View in the JustOut app
X

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நாளை மாலை 5 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. மேலும் 7 நாள்கள் துக்க தினமாக உனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

07:13:24 on 16 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இரங்கல் தெரிவித்தார். அவர் தனது இரங்கல் செய்தியில், ’இந்தியா ஒரு மிகப்பெரிய தலைவரை இழந்துள்ளது; தனது முழுவாழ்க்கையை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் வாஜ்பாய்’ என்று தெரிவித்துள்ளார்.

07:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கின்றனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.05 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை உடல்நலக் குறைவால் காலமானார்.

06:55:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மிகச் சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

06:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானர். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

06:39:27 on 16 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், ’இந்தியா தனது சிறந்த மகனை இழந்து விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

06:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத்துறை பயிற்சி மையம் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனிடையே ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும், துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலுக்கும் மோதல் நடந்து கொண்டிருப்பதாக காபூல் போலீஸ் செய்தி தொடர்பாளர் ஹஷ்மட் ஸ்டான்க்ஷய் கூறியுள்ளார்.

06:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

நடிகை சாய் பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், ’கடினமான காலகட்டத்தில் கேரளாவில் உள்ள நமது குடும்பத்தினர் சிக்கியிருப்பதைப் பார்ப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலமுடன் இருக்க நமது முழு ஆதரவுக்கரத்தையும் நீட்டுவோம். நலமுடன் இருக்க பிரார்த்திப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

05:55:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

05:40:41 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார். இந்தப் போட்டிக்குப் பின்னர் பேசிய செரீனா, “நான் இன்னும் ஆரம்பத்தில் இருக்கிறேன். நான் கடினமாக உழைக்கப்போகிறேன், நான் நிறையப் போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

05:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க விகடன்

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

05:34:41 on 16 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு இலவச அட்வான்ஸ் டாக்டைம் கிரெடிட், 1 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் கேரளாவில் உள்ள பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் புதிய அறிவிப்பு கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கித்தவிக்கும் கேரள பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

05:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பள்ளிகொண்டான் பாறை பகுதியில், 2வது திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்த தந்தையைச் செருப்பால் அடித்ததால் விவசாயியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

05:16:27 on 16 Aug

மேலும் வாசிக்க மாலைமலர்

சிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சிலைக் கடத்தல் அதிகரித்து வெளிநாடுகளும் சம்பந்தப்பட்டு இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் ஓராண்டாக அறிக்கையைத் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

05:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைந்து நலம்பெற வேண்டுமென விரும்புவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ’அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

04:55:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த ஒருவார காலமாக கேரளாவில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முடியுமா என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

04:46:36 on 16 Aug

மேலும் வாசிக்க விகடன்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

04:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உரை நிகழ்த்துவதில் வல்லவர். உணர்ச்சிமிகு பேச்சால் அனைவரையும் தன் வசப் படுத்திக்கொள்பவர். மக்களவை உறுப்பினாராக பொறுப்பேற்ற வாஜ்பாய் ஆற்றிய உரை இன்றும் பலரால் நினைவுக் கூற முடிகிறது.

04:25:05 on 16 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த 9 வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை வாஜ்பாய் கட்டித் தழுவிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

04:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கேரளாவில் கனமழையால் 4 விரைவு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. கொச்சுவேலி-லோக்மான்ப் திலக், திருவனந்தபுரம்-லோக்மான்ப் திலக், எர்ணாகுளம்-நிஜாமுதீன், கண்ணூர்-எர்ணாகுளம் ஆகிய 4 விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது.

04:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று மதியம் 1.43 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

03:56:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

03:41:02 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் நலம்பெற நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

03:28:01 on 16 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கைதான காவலாளி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது வாக்குமூலத்தில், ”வேலை செய்த இடத்தில் நிற்கும் போது அவ்வழியாக காரில் செல்லும் அதிகாரிகள் என்னை கண்காணிக்கிறார்கள். அதான் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டினேன்” என்றார்.

03:11:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

இயக்குநர் பா.இரஞ்சித் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரிஸைத் தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:56:01 on 16 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் விஜயநகரில் அமைந்துள்ள ஜேஎஸ்டபிள்யூ விளையாட்டு இன்ஸ்டிடியூட்டில் (ஐஐஎஸ்) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, துப்பாக்கிச் சுடுதல் வீரர், அபிநவ் பிந்த்ரா, 'அடுத்த ஒலிம்பிக் சாம்பியன்களை நாம் உருவாக்க வேண்டும்' என்று கூறினார்.

02:41:01 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று 3-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதுள்ளது.

02:37:52 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

இத்தாலியில் உள்ள பிரமாண்ட பாலம், அங்கு பெய்த கன மழையின் காரணமாக, இடிந்துவிழுந்தது. இதில் 39 பேர் பலியாகியுள்ளனர். இதனால், இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே, ஜெனோவா மாகாணம் முழுவதும் 12 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

02:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க விகடன்

2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பாஜக.வால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் ‘மாற்றத்திற்கான இந்தியா’ எனும் பெயரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு வருகிறது.

02:11:01 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

திருவண்ணாமலையில் பழ குடோனில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அங்கிருந்த பழங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

02:09:26 on 16 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

‘மத்ஸ்ய’ என்றால் மீன் என்று பொருள். சற்று வளைந்த நிலையில் மீன் போன்று இந்த ஆசனம் தோற்றமளிப்பதால் இந்த ஆசனம் மத்ஸ்யாசனம் என்று அழைக்கப்படுகிறது. நுரையீரல், சுவாசக் குழாய் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் மத்ஸ்யாசனம் நன்மை அளிக்கிறது.

01:56:02 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

'இவ்வளவு மோசமாக ஆடும் போது விமர்சனங்களையும் தாங்க வேண்டும். உண்மை, எதார்த்தம், விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டும். இங்கிலாந்துக்கு பயணித்த மூத்த வீரர்களின் ஆலோசனைகளை கேட்பதற்குப் பதிலாக விராட் கோலியின் அணி அந்நாட்டின் காபியை அருந்தி மகிழ்கிறார்கள் போலும்.' என சந்தீப் பாட்டீல் விராத் கோலியை சாடியுள்ளார்.

01:41:02 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து கொண்டாடவில்லை என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் தனது பிறந்தநாளன்று ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

01:36:09 on 16 Aug

மேலும் வாசிக்க மாலைமலர்

குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதைப் புரிய வையுங்கள். புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். எந்த படம் வந்தாலும் அனுப்பியவரைத் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம்.

01:26:02 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில், சரங்கட்டி தேசியப் பூங்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களில் பயணம் செய்தனர். அப்போது சுற்றுலா வாகனத்தில் ஏறிய சிறுத்தை இனத்தைச் சேர்ந்த சிவிங்கிப் புலியுடன் சில சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்தனர்.

01:11:01 on 16 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தஞ்சை வெண்ணாறில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரின் அதிக வேகத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை உயிருடன் மீட்ட நிலையில் மற்றொரு சிறுமியின் உடலைத் தேடி வருகிறார்கள்.

01:05:25 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினை உணவில் நன்கு கட்டுபடுத்துவதாலும், கெட்ட கொழுப்பினை நன்கு கட்டுப்படுத்துவதாலும் இந்த ஓட்ஸ் உணவிற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. மேலும் இருதய நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக இது பரிந்துரைக்கப்படுகின்றது.

12:56:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் சுதந்திர தினத்தன்று, தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் தேசியகொடி காவி வண்ணம் கீழ்புறமும், பச்சை வண்ணம் மேல்புறமும் இருக்குமாறு தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

12:52:08 on 16 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை அண்ணா நகரில் நேற்று அம்புலன்ஸ் ஓட்டுநர் ஆதித்யன் என்பவரை கொலைச் செய்த வழக்கில் 7 பேர் கைதுச் செய்யப்பட்டனர். ராஜா, அரவிந்தன் , முருகன், சபரிநாதன், கார்த்தி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

12:41:02 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே நெம்மார பகுதியில் நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதுவரை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 77 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

12:26:17 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

விண்வெளி ஆய்வில் பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த 'திட்டத்துக்கான 70 சதவீத பணிகள் முடிவடைந்ததாக' இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

12:26:02 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்யும் கனமழை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு வங்கக்கடல் பகுதியில் 18-ம் தேதி புதிய காற்றழுத்த நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

12:24:21 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகி வரும் "அடங்க மறு" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

12:11:02 on 16 Aug

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

11:55:02 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய தபால் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 86 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு செப்.16ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

11:42:03 on 16 Aug

மேலும் வாசிக்க தினமணி

புனேவைச் சேர்ந்த நூற்றாண்டுகள் பழமையான காஸ்மாஸ் கூட்டுறவு வங்கியில் சைபர் அட்டாக் மூலம் ரூ.94 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. ஹேக்கர் ள் மூலம் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத ஹேக்கர்கள் காஸ்மாஸ் கூட்டுறவு வங்கியிலிருந்து வெளிநாட்டு வங்கிக் கிளைக்கு ரூ.94 கோடியை பரிமாற்றம் செய்துள்ளனர்.

11:41:01 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு 2 மடங்கு வரி விதித்தது அமெரிக்கா. இதனால், துருக்கியின் நாணய மதிப்பு சரிந்தது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி அதிபர், அமெரிக்காவிலிருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள், மதுபானங்கள், புகையிலை மீதான வரியை உயர்த்தியுள்ளார்.

11:26:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில், இதுவரை ஒரு கோடி பேரை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியநிலையில், அவர் எப்படி கட்சிக்கு ஆட்களை சேர்க்கிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புட்டு புட்டு வைத்துள்ளார்.

11:23:14 on 16 Aug

மேலும் வாசிக்க ஏசியாநெட் நியூஸ்

டெல்லி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. உயிர்காக்கும் உபகரணங்கள் கொண்டு வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

11:20:49 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

கேரள வெள்ள நிலவரம் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் பேசினார். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படைகள் கூடுதலாக கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார். மேலும் கேரள அரசுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்று கூறினார்.

11:13:12 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

’ரூபாய் மதிப்பு சரிவால் கவலையடைய தேவையில்லை. ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் அளவுக்கு போதுமான அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளதாக’, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி, ‘ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் 40,270 கோடி டாலர் அந்நிய செலாவணி நம்வசம் உள்ளது. இந்த தொகை போதுமானதுதான்’ எனவும் தெரிவித்துள்ளது.

11:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொச்சின், பாலக்காடு, வயநாடு போன்ற இடங்களில் முதல்முறையாக வெள்ளம் கரைபுரண்டு நகரம் மற்றும் கிராமங்களைச் சூழ்ந்துள்ளது. கொச்சினின் கம்பெனிபாடி பகுதியில் இதுவரை வெள்ளத்தைச் சந்திக்காத மக்கள் சிலர் தங்கள் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தாலும் வெளியேற மனமில்லாமல் இருப்பதாக தேசிய மீட்பு படையினர் கூறுகின்றனர்.

11:09:35 on 16 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்டு 15-ம் தேதி முதல் ஜியோபோன் 2 கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை இன்று (ஆகஸ்டு 16) மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஃபிளாஷ் விற்பனை நடைபெறுகிறது.

10:55:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர்.

10:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

கனமழை காரணமாக சாம்ராஜ் நகரில் இருந்து தமிழகம் செல்லும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. உதகை மற்றும் கூடலூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் கொச்சிக்கு செல்லும் பேருந்துகளும் கனமழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.

10:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றும், வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

10:22:11 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

வளசரவாக்கத்தில், பிறந்து சிலமணி நேரமே ஆன நிலையில் மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை உயிருடன் மீட்ட பொதுமக்கள், அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் சூட்டினர்.

10:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

1940-ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பென்சில்வேனியாவில், சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்கள், பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளதாக, மாகாண தலைமை நீதிபதிகள் குழு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

09:56:01 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்த பொதுவிருந்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய 2 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். யார் வேட்பாளர்கள் என்பதை அதிமுக உயர்மட்டக்குழு தேர்வு செய்யும்" என்று கூறினார்.

09:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

இரவு விடுதியில் தகராறில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் ரையான் அலியும் விடுவிக் கப்பட்டார். ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

09:26:01 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கிரீடம், மதராசபட்டிணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.

09:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் கறிக்கோழி விலை கடந்த 4 மாதத்திற்கு பிறகு பெரிய அளவில் சரிவடைந்துள்ளது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் மொத்த விலை உயிருடன், இம்மாதத்தில் 62 முதல் 65 வரை விற்கிறது. கடந்த இரண்டரை மாதத்தில் கிலோ 25 முதல் 41 வரை சரிந்துள்ளது.

08:40:02 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 22ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டதோடு ஏர்டெல் தளத்தில் மாத தவணை முறையிலும் வழங்கப்படுகிறது.

08:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் வாஜ்பாய்க்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுவாசக் கருவி உதவியுடன் வாஜ்பாய்க்கு சிகிச்சை நடைபெறுகிறது.

07:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் காலமானார். 77 வயதான அஜீத் வடேகர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 1966 முதல் 1974 வரை இந்திய அணிக்காக விளையாடிய பெருமைக்குரியவர் ஆவார்.

07:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

அடிக்கடி வாயு வெளியேறுவதைத் தடுக்க புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேக வைத்துச் சாப்பிடலாம்.

07:10:02 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

06:56:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

உ.பி.,யில் உள்ள ஆக்ரா விமான நிலையத்திறகு உபாத்யாயாவின் பெயரையும், கான்பூர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் சங்கர் வித்யார்த்தி பெயரையும், பைரேலி விமான நிலையத்திற்கு, நகரின் பழைய பெயரான நாத் நக்ரி பெயரையும் சூட்ட வேண்டும் என யோகி ஆத்யநாத் அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

06:41:01 on 16 Aug

மேலும் வாசிக்க தின மலர்

வரிக் குறைப்பின் பயன்களை நுகர்வோருக்கு வழங்காத சுவர் புட்டி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுவர் புட்டிக்கான ஜிஎஸ்டி வரி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், புட்டி பைகளில் அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்படாமலேயே சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

06:26:01 on 16 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிளஸ்-டூ முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘11, 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

06:10:02 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

தெலுங்கில் தற்போது உருவாகி வரும் என்.டி.ஆர் வாழ்க்கைப் படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க நடிகை மஞ்சிமா மோகனுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் தெலுங்கில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார் மஞ்சிமா.

05:56:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

அடுத்த மாதத்திற்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 14417 என்ற உதவி எண் மூலமாக மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

05:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் ஒரு புதிய படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். நவம்பர் மாதத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இப்படத்துக்கு ஆதி புதிய உடற்கட்டுடன் தேவைப்படுவதால் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

05:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், ’வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து நிறைய சம்பாதித்து விட்டேன். போதும் இனியும் நாம் நடித்தால் அப்பா வேடத்தில்தான் நடிக்க வேண்டும். அப்பா வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

05:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

நடிகர் சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இது பவண் கல்யாண், சமந்தா, பிரணிதா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அட்டரின்டிகி தரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதால் சிம்புவின் மாமியார் வேடத்தில் குஷ்பு நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

04:55:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஜூலை மாதத்தில் 2.42 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆய்வு நிறுவனமான வெஞ்சர் இண்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள இது தொடர்பான அறிக்கையில், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டில்தான் ஸ்டார்ட் அப் துறையில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

04:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கழுகு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான 1 மணி நேரத்தில் இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் வட இந்திய உரிமை விற்பனை முடிவடைந்துள்ளது. கழுகு படத்தின் அன்றைய வெற்றி அப்படத்தின் இரண்டாம் பாக வியாபாரத்திற்குக் காரணமாக இருந்தது என்கிறது தமிழ் சினிமா விநியோக வட்டாரம்.

04:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

முறையாகத் தங்களது வரிகளைச் செலுத்தி வருபவர்களைச் சுதந்திர தின விழா உரையில் பாராட்டிய பிரதமர் மோடி, கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ள வரி செலுத்துவோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

04:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. அதேபோல் பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை ரோஹிணி ரூ.2 லட்ச ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

03:55:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ’உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம். திருப்பரங்குன்றம், திருவாரூரில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். வேட்பாளர்கள் குறித்து உயர்மட்டக் குழு முடிவெடுத்து அறிவிக்கும்’ என்று கூறியுள்ளார்.

03:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க தின மலர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதியின் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

03:25:02 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சூடான் நாட்டில் நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பள்ளி குழந்தைகள் பலியாயினர். 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுடன் பயணித்த படகு, இன்ஜின் கோளாறு காரணமாக நீரில் மூழ்கியது. உயிரிழந்த குழந்தைகளின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

03:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தின மலர்

ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் ஜோதிகா பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளை வலியுறுத்துகிறார்.

02:55:02 on 16 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

திருச்சியைச் சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் பலாத்காரம் செய்ததால் பள்ளி செல்லும் சிறுமி கருத்தரித்துள்ளார். தனது மகளின் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் அவரது தாயார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சிறுமி வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி அளித்துள்ளார்.

02:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

’இந்திய வீரர்கள் இதுவரை தங்களையும், தங்களது ஆதரவாளர்களையும் தலைகுனிய வைத்துள்ளனர். பேட்டிங் பொறுப்பற்றதாக இருந்தது. அறியாமை தனத்துடன் விளையாடினர். இந்திய அணியின் பேட்டிங் முட்டாள் தனமாக இருந்தது’ என்று ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார்.

02:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்படும். 1ஆம் வகுப்பு முதல் 5 மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் சீருடை மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

02:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தின மலர்

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த கழுகு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது தற்போது உருவாகி வருகிறது. திருப்பூர் பி.ஏ.கணேசன் தயாரிக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டென்மெண்ட் கைப்பற்றியிருக்கிறது.

01:55:02 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

இன்று டெல்லியின் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அங்கு வாழும் தமிழர்கள் பாரம்பரிய முறையில் கலந்து கொண்டனர். இது அந்நிகழ்ச்சிக்கு வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இவர்களுக்கு உணவு, போக்குவரத்து மற்றும் பிரத்தியோக அழைப்பிதழ் ஆகியன தமிழ்நாடு அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

01:40:02 on 16 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

’நான் அடுத்து ஒட்டகத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன். சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்’ என்று தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் தெரிவித்துள்ளார். ஒட்டகத்தைப் பராமரிக்க ஆகும் செலவு ஒரு ஹீரோவின் சம்பளத்துக்கு இணையானது.

01:25:02 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர் திறப்பு வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து 50,500 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆறு வழியாக வந்து திரிவேனி சங்கமம் பகுதியில் காவிரியில் கலக்கும். பவானிசாகர் அணைக்கு 43,984 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

01:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

நடிகை தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும், இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமான சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

12:55:02 on 16 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டை மாவட்ட ஜூனியர் நிலையில் உள்ளவர் சிவில் நீதிபதி சத்ய நாராயணராவ். அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 29 வயதான பெண் வக்கீல் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி பெண் வழக்கறிஞர், நீதிபதி சத்ய நாராயணராவ் மீது போலீசில் புகார் மனு கொடுத்தார்.

12:40:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினமலர்

சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை முறையில் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு வருகை, புறப்பாடு பகுதியில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விமானம் புறப்படும் நேரம், சுற்றுலா தளங்கள் குறித்து கேட்டு பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

12:25:01 on 16 Aug

மேலும் வாசிக்க தினகரன்

12 பூச்சி கொல்லி மருந்துகளை உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 6 மருந்துகள் 2020 டிசம்பர் முதல் தடை விதிப்பதாகவும் கூறியுள்ளது. இந்த மருந்துகளை இறக்குமதி செய்பவர்கள், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

12:10:01 on 16 Aug

மேலும் வாசிக்க தின மலர்

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், துவங்கி நடைபெற்று வந்த நிலையில், எஸ்.கே.13 படக்குழுவில் நயன்தாரா இணைந்திருக்கிறார்.

11:55:01 on 15 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒரு அமைப்பை விமர்சனம் செய்வது எளிது. ஆனால் அதனை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பது கடினம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார். மேலும் அவர், ’நாட்டின் நீதித்துறையை பாதுகாக்க, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

11:40:01 on 15 Aug

மேலும் வாசிக்க தின மலர்

சீன கரன்சி அச்சடிக்கும் நிறுவனத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக வெளியான தகவலை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. கரன்சி அச்சடிப்புக்கு சீன நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தந்ததாக வெளியான தகவலையும் அரசு மறுத்துள்ளது.

11:25:01 on 15 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ரேகளி நகர் அருகே முகினி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக நரேஷ் என்ற வாலிபரை போலீசார் அதே தினத்தில் கைது செய்தனர்.

11:10:01 on 15 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது 23-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அமேசான் பே உடன் இணைந்து பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது.

10:55:01 on 15 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

மேலும் வாசிக்க