07:55:01 on 08 Dec 2019,Sun
பசு மாடுகளை வளர்ப்பதால், கைதிகளின், குற்ற மனநிலை, நன்றாக குறைவதாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
07:55:01 on 08 Dec
07:25:02 on 08 Dec 2019,Sun
டெல்லியில், ராணி ஜான்சி சாலையில் அமைந்திருக்கும் அனஜ் மண்டி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 20 வயதுடையவர்கள்.
07:25:02 on 08 Dec
06:55:01 on 08 Dec 2019,Sun
நடிகை திரிஷா தற்போது ராங்கி படத்தில் ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ராங்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.
06:55:01 on 08 Dec
06:27:01 on 08 Dec 2019,Sun
மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் அவர், உள்ளாட்சி தேர்தல் மக்கள் நலனுக்காக இருக்கப்போவதில்லை என்றும், ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும் என்றும் விமர்சித்துள்ளார்.
06:27:01 on 08 Dec
05:57:01 on 08 Dec 2019,Sun
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் வழங்கும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
05:57:01 on 08 Dec
05:27:01 on 08 Dec 2019,Sun
அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை வெள்ளைத்தாளில் எழுதி ட்விட்டரில் பதிவிட்டு வந்த இயக்குநர் சுசீந்திரன் தற்போது சமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் திரைப்படம் டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
05:27:01 on 08 Dec
04:57:01 on 08 Dec 2019,Sun
பெயர் வெளியிடாத தம்பதியினர் டெக்சாஸில் உள்ள ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு புதுக் காரை பரிசளித்துள்ளனர். தினமும் வேலைக்குச் செல்வதற்காக 14 மைல் நடந்து வரும் அவரது நிலையைப் பார்த்து, காரை அன்புப் பரிசாக அனுப்பி வைத்த நிகழ்ச்சி அண்மையில் நடந்துள்ளது.
04:57:01 on 08 Dec
04:27:01 on 08 Dec 2019,Sun
ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி கவுன்சிலர், தலைவர் பதவிக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கப் போவதில்லை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும். எனவே, அதில் கவனம் செலுத்தி, அதிக இடங்களைப் பெற அதிமுக முடிவு செய்துள்ளது.
04:27:01 on 08 Dec
03:57:02 on 08 Dec 2019,Sun
உன்னாவ் சம்பவம் குறித்து கிராம மக்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் சிவம் திரிவேதி அல்லது சுபம் திரிவேதிக்கு எதிராகக் காவல் துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
03:57:02 on 08 Dec
03:27:01 on 08 Dec 2019,Sun
மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாவதாக 40 வயதுக்கு உள்பட்ட பிரிட்டன் பெண்களில் மூன்றில் ஒரு பகுதி பேர் கூறியுள்ளதை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது என்று பிபிசி ரேடியோ 5 லைவ் கூறியுள்ளது.
03:27:01 on 08 Dec
02:57:01 on 08 Dec 2019,Sun
நித்யானந்தா வெளியிடும வீடியோக்கள் எந்த இணையதளம் வழியாக வெளியாகிறது என்பதை கண்டுபிடித்து அதன்மூலமாகவே நித்யானந்தா இருக்கும் இடத்தை அறிவதற்கு குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதால் அவர்களும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
02:57:01 on 08 Dec
02:27:01 on 08 Dec 2019,Sun
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ”உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
02:27:01 on 08 Dec
01:55:02 on 08 Dec 2019,Sun
இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிக்குக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி விளையாடவுள்ளதால், போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
01:55:02 on 08 Dec
01:27:01 on 08 Dec 2019,Sun
”ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, உட்கட்டமைப்பு நிறுவனங்கள் தீவிர நெருக்கடியில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானலும் அவை பூதாகரமாக வெடிக்கக் கூடும்” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பிரச்சினையை சுட்டிக்காட்டுபவர்களை எதிரிகளாக சித்தரிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
01:27:01 on 08 Dec
01:19:54 on 08 Dec 2019,Sun
டெல்லி ராணி ஜான்ஸி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
01:19:54 on 08 Dec
01:15:27 on 08 Dec 2019,Sun
டெல்லி ராணி ஜான்ஸி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
01:15:27 on 08 Dec
01:11:42 on 08 Dec 2019,Sun
இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
01:11:42 on 08 Dec
12:57:02 on 08 Dec 2019,Sun
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக அம்மாநில அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியாவும், கமல் ராணி வருணும் சென்றனர். அப்போது அங்கிருந்த உள்ளூர் மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
12:57:02 on 08 Dec
12:27:01 on 08 Dec 2019,Sun
பெண் பக்தரை தாக்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சனிக்கிழமை சிதம்பரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான தீட்சிதர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
12:27:01 on 08 Dec
11:57:02 on 08 Dec 2019,Sun
செயற்கைக்கோள் ஏவுதளம் ஒன்றில் இருந்து வடகொரியா மிக முக்கியமான அணு ஆயுதச் சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உடனான சமரசப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு வடகொரியா கூறியிருந்த நிலையில், இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
11:57:02 on 08 Dec
11:27:01 on 08 Dec 2019,Sun
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினி பற்றி யார் தவறாக பேசினாலும் நான் பதிலடி கொடுப்பேன் என கோபமாக கூறியுள்ளார். சின்ன வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் எனவும் கூறி தான் எவ்வளவு வெறித்தனமான ரஜினி ரசிகர் என குறிப்பிட்டுள்ளார் லாரன்ஸ்.
11:27:01 on 08 Dec
11:00:39 on 08 Dec 2019,Sun
டெல்லி ராணி ஜான்ஸி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது பலரையும் கவலை கொள்ள செய்துள்ளது. முதலில் 32 பேர் பலி என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
11:00:39 on 08 Dec
10:57:01 on 08 Dec 2019,Sun
தர்பார் விழாவில் பேசிய ரஜினிகாந்த், “எனக்கு 69 வயது முடிந்து 70 வயது தொடங்குகிறது. என் வாழ்வில் நடந்த, யாருக்கும் தெரியாத இரண்டு சம்பவங்களை இங்கு நான் பகிர்ந்துகொள்கிறேன்” என்று கூறி பேச்சை மீண்டும் தொடங்கினார் ரஜினி. இதில் அவர் சென்னைக்கு தான் வந்தது எப்படி என்று தனது அனுபவங்களை பகிந்து கொண்டார்.
10:57:01 on 08 Dec
10:27:01 on 08 Dec 2019,Sun
ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கிறது.
10:27:01 on 08 Dec
09:57:01 on 08 Dec 2019,Sun
13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதலில் 81 கிலோ பிரிவில் ஸ்ரீஸ்தி சிங், 87 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை அனுராதா ஆகியோர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா, தஞ்சை தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
09:57:01 on 08 Dec
09:26:02 on 08 Dec 2019,Sun
ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் சீப்புருபள்ளி நகரில் தனது பெற்றோருடன் பவானி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் தனது 4வது வயதில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
09:26:02 on 08 Dec
09:15:23 on 08 Dec 2019,Sun
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைந்தது. டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நீர்திறப்பு 7,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைந்துள்ளது.
09:15:23 on 08 Dec
09:14:42 on 08 Dec 2019,Sun
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் பெட்ரோல் விலை தொடர்கின்றது.
09:14:42 on 08 Dec
09:10:11 on 08 Dec 2019,Sun
‘தர்பார்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ”நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், சஸ்பெண்ஸ், திரில்லர், ஆக்ஷன் படமாக தர்பார் படம் வந்துள்ளது. ரஜினியை வைத்து படம் தயாரித்தால் நஷ்டம் ஏற்படாது என்று நம்பினார்கள். எனவே, நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது” என்றார்.
09:10:11 on 08 Dec
08:57:02 on 08 Dec 2019,Sun
புதிய ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஐபோன் 11 சாதனங்களில் லொகேஷன் சேவைகள் ஆஃப் செய்யப்பட்டாலும், அவை வாடிக்கையாளர்களின் லொகேஷன் விவரங்களை சேகரிப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு ஆப்பிள் நிறுவனம், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என தெரிவித்துள்ளது.
08:57:02 on 08 Dec
07:55:01 on 08 Dec 2019,Sun
மியாமி கடற்கரையில் உள்ள ஆர்ட் பாசலில் ஒரு வாழைப்பழத்தை சுவரில் டேப்பை வைத்து ஒட்டி கலைப்பொருளாக 1,20,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வாய்ப்பே இல்ல -அதையெல்லாம் யார் வாங்குவா…? என்று நீங்கள் நினைக்கலாம்.
07:55:01 on 08 Dec
06:55:01 on 08 Dec 2019,Sun
பாஜகவிலிருந்து சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகா விகாஸ் அகாதிக்கு ஆதரவளிக்க இருப்பதாக தகவல்கள் மும்பையில் இருந்து வருகின்றன.
06:55:01 on 08 Dec
05:55:01 on 08 Dec 2019,Sun
முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது. முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு இதனுடன் சீரகம் பொடித்துப்போட்டு தினமும் மதிய உணவு வேலையிலே சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட பலவிதமான நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது.
05:55:01 on 08 Dec
10:55:01 on 07 Dec 2019,Sat
ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
10:55:01 on 07 Dec
09:55:01 on 07 Dec 2019,Sat
”நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள். இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது.” என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
09:55:01 on 07 Dec
08:55:02 on 07 Dec 2019,Sat
ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் போட்டி டிச.9ஆம் தேதி தொடங்குகிறது. திண்டுக்கல்லில் நடைபெற உள்ள முதல் போட்டியில் விஜய்சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி கர்நாடகா அணியை எதிர்த்து விளையாடுகிறது.
08:55:02 on 07 Dec
08:25:01 on 07 Dec 2019,Sat
ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா, ”தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
08:25:01 on 07 Dec
07:55:01 on 07 Dec 2019,Sat
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பெண் நடனக்கலைஞர் சுடப்பட்டது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
07:55:01 on 07 Dec
07:25:02 on 07 Dec 2019,Sat
கேளளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஜாமினில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் அவரை பொதுமக்கள் சிலர் கடுமையாக தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.
07:25:02 on 07 Dec
06:55:01 on 07 Dec 2019,Sat
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை பரவலாகப் பெய்யத் தொடங்கியதை அடுத்து, ராமநாதபுரம் பகுதியில் உள்ள கண்மாய்கள் உடையும் நிலையில் உள்ளன.
06:55:01 on 07 Dec
06:25:01 on 07 Dec 2019,Sat
பரபரப்புகளுக்கு பெயர் போன நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் தனது மகள்கள் மாயமாகி விட்டதாக பெற்றோர் புகாரளிக்க, மீண்டும் அவர் சர்ச்சையில் அடிபட்டார். இதனைத்தொடர்ந்து தற்போது வரை நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
06:25:01 on 07 Dec
05:57:48 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:57:48 on 07 Dec
05:57:01 on 07 Dec 2019,Sat
கோவாவில் கூலித்தொழில் செய்யும் துக்காராம், அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக துக்காராமின் மனைவி உடல் நிலையில் சரி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் கணவன் சிரமப்பட்டு வந்துள்ளார்.
05:57:01 on 07 Dec
05:53:54 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:53:54 on 07 Dec
05:51:12 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:51:12 on 07 Dec
05:27:01 on 07 Dec 2019,Sat
ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ. 219 பிரீபெயிட் சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
05:27:01 on 07 Dec
04:57:01 on 07 Dec 2019,Sat
ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து அர்ஜூன் ரெட்டி புகழ் ராகுல் ராமகிருஷ்ணா, “இது நீதியல்ல. சமாளிக்க முடியாத பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க வைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வடிவம். குற்றம் நடக்காமல் தடுக்கும் வகையில் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலமாகத்தான் நீதி கிடைக்கும்.” என்றார்.
04:57:01 on 07 Dec
04:27:01 on 07 Dec 2019,Sat
லண்டனிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் கலந்துக்கொண்டவர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை குற்றவாளியாக அந்த நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
04:27:01 on 07 Dec
03:57:01 on 07 Dec 2019,Sat
சிறுத்தையிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஒரு குட்டி வரையாடு சிறுத்தையுடன் ஒத்தைக்கு ஒத்தையாக நின்று சண்டையிடுகிறது. இந்த வீடியோ தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவின் வழிகாட்டியான ஆண்ட்ரே ஃபரி என்பவரால் எடுக்கப்பட்டது.
03:57:01 on 07 Dec
03:27:01 on 07 Dec 2019,Sat
உத்தரபிரதேசம் புலந்தசகர் பகுதியில், 14 வயது மைனர் பெண்ணின் கைகளை கட்டி பிணைக் கைதியாக்கி மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பலாத்காரம் செய்த காட்சியை, அந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக ஊடகங்களில் வைரல் செய்துள்ளனர்.
03:27:01 on 07 Dec
02:57:01 on 07 Dec 2019,Sat
நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா நடிப்பில் கடைசியாக 100 படம் வெளியானது. இதில் அதிரடி போலீஸாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அதர்வா அடுத்து நடிக்கவுள்ள படத்தில் மீண்டும் போலீஸாக நடிக்கவுள்ளார். ஆனால் இந்த முறை சாதராண கான்ஸ்டபிளாக நடிக்கிறாராம். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார்.
02:57:01 on 07 Dec
02:27:01 on 07 Dec 2019,Sat
நித்தியானந்தா புதிதாக வெளியிட்டிருக்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘யாரும் என்னைத் தொட முடியாது. என்னை ஆஜர்படுத்துவதற்கு எந்த நீதிமன்றமும் கிடையாது’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், ”நான் உங்களிடம் உண்மையை சொல்கிறேன். நான்தான் பரமசிவன்’ என்றார்.
02:27:01 on 07 Dec
01:55:01 on 07 Dec 2019,Sat
சென்னை அம்பத்தூரில் ஆன்லைன் வர்த்தகமையத்தில் பணிபுரியும் இளைஞர்கள் இருவர், டெலிவரி செய்ய வேண்டிய செல்போன்களை நூதன முறையில் திருடி நண்பர்களுக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.
01:55:01 on 07 Dec
01:27:01 on 07 Dec 2019,Sat
கன்னியாகுமரியில் பயங்கர சூறாவளியால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம், போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. பேச்சிப்பாறை, கோதையாறு, சிற்றாறு போன்ற மலை கிராம பகுதிகளில் சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் ரப்பர் மரங்களின் கிளைகள் முறிந்தும், சில மரங்கள் வேரோடு சரிந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
01:27:01 on 07 Dec
12:57:01 on 07 Dec 2019,Sat
”எனது மகளின் சாவு குறித்து ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெறும் விசாரணை எனக்கு திருப்தியாக உள்ளது. கோட்டூர்புரம் போலீசார் முதலில் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு உள்ளது.” என பாத்திமாவின் தந்தை கூறியுள்ளார்.
12:57:01 on 07 Dec
12:27:01 on 07 Dec 2019,Sat
கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 86 பலாத்கார வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பலாத்காரங்களின் தலைநகராக மாறியிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் 185 பாலியல் சீண்டல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் பதிவாகியிருப்பது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
12:27:01 on 07 Dec
11:57:02 on 07 Dec 2019,Sat
கடந்த 2ஆம் தேதி சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு வந்துள்ள கடிதத்தில், ஐஐடி மாணவி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் எழுதப்பட்டுள்ளது.
11:57:02 on 07 Dec
11:27:01 on 07 Dec 2019,Sat
நித்திக்கு எதிராக வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் சீடர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர். அந்தவகையில், பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த முன்னாள் சீடர் ஒருவர், 400,000 அமெரிக்க டாலர் மோசடி செய்ததாக நித்யானந்தா மீது அந்நாட்டு அரசிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பிரெஞ்சு அரசு நித்தி மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
11:27:01 on 07 Dec
11:15:48 on 07 Dec 2019,Sat
கூடங்குளம் அணு உலை இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கவலை தெரிவித்துள்ளது. அணு உலை இணையதள முடக்கம் தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று அமெரிக்க கூறியுள்ளது.
11:15:48 on 07 Dec
11:07:08 on 07 Dec 2019,Sat
கூடங்குளம் அணு உலை இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கவலை தெரிவித்துள்ளது. அணு உலை இணையதள முடக்கம் தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று அமெரிக்க கூறியுள்ளது.
11:07:08 on 07 Dec
10:27:01 on 07 Dec 2019,Sat
வெங்காயம் விலை உயர்வைத் தொடர்ந்து, பூண்டு கிலோ 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கடந்த வாரம் கிலோ 230 ரூபாய்க்கு விற்பனை ஆன முருங்கைக்காய் இந்தவாரம் 550 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
10:27:01 on 07 Dec
09:57:02 on 07 Dec 2019,Sat
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பவுண்டரிகள் மூலம் குறைவான ரன்களைக் குவித்த அணி வெற்றிபெறுவது எப்போதாவது அரிதாக நிகழும். அந்த அரிதான நிகழ்வு நேற்றைய போட்டியில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, பவுண்டரிகள் மூலம் 134 ரன்கள் குவித்தது. இந்திய அணியோ, அதன்மூலம் 120 ரன்களை மட்டுமே எடுத்தது.
09:57:02 on 07 Dec
09:29:18 on 07 Dec 2019,Sat
சென்னை கோயம்பேட்டில் விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.160லிருந்து ரூ.180 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.180லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. தொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு, ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
09:29:18 on 07 Dec
09:15:35 on 07 Dec 2019,Sat
சென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இரவு முதலே மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாகவே மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09:15:35 on 07 Dec
09:13:35 on 07 Dec 2019,Sat
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
09:13:35 on 07 Dec
09:11:55 on 07 Dec 2019,Sat
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வழக்கு தொடர்பாக ரேபரேலி நீதிமன்றத்தில் ஆஜராகசென்ற பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி, தீவைத்து எரித்தது.
09:11:55 on 07 Dec
09:09:03 on 07 Dec 2019,Sat
ஐதராபாத்தில் குற்றவாளிகள் 4 பேர் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் திங்கள் காலை விசாரணை நடைபெறவுள்ளது. திங்கட்கிழமை விசாரணை நடத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமச்சந்திர ராவ், லட்சுமண ராவ் உத்தரவிட்டுள்ளனர்.
09:09:03 on 07 Dec
08:55:01 on 07 Dec 2019,Sat
குடும்பம், பார்க்கும் வேலை இவை இரண்டுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது கடினமானதுதான் என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களிடம் சேர்ந்து இருந்து பொழுதை போக்குவதற்கு குடும்பத்தினர் எதிர்பார்க்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அது குடும்பத்தினர் உங்களுடன் நெருங்கி பழகுவதற்கு வழிவகை செய்யும்.
08:55:01 on 07 Dec
07:55:01 on 07 Dec 2019,Sat
சங்கரமட நிர்வாகத்தில் எந்த வகையிலும் மூக்கை நுழைக்கக் கூடாது என்கிற நிபந்தனையோடு, குருமூர்த்தியுடன் சங்கரமடத் தரப்பு ஒரு ஒப்பந்தத்தை அண்மையில் போட்டிருப்பதாக கூறுகின்றனர். அதன்படி, சங்கரமடத்தின் பிராஞ்சான கலவை மடம், அதன் சொத்து பத்துக்களோடு குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்கின்றனர்.
07:55:01 on 07 Dec
06:55:01 on 07 Dec 2019,Sat
Realme XT 730G டிசம்பர் 17ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ரியல்மி வெள்ளிக்கிழமை அனுப்பிய ஊடக அழைப்பின் மூலம் தெரியவந்துள்ளது. Realme XT 730G செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme X2-வின் இந்தியா வேரியண்டாக அறிமுகமாகும்.
06:55:01 on 07 Dec
05:55:01 on 07 Dec 2019,Sat
அரைக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும். அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும். பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றை இக்கீரை குணப்படுத்தும். இக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.
05:55:01 on 07 Dec
10:57:01 on 06 Dec 2019,Fri
சிம்புவின் மாநாடு படம் ட்ராப் ஆனதாக கூட கூறப்பட்டது, அதை வெங்கட் பிரபு லாரன்ஸுடன் படம் செய்ய போகிறார் என்ற செய்தியும் உறுதியாக்கியது. ஆனால், மாநாடு கண்டிப்பாக ஜனவரி மாதம் தொடங்கும் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார், இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
10:57:01 on 06 Dec
09:57:01 on 06 Dec 2019,Fri
விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
09:57:01 on 06 Dec
08:55:01 on 06 Dec 2019,Fri
நித்தியானந்தா வெளிநாட்டு தப்பிச் சென்று விட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் தனியாக தீவு ஒன்றை வாங்கி, அங்கு கைலாஷ் என்ற புதிய நாட்டை உருவாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நித்தியானந்தா, மடகாஸ்கர் தீவில் இருந்து ஹைதி தீவிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது.
08:55:01 on 06 Dec
08:25:01 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
08:25:01 on 06 Dec
07:55:01 on 06 Dec 2019,Fri
தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார்
07:55:01 on 06 Dec
07:25:01 on 06 Dec 2019,Fri
சென்னை கிண்டியில் ரயில்வே பெண் ஊழியரை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பெண்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
07:25:01 on 06 Dec
06:56:02 on 06 Dec 2019,Fri
அதிகாலை நான்கு மணி. முகாம் அமைதியாய் இருக்கிறது. பாரியும் சுஜய்யும் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மாவூத்துகள் மட்டும் வன ஊழியர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் காட்டுக்குள் இருந்து மதம் பிடித்த காட்டு யானை ஒன்று முகாமிற்குள் நுழைகிறது. அதன் சத்தம் வனத்தையே மிரட்டுமளவிற்கு இருந்தது.
06:56:02 on 06 Dec
06:55:01 on 06 Dec 2019,Fri
அதிகாலை நான்கு மணி. முகாம் அமைதியாய் இருக்கிறது. பாரியும் சுஜய்யும் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மாவூத்துகள் மட்டும் வன ஊழியர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் காட்டுக்குள் இருந்து மதம் பிடித்த காட்டு யானை ஒன்று முகாமிற்குள் நுழைகிறது. அதன் சத்தம் வனத்தையே மிரட்டுமளவிற்கு இருந்தது.
06:55:01 on 06 Dec
06:25:01 on 06 Dec 2019,Fri
தெலங்கானாவில் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி என சைபராபாத் காவல் ஆணையர் விஸ்வநாத் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார். பாதுகாப்புக்கு 10 போலீஸார் உடனிருந்த நிலையில், காவலர்களிடமிருந்து திடீரென துப்பாக்கியை பறித்ததாகவும், சரணடையுமாறு எச்சரித்தபோது, போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார்.
06:25:01 on 06 Dec
05:58:51 on 06 Dec 2019,Fri
படத்தில் முதல் பாதியில் தேவையில்லாத இடங்களில் ரொமான்ஸ் காட்சிகள் வந்து செல்லும், அட இப்ப எதற்குடா இது என்றாலும், அதை வைத்து காட்சிகளை நகர்த்தியது அந்த ரொமான்ஸ் காட்சிகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். அதிலும் கிளைமேக்ஸ் அப்படியே கான்ஜுரிங் இரண்டாம் பாகத்தை பார்த்தது போல் உள்ளது.
05:58:51 on 06 Dec
05:57:02 on 06 Dec 2019,Fri
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் புளூ கார்னர் நோட்டீஸை நித்தியானந்தாவுக்கு வழங்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
05:57:02 on 06 Dec
05:25:01 on 06 Dec 2019,Fri
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஆலோசகராக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதற்காகவே விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு ஆண்டு அவர் இந்த பணியில் இருப்பார்.
05:25:01 on 06 Dec
04:55:02 on 06 Dec 2019,Fri
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் மலைக் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மெட்டுக்கல் என்ற பகுதியில் தேயிலை தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.
04:55:02 on 06 Dec
04:27:02 on 06 Dec 2019,Fri
கிட்டத்தட்ட 2010ஆம் ஆண்டு வரை நித்தியின் பெரும்பாலான பொருளாதார ஈட்டுதல்கள் என்பது அவரது சத்சங்கம்தான். அதாவது நித்தியின் சொற்பொழிவுகள்தான். வேதங்கள், உபநிஷத்துகள் பற்றி அடர்த்தியான, நீரோட்டமான ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் சத்சங்கத்தில் பங்கேற்பவர்கள் மூலம் கட்டணம் பல கோடி ரூபாய்களுக்கு வசூலாயின.
04:27:02 on 06 Dec
03:57:01 on 06 Dec 2019,Fri
கடந்த 2 ஆண்டுகளில் 629 பாகிஸ்தான் பெண்கள், சீன ஆண்களுக்கு மணப்பெண்களாக பணத்துக்காக விற்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 629 பெண்கள் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
03:57:01 on 06 Dec
03:27:01 on 06 Dec 2019,Fri
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் பேண்ட் 5 ஃபிட்னஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஏழு நாட்கள் பேட்டரி பேக்கப், 22 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வசதியை கொண்டுள்ளது இந்த மாடல். இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலின் விலையைப் பொறுத்தவரை ரூ.17,999-ஆக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
03:27:01 on 06 Dec
02:55:02 on 06 Dec 2019,Fri
குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02:55:02 on 06 Dec
02:27:02 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் என்கவுண்டரை நடத்தியது சைபராபாத் காவல் அதிகாரியான சாஜ்னார் என்பவர் தான். இவர் நடத்தியது முதல் என்கவுண்டர் கிடையாது. ஏற்கனவே இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண் மீது ஆசிட் வீசிய மூன்று நபர்களை என்கவுண்டர் செய்துள்ளார்.
02:27:02 on 06 Dec
01:57:02 on 06 Dec 2019,Fri
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
01:57:02 on 06 Dec
01:27:01 on 06 Dec 2019,Fri
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார், தான் ஒரு சைவ உணவுப்பிரியர் என்பதால் ஒருபோதும் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்றார். ஆகையால், தனக்கு எப்படி வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தெரியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
01:27:01 on 06 Dec
12:57:01 on 06 Dec 2019,Fri
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லகுராபிர் என்ற பகுதியில் உள்ள செல்போன் கடையில், ஸ்மார்ட்போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அறிவிப்புக்கு பின்னர் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளதாக கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
12:57:01 on 06 Dec
12:27:01 on 06 Dec 2019,Fri
அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.' 1995ஆம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள்.
12:27:01 on 06 Dec
11:57:01 on 06 Dec 2019,Fri
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் சோளக்காடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, சோளக்காடு சுடுகாட்டு பகுதியில் உள்ள ஒரு முள் புதரில் 35 நாட்டுத்துப்பாக்கிகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது. வாழவந்திநாடு காவல்துறையினர் அவற்றை கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
11:57:01 on 06 Dec
11:32:32 on 06 Dec 2019,Fri
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான #hyderabadpolice, #Encounter, #JusticeForDisha, #justiceforpriyanakareddy ஆகிய ஹேஸ்டாக்குகள் டுவிட்டரில் இந்தியா அளவில் டிரண்டாகி வருகின்றன.
11:32:32 on 06 Dec
11:27:02 on 06 Dec 2019,Fri
இன்று அதிகாலை 3 மணி அளவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சட்டான்பள்ளி பாலத்துக்கு 4 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திடீரென முதல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆரிஃப், ஒரு காவலரின் கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். உடனடியாக அலர்ட் ஆன மற்ற மூவரும் தப்பிக்கத் தயாராகியுள்ளனர்.
11:27:02 on 06 Dec
11:24:15 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ”சாமான்ய குடிமகன் என்ற அடிப்படையில், என்கவுன்டர் சம்பவம் மகிழ்ச்சியை தருகிறது. இதனை தான் அனைவரும் விரும்பினோம்.” என்றார்.
11:24:15 on 06 Dec
11:23:31 on 06 Dec 2019,Fri
பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்தின் அருகிலேயே, 4 குற்றவாளிகளையும் போலீசார் சுட்டுக்கொன்றனர். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, இந்த விஷயத்தில் உ.பி. காவல்துறையும், டெல்லி காவல்துறையும் ஐதராபாத் போலீஸ் போன்று உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.” என்றார்.
11:23:31 on 06 Dec
11:15:37 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டன்ர். இது குறித்து நிர்பயாவின் தாயார், "4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தவிஷயத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
11:15:37 on 06 Dec
11:12:05 on 06 Dec 2019,Fri
வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு பாடம் என 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கடுமையான நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு தலைவணங்குகிறேன் என நடிகர் விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
11:12:05 on 06 Dec