View in the JustOut app
X

சவுத் கரோலினாவில் (South Carolina) உருவாக்கப்பட்ட போயிங் 787 டிரீம்லைனர் (Dreamliner) உள்ளிட்ட விமானங்களில் கழிவுப் பொருள்கள் அகற்றப்படாமல் அலட்சியமாக போடப்பட்டது என்று வெளியான தகவல் போயிங் நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

07:55:01 on 20 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

06:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05:57:02 on 20 Feb

மேலும் வாசிக்க தினமணி

ஆர்யா தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ஆர்யா நடிக்கும் 30-வது படம். 1970-காலகட்டத்தில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு சல்பேட்டா என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

10:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

முதலில் விரிப்பு விரித்து கிழக்குத் திசை அல்லது மேற்குத் திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.

09:55:01 on 19 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

தவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ஹைதராபாத்தில் வாழ்ந்துவரும் மொஹம்மத் சத்தார் கான் என்பவர், இது தொடர்பாக தனக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆதார் பிராந்திய அலுவலகம், தான் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

08:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ.,க்கு எதிராக சாலையை மறித்து போராட்டம் நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் குழு, எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமையுள்ளது போல, சாலையை பயன்படுத்துபவர்களுக்கும் உரிமையுள்ளது என பேச்சு நடத்தியது.

08:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினமலர்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, மதுரையில் ஜமாத்துல் உலமாக்கள் சபை சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் NRCக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.

07:55:02 on 19 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஜகமே தந்திரம் என்று பெயிரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

07:25:01 on 19 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதோஹி தொகுதி எம்எல்ஏ ரவீந்திர நாத் மிஷ்ரா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

07:09:07 on 19 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ம் தேதி வந்த எம்.வி. மேக்னட் (m.v. magnate) கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும், அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

06:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இயக்குனர் அட்லி சினிமாவில் ஆக்டிவாக இருந்தாலும், தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை தவறவில்லை. அந்த வகையில் இன்று காலையிலேயே ப்ரியா அவர் வளர்க்கும் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘My world love you both ’ என்று அட்லி கூறியுள்ளார்.

05:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு பஸ் டிரைவர்கள் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவையடுத்து அரசு பஸ் டிரைவர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பது இல்லை.

05:25:01 on 19 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான பிரவீன் குமார் தலைமையிலான கட்சி தொண்டர்கள், முக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்து மாட்டு இறைச்சி சமைத்து விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

04:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினமலர்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். இருப்பினும், பிரதமர் மோடியைப் பற்றி பேசிய டிரம்ப், அவர் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

04:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை குவித்து, ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் மீண்டும் பேட் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சமித் டிராவிட், தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை நிறைவு செய்ய 146 பந்துகள் மட்டுமே எடுத்துகொண்டார். இதில் 33 பவுண்டரிகள் அடித்தார்.

03:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க NDTV தமிழ்

‘வலிமை’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

03:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகுப்பு வழங்கப்படும் என்றும், இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும் என்றும், அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

02:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அன்சாரி காஸ்வா உல் இந்த் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:27:02 on 19 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை சேப்பாக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்தது நீதிமன்றம் தடை வித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்லவில்லை என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். அடையாள அட்டை, தேசிய கொடியுடன் இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

02:07:50 on 19 Feb

மேலும் வாசிக்க தினகரன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் மாநாடு. இப்படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ், எஸ்.ஜ. சூர்யா, மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை மிக சிறப்பான முறையில் பூஜையுடன் துவங்கியுள்ளது.

01:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

செலவு வேறு; அநாவசியச் செலவு வேறு என்பதை இதுவரை உணராமல் இருந்திருக்கலாம். ஆனால், 30-ஆவது வயதில் நிச்சயமாக உணர்ந்தே ஆக வேண்டும். குடும்பம், பிள்ளைகள் என்று வந்தபிறகு அநாவசிய செலவுகளை அதிகமாகச் செய்தால், குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும்.

01:27:02 on 19 Feb

மேலும் வாசிக்க விகடன்

கன்னியாகுமரி அடுத்த குளச்சல் அருகே ஒரு பெண்ணுக்காக இரு இளைஞர்கள் சண்டையிட்டு அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஒரே நேரத்தில் இருவரை காதலித்த பெண்ணை நம்பி தெருவுக்கு வந்துள்ளனர்.

01:25:01 on 19 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திருச்சி மாவட்டம், லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக பெண் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பெரியார்நகரைச் சேர்ந்த சுபாஷ்கண்ணன் என்பவர், பெண் போலீசாரை தனது செல்போனின் வீடியோ எடுத்து டிக் டாக் செய்துள்ளார்.

12:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்றும், ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

12:31:33 on 19 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தனர். இந்த மென்பொருளை முடக்கிய போலீசார், பல்வேறு ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த 60 ஏஜெண்டுகளை கைது செய்துள்ளனர்.

12:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

ஓடும் ரயிலிலிருந்து இறங்கி இளைஞர் ஒருவர் டிக் டாக் செய்யும் வீடியோ பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைக்கிறது.
ஏழு நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், வேகமாக ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் அந்த இளைஞர் கீழே விழுந்து கிட்டத்தட்டச் சக்கரத்தின் அடியில் இழுத்துச் செல்லப்படுவதைக் காணமுடிகிறது.

11:55:03 on 19 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கடலூர், மதுரை, கோவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக நடந்து வருகின்றனர்.

11:17:54 on 19 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிஏஏ.வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்தப் பேரணியில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

11:05:50 on 19 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையிட போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

10:50:16 on 19 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, பல மாவட்டங்களில் அந்தந்த ஆட்சியர் அலுவலகங்களை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

10:45:42 on 19 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிஏஏ.வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் பேரணி நடத்துகின்றனர். சட்டப்பேரவையை நோக்கி தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

10:40:39 on 19 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சீனாவில், வேகமாக பரவி வரும், கோவிட் 19 எனப்படும் 'கொரோனா' வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2,004 ஆக உயர்ந்தது; வைரஸ் தாக்கம் உள்ளோர் எண்ணிக்கை, 74,185 ஆக உயர்ந்தது.

10:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினமலர்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற வலியுறுத்தியும் வண்ணாரப்பேட்டை பகுதி முஸ்லிம்கள் 14-ந்தேதி இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது.

10:01:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளதை அடுத்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

09:40:10 on 19 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிராக இஸ்லாமியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மதுரை விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மகபூப்பாளையம் என்ற பகுதியில் குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்

09:25:58 on 19 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனினை ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் சேம்ப் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

08:55:01 on 19 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு https://apps.isac.gov.in/TA-2020/advt.jsp என்ற லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

07:55:01 on 19 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் (பாதுகாப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06:55:02 on 19 Feb

மேலும் வாசிக்க தினமணி

முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து, உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும். முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டுவர, சொறி, சிரங்கு, கரப்பான், போன்ற தோல் நோய்கள் குணமாகும். மேலும் இந்த கீரையை அரைத்து தோல்களில் பூசியும் வரலாம்.

05:55:01 on 19 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

'மரிஜுவானா' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியபோது, நானும் சிறு வயதில் கஞ்சா அடித்திருக்கிறேன் என கே.பாக்யராஜ் பேசியது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

10:57:02 on 18 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நெய் கலந்த காபி பசியை தூண்டும் ஹார்மோனின் உற்பத்தியை குறைத்துவிடும். அதன் காரணமாக சாப்பிடும் அளவு குறையும். வெண்ணெய்யை விட நெய்யில் இனிப்பும், உப்பும் குறைவாக இருப்பதாக ஊட்டச்சத்தியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். காபியில் இனிப்பை தவிர்க்க நினைப்பவர்கள் நெய்யை உபயோகிக்கலாம்.

09:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள "மீண்டும் ஒரு மரியாதை" என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

08:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கும் மாஃபியா படத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

08:25:01 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகர் பிரகாஷ் ராஜ், ”தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயார் செய்வதை விட வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் அடிப்படை கல்வியறிவு கூட பெறாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யவேண்டும்” என பாஜகவை விமர்சித்திருந்தார். மேலும் தன்னை பாஜகவால் விலைக்கு வாங்க முடியாது என்றார்.

07:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க சன் நியூஸ்

சென்னை அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா. அவர் பொழிச்சலூர் 7-வது குறுக்கு தெரு அகத்தீஸ்வரர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவரை ஏமாற்றிவிட்டு வெங்கடேஷ் வெளிநாட்டிற்கு தப்ப நினைத்துள்ளார்.

07:25:01 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் அன்னவாசல் பகுதி பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை திடீர் திருப்பம் ஏற்பட்டது.

06:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு பருவ நிலைகளில் ஏற்படும் மாறுபாடு குறித்த ஆய்வொன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், இன்னும் 50 வருடங்களில் உலகில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிய உள்ளதாக தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

06:27:01 on 18 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதப் பிரசாரகர் ஜாகிர் நாயக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் குடியேறியதில் இருந்து, இந்துக்கள் மற்றும் நரேந்திர மோதி அரசாங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை எப்போதாவது கூறுவதைத் தவிர அவரைப் பற்றி அதிகம் தகவல்கள் வெளியாவதில்லை.

05:57:01 on 18 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”மகாத்மா காந்தி காந்தி, இந்தியாவை புரிந்துகொள்ள பயணம் மேற்கொண்டு, அபிலாஷைகளையும் துன்பங்களையும் கொண்ட ஒருவரானார். அதனால் தான் அவர் ஹிந்துவாக இருப்பதற்கு ஒருபோதும் வெட்கப்படவில்லை. தான் ஒரு தீவிர ஹிந்து என அவர் கூறினார். மற்ற மதங்களை மதிக்கவும் கற்று கொடுத்தார்.” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

05:27:02 on 18 Feb

மேலும் வாசிக்க தினமலர்

தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருச்சி மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், எட்வினுக்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போன் மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.

04:57:01 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

விக்கியும் நயனும் கார்டூனில் சித்திரிக்கப்பட்ட புகைப்படத்தை விக்கி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ’யாரு இந்த போட்டோவை பண்ணிருந்தாலும் சரி, ரொம்ப நன்றி‘ என்று கூறியுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ‘அய்யோ நீயும் தலைவியும் வேற மாதிரி’ என பல கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

04:27:01 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

தேனி மாவட்டம் கம்பம் கம்பம் அருகே தொட்டன்மன் துறையில் முல்லைப்பெரியாறு தடுப்பணை அருகே உள்ள புதரில் இருந்து ஆண் ஒருவரின் தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது.

04:25:01 on 18 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”மதுவிலை உயர்வால் தான் அரசுக்கு வருமானம் உயர்கிறதே தவிர மதுக் கடைகள் அதிகரிக்கப்படவில்லை. மக்கள் குடிக்கிறார்கள். அதனால்தான் மது விற்பனையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.” என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

03:57:01 on 18 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

2019ஆம் ஆண்டில் 2 புள்ளி 94 டிரில்லியன் டாலர் என்ற ஒட்டுமொத்த ஜிடிபியுடன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக ”WORLD POPULATION REVIEW” என்ற தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது.

03:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது.

03:27:02 on 18 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

குடியுரிமை சட்டத்தால் தமிழ்நாட்டில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், சிஏஏவால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்பதை திமுக விளக்க வேண்டும் என்றும், குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

02:57:02 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சின்னபார் அண்டர்ஸ்கோர் டஸ்ட் (cinnabar_dust) என்ற பெயரில் உள்ள கணக்கில் சில இளைஞர்கள் ஆடியுள்ள நடனம் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

02:25:02 on 18 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகை சிம்ரன், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட போவதாக அறிவித்திருந்தார். மேலும் அந்த வீடியோ யூடியூபில் வெளியாகி ஒரு நாளில் 10 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது. தற்போது சிம்ரன் இந்த சாதனைக்கு காரணமான தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

01:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

ஆந்திர பிரபா என்ற இணைய ஊடகத்துக்கு நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டியில், ”விவாகரத்துக்கான முடிவு என்னுடைய சொந்த முடிவு. அதற்கு வேறு யாரும் பொறுப்போ காரணமோ இல்லை. வேறு ஒருவரைக் காரணமாக வைத்து யாராவது விவாகரத்து செய்வார்களா? தனுஷ் என்னுடைய நலம் விரும்பி.” என கூறியுள்ளார்.

12:57:01 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மொட்டலூரைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (46). இவருடைய மனைவி பிரியா (41). இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இந்நிலையில், இவர் ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகியதை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனை விரும்பாத பிரியா, கணவரைக் கொல்ல முயற்சித்துள்ளார்.

12:27:02 on 18 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

ராமநாதபுரம் வேதாளை கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் மாணிக்கம் என்பவர், தனது கனவில் பொள்ளாச்சி மாரியம்மன் வந்து கொரோனாவுக்கு மருந்து சொன்னதாகவும், மூலிகைகளைக் கொண்டு அதனை கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வந்திருப்பதாகவும் சீரியசாகப் பேசி சிரிக்கவைத்தார்.

11:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அமமுகவும் போராட்டத்தில் குதிக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது தவறு என்றும் அதனால்தான் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.

11:27:02 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர், தனது சகோதரியுடன் சேர்ந்து ஏராளமான வீடியோக்களை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, வீடியோ வெளியிட்ட சகோதரிகளை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

10:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கோவையில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக இஸ்லாமியர்கள், தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தி உக்கடம் பகுதியில் உள்ள 25 வீடுகளில் தேசிய கொடி ஏற்றி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

10:27:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில், 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

09:57:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினமலர்

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

09:27:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

புதுச்சேரியில் உள்ள சமூக நல இயக்குநரகத்தில் காலியாக உள்ள சமூகநல அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.py.gov.in என்ற அதிரகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 31.03.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.

08:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க தினமணி

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணெய்ச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக் பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்சத்து உள்ளது.

07:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

1,39,600 ரூபாய்க்கு (சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை) MT-15 பைக்கின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கியுள்ளது யமஹா. இது முன்பைப் போலவே Metallic Black, Dark Matte Blue எனும் இரு கலர்களைத் தவிர, புதிதாக Ice Fluo Vermillion எனும் கலர் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.

06:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு செல்லாமலேயே தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஓட்டளிக்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய தேர்தல் கமிஷன், சென்னை ஐஐடி.,யுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.

10:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க தினமலர்

பாதம் தரையில் படும்படி முழங்காலை மடித்துக்கொண்டு படுத்துக்கொள்ளவும். வயிற்று தசைப்பகுதியை இறுக்கி கொண்டு, முகவாயை மார்பு பகுதி நோக்கி கொண்டு வந்து பக்கவாட்டில் உருளவும். உட்காரும் அளவுக்கு உருளாமல் இருக்க வேண்டும். ஐந்து நொடிகளுக்கு பிறகு பழைய நிலைக்கு வரவும். இதே போல 10 முறை செய்யவும்.

09:55:01 on 17 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி அறிவித்துள்ளார். 4வது நாளாக ஆவின் டேங்கர் லாரிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

09:19:48 on 17 Feb

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக, தி.மு.க. கூட்டணி ஒரு பெரிய கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்துள்ளது. இது பாஜக அரசிற்கும், அதிமுகவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

08:27:01 on 17 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என மதுரை சிறையிலுள்ள யுவராஜ் பரபரப்பு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில், விஷ்ணுபிரியா தற்கொலைக்கு அப்போதைய நாமக்கல் எஸ்.பி.தான் காரணம். இந்த உண்மையை வெளியே சொல்லிவிடுவேன் என்பதால் என்னைக் கொல்வதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன" என கூறியுள்ளார்.

07:57:02 on 17 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக நூலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குவதைக் காட்டும் வீடியோ நேற்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அந்த வீடியோவில் நூலகத்தில் இளைஞர் ஒருவர் முகத்தை மூடிக் கொண்டிருப்பதாகவும், ஒருவர் மூடிய புத்தகத்தைப் படிப்பதாகவும், அது ஏன் என்றும் விமர்சனங்கள் பாஜக தரப்பில் இருந்து வைக்கப்படுகின்றன.

07:27:01 on 17 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”தமிழகத்தில் எம்.எல்.ஏவே இல்லாமல், பாஜக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. 'எல்லோரும் பா.ஜ.கவில் சேர்ந்து கொள்ள வேண்டும்' எனக் கூறினால், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என அதிமுகவில் உள்ள அனைவரும் பாஜகவிடம் உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டு, சேர்ந்து கொள்வார்கள். உறுப்பினர் அட்டை வாங்குவதுதான் பாக்கி.” என செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

06:57:02 on 17 Feb

மேலும் வாசிக்க விகடன்

”பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது” இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறிய ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா? என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

05:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது லைன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்று ஏதோ ஒரு ரெக்கிரியேஷன் கிளப் ஆகியவற்றில் போட்ட தீர்மானத்துக்கு ஒப்பாகும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். ஏற்கனவே இவர் சென்னை உயர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசியிருந்தார்.

05:25:01 on 17 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பி5 பெட்டியில் 64வது சீட், சிவபெருமானின் சிறு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. கடவுள் படங்களை ஒட்டி மாலையணிவித்து ரயில் ஊழியர்கள் வழிபாடு நடத்தினர். சிவபெருமானுக்காக இந்த சீட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

04:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேர் குற்றவாளிகளாவர்.

04:34:09 on 17 Feb

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழில் வெளிவந்த தாலாட்டு கேக்குதாமா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்கபூர். இவருக்கு ஷாரூக் கபூர், ஷமீனா கபூர், ஷானியா கபூர் என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரின் மகன் ஷாரூக் கபூர் இன்று காலை உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் உயிரிழந்ததாக தெரிவந்துள்ளது.

04:27:02 on 17 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில், ஷயின்ஷா, சுமையா ஆகியோர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இந்த மணமகளை, மணமகனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று பொது மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.

04:03:27 on 17 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

விக்ணேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் முக்கோணக் காதல்கதை கொண்ட திரைப்படத்தில் அப்படி என்ன புதிதாக இருக்கப்போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

03:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தனா பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி டினா சவுத்ரி. உடன் படிக்கும் மாணவரை காதலித்தார். சாதியை காரணம் காட்டி குடும்பத்தினர் எதிர்த்தனர். ஆனால் டினா பிடிவாதமாக இருந்ததால் டினாவின் உறவினர் கிட்டு என்கிற பிரசாந்த் சவுத்ரி நண்பர்களுடன் சேர்ந்து டினாவை சுட்டு கொன்று விட்டார்.

03:25:01 on 17 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு பகுதி நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், எரிவாயு நிறுவனமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

02:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருவோருக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். ஷாஹீன் பாக் போராட்டக்கார்களை சந்திக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

02:35:16 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை பாக்ஸ் ஆபிஸில் சைக்கோ படம் கடந்த 24 நாட்களில் 2.91 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதே போன்று 1917 படம் 81 லட்சமும், வானம் கொட்டட்டும் - 74 லட்சமும், சீறு 65 லட்சத்தையும் வசூலித்துள்ளது.

02:27:02 on 17 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "சில சக்திகளும், விஷமிகளும் போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பாக அரசு இருக்கும். இஸ்லாமியர்களுக்கு அரணாக அதிமுக அரசு இருக்கும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட விடமாட்டோம்" என விளக்கம் அளித்தார்.

02:23:39 on 17 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள கூட்டப்புளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 11 பாய்மரப்படகுகள் கலந்துகொண்டன. கடற்கரையில் திரண்ட ஏராளமான பொதுமக்கள் படகுப்போட்டியை கூடி நின்று கண்டு ரசித்தனர்.

01:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

அன்புச் செழியன் எடப்பாடி மூலமாக பா.ஜ.க.வை சரிக்கட்டி தப்பிக்க நினைக்கிறார். அன்புவையும் அவருடன் தொடர்பில் உள்ள அமைச்சர்களையும் மத்திய அரசு தன் பிடியில் வைத்துக்கொள்ளும் என உறுதியாகச் சொல்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

01:27:02 on 17 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிஏஏக்கு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மூஞ்சிக்கல் பள்ளிவாசல் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12:59:48 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்தான் என தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருந்தவர் தான் கபில் குமார் என்றும் தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார்.

12:57:26 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் உள்ள கடப்பாரில்லி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கு போதிய மருத்துவமனை இல்லை. சாலை வசதியும் இல்லாததால், அந்த கிராமத்தினர், கட்டைகளை கொண்டு பல்லக்கு போல செய்து அதில் கர்ப்பிணி பெண்ணை அமர வைத்து 30 கி.மீ.க்கு சுமந்து சென்றனர்.

12:55:01 on 17 Feb

மேலும் வாசிக்க தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். போலீஸ் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதாகவும் காலனி, தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

12:53:16 on 17 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் கட்சியில் இணைவதற்கு வாய்ப்புத் தேடும் வகையில், அவருக்கு சில அமைச்சர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

12:27:03 on 17 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கல்வி மற்றும் செல்வத்தின் காரணமாக மக்களுக்கு ஆணவம் வந்துவிடுகிறது. அதன் முடிவு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடுகிறது.” என்றார்.

11:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க விகடன்

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வாய்ப்பில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில் சபாநாயகர் இவ்வாறு அறிவித்தார். வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக மட்டும் பேரவையில் பேச அனுமதி அளிக்கப்படும் என சபாநாயகர் கூறினார்.

11:53:37 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதில் இடம் பெறுகிறார். டெல்லியிலிருந்து தொடங்க உள்ள நிலையில், அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற உள்ளன.

11:27:01 on 17 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பி.எஸ்.என்.எல்., கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், பயன்பாடு குறைந்த கட்டடங்களை வாடகைக்கு விட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. வசதி குறைந்த இடத்தில் செயல்படும் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல்., இடங்களை வாடகைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

10:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க தினமலர்

மேலும் வாசிக்க