View in the JustOut app
X

திருச்சி, வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர், ராய்பூர் ஆகிய 6 விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த 6 விமான நிலையங்களையும் அதானி நிறுவனம் கைப்பற்ற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

11:55:02 on 20 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில்,உதகை குந்தா நெடுஞ்சாலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து, மேலும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியது.

10:55:02 on 20 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.
இந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

09:55:02 on 20 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

குற்றால அருவியில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர்.

08:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க தினகரன்

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதற்கான மண் ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

08:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள பாறை படுகை ஒன்று இருந்ததாக ஆராய்ச்சியில் தெரியவந்தது. கடந்த 2012 முதல் நாசா கியூரியாசிட்டி ரோவர் மூலம் அதனை மேலும் ஆராய்ந்து வருகின்றனர்.

07:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க தினமணி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்தபோது 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுபோல், தற்போது பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்களும் உயிரிழப்பைச் சந்திப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி நிர்வாகத்தின் தவறால், ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

07:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க விகடன்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள zomato நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்நிறுவனத்தின் மாடியில், டெலிவரி பைகள் கிடந்துள்ளன. அந்த பைகளில் மழைநீர் தேங்கி கொசு வளர்வதற்கான சூழல் காணப்பட்டதால், அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

06:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் துணி நிறுவனம் ஒன்று தனது கடை முன்பு விளம்பர பலகை வைத்துள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உருவத்தினையொத்த ஒருவரை தரையில் கிடத்தி, தடகள போட்டிக்கான உடை அணிந்த பெண் ஒருவர் அவரது முகத்தின் மீது காலால் மிதித்தபடி உள்ளார்.

06:25:01 on 20 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

சாய் என்ற இளைஞர் இயக்கியுள்ள படம் இபிகோ 306. இந்திய தண்டனை சட்ட பிரிவில் இது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தை குறிக்கும். படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் முக்கிய எதிர்மறை வேடத்திலும் சாய் நடித்துள்ளார். இப்படம் நீட் தேர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை பேசும் என்கிறார்.

05:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

”மத்திய பாஜக அரசு, சமூக நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வைத் திணித்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன இளைய சமூகத்தினரின் மருத்துவர் ஆகும் இலட்சியத்தைத் தகர்த்துத் தவிடுபொடி ஆக்கி விட்டது.” என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

05:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கமலேஷ் திவாரியைக் கொன்றது முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று உபி, குஜராத், மகாராஷ்டிர மாநில போலீஸார் சொல்லிக் கொண்டிருக்க, ‘மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுதான் காரணம்’ என்கிறார் கமலேஷின் தாய்.

04:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஹுவாவே நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தை தங்களது நாட்டில் சந்தைப்படுத்துவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், இந்தியாவில் அதே தொழில்நுட்பத்தை பரிசோதித்து காட்டும் வாய்ப்பு அந்நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

04:27:02 on 20 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வேலைவாய்ப்பின்மையை யாருமே விரும்பாத நிலையில், தனியார் நிறுவனங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நோபல் விருது பெற்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதார சரிவை மீட்க, ஏழை மக்களின் கைகளில் நிறைய பணத்தை தர வேண்டும் என்றும் அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.

03:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அட்லீ மீது நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டால் தமிழ் திரைப்படங்களை இயக்க முடியாத அளவுக்கு அட்லீக்கு ரெட் கார்டு போடும் சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் கோலிவுட் உலகைச் சுற்றி வந்த வண்ணம் உள்ளது.

03:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கிய அடுத்த நாள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

02:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

”ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் களத்தில், பல சவால்களை சந்தித்தேன். என்னை கிண்டல் செய்தவர்களை, தற்போது மேடையில் நின்றபடி நான் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

02:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்திய ராணுவம் பீரங்கிகள் மூலம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

01:57:02 on 20 Oct

மேலும் வாசிக்க தினமலர்

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைபட்டுக்கிடக்கும் வரை, இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. குறிப்பாக, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

01:27:02 on 20 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை ஒட்டி 10,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஏ.டி.ஜி.பி. தகவல் அளித்துள்ளார். பசும்பொன்னில் ட்ரோன் மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயந்தமுரளி பேட்டியளித்துள்ளார்.

12:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று (அக்.,20) முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

12:27:02 on 20 Oct

மேலும் வாசிக்க தினமலர்

லண்டனில் உள்ள ராயல் பெர்த் ஹாலில் திரையிடப்பட்ட பாகுபலி படத்தை ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர். பிரபாஸ், அனுஷ்கா, ரானா, ராஜமவுலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

11:57:02 on 20 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்றபோதிலும், விக்கிரவாண்டியில் மட்டும் தேர்தல் களம் கூடுதல் பரபரப்புடன் இருந்தது. காரணம், அங்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மேற்கொண்ட தீவிர பிரசாரம்.

11:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க விகடன்

நாடு முழுவதும் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 117 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சமாக சரிந்துள்ளது.

11:00:09 on 20 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

6வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இன்று தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

10:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

விக்கிரவாண்டியில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோத, நாங்குநேரியில் அதிமுகவோடு திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் மோதுகிறது. இரண்டு தொகுதிகளிலும் இரண்டு கூட்டணி கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள கடைசிகட்ட ஆயத்தத்தில் இருக்கின்றன.

09:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

"ஒரு மெஜாரிட்டி ஆட்சிக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இப்போது கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். தற்போது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி சுப்ரீம் கோர்ட்டில் ஊசலாடுகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு தீர்ப்பு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழும்." என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

09:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 11,148 கன அடியாகவும் நீர் இருப்பு 28.8 டி.எம்.சியாகவும் உள்ளது.

08:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க தினகரன்

வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்வது, எடுப்பது, செக், டிடியை வங்கியில் டெபாசிட் செய்வது, கணக்கு பட்டியல் கோருதல், புதிய செக் புத்தகம் கோருதல், டிடி, டெர்ம் டெபாசிட் போன்ற வங்கிச்சேவைகளை வீட்டுக்கே வந்து வழங்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

08:27:01 on 20 Oct

மேலும் வாசிக்க தினமணி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.89ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 20 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்டவர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்று பணியில் சிறப்பாக செயல்படும் ஊழியர்களின் ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளது.

06:57:01 on 20 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதனால், கிட்டத்தட்ட 33,000 பவுடர் டப்பாக்களை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

05:55:01 on 20 Oct

மேலும் வாசிக்க விகடன்

சேலத்தைச் சேர்ந்த மணிவண்ணன் - இந்துமதி தம்பதியினர், சேலம் மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக தரப்படும் என விளம்பரப்படுத்தி அதன் மூலம் மோசடி செய்துள்ளனர்.

04:55:01 on 20 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க உள்ளார் என்கிறார்கள்.

03:55:02 on 20 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகை மஞ்சிமா மோகன், தற்போது விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மஞ்சிமா மோகன் ஒரு சோகமான பதிவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட அதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

02:55:01 on 20 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

அமெரிக்கா ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியது முதல் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் விதிக்காத வகையிலும், ஈரான் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் நோக்கிலும் அமெரிக்கா இந்த தடைகளை விதிக்கிறது.

01:55:01 on 20 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உடல் ஆரோக்கியத்தை மேன்மைபடுத்துவதில் முக்கியபங்கு வகிப்பது மூச்சு பயிற்சி. மனிதனின் ஆயுள் காலத்தை அவன் விடும் மூச்சுதான் தீர்மானிக்கிறது. வேகமாக மூச்சை இழுத்து விரைவாக வெளிவிடப்படும் மூச்சு தன்மையால் ஆரோக்கிய சீர்கேடுதான் உண்டாகும். ஆழ்ந்து மூச்சுவிட்டால் உடல் உறுப்புகளின் இயக்கம் சீராக இருக்கும்.

12:55:01 on 20 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

துணி பைக்கு 18 ரூபாய் வசூலித்த பிரபல பிக் பஜார் நிறுவனம் மீது நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பைகளுக்கான செலவுகளை தனியாக வாடிக்கையாளர்கள் மீது பிக்பஜார் நிறுவனம் திணிப்பதை ஏற்க முடியாது என்று தீர்ப்புக் கூறியது.

11:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க Behind Woods News

நீண்டநேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் நூடுல்ஸ் உணவுக்குண்டு. ஆகையால் பசி அதிகமாக எடுக்கும்போது இதை சாப்பிடலாம். ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், சில பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். இந்த நூடுல்ஸில் இருக்கும் கொழுப்பு, நீங்கள் தூங்கும்போது உங்கள் உடலின் எடையை எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம்.

11:55:02 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் போளூர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒசூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது தான் ஓட்டி வந்த கண்டெய்னர் லாரியை யாரோ திருடிக்கொண்டு வேகமாக கிளம்பி போவதை கண்ட ஓட்டுநர் திருடன் திருடன் என கூச்சல் போட்டுள்ளார்.

10:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

மலையாளம் என்றாலே 'feel good' படங்கள்தான் வரும். எல்லா விதமான படங்களையும் மெதுவான திரைக்கதையை வைத்தே சொல்லுவார்கள். மலையாளத்தில் வெளிவந்துள்ள ஜல்லிக்கட்டு படத்தில் மிகவும் அருவெறுப்பான காட்சிகளை வைத்தே கதை சொல்லப்பட்டிருக்கிறது.

09:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தபாங் 3 படத்தைத் தொடர்ந்து, சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ராதே’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்து பிரபு தேவா செய்தியாளர்களிடம் கூறும் போது, “அடுத்த ஆண்டு பக்ரீத் அன்று இப்படம் வெளியாகும். விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

08:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாடுமுழுவதும் உள்ள கால்நடைகள் எண்ணிக்கை குறித்து தற்போது எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் நாட்டு மாடு இனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. கடந்த, 2012இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டு மாடுகளின் எண்ணிக்கை, 16 கோடியாக இருந்தது. அது தற்போது, 13.98 கோடியாக குறைந்துள்ளது.

08:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியும், பா.ஜ.க ஆதரவாளருமான கல்யாண ராமன் என்பவர் அகமதாபாத்தில் முஸ்லிம் இளைஞரை ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி வற்புறுத்தியதை பெருமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

07:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தீபாவளி பண்டிகை வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த வீரகனூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 4 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

07:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை நஸ்ரியா. நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் அவர் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து தற்போது படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் தற்போது புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி வலிமை என டேக் போட்டுள்ளார்.

06:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகழ்பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் இழக்கும்.

06:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிரானகர் நகருக்கு அருகே சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ள மன்யாரி-சோர்கலி கிராமத்தில் இரவு 7 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

05:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொலை அறிவிப்பு போஸ்டரால் மிரளும் மதுரை. எதிரியைப் பழிவாங்க பா‌திக்கப்பட்டவர்கள் சபதமேற்கும் கதைகளை எல்லாம் ஏராளமான சினிமாக்களில் பார்த்திருக்கி‌ன்றோ‌ம். அதனை விஞ்சும் வகை‌யில் மதுரை அனுப்பானடி பகுதியி‌ல் ஒட்டப்ப‌ட்டிருக்கும் போஸ்டர்கள் காண்போரை கதிகலங்க வைத்திருக்கிறது.

05:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மராட்டியம், அரியானா மாநிலங்களில் நாளை மறுநாள்சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு 198 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 76 இடங்கள் வரை கிடைக்கலாம்.

04:57:02 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

கர்நாடகத்தில் காப்பியடிப்பதை தவிர்க்க தேர்வு நேரத்தின் போது மாணவர்களின் தலையில் அட்டைப் பெட்டியைக் கவிழ்த்து தனியார் கல்லூரி ஒன்று விநோத நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

04:27:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினமணி

மாமல்லபுரத்தில் இந்தியர்கள் வெண்ணெய் உருண்டையை காண ரூ.40, வெளிநாட்டவர்கள் அதை காண ரூ.600 என்று தொல்லியல்துறை அறிவித்துள்ளது. இன்றிலிருந்து வெண்ணெய் உருண்டையை காண கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

03:57:02 on 19 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

உ.பி.,யில் ஹிந்து மஹாசபையின் தலைவராக இருந்தவர் கமலேஷ் திவாரி. இவர் ஹிந்து சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சி துவக்கினார். நேற்று(அக்.,18) லக்னோவில் உள்ள அலுவலகத்தில் இருந்த கமலேஷ் திவாரியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை உ.பி., மற்றும் குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.

03:30:13 on 19 Oct

மேலும் வாசிக்க தினமலர்

கோவை மாவட்டம் மாச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவரிடம், பத்திரிகையாளர்கள் எனக் கூறி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

03:00:11 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஐந்தாண்டுத் திட்டங்கள் நினைவிருக்கிறதா? இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம். ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கிரெம்ளின் பொருளாதாரம் மட்டும் வளரவில்லை, மாஸ்கோவின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்துள்ளது.

02:30:17 on 19 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 23ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:00:09 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு உதவும். சிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

01:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சென்னையில் மட்டும் 60 இடங்களில் கொள்ளையடித்ததாக முருகன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அதைத்தொடர்ந்து தமிழக போலிஸார் முருகனிடம் நடத்திய விசாரணையில், சென்னையின் முக்கியப் பகுதியான அண்ணாநகர், கே.கே.நகர், திருமங்கலம், அமைந்தகரை போன்ற பகுதிகளில் முருகன் கைவரிசையைக் காட்டியது தெரியவந்துள்ளது.

12:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் அணிக்கான கேப்டனாக செயல்பட்ட சர்ஃபராஸ் அகமதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென நீக்கியுள்ளது. தொடர் தோல்வியின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

12:27:02 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் அமிர்கத் தாலுகாவில் உள்ளது கட்டிசித்தாரா என்ற கிராமத்தில் யாராவது மது குடித்தது தெரியவந்தால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், மது குடித்தவர் அந்த கிராமத்துக்கே மட்டன் பிரியாணி விருந்து அளிக்க வேண்டும்.

11:57:02 on 19 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தற்போது வைரலாகும் போலி 1000 ரூபாய் நோட்டின் புகைப்படம் பல மாதங்களுக்கு முன்பிருந்தே சமூக வலைதளங்களில் உலவியதுதான். இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்ற தகவலால் மீண்டும் பலரால் பரப்பப்பட்டு வருகிறது. புதிய 1000 ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

11:30:24 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐநா.சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டு விட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது என்று ஐநா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:00:26 on 19 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”நாங்கள் கொண்டு சென்ற மனுவை அமைச்சர் வாங்கியே பார்க்கவில்லையே? நாங்கள் அதிமுகவும் கிடையாது திமுகவும் கிடையாது. எங்களுக்கு எந்த கட்சியும் கிடையாது. அமைச்சரை முன்ன பின்ன நாங்கள் பார்த்தது கூட கிடையாது. அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறோம்” என்கிறார் நாங்குநேரி கேசவனேரி ஜமாத் தலைவர்.

10:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்பீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக வரும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.

09:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

”நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, இன்று மாலை 6 மணிக்குள் தொகுதிக்குள் இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார்.

09:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போன் பார்க்க மோட்டோ இ6 போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16:9 டிஸ்ப்ளே, நாட்ச் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

08:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னையை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மர்மக்காய்ச்சலால் இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

08:38:25 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ்-ஐ’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் அந்நோய்த் தொற்று மற்றவர்களுக்கும் எளிதாகப் பரவும்.

07:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினமணி

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், ராமர் கோயில் கட்டும் வாய்ப்பு இரண்டு இந்து அமைப்புகளில் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி நீடிக்கும். சன்னி வக்பு வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், அந்த நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முஸ்லிம் அறிவுஜீவிகள் குழுவினர் கூறியுள்ளனர்.

06:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் திரைப்படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டு படபூஜையை நடத்தியிருக்கிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய டீம் அப்படியே வலிமை திரைப்படத்திலும் பணியாற்றுகிறது. யுவன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை என்கின்றனர் படக்குழுவினர்.

05:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் வெளியான நோக்கியா 105 போனின் அப்டேட் வெர்ஷனாக நோக்கியா 110 உள்ளது. MP3s, எப்ஃஎம் ரேடியோ, ஸ்நேக் கேம், ரியர் கேமிரா என ஒரு நாஸ்டாலஜிக் பேக்கேஜ் ஆகவே நோக்கியா 110 வெளியிடப்பட்டுள்ளது. 1,599 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

04:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2% ஆக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இது 6% ஆக குறைந்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.

03:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஜுரம் வரும் ஸ்வட்டர் கண்டிப்பாக போடக்கூடாது. ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து ஜூரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும். எனவே கண்டிப்பாக ஸ்வட்டர் போட கூடாது. இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு. எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க ஸ்வட்டர் பயன்படுத்தலாம்.

02:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

வழக்கமாக ஆர்.ஏ.சி மற்றும் காத்திருப்பு பயண டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகள் இருக்கைக்காக டி.டி.இ-யைத் தேடுவார்கள். அதற்குப் பதிலாக சூப்பர்ஃபாஸ்ட் ரயிலில் பயணிக்கும் பயணிகள் டி.டி.இ.வை சந்திக்க ஏ-1 கோச்சில் உள்ள பெர்த் எண் 5க்கு செல்ல வேண்டும்.

01:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

OnePlus 5T மற்றும் OnePlus 5-க்கான OxygenOS 9.0.9 அப்டேட் அக்டோபர் 2019-ல் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. மென்பொருள் பதிப்பு விரிவாக்கப்பட்ட Screenshots அம்சத்துடன் ஒரு சிக்கலை சரிசெய்கிறது. மேலும், பொதுவான பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் உள்ளன.

12:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

#Switch_To_BSNL என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிரது. இதற்கு முன்னர் மைக்ரோ பிளாகிங் தளத்தில் பிஎஸ்என்எல் 4ஜி பிரபலமானதை தொடர்ந்து இப்போது டிவிட்டரில் பிஎஸ்என்எல் டிரெண்டாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது. இது ஐம்பது பயணிகளுடன் நியூயார்க் நகரிலிஇருந்து சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது.

11:00:04 on 18 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சமீபத்திய காலகட்டங்களில், நகர்ப்புறத்துடன் ஒப்பிடும்போது கிராமப்புற வளர்ச்சி மிக வேகமாக குறைந்துள்ளது. கிராமப்புற எஃப்.எம்.சி.ஜி வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், நகர்ப்புறத்துடன் ஒப்பிடும் போது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லறை விற்பனை சரிந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

09:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சாதனை மேல் சாதனைகளை புரிந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமம், ரூ.9 லட்சம் கோடி சந்தை மதிப்பை கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 2018 ஆகஸ்டில் 8 லட்சம் கோடியை கடந்தது.

08:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பாபர் மசூதி அமைந்திருந்த ஒட்டுமொத்த இடத்தைப் பங்கு போடாமல், முழுமையாகத் தங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது முஸ்லிம், இந்து ஆகிய இரு தரப்பினரின் வாதமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால், ஒரு தரப்பினருக்கே ஒட்டுமொத்த நிலத்தையும் கொடுத்துவிட வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

08:27:02 on 18 Oct

மேலும் வாசிக்க விகடன்

ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு அபராதம் போட வேண்டும் என டிராய்க்கு (TRAI) ஜியோ கடிதம் எழுதியுள்ளது. அதில், ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் செய்யும் மோசடியால் ஜியோ நிறுவனத்துக்கு நிமிடத்துக்கு 52 காசுகள் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது.

08:00:09 on 18 Oct

மேலும் வாசிக்க Behind Woods News

”சிம்பு ஒரு நல்ல கலைஞன். இப்போ அசுரன் படம் பார்த்தேன், தனுஷை பாராட்டாம இருக்க முடியாது. யோசித்துப் பார்க்கும் பொழுது எனக்கு சிம்பு மேல் கோபம்தான் வருகிறது. இவ்வளவு திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்துகிடப்பதை பார்த்து கோபம்தான் வருகிறது.” என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

07:27:01 on 18 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

பாஜக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வதை அதிமுக விரும்பவில்லை என்றும், அதனால்தான் பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தைத் தடுக்கிறார்கள் என்றும் டெல்லிக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதிமுக பாஜக இடையே இடைத்தேர்தல் விவகாரத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட விரிசல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

06:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கணவரை மனைவி வேறொரு பெண்ணிடம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாகவே கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்திருந்தும் மனைவி அடிக்கடி சென்று கண்டித்து வந்துள்ளார். மேலும், தன்னுடன் வந்துவிடுமாறும் கணவரை கேட்டுள்ளார்.

06:29:54 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது. லாரியில் வழங்கும் 9000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.700 கட்டணம் வசூலித்த நிலையில் 735ஆக உயர்த்தியுள்ளது. மேலும் 6 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீரின் விலை 435லிருந்து 499ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

06:00:14 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கமலேஷ் திவாரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

05:30:23 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தப்படுவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள், மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

04:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

அரசு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை, பிரதமர் மோடி தனியாருக்கு விற்று வருவதாகவும், இதனால் மிகப் பெரிய முரண்பாடு ஏற்பட்டு முதலாளித்துவம் அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

04:30:13 on 18 Oct

மேலும் வாசிக்க தினமலர்

விழுப்புரம் மாவட்டம் அரோவில் அருகே உள்ள குயிலாம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் பிரச்சினையால் தனது மனைவி மற்றும் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

03:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

இஸ்லாமியர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரங்கெட்ட முறையில் பேசியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. வடநாட்டு பா.ஜ.க அமைச்சர் போல தன்னை நினைத்துக் கொண்டு செயல்படும் ராஜேந்திரபாலாஜியை அ.தி.மு.கவின் தலைமை கட்டுப்பட்டுத்த வேண்டும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

03:30:00 on 18 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

இந்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் புல்வாமா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் சட்டீஸ்கரில் இருந்து வந்திருந்த தொழிலாளி ஒருவரும், பஞ்சாபில் இருந்து வந்திருந்த ஆப்பிள் வியாபாரி ஒருவரும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

03:00:06 on 18 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். விவசாயிகளின் பொருளாதார சூழல் பற்றி பேசுகிறது இப்படம். இதனையடுத்து, விஜய்சேதுபதி படத்திற்காக பயன்படுத்தபோகும் விவசாய சங்க கட்டடத்தை செட்டாக அமைக்காமல் உண்மையான கட்டிடம் ஒன்றை கட்ட சொல்லி உள்ளார்.

02:29:52 on 18 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

நடிகை ஆண்ட்ரியா, திருமணமான ஒருவருடன் தான் தவறான உறவில் இருந்ததாகவும் உடலளவில் அவர் காயப்படுத்திவிட்டதாகவும் கூறியிருந்தார். அவர் யார் என்பதை கூறாத ஆண்ட்ரியா முறிந்த சிறகுகள் என்ற கவிதை புத்தகம் மூலம் அவர் யார் என கூற இருந்தார். புத்தகமும் நேற்று வெளியாவதாக இருந்தது, ஆனால் வரவில்லை.

02:00:28 on 18 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி, பேட்ரிக் டே என்ற வீரருக்கும் சார்லஸ் என்ற வீரருக்கும் இடையே நடைபெற்றது. அப்போது சார்லஸ் விட்ட சரமாரியான குத்துகளில் பேட்ரிக் டே நிலைகுழைந்து கீழே சாய்ந்தார். அவரது தலையில் குத்துகள் விழுந்ததால் சுயநினைவை இழந்தார்.

01:27:02 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

”அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஜெயலலிதாவை மனதில் வைத்துக்கொண்டு சசிகலா குறித்து கருத்து சொல்லியிருக்கிறார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். விரைவில் சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா, டிடிவி தினகரனின் கட்சிக்கெல்லாம் போகமாட்டார்.” என புகழேந்தி தெரிவித்தார்.

12:57:02 on 18 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினமணி

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

11:30:05 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டெல்லியில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. அதுவும் தக்காளியின் தரம் மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களை பொறுத்து ரூ.80 வரை கொடுக்க வேண்டி இருப்பதாக டெல்லிவாசிகள் குமுறுகின்றனர்.

11:00:18 on 18 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

டெல்லியில் இருந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்ற பயணியர் விமானத்தை, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடுவானில் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

10:27:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினமலர்

அயோத்தி வழக்கு குறித்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் கூடிய அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகள், சுமார் 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், விசாரணையில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

09:57:02 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மேலும் வாசிக்க