View in the JustOut app
X

அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் தங்கள் ராணுவத்தில் ரோபோக்களை வைத்துள்ளன. அந்த வரிசையில் இணைந்துகொள்ளும் விதத்தில், இங்கிலாந்து ராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரோபோவின் ஆரம்பகட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றிருக்கிறது.

07:10:02 on 16 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

இயக்குநரும், நடிகருமான சேரன் மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது ‘திருமணம்’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர்.

06:55:01 on 16 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் ரூ.2.33 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் ரூ.32,693 கோடிக் கடனானது வங்கிக் கணக்குப் பாக்கியிலிருந்து நீக்கப்பட்ட தொகையாகும்.

06:26:01 on 16 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அஜித்தின் 59வது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

06:10:01 on 16 Dec

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதைப் புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம்.

05:55:02 on 16 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் சென்னை பள்ளிகளில் பயிலும் 83,316 மாணவ மாணவியருக்கு செய்துத் தரப்படும் வசதிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளி மாணவர்களின் பொது அறிவினை மேம்படுத்தும் வகையில் 254 பள்ளிகளில் நூலகம் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

05:40:02 on 16 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

விமல் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் வசூலில் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் போனதன் விளைவாக ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ போன்று அடல்ட்ஸ் ஒன்லி பக்கம் திரும்பினார். தற்போது அவர் மீண்டும் தான் வழக்கமாக ஏற்று நடித்துவரும் காமெடி திரைக்கதையையே தேர்ந்தெடுத்துள்ளார்.

05:26:01 on 16 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

552 கேரட் மதிப்புள்ள மஞ்சள் நிற வைரம் கன்னடாவில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வைரம் இதுவரை கன்னடாவில் கண்டறியப்பட்ட வைரங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. இந்த வைரம் ப்ளூம்பெர்க் கணக்கீடுகளின் படி ஏழாவது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது.

05:10:01 on 16 Dec

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

04:56:01 on 16 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சூதாட்டத்தைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

04:40:02 on 16 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கஜா புயலால் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி சரிந்துள்ளதால் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சரிவு ஏற்படும் என்று தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தின் இயக்குநர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் தெரிவித்துள்ளார்.

04:26:02 on 16 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். மேலும் அதன் தூதரகத்தை டெல் அவிவில் இருந்து மேற்கு ஜெருசலேமுக்குக் கூடிய விரைவில் மாற்றப்படும் என அறிவித்தார். இதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

04:10:01 on 16 Dec

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

”பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ஈசியா இருந்துச்சு. இப்போ எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை சமூகவலைதள ஆள்கள் கிளப்பி விடுறாங்க. இதனால நடிகர்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு” என நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

03:56:02 on 16 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

’மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை’ என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். மேலும் அவர், ’அணை விவகாரத்தில் கர்நாடக் கட்சிகள் அரசியல் செய்கின்றன’ என்றும் கூறியுள்ளார்.

03:40:01 on 16 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மும்பையில் உள்ள 74 சதவிகித உணவகங்களில் சமையலறை சுத்தமில்லாமல், ஆரோக்கியமற்ற முறையில் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவில் 3,047 உணவகங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த உணவகங்களில் சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.

03:26:01 on 16 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

’அரசியலில் 3 சி(3 C) தான் ஆதிக்கம் செலுத்தும். அந்த 'சி'யானது பணம்(cash) ஜாதி (caste) கிரிமினல் (criminal) ஆகியன. 5 மாநில தேர்தல் முடிவுகளை 2019 தேர்தலுடன் ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு மட்டத்திலும் திட்டங்கள் மாறும்’ மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

03:10:01 on 16 Dec

மேலும் வாசிக்க தின மலர்

மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் பத்து நாட்களுக்குள் மார்பகத்தைப் பரிசோதித்து கொள்ளலாம். மார்பில் கட்டிகள், தடித்த பகுதிகள், வீக்கங்கள் இருக்கிறதா என கூர்ந்து கவனித்தல் வேண்டும். மார்பகங்களில் ஏதேனும் முடிச்சுகள் உள்ளதா என கவனித்தல் வேண்டும். இரு மார்பகங்களின் அளவு வடிவ மாற்றங்களை கவனித்தல் வேண்டும்

02:56:01 on 16 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

வரும் ஜனவரியில், சந்திராயன்-2 நிலவில் செலுத்த தயார் நிலையில் உள்ளதாக விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நிலவை துளையிட்டு வெப்பநிலை, கனிம வளம், நிலவின் சூழல் ஆகியவற்றை கண்காணிக்கும் செய்முறையில் சந்திராயன்-2 ஈடுபடும் என்றும் கூறியுள்ளார்.

02:40:02 on 16 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

அரசு வங்கிகள் தங்களது ஏடிஎம்களை மூடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஏடிஎம்கள் தவிர்த்து வங்கிக் கிளைகள் மற்றும் மைக்ரோ ஏடிஎம்களுடன் செயல்படும் வணிக நிருபர்கள் வாயிலாகவும் மக்களுக்குத் தேவையான நிதிச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

02:26:02 on 16 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் நாடு கடத்தப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சிபிஐ காவலை டில்லி கோர்ட் மேலும் 4 நாட்கள் நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணையின்போது, கிறிஸ்டியன் மைக்கேலைச் சந்திக்க வழக்கறிஞர் ரோஸ்மேரி பாட்ரிஜிக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

02:10:02 on 16 Dec

மேலும் வாசிக்க தின மலர்

ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக விட்டமின்வாட்டர் எனும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டைத் தியாகம் செய்யும் முனைப்பு கொண்டவர்களுக்கு சவால் விடும் வகையில், புதிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

01:56:01 on 16 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

அதிமுக ஏழை, எளிய மக்களுக்கான கட்சி என, மக்களவைத்துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’பிற கட்சிக்கு செல்பவர்களால் அதிமுகவிற்கு எவ்வித ஆபத்தும் இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

01:40:01 on 16 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. தற்போது படக்குழு அஸர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

01:26:01 on 16 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துத் தயாராக உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும், தாழ்வான பகுதியில் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

01:10:01 on 16 Dec

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், காஷ்மீர் நிர்வாக கவுன்சில் கூட்டம் (எஸ்.ஏ. சி) கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையில் நடந்தது. இதில், காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

12:56:01 on 16 Dec

மேலும் வாசிக்க தினமலர்

'தமிழகத்தில் விரைவில் சுற்றுச்சூழலை கெடுக்காத க்ரீன் ஆட்டோ சர்வீஸை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்,' என்று கூறினார் 'மக்கள் ஆட்டோ'வின் நிர்வாகி மன்சூர் அலி. இது ஆட்டோ டிரைவர்களுக்கு இன்னும் லாபம் தரக் கூடியது எனவும் தெரிவித்தார்.

12:40:02 on 16 Dec

மேலும் வாசிக்க விகடன்

’வங்கிகள், பணப் பட்டுவாடா வங்கிகள், சிறிய அளவிலான வங்கிகள் ஆகியவை அளித்த தகவல்படி, நாடு முழுவதும் 2.21 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன,’ என்றார். மேலும், ’வங்கி ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் பொதுத் துறை வங்கிகளிடம் இல்லை,’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா கூறியுள்ளார்.

12:26:01 on 16 Dec

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குகிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

12:10:02 on 16 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் கடந்த மாதத்தில் 4.64% ஆக குறைந்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் கடந்த ஆண்டின் நவம்பரில் 4.02% ஆக இருந்தது. தற்போது பணவீக்கம் கணிசமாக வீழ்ச்சி அடைய உணவு பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை குறைவே காரணம் ஆக கூறப்படுகிறது.

11:56:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

டிவிட்டர் பயனாளர்கள் குறித்து மத்திய அரசு தகவல்கள் கேட்பது, கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

11:40:01 on 15 Dec

மேலும் வாசிக்க EENADU

சீனு ராமசாமி இயக்கவிருக்கும் புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ‘மாமனிதன்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘YSR ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ளார். தற்போது, இதன் ஷூட்டிங் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:26:01 on 15 Dec

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த அகதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 வயது சிறுமியும், அவளது தந்தையும் அடங்குவர். ஆனால் அந்த சிறுமி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தார்.

11:10:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

மூன்றாம் நபர் ஆப்கள் மூலம் பேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 68 லட்சம் வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள், தகவல்களை தேவைக்கு அதிகமாக கணினி கிருமிகளால் யாரோ சிலர் களவாடியிருக்கலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

10:55:02 on 15 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மறைவின் பொழுது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத அஜித், அடுத்த படம் தொடங்கும்போது நிச்சயம் அவருக்கான மரியாதையை அளித்த பிறகே தொடங்குவேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, தல 59 பூஜையில் ஸ்ரீதேவி புகைப்படத்திற்கு பூஜை போட்டு தொடங்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

10:40:01 on 15 Dec

மேலும் வாசிக்க ie தமிழ்

இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்து ஒரு ஆண்டுக்குப் பின், இந்தோனேசியாவின் எதிர்ப்பையும் மீறி, மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

10:26:01 on 15 Dec

மேலும் வாசிக்க காமதேனு

தொழில் துறைகளில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்துகொண்டேதான் உள்ளன. அந்தவகையில், அதிகரித்து வரும் தானியங்கி மயத்தால் உலகம் முழுவதும் உள்ள 18 கோடிப் பெண்களின் வேலைவாய்ப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.எம்.எஃப். வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

10:10:01 on 15 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும். கடினமான உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலேபோதும்.

09:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

நீர் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சியைக் கையாண்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. பெல்லாந்தூர் ஏரி நீர் மாசுபாடால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மாசுபாடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த பெல்லாந்தூர் ஏரியில் மிகவும் ரிஸ்க் ஆன போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

09:40:01 on 15 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் 2வது பாடலான “வேட்டிக்கட்டு” பாடல் வெளியாகியுள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இதன் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

09:39:21 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறியது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே வருகிற 17ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

09:30:00 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

டிசம்பர் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவும், பிற்பகல் 1.30 மணிக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பங்கேற்பு விழாவும் நடைபெறுகிறது. இந்த இரு பதவியேற்பு விழாக்களிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:26:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினமணி

யானையின் சாணத்தில் அதிகமான நார்சத்து இருப்பதால், அதை சுத்திகரித்து அதன் மூலம் காகிதம் தயாரிக்க எளிதாகப் பயன்படுத்து முடியும் என்று அறநிலையத்துறையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

09:10:02 on 15 Dec

மேலும் வாசிக்க தி இந்து

அமமுக அமைப்புச் செயலாளர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுக இணைந்தார். செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் வலுவான வேட்பாளராக இருந்து கட்சியைப் பலப்படுத்துவார் என திமுக எதிர்பார்க்கிறது.

08:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

விவசாயம் என்றால் நினைவுக்கு வரும் டெல்டா பகுதியில், தற்போது விவசாயிகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது. தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்த அவர்களின் வாழ்க்கை, கஜா புயலால் சின்னாபின்னமாக்கியுள்ளது. கஜா புயல் தாக்கி 1 மாதம் முடிந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத டெல்டா மாவட்டங்களில் மீளா சோகத்தில் இருக்கின்றனர் விவசாயிகள்.

08:40:02 on 15 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்துள்ளன.

08:26:01 on 15 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலகக் கடன் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதென சர்வதேச செலவாணி நிதியம் தெரிவித்துள்ளது. தோராயமாக உலகக் கடனில் தனிநபரின் கடன் 86,000 அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தனிநபர் கடன் தொகை என்பது, தனிநபர் வருமானத்தைவிட இரண்டரை மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:10:01 on 15 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிர்னூ கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

07:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'தற்போது திமுகவில் இணைந்திருக்கும் செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி,' என விமர்சித்துள்ளார்.

07:40:01 on 15 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னை ஐ.ஐ.டியில் உள்ள உணவு விடுதியில் சைவம் மற்றும் அசைவத்திற்கென தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விடுதி விவகாரங்கள் செயலாளர் மாணவர்களிடம் மண்ணிப்பு கோரியுள்ளார்.

07:25:01 on 15 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தியாவைப் பொறுத்தவரை தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழைமையானது. உலகில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் தற்போது இந்தியா திகழ்ந்து வருகிறது.1830ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது.

07:10:01 on 15 Dec

மேலும் வாசிக்க விகடன்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியிலிருந்து அகற்றப்படுவதை வருகிற காலம் காணத்தான் போகிறது’ எனவும் கூறியுள்ளார்.

06:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை எண்ணூர், திருவொற்றியூர், காசிமேட்டில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் தடுப்புகளைத் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக சென்னை கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.

06:46:41 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் என்கவுன்டர் நடந்த இடத்தில், மோதலில் ஈடுபட்ட பொது மக்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

06:35:02 on 15 Dec

மேலும் வாசிக்க தின மலர்

’ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த அதிகாரிகள் தந்த தகவலின் பேரிலேயே பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக முதல்வர் கூறியதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

06:15:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’தமிழக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், ’ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மிகப்பெரிய தலைகுனிவு’ என்றும் தெரிவித்துள்ளார்.

06:09:45 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரகசியமாக ஆஜராகியுள்ளார். இதேபோல் முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

06:06:24 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி,ராமாராவிற்கு 109 அடியில் சிலை அமைக்கும் திட்டத்தை ஆந்திர அரசு தொடங்கவுள்ளது. செப்பு உலோகத்தைக் கொண்டு உருவாக்கப்படும் இந்தச் சிலைக்கு ரூ.406 கோடி செலவிடப்படவுள்ளது.

06:00:47 on 15 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சரத்பவார், சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி, கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் ஏஎன்ஐ தகவல் தெரிவித்துள்ளது.

05:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. 3 வாரத்திற்குள் ஆலை இயங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆணை வெளியிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மினசாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

05:35:01 on 15 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் அவர், ’தீர்மானத்தை நிறைவேற்றிய பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு முன்வர வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

05:15:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

04:55:42 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

எண்ணூர், கடலூர், நாகை துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

04:55:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஃபேல் போர் விமான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகலை மனுதாரர்கள் அனைவருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

04:35:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உடன்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ’ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படும்’ என கூறியுள்ளார். மேலும் அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத்தான் ஸ்டெர்லைட் மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

04:15:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை மிகப்பெரிய தொடராக அமைய வாய்ப்புள்ளது. இந்தத் தொடரில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

03:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினமணி

தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையத் திறக்கத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

03:15:01 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’பிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடாதது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மேலும், ’புயலால் பாதித்த மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது’ என்றும் கூறியுள்ளார்.

02:55:02 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என பூவலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது என வேதாந்தா குழும செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

02:35:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆலைக்குத் தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும் எனவும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

02:15:01 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து "ஒரு மலையே சிலையானது போல" என்ற பெயரில் கவிதைக் காணிக்கை செலுத்தியுள்ளார்.

01:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குற்றத்திற்கான காரணம் தெரிந்தால் குற்றங்கள் ஒழியும் என்பதை வலியுறுத்தும் திரைப்படம் துப்பாக்கி முனை. படத்தில் லாஜிக்காகப் பல குறைகள் இருந்தாலும், சமகாலத்தில் சிறுமிகள் வல்லுறவு செய்யபட்ட சம்பவங்களின் கோர முகத்தை நன்கு அம்பலப்படுத்துகிறது.

01:35:01 on 15 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜசேகரன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

01:17:52 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

'புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும், தரைக்காற்று பலமாக வீசும்,' என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுமண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் மீனவர்கள் டிசம்பர் 17 வரை வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:15:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'பலவீனமாக இருப்பதால் திமுகவினர் ஆள் பிடிக்கும் வேலையை பார்க்கின்றார்கள். அதிமுகவுக்கு மக்களின் துனை இருக்கிறது,' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், ‘திமுக எத்தனை கூட்டணி வைத்தாலும், எத்தனை பேரை இழுத்தாலும் எங்களுக்கு கவலையில்லை,’ என தெரிவித்துள்ளார்.

12:55:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை,' என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மேலும், ‘உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள்,’ என கூறினார்.

12:35:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துள்ளார். இந்த நிலையில், வைகோவின் அடுத்த குறி வித்யாசாகரை நோக்கி திரும்பி இருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை அள்ளித்தெளிக்கத் தொடங்கியுள்ளனர்.

12:15:02 on 15 Dec

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

'அதிமுக மூழ்கும் கப்பல் அல்ல, நிலையான புரட்சி போர்க்கப்பல்,' என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். மேலும், ‘அதிமுகவில் இருந்து வேறு கட்சிகளுக்கு சென்றவர்கள் யாரும் வளர்ச்சி பெற்றதாக வரலாறு இல்லை,’ எனவும் கூறினார்.

11:55:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர், பழவேற்காடு, திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

11:35:01 on 15 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து நாளை இலங்கை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அக்.26ஆம் தேதி, ராஜபக்சவை பிரதமராக அதிபர் சிறிசேன நியமித்ததால் நிலையற்ற அரசியல் சூழல் உருவானது. இந்நிலையில், பிரதமராக செயல்பட இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் ராஜபக்ச பதவி விலகினார்.

11:24:54 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்த ராதிகா கவுசிக், பால்கனியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இவர் மரணம் விபத்தா...? அல்லது கொலையா...? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11:15:05 on 15 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பினார் ராஜபக்ச.

11:14:18 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'இந்தியாவிலேயே 2ஆவது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது.’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ‘பசுமை வழிச்சாலை திட்டம் மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. சேலம்-சென்னை சாலை திட்டத்துக்கு 11%பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்; 89%பேர் ஆதரவாக உள்ளனர்,’ என்றார்.

11:03:49 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயில் ஒன்றில் வழங்கிய உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தியாவில், நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோய் உள்ளிட்ட டிமென்ஷியா எனப்படும் மனச்சிதைவு பிரச்னையுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லான்செட் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

10:46:39 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக பாஜக எதிர்க்கும்,’ என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், ’கருணாநிதி சிலை திறப்பு விழாவை திமுக கூட்டணி கட்சிகளின் விழா என்றுதான் பார்க்க வேண்டும்,’ எனவும் கூறியுள்ளார்.

10:35:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியாவை சேர்ந்த பிரபல கிடார் இசைக்கலைஞர் ஹிமான்சு சர்மா, தான் தங்கியிருந்த கார்கோவ்டு அடுக்குமாடி குடியிருப்பில், பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் தடவியல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

10:15:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. விழாவில் பங்கேற்க ரஜினி, கமல்ஹாசனுக்கு ஏற்கனவே திமுக அழைப்பு விடுத்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

09:55:02 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பஞ்சாப் மாநில முதல்வருக்கு, பாக்.,க்கில் இருந்து எடுத்து வந்த கவுதாரி பறவையை பரிசாக அளித்த, மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக, வனவிலங்கு ஆர்வலர் சந்தீப் ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

09:35:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினமலர்

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செருப்பில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.

09:15:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவல் ஆசிரியர் அமிதவ் கோஷ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அமிதவ் கோசுக்கு வயது 62; 1956ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம்கோல்கட்டாவில் பிறந்தார். தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார். இவர், பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்.

08:55:02 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில், நவம்பர் - ஜனவரி வரை குளிர், மழைக்காலம். இந்தப் பருவத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடித்தால் நோய் வராமல் காத்து கொள்ளலாம்.

08:35:01 on 15 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

பிரான்ஸ், ஸ்டிராஸ்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்ற ஷெரீப் தங்கள் இயக்கத்தின் போராளி என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்தது. இந்நிலையில், அவரை கைது செய்ய முயற்சித்த போது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, போலீசார் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

08:15:01 on 15 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

டிடிவி தினகரன் ஆதரவளராக இருந்த செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 9 பேர் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

07:55:03 on 15 Dec

மேலும் வாசிக்க EENADU

சென்னை அருகே வங்கக்கடலில் 800கி.மீ. தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் நாளை மறுநாள் ஆந்திராவில் ஓங்கோல்- காக்கிநாடா இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

07:42:33 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

07:40:02 on 15 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 பைசா அதிகரித்து ரூ72.99 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 8 பைசா குறைத்து ரூ.68.10 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:25:01 on 15 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

போரூரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அடையாறு துணை ஆணையர் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு டன் குட்கா பறிமுதல் தொடர்பாக குமரேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

07:10:02 on 15 Dec

மேலும் வாசிக்க தினகரன்

மொபிஸ்டார் நிறுவனம் இந்தியாவில் சி1 என்ற பெயரில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாமல், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.6,100 விலையில் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

06:55:01 on 15 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

டோலிவுட்டில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார். இந்த படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். என்.டி.ஆரின் மருமகனும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடிக்கிறார். இந்நிலையில், அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

06:40:01 on 15 Dec

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

தமிழில் த்ரில்லர் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பரத் நடிப்பில் புதிய படம் ஒன்று இதே ஜானரில் தயாராகிவருகிறது. நடுவன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அபர்ணா வினோத் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

06:25:01 on 15 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க