View in the JustOut app
X

மத்திய அரசின் உணவு, பொது வினியோகம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் தர நிறுவனம் சார்பில் ஆஜராக வக்கீல் பழனிமுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

09:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீர் மாநிலம், ரேபான் பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

08:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினமலர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். அதில், 'ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து மேடையில் என்னுடன் 15 நிமிடங்கள் விவாதம் செய்ய பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுகிறேன். அது எங்கு, எப்போது நடந்தாலும் நான் அதற்கு தயார்.' என்று கூறினார்.

08:40:02 on 18 Nov

மேலும் வாசிக்க EENADU

ஓசூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

08:25:02 on 18 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

கஜா புயல் பாதிப்பை பார்வையிட நாகை செல்ல விருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிவாரண பணிகள் முடியாததால் 2 நாட்கள் கழித்து முதல்வர் பழனிசாமி நாகை செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர், 'வேதாரண்யம் பகுதியில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சுமார் 1,000 ஊழியர்கள் தயாராக உள்ளதாக' தெரிவித்தார். மேலும், சாலைகள் மோசமாக உள்ளதால் சீரமைப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், 'நகர் பகுதிகளில் ஓரிரு நாட்களிலும், கிராமங்களில் ஒரு வாரத்திலும் மின்சாரம் சீராகும்,' என கூறினார்.

07:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் விரைவில் பதவியேற்க உள்ளார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

07:40:01 on 18 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.66 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.63 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:25:01 on 18 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து, அவற்றின் மூலம் வேலைவாயப்புகளை பெருக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு போதுமான நிதியை ஒதுக்கித்தர ரிசர்வ் வங்கி வரும் 19ம் தேதி கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளது.

07:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

புதிதாகத் தொழில் தொடங்குவோரின் திறமைகளால் இந்தியாவின் வளர்ச்சியில் பல்வேறு சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் சிறப்பாகி வருவதால் விரைவில் இதற்கான பட்டியலில் 50ஆவது இடத்துக்குள் இந்தியா முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளது.

06:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அஜித்தின் 59வது படத்தை இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இதனை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அஜித் தனது குடும்பத்துடன் கோவாவுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

06:40:02 on 18 Nov

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

கனடாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்நாட்டு அஞ்சல் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உள்நாட்டில் நிலவிவரும் அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடியும் வரை, எந்த அஞ்சல்களையும் கனடாவுக்கு அனுப்ப வேண்டாம் என உலக நாடுகளுக்கு கனடா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

06:26:02 on 18 Nov

மேலும் வாசிக்க EENADU

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

06:10:02 on 18 Nov

மேலும் வாசிக்க தினமணி

ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த 2018 ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் இந்திய ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் 23ம் தேதி முதல் பெரும்பாலான விற்பனை மையங்களில் புது ஐபேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

05:55:02 on 18 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவின் மற்ற முன்னணி நகரங்களைக் காட்டிலும் தலைநகர் டெல்லியில் வருமான வரி வசூல் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் 13 வரையிலான டெல்லியின் வருமான வரி வசூல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 45 விழுக்காடு அதிகரித்துள்ளது. மும்பையில் 5 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

05:40:01 on 18 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

விஞ்ஞான வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் மாறிவரும் சூழ்நிலையில், ஜாதியின் பெயரால் ஆணவக் கொலைகள் நடைபெறுவது வருத்தமளிப்பதாக நடிகர் விவேக் கூறியுள்ளார். மேலும் அவர், ’தமிழகத்தில் தொடரும் சிறார் பாலியல் வன்கொடுமைகள் குறைக்க கடுமையான தண்டனைகள் வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

05:26:01 on 18 Nov

மேலும் வாசிக்க EENADU

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகில் உள்ள சுர்முரா கிராமத்தில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனை நவீன மருத்துவ வசதிகளோடு கூடியதாக கட்டப்பட்டு வந்தது.

05:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்திய சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் குறைந்துள்ளதாக சர்க்கரை ஆலைகளின் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2018-19 உற்பத்தி ஆண்டில் 324 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவ.13ஆம் தேதி வரையில் 10.80 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

04:56:01 on 18 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்


ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் பேசும்போது கவனமாகவும், நிதானமாகவும் பேசுமாறு கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக அணி நிர்வாகத்திலும் இந்திய கிரிக்கெட்டிலும் கோலியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பேசப்பட்ட நிலையில், கோலியின் வாயை அடக்குமாறு பிசிசிஐ கண்டித்துள்ளது.

04:40:01 on 18 Nov

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட விவேக்கிடம், ‘தளபதி 63 படத்தில் நடிக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘நிச்சயமாக நடிக்கிறேன்’ என அவர் பதிலளித்துள்ளார். விஜய் - விவேக் கூட்டணி நேருக்கு நேர், குஷி, ஷாஜகான், யூத், திருமலை உள்ளிட்ட 11 படங்களில் நடித்துள்ளது.

04:26:02 on 18 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கடலூர் அருகே காட்டுமன்னார் கோவிலில் மின்கம்பத்தைச் சரிசெய்தபோது மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலியானார். கிழக்கடம்பூரைச் சேர்ந்த சோமசுந்தரம் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். சிமெண்ட் கம்பம் முறிந்து விழுந்ததால் காயமடைந்து சோமசுந்தரம் உயிரிழந்தார்.

04:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌கமலின் தீவிர அரசியலுக்கும் அவரது கொள்கைகளுக்கும் உதவும் வகையிலேயே கதை, வசனம் அமைந்திருக்கும் என்கிறார்கள்.

03:56:01 on 18 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசியலுக்காக மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மேலும் அவர், இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், மத்திய மாநில அரசுகளுக்கும் கணிசமாக வருவாய் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

03:40:01 on 18 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புதிய பொலிவுடன் அண்ணா சிலையையும், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் டிசம்பர் 13ஆம் தேதி திறக்க உள்ளதாக தி.மு.க அறிவித்துள்ளது. எனவே கலைஞர் சிலையைத் திறக்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படுமா? அந்த அழைப்பை பிரதமர் ஏற்பாரா? என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.

03:26:01 on 18 Nov

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்


மத்தியப் பிரேதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளராக பாத்திமா ரசூல் சித்திக் போட்டியிடுகிறார். பாத்திமாவின் தந்தை ரசூல் சித்திக் முன்னாள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் என்பதால், பாத்திமாவை காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது பாஜக.

03:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும், எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைந்த பகுதிகளில் உற்பத்திக்கு உத்வேகம் கொடுக்கவும் ஓ.என்.ஜி.சி. திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவரான சசி சங்கர் தெரிவித்துள்ளார்.

02:56:01 on 18 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பாராட்டியுள்ளார். மேலும் அவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் சேதம் இன்னும் குறைக்கப்பட்டு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

02:40:01 on 18 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்


’அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரணையில் எளிமையாக பதிலளித்து விட்டேன்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் டிரம்ப், ’ராபர்ட் முல்லரின் கேள்விகளுக்கு எளிமையாக பதிலளித்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

02:26:01 on 18 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

’மனிதத் தன்மையற்று செயல்படும் சாதி காண்டு மிராண்டிகளுக்கு முடிவு இல்லாமல் உள்ளது. ஆனால் இதற்கு முடிவு வர வேண்டும். அதற்கான வழியை நாம் அனைவரும் இணைந்து கண்டுபிடிக்க வேண்டும்’ என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

02:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்குத் தடவலாம். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இளமை தோற்றத்தை அள்ளித்தரும். மேலும் அவகாடோவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

01:56:01 on 18 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

கல்வித்துறை பொதுப்பட்டியலுக்குச் சென்றதால் நீட் போன்ற தேர்வுகளை மத்திய அரசு மாநில அரசுகளின் மீது திணிப்பதாகவும் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரத்தைத் தந்தால்தான் இந்தியா வலிமைமிக்க நாடாக மாறும் எனவும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

01:40:01 on 18 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்


ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தைத் தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைய சிபிஐக்கு தடை விதித்து மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

01:26:02 on 18 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஏரி ஆக்கிரமிப்பு குறித்து பதில் அளிக்குமாறு சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலை.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொத்தேரி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் யுவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

01:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

வேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்ற புகாரில் தலைமை காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் எல்வின் தேவதாஸை சிறை கண்காணிப்பாளர் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

12:56:02 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் தென் கொரியாவில் விநோதமான அமைதி நிலவுகிறது. கடைகள், வங்கிகள், சாலைகள் மூடப்படுகின்றன. விமானங்கள் கூட பறப்பதில்லை. தங்களின் பல்கலைக்கழகங்கள், வேலைகள், உறவுகளை தீர்மானிக்கும் 8 மணிநேர தேர்வை எழுதுகின்ற மாணவர்களை தொந்தரவு செய்ய இந்த நாடு விரும்பவில்லை.

12:40:01 on 18 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

புதினாவில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாவை அழித்துவிடும். மேலும், வாயில் எவ்வித நோய் தொற்றும் பரவாமல் பாதுகாக்கும். புதினாவில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் பற்கள் மற்றும் ஈறுகளை வலிமையாக வைத்திருக்க உதவும்.

12:26:01 on 18 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும். தங்கள் பெற்றோரிடம் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். சின்ன வி‌ஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள்.

12:10:01 on 18 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி நடக்கிறது. இதில் சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, சரத்பவார், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா போன்ற தேசிய தலைவர்கள் மற்றும் தமிழக தலைவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

11:56:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

சூரிய புயல் ஒன்று நாளை பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரியனில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டை காரணமாக இந்த சூரியப்புயல் உருவாகியுள்ளது என தெரிவித்த விஞ்ஞானிகள், சூரியப்புயலின் பாதையில் பூமி அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

11:40:02 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் தனது சிறப்பு உதவியாளராக ஜூல்பிகார் உசேன் புகாரி என்பவரை நியமனம் செய்தார். அவரது நியமனம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது.

11:26:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

நடிகை பிரியங்கா சோப்ரா-ஹாலிவுட் நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணம் நடக்கவிருக்கும் ஜோத்பூர் அரண்மனையின் ஒரு நாள் வாடகைத் தொகை தெரியவந்துள்ளது. அதில், 60 ஆயிரம் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ. 43 லட்சம். இந்த அரண்மனையில் 347 அறைகள் உள்ளன.

11:10:01 on 17 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இங்கிலாந்தில் பிரக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், பிரதமர் தெரசா மே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எம்பி.க்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

10:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

சமையலறை சார்ந்த மின்னணு பொருள் தயாரிக்கும் பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் நிறுவனம் கேளம்பாக்கம் அருகே புதிய ஆலையை தொடங்கியுள்ளது. ரூ. 40 கோடி முதலீட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

10:40:02 on 17 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுசின் 90வது பிறந்ததினம் நாளை கொண்டாடப்படுகிறது. 1928ம் ஆண்டு வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரம் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.

10:26:01 on 17 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

'ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. உடனடியாக ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

10:10:02 on 17 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மூன்று ஓடுபாதைகள் உள்ளன. இவற்றில், ஏர்போர்ட்டில் பராமரிப்பு பணிக்காக ஓடு பாதை மூடப்பட்டுள்ளதால், விமான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.

09:55:02 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் வருகிற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த வியாழக் கிழமை இரவு வெளியிட்டது. தொடர்ந்து 2வது பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று வெளியிட்டார்.

09:40:02 on 17 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

09:26:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

பாலியல் வல்லுறவு வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக, நிர்பயா நிதியைக் கொண்டு 1023 விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

09:15:02 on 17 Nov

மேலும் வாசிக்க EENADU

இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கவும், மேம்படுத்துவும் அந்நிறுவனம் மூன்று புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது.

09:10:01 on 17 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

’கஜா புயலால் பாதிக்கப்பட்ட வடகாடு உள்ளிட்ட கிராமங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்மோட்டார்களால் குடிநீர் விநியோகிக்க ஆணையிடப்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் நிவாரணம், மீட்புப் பணிகளை வேகப்படுத்த வேண்டும்’ என அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்துள்ளார்.

09:02:13 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கான்பிடரேசன் ஆப் இந்தியன் (சிஐஐ) நிறுவனம் சார்பில் வர்த்தகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் வர்த்தக நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

08:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

’கஜா புயலால் சேதமடைந்த படகுகளை அரசே சீரமைத்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும். புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களுக்கு ரூ.25,000 நிவாரணம் விவசாயிகளுக்குத் தர வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு மிகப்பெரிய நிதியைத் தந்து உதவ வேண்டும்’ என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

08:49:32 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சீனாவில் கைவிடப்பட்ட கல்குவாரியில் கட்டப்பட்ட நட்சத்திர ஹோட்டல் திறக்கப்பட்டது. இன்டர் காண்டினன்டல் ஷாங்காய் வொன்டர்லாண்ட் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

08:40:01 on 17 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்’ என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.

08:29:53 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியாவில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ஜாவா இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களின் நீண்ட நாள் கனவான ஜாவா பைக் பெருமளவு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

08:26:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

பட்டுக்கோட்டையில் கஜா புயலால் இறந்தோரின் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அரசு உடனே உதவ வலியுறுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

08:24:36 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ’கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதல்வர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை. 6 மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிப்பது பற்றி 19ஆம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.

08:18:51 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்


சென்னை உயர்நீதிமன்றத்திற்குக் கூடுதல் நீதிபதியாக பி.புகழேந்தியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு வழங்கியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 59 ஆக உள்ளது.

08:10:02 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் பஞ்சுகாலிபட்டியில் குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஓமலூர்-மேச்சேரி மையப்பகுதியில் நவீன சந்தை அமைக்கப்படும்,' என தெரிவித்துள்ளார். மேலும் நவீன சந்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

07:56:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சேலத்தில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் செல்லும் லாரிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார். அரிசி, பருப்பு, உணவுப் பொருட்கள், பாய், போர்வை, மெழுகுவர்த்தி உள்ளிட்டப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

07:49:03 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோவையில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானம், 20 வெளிநாடு, 30க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களுக்கு இணைப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:40:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் இன்று காலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த ஆய்வில், கஞ்சா, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

07:25:01 on 17 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

'கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாம்களில் குடிநீர் வசதி செய்யவில்லை' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், 'புயலால் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் நேரில் சென்று பார்த்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

07:15:04 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் நடத்திய தேர்தல் பிரசாரத்தில். 'சுதந்திர இந்திய வரலாற்றில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல். நேர்மையாக, வியர்வை சிந்தி உழைத்த மக்கள் அனைவரையும் மோடி வங்கிகளின் வாசலில் நிற்க வைத்தார். அனில் அம்பானி போன்ற தொழிலதிபர்கள் யாரும் நிற்கவில்லை,' என்றார்.

07:10:01 on 17 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

’குட்கா வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கீழ்மட்ட அதிகாரிகள், குட்கா நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. குட்கா வழக்கில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் பெயர்கள் இல்லாதது சந்தேகமளிக்கிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

06:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க தின மலர்

’கஜா புயலின் போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசு ஆய்வு குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

06:40:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ’அனைவரும் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவும் விரைவில் இயல்பு நிலை வாழ்க்கை திரும்பவும் நான் பிரார்த்தனை
செய்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

06:25:01 on 17 Nov

மேலும் வாசிக்க EENADU

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடை மற்றும் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

06:21:12 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுக்கோட்டையில் அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை வடக்கு பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆவணத்தான் கோட்டைக்கு அடிப்படை வசதிகளை உடனே செய்துதர கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

06:19:05 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும்’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.

06:10:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்குச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது சாலிஹ் பதவியேற்கவுள்ளார்.

05:55:02 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயலால் காரைக்கால் கடற்கரையில் ஒதுங்கிய விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஆட்சியர் கேசவன் கூறியுள்ளார். மேலும் அவர், வனத்துறை, கால்நடைத்துறை மூலமாக அப்புறப்படுத்தி தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

05:40:02 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

10 மாவட்டங்களில் கஜா புயலால் 243 பாலங்கள், 597 மின்மாற்றிகள், 191.4கிமீ சாலைகள் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. புயலால் 9 துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

05:25:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

’தமிழ்ச் சாமூகத்தை ஜாதி என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. ஆடு,மாடு,நாய் போன்றவற்றை தன்னுடைய பிள்ளையாக நினைத்து வளர்க்கும் மனிதர்கள் அவர்களோடு வாழ்பவர்களை ஜாதி பார்ப்பது ஏன்? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ’அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை’ என தெரிவித்துள்ளார்.

05:10:01 on 17 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டிடிவி தினகரன் தனது டுவிட்டரில், ’சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

04:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் டிசம்பர் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

04:40:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது என பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆண்கள் 26 பேர், பெண்கள் 17 பேர், குழந்தைகள் 3 பேர் என 46 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக 451 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

04:25:02 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

4 தலைமுறைகளாக காந்தி குடும்பம் நாட்டை ஆண்ட பிறகும்கூட, மோடி, ஒரு 4½ ஆண்டுகள் பிரதமராக இருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், அவரது கேள்விக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று நீண்ட பட்டியல் மூலம் பதிலளித்துள்ளார்.

04:10:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1,000 கிலோ நாய்க்கறி சனிக்கிழமை அன்று பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னைக்கு ஜோத்பூரில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

03:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அவசரக் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசரக் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

03:40:02 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’கஜா புயல் வரும் என மத்திய அரசு எச்சரித்திருந்ததால் ஓரளவுக்கு தமிழக பேரிடர் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’இன்னும் வேகமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை மேலும் குறைத்திருக்கலாம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

03:25:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரும் திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

03:10:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

'கடற்கரையோரம் படகுகள் நிறுத்தப்பட்டு இருந்ததால் ஒருசில படகுகள் சேதமடைந்துள்ளன. அது குறித்து கணக்கெடுக்கும் பணியில் அந்தந்த மாவட்டங்களில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, படகுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அரசு சார்பில் வழங்கப்படும்' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

02:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

'கஜா புயலால் சாலையில் விழுந்த மரங்களை அகற்ற உத்தரவு விடப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், '30,000 மின்கம்பங்கள் கஜா புயலால் சாய்ந்துள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கு 10,000 ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்' எனவும் தெரிவித்துள்ளார்.

02:40:02 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 21 ஆண்கள், 16 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

02:25:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடலோர மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், புயல் பாதித்த இடங்களில் எந்த பகுதியிலும் உணவு தட்டுப்பாடு இல்லை எனவும், கஜா புயலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

02:10:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தஞ்சையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சர்கள் துரைக்கண்ணு, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

01:56:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புயலில் சேதமடைந்த நாகை ரயில் நிலையம் வழியாக ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. சேதமடைந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றது.

01:40:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதாக, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், புயலுக்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

01:26:01 on 17 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை புறநகர் பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

01:21:55 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாகையில் கஜா புயலால் 136 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், கஜா புயல் காரணமாக 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன.

01:10:02 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தை கடந்துசென்ற கஜா புயல் தென்கிழக்கு அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 12 மணி நேரத்தில் அரபிக்கடலில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.19-21ஆம் தேதி வரை மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

12:54:22 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் கரையை கடந்தபோது 110-120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால், டெல்டா மாவட்டங்களை புயல் புரட்டி போட்டு விட்டது. சில பகுதிகளை கஜா புயல் வெறித்தனமாக சூறையாடியது. டெல்டா மாவட்டங்களில் 29,500 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 40,820 பெரிய மரங்கள் வேரோடு விழுந்து விட்டன. 11,512 குடிசை வீடுகள் நாசமாகிவிட்டன.

12:40:01 on 17 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

நிர்வாகக் காரணங்களால் கோவை-சேலம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

12:25:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

நாகையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், 'கஜா புயலால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன,' என்றார். மேலும், பாதிக்கப்பட்டவர்களை தேடிச்சென்று சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

12:10:04 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தை கடந்த ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்த கஜா புயல் நேற்று கரையை கடந்தது. கஜா புயலால் தமிழகத்தில் சில மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் வெளியூரிலிருந்து தங்களின் ஊரில் இருக்கும் அவல நிலையை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

11:55:02 on 17 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை தி.நகர் அன்னை சத்யா பஜாரில் உள்ள 33 கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு செல்போன்கள் வாங்கப்படுவதாக வந்த புகாரில் நடைபெற்ற சோதனையில் 700 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை தணிக்கை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

11:40:02 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுச்சேரியில் கஜா புயல், கனமழையால் ஏராளமான மான்கள், காட்டுப்பன்றிகள், குதிரைகள் இறந்து காரைக்காலில் கரை ஒதுங்கியுள்ளன. இறந்த விலங்குகள் நாகை கோடியக்கரை காட்டில் இருந்து அடித்துவரப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது

11:25:02 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அவசர கட்டுப்பாட்டு மையம் இந்த தகவல் அளித்துள்ளது.

11:10:02 on 17 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க