மு.க ஆட்சியைப் பற்றியோ சொல்லாமல் முழுக்க முழுக்க விஜயபாஸ்கரின் புகழ் மட்டுமே பாடப்படும் மீம்ஸாக தயாரிக்கப்பட்டதை ஆளும்கட்சி ரசிக்கவில்லை.

12:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க விகடன்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. இப்படம் விஜய் திரைப்பயணத்தையே மாற்றியமைத்தது. உண்மையாகவே முருகதாஸ் இப்படத்தின் கதையை சூர்யாவிடம் தான் சொன்னாராம். அவரால் அந்த சமயத்தில் இந்த படத்தை செய்ய முடியாமல் போனதாம்.

12:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

சமுத்திரகனி படங்களில் அவர் அதிகப்படியான அறிவுரை கூறுவார், ஆனால் ட்ரெண்டிங்கில் சமுத்திரகனி இயல்பு மிகவும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக சில மீம்ஸ்கள் சமுத்திரகனியின் சில படங்களை வைத்து கொரோனா தொற்றுக்கு ஆறுதல் சொல்ல அதை பிடித்துக்கொண்ட சில மீம்க்ரியேட்டர்ஸ் அவரை அதிகப் படியாக கிண்டல் செய்ய துவங்கினர்.

11:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (Limited Community transmission) என்ற நிலையை அடைந்துவிட்டது என்கிறார் கொரோனா வைரஸ் குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ள பவித்ரா வேங்கடகோபாலன்.

11:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஜிகே வாசனுக்கு பாஜகவின் முயற்சியால் ராஜ்யசபா எம்பி பதவி அளிக்கப்பட்டது. அந்த வகையில் மு.க.அழகிரிக்கும் எம்பி பதவி அளிக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து அழகிரியை ராஜ்யசபா எம்பி ஆக்குவது என்பதுதான் பாஜகவின் இப்போதைய திட்டம்.

10:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த காவலரான சுரேஷ் மற்றும் அவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் மாவட்ட காவல்துறையின் புகார் எண்ணுக்கு அழைத்து, சர்வதேச கும்பல் ஒன்று மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டி வருவதாக புகார் அளித்தனர். விசாரணையில் புகாரளித்த இருவருமே மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

10:25:01 on 31 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மேலும் வாசிக்க