View in the JustOut app
X

17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதி எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அப்போது இந்தமுறை ஆங்கிலத்தில் எம்.பி.யாக பதவியேற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதற்குப் பதிலாக மாநில மொழியில் பதவியேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

05:23:22 on 20 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மலைப்பகுதியில் குறைந்த மக்கள்தொகை கொண்ட இடமான ஜாதுகோடாவிற்கே இந்த நிலைமை என்றால், தமிழகத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் கிடங்கு அமைத்தால் என்னவாகும் என்று யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை. தமிழகத்தின் ஒரு பகுதியே வாழத் தகுதியற்ற நரகமாகிவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

05:18:31 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

’என் மனதிலும் சில வருத்தங்கள் இருக்கின்றன. அவை என்னுடன் போகட்டுமே. இப்போது முழுநேர மருத்துவர் பணியை என்னால் செய்ய முடியவில்லையே தவிர, மருத்துவ முகாம்களை நடத்துகிறேன். அரசியலுக்கு வந்ததால் ஒருநாளும் வருத்தப்படவில்லை’ என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

05:13:23 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

மகாரஷ்டிர மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் நிலங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வயல் வெளியில் சத்திரபதி சிவாஜியின் உருவத்தை கிராம மக்கள் உருவாக்கி உள்ளனர். இதனை கூகுள் மேப்ஸின் சேட்டிலைட் வியூவ் மூலம் முழுமையாகக் காண முடிகிறது. இது பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

05:02:26 on 20 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

ம்பையில் ஒரு பேக்டரியில் ஃபிக்ஸர் என்ற வெப் சீரியலின் ஷூட்டிங் நேற்று நடந்துள்ளது. அதில் நடிகை மாஹி கில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பின்போது, 4 ரவுடிகள் உள்ளே புகுந்து நடிகை மற்றும் குழுவை தாக்கியுள்ளனர். நடிகை மாஹி இது பற்றி கண்ணீருடன் பேசியுள்ளார்.

05:01:18 on 20 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடல்காற்று நிலப்பகுதியை நோக்கி வீசுவதால் வெப்பநிலை குறையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

04:55:16 on 20 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலகக்கோப்பைத் தொடரில் தனது முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் விஜய் சங்கர். இவர் புதன் கிழமை அன்று வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஜஸ்பிரீத் பும்ரா வீசிய பந்து, கால் பெரு விரலைப் பதம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. விஜய் சங்கர் வலியால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

04:47:34 on 20 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பூண்டை உரித்து சமையல் செய்வது சிலருக்குக் கொடுமையிலும் கொடுமையாக இருக்கலாம். ஆனால், பூண்டை சுலபமாக எப்படி உரிக்கலாம் என்பது குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

04:39:46 on 20 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நிதி அமைச்சகம் மற்றும் செலவு செய்யும் அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே வரவு மற்றும் செலவு குறித்து திட்டமிட்டும், கணக்கிட்டும் பட்ஜெட்டினை உருவாக்குகிறது. பட்ஜெட்டில் தனியார் துறை, அரசு சாரா அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி பட்ஜெட் உருவாக்கப்படுகிறது.

04:32:39 on 20 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கடந்த ஜூன் 3ஆம் தேதி இலங்கை அரசில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களில் இரு அமைச்சர்கள் மட்டும் மீண்டும் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கே தெரியாமல் நடந்ததாக அடுத்த சர்ச்சையும் வெடித்திருக்கிறது.

04:30:01 on 20 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குவைத்தில் மிட்ரிபா பகுதியில், பூமியின் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலையும், பாகிஸ்தானின் தர்பாத் பகுதியில், பூமியின் நான்காவது அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் (World Meteorological Organization) தெரிவித்துள்ளது.

04:19:55 on 20 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களைப் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். தற்போது அவர் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியிட்ட டேனியல் இணைந்துள்ளார்.

04:13:23 on 20 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மரபணு சார்ந்த போக்கு அடிப்படையில் இந்தியாவை சார்ந்த மக்களுக்கு உடல் எடை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

04:07:15 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஜூன் 28ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், ஜூன் 24ஆம் தேதி காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

04:06:23 on 20 Jun

மேலும் வாசிக்க தின மலர்

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பிரமாண்ட திரைப்படமான ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்ட மறு வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில் நீக்கப்பட்ட சில முக்கியக் காட்சி, கெளரவக் காட்சி மற்றும் ரசிகர்களுக்கு கூடுதல் ஆச்சரியம் அளிக்கக்கூடிய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

04:02:14 on 20 Jun

மேலும் வாசிக்க தினமணி

தற்போது சென்னையில் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அத்துடன் கோவிலம்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

03:52:48 on 20 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கெலாக்ஸ், சாக்கோஸ் என குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.

03:46:05 on 20 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

விழுப்புரம் அருகே, டிப்பர் லாரி மோதி சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த போராட்டத்தை அறிந்து அங்கு விரைந்த வளவனூர் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

03:40:01 on 20 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் கூடிய 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

03:34:14 on 20 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல் சபைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தேர்ந்து எடுக்க உதவும்படி திமுகவின் உதவியை காங்கிரஸ் நாடி உள்ளது. தமிழக சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர் மட்டுமே உள்ளனர். எனவே மன்மோகன் சிங்கை தேர்வு செய்ய திமுக எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

03:27:01 on 20 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் நடந்த குரூப் 1 தேர்வை, ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால், தமிழக மாதிரி விடைத்தாளில் 18 கேள்விகள் தவறாக இருந்ததாக சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னை இதன் தீர்ப்பை தேதி இன்று குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

03:10:02 on 20 Jun

மேலும் வாசிக்க தின மலர்

சென்னையில் உள்ள ராடிசன் ப்ளூ ஜிஆர்டி ஹோட்டல் தங்களது விருந்தினர்களுக்கு நீரைப் பயன்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கியுள்ளது. தற்போது சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நீரை நீதி ரீதியாக, அதாவது நியாயமான அளவு நீரை மட்டும் பயன்படுத்துமாறு ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களிடம் அந்நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

02:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் ரசிகர்கள் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட போஸ்டரில், ‘நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார்’ எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையாகி வருகிறது.

02:42:01 on 20 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாக இருக்கும். சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது.

02:32:06 on 20 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

நடிகை ரெஜினா தெலுங்கு நடிகர் ஒருவரை இந்த மாதம் 13ஆம் தேதி ரகசிய திருமணம் செய்தார் என்ற செய்தி இணையத்தில் வைரலானது. பிரபல தமிழ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டதால் அனைவரும் செய்தியை நம்பினர். இதற்குமுன் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உள்பட ஒருசிலருடன் ரெஜினா கிசுகிசுக்கப்பட்டது இந்த செய்தியை நம்ப முக்கிய காரணம்.

02:21:58 on 20 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கேரளத்தில் பஸ் டே கொண்டாடப்படும் தினத்தில் தாங்கள் பயணிக்கும் பேருந்தை சுத்தமாகக் கழுவும் பணியினை மாணவர்களே மேற்கொள்கின்றனர். ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மானசிகமாக நன்றி தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். நம் மாணவர்களிடத்திலும் இது போன்ற மாற்றம் எப்போது வருமோ?

01:58:57 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

மும்பையை சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (Trust Research Advisory) எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒப்போ மூன்றாவது இடம் பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

குஜராத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி ஜாம் நகர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த மோடியை விசாரிக்க வேண்டும் என அப்போது ஐபிஎஸ்ஸாக இருந்த சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார்.

01:50:12 on 20 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலகக் கோப்பை போட்டியில் விளையாடாதது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார் தவான். அதில், ’இனி இந்த உலகக் கோப்பை தொடரின் ஓர் அங்கமாக நான் இருக்கப் போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்றார்.

01:29:03 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

ஏ.என்.32 விமான விபத்தில் பலியானவர்களின் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏனைய 7 பேரின் உடல்கள் சேதம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் உடலை மீட்கும் பணி நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:09:59 on 20 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

'நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால்தான் நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டது' என்று ஐசரி கணேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், ‘விஷால் மட்டும் நடிகர் சங்க பிளவுக்கு காரணம் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நாசர், கார்த்தி ஆகியோரும் காரணம்.’ என்றார்.

01:07:22 on 20 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜம்மு காஷ்மீரில் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததாக மாணவர்களை குனியவைத்து ஆசிரியர் சரமாரியாக பிரம்பால் அடிக்கும் காட்சிகள் வெளியாகி கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

01:01:59 on 20 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

பிறந்தநாள் என்றாலே நம்மில் பலர் கேக் வெட்டியும் புத்தாடை அணிந்தும் அந்நாளைக் கொண்டாடுவோம். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவி மரக்கன்றுகள் வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்.

12:53:37 on 20 Jun

மேலும் வாசிக்க சன் நியூஸ்

கடலூரை அடுத்த செல்லங்குப்பத்தில் படுக்கை அறைக்குள் பாம்பு புகுந்ததால், அந்த வீட்டினர் பீதியடைந்தனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் செல்லா என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த செல்லா, மெத்தைக்கு கீழே பதுங்கியிருந்த பாம்பை பிடித்து சென்றார்.

12:46:26 on 20 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும், வெப்பத்தின் தாக்கம் வருகின்ற நாட்களில் குறைந்து காணப்படும் எனவும் கூறினார்.

12:42:34 on 20 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

மத்திய பிரதேசத்தின் சாகரில் , இந்தி நாளிதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் சக்ரேஷ் ஜெயினை தீ வைத்து கொளுத்தியதால் இறந்திருக்கிறார். கூடுதல் விவசாய விரிவாக்க அதிகாரியும், மற்றொருவரும் சேர்ந்து தனது சகோதரர் மீது கொளுத்தியதாக இறந்தவரின் சகோதரர் கூறியுள்ளார்.

12:40:51 on 20 Jun

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

சீனாவில் தொடக்கப் பள்ளி மாணவனை கொடூரமான முறையில் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த மாணவனை அடித்து இழுத்துச் சென்று வகுப்பறைக்கு வெளியே வீசினார். ஆசிரியரின் இந்தத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

12:36:44 on 20 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

20 ஆண்டுகளைவிட தற்போது அகதிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும் 37,000 பேர் இடம்பெயருகின்றனர். புதிய புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு 13 லட்சம் மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். இதில், எத்தியோப்பியாதான் முதலிடத்தில் உள்ளது.

12:33:01 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

தொழில்நுட்ப கல்வி இயக்குநரத்தின் இணையதளமான tndte.gov.in மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான இணையதளமான tneaonline.in ஆகியவற்றில் பதிவு எண்கள் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ரேங்க் லிஸ்டை பெறலாம்.

12:29:28 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

லோக்சபா தேர்தலின் போது, ஊடகங்களில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான தேர்தல் செய்திகளில் 40 சதவீதம் ஒருதலைபட்சமானது என ஊடகங்களில் வெளியான செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து, பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

12:21:32 on 20 Jun

மேலும் வாசிக்க தினமலர்

ஹார்திக் பாண்டியாவுடன் எடுத்த செல்ஃபியை ட்விட்டரில் பகிர்ந்த ரன்வீர் சிங், அதில் ஒரு வாசகத்தைப் பதிவிட்டார். அது, தொழில்முறை மல்யுத்த வீரரான பிராக் லெஸ்னரின் வாசகத்தைப் பிரதிபலித்ததால், அவருடைய மேலாளர் பால் ஹெமன், அந்த வாசகத்துக்கான குறியீடு தன்னிடம் இருப்பதாகக் கூறி ரன்வீர் சிங்கை எச்சரித்தார்.

12:17:45 on 20 Jun

மேலும் வாசிக்க தினமணி

மக்களவையில் முதன்முறையாக அதிக பெண்கள் இடம்பெற்றுள்ளது பெருமையானது என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மேலும், ‘விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு பாடுபடும்’ என்றும் தெரிவித்தார்.

12:13:09 on 20 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த குழந்தைகள் உயிரிழந்து வருவதால், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

12:10:57 on 20 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு காரணங்களுக்காக எல்லையை கடக்கும் அகதிகளுக்கென, உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகிறது. இதில் 95 சதவிகித ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருவது தெரியவந்துள்ளது.

12:07:55 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நடிகை அஞ்சலி சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அஞ்சலி அமெரிக்காவிற்கு பிறந்துள்ளார். அங்கு அவர் த்ரில்லிங்கான பல விஷயங்களை செய்துள்ளார்.

12:04:32 on 20 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை தருவதாக விளம்பரம் செய்ததை அடுத்து, அந்த சட்டையை வாங்க கூட்டம் குவிந்ததால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

11:58:57 on 20 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சென்னையில் கடும் வறட்சி காரணமாக அரசின் ‘அம்மா’ குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் அதன் விநியோகம் தடைபட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மட்டும் சொற்ப அளவில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன.

11:40:43 on 20 Jun

மேலும் வாசிக்க காமதேனு

விஜய் பிறந்தநாள் காமன் டிபியில் இருப்பது யாருடைய reference? என சமூக வலைதளங்களில் விஜய், சீமான் ஆதரவாளர்கள் இடையே விவாதம் நடைபெறுகிறது. கையை உயர்த்தி இருக்கும் விஜய் படம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ரெஃபரன்ஸ் என்று சீமான் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

11:35:43 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

முதலமைச்சர் பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராத நிலையில், நேற்று உடல்நலப்பரிசோதனை மேற்கொண்ட அவர், இன்று இருதய பரிசோதனை நிறைவடந்த பின்னர் அப்போலோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

11:31:52 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தினை தமிழக அரசு துவங்கியது. இந்த ஆண்டில், இந்த திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

11:26:44 on 20 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காவல்துறை சார்பில் இலவசமாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கூடுவாஞ்சேரி காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் லாரி மூலம் மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க இலவசமாக தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

11:20:52 on 20 Jun

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சென்னை உட்பட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

11:18:08 on 20 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

இமாலய பனிமலைகளில் மிகப்பெரிய அளவில் பனி உருகி வருவது பனிப்போரின் போது உளவுப்பார்க்க பயன்படுத்த செயற்கைக்கோள்களின் புகைப்படத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. இதற்கு பருவநிலை மாற்றமே ஒரு முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

11:15:31 on 20 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஜீவா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் 'கொரில்லா', இதில் 'காங்' என்னும் கதாபாத்திரத்தில் சிம்பான்சி குரங்கு ஒன்று நடித்துள்ளது. இந்த நிலையில் சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைத்ததற்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

11:12:43 on 20 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடும் வேலை, முறையற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், அலுவலகங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து இருத்தல் போன்ற பல காரணிகளால் முதுகு வலி (back pain)ஏற்படுகின்றது. இதனை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். இவ்வகை வலியினை யோகா (yoga) பயிற்சியின் மூலம் சுலபமாக சரி செய்ய இயலும்.

11:03:52 on 20 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் சாலையின் விளிம்பில் நடந்து சென்ற அரசு ஆசிரியை, மகளின் கண்முன்னே டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

10:51:28 on 20 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அரியலூரில், மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய மினிலாரி ஒன்று, பேத்தியின் கண்முன்னே, முதியவர் மீது மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

10:44:26 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீருக்கு தெருத்தெருவாக அலையும் நிலையில் சென்னையில் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் தினசரி 2 லாரி தண்ணீர் தாராளமாக சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

10:35:22 on 20 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று நடக்கும் 26வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. நாட்டிங்காமில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்காற்று வீசும். லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:15:02 on 20 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சொத்திற்காக தந்தையே மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கவரைப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்காவில் பொது இடங்களில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுவது வழக்கம். அண்மை காலமாக இந்த பணியில் போலீசாருக்கு பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி உள்ளது.

09:35:02 on 20 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

09:15:02 on 20 Jun

மேலும் வாசிக்க தினகரன்

இமான் அண்ணாச்சி அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய மனைவி பற்றி பேசியுள்ளார். இமான் ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தாராம், அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்களாம். அதில் ஒருவர் தான் பச்சமுத்து என்கிற ஆசிரியர். அவரது மகளை தான் இமான் அண்ணாச்சி காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

08:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

பிரதமர் மோடியின் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' திட்டம் நடைமுறையில் சாத்தியமா என்பதை ஆய்வு செய்வதற்கு கமிட்டி விரைவில் அமைக்கப்படவுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தகவலை தெரிவித்தார்.

08:35:01 on 20 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தடுப்பூசிகள் குறித்த சந்தேகம் நவீன ஊசி மருந்துகள் மீதான சந்தேகம் போன்றே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு மத ரீதியான காரணங்களால் பயந்து இருந்தனர்.

08:15:02 on 20 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஹோட்டல்களுக்கு 1,800 ரூபாய் கொடுத்து வாங்கி வந்த லாரித் தண்ணீர், தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட 3,000 ரூபாய்க்கு அதிகமாகக் கொடுத்து வாங்குகிறது. இதுவும் இடத்தைப் பொறுத்து மாறுகிறது. கடந்த ஒரு மாதமாக, இந்தப் பிரச்னைதான் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.

07:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்கள் கட்டாயம் 45 நிமிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்க வேண்டும். பங்கேற்று சான்று பெற்றால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தியுள்ளனர்.

07:35:02 on 20 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.46ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

07:15:01 on 20 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் சைன்போரா என்ற இடத்தில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை சிலர் தயாரித்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் சக்திவாய்ந்த வெடிபொருளை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

06:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

ரஞ்சித்துக்கு ஆதரவாக சமூக ஆர்வாலர்கள், பத்திரிக்கை துறை சேர்ந்த நண்பர்கள், எழுத்தாளர்கள் சிலர் ஒன்று திரண்டுள்ளனர். #standwithranjith என்ற ஹாஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்டாக்கினர். இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் கூட்டறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

06:25:01 on 20 Jun

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது.

05:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உணவில் உப்பினைத் தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தாகம் ஏற்பட்டால் மட்டுமே குடிநீர் பருக வேண்டும். தேவையான அளவு மட்டுமே குடிநீர் பருகுவது நல்லது.

05:25:02 on 20 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

மே மாதத்துக்கான விமானப் போக்குவரத்துச் சேவை குறித்த விவரங்களை சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019 மே மாதத்தில் 2.9 சதவிகித உயர்வுடன் மொத்தம் 1.2 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 2018 மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.18 கோடியாக மட்டுமே இருந்தது.

04:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐ.நா. நிறுவனமான யூனிசெப் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பது தெரியவந்துள்ளது.

04:25:02 on 20 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நீலகிரியில் பருவமழை தாமதமாகும் நிலையில், முக்கிய அணைகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே செல்வதால், மின் உற்பத்திக்காக அணைகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மின் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

03:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

2020ஆம் ஆண்டில் முகநூல் நிர்வகத்தினர் வெளியிட உள்ள டிஜிட்டல் பணத்திற்கு லிப்ரா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். லிப்ரா - என்ற சொல்லுக்கு நீதி, சுதந்திரம் உள்ளிட்ட அர்த்தங்கள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றன. இந்த லிப்ரா பணத்தைக் கையாள்வதற்காக ’கலிப்ரா’ - என்ற வாலெட்டையும் பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது.

03:25:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

அதிமுகவில் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னையால் உட்கட்சி பூசல் அதிமாகி இருப்பதால் கட்சியினரை சமாளிக்க சீனியர்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என்று அதிமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் ராஜ்யசபா சீட்டின் முடிவால் பாமக தலைமை கோபத்தில் இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

02:56:01 on 20 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

வேகமாக சாப்பிட்டால், சாப்பிட்டதற்கான திருப்தியே இருக்காது. நிறைவான உணவாகவும் இருக்காது. ஆனால் வயிறு நிறைந்த உணர்வு மட்டும் இருக்கும். இவ்வாறு நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள் எனில், அதற்குக் காரணம், மூளைக்குக் கட்டளையிடப்பட்டு அது வேலை செய்வதற்கு முன்னரே எல்லாம் முடிந்துவிடுவதுதான் காரணம். இதனால் கலோரிகள் அதிகமாகின்றன.

02:26:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

தற்போதைய காலகட்டத்தில் பல க்ரிப்டோகரன்சிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களும் பல க்ரிப்டோகரன்சி திட்டங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளன. பல மாத யூகங்களுக்குப் பிறகு இறுதியாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது சொந்த க்ரிப்டோகரன்சியை அறிவித்துள்ளது.

01:56:01 on 20 Jun

மேலும் வாசிக்க ETV BHARAT

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் மேட்டு தெருவில் உள்ள விவசாயி 6 மாத காலமாக தனது கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் அந்த விவசாயியை மனமார பாராட்டி வருகின்றனர்.

01:26:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

செல்போனை நம் பிள்ளைகளிடமிருந்து மொத்தமாகப் பிரிக்க நினைப்பது சரியில்லை. அதற்குப் பதிலாக, அதில் அவர்களுக்குத் தேவையான விஷயங்களைப் பார்க்க வையுங்கள். பிள்ளையின் சிறு வயதிலிருந்து செல்போனை விளையாடக் கொடுத்த பெற்றோர் என்றால், முதலில் அதற்கு ஒரு டைம் லிமிட் வையுங்கள்.

12:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 58 ஆயிரத்து, 200 புதிய வேலைகள் உருவாகும். உற்பத்தி, பொறியியல், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்த வேலை வாய்ப்புகள் இருக்கும் என டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

12:25:01 on 20 Jun

மேலும் வாசிக்க தின மலர்

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும்.

11:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ஆட்டோமொபைல் பிரியரான தனது மனைவி நிலுஃபர் ஷெரிஃப் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு விலையுயர்ந்த லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றினை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

11:25:02 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்க டெல்லி செல்கிறார். டெல்லி பயணத்தின்போது மற்ற முக்கிய அமைச்சர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

பிரதமர் மோடி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை இரவு விருந்தளிப்பதாக தெரிவித்துள்ளார். இரவு உணவு தேசிய தலைநகரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அழைப்பை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவித்தார்.

10:25:02 on 19 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கிரீன் கார்டு எனும் அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமையை நாடு வாரியாக குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மட்டும் வழங்கும் சட்டத்திருத்த மசோதா அமலாகிறது. எனவே, தகுதி திறன் அடிப்படையில் இனி ஆட்களை எடுக்கும் போது, அதிகமக்கள் தொகை உள்ள இந்தியா, சீனா போன்ற நாட்டவரின் திறமையானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

09:55:02 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை தன்டையார்ப்பேட்டையில் உள்ள நகைக் கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருடு போனது. நகைக்கடை ஊழியர் இந்திரசாந்த், சுனில் சிறிது சிறிதாக நகைகளை திருடி வந்ததாக கடையின் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

09:25:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினகரன்

குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களை திரட்டி வரும் 22ஆம் தேதி முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிநீர் பஞ்சமே தமிழகத்தில் இல்லையென பொய்யான பிரச்சாரத்தை தமிழக அரசு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

08:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையைக் கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். 25 வருடத்திற்கு முன்பு அந்த சிலை அங்கு நிறுவப்பட்டது.

08:39:01 on 19 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையைக் கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். 25 வருடத்திற்கு முன்பு அந்த சிலை அங்கு நிறுவப்பட்டது.

08:36:01 on 19 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அமைச்சரான சி.வி.சண்முகத்தை முதல்வர் எவ்வாறு அனுப்பிவைத்தார் என்ற கேள்வி எழும் அதே நேரத்தில், கட்சித் தலைவரின் பிரதிநிதி என்ற அடிப்படையிலாவது அனுமதித்திருக்கலாம் அல்லவா என்ற குரலும் டெல்லி வட்டாரங்களில் எழுந்துள்ளது.

08:15:01 on 19 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 818 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த அப்துல் காதர் ஜெயலானி, அராஃபத், சபிஃபுல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கையில் பிடித்திருக்கும் பேனரில், ‘எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில், படத்தில் இருக்கும் பேனர் உண்மை தான் என்பதும், அதில் இருக்கும் வாசகம் மட்டும் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

07:39:01 on 19 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கையில் பிடித்திருக்கும் பேனரில், ‘எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில், படத்தில் இருக்கும் பேனர் உண்மை தான் என்பதும், அதில் இருக்கும் வாசகம் மட்டும் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

07:36:02 on 19 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

குழந்தையைப் பாதுகாக்க நாய் செய்த செயல் தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. அதில், நீர்நிலையில் உள்ள பந்தை எடுக்க தண்ணீர் அருகே குழந்தை செல்கிறது. இதனைக் கண்ட வளர்ப்பு நாய் ஒன்று, உடனடியாக சென்று குழந்தையை இழுத்து வந்து கரையில் தள்ளி விடுகிறது. இதன் பின்னர் அந்த நாய், தானே நீருக்குள் சென்று பந்தை எடுத்து வருகிறது.

07:15:01 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டிபன் பாத்திரத்தை யார் முதலில் கழுவுவது என்பது தொடர்பாக விமானிக்கும், விமான பணிக்குழுவை சேர்ந்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், இனி விமான பணியாளர்கள் யாரும் உணவை எடுத்து வரக்கூடாது என ஏர்இந்தியா நிர்வாகம் தடை விதித்துள்ளது.

07:06:11 on 19 Jun

மேலும் வாசிக்க தினமலர்

எடப்பாடி இன்னும் சசிகலாவை நம்பிட்டுதான் இருக்கார்னு அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இது பற்றி விசாரித்தபோது சசிகலாவுக்கான முதல்வர் எடப்பாடியின் மெசேஜை சிறைக்குப் போய் சொல்லியிருப்பவர் எடப்பாடியின் மனைவி ராதா. சசிகலாவும் எடப்பாடியும் இன்னமும் பரஸ்பர நம்பிக்கையோடுதான் இருக்காங்கன்னு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

06:39:01 on 19 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

எடப்பாடி இன்னும் சசிகலாவை நம்பிட்டுதான் இருக்கார்னு அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இது பற்றி விசாரித்தபோது சசிகலாவுக்கான முதல்வர் எடப்பாடியின் மெசேஜை சிறைக்குப் போய் சொல்லியிருப்பவர் எடப்பாடியின் மனைவி ராதா. சசிகலாவும் எடப்பாடியும் இன்னமும் பரஸ்பர நம்பிக்கையோடுதான் இருக்காங்கன்னு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

06:36:02 on 19 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

தளபதி 63 படத்தைப் பற்றிய படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் 22ஆம் தேதி நள்ளிரவிலும் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

06:33:42 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க