View in the JustOut app
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசிமாதன். இவருக்கு திருமணம் ஆகி 11 வயதில் மகன் உள்ள நிலையில் இரண்டாவதாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு இவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் துளசிமாதன், அந்த பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததை கண்டு மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

04:57:02 on 28 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சைப்ரஸுக்கு வந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் விடுதி கட்டணம், மருத்துவம் மற்றும் உணவு செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீண்டும் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

04:27:02 on 28 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தெலுங்கு நடிகையான சாய் சுதா, தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

03:57:01 on 28 May

மேலும் வாசிக்க மாலைமலர்

மதுரை மாவட்டம் பாலமேடு வலையபட்டி சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ATM சென்டரில், பணம் எடுக்க வரும் முதியவர்கள், பெண்களிடம், பணம் எடுத்து தருவது போல், அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நடித்து, அவர்களிடமிருந்து ATM பின் நம்பரை தெரிந்து கொண்டு மோசடி செய்துள்ளார்.

03:27:01 on 28 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த குணசேகரன், அதே பகுதியில் வசிக்கக்கூடிய பூமிநாதன் என்பவரின் டீக்கடையை நெருப்பு வைத்து எரித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடனுக்கு சிகரெட் தர மறுத்த, ஆத்திரத்தில் பூமிநாதனின் கடைக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது.

02:57:01 on 28 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா போலி இணையதளங்கள் உங்களிடமிருந்து முக்கிய தகவல்களைத் திருடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். coronavirusstatus.space, coronavirus-map.com, blogcoronacl.canalcero.digital, coronavirus.zone என இப்படிப் பல மோசடி இணையதளங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

02:27:01 on 28 May

மேலும் வாசிக்க விகடன்

நாம் அனைவருக்கும் இளையதளபதி என்றால் முதலில் ஞாபகம் வருவது நடிகர் விஜய். இந்நிலையயில் முதலில் இளையதளபதி என்ற பட்டம் நடிகர் சரவணனுக்கு தான் வைக்கப்பட்டதாம், 1993ல் வெளியான நல்லதே நடக்கும் திரைப்படத்தில் இளையதளபதி சரவணன் என்று தான் டைட்டில் போட்டுள்ளனர்.

01:57:01 on 28 May

மேலும் வாசிக்க சினி உலகம்

கேரள கடலோரப் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், அதன் மூலம் தமிழகத்துக்கு மழை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01:27:01 on 28 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அழிஞ்சி கண்மாய் கரையோரம் சீகம்பட்டி விவசாயி காசிநாதன் நெல் விவசாயம் செய்துள்ளார். நெல் கதிர்களை எலிகள் கடித்து நாசம் செய்வதைப் பார்த்த விவசாயி எலிகளுக்கு விஷம் கலந்த உணவை வயலில் வைக்க எலிகளுக்குப் பதிலாக அந்தப் பக்கம் இரைதேடி வந்த 13 மயில்கள் திண்று ஆங்காங்கே செத்துக் கிடந்தது.

01:00:00 on 28 May

மேலும் வாசிக்க நக்கீரன்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அழிஞ்சி கண்மாய் கரையோரம் சீகம்பட்டி விவசாயி காசிநாதன் நெல் விவசாயம் செய்துள்ளார். நெல் கதிர்களை எலிகள் கடித்து நாசம் செய்வதைப் பார்த்த விவசாயி எலிகளுக்கு விஷம் கலந்த உணவை வயலில் வைக்க எலிகளுக்குப் பதிலாக அந்தப் பக்கம் இரைதேடி வந்த 13 மயில்கள் திண்று ஆங்காங்கே செத்துக் கிடந்தது.

12:57:02 on 28 May

மேலும் வாசிக்க நக்கீரன்

தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்தவர் கணேசன். அதிமுக பேரூராட்சி கழக பொருளாளர் பொறுப்பில் உள்ளார். இவரது வீட்டின் அருகே வசித்து வந்த, இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் பெற்றோர் போடி சரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் கொடுத்தனர்.

12:25:01 on 28 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

சீன ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின் பிங், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஏற்பட உள்ள நிலைமைகள் குறித்து விளக்கினார். மேலும் சீன படைகளுக்கான பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

11:57:02 on 28 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பல பெண்களை ஏமாற்றி, மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட, நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவரின் வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காசி விவகாரத்தில் அவருக்கு உதவிய நண்பர்கள் சிலர், விசாரணை வளையத்திற்குள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

11:27:02 on 28 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

10:55:01 on 28 May

மேலும் வாசிக்க தினமலர்

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களே மாவட்டச் செயலாளர்களாக, முக்கிய நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி. அதற்காக ஓ.பன்னீருடன் பேசியிருக்கிறார். ஓ.பன்னீர் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தனது பிடியையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

10:27:01 on 28 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்காவிட்டால் ஜூன் மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

09:57:01 on 28 May

மேலும் வாசிக்க தினகரன்

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கிராமத்தில் பாப்பன்னபேட்டை பகுதியில் விவசாய நிலத்தில் கோவர்த்தன் என்பவர் 120 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டி போட்டுள்ளார். இந்நிலையில் இந்த கிணற்றுக்குள் விவசாயி மகன் சாய் வர்தன் (3) தவறி விழுந்து உயிரிழந்தான்.

09:27:01 on 28 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்தியாவின் மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களான அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் இந்த நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

08:57:01 on 28 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2020/05/15-Guest-Lecturer-Posts-Advt-Details-Application-Form-TNPESU.pdf என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

07:57:01 on 28 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.2399 விலையில் அறிவித்துள்ள புதிய சலுகையானது 600 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் டேட்டா வழங்கப்படவில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

06:57:01 on 28 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சமூகமான ISC (The Indian Society of Cinematographers) என்ற அமைப்பு மாஸ்டர் பட ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனை அங்கீகரித்துள்ளது. முன்னதாக கே.வி.ஆனந்த், சந்தோஷ் சிவன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

05:57:01 on 28 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

10:57:01 on 27 May

மேலும் வாசிக்க மாலைமலர்

வடிவேலு இணையதள தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். இதை அவருடன் பணியாற்றிய ஒருவர் இயக்கவுள்ளாராம். கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.

10:00:00 on 27 May

மேலும் வாசிக்க சினி உலகம்

வடிவேலு இணையதள தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். இதை அவருடன் பணியாற்றிய ஒருவர் இயக்கவுள்ளாராம். கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.

09:57:01 on 27 May

மேலும் வாசிக்க சினி உலகம்

”என் அண்ணண் குருவின் மறைவுக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். என் அண்ணன் மகன் கனலரசனை எதாவது செய்ய வேண்டும் என மருத்துவர் குடும்பம் கொலைவெறித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.” என காடுவெட்டி குருவின் சகோதரி செந்தமாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

08:57:02 on 27 May

மேலும் வாசிக்க விகடன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வேதா இல்லம் உள்ளிட்ட ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க அவரின் அண்ணன் மகளான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோருக்கும் உரிமையுள்ளது என கூறியுள்ளது.

08:42:01 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியா-சீனா எல்லையில் கடந்த சில நாட்களாக அதிகரித்த பதற்றம், இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் போர் விமானங்களை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

08:25:01 on 27 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அனுஷ்கா ஷர்மா தயாரித்துள்ள ”பாட்டலஸ் லோக்” வெப் சீரிஸில், உ.பி. மாநிலத்தில் இருக்கும் பாஜக தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவை உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார் கூறியுள்ளார்.

07:57:01 on 27 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஓரே நாளில் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

07:27:01 on 27 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மல்லி காலணி பகுதியில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நபர், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்து, பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதால் தனது உறவினர்களுடன் மணப்பெண்ணை அவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

06:55:02 on 27 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்கு உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக லடாக் எல்லையில் மோதல் போக்கு உருவான நிலையில் அமெரிக்க அதிபர் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

06:27:01 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் ‘515’ கணேசன் (68). பழைய இரும்பு வியாபாரியான இவர், 45 ஆண்டுகளுக்கு முன்பு ‘515’ என்ற பதிவெண்ணுடைய ஒரு பழைய காரை வாங்கி அதில் 5,600-க்கும்மேற்பட்ட சடலங்களை கட்டணமின்றி ஏற்றிச்சென்று உதவியுள்ளார். இதனால் இவர் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படுகிறார்.

05:57:01 on 27 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பூண்டில் அல்லிசின் எனப்படும் ஒரு சிறப்பான பண்பு உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது ஆண்களின் உடலில் ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுத்துகிறது.

05:27:01 on 27 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மிஸோரமிற்கு கடந்த சில நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள், அதிகளவில் திரும்புவதால் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள 168 தேவாலங்கள், தங்கள் தேவாலய வளாகத்தை தனிமைப்படுத்தும் மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ள தாமாக முன் வந்து அறிவித்துள்ளன.

04:57:01 on 27 May

மேலும் வாசிக்க தினமணி

ஊரடங்கின் காரணமாக கோயில்கள் பூட்டப்பட்ட நிலையில், வழிபாட்டிற்காக கோயில்களை திறக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் ஈஸ்வரன் கோயில் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் தோப்புக் கரணம் போட்டும் சூடம் ஏற்றியும் வழிபாடு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

04:27:01 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

''இந்தப் படம் எடுத்தது நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது ஜெஸ்ஸி - கார்த்திக்கின் கதை. அவ்வளவுதான். நான் ’பிகில்', 'சர்கார்' போன்ற படம் எடுக்கவில்லை. குறும்படம் எடுத்திருக்கிறேன். ஏதோ ஒரு வகையில் அது மக்களைச் சென்றடைந்திருக்கிறது" எனக் கூறியுள்ளார் கவுதம் மேனன்.

03:57:01 on 27 May

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார பாதிப்பு குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இதுவரை சுமார் 30.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

03:27:01 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஊரடங்கு காரணமாக இணையதளத்தில் சினிமா பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளாராம். கடந்த முறை முதலிடத்தில் இருந்த சன்னி லியோனை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

02:57:02 on 27 May

மேலும் வாசிக்க சினி உலகம்

க்ரைம் பேட்ரோல்’ தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகை ப்ரெக்‌ஷா மேத்தா தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 25. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள தனது வீட்டில் ப்ரெக்‌ஷா மேத்தா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

02:27:01 on 27 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

‘கொரோனா வைரஸ்’ திரைப்படத்தை சர்சைக்குரிய இயக்குநர் என கூறப்படும் ராம்கோபால் வர்மா மற்றும் அகஸ்திய மஞ்சு இயக்கியுள்ளனர். CM ப்ரொடெக்‌ஷன்ஸ் இதனை தாயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

01:55:01 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”பாரம்பரிய பத்திரிகை நிறுவனமான விகடனிலிருந்து 176 பேர் கட்டாயப்படுத்திப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தி எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தொழிற்சங்க விதிகளுக்கு எதிரானது என்பதை மறந்து விடாதீர்கள்.” என சென்னை பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

01:27:01 on 27 May

மேலும் வாசிக்க சமயம் டாட் காம்

கடந்த மே 5 மற்றும் 6 தேதிகளில் இந்திய ராணுவ படையினருக்கும் சீனா ராணுவ படையினருக்கும் சிறிய அளவில் பிரச்சனை மேலெழுந்தது. இதனைத் தொடர்ந்து பிரச்சனை தொடங்கிய இடமான பங்கோங் ஏரியிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தினை சீனா மீண்டும் கட்டமைத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

12:57:01 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கூடங்குளம் இரண்டாவது அணு உலையின் ஜெனரேட்டர் பிரிவில் ஏற்பட்ட வழக்கத்துக்கு மாறாக ஏற்பட்ட அதிர்வினை சரி செய்வதற்காக ரஷ்யப் பொறியாளர்கள் தனி விமானத்தில் வந்தனர். இந்த அதிர்வு சரி செய்யப்பட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு இரண்டாவது உலையில் மின் உற்பத்தி தொடங்கியது.

12:27:01 on 27 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏவுமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மருமகன் மனோஜை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காடுவெட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

11:57:01 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,387 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

11:27:01 on 27 May

மேலும் வாசிக்க தினமலர்

நாட்டின் அதிக வெப்பநிலை நேற்று ராஜஸ்தானின் சுரு நகரில் பதிவாகி உள்ளது. இதுபற்றி சுரு நகரில் அமைந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ரவீந்திர சிகாக், நாட்டில் 50 டிகிரி செல்சியஸ், நேற்றைய நாளுக்கான அதிக வெப்பநிலையாக சுரு நகரில் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

10:57:01 on 27 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றும் ஷாஜகான் என்பவரது வீடு மதுரை மேலமடைப் பகுதியில் உள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக, ரவுடிகள் சிலர் ஷாஜகான் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10:27:01 on 27 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,739 கனஅடியில் இருந்து 2,040 கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.49 அடியாகவும், நீர் இருப்பு 65.58 டிஎம்சியாகவும் உள்ளது.

10:10:06 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரவாயலைச் சேர்ந்த 41 வயது நபரும், சூளைமேட்டைச் சேர்ந்த 56 வயது நபரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 வயது நபரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

10:09:03 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண், கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துக்கொண்டவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டையைச் சேர்ந்த 57 வயது நபர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

10:07:27 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லலிதா என்பவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த ஒரு சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். கொரோனா ஊரடகங்கை பயன்படுத்தி ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

09:57:01 on 27 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜூன் மாதம் வழங்கப்படும் இலவவச பொருட்களுக்கான டோக்கன் வரும் 29ஆம் தேதி தொடங்கி 31ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டோக்கன் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

09:56:16 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி மேனிலை வகுப்புகள் ஆகஸ்ட் மாதமும், கீழ்நிலை வகுப்புகள் செப்டம்பர் மாதமும் தொடங்கும் என்று தெரிகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

09:27:01 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

கரூர் ஆட்சியரை மிரட்டியதாக செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டதே உடனடியாக இந்த வழக்கில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அவர் கைது செய்யப்பட்டவில்லை. இந்நிலையில்தான் சிபிசிஐடி தலைவர் பதவியிலிருந்து ஜாபர் சேட் மாற்றப்பட்டார்.

08:57:01 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு போன்றவை நீங்கும்.

07:57:01 on 27 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

06:57:02 on 27 May

மேலும் வாசிக்க தினமலர்

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் 2020 மே முதல் 2020 அக்டோபர் வரை 6 மாதங்களுக்கு குறைத்துள்ளதாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

05:57:01 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நடிகர் விஜய்யின் பிகில் படத்துடன் சில நாட்கள் வித்தியாசத்தில் வெளிவந்த சில படங்கள் வசூலில் பின்தங்கியது. அந்தப் பட்டியலில் சங்கத்தமிழன், ஆக்ஷன், ஆதித்யா வர்மா, என்ன நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் உள்ளன. பிகில் படம் வெளிவந்ததால் இப்படங்களுக்கு தியேட்டர் ஸ்க்ரீன் கிடைக்கவில்லை.

11:00:01 on 26 May

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகர் விஜய்யின் பிகில் படத்துடன் சில நாட்கள் வித்தியாசத்தில் வெளிவந்த சில படங்கள் வசூலில் பின்தங்கியது. அந்தப் பட்டியலில் சங்கத்தமிழன், ஆக்ஷன், ஆதித்யா வர்மா, என்ன நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் உள்ளன. பிகில் படம் வெளிவந்ததால் இப்படங்களுக்கு தியேட்டர் ஸ்க்ரீன் கிடைக்கவில்லை.

10:57:01 on 26 May

மேலும் வாசிக்க சினி உலகம்

”சளி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து.” என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

09:57:01 on 26 May

மேலும் வாசிக்க மாலைமலர்

கேரளாவில் வலதுசாரி இந்து கும்பல்களால் சிதைக்கப்பட்ட 'மின்னல் முரளி' படத்தின் தேவாலய செட்டைத் தொடர்ந்து, மாநில முதல்வர் முதல் அனைத்து திரைப்பட தொழிலாளர்களும் கொதித்தெழுந்துள்ளனர். இது குறித்து பேசிய முதல்வர் பினராயி, "கேரளாவில் மதவாத சக்திகள் விளையாட முடியாது." என்று கூறியுள்ளார்.

08:57:02 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மதுரை ஊமச்சிக்குளம் அன்னை வேலுநகரைச் சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த். மதுரை அய்யர்பங்களா பகுதியில் ஸ்பைடர் என்ற பெயரில் தனியார் டிடெக்டிவ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணைத் தாக்கி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார்.

08:27:01 on 26 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது.

07:57:01 on 26 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,728-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

07:27:01 on 26 May

மேலும் வாசிக்க தினகரன்

சில மாதங்களுக்கு முன்னர் மலேசியா பாமாயிலை இறக்குமதி செய்ய இந்தியா மறைமுக தடை விதித்திருந்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

06:55:02 on 26 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

“60 நாட்களாக ஊரடங்கில் இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக உயரும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். ஆனால், மத்திய அரசு படிப்படியாக ஊரடங்கை ரத்து செய்து வருகிறது. ஊரடங்கு என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அது தோல்வியடைந்துவிட்டது.” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

06:28:57 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியைச் சேர்ந்த 39 வயதான செந்தில்குமார் என்பவருக்கும், கொளத்தூர் அடுத்த அய்யம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான பார்வதிக்கும் முறையற்ற உறவு இருந்துள்ளது. இந்நிலையில் அவர், சந்தேகத்தால் பார்வதியை நள்ளிரவில் எரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

05:57:01 on 26 May

மேலும் வாசிக்க Behind Woods News

ஆண்களின் விந்தணுக்களில் இருக்கும் ஒருவகையான புரதத்திற்கும், கரோனா வைரஸ் அதிக நாட்கள் ஆண்களின் உடலில் இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாகவும், கரோனா வைரஸ் ஆண்களை அதிகம் பாதிப்பது ஏன் என்ற காரணம் குறித்தும் மருத்துவர் விளக்கியுள்ளார்.

05:25:02 on 26 May

மேலும் வாசிக்க Asiavillenews

ஆண்களின் விந்தணுக்களில் இருக்கும் ஒருவகையான புரதத்திற்கும், கரோனா வைரஸ் அதிக நாட்கள் ஆண்களின் உடலில் இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாகவும், கரோனா வைரஸ் ஆண்களை அதிகம் பாதிப்பது ஏன் என்ற காரணம் குறித்தும் மருத்துவர் விளக்கியுள்ளார்.

04:57:01 on 26 May

மேலும் வாசிக்க Asiavillenews

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் கோல்ஃப் விளையாடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

04:27:01 on 26 May

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

”நாடெங்கும் தலைவிரித்தாடும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சட்டம் வேண்டும் என்பதில் பா.ஜ.கவின் நிலைப்பாடு என்ன? மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது அப்படி சட்டம் இயற்ற தயங்குவது ஏன்? அச்சட்டத்தை இயற்றும்படி தமிழக அரசையும் பாஜக வற்புறுத்துமா?” என விசிகவின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

03:57:01 on 26 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

திருச்சி மணப்பாறை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் இருக்கும் மல்லிகைத் தோட்டத்தில், உடலில் பலத்த காயங்களுடன் 9 வயது சிறுமி அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தலையில் பலத்த காயங்கள் இருந்துள்ளது.

03:25:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைத் துவக்கத்தில் கடுமையாக விமர்சித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், தற்போது மத்திய அரசு அத்திட்டத்தையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

02:57:02 on 26 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சூர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. ஆம் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் இடது கையில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும். அந்த காயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

02:27:01 on 26 May

மேலும் வாசிக்க சினி உலகம்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்கக் கூடாது என ஆந்திர மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 50 இடங்களில் உள்ள சொத்துகளை விற்க கூடாது என்றும், பக்தர்களுக்கு உதவும் வகையில் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

01:57:02 on 26 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

01:39:17 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர் மற்றும் மதுரையில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்றும், 9 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01:35:37 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கூட பணியாளர்கள் வர தயங்குகின்றனர். வெளியூர்களில் இருந்து அழைத்து வர தயாராக இருந்தாலும் பணியாளர்களின் தயக்கம் காரணமாக கட்டுமான துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

01:27:01 on 26 May

மேலும் வாசிக்க தினமலர்

திருச்சி மத்தியச் சிறையில் பணியாற்றி வரும் சிறைக் காவலர்கள், 37 பேருக்கு விருப்பத்தின் பேரில் மதுரை, தேனி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் மது அருந்திய நிலையில மத்திய சிறை அருகில் உற்சாக மிகுதியில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்துள்ளனர்.

12:57:01 on 26 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் பாரம்பர்ய சிலம்பாட்டக் கலையை சரண்ராஜ் என்பவர் மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தருகிறார். பயிற்சி பெற்ற மாணவர் 16 பேரை படுக்க வைத்து ஒரே நேரத்தில் பறந்து தாண்டுகின்ற நிகழ்ச்சியை செய்து, கின்னஸில் இடம்பெற அவர் முயற்சித்து வருகிறார்.

12:27:01 on 26 May

மேலும் வாசிக்க விகடன்

தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டி சுப்பிரமணியன்கோவில் தெருவைச் சேர்ந்த ரத்னம் மகன் பிரசாந்த் (25). இவருக்கும், கேரள மாநிலம், கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் காயத்ரிக்கும் (19), குமுளி சோதனைச்சாவடி அருகே திருமணம் நடைபெற்றது.

11:57:02 on 26 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொரோனா பாதிப்பு ஒருபுறம் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியா-சீனா இடையிலான எல்லை பதற்றமும் அதிகரித்து வருகிறது. லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 5ஆம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. கைகலப்பு என்ற அளவிலேயே இந்த மோதல் இருந்தாலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இத்தகைய மோதல் வெடித்தது.

11:27:02 on 26 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நாடு முழுவதும் 1,38,845 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. பிரேசில் 2வது இடத்திலும், ரஷ்யா 3வது இடத்திலும், ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

10:57:01 on 26 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.47 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 99,805 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,021 ஆகவும், தமிழகத்தில் 118 ஆகவும் உள்ளது.

10:27:01 on 26 May

மேலும் வாசிக்க தினகரன்

அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதியோடு நிறைவடைகிறது. இருந்தாலும் அதற்கு பிறகும் வெப்பத்தின் தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்று வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் வெயில் அளவு சற்று அதிகமாகவே காணப்பட்டது.

09:57:01 on 26 May

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தாகத் தற்போது பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) தற்காலிகத் தடை விதித்து மே 25 ஆம் தேதி அறிவித்துள்ளது.

09:27:01 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாதாம் பருப்பானது சாப்பிடுவதற்கு ருசியாக தான் இருக்கும். ஆனால் இதனை அப்படியே சாப்பிட கூடாது. 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும். பாதாம் பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.

08:57:01 on 26 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஜம்மு-காஷ்மீரின் பாலகோட்டில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

08:53:32 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,739 கனஅடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.49 அடியாகவும், நீர் இருப்பு 65.478 டிஎம்சியாகவும் உள்ளது.

08:51:19 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்களுக்கு பயணிகளை அழைத்து வருதல் மற்றும் ஏற்றிச் செல்லுதலுக்கு டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவைகளுக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

08:48:14 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 31ஆம் தேதியுடன் நான்காவது ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

08:38:44 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மணல் விற்பனை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மணல் விற்பனை இன்று தொடங்கியது. மாநிலத்தில் உள்ள 10 ஆறுகளில் மணல் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

08:35:14 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை https://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=article&id=344&Itemid=123 என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

07:57:01 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

முதலில் உங்கள் கால் நுனி விரல் தரையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு உங்களது உள்ளங்கை தரையில் வைத்துக் கொள்ளவேண்டும் பின்பு லேசாக கைகளை மடக்க வேண்டும் இப்பொழுது உங்களது நெஞ்சுப்பகுதி தரையை ஒட்டி இருக்கும் பின்பு கைகளை நிமிர்த்த வேண்டும்.

06:57:01 on 26 May

மேலும் வாசிக்க மாலைமலர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக தளமான `ஜியோ மார்ட்', தற்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இதன் சேவையானது சோதனை ஓட்டமாக நவி மும்பை, தானே, கல்யாண் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்டிருந்தது.

05:57:01 on 26 May

மேலும் வாசிக்க விகடன்

நம் தமிழ் திரையுலகில் சில படங்கள் நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் அப்படத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருப்பார்கள். அதனால் அப்படம் சிறந்த வசூலை கொடுக்காமல் இருந்திருக்கும். அந்த வரிசையில் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம், புதுப்பேட்டை, விசாரணை ஆகிய படங்கள் உள்ளன.

10:57:01 on 25 May

மேலும் வாசிக்க சினி உலகம்

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம், நடிகர் யோகிபாபுவை ஹீரோவாக வைத்து புதிய படம் தயாரிக்க இருக்கிறார். ஷான் என்பவர் இப்படத்தை இயக்கயிருக்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

09:57:01 on 25 May

மேலும் வாசிக்க மாலைமலர்

ஹரியானா மாநில பாஜக செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக உள்ளவர் சந்தர் பிரகாஷ் காதுரியா. இவர் கடந்த 21-ம் தேதி சண்டிகரில் உள்ள தனது பெண் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டாவது மாடியில் இருந்த வீட்டின் பால்கனியில் இருந்து திடீரென துணிகளைக் கட்டி சந்தர் பிரகாஷ் கீழே இறங்கியுள்ளார்.

08:57:01 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழகத்தில் ஜமீன் சொத்துகள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில், இந்தச் சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாகப் பட்டம் சூடி தமிழகத்தின் கடைசி ஜமீனாக இருந்து வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி.

08:27:02 on 25 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

நாகை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் கருணாகரன் (40). இவர் அசைவ ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு சென்ற விளந்திட சமுத்திரம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் கட்ட ராஜா என்கிற பூரணச்சந்திரன் (25) ஓசியில் சிக்கன் பிரியாணி கேட்டுள்ளார். கருணாகரன் தர மறுத்துள்ளார்.

07:57:01 on 25 May

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

மேலும் வாசிக்க