View in the JustOut app
X

நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப்பினை ரீ-இன்ஸ்டால் செய்யும் போதோ அல்லது போனை மாற்றம் செய்யும் போதோ செக்யூரிட்டி கோடுகள் மாற்றம் ஏற்படுகின்றன. end-to-end encryption-ஐ மிகவும் பாதுகாப்பான வழியில் செயல்படுத்த Security notifications – ஐ ஆன் செய்ய வேண்டும்.

04:08:53 on 22 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

ஆக்ராவில் உள்ள ராய்பா கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 22 வயது இளைஞர் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்டார். தான் காதலித்த பெண்ணுக்கு மற்றொரு ஆணுடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதால், காதல் தோல்வி தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

03:59:30 on 22 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சந்திராயன் – 2 GSLV ராக்கெட் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ‘ஒவ்வொரு இந்தியனும் இன்று மிகுந்த பெருமைப்படுகிறான்’ என தெரிவித்துள்ளார்.

03:55:17 on 22 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்கள் சிலவற்றில் கடுமையான மழை பெய்து வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னல் தாக்கி ஒரே நாளில் 35 பேர் பலியானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

03:49:54 on 22 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்தித்து பேசலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களில் எந்த நகரில் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் சின்னங்கள் அதிகம் உள்ளதோ அங்கு மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பை நடத்தலாம் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

03:42:05 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2, புவி வட்டப்பாதையை சென்றடைந்தது. இதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘இதுவரை நிலவு குறித்து தெரியாத விவரங்கள் அனைத்தும் இனிமேல் சந்திராயன் மூலம் தெரியவரும்’ என்று அவர் கூறினார்.

03:29:35 on 22 Jul

மேலும் வாசிக்க தினகரன்

லயன் கிங் பல வருடங்களுக்கு முன்பு கார்டூன் படமாக வந்தது. தற்போது டெக்னாலாஜி முன்னேற்றத்தால், அனிமேஷன் படமாக வெளிவந்துள்ளது. லயன் கிங் உலகம் முழுவதும் 3 நாட்களில் 531 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இவை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 3600 கோடியை தாண்டிய வசூல்.

03:24:19 on 22 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பலுச்சிஸ்தான் மக்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03:17:25 on 22 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் ஐ.ஐ.டியில் இன்று நடந்தது. அப்போது, ‘பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்று சொல்லிவிட்டு பெற்றோர்களே இல்லாமல் எப்படிக் கூட்டம் நடத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

03:09:27 on 22 Jul

மேலும் வாசிக்க விகடன்

தொழில்நுட்ப கோளாறு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.

02:51:52 on 22 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பல்கேரியாவைச் சேர்ந்த நெக்கொலேய், போரீஸ், லியுபேமிர் ஆகியோர் துரைப்பக்கம் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து போலி ஏ.டி.எம் .கார்டுகள் தயாரித்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் கொள்ளையடித்த பணத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி விடுதியில் இவர்களுக்கென்று வழங்கப்பட்ட லாக்கரில் வைத்துள்ளனர்.

02:42:56 on 22 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார்.

02:39:58 on 22 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்துக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்தார். அவர் தனது ட்விட்டரில், 'உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி; வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவு இது' என்று பதிவிட்டுள்ளார்.

02:19:12 on 22 Jul

மேலும் வாசிக்க தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நடுநிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் வடமாநில சிறுவர் சிறுமியர் இந்தி, ஆங்கிலத்துடன் அழகு தமிழில் பேசி அசத்துகின்றனர். இந்த மாணவர்களுக்கு என 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

02:14:53 on 22 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்ய குழு அமைக்க ஆணையிட்டுள்ளது.

01:57:01 on 22 Jul

மேலும் வாசிக்க தினகரன்

கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து 167 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

01:47:35 on 22 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தின் வசூலுக்கு முதல் மூன்று நாட்கள் எந்த ஒரு குறையும் இல்லை. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதைத் தாண்டி மற்ற மாநிலங்கள் சேர்த்து ரூ.15 கோடி வசூலை எட்டியுள்ளது. வெளிநாடுகள் என உலகம் முழுவதும் கடாரம் கொண்டான் ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளது.

01:40:32 on 22 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

டால்பின் என்று சொன்னவுடன், வழவழவென கருப்பு நிறத்தில் வேகமாக நீந்தும் உயிரினம் மனக் கண்களில் வந்து போகும். ஆனால், வெள்ளை நிறத்திலும் டால்பின் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதுகுறித்து நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

01:33:19 on 22 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01:28:09 on 22 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

நிலா குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஓராண்டு காலம் ஆய்வில் ஈடுபட்ட அந்த விண்கலம் தான் நிலாவில் தண்ணீருக்கான மூலக்கூறுகள் இருப்பதை முதன் முதலில் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தது.

01:21:10 on 22 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ரெட்மி நிறுவனம் ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஆகிய மொபைல்களை உலகின் வேகமான ஸ்மார்ட்போன்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு மொபைல்களும் முதலில் சீனாவில் விற்பனைக்கு வந்தன. பிறகு இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

01:18:12 on 22 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆடை படம் தான் 15 வருடங்களுக்கு முன்பு நடித்து, இயக்கிய 'குடைக்குள் மழை' என்ற படத்தின் காப்பி என்பது போல் அவர் பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

01:03:59 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை பாரிமுனையில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது சுல்தான் என்பவரை இரண்டு நபர்கள் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் அந்த இரண்டு பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

12:58:11 on 22 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று பலர் கூறி வருகிறார்கள், ஆனால் அது போன மாதம் தான். இப்போது வேலூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. அதுவும் உறுதியான எக்கு கோட்டையாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

12:45:49 on 22 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

படத்தில் நடித்து முடித்தோமா முழு செட்டில்மெண்டையும் வாங்கினோமா என்று நடிகைகள் பட ரிலீஸ் சமயத்தில் முழுமையாக நழுவி விடும் நிலையில் ‘ஆடை’ பட ரிலீஸுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்து தயாரிப்பாளர்கள் மத்தியில் சபாஷ் பெற்றிருக்கிறார் நடிகை அமலாபால்.

12:42:26 on 22 Jul

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

’ரஜினி, சூர்யா, திருமாவளவன் ஆகியோர் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்’ என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’கால அவகாசம் இருப்பதால் வரைவில் எது பிடிக்கவில்லை என்பதைத் தெரிவிக்கலாம்’ எனவும் கூறியுள்ளார்.

12:38:36 on 22 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’ரயிலில் குண்டு வைத்தவர்கள், கொலை செய்தவர்கள்தான் தற்போது எம்பி பதவியில் உள்ளனர்’ என திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் பன்முகத் தன்மையை மாற்றிட ஒரே கொள்கையை கொண்டுவர பாஜக முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

12:31:33 on 22 Jul

மேலும் வாசிக்க ETV BHARAT

சூர்யா நடித்திருக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியாகியிருக்கிறது. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ரஜினி, புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை தாம் ஆமோதிப்பதாகக் கூறியுள்ளார்.

12:26:05 on 22 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்ட ஓசூர் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:13:27 on 22 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்ப்பதற்காக அம்மாநில முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்தி புரளி என கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

12:08:39 on 22 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவை கர்நாடக அரசு குறைத்துள்ளது. நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

12:02:56 on 22 Jul

மேலும் வாசிக்க தினகரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் உள்ள லாஸ்லியாவின் தந்தை புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சேரனும், லாஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரி இருப்பதாகக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

11:52:22 on 22 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஜஸ்டின் சல்லீவன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில், யானையின் தும்பிக்கை தனியாக, தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையிலும், முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையிலும் உள்ளது.

11:42:17 on 22 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

அஜித்தின் ஆசை படத்தில் ஒரு பாடலுக்கும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்த பூஜா பத்ரா ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது பூஜா பத்ராவுக்கும், ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரு நவாப் ஷாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.

11:37:28 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

’மத்திய அரசு மகளைக் காப்பாற்றுங்கள்; மகளுக்குக் கற்பியுங்கள்’ என்ற திட்டத்தைத் தீவிரமாக ஊக்குவித்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:30:51 on 22 Jul

மேலும் வாசிக்க விகடன்

’உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேனோ அதைச் சரிவர செய்வேன்’ என பாஜகவைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. பிரக்யா தாக்கூர் கூறியுள்ளார்.

11:18:06 on 22 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

11:09:46 on 22 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தற்போது ட்ரெண்டில் உள்ள அடல்ட் காமெடி படங்களில் ஒரு டாப் ஹீரோவோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த நடிகை ஜனனி, ’அஜித் சார் படமாக இருந்தால் இரண்டு நிமிட ரோலாக இருந்தால் கூட நடிப்பேன்’ என கூறியுள்ளார்.

11:03:21 on 22 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

வீடுகளுக்கு சமையல் எரிவாய் சிலிண்டர் கொண்டு வரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரம் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் பரவலாக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஏஜென்சி ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

10:51:11 on 22 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கர்நாடக சட்டப் பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக
விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களின் முறையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

10:47:39 on 22 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க. வில் இணையும் விழாவில் பேசிய தங்க தமிழ்செல்வன், ’டிடிவி தினகரன் கட்சியை மக்கள் ரசிக்கவில்லை. விரும்பவில்லை. செத்த பாம்பை அடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதைப்பற்றி பேசுவது தவறு என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

10:42:12 on 22 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திராயன்-1 நீர் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்ததுபோல், சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

10:26:39 on 22 Jul

மேலும் வாசிக்க தினமணி

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சிபெற ராணுவ தளபதி பிபின் ராவத் தோனிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிபெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:15:19 on 22 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நடிகை பிரியங்கா சோப்ரா ஜூலை 18ஆம் தேதியன்று மியாமியில் சொகுசுக் கப்பலில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தில் பிரியங்கா சோப்ரா சிகரெட் புகைப்பதாகத தெரிகிறது. இதைத்தொடர்ந்து பிரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர்.

09:57:01 on 22 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், கூடிய விரைவில் அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

09:39:01 on 22 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், கூடிய விரைவில் அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

09:36:01 on 22 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கர்நாடக சட்டப்பேரவையில், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. இந்நிலையில், பெங்களூரில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் குமாரசாமி, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

09:15:03 on 22 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வடதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:57:01 on 22 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை திருவான்மியூரில் நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ’புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் என்று பலர் சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதுதான் மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

08:39:02 on 22 Jul

மேலும் வாசிக்க தின மலர்

சென்னை திருவான்மியூரில் நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ’புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் என்று பலர் சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதுதான் மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

08:36:01 on 22 Jul

மேலும் வாசிக்க தின மலர்

கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரும் நாள்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

08:18:01 on 22 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரும் நாள்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

08:15:01 on 22 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானத்தின் இடதுபுற இறக்கை மீது, வாலிபர் ஒருவர் ஏறினார். இதனைப் பார்த்த விமானி விமான நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அந்த வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.

07:57:02 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 20 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. சரியாக இன்று மதியம் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.

07:39:01 on 22 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 20 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. சரியாக இன்று மதியம் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.

07:36:01 on 22 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை, நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.76.18 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.96 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:25:13 on 22 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கருங்காலிப்பட்டை கால் கிலோவும், மருதம்பட்டை கால் கிலோவும், சுக்கு 50 கிராம் மற்றும் ஏலக்காய் 50 கிராமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தூளாக்கி கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீரில், கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி அருந்த வேண்டும்.

06:55:01 on 22 Jul

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் பெய்த மழையால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் முதல் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

06:25:02 on 22 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் செயலி ஃபேஸ் ஆப். இந்த ஃபேஸ் ஆப் செயலி மூலம் சீனாவில் 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபர், அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் மீண்டும் இணைந்தார்.

05:55:01 on 22 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

”மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வணிக ரீதியிலான பயன்பாடுகள் கொண்டிருந்தால் அவற்றிற்கு அரசு மானியம் வழங்கும். நமது எதிர்கால தலைமுறையினருக்காக புகை இல்லா தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்.” என மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

05:25:01 on 22 Jul

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

டொனால்டு டிரம்ப்பின் ‘கோ பேக்’ டுவிட்டை அடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள். சாமியார் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, சாமியாரின் முகம் உட்பட அவரது உடல் முழுவதும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

04:55:02 on 22 Jul

மேலும் வாசிக்க தினத்தந்தி

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அதிகமாவதால், அது ரத்த குழாய்களில் சென்று சிறிது சிறிதாக படியத் தொடங்குகிறது, அதிக உடல் எடையினால், இதயநோய் குடும்ப பிண்ணணி இருந்தால் இதய நோய்களும், மாரடைப்பும் வரும். பிறப்பிலிருந்தே சிலருக்கு இருதய கோளாறுகள் இருக்கும்.

04:25:01 on 22 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

”சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன், சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

03:55:01 on 22 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மாதவிலக்கு நிற்பதற்கு முந்தைய அல்லது மாதவிலக்கு நிற்கும் பருவத்திற்கான அறிகுறி இல்லாத - ஆனால் பாலுறவில் நாட்டம் இல்லாத குறைபாடு (எச்.எஸ்.டி.டி.) உள்ள இளம்பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்காக வைலீசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

03:25:01 on 22 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 52 வயதுடையவர் ரல்ஃப் ஜான்கஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 வயதுடைய கிரிஸ்டல் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், செக்ஸ் மோகத்தினால் புதுமண தம்பதி தொடர்ந்து 48 மணிநேரம் உடலுறவில் ஈடுபட்டதில் மணமகள் உயிரிழந்தார்.

02:55:02 on 22 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி வந்தாலும் ஜெயலலிதாவை போல் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தனது அரசியல் நிலைப்பாட்டில் இருப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை அழிக்க நினைக்க மாட்டார் என்றும் தெரிவிக்கின்றன.

02:25:01 on 22 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

வெனிஸ் நகரின் ரியால்டோ பாலத்தில் அமர்ந்து, காபி தயாரித்துக்கொண்டிருந்த இரு பயணிகளுக்கு, வெனிஸ் அரசு 73,000 இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது அந்நாடு. வெனிஸிலுள்ள நான்கு கிராண்ட் கால்வாய்களில் மிகவும் பழமையானது ரியால்டோ.

01:56:02 on 22 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியை அதிமுக அடைந்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்ப்பதாகவும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

01:26:01 on 22 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற 19,000 மாணவர்களில் ஒருவருக்கு கூட, அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. போதிய அளவில் நீட் பயிற்சி அளிக்காததே, மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்காததற்கு காரணம் என கூறப்படுகிறது.

12:55:01 on 22 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

வேலூர் அருகே, தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில், 56 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட பணம், வட்டாட்சியரும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலருமான சுஜாதாவிடம் ஒப்படைத்து, பின்னர் வாணியம்பாடி கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

12:25:01 on 22 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

11:55:01 on 21 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தீவிரவாதிகள் குறித்த அரசின் கொள்கையை மாற்றிக் கொண்டால் பாகிஸ்தானுக்காக அமெரிக்காவின் கதவுகள் திறந்திருக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிரம்ப்பை நாளை வாஷிங்டனில் நேரில் சந்திக்க உள்ள பாகிஸ்தான் பிரதமரிடமும் இதனை அமெரிக்கா வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

11:25:01 on 21 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னையில் செயல்பட்டுவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10:55:01 on 21 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம். அனைத்து நாடுகளுக்கு விமான சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் அனைத்து விமானங்களும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது.

10:25:01 on 21 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

குடியாத்தம் அருகே வீணாகும் வெளியேறும் மழைநீரை புதிய வடிவில் கிராம மக்கள் சேகரித்து வரும் சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வப்போது பெய்யும் மழை நீரையும் இனி வரும் காலங்களில் சேமித்து வைப்பது என்று முடிவு செய்தனர். அதற்காக இளைஞர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் கிராமத்தின் தெருக்களில் ஒருபக்கம் மழைநீர் கால்வாய்கள் தோண்டினர்.

09:55:01 on 21 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சுற்றுச்சூழல் மற்றும் விலங்கின ஆர்வலரான மேனகா கட்டியால் அவஸ்தைப்பட்ட நாய் ஒன்றுக்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர். மோடி தலைமையிலான முன்னாள் அமைச்சரவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் மேனகா. தற்போது அவர் சுல்தான்பூர் எம்பி.,யாக உள்ளார்.

09:25:02 on 21 Jul

மேலும் வாசிக்க தின மலர்

மதுரை மாவட்டத்தில் உள்ள 11 மண்டலங்களின் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக 4 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் 90 சதவீதம் குடும்ப அட்டைகளின் முன்னுரி மையை ரத்துசெய்து பரிந்துரை அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

08:57:01 on 21 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் உள்ள ஆறுகள் ஏறத்தாழ உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னை என்ற பெருமாநகரத்தின் குடிநீர்த் தேவைகள் பெரும்பாலும் ஏரிகளைச் சார்ந்தவையாகத்தான் உள்ளன. ஏரிகள் என்பது பெரும் நீராதாரம் மட்டுமல்லாது, பெரும் நீரழிவில் இருந்து காப்பவைகளாவும்தான் விளங்குகின்றன. ஆனால், அந்த ஏரிகள் இப்போது கேள்விக்குறியாக உள்ளன.

08:39:01 on 21 Jul

மேலும் வாசிக்க விகடன்

சென்னையில் உள்ள ஆறுகள் ஏறத்தாழ உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னை என்ற பெருமாநகரத்தின் குடிநீர்த் தேவைகள் பெரும்பாலும் ஏரிகளைச் சார்ந்தவையாகத்தான் உள்ளன. ஏரிகள் என்பது பெரும் நீராதாரம் மட்டுமல்லாது, பெரும் நீரழிவில் இருந்து காப்பவைகளாவும்தான் விளங்குகின்றன. ஆனால், அந்த ஏரிகள் இப்போது கேள்விக்குறியாக உள்ளன.

08:36:01 on 21 Jul

மேலும் வாசிக்க விகடன்

“ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை மேற்கொள்வதற்காக விரைவில் வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறார். டெல்லியில் அது சம்பந்தப்பட்ட பணிகளையும் கவனித்து வர இருக்கிறார்” என்கிறார்கள். ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், கோவையிலுள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

08:18:01 on 21 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அமலா பால் ஒரு இடத்தில் ஆடையின்றி சிக்கிகொள்கிறார். ஒரு கண்ணாடி துண்டினை வைத்து தன் உடம்பினை மறைத்தப்படி தப்பிபதற்கான வழியை தேடுகிறார். இந்தக் காட்சிகளைக் கொண்ட ஸ்னீக் பீக் வீடியோவை ஆடை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர்.

08:15:53 on 21 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

“ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை மேற்கொள்வதற்காக விரைவில் வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறார். டெல்லியில் அது சம்பந்தப்பட்ட பணிகளையும் கவனித்து வர இருக்கிறார்” என்கிறார்கள். ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், கோவையிலுள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

08:15:01 on 21 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

"தேசியக் கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பாராட்டுக்குரியது. அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். பஞ்ச் டயலாக்கை படத்தில் பேசினால் மட்டும் போதாது, வெளியில் வந்தும் பேச வேண்டும்." என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

07:57:01 on 21 Jul

மேலும் வாசிக்க ETV Bharat

சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆடி மாதத்தையொட்டி முதலில் வரும் 100 நபர்களுக்கு 10 ரூபாய்க்கு சேலையும், 10 ரூபாய்க்கு சட்டையும் வழங்கப்பட்டது. இதனை வாங்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

07:39:02 on 21 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7

சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆடி மாதத்தையொட்டி முதலில் வரும் 100 நபர்களுக்கு 10 ரூபாய்க்கு சேலையும், 10 ரூபாய்க்கு சட்டையும் வழங்கப்பட்டது. இதனை வாங்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

07:36:01 on 21 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7

தென்தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில், மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

07:15:01 on 21 Jul

மேலும் வாசிக்க தினமலர்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று பேசி இந்து மதத்தை புண்படுத்தியதாகக் கூறி கமலுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த விஜயபாரத மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

06:57:02 on 21 Jul

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டிலிருந்து அக்கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வந்தார். பொதுச் செயலாளராக இருந்து வந்த எஸ்.சுதாகர் தனது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

06:43:29 on 21 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில், என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேரில் முகமது இர்ஷாத், ரயீஸ் அகமது, சையத் மாலிக் மற்றும் முகமது அசாம் ஆகியோர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரம் இல்லாததால் இவர்கள் அனைவரும் ஆறு மாத சிறை வாசத்திற்குப் பிறகு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

06:39:01 on 21 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில், என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேரில் முகமது இர்ஷாத், ரயீஸ் அகமது, சையத் மாலிக் மற்றும் முகமது அசாம் ஆகியோர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரம் இல்லாததால் இவர்கள் அனைவரும் ஆறு மாத சிறை வாசத்திற்குப் பிறகு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

06:36:01 on 21 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இயக்குநர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகரை சுமார் 1386 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் தேர்தல் நடைபெற்றது.

06:28:10 on 21 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

கொத்தமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரமணி முழுமையான மழைநீர் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தனது வீட்டைச் சுற்றி மழை நீரை சேமிக்கும் வகையில் குழாய்கள் அமைத்து சேகரிக்கப்படும் தண்ணீரை கிணற்றில் விழவைக்கிறார்.

06:18:01 on 21 Jul

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

கொத்தமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரமணி முழுமையான மழைநீர் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தனது வீட்டைச் சுற்றி மழை நீரை சேமிக்கும் வகையில் குழாய்கள் அமைத்து சேகரிக்கப்படும் தண்ணீரை கிணற்றில் விழவைக்கிறார்.

06:15:01 on 21 Jul

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, மதுபோதையில் நடிகை சார்மிகவுர் உள்ளிட்ட 3 நடிகைகளை பிடித்து இழுத்து தலையில் மதுவை ஊற்றி அபிசேகம் செய்த காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

05:55:02 on 21 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகைகளை மட்டும் வைத்து படம் எடுத்து அதில் வெற்றிகண்ட நடிகைகள் பலர். அந்த வரிசையில் அமலாபால் நடிப்பில் அணமையில் வெளியான படம் ஆடை. பெரிய சிக்கலைத் தாண்டி ரிலீஸ் ஆன இப்படம் சென்னையில் இதுவரை 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாம்.

05:39:01 on 21 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகைகளை மட்டும் வைத்து படம் எடுத்து அதில் வெற்றிகண்ட நடிகைகள் பலர். அந்த வரிசையில் அமலாபால் நடிப்பில் அணமையில் வெளியான படம் ஆடை. பெரிய சிக்கலைத் தாண்டி ரிலீஸ் ஆன இப்படம் சென்னையில் இதுவரை 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாம்.

05:36:01 on 21 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகர் சூர்யா பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் ஷங்கர், ”நடிகர் சூர்யா பேசியது எனக்கு தெரியாது. நான் அதை படிக்கவில்லை” என்று பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிலால் கடுப்பான நெட்டிசன்கள் ‘விட்டா இவரு சூர்யாவே யாருன்னு தெரியாதுன்னு சொன்னாலும் சொல்லுவார்’ என்று விளாசிவருகிறார்கள்.

05:15:02 on 21 Jul

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

செக் குடியரசு நாட்டில் நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் நேற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்த ஜூலை மாதத்தில் ஹிமா தாஸ் வெல்லும் 5வது தங்கப்பதக்கம் இதுவாகும். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான ஹிமா தாஸ்
"திங் எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படுகிறார்.

04:55:02 on 21 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய வீடுகளில் பலவற்றில் யாருமே வசிக்கவில்லை என்பதும், வாட்ச்மேன்கள் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராமங்களில் ஆளில்லாத பங்களாக்களை அவர்கள் எதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள், அங்கே யார் யார் வந்து போயிருக்கிறார்கள் என்பதையும் விசாரித்துக்கொண்டிருக்கிறது என்.ஐ.ஏ.

04:39:02 on 21 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய வீடுகளில் பலவற்றில் யாருமே வசிக்கவில்லை என்பதும், வாட்ச்மேன்கள் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராமங்களில் ஆளில்லாத பங்களாக்களை அவர்கள் எதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள், அங்கே யார் யார் வந்து போயிருக்கிறார்கள் என்பதையும் விசாரித்துக்கொண்டிருக்கிறது என்.ஐ.ஏ.

04:36:02 on 21 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க